Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமதி பார்வதியம்மாள் திருப்ப அனுப்பபட்டமையும் சில கசப்பான உண்மைகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமதி பார்வதியம்மாள் திருப்ப அனுப்பபட்டமையும் சில கசப்பான உண்மைகளும்

velu_0.jpg

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது தாயார் திருமதி பார்வதியம்மாள் வேலுப்பிள்ளை அவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வானூர்தி மூலம், நேற்று(16.04.2010) இரவு மலேசியாவிலிருந்து, தமிழகம் வந்திருந்தார். அவரை தரையிறங்க விடாமல், அதே விமானத்தில் இந்திய அரசு திருப்பி அனுப்பியமை மிகவும் கண்டனத்திற்குரிய மனிதத் தன்மையற்ற செயலாகும்.

திருமதி பார்வதியம்மாள் அவர்களை திருப்பி அனுப்பும் முடிவு இந்திய அரசு எடுத்திருந்த முடிவு என்றாலும், அதில் தமிழக அரசிற்கு பங்கிருப்பதை தட்டிக் கழிக்க முடியவில்லை. இவ்வாறு, தொடர்ந்து தமிழினத்திற்கு எதிராக மனித நேயமற்ற செயல்களை இந்திய அரசு செய்து வருவதை உலகத் தமிழர்கள் ஒன்றுபட்டு கண்டிக்க வேண்டும்.

இந்திய, தமிழக அரசுகளை கண்டிப்பதோடு நின்று விடாமல், இந்த சம்பவத்திற்கான முழுக் காரணிகளையும் நாம் ஆய்வுக்கு உட்படுத்தியாக வேண்டும். இந்த ஆய்வின் முடிவுகள், உணர்வாளர்கள் தம்மை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதோடு அல்லாமல் சமரசவாதத்தையும் சுட்டிக் காட்டுகின்றது.

முறைப்படி இந்திய அரசுக்கு விண்ணப்பித்து, விசா பெற்று தமிழகம் வந்திருந்த அவரை, வந்த விமானத்திலிருந்து கூட கீழே இறங்க விடாமல் செய்த செயல் மனித நேயமற்றதாகும். ஏற்கெனவே பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் தொடர்ந்து விமானப் பயணத்தை மேற்கொள்ளவதில் உள்ள சிரமங்களைக் கணக்கில் கொள்ளாமல், அதே விமானத்தில் அவரை வைத்திருந்துள்ளனர், இந்திய அரசின் குடியுறவுத் துறை அதிகாரிகள்.

சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்று இப்போது கூச்சலிடுகின்ற அரசு, அவரது விண்ணப்ப விசாவை தொடக்க நிலையிலேயே மறுத்திருந்தால், நோயுற்ற வயதான அப்பெண்மணி நெடுந் தொலைவிலிருந்து இங்கு வந்திருக்க வேண்டிய தேவை எழுந்திருக்காது. ஆனால், அவரை அங்கிருந்து வரவழைத்து ‘அனுமதியில்லை’ என்று திருப்பி அனுப்பி, ஏற்கெனவே நோயுற்ற அவருக்கு மன உளைச்சலையும், தேவையற்ற உடற்ச்சோர்வையும் ஏற்படுத்தும் வகையில் இந்திய அரசு திட்டமிட்டு செயல்பட்டுள்ளது. இதே போல், சென்னையில் தங்கி சிகிச்சை பெறுவதற்காக வந்த இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சிவாஜிலிங்கம் அவர்களையும், சில தினங்களுக்கு முன்பு இந்திய அரசு திருப்பி அனுப்பியதையும் நாம் அறிவோம்.

