Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அன்பிற்குரிய தமிழ் பேசும் மக்களே - கா. பிரேம்ரெஜி (ரெஜி)

Featured Replies

அன்பிற்குரிய தமிழ் பேசும் மக்களே,

வணக்கம்

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் போராட்டத்துடன் சேர்ந்து வேலை செய்தவர்கள், போராட்ட கட்டமைப்புக்கள், இன்னும் பல்வேறு தமிழர் அமைப்புக்கள், தனி நபர்கள் தம் பாட்டில் தமக்குத் தெரிந்த வகையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க ஜனநாயகம், கருத்து சுதந்திரம் என்ற பேரில் பிரச்சினைகளை ஆராயாமல் சில அமைப்புக்கள், ஊடகங்கள்,தனி நபர்கள் தம்பாட்டில் விளக்கம் கொடுத்து, அதனை சமூகத்தில் திணித்தும் வருகின்றனர்.

கூடுதலாக பக்கச்சார்புகள், தன்நிலை வாதப் பிரதிவாதங்கள், குற்றச்சாட்டுக்கள், முறைப்பாடுகள் முகம் தெரியாதவர்களினால், அனாமதேயமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மையில் என் சார்ந்த விடயங்களும் அப்படியே.

நான் எந்தவொரு கட்டத்திலும் சிங்கள அரசின் அல்லது அன்னிய சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படவில்லை அவ்வாறான தேவை எனக்கு இல்லை. அதே நேரம் பொது மக்களின் தேவை கருதி பல நாடுகளுடன் பல உதவி அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேண வேண்டிய சூழல் என்னைப் பொறுத்தவரை உள்ளது.

எமது போராட்டம், மாவீரர்களின் தியாகங்கள் எமக்கான பாதையினை, கடமையினை தெளிவாகக் காட்டியுள்ளன. வரலாறு நல்ல பாடங்களைக் கற்றுக்கொடுத்து வருகின்றது.

அந்த வகையில் நான் தமிழர் தலைமைக்குப் பதில் கூறும் வகையிலும், தமிழ் பேசும் பொது மக்களினால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கும் ஏன் பொதுமக்களுக்கும் கூட பதில் கூறும் வகையிலேயே என் செயற்பாடுகள் இருக்கும்.

என் சார்ந்த கருத்துக்களை ஒரு தலைப்பட்சமாக எழுதுவோர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் நான் கூறுவது என்னவெனில் இணையத் தளங்களில் என் சார்ந்த செய்திகளை வெளியிட்டும் பின்னர் அதற்கு நான் பதில் அளிப்பதும் போதுமானதல்ல. பிரச்சினகளை நியாயபூர்வமாகவும் வெளிப்படையாகவும் அணுகவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆகவே பொதுமக்களால் அல்லது தற்போது புலம்பெயர் தேசங்களில் இருக்கின்ற மக்கள் கட்டமைப்புக்களான மக்கள் பேரவை, நாடுகடந்த அரசாங்கம், புத்திஜீவிகள், உலகத் தமிழர் பேரவை, அமைப்பு செயற்பாட்டாளர்கள், புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்கள், ஊடக அமைப்புக்கள் மற்றும் மாற்றுக் கருத்துக்கள், கொள்கைகள் கொண்ட அமைப்புக்கள் எல்லோரும் சேர்ந்து ஓர் விசாரணைக்குழுவை அமையுங்கள்.

இவ்வாறு அமைக்கப்படும் குழு என்னை வெளிப்படையாக கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் விசாரிக்கட்டும். நான் முழு அளவில் இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவேன். விசாரணைகளின் முடிவில் தவறுகள் இருந்தால் நான் பகிரங்கமாகப் பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்பேன். அல்லது அதற்கான தண்டனைகளை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அது எத்தகைய தண்டனையாக இருந்தாலும் நான் ஏற்றுக்கொள்வேன்.

நான் எந்தவொரு கட்டத்திலும் ஓடி ஒழியப்போவதும் இல்லை. அல்லது தவறுகளை மறைப்பதற்காகவோ என்னை காப்பாற்றிக் கொள்வதற்காகவோ எம் இலட்சியத்திற்கு எதிராக செயற்படும் சக்திகளிடம் ஓடிவிடப்போவதும் இல்லை.

