Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2011 உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சிங்களவனையும் இந்தியாகாரனையும் கால் இறுதியில் பார்க்கிற பொன்னான காட்சி போட்டுது..ஆஸ்திரேலியாகாரன் இந்தியனை துரத்துவான் என்று நம்புவோம்..அதே மாதிரி இங்கிலாந்து ஸ்ரீ லங்காவை துரத்தும் என்று நம்புவோம் :blink:

  • Replies 2.2k
  • Views 83.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போலாத் போன கையோடையே அவேன்ட கதை முடிஞ்சுது :rolleyes: :rolleyes: :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேற்கிந்தியாத்தீ தோல்விக்கு காரனம்

மேற்கிந்தியாத்தீ கடைசி நேரத்தில் பரிதாவமாய் தோல்வி அடையிது..வெற்றிக்கு கிட்டப் போய் பிறக்கு தோல்வியை சந்திக்கிது.. :(

இப்படி பாக்கிஸ்தான் கூட விளையாடனும் , இவைக்கு தோல்வி தான்.. :rolleyes::unsure:

பிண்னனி மட்டையடி வீரர்கள் அணியை வெற்றி அடைய செய்ய தவரிட்டினம்.. <_<

கூட இந்த தோல்விக்கு முக்கிய காரனம் மேற்கிந்தியாத்தீ விக்கேட் கீப்பர் தான்.. :rolleyes:

இவர் இந்த உலக்க கோப்பையில் 20 ஒட்டத்தை கூட தான்ட வில்லை அவர் விளையாடின 6விளையாட்டில் :( இதுவும் அவேன்ட தோல்விக்கு ஒரு காரனம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரவிரக்கும் கால் இறுதி ஆட்டங்கள்

பாகிஸ்தான் (எ) மே .இ .தீவுகள் மார்ச் 23 2011 புதன் கிழமை 2.30 மணி

இந்தியா (எ) அவுஸ்த்திரேலியா மார்ச் 24 2011 வியாழக்கிழமை 2.30 மணி

தென்ஆபிரிக்கா (எ) நியூசிலண்ட் மார்ச் 25 2011 வெள்ளிக்கிழமை 2.30 மணி

இலங்கை (எ) இங்கிலாந்து மர்hச் 26 2011 சனிக்கிழமை 2.30 மணி

இந்த 4ரீமும் சினி பினலுக்கு போக்கும் பாருங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் அவுஸ்திரேலியா தென்ஆபிரிக்கா srilanka

Edited by புலவர்

யாழ்களப் போட்டியில் நெடுக்காலபோவான் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=81341&st=120&gopid=647244&

35வது கேள்வியில் அவுஸ்திரெலியா கனடாவைத் தோற்கடிக்கும் எனவும், காலிறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான், தென்னாபிரிக்கா தெரிவாகும் என எல்லாப் போட்டியாளர்களும் சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள்.

இதுவரை முதல் 28 கேள்விகளுக்கும், 30ம், 31ம்,32ம்,33ம்,34ம், 35ம் கேள்விகளுக்கும், காலிறுதியில் இலங்கை, நியுசிலாந்து, அவுஸ்திரெலியா ,பாகிஸ்தான், தென்னாபிரிக்கா தெரிவானதுக்கும்(43 வது கேள்வி) மட்டும் புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

இதுவரை வழங்கிய மொத்த புள்ளிகள் 44.

37வது கேள்வியில் அயர்லாந்து நெதர்லாந்தினைத் தோற்கடிக்கும் என 20 போட்டியாளர்கள் சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள்.

வாசகன் 7ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

தொடர்ந்து முதல் இடத்தில் நெடுக்காலபோவான் இருக்கிறார்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=81341&st=120&gopid=647250&

41வது கேள்வியில் சிம்பாவே கனடாவைத் தோற்கடிக்கும் என 20 போட்டியாளர்கள் சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள்.

ஜீவா 12ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

தொடர்ந்து முதல் இடத்தில் நெடுக்காலபோவான் இருக்கிறார்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=81341&view=findpost&p=647265

9 போட்டியாளர்கள் சரியாக தென்னாபிரிக்கா இந்தியவைத் தோற்கடிக்கும் எனப் பதில் அளித்திருக்கிறார்கள். 2ம் இடத்தை சுஜியும், 3ம் இடத்தை யமுனாவும் ,4ம் இடத்தை வாசகனும் கைப்பற்றியுள்ளார்கள். நெடுக்காலபோவான் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=81341&view=findpost&p=647272

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் அவுஸ்திரேலியா தென்ஆபிரிக்கா srilanka

புலவர் அண்ணை பொறுத்து இருந்து பாருங்கோ..

இந்தியன் அவுஸ்ரெலியனிக்கு அடிச்சு சிமி பினலுக்கு போவான்..இதை ஏன் நான் சொல்லுறன் என்ரா..அவுஸ்ரெலியா ரீம்மில் நல்ல பந்து விச்சாலர் இல்லை...

