Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக இன்று  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

விண்ணியல் விநோதங்கள்...


Recommended Posts

பதியப்பட்டது

_39497143_foale_kaleri203.jpg10092050.jpg

விண்ணில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சர்வதேச விண்ணியல் நிலையம் (ISS-International Space Station) மீது ஏதோ ஒரு விண் பொருள் மோதியதாகவும் அதனால் அதன் உள் காற்றழுத்தம்(internal Air pressure) அதிகரித்த போதும் விண்ணிலையத்திற்கோ அல்லது அங்குள்ள இரண்டு வீரர்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று ரஷ்சிய விண்ணியல் ஆராய்ச்சி நிறுவனத்தினர் தெரிவித்தனர்...!

இந்த நிலையத்தில் வேற்று விண் பொருட்களைக் கண்டு பிடித்து அறிவிக்கும் ரடார் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது...ஏதாவது விண் பொருள் இதன் சுற்றுப்பாதையில் குறுக்கிட்டால் ரடார் சாதனம் அனுப்பும் சமிக்ஞை கொண்டு விண்ணிலயத்தை அப்பால் நகர்த்தமுடியும் என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.....!

தகவல் BBC.COM

  • 4 weeks later...
  • Replies 419
  • Created
  • Last Reply
  • 2 weeks later...
Posted

அமெரிக்க நாசாவின் நட்சத்திரத்தூசு விண் ஆய்வுக்கலம் (Stardust space probe) கடந்த இரண்டாம் திகதி வால் நட்சத்திரம்(Comet Wild 2) ஒன்றின் கருப்பகுதியை தெளிவாக படம் பிடித்து அனுப்பி உள்ளது...இந்தக் கருவே சூரியன் போன்ற வெப்பமான நட்சத்திரங்களுக்கு அருகில் வரும் போது தூசுத்துகள்களை வால் போல் வெளியிட்டு வால் நட்சத்திரமாகின்றன...!

இப்படங்கள் மீதான ஆய்வு வால் நட்சத்திரங்கள் பற்றிய புதிய பார்வைக்கு இட்டுச் செல்லும் என விஞ்ஞானிகள் கருத்துரைத்துள்ளனர்...!

அத்துடன் இந்த விண்ணாய்வுக்கலம் பூமியில் இருந்து 708 மில்லியன் மைல்களுக்கு அப்பால் சென்று எவ்வாறு சூரியத் தொகுதியும் பூமியில் உயிரிங்களும் தோன்றின என்று ஆய்வு செய்யவுள்ளதாக தெருவிக்கப்படுகிறது....!

Thanks reuters,yahoo and தமிழ் வடிவம் குருவிகளின் வலைப்பூ

Posted

040107_star_survives_illo_02.jpg

நட்சத்திரம் ஒன்றின் வெடிப்பு....இந்த வெடிப்பிற்கு முன்னதாக வெடிக்கும் நட்சத்திரம் அதன் அருகில் உள்ள துணை நட்சத்திரத்தில் இருந்து சூரியனைப் போல் பத்துமடங்குள்ள திணிவை உள்வாங்க முனைந்து அதன் பின் வெடித்துச் சிதறுகிறது..இதை 1993 இல் நடந்த ஒரு நட்சத்திர வெடிப்பை அவதானித்து விஞ்ஞானிகள் விபரித்துள்ளனர்.

-----------

the red supergiant star, generator of the supernova, at left. It is exploding after having snagged about 10 times the mass of the Sun from the blue companion star at right.

-----------

Message from space.com

Posted

040107_water_clouds_02.jpg

நீர் முகில் சூழந்து காணப்படும் அரிய நட்சத்திரம்..இது பூமியில் இருந்து சுமார் 2400 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது...!

-------

Message from Space.com...தமிழில் தகவல்கள் குருவிகளின் வலைப்பூ

  • 1 month later...
Posted

capt.la50002180517.doomed_star_la500.jpg

top.blackhole.star.cnn.jpg

இடது பக்கம் செம்மஞ்சள் வட்டம் குறிப்பது சிதைய முன் நட்சத்திரம்...அம்புக்குறி காட்டுவது...அதன் அசைவுப் பாதை...பின்னர் நிகழ்வது வெடிப்பும் உள்ளிளுப்பும் விசிறலும்.....நடுவில் கறுப்பாக இருப்பது அகிலத்தின் கரும்புள்ளி...!