இந்த விசாரணைக்குழு எம் சமுதாயத்தில் பொது வேலைகளில் ஈடுபடுவோர்க்கு ஓர் முன்னுதாரணமாகவும் இருக்கும். தயவு செய்து இதனை செய்யுங்கள். நான் எம் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கும், எம் மக்கள் சமூகத்திற்கும் சொந்தமானவனே தவிர என் குடும்பத்தாருக்கு சொந்தமானவன் அல்ல. ஆகவே எம் சமூகத்திற்கு என்னை விசாரிக்கவும் தண்டனை வழங்கவும் உரிமையும் கடமையும் உண்டு. இது என் வாக்கு மூலம். இதனைச் சட்ட ரீதியாக எனது சட்டவாளர் ஊடாகவும் மெய்ப்பித்து நான் விரைவில் பொதுமக்களிடம் ஒப்புவிப்பேன்.

நன்றி வணக்கம்

ஒப்பம்

கா. பிரேம்ரெஜி (ரெஜி)

regi.itro@gmail.com

(நண்பர் ஒருவரின் வேண்டுதலின் பேரில் யாழில், இதை இணைக்கிறேன்)

தடை செய்யமுதல் காசுகளை மூ பண்ணாம இருந்ததுல எத்தினை கோடி பறிக்கப்பட்ட்துங்கோ?...

என்ன காரணம்? அக்கறையின்மையா அல்லது வேறேதுமா?

  • தொடங்கியவர்

ரெஜி தொடர்பாக, இங்கு மிக திட்டமிட்டு வதந்திகளை பரப்பியவர்களில் முன்னணியில் நிற்பவர்கள் ... தேசம்நெற் ஜெயபாலன், லிட்டிலெயிட் கொன்ஸன்ரைன், மற்றும் யாழ்கள பாண்டு007ம் அவர் சார்ந்த கேபி கும்பலுமே! இன்று இவர்களை தூண்டி இக்காரியத்தை கச்சிதமாக செய்விப்பது புத்தம் புதிய தலைவர் கேபியே!!!!!!

இவர்களின் வதந்திகளை நம்பியவர்களில் நானும் ஒருவன்.

கடந்த காலங்களில் பாண்டு007இன் தகவல்களின்படி ... ரெஜி தென்னாபிரிக்காவிற்கு தப்பி ஓடி செற்றில் பண்ணப்போகிறார், கன காசு அவர் வசமேதான்! ... என்று பல பல!!! ... சில நாட்களுக்கு முன்னுக்கு ஒரு கிறிக்கெட் விளையாட்டு போட்டியில் பாண்டரையும், அவரின் ஈபிடிபி நண்பரையும் கண்டேன். அப்போது கதைத்துக் கொண்டு போகும்போது பாண்டர் சொன்னார், நான் இன்றும் அந்த ஆளுடன்(கேபி) கதைத்தனானடாப்பா, அவர் அடித்துச் சொல்கிறார் வெளிநாட்டு பணம் பூராக ரெஜியின் கையில் தானென்று!!! ... பாண்டண்ணையும் மறுக்க மாட்டார்!!!! ... இப்படி கேபியின் திட்டமிடல்களுடன் பாண்டர்கள் புலத்தில்!!!!!!!

ஆனால் ரெஜி போன்றவர்கள், மே18 அவலம் முடிந்து, ஏறக்குறைய ஒரு வருடங்களாக அம்மக்களுக்கு என்னத்தை செய்தார்கள் என்ற கேள்வி தொங்கியுள்ளது!!! சரி உங்களிடம் பணம் கையில் இல்லை என்றாலும், வேறேது வழியிலேனும் நீங்கள் மக்களின் அவலத்தில் பங்கு கொள்ளவில்லை என்ற கோபம் பலரிடம்!! நீங்கள் பகிரங்கமாக செய்ய இயலாது என்ற உண்மையை நாம் புரியத்தான் வேண்டும், அதற்கு ஏதாவது மாற்றீடு நீங்கள் கண்டு பிடித்து உதவி இருக்க வேண்டும்!!! ... இவைகள் காலத்தே நடந்திருந்தால் ... இன்று இந்த கேபியர்களின் ஓநாய் அழுகைகள் மக்கள் மத்தியில் எடுபட்டிருக்காது!!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்காக சேவை செய்ய வெளிக்கிட்ட ரெஜி மக்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்.இல்லாவிட்டால் இடையில் உள்ளவர்கள் புகுந்து விளையாடுவார்கள்.

