Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு பிடித்த எழுத்தாளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது. உரையாடிய பின்னர் தகவலைப் பகிர்ந்துகொள்ளுங்கள். பல காத தூரத்தில் இருப்பதால் அங்கு செல்வது கேள்விக்குறியே!

  • 3 weeks later...
  • Replies 152
  • Views 25.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்டால் எப்படி மெம்பஸ் இல்லாதவர்களுக்கு புத்தகம் விற்க மாட்டினமா?...£25 வந்து கார் பார்க்கிங் காசாக இருக்கும் அத்தோடு புத்தகம் இர‌வல் எடுக்க வேண்டும் என்டால் புறம்பாக காசு கட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்...போன் பண்ணிப் பார்த்தால் தெரியவரும்

இந்த நூலகத்திற்கு நண்பர் ஒருவருடன் செல்லும் சந்தர்ப்பம் வாய்த்தது!

இது அண்மையில் தொடங்கப்பட்ட ஒரு "பார்" உடன் கூடிய தமிழ் உணவகத்தின் ஒரு பகுதியிலேயே இயங்குகின்றது. எனவே இரவு 10 -11 மணிவரை புத்தகங்களைப் பார்வையிட/வாங்க முடியும்!! உறுப்பினர்கள் அங்குள்ள உணவகத்தில் இருந்து படிக்கமுடியுமோ என்று தெரியவில்லை..

இன்னமும் நூலகம் சரியான முறையில் ஒழுங்கமைக்கப்படவில்லை. எனினும் தரமான புத்தகங்கள் பல இருக்கின்றன என்று சொல்லமுடியும். இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள் (புதினங்கள், தமிழ் இலக்கிய/இலக்கண சம்பந்தமான புத்தகங்கள்) பல காணப்பட்டன. புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர்களின் எல்லாப் புத்தகங்களும் இல்லாவிட்டாலும் சில கண்ணுக்குப்பட்டன. அத்துடன் விலை கைக் கணக்காக இல்லாமல் நியாயமாக இருந்தது.

பல காலமாகத் தேடிக்கொண்டிருந்த ஈழத்து எழுத்தாளர்களின் மூன்று புத்தகங்கள் வாங்கினேன். என்றாலும் உணவகத்தில் செலவழித்தது புத்தகச் செலவையும் விட இரு மடங்காக இருந்தது!

இன்னுமொரு தடவை போவேன் என்று சொல்லமுடியாது!

நல்ல தகவல்.

முன்பு தொலைபேசிப் பார்த்தேன். விடையறியும் இயந்திரம் பொருத்தியிருந்தார்கள். :D

நேரம் கிடைக்கும் பொழுது சென்று நல்ல புத்தகங்கள் வாங்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவல்.

முன்பு தொலைபேசிப் பார்த்தேன். விடையறியும் இயந்திரம் பொருத்தியிருந்தார்கள். :D

நேரம் கிடைக்கும் பொழுது சென்று நல்ல புத்தகங்கள் வாங்க வேண்டும்.

நிறைய எதிர்பார்க்காமல் சென்றால் நல்லது! உணவகம் வெறுமையாக இருந்தால் பயப்படவேண்டாம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவல்.

முன்பு தொலைபேசிப் பார்த்தேன். விடையறியும் இயந்திரம் பொருத்தியிருந்தார்கள். :D

நேரம் கிடைக்கும் பொழுது சென்று நல்ல புத்தகங்கள் வாங்க வேண்டும்.

எனக்கும் அது தான் நடந்தது :lol: ...ஆனால் ஒரு நாள் நேரில் போக வேண்டும்...புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இருக்குதா கிருபன்?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் அது தான் நடந்தது :lol: ...ஆனால் ஒரு நாள் நேரில் போக வேண்டும்...புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இருக்குதா கிருபன்?

Woolwich Arsenal DLR ஸ்ரேசனுக்கு அண்மையில் உள்ளது.

நூலகத்திற்குப் போகின்றேன் என்று நினைத்துப் போகாமல் ஆட்கள் அதிகம் புழங்காத 'பப்'புடன் கூடிய உணவகத்திற்குத் செல்லுகின்றேன் என நினைத்துச் செல்லுங்கள்! துணைக்கு ஒருவரைக் கூட்டிச் சென்றால் நல்லது!

