Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்களுக்கு பிடித்த வியாதி என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் வணக்கம்..

நீண்ட நாட்களுக்கு பிறகு யாழுக்கு-வருவதே குறைந்து போய்விட்டது..

சில நாட்களுக்கு முன்பு ஒரு விரிவுரையாளர்/ பேச்சாளர்- ஒரு வைத்தியர் (முதியோர் வருத்தங்களில் சிறப்பு பட்டம் பெற்றவர்) Hospice care பற்றி ஒரு விரிவுரை எடுத்தார். அப்போது அவர் கேட்ட கேள்வி.."நீங்கள் என்ன மாதிரியான இறப்பை விரும்புகிறீர்கள்", அதையே நான் சற்று மாறுதலாக என்ன வியாதி உங்களுக்கு பிடிக்கும் என்று கேட்டுள்ளேன்.

கிட்டதட்ட 100 பேர் இருந்திருப்போம் ஒருவரும் பதில் சொல்லவில்லை. சொல்ல விரும்பவில்லையோ அல்லது அது பற்றி சிந்தித்து இருக்கவில்லையோ தெரியாது...இதனால் அந்த விரிவுரையாளர் திருப்ப கேட்டார், எத்தனை பேருக்கு, ஹார்ட் வருத்தம் (Heart Disease) வந்து சாக விருப்பம் என்று...அதற்கும் ஒருவரும் ஒன்றும் சொல்லவில்லை, பிறகு அவர் கேட்டார், ஓகே அப்படி என்றால் எந்தனை பேருக்கு கான்சர் (cancer) வந்து சாக விருப்பம் என்றார்...அப்போதுதான் கூட்டத்தில் சிறிய சல சலப்பு...எப்படியோ நாங்கள் பதில் சொல்லும் மட்டும் அவர் எங்களை விடப்போவதில்லை என்று- ஏனெனில் எல்லோரும் இறக்க வேண்டும்..

கன பேருக்கு விருப்பம், சிவனே என்று இப்ப இருக்கிற மாதிரியே இருந்து போட்டு சாக வேண்டும் என்று..அப்படி எல்லாருக்கும் நடப்பதில்லை ...ஆராவது இதுபற்றி சொல்ல விரும்பினால் உங்களின் பின்னுட்டங்களை தாருங்கள். காத்திரமாக விவாதிப்போம்..

குறிப்பு: இது பற்றி, அல்லது இது மாதிரி முன்னரே எழுதியிருந்தால்..இதை அந்த பகுதிக்கு நகர்த்தி விடவும்..எனது பதில்கள்..குறித்த இடைவெளிகளில் வராவிடில் பொறுத்தருளுக..ஏனையோர் தொடர்ந்து விவாதிக்கவும்..

இடக்குமுடக்கான வினாக்களுடன் திரும்பியுள்ளீர்கள். எவரும் இறப்பையோ, வியாதிகளையோ விரும்புவது இல்லை. என்றாலும் நீங்கள் கேட்டமையால்..

எப்படியான வியாதி உங்களுக்கு விருப்பம்?

இறப்பை ஏற்படுத்தாத, மற்றும் நாளந்த வாழ்விற்கு இடையூறு விளைவிக்காத ஓர் வியாதி.