Edited by nunavilan

ரெஜி தொடர்பாக, இங்கு மிக திட்டமிட்டு வதந்திகளை பரப்பியவர்களில் முன்னணியில் நிற்பவர்கள் ... தேசம்நெற் ஜெயபாலன், லிட்டிலெயிட் கொன்ஸன்ரைன், மற்றும் யாழ்கள பாண்டு007ம் அவர் சார்ந்த கேபி கும்பலுமே! இன்று இவர்களை தூண்டி இக்காரியத்தை கச்சிதமாக செய்விப்பது புத்தம் புதிய தலைவர் கேபியே!!!!!!

இவர்களின் வதந்திகளை நம்பியவர்களில் நானும் ஒருவன்.

கடந்த காலங்களில் பாண்டு007இன் தகவல்களின்படி ... ரெஜி தென்னாபிரிக்காவிற்கு தப்பி ஓடி செற்றில் பண்ணப்போகிறார், கன காசு அவர் வசமேதான்! ... என்று பல பல!!! ... சில நாட்களுக்கு முன்னுக்கு ஒரு கிறிக்கெட் விளையாட்டு போட்டியில் பாண்டரையும், அவரின் ஈபிடிபி நண்பரையும் கண்டேன். அப்போது கதைத்துக் கொண்டு போகும்போது பாண்டர் சொன்னார், நான் இன்றும் அந்த ஆளுடன்(கேபி) கதைத்தனானடாப்பா, அவர் அடித்துச் சொல்கிறார் வெளிநாட்டு பணம் பூராக ரெஜியின் கையில் தானென்று!!! ... பாண்டண்ணையும் மறுக்க மாட்டார்!!!! ... இப்படி கேபியின் திட்டமிடல்களுடன் பாண்டர்கள் புலத்தில்!!!!!!!

ஆனால் ரெஜி போன்றவர்கள், மே18 அவலம் முடிந்து, ஏறக்குறைய ஒரு வருடங்களாக அம்மக்களுக்கு என்னத்தை செய்தார்கள் என்ற கேள்வி தொங்கியுள்ளது!!! சரி உங்களிடம் பணம் கையில் இல்லை என்றாலும், வேறேது வழியிலேனும் நீங்கள் மக்களின் அவலத்தில் பங்கு கொள்ளவில்லை என்ற கோபம் பலரிடம்!! நீங்கள் பகிரங்கமாக செய்ய இயலாது என்ற உண்மையை நாம் புரியத்தான் வேண்டும், அதற்கு ஏதாவது மாற்றீடு நீங்கள் கண்டு பிடித்து உதவி இருக்க வேண்டும்!!! ... இவைகள் காலத்தே நடந்திருந்தால் ... இன்று இந்த கேபியர்களின் ஓநாய் அழுகைகள் மக்கள் மத்தியில் எடுபட்டிருக்காது!!!!

நெல்லையான் அண்ணர் அவர்கட்கு,

ரெஜி அவர்கள் முள்ளிவாய்க்கால் நடந்ததில் இருந்து சிறு அளவும் அமைதியாக இருக்கவும் இல்லை பணி செய்யாமல் இருக்கவும் இல்லை. நூற்றுக்கனக்கான போராளிகளை ஆரம்பித்திலேயே எடுத்து விட்டிருக்கின்றார்.

பலரை பல நாடுகளுக்கு தன்னை பொறுப்பாக வைத்து முகவர்கள் ஊடாக எடுத்து விட்டிருக்கின்றார் போராளிகள் உட்பட (வெளி நாட்டிற்கு வந்து உழைத்து கொடுக்குமாறு கூறியே இவை நடந்துள்ளன. ஆனால் வந்தவர்கள் இப்போ கனபேர் காலை வாரியது வேறு விடையம்.)

