Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள அரச பொறிக்குள் நாடு கடந்த தமிழீழ அரசு! மீட்டெடுப்பது எவ்வாறு?

Featured Replies

சிங்கள அரச பொறிக்குள் நாடு கடந்த தமிழீழ அரசு! மீட்டெடுப்பது எவ்வாறு?

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான யாப்பை அங்கீகரிக்கவும், அரச அவைக்கான அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்கவும் 29 செப்ரம்பர் முதல் 01 அக்ரோபர் ஆகிய 3 தினங்கள் கூட்டப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசின் இரண்டாவது அமர்வு இறுதியில் குழப்பத்தில் முடிவுற்றுள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற இந்தக் கூட்டத் தொடரில் லண்டன், பாரிஸ் ஆகிய நகரங்களில் கூடிய நாடு கடந்த தமிழீழ அரசுக்கான மக்கள் பிரதிநிதிகள் தொலைக்காட்சித் தொடர்பாடல் மூலம் இணைக்கப்பட்டிருந்தனர்.

இந்த அமர்வு இடம் பெறுவதற்கு முன்னரே நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய 115 உறுப்பினர்களின் தேர்வு நடைபெற்று முடியாத நிலையிலும், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் பலரது தெரிவுகள் நிராகரிக்கப்பட்ட நிலையிலும் இந்த அமர்வு நடைபெறுவது ஜனநாயக விரேதமானது என்பதை அதன் மக்கள் பிரதிநிதிகள் பலரும் சுட்டிக் காட்டியதை நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தற்காலிக முதன்மை நிறைவேற்றுனர் திரு. விஸ்வநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் நிராகரித்திருந்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசின் உருவாக்கம், அதன் செயற்பாடு, அதைப் பின்னின்று இயக்குபவர்கள் குறித்த சந்தேகம் என்பன புலம்பெயர் தமிழ் மக்கள் பெரும்பாலானோரிடம் காணப்பட்டாலும், ஜனநாயக முறைமையில் அது பயணிக்கும் என்று விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றே பல தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் இந்த பரீட்சார்த்த அரசை அமைக்கும் முயற்சியில் பங்கேற்றிருந்தனர்.

தேர்தலுக்கான அழைப்பு விடப்பட்ட நாளிலிருந்து நாடு கடந்த தமிழீழ அரசு என்ற ஜனநாயக முறைமையைக் கைப்பற்றும் நோக்கோடு, புலம்பெயர் தேசங்களில் பெரும் பொருளாதார வலிமையுடன் விழங்கும் கே.பி. குழுவினர் காய் நகர்த்தல்களை மேற்கொண்டனர்.

பிரான்சில் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பொறுப்புரிமை அதிகாரம் கே.பி.யால் வேலும்மயிலும் மனோகரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. தனது பொறுப்புரிமைக்குச் சவாலாக வரக்கூடியவர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட மனோகரன், இறுதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட இருவரது தேர்தல் முடிவுகளை நிராகரித்ததுடன் இவர்களுடன் சேர்த்து மூவர் செயற்பட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இந்த நிலையே இங்கிலாந்து, ஜெர்மனிஇ அவுஸ்திரேலியா போன்ற அனைத்து நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டது.

எனினும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளில் தமக்குச் சாதகமான நிலையில் இருக்கும் இன்றைய நிலையைத் தவற விட்டால், தமது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியாது என்ற நிலையைத் தெளிவாகப் புரிந்து கொண்ட கே.பி. குழுவினர் ஜனநாயக முறைமைக்கு மாறாக இந்த இரண்டாவது அமர்வுக்கான ஏற்பாடுகளைச் செய்து முடித்திருந்தனர்.

இது, தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்கு பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்தது. இருந்த போதும், வாக்கெடுப்பின் மூலம் சில முக்கியமான நகர்வுகளை மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்த அமர்வுகளில் பங்கேற்க ஒப்புக்கொண்டனர்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்காகத் தயாரிக்கப்பட்ட யாப்பில் சில ஜனநாயக கடப்பாடுகளை உள்ளீடு செய்வதன் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசை 'தமிழீழ விடுதலைக்கான' தளமாக உருவாக்கலாம் என்ற நம்பிக்கை இந்த அமர்வுகளில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய உணர்வாளர்களிடம் இருந்தது. ஆனால், இந்த அமர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே பல பேரம் பேசுதல்களும் திரை மறைவில் இடம்பெற்றதை வெளிப்படையாக அறிந்து கொள்ள முடிந்தது.