பூமியில் இருந்து சுமார் 700 மில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் நிலை கொண்டுள்ள அகிலம்(galaxy RX J1242-11) ஒன்றில் நமது சூரியன் அளவு ஒரு நட்சத்திரம் இன்னொரு நட்சத்திரத்தை எதிர்கொண்டு விலகி அசைந்து அவ்வகிலத்தின் மையக் கரும்புள்ளியை (black hole near the heart of galaxy RX J1242-11) அண்மித்ததும் பல மில்லியன் அளவு வெப்பத்தைப் பெற்று கரும்புள்ளியின் உயர் ஈர்ப்பின் மூலம் நொருங்க..... அதன் ஒரு வீதம் அளவு கரும்புள்ளிக்குள் இழுக்கப்பட மிகுதி அதே பால்வீதியில் விசிறப்படும் காட்சி.....!

இவ் நிகழ்வு பற்றி பெளதீக ரீதியாக முன்னர் விளக்கப்பட்டிருப்பினும் இப்பொழுதுதான் முதற்தடவையாக விண்ணியலாளர்களால் சான்றுடன் விபரிக்கப்பட்டுள்ளது...!

-------------------------

Two space observatories have provided the first strong evidence of a supermassive black hole stretching, tearing apart and partially gobbling up a star flung into reach of its enormous gravity, astronomers said Wednesday.

The event had long been predicted by theory but never confirmed.

A powerful X-ray blast drew the attention of astronomers to the event, located near the center of a galaxy about 700 million light-years from Earth. The international team of astronomers believe gases from the star, heated to multimillion-degree temperatures as they fell toward the black hole near the heart of galaxy RX J1242-11, produced the blast.

Astronomers said a star about the size of our sun neared the black hole after veering off course following a close encounter with another star. The tremendous gravity of the black hole, estimated to have a mass 100 million times that of our sun, then stretched the star to the point of breaking.

Thanks yahoo.com...AP..science and cnn.com

Posted

v_dwarf_diamond_02.jpg

விண்ணியல் ஆய்வாளர்கள் சுமார் 10^ 34 (10 billion trillion trillion) கரட் வலுவுள்ள வைர (டைமண்ட்-Diamond) நட்சத்திரம் ஒன்றை வானில் கண்டு பிடித்துள்ளனர்....!

பூமியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பெரிய வைரத்தின் (டைமனின்) கரட் என்ன தெரியுமா வெறும் 530 மட்டுமே....!

Astronomers have discovered a diamond star weighing 10 billion trillion trillion carats. The cosmic gem is the crystallized carbon core of a white dwarf star.

-----------------

Thanks space.com

:P :twisted:

Posted

தகவலிற்கு நன்றி குருவிகள்

ஆகா அப்ப கடத்தவேண்டியதுதான்

Posted

அதைக் கடத்திறத்துக்கு செய்தி பாத்த உடனவே திட்டம் தீட்டினம்...ஆனா பிறகு சந்தையில வைரம் மண்ணாங்கட்டி விலைக்கெல்லெ வந்திடும் அதால திட்டத்தை கைவிட்டுட்டம்....! :)

எதுவும் அருமையாகக் கிடைச்சாத்தானே கிராக்கி அதிகம்....! :wink:

:P :twisted: :D

Posted

mdf479258.jpg

சர்வதேச விண்வெளி நிலையத்தில்(ஐ எஸ் எஸ் ) இருக்கும் ஒரு அமெரிக்க வீரரும் ஒரு ரஷ்சிய வீரமும் ஐ எஸ் எஸ் யை விட்டு வெளியேறி விண்வெளியில் உலாவரத்திட்டமிட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது...! தற்போது இவர்கள் இருவருமே ஐ எஸ் எஸ் இல் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது....!

எந்த உதவியும் இல்லாமல் இவர்கள் விண்வெளியில் உலாவி விட்டு மீண்டும் நிலையத்தை அடையவுள்ளதாகவும் இதற்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை நாசா பூமியில் இருந்து அளிக்கும் என்றும் தெரிய வருகிறது...!