முகாமில் இருந்த பல பொதுமக்களை (இயக்க ஆதரவான குடும்பங்களை) எடுத்து விட்டிருக்கின்றார். இதில் திருமாஸ்ரரை எடுத்து விடுவதற்கான நிதி உதவிகளை கூட இவர்தான் செய்தார்.

போர்குற்றத்திற்கான சாட்சிகளை முகாமில் இருந்து எடுத்து பல நாடுகளுக்கு அனுப்பியுள்ளார். அவர்களின் வாக்கு மூலம் பல ஊடகங்களில் வந்துள்ளன.

பல மேற்கத்தைய ஊடகவியலாளர்களை விமான ரிக்கற் கொடுத்து கொழும்பு வவுனியா ஆகிய இடங்களுக்கு அனுப்பி போர்குற்றத்திற்கான பதிவு வேலைகளை செய்வித்தார். நீங்கள் டிவியில் முகத்தை மூடியபடி பலர் வாக்குமூலம் கொடுத்ததை பார்த்திருப்பீர்கள் ஆனால் அதன் உழைப்பை உங்களுக்கு தெரியாது. அந்த வாக்கு மூலத்தை கொடுத்தவர்கள் இப்போ வெளி நாட்டிற்கும் வந்து விட்டனர். அவர்கள் ஒருகாலம் உண்மை சொல்வார்கள். இவை எல்லாவற்றிலும் ரெஜி அவர்களின் பங்குதான் பெரியது.

மெனிக் முகாமிற்கு முதன் முதலாக ஐந்து கொன்ரெய்னர்களில் பொருட்கள் அனுப்பியதில் இருந்து முதன் முதலா்க பெண் போராளிகளின் முகாமிற்கு அவர்களிற்கான உடுப்பு பாக் முதல் கொண்டு சகல பொருட்களையும் அனுப்பியதும் இவர்தான். அதன் பின்னர் முகாமில் பல வேலைத்திட்டங்களை செய்து வந்துள்ளார்.

முகாமிற்குள் கைத்தொலைபேசிகளை கொடுத்து அங்கிருந்து சாட்சிகளுடன் வாக்குமூலம் எடுத்து கொடுத்தமை உட்பட பல வேலைகள் நடந்தேறியுள்ளன.

ஏன் இப்போதும் கூட விடுவிக்கப்பட்ட போராளிகள் தொடக்கம் மக்கள் வரை தம்மாலான பணிகளை செய்து வருகின்றார். சிறையில் இருக்கும் 400 இற்கு மேற்பட்ட போராளிகள், பணியாளர் குடும்பங்களிற்கு உதவி வருகின்றார்.

இப்போ கால் இல்லாத போராளிகளுக்கான தொழில் வாய்ப்பிற்காக சுயதொழில் திட்டத்தை ஆரம்பித்துள்ளார். இதில் ஜேர்மன் தமிழர்கள் 12 இலட்சம் ரூபாவை சேர்த்து இலங்கைக்கு அனுப்பியுள்ளனர். நோர்வே மற்றும் கனடா மக்களும் இதற்கு பங்களிப்பு செய்கின்றனர்.

மீழ் குடியேறியுள்ள மக்களுக்கு உதவும் முகமாக பல திட்டங்கள் நடக்கின்றன. இவை பாராளுமன்ற உறுப்பினர்கள், பங்கு தந்தைகள், மற்றும் சில அமைப்புக்கள் மூலம் நடக்கின்றன. இப்போ சுய தொழில் முயற்சிக்கான திட்டத்திற்கு நாம் 50 வீதம் நிதி கொடுத்தால் மிகுதி 50 வீதம் வங்கி கடனாக கொடுத்து செய்ய கூடிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

வவுனியாவில் இருந்து பிள்ளைகளை மஹிந்தவின் மனைவி கொழும்பிற்கு கூட்டி செல்லும் வேளை அதனை தமிழ் அதிகாரிகளுடன் கதைத்து வவுனியா புனர்வாழ்வுக்கழக அலுவலகத்தை அந்த பிள்ளைகளுக்க்கக எழுதி கொடுத்து அங்கேயே அந்த சிறுவர்களை பராமரிக்கும் பணியை செய்தார்.