திருமதி. பார்வதியம்மாள் சிகிச்சைக்காக தமிழகம் வரும் செய்தி, மிகவும் கமுக்கமாக வைக்கப்பட்டிருந்தது தவறு. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு.பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்களுக்கும், காவல்துறையினருக்கும் மட்டுமே தெரிந்த இந்த கமுக்கமான தகவல் பரவலாக உணர்வாளர்களுக்குத் தெரிவிக்கப்படாததால், உணர்வாளர்கள் விமான நிலையத்தில் உரிய நேரத்தில் கூடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்பதே கசப்பான உண்மை. ஓரளவு திரண்ட உணர்வாளர்களை வைத்துக் கொண்டு கூட எவ்வித போராட்டங்களையும் முன்னெடுக்காமல், இத்தலைவர்கள் பேட்டி மட்டும் கொடுத்து விட்டு கலைந்து சென்றதும் வருத்தமளிக்கிறது.

திருமதி பார்வதியம்மாள் தமிழகம் வருவது குறித்து தகவல் தெரிவிக்க முடியாமல் போயிருந்தாலும், அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள தகவலாவது உரிய நேரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தால், பெருந்திரளான உணர்வாளர்களைக் கொண்டு விமான நிலையத்திலேயே போராட்டங்களை நடத்தி திருமதி பார்வதியம்மாள் அவர்களுக்கு தரையிறங்க அனுமதியைப் பெற்றுத் தந்திருக்க முடியும். ஆனால், அதற்கான வாய்ப்பு நேற்று தட்டிப்பறிக்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை.

சிலர் கருதுவது போல், உணர்வாளர்கள் மிகுதியாக வந்திருந்தால், திருமதி பார்வதியம்மாள் அவர்களுக்கு பாதுகாப்பாகத்தான் இருந்திருக்குமே அன்றி பாதகமாக இருந்திருக்காது என்பதை இத்தலைவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. திருமதி பார்வதியம்மாள் செல்கின்ற வாகனத்தை உணர்வாளர்கள் மறித்திருப்பார்கள் என இத்தலைவர்கள் கருதுகின்றனரா என்பதும் விளங்கவில்லை.

புதிய இயக்கமாக இருந்தாலும், சமரசவாதங்கள் தமிழக அரசியலை எவ்வாறு சீரழித்தன என்பதை இளந்தமிழர் இயக்கம் நன்கு உணர்ந்திருக்கிறது. கமுக்கமாக பேச்சுவார்த்தை நடத்தி காரியம் சாதிக்கும் வழியை, தமிழீழ தேசியத் தலைவரும் மாவீரன் முத்துக்குமாரும் நமக்குக் காட்டவில்லை என்பதையும் நாம் உணர்ந்திருக்கிறோம். போராடி நம் உரிமைகளைப் பெறும் வழியையே நமக்கு அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். நாமும் அவ்வழியில் போராட வேண்டும் என்பதே நமது விருப்பம். நேற்று அவ்வாறு போராடியிருந்தால், நம்மால் நிச்சயம் வென்றிருக்கவும் முடியும்.

நன்றி: புரட்சிகர தமிழ்தேசிய தோழர் அருணபாரதி..

இளந்தமிழர் இயக்க ஒருங்கிணப்பாளர்,

elanthamizhar@gmail.com

மூலம்:http://elanthamizhar.blogspot.com/2010/04/blog-post_17.html

  • Replies 70
  • Views 4.7k
  • Created
  • Last Reply

புரட்சிகர தமிழ்தேசிய தோழர் அருணபாரதி..

இளந்தமிழர் இயக்க ஒருங்கிணப்பாளர்,

பெயரே நல்லா இருக்கு. புரட்சி காகிதத்தில் வராது. செயலில் வேண்டும். நீங்கள் செயலில் இறங்காத படியால் தான் ஈழத்தமிழினம் அழிந்தது.

செயற் படுங்கள் இல்லையேல் புரட்சி என்றதை அழித்து விட்டு பூணையாய் இருங்கள்.

வரலாற்றில் போராடாமல் புரட்சி வரவில்லை. தமிழகம் காகிதத்தில் மேடைப் பேச்சில் புரட்சி காண்கிறது.

