Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடியத் தமிழர் தேசிய அவைத் தேர்தலுக்கு தயாராகும் கனடியத் தமிழ் மக்கள் - ஜூன் 20 தேர்தல்!

Featured Replies

கனடியத் தமிழர் தேசிய அவைத் தேர்தலுக்கு தயாராகும் கனடியத் தமிழ் மக்கள்

வரும் யூன் 20ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கனடிய தமிழர் தேசிய அவைக்கான தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ள நிலையில் தேர்தலில் வாக்களிப்பதற்கு கனடியத் தமிழ் மக்களும் தயாராகி வருகின்றனர். தேர்தல் நாளன்றான தேர்தல் செயற்பாடுகளை ஒஉழுங்கமைப்பதில் தேர்தல் ஆணையமான தமிழர் தேர்தலுக்கான கனடியக் கூட்டமைப்பு அலுவலகர்கள் தீவிரமாக இயங்கி வருகின்றனர்.

தேர்தல் வாக்குச்சாவடிகள், வாக்குச்சாவடி அலுவலர்கர்களுக்கான பயிற்சிகள், வாக்குச் சாவடி ஒழுங்கமைப்புகள், மக்களுக்கான அறுவுறுத்தல்களை வழங்குவதற்கான வழிமுறைகள் என பல செயற்பாடுகளில் அவர்கள் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருந்தது.

வட்டுக்கோட்டை மக்கள் வாக்குக்கணிப்பை சிறப்புற நடாத்தி தேர்ந்த அனுபவமுள்ள தேர்தல் ஆணையமாக மாறியுள்ள தமிழர் தேர்தலுக்கான கனடியக் கூட்டமைப்பு இம்முறை செலவீனத்தைக் குறைத்து மேலதிக வாக்குச்சாவடிகளுடன் இத்தேர்தலையும் சிறப்பாகவும் முன்மாதிரியாகவும் ஒருங்கமைத்து வருவதாக அதன் முதன்மை அலுவலகர் ஒருவர் தெரிவித்தார்.

அதேவேளை கனடியத் தமிழர் தேசிய அவை தேர்தலுக்கான செயற்குழு உறுப்பினர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ள வேட்பாளர்கள் குறித்து தமது மகிழ்ச்சியை வெளியிட்டனர். கனடிய தமிழர் தேசிய அவை யாப்பிற்கு அமைய குறைந்த பட்சம் 20 சதவீத பெண்கள் மற்றும் இளையோர் பிரிதிநிதித்துவம் அமைய வேண்டும் என அமைய தற்போது 30 சதவீதத்றிகு மேற்பட்ட பெண்கள், இளையோர் தெரிவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது குறித்து அவர்கள் பெரு மகிழ்ச்சி வெளியிட்டனர்.

பெண்கள், இளையோரை முதன்மையாகக் கொண்டு மாற்றம் பெற்ற தமிழர் போராட்டத்தின் தொடர்ச்சியாக கனடியத் தமிழர் தேசிய அவையும் அமைவது மனநிறைவு தருவதாக செயற்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அத்துடன் மூன்று மட்டங்களில் தேசிய, மாகாண, பிராந்திய மட்டங்களில் உறுப்பினர்கள் தெரிவாவது இச்சபை மக்கள் மயப்பட்ட சபையாகவும், மக்கள் தேவைகளை சரியாக கண்டறிந்து செயற்படும் சபையாகவும் இயங்குவதை உறுதிப்படுத்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 51 வேட்பாளர்கள் அனைத்து மட்டங்களிற்கும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளமை மேலும் மகிழ்ச்சி தருகின்றது என்றார்.

குறுகிய காலத்தில் தேசிய சபை குறித்த முழுமையான விபரங்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதில் உள்ள சவால்களை பலர் கோடிட்டுக்காட்டிய அதேவேளை, வரலாற்றுச் சவாலை எதிர்கொண்டு நிற்கும் தமிழினத்தின் ஒற்றுமையையும் செயற்பாட்டு வடிவங்களையும் முடக்கிவிட சிங்கள் பேரினவாத அரசு பெரு பணபலம் கொண்டு முனைந்து நின்றாலும், அதனையும் கடந்து ஒற்றுமையாகவும், ஓர்மத்துடனும் நகரும் வேட்கை கனடியத் தமிழ் மக்களிடன் உண்டு எனவும் யூன் 20ஆம் நாள் வரலாறாக கனடியத் தமிழர் தேசிய அவைத் தேர்தலில் பங்குபற்றி எழுந்தோம் என்பதை கனடியத் தமிழர்கள் மீண்டும் ஒருமுறை நிலைநிறுத்துவர் என கனடியத் தமிழ் சமூக ஆர்வலர்கள் பலரும் தெரிவித்தனர்.

http://www.pathivu.com/news/7162/57//d,article_full.aspx

வேட்பாளர் விபரம் அறிய: http://www.tamilelections.ca/eng/candidates.html

மாறி மாறி தேர்தல் தேர்தலா வையுங்க...