அதுமட்டுமன்றி கிழக்கு மாகாணத்தில் இன்னும் பல சிறுவர் இல்லங்கள் இவர்களின் உதவியுடன் இயங்கி வருகின்றன. தற்போது குருகுலம் மற்றும் இல்லங்கள் பழைய இடங்களில் கொண்டுவந்து இயங்குவதற்கும் கூடவே அந்த பிள்ளைகளை பொறுப்பெடுப்பதற்கான பணிகளை பிரித்தானிய கோயில்களுடன் கதைத்துக் கொண்டிருக்கின்ரார். இதற்காகவே கடந்த கிழமை சைவ கோயில்கள் மா நாட்டிற்கு வருகை தந்தார் ரெஜி அவர்கள்.

இப்போதும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் அதிகாரிகள், தேவலயங்கள், கோயில்கள் உட்பட பலருடன் பேசி திட்டங்களை நகர்த்தி வருகின்றார். அண்மையில் கூட சில பங்கு தந்தைகள். சில அரச சார்பற்ற அமைப்புக்களை இலண்டனிற்கு வந்த வேளை சந்தித்து கதைத்துள்ளார்.

அங்கு ஓவ்வொரு மாவட்டத்திற்கும் ஆட்களை அல்லது சில நிறுவனங்களை பொறுப்பாக வைத்து புள்ளிவிபரங்கள் திரட்டுதல் அங்கு நடக்கும் பணிகள் பற்றி தகவல்கள் திரட்டப்படுகின்றன. அண்மையில் மீழ் குடியேறிய கிராமங்களின் அறிக்கையினை நான் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது.

அங்கு கடைமையாற்றிய வெளி நாட்டு நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் சில அரச திகாரிகளின் நட்பில்தான் இவை நடக்கின்றன.

உண்மையில் முள்ளிவாய்க்காலில் இருந்து இவரது பணிகள் நடக்கின்றன. தற்போது சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பிற்கு சில முக்கிய திட்டங்களை பொறுப்பெடுத்து கனடா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் நிதி பெற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்.

இந்தியா மற்றும் கொழும்பில் அவசர சத்திர சிகிச்சைக்கு போராளிகள் மற்றும் பொது மக்களுக்கு பலருக்கு நிதி உதவி பெற்றுக்கொடுத்துள்ளார்.

நான் பல தடவை அவரை சந்திக்கும் போது சொன்னேன் நீங்கள் செய்வதனை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று. இணையங்களில் அறிக்கை வரும் போது மறுப்பறிக்கை விடுமாறு கேட்பேன். ஆனால் இப்போது கஸ்டம் என சொன்னார்.

இப்போது பகிரங்கமாக தன்னை விசாரணை செய்ய வேண்டும் என கூறியதற்கு காரணம் கேட்டபோது சொன்னார். நான் முடிவெடுத்து விட்டேன். எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. நான் மக்கள் முன் எல்லாவற்றையும் சொல்ல போகின்றேன். மக்கள் முடிவெடுக்கட்டும்.

உண்மையில் வணங்கா மண் தொடர்பில் இவர் மீது குற்றம் சாட்டப்படுகின்றது. என்னைப்போல பலர் வணங்கா மண் திட்டத்தில் இரவு பகலாக வேலைசெய்தார்கள். எனக்கு தெரியும் நிதி சேகரித்தவர்கள் யாரோ செயற்படுத்தியவர்கள் யாரோ. இதற்குள் பல அமைப்புக்கள், பல அமைப்பு செயற்பாட்டாளர்கள் தொடர்பு பட்டு இருக்கின்றனர். பலர் இன்னமும் கணக்கு முடிக்கவில்லை. இதனை வெளியில் வந்து ரெஜி அவர்கள் சொன்னால் பலரது முகத்திரை கிளியும் ஆனால் அவர்களை இந்த மாவீரர் நாட்களிற்கிடையிலாவது கணக்கை முடிக்கும்படி கூறியுள்ளதும் எனக்கு தெரியும்.

