Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விண்ணியல் விநோதங்கள்...

Featured Replies

ஓ தவறான கீ அழுத்தப்பட்டு விட்டது... சுட்டிதான் சரி... அக்காவுக்கு தங்கையின் செல்லப் பெயரை அற்ப குருவிகள் தவறாக உச்சரித்த பிடிக்கவில்லைப் போலும்... தவறுக்கு வருந்துகிறோம்...! :P :lol:

சரி சரி. ஆனால் தவறு என்றால் திருத்தியிருக்கலாமே அண்ணா. பிடிக்கவில்லை என்று கூறவில்லையே. எப்படியானாலும் கூப்பிடுங்க அன்பாக. :P :D

  • Replies 419
  • Views 70.6k
  • Created
  • Last Reply

ஓ... உங்களுக்கு அந்த மூலிகையா தேவை... வீட்டுக் கோடிக்க பாருங்க காட்டாயம் நிக்கும்....! :lol: :wink:

இதையும் அந்தக் கண்டுபிடிப்போட சேர்த்துக் கொள்ளுங்கள்... சுட்டி, சிட்டி , சட்டி

:oops: :Dவிட்டால் செட்டி என்றும் கூப்பிடுவீங்க போல :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருக்கலாம் சுட்டியோ சிட்டியோ............. எதுவாகவும் இருக்கலாம்.

அப்படியா அப்ப சரிங்க...! :P

  • தொடங்கியவர்

சிட்டி என்றால் சின்னச் சட்டி... கார்த்திகை தீபத் திருநாளில் சிட்டி கொழுத்தி மகிழ்ந்தது ஒரு காலம்.... வெண்ணிலாக் தங்கை குழந்தையாச்சா அதுதான் சுட்டி என்றோம்...! :wink:

அதுசரி தமிழினி... இதில 2.47பிம் க்கு எழுதின ஒரு கருத்தை ஏன் முற்றாக அகற்றினீர்கள்....அந்தக் கருத்தில் தவறேதும் இருக்கவில்லையே.....! :P :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறகு வந்த கருத்தை பார்த்தோம் அது தேவையில்லை என நீக்கிவிட்டோம்....!

  • தொடங்கியவர்

கீழ் வந்த கருத்துக்களின் அடிப்படையில் நீங்கள் உங்கள் கருத்தை அகற்றியது தவறென்றே எங்களுக்குப் படுகிறது... உங்கள் கருத்து உங்களுக்குச் சொந்தமானது அதை வெளியிடுவதற்கு உங்களுக்கு சுதந்திரம் உண்டு... அதேபோல் வெளியிட்ட கருத்தை வாபஸ் வாங்குவதென்பது உங்கள் தனிப்பட்ட உரிமைக்கு அப்பால் அக்கருத்தின் சாரத்துக்கு உட்பட்டவர்களுக்கும் அக்கருத்துக் குறித்து விளக்கம் கோர உரிமை உண்டு...! அதுமட்டுமன்றி நீங்கள் அந்தக் கருத்தை அகற்றியதன் மூலம் கீழ் வந்த கருத்துக்களின் அடிப்படையில் செல்வாக்குக்கு உட்பட்டு உங்கள் பக்க நியாயத்தை மாற்றிக் கொண்டுவிட்டீர்களா என்பதும் கேள்விக்குறியாகிறதே....??! அதுமட்டுமன்றி மற்றவர்களின் கருத்துக்களுக்காக உங்களின் கருத்தை இழக்க நீங்கள் தயாரா...???! அது உங்கள் பணிவை அன்றி பலவீனத்தையே காட்டுகிறது...! :twisted:

பிறகு வந்த கருத்தை பார்த்தோம் அது தேவையில்லை என நீக்கிவிட்டோம்....!

