Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தமிழர்கள் மீண்டும் போர்தெடுப்பார்கள், கூறுவது நானல்ல.......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்கள் மீண்டும் போர்தெடுப்பார்கள், கூறுவது நானல்ல.....

சிங்கப்பூரின் முன்னாள் பிரதமரும், தற்போதைய அரசவை ஆலோசகருமான லீ குவான் யூ, அந்நிய நாடுகளைப்பற்றி அதிகம் கருத்து சொல்ல மாட்டார்! அத்திபூத்த மாதிரி அவர் சொன்னால், அதை அத்தனை நாடுகளும் படுகவனமாகக் காதில் வாங்கிக்கொள்ளும்! உலக நாடுகள் அத்தனையும் உற்றுப்பார்க்கிற அளவுக்கு சிங்கப்பூரை சூப்பர் ஸ்பீடில் முன்னேற்றிக் காட்டிய இவரின் லேட்டஸ்ட் மன ஓட்டங்களைப்பற்றி 'லீ குவான் யூவுடன் ஓர் உரையாடல்' என்று வெளியாகியுள்ள ஒரு சமீபத்துப் புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்வேறு விஷயங்கள் குறித்து லீ குவான் யூவுடன் தான் பேசியதை... டாம் ப்லேட் என்ற அமெரிக்கப் பத்திரிகையாளர் எழுதியுள்ளார். புத்தகத்தின் ஒரு பகுதி, இலங்கை அரசின் அராஜகங்களை அப்பட்டமாகச் சுட்டிக்காட்டுகிறது.

சிங்கப்பூரின் பிதாமகன் உதிர்த்த வார்த்தைகள், ஈழத் தமிழர்களின் மரண ஓலங்களுக்கு மருந்து போடுவதாக இருக்கிறது. இனி புத்தகத்தில் இருந்து....

''இலங்கையில் போர் முடிந்து அமைதி நிலவுகிறது என்று எங்காவது படித்தால், சிரிப்புதான் வருகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பை இலங்கை ராணுவம் எதிர்த்து வென்றிருந் தாலும், லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்திருப்பது அநியாயம்!

நான் ராஜபக்ஷேவின் சில பிரசாரங் களையும், மேடைப் பேச்சுகளையும் கேட்டிருக்கிறேன். அதை அலசிப் பார்க்கும்போது, அவரை ஒரு சிங்களத் தீவிரவாதி ('எக்ஸ்ட்ரீமிஸ்ட்') என்றே கருத வேண்டியுள்ளது. அப்படிப்பட்டவரின் மனதை மாற்றுவது எளிதான காரியம் அல்ல.

மக்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் சுதந்திரம் அளிக்கப்படுகிறது என்பதால் மட்டுமே இலங்கையை ஒரு குடியரசு நாடு என்று கூறிவிட முடியாது. அந்த நாட்டில் வாழும் சிங்களர்களுக்கு உரிமை இருக்கிற அதே அளவு தமிழர்களுக்கும் தரப்பட வேண்டும். ஆனால், அந்த நாட்டு வரலாறைப் புரட்டிப் பார்த்தால், அப்படி இல்லை. ஜாஃப்னாவில் தமிழர்களுக்குச் சிங்களர்களால் இழைக்கப்படும் கொடுமைகளைப் பார்த்தாலே, இது புரியும். எனக்கென்னவோ, சிங்களர்கள் தாழ்வு மனப்பான்மையால்தான் தமிழர் களை விரட்டுகின்றனர் என்று தோன்றுகிறது. சிங்களர்களைவிட தமிழர்கள் அதிகச் செயல்திறன் கொண்டவர்கள். அப்படி ஒரு நிலையில், நானும் ஒரு தமிழனாக இருந்திருந்தால், அவர்களை எதிர்த்து இயல்பாகவே கொதித்து எழுந்திருப்பேன்!'' என்று தமிழர்களின் குரலாக அந்தப் புத்தகத்தில் லீ குவான் யூ ஒலித்திருக்கிறார்.

