Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்திரன் இசை வெளியீட்டு விழா. ரஜினியை பாராட்ட மறந்த ஐஸ்வர்யாராய்.

Featured Replies

எந்திரன் இசை வெளியீட்டு விழா மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.

கலாநிதி மாறன்:

“ஒரு தமிழ் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்துவது இதுதான் முதல் முறை. அதுவே எனக்கு பெருமையாக இருக்கிறது. வைரமுத்து இனிமையான பாடல்களை எழுதியிருக்கிறார். விஞ்ஞானம் தொடர்பான பாடலையும் எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அழகாக எழுதியிருக்கிறார். அவர் மகன் கார்க்கியும் பாடல் எழுதியிருக்கிறார்.

இசை பிரமாதமாக வந்திருக்கிறது. தமிழின் பக்கம் உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது. முதல் முறையாக அவரது மகள் கதீஜாவும் இதில் பாடியிருக்கிறார்.

ஷங்கர் ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமாக செய்பவர். சில டைரக்டர்கள் மாஸ் படம் இயக்குவார்கள். சில டைரக்டர்கள் கிளாஸ் படம் இயக்குவார்கள். ஷங்கர் இந்த இரண்டும் செய்பவர். கோலாலம்பூரில் டுவின் டவர் எப்படி தனித்துவத்துடன் நிற்கிறதோ அப்படி இந்திய சினிமாவில் ரஜினி நிற்கிறார். அந்த உயரத்தை எவராலும் எட்ட முடியாது. அவர் ஒரு சகாப்தம் (லெஜண்ட்).

‘ஸ்டாருக்கும் சூப்பர் ஸ்டாருக்கும் உள்ள வித்தியாசம்!’

இந்த படத்துக்காக இரண்டு வருடம் உழைத்திருக்கிறார். படம் ஆரம்பிக்கும்போது ரஜினி என்னிடம் பேசினார். “எந்திரன் கண்டிப்பாக ஹிட் ஆகும். நாம சேர்ந்து பண்ணுவோம். என் சம்பளத்தைக்கூட இப்போது தரவேண்டாம் படம் முடிந்த பிறகு வாங்கிக் கொள்கிறேன்” என்றார். அவர் சொன்ன வார்த்தையை இன்றுவரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். சம்பளமே கேட்கவில்லை. இதுதான் ஸ்டாருக்கும், சூப்பர் ஸ்டாருக்கும் உள்ள வித்தியாசம்.

சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிதான். அந்த இடத்துக்கு யாரும் வரப்போவதில்லை. பிறக்கப் போவதும் இல்லை. ‘எந்திரன்’ டீம் கடுமையாக உழைத்திருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழாவுக்கு தமிழனத் தலைவரும் தமிழக முதல்வருமான கலைஞர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி…”, என்றார் கலாநிதி மாறன்.

இயக்குநர் ஷங்கர்:

ரஜினி எந்திரனுக்காக உழைத்தது கொஞ்ச நஞ்சமல்ல. அவரது உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட் என்றார் இயக்குநர் ஷங்கர்.

மலேசியாவில் நடந்த எந்திரன் பாடல் வெளியீட்டு விழாவில் மேலும் அவர் பேசுகையில், “நான் இயக்கிய ‘ஜீன்ஸ்’ படம் இந்த நாட்டில் 100 நாள் ஓடியது. நான், ஐஸ்வர்யா ராய், ரஹ்மான் இணைந்திருந்த படம் அது.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியும், சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்திருக்கிறார்கள். அதனால் எந்திரன் இங்கே 200 நாள் ஓடும் என்று எதிர்பார்க்கிறேன்.

எந்திரன் என் கனவுப் படம். இரண்டு பேர் இல்லையென்றால் என் கனவு நனவாகி இருக்காது. ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினி, மற்றொருவர் கலாநிதி மாறன். அவர் இல்லையென்றால் இந்தப் படம் முடிந்திருக்காது. எங்கள் மீது நம்பிக்கை வைத்து எனது கனவுப் படத்தை கொண்டு வந்த கலாநிதி மாறனுக்கு காலமெல்லாம் கடமைப்பட்டிருப்பேன்.