அப்போ என்னால் தான் உங்கள் கருத்தை நீக்கினீர்கள் என்கிறீர்களா? ஏன் நீக்கினீர்கள்? :oops:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கீழ் வந்த கருத்துக்களின் அடிப்படையில் நீங்கள் உங்கள் கருத்தை அகற்றியது தவறென்றே எங்களுக்குப் படுகிறது... உங்கள் கருத்து உங்களுக்குச் சொந்தமானது அதை வெளியிடுவதற்கு உங்களுக்கு சுதந்திரம் உண்டு... அதேபோல் வெளியிட்ட கருத்தை வாபஸ் வாங்குவதென்பது உங்கள் தனிப்பட்ட உரிமைக்கு அப்பால் அக்கருத்தின் சாரத்துக்கு உட்பட்டவர்களுக்கும் அக்கருத்துக் குறித்து விளக்கம் கோர உரிமை உண்டு...! அதுமட்டுமன்றி நீங்கள் அந்தக் கருத்தை அகற்றியதன் மூலம் கீழ் வந்த கருத்துக்களின் அடிப்படையில் செல்வாக்குக்கு உட்பட்டு உங்கள் பக்க நியாயத்தை மாற்றிக் கொண்டுவிட்டீர்களா என்பதும் கேள்விக்குறியாகிறதே....??! அதுமட்டுமன்றி மற்றவர்களின் கருத்துக்களுக்காக உங்களின் கருத்தை இழக்க நீங்கள் தயாரா...???! அது உங்கள் பணிவை அன்றி பலவீனத்தையே காட்டுகிறது...!

_________________

அந்தக்கருத்து அதில தேவையற்றது என்று எண்ணியதால் அகற்றினம்.. அதால ஆருக்கம் பாதிப்பில்லை என்று எண்ணினமுங்க... தவறு என்றால் வருந்துகிறோம்.. !

  • தொடங்கியவர்

இல்லையே... தமிழினி... அந்தக் கருத்தில் உங்கள் பக்கக் கருத்தை பார்வையைச் சொல்லி இருந்தீர்கள்.. குருவிகள் அக்கருத்துக்கு எழுதிய கருத்துக்கு மேலதிகமா இருந்தது உங்கள் கருத்து... அது உங்கள் கருத்து.. அதை ஏன் நீங்கள் அகற்ற வேண்டும்... அது அங்கு தேவையானதுதான்....தங்கை மீது அக்கா காட்டிய பாசத்தைக் காட்டியதே அக்கருத்து....! :P :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது அங்கு தேவையானதுதான்

நீக்கியதற்காய் வருந்திகிறோம்...! :P

நீக்கியதற்காய் வருந்திகிறோம்...! :P

வருந்துகிறோம் என்கிறீங்கள். ஆனால் சிரிக்கிறீங்கள். எதுவுமே விளங்கவில்லை. :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி ...சரி விடுங்க..ஒரு கருத்து தானே... இனி விண்ணியல் பாப்பம்.....

இதுக்கு கருத்து எழுத வேண்டாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:P

  • தொடங்கியவர்

planet_born.jpg

புதிய கோள் ஒன்றின் உருவாக்கத்தை விளக்கும் படம்... நடசத்திரத்தில் இருந்து உருவாகும் அடிப்படைத் திணிவுடன் மேலும் திணிவுகள் மோதி எழும் தூசுகள் மீண்டும் மீண்டும் படிவதாலும் பல மில்லியன் ஆண்டுகாலம் இத்தொழிற்பாடு தொடர்வதாலும் புதிய பெரிய கோள்கள் உருவாகின்றன என்பதைச் சொல்லும் கணணி விளக்கப்படம்...!

(This animation illustrates a massive collision between rocky, embryonic planets as big as mountain ranges. Such collisions form the basis of the planet-building process. New findings from NASA's Spitzer Space Telescope, released Monday, Oct. 18, 2004, show that these catastrophes continue to occur around stars even. yahoo - AP Science )

For more details... http://kuruvikal.blogspot.com/

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

TLE2004Oct-EDTs.GIF

வடக்கு, தெற்கு அமெரிக்க கண்டப் பகுதிகளிலும் ஐரோப்பாவிலும் ஆபிரிக்காப் பகுதிகளிலும் அண்டாட்டிக்காவிலும் முழு சந்திர கிரகணத்தை 27,28 திகதிகளில் அவதானிக்க கூடியதாக இருந்ததாக செய்திகள் தெருவிக்கின்றன...!