மேலும் அந்தப் புத்தகத்தில், ''சிங்கப் பூரைப் பொறுத்தவரை, இந்த நாட்டின் முன்னேற்றத்துக்காக, பல இன மக்களும் பாடுபட்டு வந்தாலும், சீனர்களையும் இந்தியர்களையும்போல அயராது உழைப்பவர்களைக் காண்பது அரிது. அதற்காக மனநெருடல் கொண்டு... 'இந்த நாட்டில் வாழ மற்ற இனத்தவர்களுக்கு உரிமை இல்லை' என்று தடையா போடுகிறோம்? நொடிக்கு 10 சாதிக் கலவரம் என்று வெடிக்கும் பல நாடுகளை ஒப்பிடும்போது, எவ்விதச் சண்டையும் சச்சரவும் இன்றி எல்லா இனத்தவர்களும் இங்கே அமைதி யாக வாழ்வது எனக்கு சந்தோஷம் அளிக்கிறது.'' என்று ஒரு சிறந்த தலைவனுக்குரிய செருக்கோடு பெருமிதம்கொள்ளும் லீ குவான் யூ,

''நான்காம் கட்ட ஈழப் போரில் தமிழர்களின் இந்தத் தோல்வி தற்காலிக மானதே. அவர்கள் வெகுநாட்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். கூடிய விரைவில் இலங்கை அரசுக்கு எதிராகத் திரும்பவும் போர் தொடுப்பார்கள். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை!'' என்று கணித்திருப்பதைத்தான் உலக நாடுகள் சீரியஸாகக் கவனிக்கின்றன.

இவரது கணிப்புகள் பல சமயம் 'நச்'சென்று நிஜமாகிவிடுவதுதான் இதற்குக் காரணம். புகழ்பெற்ற அமெரிக்க அரசியல் ஆய்வாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர், ''இரண்டு தலைமுறை அமெரிக்க ஜனாதிபதிகள், லீ குவான் யூவின் அறிவுரைகளைக் கருத்தில்கொண்டு நன்மை பெற்றது உண்டு. சீனாவின் எதிர்கால அசுர வளர்ச்சியை முன்கூட்டிச் சொன்னதும் இந்தத் தலைவர்தான். இதனாலேயே, சீனாவின் கம்யூனிஸ்ட் தலைவராக இருந்த புகழ் பெற்ற தலைவர் டெங்க் சியாவுபிங்க், தனது மிகப் பெரிய முடிவுகளை எல்லாம் லீயிடம் ஆலோசித்த பின்னரே எடுத்தார். அப்படிப் பட்டவரின் கணிப்பை ஒதுக்கித் தள்ள முடியாது!'' என்று அழுத்தமாக அடிக்கோடு சொன்னதும் இங்கே கவனிக்கத்தக்கது.

இதைப்பற்றி ராஜபக்ஷே தரப்பினரோ, ''சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த ஆரம்ப கால அரசியலில் பெரும்பான்மையான மந்திரிகள் இலங்கைத் தமிழர் களே. சட்டசபையில் அவர்களது எண்ணிக்கை காலப்போக்கில் குறைந்து வந்தாலும், லீ குவான் யூவுக்கு அவர்கள் மீது ஒரு தனிப் பற்று எப்போதுமே உண்டு.

இலங்கை மீதான அவரது கோபத்துக்கு வேறு காரணமும் உண்டு... இலங்கையும் சிங்கப்பூரின் அளவில் உள்ள, சுற்றுலாவை மையமாகக்கொண்ட சிறிய தீவுதான். சிங்கப்பூரைவிட இங்கு அதிக இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், சிங்கப்பூர் அளவுக்கு இலங்கை வளர்ச்சி அடையாததற்கு காரணம், அங்கு உள்ளது போன்ற சகல வசதிகளுடன் கூடிய துறைமுகம் இல்லை. இதனாலே, பல நாடுகளும் சிங்கப்பூர் மூலமாகத் தங்களது வர்த்தகத்தை மேற்கொண்டு அந்த நாட்டை வளர்த்தன. இப்படி இருக்கும் நிலையில், தாய்லாந்தில் பல வருடங்களாக முடங்கிக்கிடந்த செயற்கைக் கால்வாய் ('க்ரா கால்வாய்') திட்டம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அது வெற்றிகரமாகச் செயல்படுத்தப் பட்டால், சிங்கப்பூரின் வளர்ச்சி தடை படும். இதன் மூலம் இந்தியா, வங்கதேசம், இலங்கை போன்ற தெற்காசிய நாடு களில் வர்த்தகம் பெருகிவிடும். கிடப்பில் கிடந்த அந்தத் திட்டத்தின் பேச்சுவார்த்தை சமீப காலங்களில் அடிபட... அதில் பதறிப்போய்தான் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுகிறார் லீ'' என்று ஓணானுக்கும் டைனோஸருக்கும் முடிச்சுப் போடுகிறார்கள்!

