Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராக்கிங் கொடுமையால் மாணவி பலி.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

suicide.jpgநாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள முள்ளுக்குறிச்சியை சேர்ந்தஜோதி (18), சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி இ.சி.இ. படித்து வந்தார்.நேற்று முன்தினம் ஜோதி தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார். நேற்று காலையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடன் படித்த சக மாணவர்கள் ராக்கிங் செய்து வந்தனர். இதனால் மனவேதனை அடைந்து ஜோதி தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் தனது அண்ணன் தீபக்கிடம் மாணவர்கள் கேலி கிண்டல் செய்து மிரட்டுகிறார்கள் இனி நான் சென்னைக்கு படிக்க செல்லமாட்டேன் என்று கூறி கதறி அழுதுள்ளார்.இது தொடர்பாக ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜோதியிடம் ராக்கிங்கில் ஈடுபட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக தனிப்படை போலீசார் நாளை சென்னை வருகிறார்கள்.

முதலில் ஜோதியின் நெருங்கிய தோழிகளிடம் விசாரணை நடத்தும் போலீசார், ராக்கிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் யார்- யார் என்பது பற்றிய விவரங்களை சேகரிக்கிறார்கள்.இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்துடன் கலந்து பேசவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். ராக்கிங் மாணவர்கள் யார் என்பது தெரிய வந்ததும் அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.http://www.tharavu.com/2010/09/blog-post_7857.html

  • கருத்துக்கள உறவுகள்

அறிமுக விளையாட்டாக ஆரம்பித்த ராகிங் இப்ப ஆளைத் தூக்கிற அளவு மாறிவிட்டது!! :o

தமிழ் மீடியத்தில் பள்ளிப் படிப்பை முடித்தவர் ஜோதி. இதனால் அவரை ஆங்கில மீடியத்தில் படித்த மாணவர்கள் கேலி செய்துள்ளனர். ஜோதிக்கு ஆங்கிலம் சரியாக தெரியவில்லை என்று கூறி கிண்டலடித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த அவர் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தார். அவர் இறப்பதற்கு முன்னால் தன் மூத்த சகோதரன் தீபக்கிடம், தன்னுடன் பயிலும் மாணவர்கள் கேலி செய்வதாகவும், தான் திரும்பி சென்னைக்கு போகப் போவதில்லை என்றும் கண்ணீர் மல்கக் கூறியிருக்கிறார். மாணவி ஜோதி பள்ளிப் பருவம் முதல் படிப்பில் கெட்டிக்காரியாக இருந்துள்ளார். பத்தாம் வகுப்பில் 475 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்திலேயே இரண்டாவதாக வந்த அவர் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1105 மதிப்பெண்கள் எடுத்தார்.

இதையடுத்து அவர் கடந்த மாதம் தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு படிப்பதற்காக சென்னை சென்றுள்ளார். படிக்கச் சென்ற ஒரே மாதத்திலேயே அவர் தற்கொலை செய்து கொண்டது அவர் சொந்த ஊரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

இந்த சம்பவம் குறி்த்து ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

thatstamil.com

Edited by வீணா

  • கருத்துக்கள உறவுகள்

ராகிங் என்பதை மற்றவர்களின் மனதை நோகடிக்காமல் செய்யபட வேண்டும். அதுகும் கிழமைக்கணக்கில் தொடர்வது நல்லதல்ல.

எவ்வளவோ கனவுகளுடன் பல்கலைக்கழகம் சென்ற மாணவியின் உயிர் ராகிங்மூலம் பறிக்கப்ட்டது மனவருத்தமான செய்தி.

இதற்கு மூல காரணமானவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்கச் செய்யதன் மூலம், எதிர்காலத்தில் இப்படியான சம்பவங்களை குறைக்க முடியும்.

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த சகோதரியின் இழப்பால் வருந்தும் அவர்களது குடும்பத்திற்கும் ஏனையோருக்கும் எனது இரங்கல்களையும் தெரிவித்து, அவருக்காக பிராத்திப்போம்.

இதே போல் ஒரு நிகழ்வு அண்மையில் யாழ் மருத்துவ பீடத்திலும் நடந்தது. ( ஒன்ருமேற்பட்ட தற்கொலைகள்.. இது மிக அண்மையானது 2 மாதத்திர்ற்கு குறைவு..தமிழ்நெட் இல் வாசித்தேன். facebook இலும் ஒருவர் இருவர் பதிந்திருந்தார்கள். யாரும் ஒன்றும் எழுதவில்லை..facebook இல் இதற்கு முந்ததையதிர்ற்கு பலர் பலவித கருத்துக்கள் எழுதியிருந்தார்கள். இப்போது இவை ஒரு செய்தியாக வருவதுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. யாழில் நடப்பவதர்ற்கு பலவித புறக்காரணிகள் இருந்தாலும், கல்வி ரீதியான மன அழுத்தமும் ஒரு காரணமாகும்..(தமிழ்நெட் செய்தியில் அப்படித்தான் போட்டிருந்தது, ஆனால் அதற்க்கு பிறகும் எனது நண்பர்களுடன் கதைத்திருக்கிறேன், நானும் கேட்டக மறந்து போய்விட்டேன், யாரும் சொல்லவும் இல்லை..)

