Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக இன்று  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

விண்ணியல் விநோதங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தகவலுக்கு நன்றிகள்.. :P

  • Replies 419
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நன்றி குருவிகளே

Posted

titansurface15zm.jpgtitansurface20km.jpg

ரைரனின் மேற்பரப்பில் காணப்படும் கறுப்புத் திரவ மற்றும் சாம்பல் வர்ண திண்மக் கரையும்...! திண்மக்கரையை அண்டிக் காணப்படும் பாறைத்திட்டுக்களும்..!

சனிக்கோள் மற்றும் அதன் உப கோளான ரைரனை ஆராயச் சென்ற கசினி விண்கலம் அனுப்பிய Huygens எனும் சிறிய கலம் ரைரனின் வளிமண்டலத்தினூடு பயணித்த போது ரைரனின் மேற்பரப்பில் இருந்து 16.2, 8 கிலோமீற்றர்கள் (km) உயரத்தில் இருந்தும் அதன் தரை மேற்பரப்பில் இருந்தும் எடுத்த ரைரனின் மேற்பரப்புத் தோற்றங்கள் பற்றிய படங்கள் பூமிக்குக் கிடைத்துள்ளன...! இவை தவிர ரைரன் பற்றி கிட்டத்தட்ட சுமார் 300 படங்களை இக் கலம் எடுத்து அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது...!

தற்போது பகுப்பாய்வு செய்யப்பட்ட Huygens space probe அனுப்பிய கறுப்பு வெள்ளைப் படங்களின் அடிப்படையில் கறுப்பு நிற திரவப்படையை அண்டிய திண்மக் கரையையும் அங்கு திரவ ஓடைகள் ஓடியதற்கான தோற்றத்தையும் அழுத்தமான பாறைத்திட்டுக்கள் திண்மப் பரப்பில் பரந்திருப்பதையும் விஞ்ஞானிகள் இதுவரை இனங்காட்டியுள்ளனர்...! இந்தப் படங்களும் இன்னும் உள்ள படங்களும் இதர தரவுகளும் மேலும் ஆய்வுக்கு உட்படும் போது ரைரன் பற்றிய மேலும் சுவாரசியத் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கிறார்கள் விண்ணியல் ஆர்வலர்கள்...!

மேலதிக தகவல் இங்கு.. http://kuruvikal.blogspot.com/

Posted

தகவல்களுக்கு நன்றிகள், உங்களுக்கு எப்படி இந்த விண்ணியல் ஆர்வம் வந்தது?

Posted

குருவிகளுக்கு வானம் தானே பொழுது போக்கிடம்..அதுதான் விண்ணியலோட கொஞ்சம் ஆர்வம்..அப்பப்ப அம்பிட்டத வாசிச்சு அறியுறதுதான்...! சின்னனில இருந்தே பொம்பர் கெலி என்று வானத்தை அண்ணாந்தே பார்த்துப் பார்த்துப் பழகிப் போச்சு...அதுவும் தான்...! :P :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

குருவிகளுக்கு வானம் தானே பொழுது போக்கிடம்..அதுதான் விண்ணியலோட கொஞ்சம் ஆர்வம்..அப்பப்ப அம்பிட்டத வாசிச்சு அறியுறதுதான்...! சின்னனில இருந்தே பொம்பர் கெலி என்று வானத்தை அண்ணாந்தே பார்த்துப் பார்த்துப் பழகிப் போச்சு...அதுவும் தான்...! :P :lol:

:(:lol::lol:

Posted

சின்னனில இருந்தே பொம்பர் கெலி என்று வானத்தை அண்ணாந்தே பார்த்துப் பார்த்துப் பழகிப் போச்சு...அதுவும் தான்...! :P :lol:

:( அப்ப இலங்கை தமிழர் முக்காவாசி பேர் விண்ணியல் மன்னர்கள் என்று சொல்றீங்க?

Posted

எங்கள் மக்கள் மன்னர்கள் விண்ணர்கள் தான் அதில் சந்தேகம் இல்லை...! :P :wink: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அதை ஏன் குருவியார் இங்க கீச்சிட மறந்திட்டாரோ..??? :P

Posted

அதை ஏன் குருவியார் இங்க கீச்சிட மறந்திட்டாரோ..???

_________________

அங்க போய் படிக்கிறீங்களா என்று பார்க்கத்தான்.. 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அங்க போய் படிக்கிறீங்களா என்று பார்க்கத்தான்..