நன்றி ஆனந்தவிகடன்

மகிந்தாவா? லீ யா? பொருத்திருந்து பார்ப்போம்..

  • கருத்துக்கள உறவுகள்

நான் ராஜபக்ஷேவின் சில பிரசாரங் களையும், மேடைப் பேச்சுகளையும் கேட்டிருக்கிறேன். அதை அலசிப் பார்க்கும்போது, அவரை ஒரு சிங்களத் தீவிரவாதி ('எக்ஸ்ட்ரீமிஸ்ட்') என்றே கருத வேண்டியுள்ளது. அப்படிப்பட்டவரின் மனதை மாற்றுவது எளிதான காரியம் அல்ல.

மக்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் சுதந்திரம் அளிக்கப்படுகிறது என்பதால் மட்டுமே இலங்கையை ஒரு குடியரசு நாடு என்று கூறிவிட முடியாது. அந்த நாட்டில் வாழும் சிங்களர்களுக்கு உரிமை இருக்கிற அதே அளவு தமிழர்களுக்கும் தரப்பட வேண்டும். ஆனால், அந்த நாட்டு வரலாறைப் புரட்டிப் பார்த்தால், அப்படி இல்லை. ஜாஃப்னாவில் தமிழர்களுக்குச் சிங்களர்களால் இழைக்கப்படும் கொடுமைகளைப் பார்த்தாலே, இது புரியும். எனக்கென்னவோ, சிங்களர்கள் தாழ்வு மனப்பான்மையால்தான் தமிழர் களை விரட்டுகின்றனர் என்று தோன்றுகிறது. சிங்களர்களைவிட தமிழர்கள் அதிகச் செயல்திறன் கொண்டவர்கள். அப்படி ஒரு நிலையில், நானும் ஒரு தமிழனாக இருந்திருந்தால், அவர்களை எதிர்த்து இயல்பாகவே கொதித்து எழுந்திருப்பேன்!'' என்று தமிழர்களின் குரலாக அந்தப் புத்தகத்தில் லீ குவான் யூ ஒலித்திருக்கிறார்.

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் ஜூ வின் இந்தக் கருத்து அவரின் அரசியல் ஆழுமையைக் காட்டுகின்றது

வாத்தியார்

...............

  • கருத்துக்கள உறவுகள்

.

நான் ராஜபக்ஷேவின் சில பிரசாரங் களையும், மேடைப் பேச்சுகளையும் கேட்டிருக்கிறேன். அதை அலசிப் பார்க்கும்போது, அவரை ஒரு சிங்களத் தீவிரவாதி ('எக்ஸ்ட்ரீமிஸ்ட்') என்றே கருத வேண்டியுள்ளது.

- சிங்கப்பூரின் முன்னாள் பிரதமரும், தற்போதைய அரசவை ஆலோசகருமான லீ குவான் யூ -

தூரத்திலை இருக்கிற சிங்கப்பூருக்கு விளங்கியது......

பக்கத்திலை, இருக்கிற இந்தியாவுக்கு விளங்க்காமல் போனதிலிருந்து..... அவர்களின் அரசியல் வறட்சியைத்தான் காட்டுகின்றது.

.

.

அவர்களின் அரசியல் வறட்சியைத்தான் காட்டுகின்றது.

.