தெருவில் இறங்குங்கள். அரசை நெருக்கடிக்கு உள்ளாக்குங்கள். அப்போதான் மாற்றம் வரும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புரட்சிகர தமிழ்தேசிய தோழர் அருணபாரதி..

இளந்தமிழர் இயக்க ஒருங்கிணப்பாளர்,

பெயரே நல்லா இருக்கு. புரட்சி காகிதத்தில் வராது. செயலில் வேண்டும். நீங்கள் செயலில் இறங்காத படியால் தான் ஈழத்தமிழினம் அழிந்தது.

செயற் படுங்கள் இல்லையேல் புரட்சி என்றதை அழித்து விட்டு பூணையாய் இருங்கள்.

வரலாற்றில் போராடாமல் புரட்சி வரவில்லை. தமிழகம் காகிதத்தில் மேடைப் பேச்சில் புரட்சி காண்கிறது.

தெருவில் இறங்குங்கள். அரசை நெருக்கடிக்கு உள்ளாக்குங்கள். அப்போதான் மாற்றம் வரும்

ஆம் தோழர் நேசன்... இன்னும் தமிழ் தேசிய தோழர்கள் பஸ்களின் பின்புறமும்... சுவரிலும் நோட்டிஸ் ஒட்டுபவர்களாகவே உள்ளார்கள்...

notice.jpg

தோழர்கள் பொருளியல் வசதி படைத்தவர்களும் அல்லர் பணம் பதவி என்று உள்ள அரசியல் கட்சியும் அல்லர்.. ஈழ தோழர்கள் உலகளாவிய ரீதியில் ஒர் சேனலை துவங்க வேண்டும்... அதை தமிழ்நாட்டில் தெரியும் படி செய்யவேண்டும்.. மாற்றம் தன்னால் வரும் தோழரே....

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாருக்காக இந்த கண்ணீர் ... இனி யாருக்காக உண்ணாவிரதம் ...கமுக்கமாக இருந்தது யார் தவறு?? நல்ல அரசியல் செய்றாங்கப்பா......

பிரபாகரன் தாய்க்கு அனுமதி மறுப்பு: சென்னை விமான நிலையத்தில் வைகோ கண்ணீர்-23ம் தேதி உண்ணாவிரதம்

பிரபாகரன் தாய்க்கு அனுமதி மறுப்பு: சென்னை விமான நிலையத்தில் வைகோ கண்ணீர்-23ம் தேதி உண்ணாவிரதம்

ஆம் தோழர் நேசன்... இன்னும் தமிழ் தேசிய தோழர்கள் பஸ்களின் பின்புறமும்... சுவரிலும் நோட்டிஸ் ஒட்டுபவர்களாகவே உள்ளார்கள்...

notice.jpg

தோழர்கள் பொருளியல் வசதி படைத்தவர்களும் அல்லர் பணம் பதவி என்று உள்ள அரசியல் கட்சியும் அல்லர்.. ஈழ தோழர்கள் உலகளாவிய ரீதியில் ஒர் சேனலை துவங்க வேண்டும்... அதை தமிழ்நாட்டில் தெரியும் படி செய்யவேண்டும்.. மாற்றம் தன்னால் வரும் தோழரே....

நன்றி. சாத்வீக புரட்சி பார்த்து விட்டோம். ஈழம் போராடும் போது எத்தனையோ தமிழக தலைவர்கள் சாத்வீகத்தில் கத்தினார்கள்

அனால் நடந்தது ஒன்றும் இல்லை.

இனி சாத்வீக கத்தலுக்கு ஆட்கள், கட்சிகள் ,பனம் தேவை இல்லை.

களத்தில் துணிந்து இறங்ககூடிய புரட்சி கர இளைஞர்கள் தேவை. அவர்கள் சிந்தனையை அரசியல் ஆயுத பலத்துக்கு மாற்ற வேண்டும்.