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி நேர்கோட்டில் வரும் போது பூமி தோற்றுவிக்கும் நிழலால் சந்திரன் மறைக்கப்படுதலே சந்திர கிரகணமாகும்...இது பூரணை தினங்களில் ஏற்படும்...!

mdf740952.jpg

சந்திர கிரகணத்தின் போது பூமி தோற்றுவிக்கும் நிழலில் அக நிழல் (the inner shadow or umbra ) பகுதிக்குள் சந்திரன் ஊடுருவும் போது செம்மஞ்சள் நிறமாகத் தோன்றும் காட்சி...!

images from nasa and reuters-yahoo

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

_40548377_deltaswift_boeing_203.jpg

செயற்கைக் கோளுடன் நாசாவின் டெல்டா (delta)உந்துவாகனம் விண்ணிற்குப் பாய்ந்து செல்லும் காட்சி....!

அகிலப் பெரு வெடிப்புக்குப் (big bang) பின்னர் நிகழ்ந்த நட்சத்திர வெடிப்பென்றை மையமாக வைத்து கறுப்போட்டைகள் (black holes) மற்றும் தன்னழிவுக்குள்ளாகும் நட்சத்திரங்களின் வெடிப்பின் விளைவுகள் தொடர்பாகவும் ஆய்வுகளை நடத்த நாசா மற்றும் பிரித்தானிய இத்தாலிய பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் கூட்டிணைந்து ஒரு செயற்கைக் கோளை வடிவமைத்து விண்ணிற்குச் செலுத்தி உள்ளன...!

இச்செயற்கைகோள் நட்சத்திர வெடிப்பின் போதும் தொடர்ந்தும் நிகழும் மாற்றங்களுக்கு (கறுப்போட்டைகள் உருவாக்கத்தின் வாயிலானதும்) ஏற்ப காழற்படும் காமா கதிர்களின் அடிப்படையில் ஆய்வுகளைச் செய்யும் என்று விஞ்ஞானத் தகவல்கள் கூறுகின்றன...!

அகிலத்தின் தொலைவில் நிகழ்வது போன்ற நட்சத்திர வெடிப்பு எமது சூரியத் தொகுதிக்கருகில் நிகழ்ந்தால் வெடிப்பைத் தொடர்ந்து காழல்படும் அதிக சக்தி வாய்ந்த கொஸ்மிக் கதிர்கள் --- காமாக் கதிர்கள்-- பூமிக்குள் ஊடுருவின் பூமிவாழ் உயிரினங்களின் கதி அதோ கதிதான் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்...!

_40539001_blackhole_bbc_203.jpg

அகிலத்தில் அதி சக்தி சுருளை உண்டு பண்ணும் கறுப்போட்டை...!

மேலதிக தகவலுக்கு இங்கு அழுத்துக

images from bbc.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி குருவிகளே .. உங்கள் விஞ்ஞான விண்ணீயல் செய்திகள் மிகவும் பயனுள்ளதாக இருகின்றது. தொடர்ந்து வழங்குங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள்..! :P

  • தொடங்கியவர்

உங்கள் ஆர்வத்தைக்..??! கண்டபின் தான் படிப்பதை எல்லாம் (ஒரு சிலவற்றைத்தான் யாழுக்காகவும் வலைப்பூவிற்காகவும் தமிழில் எழுதுவது) தமிழில் எழுதினால் என்ன என்று தோன்றுகிறது... பிரச்சனை இதுதான்... குருவிகளுக்கு கணணியில் நேரடியாக தமிழில் எழுதத் தெரியாது ஆங்கிலத்தில் எழுதித்தான் தமிழ் ஆக்குவது... அது நேரம் எடுக்கும் செயல்.... அதுதான் பிரச்சனையே....! எது எப்படியோ எம்மால் முடிந்ததை அறிவியலுக்காகவும் செய்வோம்....!

கவிதனுக்கும் தமிழினிக்கும் குருவிகளை உற்சாகப்படுத்தியதற்காக நன்றிகள்....! :P :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவிகளுக்கு கணணியில் நேரடியாக தமிழில் எழுதத் தெரியாது ஆங்கிலத்தில் எழுதித்தான் தமிழ் ஆக்குவது...