இந்த படத்தில் ரஹ்மானின் இசையை கேட்கும்போது அவருக்கு ஏன் ஆஸ்கார் விருது கொடுத்தார்கள் என்பது புரியும். அவரது உழைப்புதான் அந்த உயரங்களை கொடுக்கிறது.

இந்தப் படத்தில் முதல்முறையாக கிளிமஞ்சாரோ… என்ற பழங்குடியின பாட்டு இடம்பெற்றிருக்கிறது. எந்திரத்துக்கு காதல் வந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு டியூன் போட்டுக் கொடுங்கள் என்று ரகுமானிடம் கேட்டேன். மூன்று டியூன் போட்டுக் கொடுத்தார். எதிலும் எனக்கு திருப்தியில்லை. அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு புதிதாக ஒரு டியூன் போட்டுக் கொடுத்தார். பிரமாதமாக வந்திருக்கிறது.

வைரமுத்துவின் வரிகளும் படத்தில் பிரமாதமாக அமைந்திருக்கிறது.

எனது முந்தைய படங்களைவிட எந்திரனில் ஒளிப்பதிவு பளிச்சென்று இருக்கும். அதற்கு காரணம் ரத்னவேலுவின் திறமை.

சிவாஜி படத்தில் ரஜினியை அழகாக காட்டினேன். எந்திரனில் அவரை இன்னும் அழகாக காட்டியிருக்கிறேன். ரத்ன வேலுவின் லைட்டிங்தான் காரணம்.

ஐஸ்வர்யா ராயை லேடி ரஜினி என்று குறிப்பிடலாம். அவரை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிடித்திருக்கிறது. ஹீரோவுக்கு நிகரான அவரது உழைப்பு அபாரமானது.

இந்த படத்தை எடுக்க பல முறை முயற்சி செய்தேன். ஆனால் பட்ஜெட் இவ்வளவு அதிகமா என்று யாரும் இதை தயாரிக்க முன்வரவில்லை. அதனால் இந்தியில் எடுக்கலாம் என்று முயற்சித்தேன். சில சூழ்நிலைகளால் அங்கும் முடியவில்லை. தமிழிலேயே எடுத்தால் என்ன என்று தீவிரமாக யோசித்தபோது ரஜினி கைகொடுத்தார்.

படத்தில் ரஜினியின் உழைப்பு அபாரமானது. மேக்-அப் போடுவதற்கு மட்டும் 6 மணிநேரம் பொறுமையாக காத்திருந்தார். சிரமம் பார்க்காமல் உழைத்தார். அவரது உழைப்புக்கு ஒரு சல்யூட்.

டெக்னீஷியன்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி. இந்த படத்திற்காக இரண்டு வருடமாக நாங்கள் கேட்டதையெல்லாம் செய்து கொடுத்து உதவிய சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் நன்றி”, என்றார்.

கருணாநிதி வாழ்த்து

எங்கெங்கு காணினும் வெற்றியடா! ஏழுகடல் தாண்டியும் எந்திரன் முழங்குமடா!” என எந்திரன் படத்துக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘எந்திரன்’ பாடல் வெளியீட்டு விழாவுக்கு முதல்வர் கருணாநிதி பிரத்யேகமாக வாழ்த்து தெரிவித்தார். நவீன தொழில்நுட்பமான எச்.டி கேமராவில் பதிவு செய்யப்பட்ட அவரது வாழ்த்து கோலாலம்பூர் விழாவில் திரையிடப்பட்டது. அதில் முதல்வர் கூறியதாவது:

தமிழ்நாட்டு மக்களுக்காக, பொதுவாக உலகத் தமிழர்களுக்காக, எந்திரம் போல் உழைத்துக் கொண்டிருக்கின்ற எனக்கு, ‘எந்திரன்’ திரைப்படம் பற்றி சிலவற்றை சொல்லக் கிடைத்த இந்த வாய்ப்பு மகிழ்ச்சிக்கு உரியதாகும்.