இந்த விண்வெளி உலாவை செய்ய ரஷ்சிய வீரரே அழைப்பு விடுத்ததாகவும் நாசாவால் அமெரிக்க வீரரின் இணைவு இழுத்தடிக்கப்பட்ட பின் தற்போது நாசா இதற்கு இசைவு தெருவித்துள்ளது....!

உலகில் மனிதனை முதன் முதலில் விண்ணிற்கனுப்பி விண்வெளியில் நடக்க விட்ட நாடு முன்னாள் சோவியத் யூனியன்... தற்போதைய ரஷ்சியாவின் தாய் நிலமாகும்...!

---------------------------------------------

NASA has overcome initial safety concerns and approved a spacewalk that will leave the orbiting International Space Station empty later this week, the U.S. space agency said on February 24, 2004. The two astronauts aboard the station -- one American, the other Russian -- will work outside for several hours with no one inside to help them should a hatch get stuck, communications drop out, or power fail. Astronaut Donald Pettit is seen during a space walk outside the station in this January 15, 2003 file photo. (NASA/Reuters)

Thanks yahoo.com..reuters..science.

:twisted: :P

Posted

_39854694_arianekou_ariane_203long.jpg

பயணத்துக்குத் தயாராக Kourou in French Guiana இல் இருக்கும் உந்துவாகனம்....!

laun.jpg

பத்தாண்டுகள் பயணத்தின் பின் வால்வெள்ளியை அடையத் திட்டமிட்டுள்ள விண்கலம் (Rosetta probe )

ஐரோப்பிய விண்ணாய்வு நிறுவனம் இவ்வாண்டில்( Thursday,26 Feb.2004) இருந்து சுமார் பத்தாண்டுப் பயணத்தின் பின் (அடைய வேண்டிய மொத்ததூரம் 7 பில்லியன் கிலோமீற்றர்கள்....!) வால் வெள்ளி (comet 67P/Churyumov-Gerasimenko) ஒன்றில் தரையிறங்கத்தக்கதாக விண்கலம் (Rosetta probe ) ஒன்றை மிக விரைவில் (at 0736 GMT, Thursday, 26.Feb. 2004) Kourou in French Guiana இருந்து விண்ணிக்கனுப்பத் தயாராகி வருகிறது....!

[url=http://news.bbc.co.uk/1/hi/sci/tech/3514941.stm]மேலதிக தகவல் இங்கே..

Thanks bbc.com

Posted

_39907585_liftoff_esa_203.jpg

_39857952_rosetta_203.gif

Rosetta probe...!(Animated)

rosetta_artists_impression.jpg

Rosetta space probe இன் பயண இலக்கு....!(Animated)

இன்று...Rosetta விண்கலத்தை தாங்கிய உந்துவாகனம் வெற்றிகரமாக தென் அமெரிக்கக் கரையில் இருக்கும் Kourou, French Guiana இல் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டு... வால்நட்சத்திரம் நோக்கிய Rosetta probe ன் 10த்தாண்டுப் பயணமும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது....!

இக்கலம் வால் நட்சத்திரத்தில் நடத்தப் போகும் ஆய்வை வைத்து 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படும் நமது சூரியத் தொகுதியின் தோற்றம் பற்றிய ஆய்வையும் பூமியில் உயிரினினங்கள் தோன்ற ஏதுவாயிருந்த இரசாயன நிலைமைகளையும் கண்டறிய முடியும் என்று நம்பப்படுகிறது...சூரியத் தொகுதிக்குரியதான குறிப்பிட்ட வால் நட்சத்திரத்தில் அதிக இரசாயனப் பொருட்கள் இன்னும் அதிக மாற்றங்கள் இன்றியேதான் காணப்படுவதாக சொல்லப்படுகிறது....!

Thanks..bbc.com...In tamil kuruvikal valippoo...!

Posted

புதியதொரு நட்சத்திர மண்டலம் கண்டுபிடிப்பு!

நாம் வாழும் இப்பூமி இடம்பெற்றுள்ள இந்த சூரிய மண்டலம் உருவான சில நூறு ஆண்டுகளில் உருவாகிய மற்றொரு நட்சத்திர மண்டலத்தை ஸ்வீடன், பிரான்ஸ் விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்!