லண்டனில் தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினர் ஒருவருக்கு நிதி அமைச்சின் செயலாளர் பதவியும் சில சலுகைகளும் வழங்க ஒப்புக் கொண்டதால், தான் லண்டனில் நடைபெறும் அமர்வைவப் புறம் தள்ளிவிட்டு, பாரிஸ் நகருக்கு வந்ததாக அவரே தெரிவித்தார்.

சுவிசிலிருந்து செல்வி சுகன்யா புத்திரசிகாமணி அவர்கள் பிiதிச் சபாநாயகர் பதவி தருவதாக வாக்குறுதி கொடுக்கப்பட்டு அமெரிக்கா அழைக்கப்பட்டார். இன்னும் பலருக்கு அமைச்சுப் பதவிகள் பேரம் பேசப்பட்டதுடன் ஊக்கத் தொகைக்கும் உத்தரவாதம் வழங்கப்பட்டது.

முதற்கட்ட வாக்கெடுப்பில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் பக்கம் 42 உறுப்பினர்களாக இருந்த பலம், அடுத்து வந்த வாக்கெடுப்புகளில் மாற்றங்கள் பெற்றது. வாக்கெடுப்புக்களில் கலந்து கொள்ள முடியாதவர்களின் வாக்குக்கள் அமர்வுகளில் பங்கேற்றவர்களின் ஊடாகப் பிரயோகிக்கும் அனுமதி ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த போதும், பின்னர் அது மாற்றப்பட்டு, அமர்வின் இறுதி நாளில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கை ஓங்கவிடாமல் தடுப்பரண் போடப்பட்டது.

கே.பி. குழுவினரால் திரு. ருத்ரகுமாரன் சர்வ வல்லமை கொண்ட, அவை உறுப்பினர்களால் கேள்விக்கு உட்படுத்த முடியாத பிரதமராக முன்நிறுத்தப்படுவதை தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் இறுதிவரை எதிர்த்து நின்றார்கள். பிரதமருக்கு உதவியாகவும், அதே வேளை அவரது சர்வ வல்லமையைக் கட்டுப்படுத்தும் விதமாகவும் மூன்று உதவிப் பிரதமர்களை அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா ஆகிய மூன்று பிரிக்கப்பட்ட பிராந்திய மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தொடுக்கப்பட வேண்டும் என்ற தமிழ்த் தேசிய உணர்வாளர்களது விருப்பம் திருப்பப்பட்ட மூன்று வாக்குக்களால் தோற்கடிக்கப்பட்டது.

இது, தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியது. எதிர் காலத்திலும் தமது இருப்பை நிச்சயப்படுத்திக் கொள்ளும் நோக்கில், நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பிற்கும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும் என்ற தீர்மானமும் கே.பி. குழுவினரால் நிறைவேற்றப்பட்டது.

முதலில் அங்கீகரிக்கப்பட்டது போல், சபைக்கு வர முடியாதவர்களின் வாக்குக்கள் அவர்களால் பொறுப்புரிமை வழங்கப்பட்டவர்களால் பிரயோகிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் கோரிக்கை இறுதி நாளில் நிராகரிக்கப்பட்டதால் உருவான பதற்றம் இறுதியில் தாக்குதல் நிலையை எட்டியது.

அமெரிக்காவில் இடம்பெற்ற கனடியப் பிரதிநிதியான ஈசன் குலசேகரம் அங்கு பிரசன்னமாகியிருந்த கே.பி. குழுவின் அடியாட்களால் தாக்கப்படும் நிலை சிலரது தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்ட போதும், அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால், தனது பாதுகாப்புக் கருதி அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

இந்தப் பிரச்pசனைக்குத் தீர்வு காணப்படாத நிலை தொடர்ந்த காரணத்தால், தமிழ்த் தேசிய உயர்வாளர்கள் நியூயோர்க் மண்டபத்தை விட்டு வெளியேறினார்கள்.

