Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பீரிஸ் இலண்டன் தமிழர்களை சந்திக்க வருகின்றார்.

Featured Replies

சனிக்கிழமை , அக்டோபர் 2, 2010

GL.Peris

சிறிலங்கா வெளி நாட்டமைச்சர் ஜி.எல். பீரிஸ் அவர்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி இலண்டன் வரவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் 19 ஆம் திகதி ஓர் கூட்டத்தில் உரையாற்றுவார் என்றும் கூறப்படுகின்றது.

இலண்டனில் சிறிலங்கா தூதரகம் ஏற்பாடு செய்துள்ள இந்த கருத்தரங்கு இலங்கையில் இணக்க நிலையினை கொண்டுவர எவ்வாறு தமிழர்கள் உதவலாம் என்பது பற்றியதாகும்.

தேர்வு செய்யப்பட்ட 50 இலண்டன் தமிழர்கள் இந்த கூட்டத்திற்கு அழைக்கபட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

Eelanatham.net

நல்லது வரட்டும் ... யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, அவர்களெல்லாம் இக்கூட்டத்துக்கு கண்டிப்பாக போக வேண்டும்! ... கடந்த காலங்களில் நடத்திய பகிஸ்கரிப்பு அரசியல்/குழப்ப அரசியல்கள் இனி வேண்டாம்!! ஆனால் ....

... அங்கு செல்பவர்கள், காலம் காலமாக சிங்கள பேரினவாதத்தால் அழித்தொழிக்கப்படும் ஈழத்தமிழினத்தின் பிரதிநிதிகளாக செல்லுங்கள்!!! அங்கு குழப்பங்கள் விளைவிக்க தேவையில்லை! எம் கருத்துக்களை/கேள்விகளை முன் வைப்போம் ...

1) 60 வருடகால ஈழத்தமிழினத்தின் அவலங்களுக்கு சிங்களம் வைக்கப்போகும் அரசியல் தீர்வு என்ன?

2) புலிகளின் அழிவிற்கு பின்னம், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு முன் வைக்கப்படும்/தீர்த்து வைக்கப்படும் ... எங்கே?

3) மே18 இற்கு முன் ஓரிரு நாட்களில் நாற்பதினாயிரம் எம்மவர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள்!! அவைகளுக்கு பகிரங்க சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்!

4) கடந்த காலங்களில் ஈழத்தமிழனத்தை கொன்றொழித்த யுத்தக்குற்றவாளிகள் பகிரங்க சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த இலங்கை அரசு உடன்பட வேண்டும்!

5) தமிழர்களின் பூர்வீக பகுதிகளில் வேகமாக நடைபெற்றுவரும் சிங்கள/இராணுவ குடியேற்றங்கள்

6) மீள்குடியேற்றப்பட்ட மக்களின் அவலங்கள்!

7) சரணடைந்த போராளிகளின் உண்மையான நிலைமைகள்

8) ...

... இவைகளுக்கு விடைகள் அங்கு கிடைக்கப் போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்! இவைகளுக்கு விடைகளும் சிங்களத்திடம் இல்லை! ஆனால் ...

... நாம் ... ஈழத்தமிழர்களாக .... அங்கு போகாவிடின், எம்மினத்தில் தோன்றிய வடுக்களான ஒட்டு/ஒட்டில்லாத புலி அழிப்பென்ன, தமிழின அழிப்பிற்கு தோள்கொடுத்த/கொடுக்கும் மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் அங்கு சென்று ... ஏதோ ஈழத்தமிழர்களின் பிரட்சனை தீர்க்கப்பட்டுக் கொண்டிருப்பது போலவும், இலங்கை அரசு தமிழ் மக்களின் பிரட்சனைகளை தீர்க்க உறுதியான நடவடிக்கைகள் எடுத்து கொண்டிருப்பது போலவும் ... சர்வதேசமெங்கும் ... சிங்களம் பிரட்சார படுத்த வாய்ப்பாக போய்விடும்!!

