Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கரடி விடுவது யார்? முருக பூபதியா அல்லது சிவத்தம்பியா??!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கரடி விடுவது யார்? முருக பூபதியா அல்லது சிவத்தம்பியா??!!!

வருகிற தை மாதம் கொழும்பில் நடக்கவிருக்கும் சர்வதேச எழுத்தாளர் மாநாடு பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். இந்த மாநாட்டை முன்னின்று நடத்தும் அவுஸ்த்திரேலியா வாழ் தமிழ் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள், இந்த மாநாடு சில தனிப்பட்ட நபர்களால் நடத்தப்படப்போகும் நிகழ்வு அல்ல, மாறாக உலகத் தமிழ் எழுத்தாள்ர் அனைவராலும் ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்வு என்று காட்டுவதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறார். இதற்காக தான் தற்போதுஅ டிக்கடி எழுதிவரும் வேண்டுகோள் மடல்களில் சில பிரபலங்களின் பெயர்களையும் இணைக்கத் தவறுவதில்லை. ஆவ்வாறு முருகபூபதி அண்மையில் தனது கெஞ்சல்க் கடிதத்தில் இணைத்துக்கொண்ட ஒரு பிரபலம்தான் பேராசிரியர் சிவத்தம்பி. அண்மையில் தான் எழுதிய கடிதத்தில் தானும், பேராசிரியர் சிவத்தம்பியும் இந்த மாநாட்டை இலங்கையில் நடத்த தம்மாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருவதாகவும், தனது அனைத்து முயற்சிகளுக்கும் பேராசிரியர் சிவத்தம்பி பேருதவி புரிந்து வருவதாகவும் எழுதியிருந்தார்.

ஆனால் இப்போது பிரச்சனை என்னவென்றால், கடந்த வாரம் ஞாயிறு தினக்குரல் பத்திரிக்கையில் பேட்டியளித்த சிவத்தம்பி தனக்கும் இந்த எழுத்தாளர் மாநாட்டுக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென்று திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். அதில் அவர் தன்னை அவுஸ்த்திரேலியாவிலிருக்கும் ஒரு நண்பர் தொடர்புகொண்டு இந்த நிகழ்வு பற்றி முதன்முதலில் கூறியதாகவும், ஆனால் தான் அவரிடம் இவ்வாறான மாநாடு ஒன்றை கொழும்பில் இன்று நடத்துவது சரியில்லை என்று கூறியதாகவும் கூறியிருக்கிறார்.

தனக்கும் இந்த மாநாட்டுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்றும், இதற்கான ஏற்பாடுகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

ஆக இதில் யார் சொல்வது உண்மை?? யாரோ ஒருவரால் ஏவப்பட்டு மாநாடு நடத்தத் துடிக்கும் முருகபூபதி சொல்வது உண்மையா அல்லது சிவத்தம்பி சொல்வது உண்மையா??

Sivathamby denies involvement in Tamil writers conference

[TamilNet, Tuesday, 07 September 2010, 02:19 GMT]

Veteran Eezham Tamil scholar Professor Karthigesu Sivathamby, Emeritus Professor of Tamil of the University of Jaffna, Sunday denied a report that he had been in the forefront in organizing the so-called 'World Tamil Writers Conference' in Colombo scheduled for January next year. His denial was carried in the Sunday edition of a leading Tamil weekly, Thinakkural, published from Colombo.

Prof. Sivathamby said he had once been contacted by a friend from Australia over the proposed 'International Tamil Writers Conference 'in Colombo scheduled for January next year.

“But I explained to him that the present situation in Sri Lanka is not conducive to hold such conference in Colombo. Therefore, I deny reports involving me in such conference as I am unaware of anything about it,” Sivathamby said according to Thinakkural.

Edited by ragunathan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எவருக்காவது அத்தாட்சி தேவையென்றால் கடந்த ஞாயிறு தினக்குரல் பத்திரிக்கையை இணையத்தளத்தில் படித்தால் அறி :wub: ந்துகொள்ள முடியும்.