அவர்களைத் தொடர்ந்து பாரிஸ் இலண்டன் ஆகிய நகரங்களில் நடைபெற்ற அமர்வுகளில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் தமது அதிருப்திகளைத் தெரிவித்துவிட்டு, சபையை விட்டு வெளியேறினார்கள்.

இதன் பின்னர், தொடர்ந்து நடைபெற்ற அமர்வுகளில் எஞ்சிய 47 உறுப்பினர்களுடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் யாப்பு அங்கீகரிக்கப்பட்டதுடன், சர்வ வல்லமை கொண்ட பிரதமராக கே.பி.யால் நியமிக்கப்பட்ட திரு. விஸ்வநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த அரசியல் யாப்பு அங்கீகாரத்தையும், பிரதமர் தெரிவையும் தாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் தமது அடுத்தகட்ட நகர்வு குறித்து விரைவில் அறிவிப்பதாகவும் கூறியுள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் தமிழர் பலத்தைச் சிதைத்த சிங்கள தேசம், புலம்பெயர் நாடுகளில் தனக்குச் சவாலாக மேலெழுந்து வரும் தமிழீழ விடுதலைக்கான தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் அணிதிரள்தலை கே.பி. குழுவினர் ஊடாகச் சிதைப்பதற்கு முயற்சிப்பதன் ஒரு அங்கம் தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் தகர்க்கப்பட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 47 உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகியிருக்காத நிலையில் நிறைவேற்றப்பட்ட அரசியல் யாப்பின் செல்லுபடித் தன்மை குறித்தும், பிரதமர், சபாநாயகர்கள் தெரிவு குறித்தும் சட்ட வல்லுனர்களது கருத்துக்கள் கோரப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியத்திற்கான நாடு கடந்த தமிழீழ அரசின் மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கே.பி.யால் அறிமுகம் செய்யப்பட்டது. இதை அறிமுகம் செய்வதற்குப் பல வருடங்களுக்கு முன்பிருந்தே சிங்கள அரச தரப்புடன் கே.பி. தொடர்பில் இருந்துள்ளார். எனவே, நாடு கடந்த தமிழீழ அரசு என்ற பெயரில் சிங்கள அரசே இந்த எதிர்ப் புரட்சிப் பொறியைப் புலம்பெயர் தேசங்களில் உருவாக்க முனைந்துள்ளது என்ற தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் அச்சம் அமர்வின் இறுதி நாளில் இடம்பெற்ற சம்பவங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புலம்பெயர் நாடுகளுக்கான தனது செயற்பாடுகளின் பொறுப்பாளராக கே.பி.யால் அறிவிக்கப்பட்ட வேலும்மயிலும் மனோகரன் கடந்த மாதத்தில் ஜி.ரிவி.யில் தெரிவித்த கருத்தும், பாரிசில் நடைபெற்ற இறுதிநாள் அமர்வில் அவர் கலந்துகொண்டு அதை நெறிப்படுத்தியதும் இந்த உறுதிப்படுத்தலுக்கு மேலும் வலு சேர்ப்பதாகவே உள்ளது.

புத்திசாலித்தனமாக இந்த வலையில் சிக்கிக் கொள்ளாத தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் முன்னே பல்வேறு பணிகள் குவிந்துள்ளன. தம்மைத் தேர்ந்தெடுத்த மக்களிடம் மட்டுமல்ல, விடுதலைக்காக ஏங்கும் ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் விரைவாகப் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

அத்துடன், சட்டபூர்வமற்ற விதத்தில் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகள் ஒரு சார்பினரால் நிறைவேற்றப்பட்ட அரசியல் யாப்பும், பிரதமர், சபாநாயகர்கள் தெரிவையும் நிராகரித்துவிட்டு, பெரும்பான்மை பலத்துடன் புதிய நகர்வுகளையும் மேற்கொண்டு எதிரியின் ஆயுதத்தைப் பறித்தே எதிரியைத் தாக்கும் தேசியத் தலைவர் அவர்களது பாதையில் நாடு கடந்த தமிழீழ அரசையும் பறித்தெடுக்கப்பட்ட ஆயுதமாகக் கொண்டு எதிரியைப் பலம் இழக்கச் செய்யும் போரை விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்பதே தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் அத்தனை தமிழர்களின் பெரு விருப்பாக உள்ளது.