‘எந்திரன்’ படம் இந்திய நாட்டு மக்கள் மட்டுமல்லாமல், உலக நாடுகளில் உள்ள இந்தியர்கள் அனைவரும் மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படமாகும்.

சன் பிக்சர்ஸ் தம்பி கலாநிதி மாறன் தயாரிக்க, சூப்பர் ஸ்டார் – என் இனிய நண்பர் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்கும் பிரமாண்டமான படம்.

கல்லுக்குள் இருக்கும் ஈரத்தையும் பிழிந்தெடுக்கும் ஆற்றல் பெற்ற இயக்குனர் ஷங்கர், கலை உலகில் இருக்கின்ற அற்புத திறனாளிகள் பலருடைய திறமையை வெளிப்படுத்தி இயக்கியுள்ள திரைப்படம் ‘எந்திரன்’.

மனிதநேயம் கொண்டவரும் மனதில் அப்பழுக்கின்றி மாசற்ற மாணிக்கங்களில் ஒருவராக விளங்குபவரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரும்பாடுபட்டு வெளிக்கொணரும் இந்தப் படம் பெரும்புகழ் பெறும் என்பதில் ஐயமில்லை.

பொன்குடத்திற்கு பொட்டு வைத்தால், அதன் பொலிவைப் புகலவும் வேண்டுமோ! ஆம், நமது ஆஸ்கார் நாயகன் தம்பி ஏ.ஆர்.ரகுமான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நோக்கப் பாடலுக்கு இசையமைத்து இமயப் புகழ் பெற்றதை அடுத்து, ‘எந்திரன்’ படத்துக்கும் இசையமைத்து இருக்கிறார்.

ஒப்பனை செய்துகொள்ளவே ஒவ்வொரு நாளும் ஆறு மணி நேரம் வரை ரஜினிகாந்த் செலவிட்டு இருக்கிறார் என்றால், அவர் எடுத்துள்ள சிரமத்திற்கு, கொடுத்துள்ள உழைப்புக்கு ஈடு இணையற்ற பரிசாக இந்த ‘எந்திரன்’ வெளிவர இருக்கிறது.

இரண்டு ஆண்டுகளில் பத்துக்கு மேற்பட்ட வெற்றித் திரைப்படங்களை வெளியிட்ட சன் பிக்சர்ஸ், இந்த ‘எந்திரன்’ படத்தின் மூலம், ‘எங்கெங்கு காணினும் வெற்றியடா! ‘எந்திரன்’ படம் ஏழுகடல் தாண்டியும் முழங்குமடா!’ என திரையுலகம் திரும்பத் திரும்ப பாடத்தான் போகிறது…”

-இவ்வாறு முதல்வர் வாழ்த்தியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ ஆர் ரஹ்மான் பேசுகையில், “தமிழ் மிகச்சிறந்த மொழி. உலகம் முழுவதும் தமிழைக் கொண்டு செல்ல என்னால் என்ன முடியும் என்று அடிக்கடி யோசித்திருக்கிறேன். மலேசிய தலைநகரில் நடக்கும் இந்த ‘எந்திரன்’ பாடல்கள் வெளியீட்டு விழா அதற்கு அடித்தளமாக அமையும் என்று நினைக்கிறேன்.

என் மகள் கதீஜாவிடம் இந்த படத்துக்கு பாடுமாறு கேட்டிருந்தேன். வழக்கமாக நான் இசையமைப்பது நள்ளிரவு 12 மணி, அதிகாலை 1 மணி என இருக்கும். அந்த நேரத்துக்கு வந்து கதீஜாவால் பாட முடியுமா என்று நினைத்தேன். ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு வந்தவள், அரை மணி நேரத்தில் நான்கு மொழிகளுக்கும் சேர்த்து பாடி அசத்தி விட்டாள். ‘புதிய மனிதா’ பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், நான், கதீஜா இணைந்து பாடியிருக்கிறோம். படத்தின் எல்லா பாடல்களையும் ரசிகர்கள் விரும்புவார்கள் என்று நம்புகிறேன்…” என்றார்.