மேற்கூறப்பட்ட எல்லாவற்றுக்கும் புகைப்படங்கள் உட்பட சிட்டைகளும் கூடவே கடிதங்களும் வைத்திருக்கின்றார்.

உண்மையில் இவருக்கும் கே.பி பத்மநாதனிற்கும் தொடர்புகள் இல்லை. அவர்கள் புனர்வாழ்வுக்கழகத்திடம் காசு கேட்டது உண்மை ஆனால் முடிந்தால் புனர்வாழ்வுக்கழகத்தின் தடையினை நீக்கி கழகத்தின் நிதியினை தரசொல்லுங்கள் என்று ரெஜி அவர்கள் பதில் கூறியது எனக்கு தெரியும்.

டாக்டர் புவிக்கும் ரெஜி அவர்களுக்கும் 2005 இல் இருந்தே நல்லா இல்லை. கண்ணீர் வெள்ளத்திற்கும் ரெஜிக்கும் உண்மையில் தொடர்பு இல்லை. தீபம், ஜிரிவி, தமிழ் போரம் ஆகியோரை கேட்டால் தெரியும். கண்ணீர் வெள்ளம் புனர்வாழ்வுக்கழகத்திற்கு போட்டியாக அனைத்துலக தொடர்பகத்தினால் இணைந்து செய்யப்பட்டது. தேவை ஏற்பட்டால் கறுப்பு புலனாய்விற்கு ஆதாரத்துடன் என்னால் நிரூபிக்க முடியும். இந்த காலபப்குதியில் புனர்வாழ்வுக்கழகம் ஒன்றும் செய்ய வேண்டாம் என்று அமைப்பு செயற்பா்ட்டார்களால் சொல்லப்பட்டது எனக்கு தெரியும்.

ஒரு பேப்பரில் டாக்டர் புவியை பற்றி எழுதியதற்கு ரெஜிதான் காரணம் என புவியின் உறவினர்கள் ரெஜியுடன் வாக்குவாதப்பட்டுள்ளனர். ரெஜியை சந்திக்க வருமாறு கூறிவிட்டு டியூப் ஸ்ரேசனில் வைத்து கதைத்து விட்டு அனுப்பி விட்டனர். காரணம் கேட்டால் உங்களை இன்ரபோலில் போட்டுள்ளார்கள் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போனால் பிரச்சினை, உங்களுடன் கதைத்தால் பிரச்சினை என கூறு அனுப்பி விட்டனர்.

நாங்கள் உங்களுடன் சேர்ந்தால் இலங்கை அரசுடன் பணி செய்ய முடியாது. இனிமேல் வெண்புறா, ரிஆரோ, அமைப்பு ஆட்களுடன் தொடர்பே வேண்டாம் என கூறியவர்கள்தான் ரெஜியைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கின்றார்கள்.

எத்தனை பேர் அவமானபட்டாலும் பரவாயில்லை எத்தனை பேர் மாட்டுப்பட்டாலும் பரவாயில்லை என ரெஜி நினைத்திருந்தால் ரெஜிக்கு பெரிய வேலை இல்லை எல்லாவற்றையும் சொல்வதற்கு. ரெஜியின் மெளனத்தால் எத்தனையோ பேர் வெளி நாடுகளில் சுதந்திரமாக ஒன்றும் தெரியாதவர்கள் போல் நடமாடுகின்றனர் என்பதுதான் உண்மை

Edited by உமை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலத்தில் இயங்கும் பல புண்ணாக்கு இணையத்தளங்களை விட இந்த மறுஆய்வு எனும் worpress இணையம் பலமடங்கு நம்பகத்தன்மைவாய்ந்தது.

இதில் உள்ள செய்தியின் முக்கியத்துவம் கருதி இதை இங்கு இணைத்துள்ளேன் ஆனால் உங்களுக்கு இச்செய்திகளை விட பதிவு ,புதியசங்கதி போன்றவற்றில்தான் நம்பிக்கை எனில் தாரளாமாக மட்டுஸ் இதனை தூக்கலாம் அது உங்களின் சமுக நோக்கு பார்வையில் உள்ளது........