- தொல்காப்பியன்

Edited by aathirai

தேசிய உணர்வாளர்கள்.... உணர்வில்லாதவர்கள் என்று எங்கு வைத்துச் சந்தி பிரிக்கிறார்கள்? ஆராவது அறிஞ்சனீங்கள் தெளிவுபடுத்துங்கோ... ஆதிக்கு முள்ளிவாய்க்காலில் கலங்காத மூளை இப்ப கலங்குது.

சண்டை பிடியுங்கோ, குத்துப்படுங்கோ உங்களுக்கு சுவாரஸ்யமா இருக்கிற எதையெண்டாலும் செய்யுங்கோ. எந்தப்பக்கம் ஆர் ஸ்ரோங் எண்டு இங்கினை நிண்டு பிளவுபடுங்கோ. லூசுகளே! அங்க போய் போரின் வலியில இன்னும் ஆவி துடிச்சுக் கொண்டிருக்கிற சனத்தோட கதையுங்கோ அப்ப தெரியும் உங்க எல்லோருடைய ஸ்ரோங்கும்

த்தூ.......

சிங்கள அரச பொறிக்குள் நாடு கடந்த தமிழீழ அரசு! மீட்டெடுப்பது எவ்வாறு?

நீங்கள் நாடு கடந்த அரசைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்தாலே போதும் அது தனது செயற்பாட்டைத் சிறப்பாக நடத்த.

எத்தனை எத்தனை முட்டுக்கட்டைகளைப் போடுகிறீர்கள். இருந்தும் தடைகளைத் தாண்டி அது தனது பயணத்தைத் தொடர்கிறது.

நாடு கடந்த தமிழீழ அரசினை முடக்க சிங்கள அரசு என்னென்ன செய்கிறதோ அதைவிட பல மடங்கு நீங்கள் செய்கிறீர்கள்.

இன்னும் சில காலத்தில் டக்கிளஸ், சங்கரி, கருணா, கேபி எல்லாரையும் விட தமிழினத்திற்கு நீங்கள் நல்லாச் செய்யப்போறீயள் என்பது நல்லாக விளங்குது.

நல்லாச் செய்யுங்கோ. தமிழினம் உருப்படும்.

நாடு பாய்ந்த தமிழீழ அரசு..... எண்டு புதுசா ஒண்டு தொடக்கவேண்டியதுதான்..

  • கருத்துக்கள உறவுகள்

மின:னல: அப்ப மணோகரனடைய கால்களை நக்கச் சொல்லுறியளே? போங்கட நீங்களம் உங்கட தமிழீழமும். ஒரு தலைவன் எமக்குள்ளிலிருந்து வருவான், இன்னுமொரு பிரபாகரனாக, அனைத்துத் தடைகளையும் உடைத்தெறிந்து, அனைவரையும்விட சக்திவாய்தவனாக அதுவரைபொறுமனமே.

Edited by இணையவன்

மனுசருக்கு ஆயிரத்தெட்டு வேலை.. இதுக்குள்ள இந்த சனியன்கள் வேற..

கூத்து முடிஞ்சுதுப்பா.. தமிழீழமும் மட்டையும்.. எல்லோரும் போயி அவனவன் வேலையப்பாருங்கப்பா..

  • கருத்துக்கள உறவுகள்

" நான் புலத்திற்க்கு வந்தபோது கிடைத்த முதலாவது அட்வைஸ்..... தமிழ்ச்சனியன்களுடன் சேராதே எண்டு........

நான் கேக்கவில்லை...

15 வருசத்துக்கு பிறகு உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது..... தமிழரை கண்டால் தூர விலகு.....