அளும் அரசுக்கு நெருக்கடி கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். அப்போதான் இனம் என்றரீதியில் எதாவது ஒரு நாட்டில் பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்க அரசுகள் முன் வருவார்கள்.

அண்மைய மாவோசிட்டுக்கள் போராட்டம் ஒரு நல்ல பாடம். சொந்த இந்திய மக்களுக்கே விமானத்தாக்குதல் நடாத்த அலோசனை கூட்டம்.

சிந்திபோம் தமிழகம் வெகு விரைவில் அப்படி ஒரு புரட்சி நிலையை எதிர் கொள்ளூம்.

ஈழம் இந்திய அதர்மத்தால் மவுனித்து விட்டது.

தமிழர்களில் ஒருவருக்கு வைத்தியமே தர முடியாத இந்தியா மகிழ்ச்சியாக வாழ தமிழ் மக்களுக்கு இலங்கையில் தீர்வை தருமாம்.... தமிழினத்தின் தற்போதைய தலைவர்கள் சொல்கிறார்கள்...

வ்ணக்கம்..

நண்பர் சொன்னது போல் .. ஆயுதம் ஏந்தி தான் போராட வீண்டும் என்று இல்லை... தமிழ் நாட்டு மக்கள் தொலைக்காட்சி பெட்டிக்குள் தூங்கி கொண்டிருகிறார்கள்.. அத்துடன் பழக்கப்பட்டு விட்டார்கள்.. எனவே அதை தான் ஆயுதமாக பாவிக்க வேணும்....மீடியா எல்லாத்தையும் விட சக்தி வாய்ந்தது..உண்மைய சொல்ல போனால் இந்தியாவில் சில பகுதிகளில் தமிழ் நாட்டு மக்களுக்கே இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் இருக்கிறார்கள் எண்டால் தெரியாது. அந்த அளவுக்கு இருக்குது...பிரசாரம் ...

39. கணினித் தமிழ்

40. சூழலியலும் தமிழும்

41. கட்டுமானக்கலை

42. தமிழ் மருத்துவம்

43. சிற்பக் கலை

44. பெண்ணியம்

45. தலித்தியம்

இது கனி(செம்)மொழி மா நாட்டில் கொலைஞரின் நிகழ்ச்சிகள் 42 வது தமிழ் மருத்துவம்.

பு த தே வேண்டுகோள் நிறைவேற்றபட்டுள்ளது

Edited by சுனாமி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

திருமதி பார்வதியம்மாள் திருப்ப அனுப்பபட்டமையும் சில கசப்பான உண்மைகளும்

மானம் ரோசம் உள்ள ஈழத்தமிழனாய் இருப்பாயானால் சீனத்தூதகரத்துக்கு போய் அங்கு உள்ள பாதுகாப்பு பிரிவில் உன்னை அறிமுகப்படுத்திகொள்.இந்தியாவை 26க உடைக்கும் திட்டத்துக்கு ஆதரவு வழங்குகிறேன்,என்று ஆரம்பி..... மிகுதியை அவர்கள் சொல்லி கொடுப்பார்கள் இது நடந்தால் தான் மாவீரர் கனவு பலிக்கும்,அலைந்து திரியும் அப்பாவிகளின் ஆத்மாக்கள் சாந்தியடையும்

வட இந்தியர், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ....., ... ...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தம்மை தமது இனத்தை நிலத்தை அடையாளம் காண முடியாதவாறு அவர்களைக் கட்டிப்போட்டுள்ள இந்திய, திராவிட மற்றும் இதர தேசிய மாயைகளில் இருந்து அவர்களை வெளிக்கொணராமல்.. தமிழர்களின் இனத்துவத்தை தமிழர்களுக்கு புரிய வைக்க முடியாது. மற்றையவர்களும் மனிதர்கள் தான். அவர்கள் தங்கள் இனத்துவத்தை காக்க முற்படும் போது தமிழர்கள் ஏன் தமதை இழப்பதில் திருப்தி கொள்கின்றனரோ..???!

