Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிரும் தண்ட கரண்யா வனம்..

Featured Replies

தண்ட கரண்யா வனத்தில் இந்திய படையினரின் நடவடிக்கைகள்..இது எனது நண்பர் ஒருவரால் முக நூலில் share பண்ண பட்டு இருந்தது

post-7784-041518600 1280394939_thumb.jpg

post-7784-017007200 1280394962_thumb.jpgpost-7784-011215500 1280394985_thumb.jpgpost-7784-096375500 1280395001_thumb.jpgpost-7784-054417600 1280395025_thumb.jpg

.

படம் 2 - மூங்கிலில் செம்மஞ்சல் உடையில் தொங்கிக் கொண்டு செல்வது பாரத மாதா.

படம் 3 - தலை சிதறிக் கிடப்பது இந்திய யூனியன்.

படம் 4 - தரையில் வெள்ளைப் போர்வையில் இந்திய தேசிய ஒருமைப் பாடு.

க‌டைசிப் ப‌ட‌ம் நேரு க‌ன‌வுக‌ண்ட‌ 21ம் நூற்றாண்டு இந்தியா

மொத்த‌த்தில் இந்திய‌ ஒருமைப்பாடு என்ற‌ மாயைக்கு ம‌னித‌குல‌ம் கொடுக்கும் விலை.

Battle of Dandakaranya

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருதியுறையும் தண்டகாரண்யா: பொன்னிலா.

(இகட்டுரை எழுதி முடிக்கப்பட்ட பின் மேற்குவங்கத்தின் மிட்னாபூரில் இருந்தும் ஜார்கண்டில் கிகுந்தி மாவட்ட காடுகளில் இருந்தும் வருகிற செய்திகள் இந்தியா தன் சொந்த்க் குடிகள் மீதான் போரை துவங்கி விட்டதை முன்னறிவிக்கின்றன. வன்னி மக்கள் மீது வீசக் கொடுத்த பேரழிவு ஆயுதங்களை இப்போது தன் சொந்தக் குடிகள் மீதே பயன்படுத்தத் துவங்கியிருகிறது இந்தியா. இனி வரும் மாதங்களில் பெரும் ரத்தக்களரியை நடத்தி முடிப்பதில் தீர்மானமாக இருக்கிறார்கள் அவர்கள்)

சிதம்பரம் வாயில் தவழும் சைவத் தமிழைக் கேட்கக் கேட்க இனிக்கும். பிசகில்லாத மொழி நடையில் தூய தமிழாய் வந்து விழுகிற வார்த்தைகளும் அவர் தும்பைப் பூ நிறத்தில் உடுத்தியிருக்கும் கதர்ச் சட்டையின் வெண்மை போனறதுதான்.ஆனால் ஈழப் படுகொலைகளில் அவர் பேசிய வார்த்தைகளின் எச்சில் ஈரம் காய்வதற்குள் நடத்தி முடித்த கொலை பாதகம் நினைவிலிருந்து அகல்வதற்குள், காஷ்மீரிலும் மத்திய இந்தியாவிலும் ரத்த தாண்டவத்தைத் துவங்கும் வேட்டையை துவங்கி விட்டார்கள். ஒரு பக்கம் போரையும் இன்னொரு பக்கம் வெள்ளை முகத்தையும் காட்டும் இந்த மனிதர். இப்போது பழங்குடி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தப் போவதாகப் பேசுகிறார். அச்சமாக இருக்கிறது.அவர்கள் எப்போதெல்லாம் முன்னேற்ற, என்ற சொல்லை பிரயோகிக்கிறார்களோ அப்போதெல்லாம் பெருந்தொகையான மக்கள் கொல்லப்படும் அனுபவத்தை நாம் காண்கிற நிலையில் மத்திய இந்தியாவின் லால்கர் முதல் சர்ஜாகர் வரை பழங்குடிகளை அமைதியான முறையில் கொன்றொழித்து விடுவார்களோ என்று நாம் அஞ்ச வேண்டியிருக்கிறது.மாவோயிஸ்டுகளின் சமாதான முன்னெடுப்புகளை இவர்கள் நடத்திய இரண்டு கொலைகள் சீர்குலைத்திருக்கிறது. இந்த மனிதரின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டினார் சுவாமியும் சமூக சேவகருமான அக்னிவேஷ். இந்திய புரட்சிகர இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான சிக்குரி ராஜ்குமாரையும் பத்திரிகையாளர் ஹேமச் சந்திர பாண்டேயையும் போலி என்கவுண்டரில் கொன்றதன் மூலம் தண்டகாரண்யா போரில் உறுதியாக இருக்கிறோம் என்பதை இந்தியா மீண்டும் ஒரு முறை நீருபித்திருக்கிறது.

சுவாமி அக்னிவேஷின் வாக்குமூலம்.

…………………………………………………………………………

சுவாமி அக்னிவேஷ் உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் கேட்டுக் கொண்டதன் பேரில் மாவோயிஸ்டுகளுக்கும் மத்திய அரசுக்குமிடையில் நல்லெண்ணத் தூதராகச் செயல்பட்டவர். சிக்குரி ராஜ்குமாரும், ஹேமச்சந்திர பாண்டேயும் கொல்லப்பட்ட பின்னர், அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பான அவரின் நம்பிக்கைகள் பெருமளவு குலைந்து விட்டது. அவர் சிதம்பரத்தின் வார்த்தைகளால் ஏமாற்றப்பட்டிருக்கிறார். சுவாமியின் நீண்ட நேர்காணலை zee news.com வெளியிட்டுள்ளது. தோழர்கள் கொல்லப்பட்டது, அமைதி முயர்ச்சி தொடர்பாக அவரது நேர்காணலின் சுருக்கம்.:

http://inioru.com/?p=15525

  • கருத்துக்கள உறவுகள்

.

காந்தீயம் பேசிக் கொண்டு, படு கொலைகளை செய்து கொண்டிருக்கும் இப்படியான நாடு, உலக வரை படத்திலிருப்பது கேவலம்.

.

அந்தப் பகுதி மக்கள் இந்திய பயங்கரவாதிகள் கொலைக்கரங்களில் இருந்து விரைவில் விடுபடவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் தான் பரீட்சித்துப் பார்த்த கொலைக்கலத்தை தனது நாட்டில் இந்தியப் பயங்கரவாதம் இன்று அரங்கேற்றியிருக்கிறது.

இந்தியர்களே, இனியாவது விழித்துக்கொள்ளுங்கள். உங்கள் ஆட்சியாளர்களைக் களையெடுங்கள். போலி இந்தியத் தேசியவாதத்தை தூர எறிந்துவிட்டு உங்கள் உயிர்களையும் உரிமைகளையும் காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.