யாழ் கள பனங்காய் "

பனங்காய், தமிழ்சனியன்களுடன் சேரவேண்டாம் எண்டுசொன்னதுடன் தமிழர்களடன் சேராமல் விடவேண்டியதுதானே பிறக எதுக்க வந்து யாழில் சொறியிறியள். தமிழ் சனியன்களடன் சேராதை எண்டு தமிழில சொன்னவையளே அல்லது வேறு பாஸையில சொன்னவையோ, யாழ்களம் தமிழ்சனியன்களக்கானது அவையள் சொன்னதை இங்க வாந்தி எடுக்கிறதுக்கே வந்தனீர்.

ஒரு கும்பல் மக்கள் பணத்தில் வயிராற சாப்பிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருந்தது இவ்வளவு காலமும் ... புலத்தில்!! உந்த கும்பலுக்கு பயம் பிடித்து விட்டது .... குந்தியிருந்த கதிரைகள், அகப்பட்ட மக்களின் பணங்கள், வேலை வெட்டியில்லாமலேயே மூன்று நேர உணவு .... ஆபத்து வரப்போகிறதோ என்று???? அப்ப உந்த கும்பல் என்னனென்ன கேடுகளை செய்து குழப்பி அடிக்க முடியுமோ? அதை செய்து கொண்டிருக்கிறது!!

உந்த கும்பலின் வாய்களில் இருந்து ... தமிழ்த்தேசியமோ ... என்ற சொல் வர வர ... கேவலம்கெட்ட தூசனவார்த்தையாக வரவர தெரிகிறது!!! ... மே18இற்குப் பின் எல்லோரையும் வெறுக்க வைக்கிறார்கள்!

மின:னல: அப்ப மணோகரனடைய கால்களை நக்கச் சொல்லுறியளே? போங்கட நீங்களம் உங்கட தமிழீழமும். ஒரு தலைவன் எமக்குள்ளிலிருந்து வருவான், இன்னுமொரு பிரபாகரனாக, அனைத்துத் தடைகளையும் உடைத்தெறிந்து, அனைவரையும்விட சக்திவாய்தவனாக அதுவரைபொறுமனமே.

இன்னொரு தலைவரன் எமக்குள் இருந்து வருவான், தலைவர் பிரபாரகனாக தடைகள் உடைத்தெறிவான். அனைரைவிடவும் சக்தி வாய்ந்தவனாக வருவான். நீங்கள் கனவு கண்டு கொண்டு இருங்கோ. உங்கள் கற்பனையிலோ கனவினலோ யாரும் கல்லைப் போட மாட்டார்கள்.

தம்மால் முடிந்த நல்லதைச் செய்ய உருந்திரகுமாரன் போன்றவர்கள் முயற்சிக்கிறார்கள். அவர்களிற்கு முட்டுக்கட்டை போடாதீர்கள் என்பதே எமது வேண்டுகோள்.

ஆயுதப்போராட்டம் தோல்வியடைந்ததால் சோர்வுற்றிருக்கும் மக்கள் இனி நீங்கள் சொன்னது போல “போங்கடா நீங்களும் உங்கடை தமிழீழமும்” என்று சொல்லும் நிலையை வெகு விரைவில் உருவாக்கி விடுவீர்கள் என்பது உறுதி.

தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது இனி மக்களின் ஆதரவின்றி அழிந்து போகப்போகிறது.

இதற்குத் தான் அ....தொ....தினர் தம்மாலான எல்லா முயற்சியையும் செய்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் முதன்மை நோக்கு தம்மால் உருவாக்கப்பட்ட தமிழீழ மக்களவைகளைச் செயற்பட வைப்பதோ அல்லது விடுதலைப் போராட்டத்தை ஏதாவது ஒரு வழியில் கொண்டு நடத்துவதோ அல்ல. நாடு கடந்த தமிழீழ அரசினை முடக்குவதே.

தொடருங்கள் உங்கள் தேசப்பற்றுப் பணியை.

  • கருத்துக்கள உறவுகள்

தம்மால் முடிந்த நல்லதைச் செய்ய உருந்திரகுமாரன் போன்றவர்கள் முயற்சிக்கிறார்கள். அவர்களிற்கு முட்டுக்கட்டை போடாதீர்கள் என்பதே எமது வேண்டுகோள்.

