Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

AR ரஹ்மான் செம்மொழி மாநாடு பாடல்

Featured Replies

AR Rahman World Tamil Semmozhi Conference Theme Song REMIX VIDEO

AR ரஹ்மான் செம்மொழி மாநாடு பாடல் !

( REMIX VIDEO - Eelam Song Azhage Azhage Tamil Azhage )

http://www.youtube.com/watch?v=SYP95GYUJhQ

http://www.youtube.com/watch?v=SYP95GYUJhQ

-----------

Edited by news4sen

  • கருத்துக்கள உறவுகள்

.

அழகே, அழகே ..... தமிழ் அழகே........ பாடலை எழுதியவர் , புதுவை இரத்தினதுரை அவர்களா?

.

  • தொடங்கியவர்

=======================================================================

Original Video : அழகே, அழகே ..... தமிழ் அழகே.. Azhage Azhage Tamil Azhage

Thanks to the above video.

==============================================================

Edited by news4sen

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உந்தப்பாட்டை ஒருதரத்துக்கு மேல கேட்க ஏலாது. உதென்ன கண்றாவியா இருக்கு. போதாததுக்கு எங்கெயெல்லாமோ போய் என்னவோ அபினயமெல்லாம் புடிச்சி டாண்ஸ் வேற ஆடினம்.. ஏர் ஆர் றஹ்மான் தன்னால முடிஞ்ச அளவு இந்தக் கண்றாவிப் பாட்டுக்கு இசையமைச்சிருக்கிறார் எண்டதைப் பாராட்டத்தான் வேணும். அறளை பேந்த காலத்தில கருணாநிதி ஐயா உந்தப் படான் பாடடை எழுதித் தன்ர செல்வாக்கில றஹ்மானைக் கொண்டு இசைவேற அமைக்க வச்சி அதை ஒப்பிசல் பாட்டாயும் ஆக்கிப்போட்டார் போல கிடக்குது. எத்தினையோ கவிஞர்மார் இருக்கினம் கேட்டிருந்தால் அழகாய் எழுதிக் கொடுத்திருப்பினம். உந்தாளுக்கேன் உந்தத் தேள்வையில்லாத வேலை. தமிழன்னையை உந்த அலங்கோலம் பண்ணிப் பாடாயப் படுத்துற கருணாநிதி கூட்டம் நாசமாய்ப் போக.

பாட்டு உருப்படியாக மையவில்லை.

ஊழல் பேர்வழி கொலைஞன் கருணாநிதி உழைப்பைப் பற்றி சொல்வது வேடிக்கையானது.

தமிழுக்கு பெருமை சேர்க்கும்

பக்தி இலக்கியங்கள், .... போன்றன புறக்கணிக்கப்பட்டு ஐம்பெரும் காப்பியங்களுக்கு மட்டும் கொடுத்த முக்கியத்துவம் பௌத்தர்களிடம் கொலைஞன் கருணாநிதி இலஞ்சம் வாங்கியிருப்பதை பறைசாற்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

என்னுமொரு பாட்டில் இடையிடையே ராப் என்று கொச்சைத் தமிழில் பாடல்... இதெல்லாம் செம்மொழி என்று எங்கு போய் முட்ட...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழுக்குப் பக்தி இலக்கியங்கள் மேன்மை சேர்த்ததைப் போல பலமடங்கு ஐம்பெருங் காப்பியங்களும் ஏனைய சங்க நூல்களும் பெருமை சேர்த்துள்ளன. இங்கே சமயத்தை இழுத்து இளங்கோவடிகளும், திருத்தக்க தேவரும், சீழ்த்தலைச் சாத்தனும் சிங்களவர்கள் என்ற தோரணையில் இந்தக்களத்தைச் சம்பந்தமில்லாத இடத்திற்குத் திசை திருப்புவது தேவையற்ற செயலாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெயருக்குமட்டும் செம்மொழி.

ஆனால்..

பாடல் உச்சரிப்புக்களிலும் வாத்திய இசைகளிலும் மேலைத்தேயம் காலூன்றிவிட்டது.

செம்மொழி இசைத்தவருக்கு எமது பண்டைய வாத்தியங்கள் மறந்துவிட்டது போலும்.

செம்மொழியும் செம்மறிகளும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திராவிட மாயை எண்டு யாரோ எழுதியிருந்திச்சு..... உது செம்மெழி மாயை. :lol:

இளையராஜாவிடம் கொடுத்திருந்தால் மிக அருமையாக செய்திருப்பார். வரிகளை தமிழுணர்வுள்ள கவிஞர் எழுதியிருந்தால் நல்லது.

பாட்டு வரிகள் படு மோசம். எழுதியவன் தமிழர் வரலாற்றை சிதைத்துள்ளான். தமிழ் இன்று வாழ்வதற்கு காரணமான பிராதன இலக்கியங்கள் கூறப்படவில்லை. திராவிட மாயையில் உண்மை வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

ரகுமானின் ராப் இசை மிக நன்றாக இருந்தாலும், இந்த தலைப்புக்கு பொருத்தமில்லை, உணர்வையும் ஊட்டவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜாவிடம் கொடுத்திருந்தால் மிக அருமையாக செய்திருப்பார். வரிகளை தமிழுணர்வுள்ள கவிஞர் எழுதியிருந்தால் நல்லது.