தமிழர்களைச் சுற்றி பின்னப்பட்டுள்ள.. இந்திய தேசிய மாயை தகர்ப்பட்ட வேண்டும். திராவிட மாயை தகர்ப்பட்ட வேண்டும். அவற்றை தகர்க்காமல் தமிழர்களை இந்திய மற்றும் திராவிட மாயைகளுக்குள் அடக்கி வைத்துக் கொண்டு தமிழ் தேசிய இனத்தினராக அவர்களை உணர்வுறச் செய்ய முடியாது.

தமிழர்களை உணர்வுறச் செய்து ஒருங்கிணைக்காமல்.. தமிழர்கள் இந்த உலகில் பாதுகாப்புப் பெற முடியாது. இதைச் செய்யத் தவறின் தமிழினம் என்பது இன்னும் சில காலத்தில் முற்றாக அதன் இனத்துவம் இழந்து இதர அடையாளங்களால் போலி அடையாளம் இடப்பட்டு.. இதர இனக்குழுமங்களுக்குள் அடக்கப்பட்டு விடும் அல்லது நசுக்கப்பட்டு விடும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சரி உது பிழைச்சுப்போச்சுது....... அரசியல் செய்ய இன்னுமொரு சந்தப்பம் கிடைக்காமல் போகுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி உது பிழைச்சுப்போச்சுது....... அரசியல் செய்ய இன்னுமொரு சந்தப்பம் கிடைக்காமல் போகுமா?

இந்தாப்பா நாட்டமை சொம்பை தூக்கி கொண்டு வந்துவிட்டார்... எல்லாரும் தள்ளிபோங்கள் ...தமிழர்தம் ஒற்றுமையின் அஸ்திரமே வருக... தங்களை போல சில சில ஆட்கள் களத்திற்கு ஒருவர் இருவர் இருந்தால் தான் நாங்கள் ஒற்றுமையாக இருக்கமுடியும்...அதாவதுபொது எதிரியாக வைத்து.... இல்லையென்றால் எங்களுக்குள் நாங்களே அடித்து கொள்ள நேரிடும்... ஆதாலால் நேரம் காலம் கருதாது அவ்வப்பொழுது வந்து தமிழர் ஒற்றுமையை தாங்கள் வளர்க்க வேண்டும் தோழர் மதிவெட் மன்னிக்கவும் மதிவதனங்கு என்ன எழவோ புரியவில்லை ... அவர்களே.....

என்னுடைய திரியில் நீண்ட நாட்களாக மாட்டுவீர்கள் என எதிர்பார்த்தேன்.... ம்ம்ம் ஆரம்பிக்கலாம் தோழரெ விவாதத்தினை... எங்கிருந்து தொடங்கலாம் தோழர்....

இந்தாப்பா அரசியல் எந்த எந்த விச்யத்தில் செய்யலாம் எதில் எதில் செய்ய கூடாது என மதிவதங்கு விளக்குவார்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா......பார்வதிஅம்மாள் மகன் எங்கே தேடியும் கிடைக்கிவில்லை. பழநெடுமாறன் ஐயாவும் வைகோ அண்ணாவும் அரசியல் செய்யத்தானே அங்கு சென்றார்கள். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆமா......பார்வதிஅம்மாள் மகன் எங்கே தேடியும் கிடைக்கிவில்லை. பழநெடுமாறன் ஐயாவும் வைகோ அண்ணாவும் அரசியல் செய்யத்தானே அங்கு சென்றார்கள். :lol:

தோழரே மதிவதனுங்... நான் பொறி வைப்பது உங்களுக்குத்தான்... இந்த தமிழக அரசியல் பன்னாடைகளை நான் மனிதனாகவே மதிப்பது இல்லை.... நீர் ஆரம்பியும் தோழரெ.... எதில் அரசியல் செய்யலாம் எதில் செய்ய கூடாது.... :D