மட்டையடியிலும் பெரிதா ஒட்டம் எடுக்கினம் இல்லை...

9 போட்டியாளர்கள் பாகிஸ்தான் அவுஸ்திரெலியாவைத் தோற்கடிக்கும் எனப் பதில் அளித்திருக்கிறார்கள். 7ம் இடத்தில் இருந்த பையன்26 4ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். நெடுக்கால போவான் முதல் இடத்தில் இருக்கிறார். மேலதிக விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=81341&view=findpost&p=647416

எல்லாப் போட்டியாளர்களும் தென்னாபிரிக்கா, வங்கள தேசத்தை தோற்கடிக்கும் எனவும்,. காலிறுதிக்கு தெரிவாகும் நாடுகளில் இங்கிலாந்தும், இந்தியாவும் இருக்கும் என சரியாகக் கணித்து பதில் அளித்திருக்கிறார்கள். முதல் இடத்தில் நெடுக்கால போவான் இருக்கிறார். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=81341&view=findpost&p=647446

வரவிரக்கும் கால் இறுதி ஆட்டங்கள்

பாகிஸ்தான் (எ) மே .இ .தீவுகள் மார்ச் 23 2011 புதன் கிழமை 2.30 மணி

இந்தியா (எ) அவுஸ்த்திரேலியா மார்ச் 24 2011 வியாழக்கிழமை 2.30 மணி

தென்ஆபிரிக்கா (எ) நியூசிலண்ட் மார்ச் 25 2011 வெள்ளிக்கிழமை 2.30 மணி

இலங்கை (எ) இங்கிலாந்து மர்hச் 26 2011 சனிக்கிழமை 2.30 மணி

இலங்கை

மே .இ .தீவுகள்

india

தென்ஆபிரிக்கா

நான் பிறந்தது தமிழ் நாட்டில் , ஆனபடியா என்ர ஆதரவு இந்தியாவுக்கு

Edited by anuja

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் பிறந்தது தமிழ் நாட்டில் , ஆனபடியா என்ர ஆதரவு இந்தியாவுக்கு

:rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

என் ஆதரவு இந்தியாவுக்கு தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் ஆதரவு இந்தியாவுக்கு தான்.

நீங்களும் அங்கையோ பிறந்த நீங்கள்.. :rolleyes::):D

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் அங்கையோ பிறந்த நீங்கள்.. :rolleyes::):D

அங்கு பிறந்தால்தான் ஆதரவு தரனுமா! :)

பிறந்த இடம் அங்கு இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அங்கு பிறந்தால்தான் ஆதரவு தரனுமா! :)

பிறந்த இடம் அங்கு இல்லை.

ஒக்கே , இந்தியாவுக்கு தான் வெற்றி என்று அங்கத்தை சாத்திரி மார் சொல்லினம்மாம்..!

எனக்கும் அப்படித் தான் படுது

அவுஸ்ரெலியாக்கு அடிச்சு , அடுத்து பாக்கிஸ்தானுக்கும் அடிச்சு பினலுக்கு போவாங்கள் போல :rolleyes: :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிர்புர்: உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடக்கும் முதல் காலிறுதியில், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில், பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதியின் "சுழலில்' வெஸ்ட் இண்டீஸ் அணி தப்புமா அல்லது கெய்ல் "புயலில்' பாகிஸ்தான் அணி சிக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் "நாக் அவுட்' சுற்று போட்டிகள் இன்று முதல் துவங்குகின்றன. இன்று நடக்கும் முதல் காலிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீசை சந்திக்கிறது.

இத்தொடர் துவங்கும் முன் சூதாட்ட சர்ச்சையில் பாகிஸ்தான் சிக்கியது. இதனால் மனரீதியாக பாதிக்கப்பட்டு இருந்த இந்த அணிக்கு, கேப்டன் அப்ரிதியின் திறமையான வழி காட்டுதல், பெரும் முன்னேற்றத்தை கொடுத்துள்ளது. கடந்த 34 உலக கோப்பை போட்டிகளில் தோல்வியடையாமல் இருந்த "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை, கடைசி லீக் போட்டியில் வீழ்த்திக் காட்டியது. பேட்டிங்கில் துவக்க வீரர் முகமது ஹபீஸ் தொடர்ந்து சொதப்புகிறார். மற்றபடி, உமர் அக்மல் இதுவரை 211 ரன்கள் (5 போட்டி) குவித்துள்ளார். அடுத்து மிஸ்பா (192), யூனிஸ் கான் (172), கம்ரான் அக்மல் (141) ஆகியோர்கள் ஆறுதல் தருகின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அப்ரிதி, 6 போட்டியில் 65 ரன்கள் மட்டும் எடுத்து ஏமாற்றினார். இதேபோல அப்துல் ரசாக்கும் (101) கைவிட்டார். இன்று வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக எழுச்சி பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.