இந்தியாவில ஆத்மீகத்தில இருந்து அடுப்படி வரை வற்ட்சிதான் பாருங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில ஆத்மீகத்தில இருந்து அடுப்படி வரை வற்ட்சிதான் பாருங்கோ

ஆத்மீகத்தில் வறட்சி இருக்கிறமாதிரி தெரியவில்லையே...... ஜில்.

சாமியார் எல்லாரும் ஜாலியாத்தானே..... இருக்கிறார்கள். :unsure:

தமிழ்நாட்டில் நுழைய எனக்குத் தடை விதிக்கப்பட்டால் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி. இராமசாமி திட்டவட்டமாகக் கூறினார்.

நான் தந்தை பெரியாரின் பாசறையச் சேர்ந்தவன். எனக்கு பிரபாகரன் மட்டுமே தலைவன் என்று அவர் தெரிவித்தார்.

இனி எந்தக் காரணத்தை முன்னிட்டும் தமிழ் நாட்டில் கால் வைக்க டாக்டர் இராமசாமிக்கு அனுமதியளிக்க கூடாது என்று இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சரகத்திற்கு தமிழக அரசாங்கம் கடிதம் எழுதியுள்ளது.

கடந்த சில மாதங்களில் தமிழ் நாட்டில் நடைபெற்ற மாநாடுகளில் கலந்து கொண்ட டாக்டர் இராமசாமி விடுதலை புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதால் அவருக்கு தமிழகத்தில் நுழையத் தடை விதிக்க வேண்டுமென்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நேற்று டாக்டர் இராமசாமி கருத்துரைக்கையில் கூறியதாவது:-

கடந்த பெப்ரவரி மாதம் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டிலும் மே 18 ஆம் திகதி மதுரையில் மடைபெற்ற நாம் தமிழர் மாநாட்டிலும் நான் கலந்துகொண்டேன்.

இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின் பொது 40, 000 க்கும் அதிகமான அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்தப் படுகொலைக்கு திமுக அரசாங்கம் துணைபோயிருக்கின்றது.

இந்தியாவை ஆட்சி புரியும் காங்கிரஸ் உடந்தையாக இருந்திருக்கிறது. திமுகவும் காங்கிரசும் செய்த துரோகத்தை மறைக்க முடியாது. மன்னிக்கவும் முடியாது.

இலங்கையில் தமிழினத்தையே துடைத்தொழிக்கும் கொடூரச் செயலுக்கு கருணாநிதியும் சோனியா காந்தியும் உடந்தையாக இருந்தனர். என் உயிர் இருக்கும் வரை தமிழீழ மக்களுக்காக நான் குரல் கொடுப்பேன்.

இந்த மாதம் 23 ஆம் திகதி தொடக்கி 27 ஆம் திகதி வரை கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டில் நான் கலந்து கொள்ளமாட்டேன். கடந்த ஜனவரி மாதம் புதுடில்லி பரவாசி மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வரும்படி இந்திய அரசாங்கமே எனக்கு அழைப்பு அனுப்பியிருக்கின்றது.