நமது பூமியில் இருந்து 1323 கோடி ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள அந்த நட்சத்திர மண்டலத்திற்கு ஏபல் 1835161916 என்று பெயர் சூட்டியுள்ளார்கள்.

அதாவது அந்தப் பிரபஞ்சம் உருவான போது வெளிப்பட்ட ஒளி இப்பொழுதுதான் பூமியை அதாவது நமது சூரிய மண்டலத்தை எட்டியுள்ளது என்று ஐரோப்பாவின் மிகப்பெரிய விண்வெளி ஆய்வு அமைப்பான தேசிய விஞ்ஞான ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.

இந்த அமைப்பைச் சேர்ந்த ரோசர் பெல்லோ என்ற விஞ்ஞானி அந்த நட்சத்திர மண்டலத்தின் குழந்தை பருவத்தைத்தான் இப்பொழுது நாம் கண்டுகொண்டிக்கிறோம் என்று அவர் கூறினார்.

விர்கோ நட்சத்திர மண்டலத்திற்கு அருகே இந்த நட்சத்திர மண்டலம் மிகச் சிறியதாக தெரிவதாகவும், அதன் பரப்பு நமது சூரிய மண்டலத்தை விட பத்தில் ஒரு பங்காக மட்டுமே உள்ளது என்று டேனியல் ஷாரஃப் என்பவர் கூறியுள்ளார்.

இதற்கு முன் கடந்த பிப்ரவரி மாதம் நமது பிரபஞ்சத்தில் இருந்து 1,300 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள ஒரு நட்சத்திர மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கும் அப்பால் உள்ள மற்றொரு நட்சத்திர மண்டலம் இப்பொழுது விண்வெளி ஆய்வாளர்களுக்கு புலப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

webulagam.com

  • 3 weeks later...
Posted

mdf507387.jpg

தற்போது ஐ எஸ் எஸ் இல் இருக்கும் வீரர்கள்...!

(Astronaut C. Michael Foale (L) and cosmonaut Alexander Y. Kaleri)

சர்வதேச விண்ணியல் நிலையத்தில் கடந்த ஐப்பசித் திங்கள் 18 முதல் இருந்து வரும் அமெரிக்க மற்றும் ரஷ்சிய விண்வெளி வீரர்கள் (Russian cosmonaut Alexander Kaleri and U.S. commander Michael Foale ) வரும் சித்திரைத் திங்கள் 30ம் திகதி பூமி திரும்பத்தக்க வகையில் ஒரு டச் விண்வெளிவீரரும் தலா ஒரு அமெரிக்க ரஷ்சிய வீரரும் Kuipers-- a Dutch astronaut with the European Space Agency, Mike Fincke of the United States and Gennady Padalka of Russia) என மூன்று பேர் புதிதாக ஐ எஸ் எஸ் யை நோக்கி வரும் சித்திரைத் திங்கள் 19 இல் ரஷ்சிய உந்துவாகனம் ( Soyuz rocket ) மூலம் செலுத்தப்படவுள்ளனர்...இதில் டச் வீரர் சில விஞ்ஞான ஆய்வுகளுக்காகச் செல்கிறார்...!

இந்த ஐ எஸ் எஸ் சுமார் 16 நாடுகளின் நிதி உதவியுடன் இயங்கி வருகிறது...!

Our Thanks to yahoo reuters...!

Posted

capt.mosb11003291129.russia_space_mosb110.jpg

From left: Dutch ESA astronaut Andre Kuipers, American NASA astronaut Michael Fincke and Russian cosmonaut Gennady Padalka

ஐ எஸ் எஸ் க்குச் செல்லவுள்ள புதிய விண்வெளி வீரர்கள்....!

Our thanks to yahoo AP science...!

  • 1 month later...
Posted

வெளியில ஓடிப்போய் பாருங்கள் எல்லோரும். தற்பொழுது சந்திரகிரகணம் ஆகிக்கொண்டிருக்கிறது.

என்ன அருமையான காட்சி.