அப்ரிதி பலம்:

பேட்டிங்கில் ஏமாற்றிய அதேநேரத்தில், சுழற்பந்து வீச்சில் அப்ரிதி அசத்துகிறார். இதுவரை 17 விக்கெட் வீழ்த்தியுள்ள இவர், எதிரணிக்கு தொல்லை தருவது உறுதி. வேகப்பந்து வீச்சில் உமர் குல் மிரட்டுகிறார். இதுவரை 13 விக்கெட் கைப்பற்றியுள்ள இவருடன், முகமது ஹபீஸ், அப்துல் ரசாக்கும் இணைந்து ஜொலிக்கலாம்.

போலார்டு நம்பிக்கை:

வெஸ்ட் இண்டீஸ் அணி இத்தொடரில் காலிறுதிக்கு தட்டுத் தடுமாறித்தான் வந்துள்ளது.பேட்டிங்கில் டேவான் ஸ்மித் (293) கைகொடுத்து வருகிறார். பின் வரிசையில் போலார்டு(179), வாணவேடிக்கை காட்டினால், பாகிஸ்தான் பாடு திண்டாட்டம் தான். அனுபவ கெய்ல் (162), டேரன் பிராவோ (139) போன்றவர்கள் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இவர்களுடன் சீனியர்கள் சர்வான் (131), சந்தர்பால் (70) அணியின் ஸ்கோரை உயர்த்த உதவ வேண்டும். தவிர, கேப்டன் சமி, ரசலும் ஆறுதல் தரலாம்.

ரோச் ஆறுதல்:

மிகவும் பலவீனமாக கருதப்பட்ட அணியின் பந்து வீச்சு, கீமர் ரோச்சின் (13 விக்.,) "ஹாட்ரிக்' சாதனையால் எழுச்சி பெற்றது. டேரன் சமி, ஆன்ட்ரூ ரசல் சிறப்பாக செயல்பட முயற்சிக்கலாம். இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்திய ராம்பாலுக்கு இன்றும் வாய்ப்பு தொடரும் எனத் தெரிகிறது. சுழற்பந்து வீச்சில் சுலைமான் பென் (12 விக்.,) மீண்டும் எழுச்சி காண வேண்டும்.

யாருக்கு வாய்ப்பு?

வெஸ்ட் இண்டீஸ் அணியை விட, பாகிஸ்தான் வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாடுவது நல்ல பலனை கொடுக்கிறது. தவிர, பெரிய அணிகளை சாய்த்து இருக்கும் அனுபவம் இருப்பதால், இன்று எளிதாக வெல்ல முயற்சிப்பார்கள். இதனால் இவர்களை வீழ்த்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மிக கடுமையான போராட்டத்தை சந்திக்க வேண்டியது இருக்கும்.

கடந்த வந்த பாதை...

பாகிஸ்தான்

லீக் சுற்று

1. கென்யாவுக்கு எதிராக 205 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

2. 11 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் வெற்றி.

3. கனடாவை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

4. நியூசிலாந்திடம் 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.

5. 7 விக்கெட் வித்தியாத்தில் ஜிம்பாப்வேயை வென்றது.

6. ஆஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

வெஸ்ட் இண்டீஸ்

1. தென் ஆப்ரிக்காவுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.

2. நெதர்லாந்தை 215 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

3. வங்கதேசத்துக்கு எதிராக 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

4. 44 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வென்றது.

5. இங்கிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.

6. 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது.

ஒன்பதாவது முறை

உலக கோப்பை அரங்கில், வெஸ்ட் இண்டீஸ்-பாகிஸ்தான் அணிகள் ஒன்பதாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக மோதிய எட்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் 6, பாகிஸ்தான் 2 வெற்றி கண்டன. கடைசியாக கடந்த 2007ல் கரீபிய மண்ணில் நடந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தானை வீழ்த்தியது.

* கடந்த 1979ல் நடந்த அரையிறுதியில், 6 விக்கெட்டுக்கு 293 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் அணி, உலக கோப்பை அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. கடந்த 1975ல், 7 விக்கெட்டுக்கு 266 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக உலக கோப்பை அரங்கில் அதிக ரன்களை பெற்றது.

* கடந்த 1983ல் நடந்த அரையிறுதியில், 8 விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் அணி, உலக கோப்பை அரங்கில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பெற்றது. கடந்த 1999ல், 202 ரன்களுக்கு சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பை அரங்கில் குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது.

* பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பை அரங்கில், அதிக ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வரிசையில் ரிச்சர்ட்ஸ் (253 ரன்கள்) முன்னிலையில் உள்ளார். பாகிஸ்தான் சார்பில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்துள்ள வீரர்கள் பட்டியலில் ரமீஸ் ராஜா (214 ரன்கள்) முன்னிலையில் உள்ளார்.

* வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக உலக கோப்பை அரங்கில், அதிக விக்கெட் வீழ்த்திய பாகிஸ்தான் பவுலர்கள் வரிசையில் இம்ரான் கான் (8 விக்கெட்) முன்னிலையில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில், பாகிஸ்தானுக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் வரிசையில் வால்ஷ் (9 விக்கெட்) முதலிடத்தில் உள்ளார்.

* சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், வெஸ்ட் இண்டீஸ்-பாகிஸ்தான் அணிகள் 114 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் வெஸ்ட் இண்டீஸ் 64, பாகிஸ்தான் 48 வெற்றி கண்டன. இரண்டு போட்டிகள் "டை' ஆனது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அணியை வீழ்த்த வாய்ப்பு: மைக்கேல் ஹசி நம்பிக்கை

ஆமதாபாத்: ""உலக கோப்பை காலிறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்த வாய்ப்பு இருப்பதாக,'' ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹசி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், நாளை ஆமதாபாத்தில் நடக்கவுள்ள 2வது காலிறுதியில் தோனி தலைமையிலான இந்திய அணி, "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் சீனியர் பேட்ஸ்மேன் மைக்கேல் ஹசி கூறியதாவது: இந்தியாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இப்போட்டி இரு அணியினருக்கும் முக்கியமான ஒன்று. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பதால், சவால் நிறைந்ததாக இருக்கும்.

இப்போட்டியில் எங்கள் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் இந்தியாவில் நடந்த நிறைய போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. ஆமதாபாத் ஆடுகளம் குறித்து எங்கள் அணி வீரர்கள் நன்கு அறிந்திருப்பதால், இதற்கேற்ப போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என நம்புகிறேன். இந்தியாவை வீழ்த்தும் பட்சத்தில், ஆஸ்திரேலிய அணி நிச்சயம் கோப்பை வென்று சாதிக்கும்.

இப்போட்டியில் துவக்கம் முதல், இந்திய வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். அப்போதுதான் சுலப வெற்றி பெற முடியும். முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில், வலுவான இலக்கை பதிவு செய்து, இந்திய வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிப்போம். இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் நல்ல "பார்மில்' உள்ளார். எனவே இவரது பந்துவீச்சை கவனமுடன் கையாள வேண்டும்.

எங்கள் அணி கேப்டன் பாண்டிங், லீக் சுற்றில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இருப்பினும் இவர் மீது நம்பிக்கை உள்ளது. இவர் சரியான நேரத்தில் எழுச்சி கண்டு, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்குவகிப்பார். இந்தியாவுக்கு எதிரான காலிறுதி, அவருடைய போட்டியாக அமையும் என எதிர்பார்க்கிறேன்.

அணியின் வேகப்பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. எளிதில் விக்கெட் வீழ்த்தும் திறமை உள்ளதால், இந்திய "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்களை விரைவில் வெளியேற்ற முயற்சிக்க வேண்டும். எங்கள் அணியின் "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன் சாதிக்கும் பட்சத்தில் வலுவான இலக்கை நிர்ணயிக்கலாம். விளையாடும் லெவன் அணியில் பெரிய அளவில் மாற்ற இருக்க வாய்ப்பு இல்லை.

இவ்வாறு மைக்கேல் ஹசி கூறினார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

West Indies (possible) 1 Chris Gayle, 2 Devon Smith, 3 Darren Bravo, 4 Shivnarine Chanderpaul, 5 Kieron Pollard, 6 Darren Sammy (capt.), 7 Devon Thomas (wk), 8 Andre Russell, 9 Sulieman Benn, 10 Kemar Roach, 11 Devendra Bishoo.

Pakistan (possible) 1 Kamran Akmal (wk), 2 Mohammad Hafeez, 3 Asad Shafiq, 4 Younis Khan, 5 Misbah-ul-Haq, 6 Umar Akmal, 7 Shahid Afridi (capt), 8 Abdul Razzaq, 9 Saeed Ajmal, 10 Umar Gul, 11 Wahab Riaz.

நான் பிறந்தது தமிழ் நாட்டில் , ஆனபடியா என்ர ஆதரவு இந்தியாவுக்கு

தமிழ்நாட்டில பிறந்து விட்டு தமிழர் விரோத தேசமான இந்தியாவிற்கு ஆதரவு அளிப்பது வேதனையானது.

தென்னாபிரிக்கா , மேற்கு இந்திய தீவுகள் , அவுஸ்திரேலியா , இங்கிலாந்து ஆகியன காலிறுதியில் வெற்றி பெற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பையா உங்கள் ஆக்க பூர்வமான விமசனத்துக்கு நன்றி :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2_56_20_20.jpg

1_94_94.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.