... ஓரிறு வருடத்துக்கு முன், இங்கு லண்டனுக்கு சிங்கள அமைச்சரான திஸ்ஸ விதாரனவும் இவ்வாறு ஒரு சந்திப்பை மேற்கொள்ள வந்திருந்தார்! அதை ஒழுங்கு செய்ததும் சிங்கள தூதரகமும், இங்கு லண்டனில் பப்ளிசிட்டி என்றால் உரிந்து விட்டுட்டு ஓடும் கூட்டம் ஒன்றும்! அச்சந்திப்பிலும் பெரிதாக ஒன்றும் கேட்க அனுமதிக்கப்படவில்லை! அதையும் மீறி சிலர் தம் ஆதங்கங்களை வெளிப்படுத்தி, அவர்கள் என்னத்துக்காக அச்சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்களோ? அதை சாத்தியமாக விடவில்லை!! ...

...... நாம் இனியாவது சரியான அரசியலை நடத்துவோம்!!!

  • கருத்துக்கள உறவுகள்
:unsure: நெல்லைய்யன், உங்கள் கருத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். ஆனால் எம்மில் எத்தனை பேருக்கு இந்த தைரியம் இருக்கு?? நீங்களே பாருங்கள், அவரைச் சந்திக்கப்போவது நிச்சயம் மகிந்தவின் காவடி தூக்கிகள்தான்.

நீண்ட காலமாக தமிழர் தரப்புக்கு ஆதரவு தந்த பொஸ்ரன், அமெரிக்காவில் உள்ள ஒருவரும் சோரம் போய்விட்டதாக கருதப்டுகின்றது.

:) நெல்லைய்யன், உங்கள் கருத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். ஆனால் எம்மில் எத்தனை பேருக்கு இந்த தைரியம் இருக்கு?? நீங்களே பாருங்கள், அவரைச் சந்திக்கப்போவது நிச்சயம் மகிந்தவின் காவடி தூக்கிகள்தான்.

... பலருக்கு இப்படி ஒரு சந்திப்பு நடைபெற்றால், அங்கு செல்ல விருப்பம்! அதில் கேட்க வேண்டியவற்றை கேட்கவும் விருப்பம்!!! ஆனால்

.... அழைப்பார்களோ என்ற ஐயம்(ஐயமென்ன வாயை திறக்கக்கூடியவர்களை அழைக்க மாட்டார்கள்)!!

... மற்றையது, .... ஈழமுரசார், ஈழநாட்டார், பதிவார், ... களை நினைத்து பயப்படுகிறார்கள், அங்கு செல்ல!! ... அங்கு சென்று கேட்க வேண்டியதை கேட்டாலும், இந்த புலம்பெயர் மக்களின் பணத்தில் ... இணையத்தில்/பத்திரிகைகளில் ... போராட்டம் நடத்துவோர், வலு ஈசியாக ..... துரோகப்பட்டம் ..... பகிரங்கமாக அழித்து மகிழ்ந்து கொண்டாடுவார்கள்!! ... என்ற பயம் :unsure:

எங்கட நக்கிகள் எல்லாம் பிரீமார்க் கோட்டும் சூட்டுமா போய வழிஞ்சு கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்க ஆள்ளுப்படப்போயினம்...

நல்லையன்..

நீங்கள் குறிப்பிட்ட கேள்விகளுக்கு எந்த சிங்களவரிடம் பதில் இல்லை.. தேவையுமில்லை..

சும்மா சம்பிராயத்துக்கு சந்திக்கவருகிறவனை ஏந்தான் சங்கடத்துக்குள்ளக்கிறீர்களோ

Srilankan foreign minister G.L.Peris will participate a meeting in London in 19th October 2010.

An unknown organisers arrange the meeting with some selected London Tamils according to the sources said.

http://www.eelanatham.info/?p=558

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.