(தற்பொழுது கிரகணம் நீங்கிக்கொண்டிருக்கிறது)

  • 2 weeks later...
Posted

கடந்த சில வாரங்களாக யாழ்களத்தில் எழுதப்படாத விண்ணியல் மற்றும் அறிவியற் செய்திகளை நீங்கள் http://kuruvikal.blogspot.com/ இங்கு சென்று பார்வையிடலாம்...எதிர்காலத்தி

Posted

ஜூன் 8 ஆம் திகதி வானில் அதிசயம் சூரியனைக் கடக்கிறது வெள்ளிக்கோள்

சுமார் 123 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு வான் நிகழ்வு மறுபடியும். இந்த ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதி நிகழப் போகிறது. வானில் இப்போது, சூரியன் அடிவானத்தில் மறைந்த பிறகு வெள்ளிக்கோள் சில மாதங்களாகவே மிகப்பிரகாசமாகத் தெரிந்து வருகிறது. ஜூன் 8ஆம் திகதி அதாவது சூரியனின் மேற்பரப்பை வெள்ளிக்கோள் கடக்கும். அன்று தொலைநோக்கிகள் மூலம் வெள்ளியின் போக்கை வெள்ளைத் திரையில் பிரதிபலித்துக் காணலாம்.

வெள்ளிக்கோளில் மேற்கில் சூரியன் உதிக்கும். வியப்பாகவுள்ளதா? வெள்ளிக் கோள் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சுழல்வதால், சூரியன் மேற்கில் உதிப்பது போன்று புலப்படும். வெள்ளிக் கோள் விட்டமும் நமது பூமியின் விட்டமும் கிட்டத்தட்ட ஓரளவே ஆகும். நமக்கு ஒரு நாள் என்பது 24 மணி நேரம். ஆனால் வெள்ளிக்கோளுக்கு ஒரு நாள் என்பது 243 நாட்கள். தன்னைத்தானே வெள்ளிக்கோள் சுற்றிவர 243 நாட்கள் பிடிக்கும்.

வெள்ளிக்கோளின் காற்று மண்டலத்தில் கரியமில வாயு 96.5 வீதம் உள்ளது. அதனால்தான் இக்கோளில் தரைவெப்பம் 480 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உள்ளது. சூரியனிடமிருந்து வெள்ளிக்குக் கிடைக்கும் வெப்பம் இவ்வாயுவினால் வெளியேற முடியாமல் போய்விடுகிறது.

ஆகவேதான், சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதனைவிட அதைவிடச் சற்றுத் தொலைவில் உள்ள வெள்ளிக்கோள் அக்கினிக்குண்டமாக உள்ளது. வெள்ளியின் காற்று மண்டலத்தில் மிக அதிக அளவுக்கு கரியமில வாயு மேகக் கூட்டங்களால் சூழப்பட்டுள்ளதால், இதனை தொலைநோக்கி மூலம் வானவியல் அறிஞர்கள் ஆராய்ந்து பார்க்க முடியவில்லை.

ஆயினும், கலிலியோ கலிலி என்பவர் தொலை நோக்கியை வானத்தை நோக்கித் திருப்பினார். அவர்தான் முதன் முதலில் வெள்ளியில் பிறையைக் கண்டவர். என்ன வியப்பு.

வெள்ளிக்கோளும் பிறையாகத் தென்படுவது ஏன்? வெள்ளி தனது மேல்வட்ட சுற்றுப்பாதையில் சுழன்று வருகையில் எப்போதும் சூரியனின் நிலை பூமிக்கு எதிர்த்திசையில் அமைவதால், வெள்ளியின் பிறைமுகம் மட்டுமே புலப்படும்; முழுமுகம் புலப்படாது போகும். ஆனால் கலிலியோ வெள்ளியின் அனைத்துப் பிறை வடிவங்களையும், முழு முகங்களையும் புலப்படுத்தினார்.

பிறகு கோப்பர் நிகஸ் கருத்துப்படி, சூரியன் மையத்தில் இருப்பதால், பூமியிலிருந்து பார்வைக்கு வெள்ளி சில சமயம் இடையிலும் சில சமயம் சூரியனுக்கு அப்பாலும் புலப்படும். சூரியனுக்கு அப்பால் உள்ள நிலைகளில் பூமியை நோக்கி வெள்ளியின் முழு முகமும் சூரிய ஒளியில் ஒளிர்வதால் முழு உருவமும் புலப்படும்.