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது வருத்தம் வருதை அல்லது அவற்றினால் அவஸ்த்தைப் படுவதை விரும்புவார்களா......? இல்லை யாருக்காவது ஏதாச்சும் வருத்தம் பிடிக்குமா...?என்னைப் பொறுத்தமட்டில் எவ்வகையான மரணத்தை மனிதர்கள் விரும்பிறார்கள் எண்டு கேட்டு இருந்தால் ஓரளவுக்கு நன்றாக இருந்து இருக்கும் எண்டு நினைக்கிறன்.அதையே தான் அந்த விரிவுரையாளரும் கேட்டு இருக்கிறார்.என் சிற்றறிவுக்கு எட்டியதை சொன்னேன்.ஆனானும் மனிதனுக்கு உடல் நலக் குறைகள் எண்டு பலதும் பத்துமாக இருப்பதால் தான் பல் வேறு துறைகளில் வைத்தியர்களும் சேவை ஆற்றிவருகிறார்கள்.ஆகவே இருதய வருத்தம் வந்து நோயாளிகளை வருத்துவது ஒரு சில நிமிட கணங்களாகவே இருக்கும். இல்லை என்றால் ஒரு சில நாட்களில் இறப்பை எதிர் நோக்குவார்கள் அதுவும் தாண்டினால் இருதய நோயால் பீடிக்கபட்ட நோயாளியின் அதிர்ஸ்டத்தைப் பொறுத்தது தொடர்ந்து வாழ்வதும் இறப்பதும்..புற்று நோய் என்பது கொஞ்சம் இழுத்தடிபடும் ஆகவே அதனால் பீடிக்கபட்டு மாதக்கணக்காகவோ இல்லை வருடக் கணக்காவே மருத்துவமனைக் கட்டிலோ இல்லை வீட்டிலோ கிடந்து இழுபடக் கூடாது. எவரதும் நச்சரிப்புகளுக்குள்ளும் ஆளாகாமல் எல்லாரது அன்பு,பாசம்,மரியாதை எல்லாம் இருக்கும் போது போய் விட வேண்டும்.இது கிடந்து எங்கள் உயிரை வாங்குதே என்று யாரும் சொல்லிடக் கூடாது.ஆக இந்த இரண்டு வருத்தங்களாலும் தான் மனிதர்கள் கஸ்ரங்களை அனுபவிக்கிறார்கள் எண்டும் இல்லைத் தானே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கரும்பு, யாழினி..

யாழினி உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்

நான் சொல்ல வந்த கருத்துதொன்றை (நான் பூரணமாக சொல்லாததால்) நீங்கள் முழுமையாக எடுத்துகொள்ளவில்லை என நான் நினைக்கிறேன். இறப்பிற்கு ஹார்ட் வருத்தமும், கான்சரும் மட்டும்தான் என்று சொல்லவில்லை..அவர் சொன்ன மிச்ச காரணங்களை நான் குறிப்பிடவில்லை.

நீங்கள் சொன்ன இதய வருத்தம் சம்பந்தமான தகவல், பிரதானமாக கான்செர் உடன் ஒப்பிடும் பொழுது சரிஅல்ல. கான்சர் உடன் ஒப்பிடும் பொழுது இதயவருத்தம் "safe " என்பதுதான் பலருடைய கருத்து...மறுதலையாக, இப்ப மட்டும் கான்சர் பற்றி உள்ள பொதுவான குறைபாடு.."கான்சர் என்று கண்டுபிடித்தல் சாவு நிச்சயம் அது இண்டைக்கோ 10 நாள் கழித்தோ அல்லது 1 வருடம் கழித்ததோ" என்பதுதான் இப்பவும் உள்ள பெரும்பாலோரின் கருத்து அல்லது கருத்துநிலை. அதை மாற்றுவதற்கே நாங்கள் இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. நான் இலங்கையில் ஒரு பிரபலமான கான்சர் வைத்தினுனரிடம் அறிந்து கொண்ட விடயம், இங்கும் அதே நிலைதான். அதே நேரத்தில் கான்சர் தொடர்பாக பல அரை குறை தகவல்கள் பல இடங்களிலும் உலவுவதும் உண்டே..உதாரணத்திக்கு இது சாப்பிட்டால் இந்த கான்சர் "வராது" அல்லது இதன் மூலம் இந்த கான்செரை "குணப்படுத்தலாம்". இதைப்பற்றி பின்னர் எழுதுவோம்...

நான் நினைக்கிறன், எதை நான் எதிர்பார்த்தேனோ அதுவாகவே வந்தது போன்ற பதில்தான் கரும்புவின் பதில் (பழம் நழுவி பாலில் விழுந்த கதை மாதிரி)

"எவரும் இறப்பையோ, வியாதிகளையோ விரும்புவது இல்லை. .."

100 க்கு ~100 வீதம் உண்மை...அதனால் தான் நீங்கள் மட்டுமல்ல, நாங்கள் ஒருவரும் கூட அந்த விரிவுரையாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை.

"இறப்பை ஏற்படுத்தாத, மற்றும் நாளந்த வாழ்விற்கு இடையூறு விளைவிக்காத ஓர் வியாதி."