ஏன் குருவிகள் keyman keyboard பாமினியுடன் இணைத்து உபயோகப்படுத்தினால் எங்கையும் இலகுவாக தமிழில் தட்டலாமே..?? மேலதிக தகவல்கள் இங்கு இருக்கு உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்

:idea:

www.jaffnalibrary.com/tools

:P

  • தொடங்கியவர்

தகவலுக்கு நன்றி அதுவும் பாவிக்கின்றோம்... எங்கு தட்டினாலும் வேலை ஒன்றுதான்...! :P :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி அதுவும் பாவிக்கின்றோம்... எங்கு தட்டினாலும் வேலை ஒன்றுதான்...! :P :lol:

ம்ம் தட்டி தான் ஆக்கணும்...

இதில் புதிய செய்லிகள் இருக்கின்றது பாருங்கள்

http://www.developer.thamizha.com/ekalappai/

நான் பாவிப்பது இரு தான் இலகுவானது.

  • தொடங்கியவர்

தகவலுக்கு நன்றி கவிதன்...! :P

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

dusty%20ring%20around%20a%20star.jpg

அமெரிக்க விண்ணியல் தொலைநோக்கியான Spitzer Space Telescope பும் விண்ணில் சஞ்சரிக்கும் விண் தொலைநோக்கியான கபிளும் (Hubble Space Telescope) எமது சூரியனைப் போல கோள்களைக் கொண்ட சில நட்சத்திரங்களைச் சுற்றி தூசி வளையங்களை அவதானித்துள்ளதை நாசா (Nasa) அறிவித்துள்ளது...!

இவ்வாறு தோன்றும் தூசி படலங்களே பின்னர் கோள்கள் தோன்ற வழிவகுக்கின்றன என்ற விண்ணியல் கருதுகோள்களை மெய்ப்பிப்பது போல் இவ்வவதானிப்புக்கள் உள்ளன என்றும் இத்தூசி வளையங்கள் முதுமையானது (பில்லியன் வருடங்கள் வயதுடைய) மட்டுமன்றி சில இளமையான (மில்லியன் வருடங்கள் வயதுடைய) நட்சத்திரங்களை சூழவும் அவதானிக்கப்பட்டுள்ளன....!

மேலதிக தகவல் இங்கே...

  • 1 month later...
  • தொடங்கியவர்

laun.jpg

ரைரனில் Huygens கலம் தரையிறங்குவது போன்று வடிவமைக்கப்பட்ட படம்..!

சனிக்கோளின் உபகோளான ரைரனைச் (Titan) சுற்றி வலம் வந்து கொண்டிருக்கும் கசினி (Cassini) எனும் செயற்கைக்கோள் அனுப்பிய Huygens எனும் சிறிய கலம் (Spacecraft) ரைரன் நோக்கிய கடந்த 20 நாட் பயணத்தின் பின்னர் தற்போது அதன் வாயு மண்டலத்தினூடு வெற்றிகரமாகப் பயணித்து ரைரனின் மேற்பரப்பை அடையும் நிலைக்கு எட்டியுள்ளது...!

இது பரசூட்களின் உதவியுடன் ரைரனின் மேற்பரப்பில் இன்னும் சில மணி நேரங்களில் தரையிறங்க உள்ள நிலையிலும் உயிர்ப்புள்ள நிலையில் இருந்து தகவல் சமிக்கைகளை அனுப்பிக் கொண்டிருப்பதாக பூமியில் இதைக் காண்காணிக்கும் நிலையங்களில் உள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்...!

இந்த கலம் எடுக்கும் படங்கள் ஒலிப்பதிவு செய்யும் ஓசைகள் மற்றும் செய்யும் ஆய்வுகள் சனிக்கோள் மற்றும் ரைரன் பற்றிய பல அரிய தகவல்களையும் ரைரனின் மேற்பரப்பு திண்மமா திரவமா என்று அறியவும் உதவி செய்யும் அதேவேளை...அதன் இராசாயனக் கட்டமைப்புக்கள் தொடர்பான விபரங்களையும் தெளிவாக அறிய உதவும் என்றும் பூமி மற்றும் சூரியக் குடும்பம் பற்றிய அரிய தகவல்களைப் பெறவும் உதவும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்...!

மேலதிக விபரம் இங்கு... http://kuruvikal.blogspot.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.