சூரியனிலிருந்து முதற்கோளாகிய புதன், சூரியனது மேற்பரப்பை 2003 மே 7 ஆம் திகதியன்று கடந்தது. இது மிகத் தெளிவாகத் தெரிந்தது. அதேபோல், சூரியனிலிருந்து இரண்டாவது கோளாகிய வெள்ளிக்கோள், சூரியனது மேற்பரப்பை 2004 ஜூன் மாதம் 8ஆம் திகதி கடந்து செல்லும். பூமிக்கு அருகே வரும். இதனால் வெள்ளிக் கோளின் நிழல் 5 மடங்குகள் அகலமாகவும், புதனின் நிழலை விட 23 மடங்குகள் பெரிதாகவும் இருக்கும். இதுவரையில் இத்தகைய வெள்ளியின் மறைப்பு 1631, 1639, 1761, 1769, 1874 மற்றும் 1882 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தது.

இவ்வாண்டு ஜூன் 8இற்குப் பிறகு வெள்ளிமறைப்பு 2012 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 6ஆம் திகதி நிகழலாம். அதற்குப் பின் 2117 ஆம் ஆண்டில் தான் வெள்ளிமறைப்பு நிகழுமாம். அதாவது ஒவ்வொரு நூற்றாண்டிலும் குறைந்தது இரண்டு வெள்ளி மறைப்புகள் நிகழும் என வானவியலாளர்கள் கூறியுள்ளார்கள்.

மார்ச் மாத கடைசியில், புதன் கோளை மேற்கு அடிவானத்தில் சூரியன் மறைந்தபிறகு பார்க்க முடிந்தது. பிறகு இதற்குமேல் வெள்ளிக்கோள் ஒளிர்ந்து தெரிகிறது. இந்த வெள்ளிக்கோள் மிக ஒளிர்வுடன் சென்ற சில மாதங்களாகவே தெரிந்து கொண்டே வருகிறது.

வெள்ளிக்கோள் மேற்கு வானத்திலிருந்து மேலே சிறிது உயரமாகவே தெரியவருகிறது. சூரியனிடமிருந்து விலகி தன்னுடைய சுயசுதந்திரத்துடன் ஒளிர்ந்து வருகிறது. பிறகு செவ்வாய், சனி மற்றும் வியாழன் கோள்கள் ஒரே பாதையில் தெரிந்து வருகின்றன. இதைக் கோள்களின் படைவரிசை அணிவகுத்து செல்வது என்று கூறுவர். இது ஒரு வாரமாக 2004 மார்ச் கடைசியில் நடந்தேறியது. இந்நிகழ்ச்சி 32 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்கிறது.

இது தொடருமா என்பது கேள்விக்குறியே.

மாதவன்

நன்றி - வீரகேசரி

Posted

செவ்வாய்கிரக ஆராய்ச்சியில் ""ஒப்பர்சுனிட்டி வேகம்

லொஸ் ஏஞ்சல்ஸ்,

செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்டுள்ள பள்ளம் குறித்த ஆராய்ச்சியில் ஒப்பர்சுனிட்டி ஆய்வுக்கலன் ஈடுபட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா இல்லையா, மனிதர்கள் வாழத்தகுதியானதா என்பது குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சிமையம் ஈடுபட்டுள்ளது. இந்த ஆய்விற்கு ஆய்வுக்கலன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஒப்பர்சுனிட்டி ஸ்பிரிட் ஆகிய இரண்டு ஆய்வுக்கலன்கள் தற்போது செவ்வாயில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. செவ்வாயில் இருவேறு திசைகளில் இருந்து இந்த ஆய்வுக்கலன்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. செவ்வாயில் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற தண்ணீர் ஒரு காலத்தில் இருந்ததா என்பதைக்கண்டறியும் ஆராய்ச்சியில் இவை இறங்கியுள்ளன. செவ்வாயில் கடல் இருந்ததற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கடந்த மார்ச் மாதம் நாசா அறிவித்தது. குசேவ் என்ற பள்ளத்தில் ஸ்பிரிட் ஆய்வுக்கலன் ஆராய்ச்சி மேற்கொண்டது.