அதுக்கு முன்னம் இதுவரை தெரிவுசெய்யப்பட்டனீங்க என்னத்தை புடுங்கினீங்கள் இனி தெரிவுசெய்ய படபோறiவை என்னத்தை செய்து கிளிக்கப்போறிங்க என்றதையும் சொல்விவிட்டு தேர்தலை வையுங்க!

ஜனநாயக வழியில் போராடுவது என்றால் தேர்தல் வைப்பதுதான் என்று நினைத்துகொண்டிருக்கிறீர்களோ?

தேர்தலுக்கு வீணா பணத்தை கரியாக்கிறதுதான் மிச்சம். உங்கள் உழைப்பா? ஓசியில வந்ததுதானே?

Edited by Subiththiran

  • தொடங்கியவர்

சரி அவங்க தான் ஒண்ணும் செய்யவில்லை.. நீங்களாவது ஏதாவது செய்யலாமே?

ஈழத்தமிழருக்கு புலம்பெயர் தேசங்களில் ஒரு அரசியல் அடித்தளம் உருவாக்கப்படவில்லை என்று விமர்சிப்பவர்களே அதற்கான அடிப்படை செயர்ப்பாடுகளையும் விமர்சிக்கின்றார்கள். தனியே விமர்சனத்தால் மட்டும் ஒன்றும் சாதித்துவிட முடியாது. வெளியில் நின்று கேள்வி கேட்பதை விட சேர்ந்து நின்று கைகொடுப்பதே சிறந்தது என்பது எனது தாழ்மையான கருத்து!

கைகொடுங்கோ கைகொடுங்கோ என்கிறீர்கள் கைகொடுத்தபடியால்தான் உங்கள் முட்டாள்தனங்களை பார்த்து எனக்கென்னவோ என்று விட்டுப்போகாமுடியாமலிருக்கின்றது. என்னத்தை செய்திருக்கிறீர்கள் என்று கேட்டால் நீங்கள் ஏதாவது செய்யலாமே என்று பதில் கூறாமால் பதில் கேள்வி கேட்கிறீர்கள்.

நாடுகடந்தஅரசு, பேரவை, வட்டுகோட்டை இன்னும் எத்தனை தேர்தல்தல்கள் வைப்பதாக உத்தேசம். வட்டுகோட்டை என்று ஒரு தேர்தல் ஆனால் அங்கு வட்டுகோட்டையே வட்டுவகோட்டை ஆகப்போகிறது. ஆனால் நாங்கள் இன்னும் ஏதோ கனவுலகத்தில் அரசியல் நடத்துகிக்கொண்டிருக்கிறோம். நீங்கள் இங்கு கண்முழிக்கிறதுக்கிடையில். தழிழ் மக்களின் ஏழ்மையையும் இயலாமையும் பயன்படுத்தி வடக்குகிழக்கின் பெரும்பகுதியை சிங்களவன் வளைத்துப்போடுவான். அப்பவும் நாங்கள் அரசியல் அடித்தளம் உருவாக்குவதற்காக தேர்தல்கள் வைப்போம்.

(போங்கய்யா நீங்களும் உங்கள் தேர்தல்களும். முடிந்தால் தேர்தல்களில் கரியாக்கும்பணத்தை அங்கு சிலுவை சுமந்த வன்னிமக்களின் மறுவாழ்வுக்குப் பயன்படுத்துங்கோ)

Edited by Subiththiran

  • கருத்துக்கள உறவுகள்

சுபித்திரன்.. உங்கள் ஆதங்கம் விளங்குகிறது.

ஆனால் வட்டுக்கோட்டைத் தேர்தலை நடத்துவதற்கு ஒரு அடிப்படைக் காரணம் இருந்தது. அதாவது சில தசாப்தங்கள் கழிந்தநிலையிலும், போராட்டம் அழிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட நிலையிலும், தமிழர்கள் குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் / அவர்கள் சந்ததியினர் இன்னும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஒட்டிய தீர்வையே காத்திரமான தீர்வாக எண்ணுகிறார்கள் என்பதை ஜனநாயக ரீதியில் முன்வைத்தல்.

இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீளுறுதி செய்யும் தேர்தலை நடத்த முன்னர் கனேடிய யூதர் கவுன்சிலில் பேசியிருக்கிறார்கள். அவர்களோ இது விஷப்பரீட்சை அல்லவா என்று கேட்டார்களாம். ஏனென்றால் மக்கள் வராதுபோனால் தீர்மானத்துக்கோ, தொடர்ந்த போராட்டத்துக்கோ ஆதரவில்லை என்றும் கொள்ளலாம்தானே. ஆனால் மக்கள் மக்களின் ஆதரவு காத்திரமான ஒரு செய்தியை விட்டுச்சென்றுள்ளது. குறிப்பாக ஒரு பத்தாயிரம் வாக்குகள் குறைந்தபட்சமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில்.