இது கிட்டத்தட்ட முதலாவதின் அண்ணன் தம்பி போன்ற விடை..யாழினி சொன்ன மாதிரி நான் கேள்வியை சரியாக கேட்காதால், கரும்பு அந்த பாவித்து விட்டார். ஆனால் நீங்கள் சொல்லுவது போன்ற ஒரு வியாதி உண்டோ என தெரியவில்லை. இப்பவுள்ள ஆரோக்கிய நிலை அல்லது சௌக்கிய நிலையின் வரைவிலக்கம்..health was defined as being "a state of complete physical, mental, and social well-being and not merely the absence of disease or infirmity".

உங்களுக்கு தடிமல் வந்தாலும் அது ஒரு வகையில் உங்களுக்கு இடையூறு விளைவிக்கத்தான் செய்யும், இப்ப உங்களுக்கு ஒரு கால் ஏலாமல் வாக்கிங் ஸ்டிக் பாவித்தாலும் உங்களுக்கு இடையூறு விளைவிக்கத்தான் செய்யும்.

ஆனால் இங்கே அதுவே சாவுக்கு காரணமாக அமையுமா என பார்த்தால் சில வேளைகளில் அவையும் வரக்கூடும். உதாரணத்திற்கு, உயர் குருதி அழுத்தும், ஒரு பிரச்சினையில்லாத வருத்தம். ஆனால் அதனால் வரும் வருத்தங்களோ பிரச்சனை ஆனானவை, அது ஹார்ட் அட்டாக் இருக்கலாம், ஹார்ட் failure ஆக இருக்கலாம், முளையிலே வார stroke இருக்கலாம்.

என்னவோ இந்த வழியில் கன தூரம் போகாமல்..நான் சொல்லவரது என்ன வென்றால்...எங்களுக்கெண்டு சில வருந்தங்கள்/ கொல்லும் வியாதிகள் ஏற்கனவே "எழுதியாச்சு" அதை எப்படி எப்ப அனுபவிக்க போகிறோம் என்பதே எமக்கு முன்புள்ள கேள்வி. முதல் 10 கொல்லும் வியாதிகள் என்று எடுத்தால்..

http://www.who.int/mediacentre/factsheets/fs310/en/index.html

எங்களில் எத்தனை பேர் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள இருக்கிறோம். ...மறுபடியும் சந்திக்கும் வரை...

  • கருத்துக்கள உறவுகள்

நான் வியாதி வந்து சாகமல் மற்றவர்களை கஸ்டப்படுத்தாமல் படுக்கையிலேயே[நித்திரையிலேயே] சாக வேண்டும் என்பது தான் என்ட விருப்பம் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பை பார்த்தால் எனக்கு பழைய பள்ளி ஹாஸ்டல் வாழ்க்கை நினைவுக்கு வருது... ரொம்ப ஸ்டிரிக்டான ஹாஸ்டல்... வருடத்திற்கு 2 முறை மட்டுமே வீட்டுக்கு அனுப்புவார்கள்... ஆனால் அம்மை நோய் கண்டால் மட்டும் ஸ்பெசல்... விடுமுறை வழங்கப்பட்டது.... ஏனெனில் மற்றவருக்கும் பரவும் அல்லவா? இந்த நோய் வராதா என பல மாணவர்கள் ஏங்கி அப்போ தவித்ததுண்டு...

டிஸ்கி : இப்ப இல்லை

6f7108ab7637e542e0ab99ac3616f99e%5B1%5D.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

மண்டையைப் போட்ட பின் உடல் தானம் செய்ய இருப்பதால், இருதய நோயில் சாக விருப்பம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கருத்துக்களை பகிர்ந்து கொண்டவர்களுக்கு...

இதய வருத்தம் ...கிட்டத்தட்ட 16 வீதமான இறப்புக்கு காரணமாய் உள்ளது..(அட்டவணையை பார்த்தால் தெரியும்) 16 வீதம் என்பது கிட்டத்தட்ட 6 பேரில் ஒருவர் என்ற கணக்கு.