வைரமுத்து

கவிஞர் வைரமுத்து பேசியதாவது: ‘எந்திரன்’ உள்ளூரில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. சிவாஜியில் ‘சிங்கம் சிங்கிளாத்தான் வரும்’ என ரஜினி வசனம் பேசினார். இதில் சிங்கிளாக வரவில்லை; சிங்கப் படையையே திரட்டி வந்திருக்கிறார். அதில் சிங்கிளாக வந்தார், இதில் ஜங்கிளோடு வந்திருக்கிறார்.

கலாநிதி மாறனின் ரசிகன் நான். இந்த உண்மை அவருக்கு தெரியாது. கலைஞர்கள், படைப்பாளிகள் மட்டுமல்ல, சாதித்தவர்களும் சமுதாயத்தால் மதிக்கப்பட வேண்டும். தன்னுடைய உழைப்பால், தன்னுடைய பேராற்றலால் இன்று உலகம் முழுவதும் தெரியும் அளவிற்கு கலாநிதி மாறன் வளர்ந்திருக்கிறார் என்றால் அது சாதாரணமான சாதனையல்ல.

இந்தப் படத்தை முதலில் வேறொரு நிறுவனம் தயாரித்தது. அதில் சிக்கல். அப்போது கை கொடுத்தவர் கலாநிதி மாறன். ஷங்கரிடம் சொன்னேன், ‘இனி கவலைப்பட தேவையில்லை. ஐங்கரன் விட்டுவிட்டான். இப்போது கலாநிதி மாறனால் ஆயிரம் கரங்கள் வந்திருக்கிறது’ என்றேன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொழிலை நேசிக்கிறார். அதனால் 35 ஆண்டுகள் அந்த சிம்மாசனத்தில் அவர் மட்டுமே ஜாம்பவானாக அமர்ந்திருக்கிறார்.

எந்திரனுக்கு எப்படி பாட்டு எழுதுவது என்று மூன்று மாதங்கள் தகவல்கள் சேகரித்தேன். இயக்குனர் ஷங்கரும் தகவல்களை தொகுத்து தந்தார். அதை வைத்து நான் பாடல்களை உருவாக்கினேன். ஒரு தமிழன் ஹாலிவுட்டில் படம் இயக்க வேண்டுமென்றால் அது ஷங்கரால் மட்டும்தான் முடியும். என் பாடல்களுக்கு ஏ.ஆர்.ரகுமானின் இசை கிடைத்த பிறகுதான் அதற்கு உலக அங்கீகாரம் கிடைத்தது. இந்த படம் உலக உயரத்தை தொட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்..”, என்றார்.

ஐஸ்வர்யா ராய்

எந்திரன் நாயகி ஐஸ்வர்யா ராய் பேசுகையில், “எந்திரன்’ படம் இந்திய சினிமாவில் ரொம்ப ஸ்பெஷல். எனக்கும் இந்த படம் ஸ்பெஷல்தான். இந்த படத்துக்காக இரண்டு வருஷம் கஷ்டப்பட்டு முழுமையான ஈடுபாட்டுடன், நம்பிக்கையுடன் நடித்திருக்கிறேன்.

படத்தை மிகவும் பிரமாண்டமான முறையில் தயாரித்திருக்கிறது சன் பிக்சர்ஸ். இந்த படம் இந்திய சினிமாவின் புதிய அடையாளமாக உலகம் முழுவதும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்காக கலாநிதி மாறனுக்கு நன்றி சொல்ல வேண்டும். படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

இயக்குனர் ஷங்கரால் முடியாதது எதுவும் இல்லை என்று இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். படத்தின் மகத்தான வெற்றி குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினி சார் ஒரு அற்புதம். நடிப்பின் சிகரம் அவர். செட்டில் ஒன்றுமே தெரியாதவர் போல, சாதாரணமாக இருப்பார். ஆனால் கேமரா சுழல ஆரம்பித்ததும் அவர் நடிப்பதையே அசந்துபோய் பல முறை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன். அவருக்கு நிகரே கிடையாது. இந்திய சினிமாவின் உண்மையான சூப்பர் ஸ்டார் அவர்தான்…” என்றார்.