இதேபோல நாடுகடந்த அரசுக்கான தேர்தலின் அவசியம் பற்ரியும் இங்கு சொல்லலாம். தேர்தலின் பின்னர் இப்போது அவர்கள் செயல்திட்டம் குறித்த விவாதங்களில் இருப்பதாக அறிந்தேன்.

இப்போது நடக்க இருக்கும் கனேடிய தமிழர்களுக்கான கவுன்சில் தேர்தல், கனேடிய மக்களை வழிநடத்தும் பொருட்டு ஜனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் ஒரு அமைப்பு. நாடுகடந்த அரசு பிரதிநிதிகள் அந்த அந்த நாட்டையே பிரதிநிதிப்படுத்துவர். ஆனால் அந்த நாட்டினுள் மக்கள் மட்டத்தில் முடிவுகளை எடுப்பதற்கு இவ்வகையான ஒரு அமைப்பு அவசியம்.

இதற்கு மேல் வேறு தேர்தல்கள் எதுவும் வராது. இந்தத் தேர்தலிலும் உங்கள் எல்லோரது ஆதரவும் தேவை.

நன்றி.

கைகொடுங்கோ கைகொடுங்கோ என்கிறீர்கள் கைகொடுத்தபடியால்தான் உங்கள் முட்டாள்தனங்களை பார்த்து எனக்கென்னவோ என்று விட்டுப்போகாமுடியாமலிருக்கின்றது. என்னத்தை செய்திருக்கிறீர்கள் என்று கேட்டால் நீங்கள் ஏதாவது செய்யலாமே என்று பதில் கூறாமால் பதில் கேள்வி கேட்கிறீர்கள்.

நாடுகடந்தஅரசு, பேரவை, வட்டுகோட்டை இன்னும் எத்தனை தேர்தல்தல்கள் வைப்பதாக உத்தேசம். வட்டுகோட்டை என்று ஒரு தேர்தல் ஆனால் அங்கு வட்டுகோட்டையே வட்டுவகோட்டை ஆகப்போகிறது. ஆனால் நாங்கள் இன்னும் ஏதோ கனவுலகத்தில் அரசியல் நடத்துகிக்கொண்டிருக்கிறோம். நீங்கள் இங்கு கண்முழிக்கிறதுக்கிடையில். தழிழ் மக்களின் ஏழ்மையையும் இயலாமையும் பயன்படுத்தி வடக்குகிழக்கின் பெரும்பகுதியை சிங்களவன் வளைத்துப்போடுவான். அப்பவும் நாங்கள் அரசியல் அடித்தளம் உருவாக்குவதற்காக தேர்தல்கள் வைப்போம்.

(போங்கய்யா நீங்களும் உங்கள் தேர்தல்களும். முடிந்தால் தேர்தல்களில் கரியாக்கும்பணத்தை அங்கு சிலுவை சுமந்த வன்னிமக்களின் மறுவாழ்வுக்குப் பயன்படுத்துங்கோ)

தேர்தலிகள் வைக்காமல் அங்கிகரிக்க பட்ட அமைப்புகளாக ஏதும் செய்யாமல் எங்களுக்குள் இருந்து சிலரை புலிகளால் அங்கீகரிக்க பட்டவர்களாக காட்டி தான் வேலைகள் அவர்கள் தலைமையில் நடந்தன... அவைகளை மேற்குநாடுகள் அங்கீகரிக்காமல் போனதுக்கு புலிகளுக்கும் அவர்களுக்கும் தொடர்புகள் இருந்தமை எண்டதுதான் முக்கிய காரணமாகவும் இருந்தது..

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் சிறிதாக செய்யப்பட்டாலும் அது பெரிய தாக்கத்தை கொடுக்கும்... அதுக்கு மக்களின் அங்கீகாரம் அவசியமானது...

எல்லாரும் செய்யட்டும் எல்லா வகையிலும் செய்யட்டும்...

இந்தா புலி அடிக்குது என்ற மாதிரித்தான் கனடாவில் தேர்த்தல் சூடு கட்டுது என்ற செய்தி.

ரகுமான் கொன்சேட், ராவணா இது இரண்டும் தான் இங்கு தமிழர் எதிர்பார்த்துக்கொண்டிருப்பவை.தேர்தல் ஒன்று நடக்கப் போகின்றதென்று 90% சனத்திற்கு தெரியாது.

சனத்துக்கு தெரியாது தெரியாது என்று சொன்னால் கடைசியில் தெரியாமலே போய்விடும். யாழ் களத்தில் இவ்வளவு பொறுப்பான உறுப்பினர்கள் இருந்தும் தேர்தல் அறிவிக்கப்பட்டு பல நாட்களாகியும் அதைப்பற்றி ஊர்ப்புதினத்தில் ஒன்றும் வரவில்லையே? இப்படி இருக்கும்போது சாதாரன மக்களை சென்றடைவது கடினமாகத்தான் இருக்கும். பொறுப்புள்ள உங்களைப்போன்றவர்கள் தான் செய்யவேண்டும்.

இசைக்கலைஞன் மற்றும் தயா தங்களின் பொறுமையான பதிலுக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.