இதய வருத்தங்கள் எப்படி வரும் என்று பார்த்தால், மாரடைப்பு ( ஹார்ட் அட்டாக்) நெஞ்சு வலி (angina), என்ற வகையில் பிரதானமாக வரும். (எனக்கு மற்றைய இதய வருத்தங்களும் http://www.who.int/mediacentre/factsheets/fs310/en/index.html இந்த அட்டவணையில் உள்ள Coronary heart disease என்ற வகைக்குள் வருமா என தெரியவில்லை)

இந்த இதய வருத்தங்களில் குணங்குறிகளை, அல்லது விளைவுகளை பார்த்தால், தனியே ஒருதடவையோ, அல்லது சில தடவையோ நெஞ்சு வலியோடு வைத்தியசாலை போவதோடு மாத்திரம் நிற்பதில்லை...இங்கே நெஞ்சு வலி வருவது இதயத்திற்குரிய குருதி வழங்கல் குறையும் போது அல்லது தேவையான அளவிற்கு கூடாத போது. ஆனால் இதயம் இந்தகைய வருத்தங்களினால் தனது வேலையை சரிவர செய்யாவிடின் - இதயம் குருதியை மற்ற உறுப்புகளுக்கு வழங்காவிடின், முழு உடலுமே பாதிப்படையும், அதற்குரிய குணங்குறிகளை காட்டும். அந்த நிலையை heart failure என்று சொல்லுவோம்..இந்த ஹார்ட் failure சில வகைப்படும்.(Right , left , systolic , diastolic , congestive ஒன்றோடு ஒன்று கலந்து வரும்)

இந்த failure குணங்குறிகள்தான் நடைமுறை இதயவருத்தம்...களைப்பு, இளைப்பு, வேலைகளை செய்ய முடியாத தன்மை, கால்கள், வயிர்ருப்பகுதிகள் வீங்கும் தன்மை, முச்சு விட கடினமான தன்மை, மட்டமாக படுக்க முடியாத தன்மை..இரவில் எதிர்பாராமல் முச்சு முட்டும் தன்மை ...அதற்கு மேல் சிலருக்கு எப்பவும் சிறிய வேலைகளுடன் நெஞ்சு வலி வரும் தன்மை...

இதை முடிப்பதர்ற்கு முன்பான, இதயத்தின் பம் பண்ணுகிற திறனை Ejection Fraction (EF ) என்னும் வீதத்தால் குறிப்பிடுவோம்..சராசரியாக ஒருவருக்கு 60 தொடக்கம் 70 வரும்..ஆனால் 50 -55 ஓகே, ஆனால் சில நேரங்களில் இது 30 வீததிர்ற்கும் கூட குறையலாம்..அந்த நேரத்தில் நோயாளியால் கிட்டத்தட்ட கட்டிலை விட்டு இறங்கவே இயலாமல் போகும்..(அதற்கும் சில வகையான சிகிச்சை முறைகள் உண்டு..)

அந்த நேரத்தில் DNR DNI பற்றி கதைக்க தொடங்குவோம் அல்லது பெரும்பாலும் அது ஏற்கனவே பெறப்பட்டு இருக்கும்..DNR DNI பற்றி வார கிழமை எழுதுகிறேன்..

இதற்கெல்லாம் தாயார் என்றால் உங்கள் தெரிவு இதய வருத்தமாக இருக்கட்டும் :rolleyes:

குறிப்பு: இதை எழுதும் போது எனக்கு நிறையை பிரச்னைகள் வருகின்றன...ஒன்று தரவுகளை சரி பார்த்து தருவது...எனக்கு என்னவோ இது கடினாமாக உள்ளது..ஏலக்கூடிய மட்டும் நினைவில் உள்ளவற்றை வைத்தே எழுதுகிறேன்..தவறுகளை பொறுத்துக்கொள்ளவும்.. எந்த இடத்திலும் இது ஒரு பூரணமான பதிவு அல்ல..எனது விருப்பத்திர்ற்காய், எனது தேடலுக்காய் மற்றவர்களுக்கும் பயன்படும் என நினைத்து எழுதுகிறேன்..

தமிழ் கடினமாக உள்ளது..பிரதானமாக கலைச்சொற்கள்...

நான் நினைத்ததை விட எனது மொழி அறிவு மோசமாய் உள்ளது..(ஊரில் சொல்லுவது போல மக்கி ரோட்டில வண்டில் மாடு போனமாதிரி)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு பிடிச்ச வியாதி எயிட்ஸ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி குச, AIDS , பற்றி குறிபிட்டத்திற்கு .