-------

இந்தப் பாடலை மு.க. என்னும் கவிஞர் உருவாக்கியதாக தெரிகிறது.

என்ன செய்வது.... சிலருக்கு திருமணவீட்டில் மணமகனாகவும்,

செத்த வீட்டில் பிணமாகவும் இருந்து விழும் மாலைகளைப் பெறுவதில் தனிப் பிரியம்.

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜாவிடம் கொடுத்திருந்தால் மிக அருமையாக செய்திருப்பார். வரிகளை தமிழுணர்வுள்ள கவிஞர் எழுதியிருந்தால் நல்லது.

பாட்டு வரிகள் படு மோசம். எழுதியவன் தமிழர் வரலாற்றை சிதைத்துள்ளான். தமிழ் இன்று வாழ்வதற்கு காரணமான பிராதன இலக்கியங்கள் கூறப்படவில்லை. திராவிட மாயையில் உண்மை வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

ரகுமானின் ராப் இசை மிக நன்றாக இருந்தாலும், இந்த தலைப்புக்கு பொருத்தமில்லை, உணர்வையும் ஊட்டவில்லை.

எழுதியவன் எல்லாவற்றையும் கெடுத்தால் இசை என்ற ஒன்று தேவை இல்லையே.வரிகள் தான் இசையை பொதுவாக பிரபல்யமாக்கியுள்ளது.

தமிழுக்குப் பக்தி இலக்கியங்கள் மேன்மை சேர்த்ததைப் போல பலமடங்கு ஐம்பெருங் காப்பியங்களும் ஏனைய சங்க நூல்களும் பெருமை சேர்த்துள்ளன. இங்கே சமயத்தை இழுத்து இளங்கோவடிகளும், திருத்தக்க தேவரும், சீழ்த்தலைச் சாத்தனும் சிங்களவர்கள் என்ற தோரணையில் இந்தக்களத்தைச் சம்பந்தமில்லாத இடத்திற்குத் திசை திருப்புவது தேவையற்ற செயலாகும்.

கருத்துக்கு கருத்து எழுதாமல், இலக்கிய அடிப்படை அறிவுமில்லாமல் கண்டதையும் உளறி திசை திருப்புவது உங்கள் தொழில்.

போலித் திராவிடர்களின் வாடை இந்த பதிலில் நிறையவே உண்டு நிறையவே உள்ளது.

போலித் திராவிடர்கள் குறித்த பாடலில் திட்டமிட்டு பக்தி இலக்கியங்களை புறக்கணித்துவிட்டு, பௌத்தம் தொடர்பான "ஐம்பெரும்" காப்பியங்கள் சமய சம்பந்தமே இல்லாதது என்ற மாயை ஏற்படுத்தி, அதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து ஈனப் பிழைப்பு நடத்தும் அவர்களது வரலாற்றை வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழ் மொழியுடன், தமிழ் மொழி வளர்ச்சியுடன், தமிழ் மொழி காப்புடன் பின்னிப் பிணைந்த பக்தி இலக்கியங்களை குறிப்பிடாது விட்டது பாரிய வரலாற்று மறைப்பாகும்.

இப்பிடித்தான் திராவிட மாயைகளில் மூழ்கியவர்களால் தமிழரின் உண்மையான வரலாறின் பெரும் பகுதி தொலைக்கப்பட்டது.

கடந்த காலங்களில் போலித் திராவிட இயக்கத்தின் எழுச்சி தான், தமிழ் மொழியின் வீழ்ச்சி, வீரத் தமிழர்களின் வீழ்ச்சி, என்பதை போலித் திராவிட மாயையில் உழல்பவர்கள் உணர இன்னும் காலம் செல்லலாம்.

என்னினும் அண்மைக் காலமாக போலித் திராவிடம் வீழ்ச்சியுறுவது, அதன் முகத்திரை கிழிவது நல்ல சகுனம்.

  • கருத்துக்கள உறவுகள்

-----

போலித்திராவிடமும் வீழ்ந்தால் அந்த இடத்தை, யமனை பச்சடி போட்ட காங்கிரஸ் பிடித்து விடுமே..... :)

  • கருத்துக்கள உறவுகள்

பெயர்தான் செம்மொழி மாநாடு.............

நடக்கப்போவது கனிமொழிக்கு தமிழ்சேலை கட்டும் சாமாடு!

சோனியா பிரதமவிருந்தினர்......

இந்தபாடல்களில் ஏதும் பிழை உள்ளதாக எனக்கு தெரியவில்லை!

புரிந்தவர்களின் புரிதல்களில் பிழைகள் நிறையவே உண்டு!

:) செம்மெறிக்கூட்டங்களுக்கு ஒரு செம்மொழி மாநாடு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.