ஊடகங்களுக்கான அறிக்கை எனும் தலைப்பில் முருகபூபதி அவர்களிடம் இருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:

கலை, இலக்கிய ஊடகத்துறையில் அறிந்ததை பகிர்தல் அறியாததை அறிந்துகொள்ள முயல்தல் என்ற அடிப்படை நோக்கத்துடன் இந்த மகாநாடு கடந்த சிலவருடங்களாகவே ஆலோசிக்கப்பட்டது எனவும் இதுதொடர்பான விரிவான ஆலோசனைக்கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் திகதி கொழும்பில் தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடந்தது எனவும் இக்கூட்டத்தில் தகைமைசார் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துக்கூறியதுடன் மகாநாடு எவ்வாறு அமையவேண்டும் எனவும் பல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார் எனவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகிழில் தேடல் செய்தபோது சிவத்தம்பி அவர்கள் குறிப்பிட்ட ஆலோசனைக்கூட்டத்தில் பங்குபற்றியுள்ளார் என்பதை சித்தன் எனும் உறவு மூலம் மின்தமிழ் எனப்படுகின்ற கூகிழ் குழுமத்தில் Feb 11, 2:08 am, 2010 அன்று பிரசுரம் செய்யப்பட்ட கீழ்வரும் பதிவு உறுதி செய்கின்றது:

கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடந்த 'சர்வதேச எழுத்தாளர் ஒன்றுகூடலுக்கான' ஆலோசனைக்கூட்டத்தில் சுமார் 120 பேர் கலந்துகொண்டார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால், எவருக்குமே அழைப்பிதழ் அச்சிட்டு அனுப்பி அவர்கள் வரவில்லை. தொலைபேசி அழைப்பையும் பத்திரிகைகளில் வெளியான செய்திகளையும் பார்த்துவிட்டு வந்தவர்கள்தான் அவர்கள். கூட்டத்திற்கு புறப்படும் தருவாயில் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை எனது நேர்காணலை தொலைபேசி ஊடாக நேரடியாக ஒலிபரப்பியது. பேராசிரியர் கா.சிவத்தம்பி தமது உடல்நலக்குறைபாட்டையும் பொருட்படுத்தாமல் கலந்துகொண்டதுடன் அரிய சில ஆலோசனைகளையும் தெரிவித்தார்.

தகவல் மூலம்: மின்தமிழ்

கரடி விடுவது தமிழ்நெட்டாகவும் இருக்கலாம். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம்-தமிழறிஞர் கா சிவத்தம்பி வேண்டுகோள்

Submitted by editor on Mon, 09/06/2010 - 03:07

இலங்கையில் நடக்கவிருக்கும் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று தமிழறிஞர் கா சிவத்தம்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பில் வருகிற டிசம்பர் மாதம் கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இலங்கை தமிழர் முருகபூபதி என்பவர் இந்த எழுத்தாளர் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த மாநாட்டை கொழும்பில் நடத்துவதற்கு இலங்கை தமிழறிஞர் கார்த்திகேசு சிவதம்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் இந்த மாநாட்டுக்கு சிவத்தம்பி ஆதரவாக இருந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது இந்த மாநாட்டுக்கு சிவத்தம்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முருகபூபதிக்கு சிவதம்பி விடுத்துள்ள வேண்டுகோளில், “உலக தமிழ் எழுத்தாளர் மாநாட்டை இலங்கையில் வைத்து நடத்த இது உகந்த நேரம் அல்ல என்று கூறியுள்ளார். இந்த மாநாட்டுக்கு இலங்கை அரசு அரசியல் சாயம் பூச முயற்சிக்கிறது. அது மாநாட்டை பிரச்சினைக்குரியதாக்கிவிடும் என்று சிவத்தம்பி கூறியுள்ளார்.

தமிழ் எழுத்தாளர் மாநாட்டை இலங்கையில் நடத்து வதை விட சென்னையில் நடத்தினால் சிறப்பாக இருக்கும். எல்லோரும் ஒன்று கூட வசதியாக இருக்கும். பிரச்சினைகளை சுதந்திரமாக விவாதிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களும், கலைஞர்களும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இது போர் குற்றங்களை மூடி மறைக்க நடக்கும் முயற்சியாக அமைந்து விடும் என்று கூறியிருந்தனர். எனவே மாநாட்டை அங்கு நடத்தக் கூடாது என்றும் மீறி நடத்தினால் நாங்கள் மாநாட்டை புறக்கணிப்போம் என்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தெரிவித்திருந்தனர்.