அந்த அழைப்பை நான் முற்றாக புறக்கணித்தவன். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மட்டுமே எனக்குத் தலைவர். நான் பெரியார் பாசறையைச் சேர்த்தவன். இவ்வாறு பேராசிரியர் டாக்டர் இராமசாமி கூறினார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்துக்கோ அன்றேல் தமிழர்விரோத தேசமாம் இந்தியாவுக்கோ இவை எவையும் விளங்கவில்லை என நாம் நினைத்தால் எமைப்போல முட்டாள்கள் யாருமிருக்க மாட்டார்கள். புலம்பெயர் தேசத்தில் வாழ்கின்ற தமிழர்கள்தான் இனிமேல் சிங்களத்துக்கு அச்சுறுத்தல் என முனனைநாள் சிங்களத்தின் வெளிவிவகார அமைச்சகர் மங்கள சமரவீரா கூறியிருக்கிறார். இவையெல்லாம் தற்செயலானதல்ல திட்டமிட்டபடியே நடக்கின்றது. தீர்வு எதையம் வழங்காது ஏமாற்றபப்ட்டு விரக்தியில் தமிழர்கள் மீண்டும் ஆயதமேந்திப் போராடவேண்டுமென்பதே இந்தியாவின் விருப்பம் காரணம், தீர்வுக்குப்பிந்திய அன்றேல் பிரிந்துசெல்வதன் பின்பான தமிழர்களது நிர்வாகமோ அன்றேல் ஆட்சியோ, உணர்வளவில் இல்லாது, அடக்குமுறைச்சட்டங்களின் மூலம் அடாவடியாக ஒன்றபடுத்திவைத்திருக்கும் இந்தியாவுக்கு நல்ல சகுனமாகவிருக்காது. தமிழர்களது சுயநிர்ணய உரிமைக்கான அன்றேல் பிரிந்துசெல்லுவதற்கான போராட்டமானது இந்தியப் பிரசைகளுக்கு தாம் போராட வெளிக்கிட்டால் சீரழியவேண்டிஏற்படும் எனும் அச்சவுணர்வை எப்போதும் மனதில் வைத்திருப்பதற்கு பக்கத்திலுள்ள ஈழமே உதாரணமாகவிருக்கவேண்டுமென்பதே தமிழர் இனவிரோத இந்தியாவின் குறிக்கோள். ஆக ஒன்றுபட்ட இந்தியா எனும் பல்வேறு தேசங்களின் கூடடமைப்பு இருக்கும்வரை தமிழனுக்கு விடிவில்லை. அதற்க்கேற்றாற்போலவே புலத்தில் எமது அரசியல் தலைமை எனச்சொல்லித்திரியும் இந்திய எடுபிடிகளது செயல்களும் இருக்கின்றன. கடந்த சிங்களத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியக் கைக்கூலிகளான, இந்திய இராணுவ காலத்தில் "மண்டையன் குழு" எனும் ஒரு கொலைப்படையை தலைமையேற்ற நடாத்திய சுரேஸ் பிரேமச்சந்திரன் உட்பட்ட சம்பந்தன் குழுவின் வெற்றிக்காக உதையன் தினசரியின் அதிபரை தமிழர்தரப்பு வேடபாளராக இந்தியாவின் ஏவலின்பேரில் நிறுத்தப்பட்டு அவர்களை எதிர்த்துப் போடடியிட்ட ஏனைய வேடபாளர்களது கருத்துக்களையோ அன்றேல் கொள்கை வெளிப்பாடுகளையோ மக்கள் மத்தியில் அவர்களால் எடுத்துச் செல்ல விடாது தடுக்கப்ட்டைமை இதற்கு ஒரு சிறு உதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா பொருண்மிய ரீதியில் பலமடைவதை விரும்பாத நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. சிறீலங்காவின் பொருண்மிய வளர்ச்சி சிங்கப்பூரின் வர்த்த நிலையை பாதிக்கலாம் என்பது நீண்ட காலமாகவே சொல்லப்பட்டு வரும் செய்தி. ஆனால் சிங்கப்பூர் எமது விடுதலைப் போராட்டத்திற்கு உதவ வழி இருந்தும் தவற விட்டிருந்ததையும் சுட்டிக்காட்ட வேண்டும்..! எதுஎப்படியோ தமிழர்கள் சிங்கப்பூர் போன்ற சிறீலங்காவின் பொருண்மிய வளர்ச்சியை விரும்பாத தேசங்களோடு தமிழர்கள் ஒரு பலமான உறவை இணைப்பை கொண்டிருப்பது நன்றே.

நாடு கடந்த அரசு பற்றி சிங்களம் அச்சும் நிலை இருக்கிறது. அந்த அரசை பலப்படுத்த வேண்டின் நாம் சிறீலங்காவிற்கு எதிரான ஆதரவான சக்திகள் எல்லாவற்றோடும் சிறீலங்காவுக்கு போட்டியாக உறவுகளை மேம்படுத்த வேண்டும். இன்றேல் சிங்களம் தான் நினைச்சதை சாதிக்கவே முனையும்..! தமிழர்களை முற்றாக அழித்தொழிக்கக் கூட பின் நிற்காது.

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.