கல்வியால் வரும் அழுத்ததிற்கு நான் நினைக்கிற காரணம் பெயில் விட பயப்பிடுகிறது. பெயில் விடுவன் என்கிற பயமே முளுப்பிரச்சனைக்கும் காரணம். தோல்வியடந்தவர்களை சமூகம் கணிக்கிற வகையில் மாற்றம் ஏறபாடாத வகையில் இத்தகைய மன அழுத்தங்களும் அதனோடு இணைந்த பிரச்சனைகளும் தொடந்து இருக்கும். போட்டியில் வென்றவன் வீரன், தீரன், ஆனால் தோற்றவன் எதற்கும் உதவாதவன் அல்ல என்ற மனப்பாங்கு வரவேண்டும்.

எனக்கு தெரிந்த ஒருவர் யாழில் ருசன் இல் ஒன்றாக படித்தவர், கனகாலத்துக்கு பின்பு, USA இல் சந்தித்தேன், 1 வயசு குறைவு, அண்ணை என்றுதான் சொல்லுறவர், அறிமுகத்திர்ற்கு பிறகு என்ன செய்கிறீகள் என்று கேட்டபோது, சொன்னார், "அண்ணை நாங்கள் யாழ்பாணத்தில மொக்கர் அண்ணை, இஞ்ச வந்து இப்ப எதோ (மறந்து போனேன் ) படித்து இப்ப கம்பெனி MBA படிப்பிரங்கள்," இப்ப ஆள் நல்ல செட்டில் பண்நீர்றார். அப்படி இருந்தும் அவரது மனதில, ஊரில ஏற்பட்ட வடு மாறாமல் இருக்கு. இத்தகைய நிலை வராமல் தடுக்க வேண்டும்.

மற்றது எங்கட ஊரில இருக்கிற இன்னுமொரு பிரச்சனை, படிக்கிறது எண்டால் எப்பவும் முதலாவதையும், வயதை விடாமலும் படிக்க வேண்டும்..ஆரும் ஒருவருடம் வருத்ததாலே பிந்தி வந்தாலும் , உடன அண்ணை/ அக்கா போட்டு வித்தியாச படுத்துகிறது..(நான் பார்த்திருக்கிறேன் பெண்களில் கூட)

எனக்கு இதைபற்றி அறிவு/தெளிவு வந்தது இங்கே வந்ததுக்கு பிறகுதான், நான் அழுகிறது, என்னைவிட 4 அல்லது 5 வருடம் முந்தி வந்தவங்கள் நல்ல இருக்கையில் நான் அன்னக்காவடி போல் இருக்கிறேன் என்று. ஆனால் பிறகு இந்த குடிவரவு திணைக்களத்தில சில வேலைகளுக்கு போகும் போதுதான் தெரியும், நான் பரவாயில்லை, என்னைவிடவும் வயதை வாழ்வை இழந்த பலர் உண்டென.

இதை தெரிந்தவர்களுக்கும் சொல்லுங்கள் ..எனக்கு தெரிய இதனால் பாதிக்கபட்ட ஆட்கள் கனடாவில் உள்ளார்கள். அப்படியான நேரத்தில் எனது நண்பிஒருவர் எனக்கு சொன்னது "கனடாவில் எவ்வளவு வெற்றிகரமாக வாழுகிறோம் என்பது நாங்கள் இங்கே இருக்கும்/ இருந்த காலத்திர்ற்கு நேர்விகிதமானது"

எதோ சொல்லவந்து எங்கோ போய்விட்டது...

இத்தகைய இறப்புக்கள் தவிர்க்கப்பட வேண்டும், அதற்குரிய சமூக கட்டமைப்பை உருவாக்க அனைவரும் முயல வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலைத்தேய நாடுகளில் இந்த ராக்கிங் இருக்கிறதா?

ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளில் படித்தவர்கள் சொல்லுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மீடியத்தில் பள்ளிப் படிப்பை முடித்தவர் ஜோதி. இதனால் அவரை ஆங்கில மீடியத்தில் படித்த மாணவர்கள் கேலி செய்துள்ளனர். ஜோதிக்கு ஆங்கிலம் சரியாக தெரியவில்லை என்று கூறி கிண்டலடித்துள்ளனர்.

செம்மொழி விழா வைத்த ஆட்சியில், அம்மொழியைப் படித்ததினால் அம்மாணவி கிண்டலுக்குள்ளாகியுள்ளார்.

கீழ்தர தமிழ் சினிமாக்களின் விளைவுகளில் இதுவும் ஒன்றாக கருதப்படலாம்.

.... நட்புக்கு கல்லூரி ராக்கிங் கூட பாதை வகுக்கும் .... என்ற மாதிரி ஒரு பாடலும் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.