ஆமா......பார்வதிஅம்மாள் மகன் எங்கே தேடியும் கிடைக்கிவில்லை. பழநெடுமாறன் ஐயாவும் வைகோ அண்ணாவும் அரசியல் செய்யத்தானே அங்கு சென்றார்கள். :lol:

கடைசியா தமிழ்நாட்டு செருப்பாலையும் உங்களுக்கு நல்ல அடியோ....?? :D

உங்களுக்கு அவவின் மகனை தேட வேண்டிய அவசியம் என்ன வந்திட்டுது...?? நாய்க்கு எங்கை அடிவிழுந்தாலும் காலை தான் தூக்கும்... அது போல தான் நீங்களும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.... எல்லாம் அரசியல் செய்யத்தானே! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா......பார்வதிஅம்மாள் மகன் எங்கே தேடியும் கிடைக்கிவில்லை. பழநெடுமாறன் ஐயாவும் வைகோ அண்ணாவும் அரசியல் செய்யத்தானே அங்கு சென்றார்கள். :lol:

நாய் சும்மா நின்றாலும் ஓடிக்கொண்டு தானாம் இருக்கும்.உவமானம் உவமேயம் மதிவதனத்துக்கு விளங்கும் தானே. :D:huh:

ம்.... எல்லாம் அரசியல் செய்யத்தானே! :lol:

உங்களையும் சேர்த்து தானே சொல்லுறீயள்...?? வருமானத்துக்காக எதுவும் செய்வியள் தான்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்.... எல்லாம் அரசியல் செய்யத்தானே! :lol:

1970 களில் ஜெவிபியின் கலகத்தினை அடக்க பொந்தியாவின் காலடியில் விழுந்ததும் அரசியல் செய்யத்தானோ தோழர் மதிவதனகு....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகன் அழைக்க போயிருந்தால் வெளியே விட்டிருப்பார்கள். உள்ளே விடாமல்செய்து அரசியல் செய்யும் சாணக்கியம் நெடுமாறன் ஐயாவுக்கும் வைகோ அண்ணனுக்கும் கை வந்த கலையாமே!

மகன் அழைக்க போயிருந்தால் வெளியே விட்டிருப்பார்கள். உள்ளே விடாமல்செய்து அரசியல் செய்யும் சாணக்கியம் நெடுமாறன் ஐயாவுக்கும் வைகோ அண்ணனுக்கும் கை வந்த கலையாமே!

அவை சாணை நக்கியதுக்கு பலியான இந்திய அரசு முட்டாளோ...?? இல்லை சொல்லுற நீங்கள்...??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகன் அழைக்க போயிருந்தால் வெளியே விட்டிருப்பார்கள். உள்ளே விடாமல்செய்து அரசியல் செய்யும் சாணக்கியம் நெடுமாறன் ஐயாவுக்கும் வைகோ அண்ணனுக்கும் கை வந்த கலையாமே!

அவரது கலை இருக்கட்டும் தோழரெ மதிவதனங்க் இந்த புரட்சிகர தோழர்கள் இந்தியத்தின் தேர்தலில் நிற்பவனை ஒருபோதும் நம்புவது இல்லை.... அது போகட்டும் எதில் அரசியல் செய்யலாம் எதில் செய்யகூடாது நீர் விவாததிற்குவாரும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவரது கலை இருக்கட்டும் தோழரெ மதிவதனங்க் இந்த புரட்சிகர தோழர்கள் இந்தியத்தின் தேர்தலில் நிற்பவனை ஒருபோதும் நம்புவது இல்லை.... அது போகட்டும் எதில் அரசியல் செய்யலாம் எதில் செய்யகூடாது நீர் விவாததிற்குவாரும்

மகனை தூரத்தில் வைத்துவிட்டு தங்களை முன்நிலைப்படுத்தி அரசியல் செய்பவர்களை கேளுங்கள் தோழரே! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.