அனால் ஒன்று மட்டும் உண்மை நின்டகாலம் மக்களை ஏமாற்றமுடியாது..............

தலைவரின் பாசையில் சொல்லப்போனால்...............

உண்மை ஒரு சுற்று புறப்பட முன்னர் பொய் இரண்டு சுற்று வலம் வந்துவிடும் அனால் இறுதியில் வெல்லப்போவது உண்மைதான்.....

அந்த காண்டா மணி ஓசை கேட்டிடிச்சு எங்க கலியுகத்து சாமி வெளியேவா.......

Edited by வெடியன்

  • தொடங்கியவர்

இப்போது இணையத்தளங்களிலும், நேரடியாகவும் .... கடந்த கால கணக்குக்கேட்போர் .... இரு வகையானோர் ..

1) உண்மையில் மக்களுக்கு சேர்த்த/கொடுத்த காசுக்கள் எம் மக்களுக்கே போய்ச்சேர வேண்டும். அவை தனிப்பட்டவர்களில் உருத்தாகக்கூடாது. அவற்றை வைத்திருப்போர், அது மக்கள் சொத்து, பிழையாக போய்விடக்கூடாது என்பதற்காக .... கணக்கு கேட்பவர்கள்!

2) சிங்கள எஜமானர்களின் ஏவலில்/திட்டமிட்டு குழப்பங்களை, இதன் மூலமாக ஏற்படுத்தலாம் என .... கணக்கு கேட்பவர்கள்!!

... ஆகவே கணக்கு/வழக்குகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்பதும் யாருக்கு என்ற கேள்வியும் எழுகிறது???? ... ஓநாய்களின் அழுகைக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!

ஆனால் தனி மனிதர்களின் கைகளில், அவைகள் அகப்படாமல், ஒரு பொது குழுவை அமைத்து ... தனிநபர்களின் ஊடாக முதலிட்டவை, தனிநபர்கள் வசம் அகப்பட்டவை, மற்றைய முதலீடுகளை ... மேற்பார்வை செய்ய முற்பட வேண்டும்! மக்களின் பணம் என்றோ ஒரு நாள் அம்மக்களின் விடிவிற்கு பயன்படுத்த வேண்டிய தேவை கண்டிப்பாக வரும்!

புலத்தில் இயங்கும் பல புண்ணாக்கு இணையத்தளங்களை விட இந்த மறுஆய்வு எனும் worpress இணையம் பலமடங்கு நம்பகத்தன்மைவாய்ந்தது.

இதில் உள்ள செய்தியின் முக்கியத்துவம் கருதி இதை இங்கு இணைத்துள்ளேன் ஆனால் உங்களுக்கு இச்செய்திகளை விட பதிவு ,புதியசங்கதி போன்றவற்றில்தான் நம்பிக்கை எனில் தாரளாமாக மட்டுஸ் இதனை தூக்கலாம் அது உங்களின் சமுக நோக்கு பார்வையில் உள்ளது........

அனால் ஒன்று மட்டும் உண்மை நின்டகாலம் மக்களை ஏமாற்றமுடியாது..............

தலைவரின் பாசையில் சொல்லப்போனால்...............

உண்மை ஒரு சுற்று புறப்பட முன்னர் பொய் இரண்டு சுற்று வலம் வந்துவிடும் அனால் இறுதியில் வெல்லப்போவது உண்மைதான்.....

அந்த காண்டா மணி ஓசை கேட்டிடிச்சு எங்க கலியுகத்து சாமி வெளியேவா.......

vவெடியன் அவர்களே மறு ஆய்விற்கு மார்க்ஸ் போடும் நீங்கள். ரெஜி அவர்களின் முதல் அறிக்கையினை எங்கிருந்து பெற்றார்கள் என கேட்டு சொல்ல முடியுமா? ரெஜி அவர்கள் தனது அறிக்கையினை மறு ஆய்வு போன்ற குளப்பவாதிகள் இப்படி திரிவு படுத்தி மோசடி செய்வார்கள் என்றுதான் உண்மையான அறிக்கையினை ஸ்கான் பண்ணியும் அனுப்பியுள்ளார். அறிக்கையில் சரி தவறு வேறு விடயம் ஆனால் ஒருவரது அறிக்கையினையே மாற்றி எழுதி திட்டமிட்டு போடுவதன் மூலம் உங்களுக்கு தெரியும் ஏன் இவர்கள் இப்படி திருகுதாளம் செய்கின்றார்கள் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