அங்கிருந்த கற்களில் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்ததற்கான அறிகுறிகள் காணப்பட்டன. இது ஒரு காலத்தில் ஏரியாக இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். தற்போது மற்றொரு பள்ளத்தில் ஒப்பர்சுனிட்டி ஆய்வுக்கலன் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இது தான் கடந்த மார்ச் மாதம் ஈகிள் பள்ளத்தில் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்ததற்கான அறிகுறிகள் கொண்ட கற்களை கண்டறிந்தது. ஒப்பர்சுனிட்டி ஆய்வு மேற்கொள்ளும் பள்ளம் பல அடுக்குகளைக் கொண்டதாக உள்ளது. இப்பள்ளத்தில் பக்கவாட்டு அடுக்குகளில் ஆராய்ச்சி மேற்கொள்ள விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். இங்கு எரிமலைகள் வெடித்து பாறைகளாக படிந்து இருப்பதற்கான அடையாளங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எரிமலை வெடிப்பு மற்றும் பள்ளங்கள் உருவாவதற்கு முன்பு செவ்வாய்கிரகம் என்னவாக இருந்தது என்ற ஆராய்ச்சியில் தற்போது விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். செவ்வாயில் உள்ள ஒரு மலைக்கு கொலம்பியாமலை என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த மலை மீது ஸ்பிரிட் ஆய்வுக்கலன் ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளது. இங்குள்ள கற்களில் ஆராய்ச்சி மேற்கொள்ள விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். ஸ்பிரிட்டில் இருக்கும்சுரியசக்தி பேட்டரிகள் தொடர்ந்து நன்றாக இயங்கிவந்தால் ஜூன் மத்தியில் இந்த மலையை ஸ்பிரிட் ஆய்வுக்கலன் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீரகேசரி

  • 2 weeks later...
Posted

சூரியனை வெள்ளி கடக்கும் காட்சி! நேராக பார்க்கக் கூடாது!

எண்ணற்ற விண் அற்புதங்களை கண்டு வரும் உலக மக்களுக்கு வரும் 8-ந் தேதி மேலும் ஒரு அற்புதம் காத்திருக்கிறது. ஆனால், இதனை கண்ணால் பார்ப்பது பாதகமானது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்!

வரும் செவ்வாய்க்கிழமை அன்று சூரியனை வீனஸ் என்று அழைக்கப்படும் அழகு நட்சத்திரமான வெள்ளி கடக்கிறது.

பூமியில் இருந்து பார்க்கும்போது ஒரு கரும்புள்ளியாக சூரியனின் மேல் பகுதியில் மெல்ல கடந்து செல்லும் இந்த அரியதொரு காட்சி, 6 மணி நேரம் 12 நிமிட நேரம் நீடிக்கிறது.

இதனை சோலார் ஃபில்டர்ஸ் என்று அழைக்கப்படும் சூரிய ஒளியை நன்கு வடிகட்டி கண்ணுக்கு கூசாத வண்ணம் பார்க்கவல்ல புகை பிடித்த கண்ணாடி, பயன்படுத்தாத வண்ண பிலிம், சன் கிளாசஸ், பயன்படுத்தாத கருப்பு வெள்ளை பிலிம், நியூட்ரா டென்சிட்டி பில்டர்ஸ், போலார் ரைசிங் ஃபில்டர்ஸ், எக்ஸ்ரே பிலிம் ஆகியவற்றின் வாயிலாக காணலாம்.

இதுபோன்ற விண் அதிசயம் கடைசியாக எப்பொழுது நடந்தது தெரியுமா? 122 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1882ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந் தேதி நடைபெற்றது. மீண்டும் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வை காண இன்னும் 8 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ந் தேதி மீண்டும் இதேப்போல் வெள்ளி சூரியனை கடக்கிறது.

இத்தகவல்களை ஹரியான மாநில விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பேரவையின் இயக்குனர் வி.எஸ். குண்டு செய்தியாளர்களிடம் கூறினார்.

Webulagam

Posted

_40245883_venus_ifs_203.jpg

சூரியனை வெள்ளி கடக்கும் காட்சி

[flash:8d99f80b27]http://news.bbc.co.uk//nol/shared/spl/hi/sci_nat/04/transit_of_venus/swf/transit_of_venus_203.swf[/flash:8d99f80b27]

Posted

தகவலுக்கு நன்றி கணணி....இது தொடர்பான இன்னும் சில தகவல்களுக்கு....இங்கு நாடிப்பார்க்கவும்... http://kuruvikal.blogspot.com/

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.