ஆமென்

  • கருத்துக்கள உறவுகள்

மின்னல் விச ஊசிபோட்டுக் கொல்பவர்களையெல்லாம் நாம் தலையில வைத்துக் கொண்டாட முடியாது. வேலும்மயிலும் மணோகரன் நாடுகடந்த தமிழீழ அமைப்பில் இருக்கும்வரை அவ்வமைப்பின் நம்பகத்தன்மையில் கேள்வி எழும். இப்போது தமிழர்கட்கு என ஒரு புடுங்கியும் தலைவன் இல்லை யாராவது கனவு கண்டால் அப்படிக் கனவு காண்பது அவர்களது உரிமையுடன் மட்டுப்படுத்தப்பட்ட விடையம் மட்டுமே. இராஜா விஸவநாதன் உருத்திரகுமாரோ அன்றேல் தமிழ் மகாசபை , பேரவை போன்றவற்றின் தலைவர்களையோ அதன் எடுபிடிகளையோ யாரையும் ஏற்றுக்கொள்ள ஒட்டுமொத்த தமிழினமும் தயாரில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது எனக்கு உதைக்கிறது

யாரையும் நம்ப தயாரில்லை என்ற தெளிவுள்ள தாங்கள்

வே. ம. என்ற தனிநபரைப்பார்த்து பயப்படுவது அல்லது அவர் சம்பந்தமாக தெளிவற்றிருப்பது

அல்லது

அவரை இந்தளவுக்கு உயர்த்துவது எதற்காக......?????????????????????

  • கருத்துக்கள உறவுகள்

"குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்" என்று தெரிந்தவர்கள் தமிழர்களை மந்தைகளாக வைத்திருக்கவே விரும்புகின்றார்கள். ஆனால் மந்தைகளாக மக்கள் இல்லை என்பதை இவர்கள் அறியும்போது காலம் கடந்திருக்கும்.

புலம் பெயர்ந்த பெரும்பான்மையோர் வாழ்க்கை கனவிலும் கற்பனையிலும் தான் நடக்கின்றது. 6/49 விழுந்தால் காசை என்ன செய்யலாம் என்று எண்ணுவது போல் இவர்களியும் எண்ண விடுவதே நல்லது.

நீங்கள் நாடு கடந்த அரசைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்தாலே போதும் அது தனது செயற்பாட்டைத் சிறப்பாக நடத்த.

எத்தனை எத்தனை முட்டுக்கட்டைகளைப் போடுகிறீர்கள். இருந்தும் தடைகளைத் தாண்டி அது தனது பயணத்தைத் தொடர்கிறது.

நாடு கடந்த தமிழீழ அரசினை முடக்க சிங்கள அரசு என்னென்ன செய்கிறதோ அதைவிட பல மடங்கு நீங்கள் செய்கிறீர்கள்.

இன்னும் சில காலத்தில் டக்கிளஸ், சங்கரி, கருணா, கேபி எல்லாரையும் விட தமிழினத்திற்கு நீங்கள் நல்லாச் செய்யப்போறீயள் என்பது நல்லாக விளங்குது.

நல்லாச் செய்யுங்கோ. தமிழினம் உருப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

இனி நாய்கள் மட்டுமே..

கதவோரம் தாழ்வாரம்

அடுப்படிச் சாம்பல் மேடு.. என

சுருண்டு கிடந்த நாய்கள்

ஒன்றாய்க் கூடி குமைந்து கிடந்தன

ஒன்றைச் சினைப்படுத்த..

தமக்குள் தாமே.. தம்மை முறைத்தும்

தமக்குள்ளே தம்மையே கடித்தும்

ஒன்றை ஒன்று விரட்டியும் முந்தியடித்தும்

முதன்மைப்படவும் முதலில் ஏறவும்

போராடுவது போலவும் போட்டியிடுவதாகவும்

தமது உரிமையை விடாது தாமே காப்பதாகவும்

அதற்காய்...

முழுவதையும் இழந்தாயினும் புணர்வது

எனவும் போல

தம்மையே முறைத்தும் கடித்தும் விரட்டியும்

குறிகள் விறைத்து குமையும்.

ஒன்றையே புணர..