ஒ :P

Posted

இதுல என்ன பெரிய மனசு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

விண்ணியல் பகுதிக்குள் இருந்து சினிமா தயாரிப்பு நடக்குது. அதுவும் அதே பகுதி மட்டுறுத்துனரும் சேர்ந்து. கவிதன் மாமா(மந்திரி) சபையை அடக்குறீங்களா? இல்லை மன்னருக்கு அழைப்பு விடட்டுமா? :evil: :D

******************************************

வெண்ணிலாவின் கருத்துக்கு இணங்க..

மிகுதி அங்கத்தவர்கள் மட்டும் பகுதிக்குள் மாற்றப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
:D:(:lol::lol: தட்டிக்கேட்க ஓரு தங்கை இருந்ததால் குருவியின் விண்ணியல் தப்பிச்சுது... இல்லாட்டால் ஒரு வழி பண்ணியிருப்பம்.. :lol::lol:
Posted

விண்ணியல் விநோதத்தைப் பாதுகாத்த தங்கைக்கும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்...!

இத்தோட நிற்காம நீங்கள் அறியும் விண்ணியல் விநோதங்களையும் தாருங்கள்..! குருவிகளுக்கு எனி இவற்றைக் கிரமமாகத் தர வசதி கிடைக்குமோ தெரியாது எனவே யாழ் களத்தின் எதிர்கால நன்மை கருதி...நீங்கள் இந்த உதவியைச் செய்யலாம்...! அதேபோல் குருவிகளின் விஞ்ஞான மற்றும் அறிவியல் செய்தி வலைப்பூவினை பொறுப்பேற்று நடத்த விரும்புபவர்கள் எமது தனிமடலுக்கு உங்கள் விருப்பத்தைத் தெரியப்படுத்தினால் நாம் அதற்கான உதவிகளைச் செய்வோம்...! :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

விஞ்ஞானம் சொல்ல இனி ஒரு விஞ்ஞானியை தேடனுமோ..?? :wink: :mrgreen:

Posted

இதுக்கெல்லாம் விஞ்ஞானிமானிப்பட்டம் வாங்கின விஞ்ஞானி அவசியமில்ல...கொஞ்சம் எழுத வாசிக்க தெரிஞ்சிருந்தாச் சரி...! :wink: :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சரிங்க விஞ்ஞானி :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

என்ன அண்ணா கடமைகளை கைமாத்துகிறீர்கள்....எங்காவது போகப் போறீப்பளோ? :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அண்ணா பிசியாம் அது தான். :mrgreen:

Posted

_40827089_extras_spitz_203.jpg

எமது சூரியக் குடும்பத்துக்கு வெளியே பிரகாசிக்கும் திணிவென்றைச் (pulsar called PSR B1257+12) சுற்றி வரும் நான்காவதும் புதியதுமான ஒரு கிரகத்தை அமெரிக்க விண்ணியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்...!

இந்தக் கிரகம், பூமியில் இருந்து கிட்டத்தட்ட 1500 ஒளியாண்டுகளுக்கு அப்பால் பிரகாசிக்கும் அந்த திணிவை (PSR B1257+12) சுற்றிவருவதாகவும் எமது புளுட்டோ கிரகத்தைப் போல ஐந்தில் ஒரு மடங்கு பருமன் உள்ளதாகவும் இருக்கிறதாம்...! மற்றைய மூன்று புதிய கிரகங்களும் 1992 இல் கண்டுபிடிக்கப்பட்டனவாம்...!

மேலதிக தகவலுக்கு... http://kuruvikal.blogspot.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

விண்ணியல் விநோதத்தைப் பாதுகாத்த தங்கைக்கும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்...!

இத்தோட நிற்காம நீங்கள் அறியும் விண்ணியல் விநோதங்களையும் தாருங்கள்..! குருவிகளுக்கு எனி இவற்றைக் கிரமமாகத் தர வசதி கிடைக்குமோ தெரியாது எனவே யாழ் களத்தின் எதிர்கால நன்மை கருதி...நீங்கள் இந்த உதவியைச் செய்யலாம்...! அதேபோல் குருவிகளின் விஞ்ஞான மற்றும் அறிவியல் செய்தி வலைப்பூவினை பொறுப்பேற்று நடத்த விரும்புபவர்கள் எமது தனிமடலுக்கு உங்கள் விருப்பத்தைத் தெரியப்படுத்தினால் நாம் அதற்கான உதவிகளைச் செய்வோம்...! :idea:

என் விஞ்ஞானி எங்கை போறியள்..... என்னாச்சு..? உங்கள் விஞ்ஞான மற்றும் அறிவியல் குடிலின் RSS இனை தாருங்கள் என் குடிலில் இணைப்போம்.. ..

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.