வடிவேலு, ஜெயம் ரவி, கருணாஸ், ஸ்ரேயா, சிம்பு உள்பட பலரும் நிகழ்ச்சியில் பேசினர்.

http://www.youtube.com/watch?v=s6lOCRWdMEc&feature=player_embedded#!

நன்றி:

http://www.thedipaar.com/cinema/cinema.php?id=4329

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்திரன் இசை வெளியீட்டு விழா. ரஜினியை பாராட்ட மறந்த ஐஸ்வர்யாராய். ரஜினிக்கு ஐஸ் வைத்த ஐஸ்.

இதிலையிருந்து நான் சொல்ல வாறது என்னெண்டால் தம்பி ரஜனியும் சிங்காரி ஐஸ்சும் தனிய கதை டிஷ்கசன் நடத்தேல்லை டட்டடோங்ங்ங் :D

  • கருத்துக்கள உறவுகள்

கலாநிதி மாறனுக்கு ஆளாளுக்கு மாறி மாறி ஐஸ் வைக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி வாழ்த்து

"எங்கெங்கு காணினும் வெற்றியடா! ஏழுகடல் தாண்டியும் எந்திரன் முழங்குமடா!” என எந்திரன் படத்துக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

smiley-sunglasses.gif ஆமாடா.... வெற்றி முழங்க, சங்கு ஊதுங்கடா..... smiley-sunglasses.gifsmiley_emoticons_mttao_horn.gif1333.gifhorn.gifsmiley-sunglasses.gif

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

smiley-sunglasses.gif ஆமாடா.... வெற்றி முழக்க, சங்கு ஊதுங்கடா..... smiley-sunglasses.gifsmiley_emoticons_mttao_horn.gif1333.gifhorn.gifsmiley-sunglasses.gif

.

smileyemoticonsnicken.gifsmileyemoticonsnicken.gif

இதிலையிருந்து நான் சொல்ல வாறது என்னெண்டால் தம்பி ரஜனியும் சிங்காரி ஐஸ்சும் தனிய கதை டிஷ்கசன் நடத்தேல்லை டட்டடோங்ங்ங் :D

அப்பிடியா? பாவம் தலைவர். ஐஸை நீண்டகாலமாக தனது படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தார். எல்லாம் வேஸ்டா? இனி நிரந்தரமாக இமய மலைதான். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் படத்தை முதலில் வேறொரு நிறுவனம் தயாரித்தது. அதில் சிக்கல். அப்போது கை கொடுத்தவர் கலாநிதி மாறன். ஷங்கரிடம் சொன்னேன், ‘இனி கவலைப்பட தேவையில்லை. ஐங்கரன் விட்டுவிட்டான். இப்போது கலாநிதி மாறனால் ஆயிரம் கரங்கள் வந்திருக்கிறது’ என்றேன்.

என்ன கொலைஞரின் ஜால்ரா முத்து வைரம் இப்புடிச் சொல்லுது? நான் கேள்விப்பட்டதன்படி ஐங்கரனிடமிருந்து சண் பறித்து அல்லோ எடுத்ததாம்? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏ.ஆர்.ரஹ்மான்

வழக்கமாக நான் இசையமைப்பது நள்ளிரவு 12 மணி, அதிகாலை 1 மணி என இருக்கும்.

என்னெண்டு தெரியேல்லை???????????????

உங்கை கனபேருக்கு நடுச்சாமத்திலைதான் ஞானம் புத்தி தத்துவம் புதுயோசினையள் எல்லாம் பிறக்குது :lol:

எந்திரனை புறக்கணிப்போம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்திரனை புறக்கணிப்போம்...

ஏன் உங்களுக்கு என்ன நடந்தது????

இல்லாட்டி என்னை மாதிரி உங்களுக்கும் :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.