சினைக்குள் சாத்தியம்

நிமிர்ந்த வாலுடனோ சுருளும் விதமாகவோ

குரைக்கக் கூடியதாகவோ

உறுமிக் கடிக்கத் தக்கதாகவோ

வேட்டைத் தனத்தோடோ வெகுளியாகவோ

சில நாய்கள்.

நாயாக மட்டுமே இருப்பது சாத்தியம்.

இனியவை

விரும்புவதும் ஏற்பதுவும்

எவரும்

பல்லிடுக்கிலிருந்து கிளறி துப்பும்

எச்சில் இறைச்சித் துண்டாயிருக்கலாம்.

ஏப்பங்களின் பின்னாக தூக்கிப் போடும்

எலும்பு மீதமாக இருக்கலாம்.

இந்த நாய்கள் காத்திருக்கும்.

சொச்சமாகவேனும்.. எதை வீசினாலும்

கவ்விக் கொள்ளும்.

விருந்தெனச் சண்டையிட்டு

அதையும் சகதியில் வீசும்.

பின்

வீறாப்போடு வெறுங்குடலைக் கழியும்.

கடைசியில் எச்சிலூறி

எவரேனும் கால்களை நக்கிக் கிடக்கும்.

நாய்கள்.

வேட்டைப் பற்களிருந்தாலும்

விரல் நகம் நீண்டிருந்தாலும்

அவ்வப்பொழுதுகளில் உறுமினாலும்

எலும்புகள் தானென்றில்லை..எதுகிடைத்தாலும்

நாக்கொழுகித் தின்னும்.

தமக்குள் தாமே முந்தும்..கடிக்கும்..

இவை

நாய்கள்.. நாய்கள்.. நாய்கள்...

http://www.vaarppu.com/view/2269/

ஆடு கடத்தி வித்து திரிஞ்ச பால்குடி சந்திரன் போல ஆக்கள் நாடு கடந்த அரசுக்க போனால் உதைதவிர வேற என்னத்தை எதிர்பார்க்க முடியும்

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் காலத்துக்கேற்ற கவிதை, யாரால் செய்யப்பட்டது? அது உங்களால் எனில் பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் காலத்துக்கேற்ற கவிதை, யாரால் செய்யப்பட்டது? அது உங்களால் எனில் பாராட்டுக்கள்.

பாராட்டுக்கள் சம்பூர் வதனரூபனுக்குப் போய்ச் சேரட்டும். இந்தத் திரிக்குப் பொருத்தமாகத் தோன்றியது, அதுதான் பிரதியிட்டேன்!

மிக மிக பாராட்டுக்குறிய கவிதை....

எமக்குத்தேவை விடுதலையில்லை.. ஒரு சிறந்த எஜமானரே..

இண்று முதல் உங்களை கட்டி மேய்க்க ஒரு எஜமானரை தேடி தருவதுதான் என்ட வேலை..

ஜோசித்துபாருங்கோ.. உங்கட வறட்டு கௌரவத்தை விட்டு விட்டு...

போராளிகளை சித்திரவதை செய்து காஸ் சேம்பரில் எரியூட்டுகின்ற சிங்கள பேய்கள்

சரணடைந்த முக்கிய போராளிகள் மற்றும் தற்போதும் கைது செய்யப்படுகின்ற போராளிகளை சித்திரவதை செய்து கொன்ற பின் அல்லது உயிருடன் தகனம் செய்கின்றனர் மஹிந்தவின் பிணம் தின்னி பிசாசுக்கூட்டம்.

சித்திரவதை செய்தல் கொலை செய்தல் என்பது வழமையாகிவிட்டது . ஆனால் காஸ் மூலம் இயங்கும் தகனம் செய்யும் சேம்பரில் போட்டு எரிப்பது எனும் தகவல் இப்போதுதான் கசிந்துள்ளது.

சடலல்ங்களை வெளியில் வீசுவதுஇ வெளியில் தகனம் செய்வது மக்களிற்கு தெரிய வந்து தனால் பல்வேறு பிரச்சினைகளையும் அரசாங்கம் எதிர்கொள்கின்றது.