ஏற்கனவே தமிழ் நாட்டு கலைஞர்கள் இலங்கையில் அரசு ஆதரவுடன் நடைபெறும் எந்த நிகழ்ச்சியையும் புறக்கணிப்போம் என்று அறிவித்து இருந்தனர். தனிப்பட்ட முறையில் நடத்தும் மாநாட்டுக்கு அழைப்பு அனுப்பினால் இலங்கை சென்று கலந்து கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர்.

தமிழ் இசைக் கலைஞர் சீர்காழி சிவ சிதம்பரம் ஏற்கெனவே வீரகேசரி பத்திரிகையின் நிகழ்ச்சியில் பங்கேற்க இலங்கை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது

http://www.tamilsaral.com/news%3Fid%3D5006.do

இருவரும் கரடி விடுகின்றனர்.

செம்மொழி மகாநாட்டில் சிவத்தம்பியின் பித்தலாட்டங்கள் வெளிவந்தன.

  • கருத்துக்கள உறவுகள்

சிவத்தம்பிக்கு இந்தியா(றோ) ஆதரவு இருக்கிறது.

முருகபூபதியின் கூட்டாளிகளான நடேசன், இராஜேஸ்வரிக்கு சிறிலங்கா( மகிந்தா, சந்திரிகா,......) ஆதரவு இருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:wub: மாப்பு,

தமிழ்நெட்டை விடுங்கோ, தினக்குரலைப் பாருங்கோ. உண்மை விளங்கும். தினக்குரலும் பொய் சொல்லுது எண்டு சொல்ல மாட்டீங்கள் தானே??

அப்படியும் நம்பிக்கை இல்லையெண்டால், வேறும் ஏதாச்சும் பத்திரிக்கையில் உந்தச் செய்தி வந்திருக்குதோ எண்டு பாத்துச் சொல்லுறன். உங்களுக்காக எவ்வளவோ எல்லாம் கஷ்ட்டப்பட வேண்டிக் கிடக்குது !!!!!

தமிழ்நெட் ஓர் பொறுப்பான ஊடகம் என்றால் சிவத்தம்பியை நேர்காணல் செய்யலாமே? தமிழ்நெட் நேர்காணல் செய்யக்கூடிய நிலையில் சிவத்தம்பி அவரகள் இல்லையா அல்லது சிவத்தம்பி அவர்களை நேர்காணல் செய்யக்கூடிய நிலையில் தமிழ்நெட் இல்லையா? :wub:

தினக்க்குரலில் வெளிவந்த முழுமையான செய்தியை பார்த்தாலே செய்தி எவ்வாறு திரிவுபடுத்தப்பட்டுள்ளது என்பதை அறியமுடியும். சில வரிகளில் தமிழ்நெட் வலைத்தளத்தில் கூறப்பட்டுள்ள மொழிபெயர்ப்பை வைத்து சிவத்தம்பி அவர்களின் கருத்தை அறியமுடியாது. கடந்த ஜனவரி மாதம் கொழும்பில் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தான் கலந்துகொள்ளவில்லை என்று தினக்குரலில் சிவத்தம்பி அவர்கள் மறுப்பு கூறியுள்ளாரா? :unsure:

முருகபூபதி அவர்கள் கடந்த ஜனவரியில் நடைபெற்ற கூட்டத்தில் சிவத்தம்பி அவர்கள் கலந்து வாழ்த்துக்கூறினார் என்றுதானே அறிக்கையில் கூறியுள்ளார். அண்மைக்காலத்தில் சிவத்தம்பி எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டிருந்தார் என்பது பற்றி எதுவும் கூறவில்லையே!

முறையான ஊடகமாயின் தமது கைக்கணக்கிற்கு செய்திகளை திரிவுபடுத்தாமல் உள்ளதை உள்ளபடி கூறவேண்டும். :blink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.