எனக்கு அந்நியமான இடம் என்பதாலும் இருட்டிய பின்னர் போயிருந்ததாலும் ஏரியா எப்படி. தெரியவில்லை.

எனக்கு அந்நியமான இடம் என்பதாலும் இருட்டிய பின்னர் போயிருந்ததாலும் ஏரியா எப்படி. தெரியவில்லை.

அவ்வளவு நல்ல இடமில்லை. பகலில் பிரச்சனையில்லை. இரவில் பெண்கள் என்றால் துணையுடன் போவதுதான் நல்லது.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் இரண்டு புத்தகங்களை மீளவும் படித்தேன்..எனது சிறுவயதுகளிலேயே இந்தப் புத்தகங்களை படித்துமுடித்துவிட்டிருந்தேன்..அதனால் நினைவுகளில் மங்கலாக இருந்ததால் அவற்றை மீண்டும் ஒருமுறை படித்து முடித்தேன்...

சிக்மன் ப்ராய்டின் ‘கனவுகளின் விளக்கம் - மனித மனம் பற்றிய ஆழ்ந்த பல விஷயங்களை இந்த புத்தகம் ஆய்வு செய்கிறது. மனிதனின் நிறைவேறாத ஆசைகளின் பிரதிபலிப்பே கனவுகள். இது மனிதனை செயலுக்குத் தூண்டிவிடும் சக்தி கொண்டது, என இப்புத்தகம் கூறுகிறது....

சார்லஸ் டார்வினின் ‘உயிரினங்களின் தோற்றம்’ - 1859ல் இது வெளியிடப்பட்ட காலம் வரை உயிரினங்களின் தோற்றம் குறித்து மத கட்டுக்கதைகளே விதவிதமான விளக்கங்களைக் கூறிவந்தன. ஆனால் உயிரியல் மரபில் ஒரு புரட்சிகர சிந்தனை மாற்றத்திற்கே விதைபோட்டு, அதுவரையான உலக பார்வையினையே இந்நூல் மாற்றியமைத்துவிட்டது.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Woolwich Arsenal DLR ஸ்ரேசனுக்கு அண்மையில் உள்ளது.

நூலகத்திற்குப் போகின்றேன் என்று நினைத்துப் போகாமல் ஆட்கள் அதிகம் புழங்காத 'பப்'புடன் கூடிய உணவகத்திற்குத் செல்லுகின்றேன் என நினைத்துச் செல்லுங்கள்! துணைக்கு ஒருவரைக் கூட்டிச் சென்றால் நல்லது!

எனக்கு அந்நியமான இடம் என்பதாலும் இருட்டிய பின்னர் போயிருந்ததாலும் ஏரியா எப்படி. தெரியவில்லை.

நானும் இவ் நூலகத்திற்கு அண்மையில் சென்று இருந்தேன்...கிருபனை மாதிரி பயம் காரணமாக நண்பரை துணைக்கு அழைத்து செல்லவில்லை :lol: ...இடத்தைப் பார்த்ததும் திரும்பி வருவோம் என்றும் யோசித்தேன் ஆனால் நான் யார் ரதியாச்சே :D

அந்த கடையில் இருப்பவர் சொன்னார் அந்த ஏரியாவில் நிறையத் தமிழர்கள் இருக்கிறார்களாம்...அங்கிருந்த நூல்களை விட‌ என்னிட‌ம் அதிக நூல்கள் இருக்குது ஆனால் ஒன்று என்னிட‌மில்லாத பல நூல்கள் அதுவும் இலங்கை எழுத்தாளார்களது பல நூல்களை வாங்கினேன்.விலையும் கிருபன் சொன்ன மாதிரி ப‌ர‌வாயில்லாமல் இருந்தது...நானும் திரும்பி போவதாக ஜடியா இல்லை :icon_idea:

நண்பனுக்குத் துணையாகத்தான் நான் போயிருந்தேன் :icon_mrgreen::)

நீங்கள் போய் உருப்படியாகத் திரும்பி வந்தது பெரிய காரியம் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் உங்கட அவாட்டர் படத்தை மாத்துங்கோ உங்களுக்கு பொருத்தமில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிருபன் உங்கட அவாட்டர் படத்தை மாத்துங்கோ உங்களுக்கு பொருத்தமில்லை

baby_foot.jpg தங்கச்சிக்கு இப்பிடியான அவாட்டர் பிடிக்கும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் உங்கட அவாட்டர் படத்தை மாத்துங்கோ உங்களுக்கு பொருத்தமில்லை