இதனை தவிர்க்கவே இந்த உத்தி என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இனிமேல் ஒவ்வொரு மாவட்டத்திலும் அல்லது ஒவ்வொரு இராணுவ முகாமிலும் இவ்வாறான டொக்‌ஷி காஸ் சேம்பர்களை அரசாங்கம் பொருத்தினாலும் வியப்பதற்கு இல்லை. 3000 பரனைட் வெப்பசக்தியை கொண்ட இந்த ரொக்‌ஷி காஸ் சேம்பர் சிறியவகை வெடிப்பொருட்கள்இபோதை மருந்துகள் மற்றும் தொற்றுனோய் விலங்குகளை அழிப்பதற்காக இலங்கை அரசினால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://www.eelanatham.net//

Edited by kalaivani

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபாகரன் ஏகபோக தலைவர், ஒருவரிடத்தில் அதிகாரம் குவிந்து இருக்க கூடாது என்று வாயிறுகிழிய கத்தியவர்கள் உருத்திரகுமாருக்கு அனைத்து அதிகாரங்களையும் கொடுக்க பாடுபடுவது ஏன், ஒருவருக்கு முழு அதிகாரத்தையும் கொடுப்பது என்றால் எதற்காக மக்கள் பிரதி நிதிகள் தெரிவு செய்யபட்டார்கள், அதிகாரங்ளை பகிர்ந்து கொடுக்கத்தானே சனநாயக தேர்தல் நடத்தப்பட்டது, அல்லது ஏக போக தலைவரை தெரிவு செய்வதற்காகவா? ஏக போக தலைமையால் தமிழர்கள் அழிந்தது போதாதா? விடுதலை புலிகளின் ஆட்களுக்கு விக்ஷ ஊசி ஏற்றி கொல்ல வேண்டும் என ஒரு, நாடுகடந்த அரசின் ஒரு அவை எம்.பி கூறுகிறார் என்றால். இவர்கள் யாரை காப்பறுவதற்காக நாடுகடந்த அரசை அமைக்கிறார்கள். நாடுகடந்த அரசின் யாப்பை அங்கிகார வாக்கெடுப்பிலேயே அரைவாசி அவை அங்கத்தவர் ஒட்டுமொத்தமாக வெளியேறி இருக்கிறார்கள் என்றால். இது என்ன விதமான சன நாய் அகம். :rolleyes::):D

Edited by சித்தன்

  • தொடங்கியவர்

பிரபாகரன் ஏகபோக தலைவர், ஒருவரிடத்தில் அதிகாரம் குவிந்து இருக்க கூடாது என்று வாயிறுகிழிய கத்தியவர்கள் உருத்திரகுமாருக்கு அனைத்து அதுகாரங்களையும் கொடுக்க பாடுபடுவது ஏன், ஒருவருக்கு முழு அதிகாரத்தையும் கொடுப்பது என்றால் எதற்காக மக்கள் பிரதி நிதிகள் தெரிவு செய்யபட்டார்கள், அதிகாரஙளை பகிர்ந்து கொடுக்கத்தானே சனநாயக தேர்தல் நடத்தப்பட்டது, அல்லது ஏக போக தலைவரை தெரிவு செய்வதற்காகவா?

கடந்த காலத்தில், ஏகபோக அதிகாரம் செலுத்தியவர்கள், மீண்டும் உருத்திரகுமாரை முன் நிறுத்தி அதிகாரம் செலுத்தமுற்படுகின்றார்கள், உருத்திரகுமார் ஒரு கருவியே.

Edited by aathirai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த காலத்தில், ஏகபோக அதிகாரம் செலுத்தியவர்கள், மீண்டும் உருத்திரகுமாரை முன் நிறுத்தி அதிகாரம் செலுத்தமுற்படுகின்றார்கள், உருத்திரகுமார் ஒரு கருவியே.

அதனால்தான் சொல்லுகிறோம் உருத்திரகுமாரிடம் மட்டும் அதிகாரத்தை குவிக்காமல், அனைத்து அவை உறுப்பினர்களிடமும் அதிகாரத்தை பகிர்ந்து கொடுக்க வேண்டும், இதனால் ஜனநாயகம் அதிகளவில் உயரும் தவறு விடுபவர்கள் தனித்து விடப்படுவார்கள். இங்கு ஆட்கள் முக்கியம் இல்லை குறிக்கோள்தான் முக்கியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.