ரெஜி

நான் மதிக்கும் ஒருவர்

இதுவரை இவர் பற்றி நான் எதுவும் எழுதாததற்கு இதுவே காரணம்

தலைவரை நோக்கியே கைநீட்டும் கூட்டத்துக்கு ரெஜி எம்மாத்திரம்

உண்மை

அது வெளிவந்தே தீரும்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் உறங்குவதில்லை விசுகு...........

திரு ரெஜி அவர்கள் இங்காவது உண்மையைச் சொல்லியிருந்தால் மகிழ்ந்திருக்கலாம். தான் ஒரு "ஸ்ராண்ட்" எடுக்க உண்மைகளை மறைத்து இந்த அறிக்கை விட்டதாவே எடுக்க முடியும்.

திரு ரெஜி அவர்கள் இங்காவது உண்மையைச் சொல்லியிருந்தால் மகிழ்ந்திருக்கலாம். தான் ஒரு "ஸ்ராண்ட்" எடுக்க உண்மைகளை மறைத்து இந்த அறிக்கை விட்டதாவே எடுக்க முடியும்.

இங்க ஒரு ஸ்ராண்டும் இல்லை ஏற்கனவே ஸ்ராண்ட் இருக்கு அதை வைத்துக்கொண்டுதான் வேலைகள் நடக்குது. உண்மை சொல்ல வேண்டும் என்று கேட்கும் நீங்கள் என்ன உண்மையினை சொல்லவேண்டும் என சொன்னால் நல்லது.

இயக்கத்திற்குள் மீண்டும் குளப்பங்களையும் காட்டிக்கொடுப்புக்களையும் செய்வதற்கான கருத்துக்கள் உண்மை வடிவில் தேவையா?

மக்களுக்குள் குளப்பங்களை ஏற்படுத்தும் கருத்துக்களை உண்மையெனுன் வடிவில் தேவையா?

அல்லது முகம் அறியா தளங்களுக்கு தீனி போடும் வகையில் தேவையா?

என்னென்ன சொல்ல வேண்டும் என்று ஒரு லிஸ்ட் போட்டு அனுப்புவீர்கள் என்றால் நல்லாக இருக்கும். தப்பாக யாரும் திட்டமிட்டு எழுதினால் அதுதான் உண்மை ஏனென்றால் மறுத்து அறிக்கை விடவில்லை என்று சொல்வீர்கள்.

மறுத்து ஓர் அறிக்கை விட்டால் அது ஸ்ராண்ட் எடுக்க என்று சொல்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகவே பொதுமக்களால் அல்லது தற்போது புலம்பெயர் தேசங்களில் இருக்கின்ற மக்கள் கட்டமைப்புக்களான மக்கள் பேரவைஇ நாடுகடந்த அரசாங்கம்இ புத்திஜீவிகள்இ உலகத் தமிழர் பேரவைஇ அமைப்பு செயற்பாட்டாளர்கள்இ புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்கள்இ ஊடக அமைப்புக்கள் மற்றும் மாற்றுக் கருத்துக்கள்இ கொள்கைகள் கொண்ட அமைப்புக்கள் எல்லோரும் சேர்ந்து ஓர் விசாரணைக்குழுவை அமையுங்கள்.

தேவை ஒரு பகிரங்க மக்கள் நீதி மன்ற விசாரனை தற்போது புலத்திற்கு காவடி தூக்கிக்கொண்டு வந்துள்ள விக்கி சம்பந்தர் போன்றோரையும் விசாரிக்கவேண்டும் .

கொள்ளை அடிக்கப்பட்டது கோடிகள் மட்டுமல்ல

கொள்கையும் கொள்ளையடித்து

விற்கப்பட உள்ளது.

Edited by thenmozi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.