அது எனது சொந்த முகம் :) சராசரித் தமிழர்களின் முகம் மாதிரிக் கற்பனை பண்ணியிருக்கிறீர்கள் போலிருக்கே! :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

baby_foot.jpg தங்கச்சிக்கு இப்பிடியான அவாட்டர் பிடிக்கும். :lol:

நான் ஒன்றும் பால்குடி இல்லை அண்ணா :D

அது எனது சொந்த முகம் :) சராசரித் தமிழர்களின் முகம் மாதிரிக் கற்பனை பண்ணியிருக்கிறீர்கள் போலிருக்கே! :icon_mrgreen:

உண்மையாகவே இது உங்கள் சொந்த முகமா நான் நம்ப மாட்டேன் :unsure: ...இனி மேல் கருத்துக்களத்தில் உங்கள் கருத்திற்கு மதிப்பு குறையப் போகுதே :lol: சராசரி தமிழரின் முகம் என்ன அவ்வளவு கேவலமா <_<

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவே இது உங்கள் சொந்த முகமா நான் நம்ப மாட்டேன் :unsure: ...இனி மேல் கருத்துக்களத்தில் உங்கள் கருத்திற்கு மதிப்பு குறையப் போகுதே :lol: சராசரி தமிழரின் முகம் என்ன அவ்வளவு கேவலமா <_<

இதுவரை மதிப்பு இருந்ததா :icon_mrgreen:

சராசரித் திராவிடத் தமிழர்கள் எப்படி இருப்பார்கள் என்று சுமேரியர் பற்றிய திரியில் சற்றுமுன்னர்தான் ஒரு பதிவு இட்டுள்ளேன். படித்தால் பதில் கிட்டும் <_<

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவே இது உங்கள் சொந்த முகமா நான் நம்ப மாட்டேன் :unsure: ...

ஆம ரதி அக்கா..எந்தவித சந்தேகத்துக்கும் இடமில்லாமல் அது கிருபன் அண்ணாவின் சொந்தப்படம்தான்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம ரதி அக்கா..எந்தவித சந்தேகத்துக்கும் இடமில்லாமல் அது கிருபன் அண்ணாவின் சொந்தப்படம்தான்...

அட...சாட்சி வேறை வந்துட்டுது........தங்கச்சி ஆளை நேரை சந்திக்க லைன் போடுது....இது தெரியாமல் குறுக்காலை போவார்... நடுறோட்டிலை கும்மியடிச்சுக்கொண்டு :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அட...சாட்சி வேறை வந்துட்டுது........தங்கச்சி ஆளை நேரை சந்திக்க லைன் போடுது....இது தெரியாமல் குறுக்காலை போவார்... நடுறோட்டிலை கும்மியடிச்சுக்கொண்டு :lol:

:lol: அடடா..இப்பிடி ஒரு கதை இடையாலை ஓடுதே அண்ணா...சா..நந்தி மாதிரி நான் குறுக்க வந்து எல்லாத்தையும் நாசமாக்கீட்டன் போல.. :(:icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆம ரதி அக்கா..எந்தவித சந்தேகத்துக்கும் இடமில்லாமல் அது கிருபன் அண்ணாவின் சொந்தப்படம்தான்...

அப்ப சரி இனி மேல் கிருபனை நிலக்கீழ் புகையிர‌த நிலையத்தில் வைத்து நல்ல இருட்டடி கொடுக்கலாம்

அட...சாட்சி வேறை வந்துட்டுது........தங்கச்சி ஆளை நேரை சந்திக்க லைன் போடுது....இது தெரியாமல் குறுக்காலை போவார்... நடுறோட்டிலை கும்மியடிச்சுக்கொண்டு :lol:

நீங்கள் வேற அண்ணா நான் யாழ் களத்தால் ஒருத்தரையும் சந்திப்பதில்லை என இப்போதைக்கு பிளான் பண்ணி இருக்கிறன் :(

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சரி இனி மேல் கிருபனை நிலக்கீழ் புகையிர‌த நிலையத்தில் வைத்து நல்ல இருட்டடி கொடுக்கலாம்

"எனக்குப் பிடித்த கருத்தாளர்" என்று சொல்லுவீங்க என்று நினைச்சன். :wub: இப்படி ஏடாகூடாமாக இருக்கே..