உண்மையில் கான்செர், எய்ட்ஸ், உடல் உறுப்புகளை மாற்றீடாக பெற்றவர்கள்- உதாரணத்திற்கு சிறுநீரகம் மற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள், எல்லோருக்கும் ஒரு பொதுவான இயல்பு, அவர்களில் நோய் எதிர்ப்பு தன்மை அற்று அல்லது குறைந்து காணப்படுவர்கள். அடிக்கடி தொற்று வியாதிகளுக்கு எதிராக பாதுகாத்து கொள்ள வேண்டும். ஒருநாள் சளி இருமல் என்றாலும் வைத்தியரிடம் காட்டி சிகிச்சை பெற வேண்டும். அவர்களுக்கு ஏனைய கான்சர் வருத்தங்களும் வார தன்மை கூட. எல்லா இடங்களிலும் போதியளவு சமூக உதவி கிடைப்பதில்லை. கணவன், மனைவி பிரிந்து சொல்லும் தன்மையும் உண்டு. இன்னுமொன்று இந்தகைய நோய் எதிர்ப்பு தன்மை குறைந்த நிலை, வயதானவர்களுக்கு வேறு வருத்தங்கள் இல்லாமலும் வரும். பலரும் கேள்விபடிருபீர்கள்...எதோ ஒருவருத்ததிர்க்கு கொண்டு போக கடைசியில நிமோனியா வந்து ஆள் காலமானார் என்று. நிமோனியா (நுரைஈரலில் வரும் கிருமி தொற்று) யாருக்கும் வரலாம் ஆனால் இந்தகைய நோய் எதிப்பு தன்மை குறைந்தவர்களுக்கு வந்தால்.. இளவயது ஆக்கள் போல் இலகுவாக மாறது.

மற்றது குச, நீங்கள் Aids பற்றி குறிப்பிட்டது ஏன் என்று விளங்கும், ஆனால் அதில் ஒரு விடயம் இருக்கு, இந்தவருடம் அமெரிக்காவில இருக்க கான்செர் டாக்டர்மார் கேக்கினம், கான்சர் ஐ பற்றின விழிபுனர்வு பொதுமக்களுக்கு போதாதது எனவும், அதற்கு HIV / AIDS க்கு கொடுக்கிற முக்கியத்தும் போல கொடுக்க வேண்டும் என்று. ஏனெனில் இன்று பலருக்கு ஐட்ஸ் என்றால் என்ன அது எப்படி வராது, அதுக்குரிய சிகிச்சை முறைகள் எல்லாம் ஓரளவுக்கு தெரியும், ஆனால் கண்செர் எண்டால்...தாங்கள் தாங்கள் நினைத்தபடி முலிகை வைத்தியமும், நேத்திகடனும் வைத்துகொண்டு திரிகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றது நிழலி கவனிக்க மறந்து விட்டேன், நீங்கள் குறித்தபடி, உடல் தானம் செய்ய முன்வந்ததிர்ற்கு வாழ்த்துகிறேன்.

யார் அறிவார், நாளை ஒரு பூங்குழலி உங்கள் இதயத்துடனோ, சிருநீரகத்துடனோ, ஈரலுடனோ, நுரைஈரளுடனோ இருக்க வரலாம்.

மாற்று உறுப்புகளுக்கான காத்திருப்பு பார்த்தல் தலை சுத்தும்.

ஏனோ நான் இன்னும் முடிவு எடுக்கவில்லை..சில காலங்களில் எடுப்பேன்.

புரட்சிகர தமிழன்..எனக்கும் முந்தி கூகைக்கட்டு என்று ஒரு வருத்தம் ..(mumps ) வந்தால் வலு சந்தோசம், பள்ளிக்கூடம் இல்லை, ஒரே பால். இளநீர். உள்ள பழம் எல்லாம்..சந்தோஷமான வருத்தம். ( எனக்கு தொண்டை நோ வந்த மாதிரி ஞாபகம் இல்லை) ஆனால் பிறகு வேலை செய்யும் போது..அம்மை நோய் (வந்தது ...என்னுடைய போஸ் unofficial leave தரமாண்டன் என்று சொல்லிப்போட்டார், அப்ப லீவ் எழுதி போட்டு அழுதழுது வீட்டில இருந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.