மட்டுறுத்தினர்கள் வந்து எல்லாத்தையும் வெட்டித் தொலைக்க முதல் போய் வருகின்றேன்.

Edited by கிருபன்

  • 6 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நானும் இன்னுமொருவனின் சொல்லைக் கேட்டு The legend of Pradeep Mathew  நூலை அண்மையில் வாசித்து முடித்தேன் :D ...அண்மைக் காலங்களில் நான் வாசித்த புத்தகங்களில் மிகவும் ர‌சித்து,நேர‌ம் போனதே தெரியாமல் வாசித்த புத்தகம் என்டால் இது தான்...ஆனால் நான் காசு கொடுத்து வேண்ட‌வில்லை...நூலகத்தில் எடுத்து தான் வாசிச்சேன்...இன்னுமொருவனுக்கு மிக்க நன்றி :)
 
இந்த நூலாசிரியர் சிங்களவராய் இருந்தாலும் இனத் துவேச‌ம் இல்லாதவர் என்பது அவர‌து நூலை வாசிக்கும் போது தெரிகிறது.
 
பிர‌தீப் மத்தியூ என்பது உண்மையிலே ஒரு கற்பனைக் கதா பாத்திர‌ம் தான்...அப்படி ஒரு வீர‌ர் நிஜத்தில் இருந்திருக்க சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன் :lol:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நான் இன்டைக்கு ஃபிரான்சிஸ் ஹாரிசனின் ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள் என்ட நூலை வாசிச்சேன்...90% உண்மையை எழுதியிருக்கிறார்...ஏற்கனவே பெரும்பாலான சம்பவங்கள் கடைசி வரை அங்கிருந்தோரால் சொல்லப்பட்டு,கேட்கப்பட்டது என்டாலும் எழுத்தில் வாசிக்கும் போது மனதை உருக்குது...இந்த நூலை வாசிக்கும் போது சில விடயங்கள் மனதை உறுத்தியது;
 
இந்த நூலாசியர் கடைசி வரைக்கும் புலிகளை தீவிர‌வாதிகள் என்றே சொல்கிறார் :(
இறுதி நேர‌ யுத்த அவலங்களை அங்கு கடைசி வரைக்கும் இருந்தேன் என சொல்லும் யோ.கர்ணனோ,நிலாந்தனோ,கருணாகர‌னோ ஏன் எழுத முயற்சிக்கவில்லை :unsure: ...அவர்களும் அதற்குள் சிக்கித் தானே தப்பினவர்கள்  <_<

அக்கோய் புத்தகத்தை பற்றி கதைக்கினம்,

http://www.themonthly.com.au/video/2013/04/15/1365982211/sri-lankas-troubles-niromi-de-soyza-and-frances-harrison

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நான் கடந்த 3 நாட்களாக கோல்டன் வைசின் 'கூண்டு' வாசித்தேன். புத்தகம் வாசிக்கும் முன்னர் இவரைப் பற்றி கேள்வி படேக்குள்ள இவர் ஒரு புலி ஆதரவாளர் என்று கேள்விப்பட்ட மாதிரி இருந்தது.ஆனால் புத்தகத்தை வாசிக்கும் போது அப்படித் தெரியவில்லை.இவரை விட பிரன்சிஸ் ஹாரிசன் நடுநிலைமையாக எழுதி இருக்கிறார்.கோல்டன் வைஸ் முள்ளி வாய்க்கால் ய்த்தத்தின் போது அகதிகளாய் வந்த மக்களை இராணுவம் அந்த மாதிரி உபசரித்தது என தனது நூலில் சொல்லியுள்ளார்.அதில் அவர் இராணுவத்தின் பெண்கள் மீதான பலாத்கார‌ம் பற்றி எதுவுமே குறிப்பிட‌வில்லை.
 
இந்த நூலை வாசித்த ஏனையோரின் கருத்தை முக்கியமாக கிருபனது கருத்தை அறிய விரும்புகிறேன் :)
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்கோய் புத்தகத்தை பற்றி கதைக்கினம்,

http://www.themonthly.com.au/video/2013/04/15/1365982211/sri-lankas-troubles-niromi-de-soyza-and-frances-harrison

 மிக்க நன்றி இணைப்பிற்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.