Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் சிங்கள ராணுவம் கட்டியுள்ள உல்லாச விடுதி

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: நாரதர்,

உங்கள் கருத்துடன் நான் உடன்படுகிறேன். நான் பலமுறை தயாவிடம் இவ்வாறான விதண்டாவாதங்களைத் தவிர்க்குமாறு கோரியிருக்கிறேன். மனுசன் கேட்கிறதாயில்லை. நானும் முன்னர் இப்படித்தான், சிலவேளை நாக்கைப் புடுங்கிறமாதிரி எழுதவேணும்போல வரும், இப்போது அந்த நிலையை எல்லாம் கடந்து வந்தாயிற்று.

தாம் செய்வதென்று என்னவென்று சரியாகத் தெரிந்துகொண்டுதான் இங்கே விதண்டாவாதம் செய்கிறார்கள். ஒருபோதுமே உண்மையை ( அவர்களுக்குத் தெரிந்தாலும் கூட) அவர்கள் ஒத்துக்கொள்ளப்போவதில்லை. இறுதியில் குட்டு உடையும்போது, கருத்தின் திசையையே மாற்றி மனிதாபிமானமும், நடுநிலமையும் , சனநாயகமும் பேசுவார்கள். இப்படி எத்தினையப் பார்த்தாச்சுது??

ஆனால், தயா விடுவாதாயில்லை.

தயா, அப்படியே விடுங்கள், களைச்சுத் தானா அடங்கிப்போகும்.

  • Replies 62
  • Views 4.6k
  • Created
  • Last Reply

இவ்வளவு அழிவிற்கு பின்னும் நாங்கள் செய்ததுதான் சரி என்றால்

கமலகாசன் தேவர் மகனில் சொன்னமாதிரி"எல்லாத்தையும் விட்டிட்டு போய் படியுங்கோ" என்றுதான் சொல்ல தோணுது .

அம்மாவை கற்பழிக்கின்றான் என்றால் ஏன் பிரான்ஸிற்கு ஓடினீங்கள்.அதையல்லோ நிண்ரு தடுத்திருக்க வேண்டும்..

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருக்கிறது என்பதற்காக உலகம் தட்டையானது என்று வாதிடுவோருடன் பதில் வாதம் செய்வது எவருக்கும் எந்தப் பயனையும் தராது.உலகம் தட்டையானது என்று வாதிடுபவர் உண்மையில் அவ்வாறு வாதிடுவது தம்மை தனிதுவமானவர்களாகக் காட்டிக் கொள்ளவே அவ்வாறு வாதுடுகிறார்கள்,அதன் மூலம் மற்றவர்களின் கவனிப்பைப் பெற முயல்பவர்கள்.உளவியல் ரீதியில் பார்த்தால் இது ஒரு வகை மனப் பிறழ்வின் வெளிப்பாடே. போர் கொடியது என்று எலோருக்கும் தெரியும்.சிறிலங்காவில் ஆயுதப் போராட்டம் எழுந்தது சிறிலங்கா பவுத்த பேரின்வாத அரசின் இராணுவ அடக்குமுறையால்.அதற்க்கு எதிராக தமிழ் மக்களிடம் இருந்து எழுந்த எதிர்ப்புச் சக்தியே விடுதலைப் புலிகள்.புலிகள் வானத்தில் இருந்து குதித்து விடவில்லை.போரின் விழைவுகளுக்கு போரை நடாத்தியவர்களே பொறுப்பானவர்கள்.போரிற்க்கு எதிராகப் போராடியவர்கள் அல்ல.

ஓர் உவமானத்தைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லை. இதற்குள் உளவியல் விளக்கம் வேறு நகைப்பாக உள்ளது. :rolleyes: போரின் விளைவுகளிற்கு போரை நாடாத்தியவர்களே பொறுப்பு. சரியாகச் சொன்னீர்கள். இந்த போரை நாடாத்தியவர்களில் த.வி,பும் அடங்குகின்றார்கள். போரிற்கு எதிராக போராடியவர்கள் யார் தெரியுமா? வீடு, இழந்து, வாசல் இழந்து போரின் வடுக்களால் பாதிக்கப்பட்ட, அவலப்பட்ட மக்கள் மட்டுமே. போர் போர் போர்.. போரே வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன்னர் மாவீரர் தின உரையில் தலைவர் பேசவேண்டும் என்று உசுப்பேத்தியதை பலர் மறந்துவிட்டார்கள் போல் தெரிகின்றது.

சரியாக சொனீங்க நாரதர். இப்படி கொஞ்சம் அலையுதுகள் யாழுக்குள்ளே. தாங்கள் ஏதோ ஐ.நா, மக்கள் நலன், மனிதாபிமானம் , மக்களுக்காக பாடுபடுகிறம் என்று. உண்மையிலே மக்களுக்காக உயிரை கொடுக்க முன்வந்த புலிகளை விமர்சிக்க அல்லது அவர்களின் பாதையை விமர்சிக்க இதுகளுக்கு என்ன தகுதி இருக்கு. புலிகள் பிறந்த இனத்திலே தாங்களும் பிறந்தவை என்ற தகுதியை தவிர இதுகளுக்கு ஒண்டுமே இல்லை. மாதாந்தம் கொஞ்ச காசு மக்களுக்கு செலவழிச்சா இவர்கள் எல்லாம் மக்கள் பிரதிநிதிகள் ஆகிவிடுவினமோ. இப்படி ஒரு குறுக்கு வழி எனக்கு இண்டைக்கு தான் தெரியும். சும்மா வாக் வாக் என்று கத்துறதை விட்டுவிட்டு, அதுகள் தங்கட சொந்த வாழ்கையை ஒழுங்கா பார்த்தாலே அரைவாசி பிரச்னை தீர்ந்துவிடும். சொந்த வாழ்க்கையில் இருக்கும் விரக்தியில், பழியை புலிகள் மீது போடும் கூட்டத்துடன் வாதிப்பதில் எந்த பயனும் இல்லை தயா. இதுகள் திருந்தாதுகள். நடுநிலைமை, சுயவிமர்சனம், மனிதாபிமானம் இதுகள் எல்லாம் புலிகள் ஆனையிறவை வெல்லக்கே எங்கே போனது. வெல்லும்போது புலிகள், தோற்றுவிட்டால் மக்கள். இந்த ஓநாய்களின் ஊளையை மக்கள் நன்றாக புரிஞ்சுகொள்ளுவார்கள்.

கருத்திற்கு சரியான எதிர்வாதம் வைக்கமுடியாத உம்மைப்போன்றவர்களால் அலையுதுகள், வாக் வாக் வாக், ஓநாய் ஊளையிடிடுதல் இப்படி உணர்ச்சிகளை கொட்டித்தீர்க்க மட்டுமே முடிகின்றது. இங்கு புலிகளை விமர்சிக்க ஒருவர்க்கும் ஒரு தகுதியும் இல்லை என்று யாழ் முகப்பில் பெரியதொரு விளம்பரம் போடுமாறு மோகனிடம் கூறும். ஓர் கருத்தாடல் தளத்தில் கருத்தே எழுதத்தெரியவில்லை. இந்தக்கேவலத்தில் உம்மைப்போன்றவர்களுக்கு எப்படி ஓர் விடயத்தை அலசிப்பார்ப்பதற்கு பக்குவம் இருக்கும்? போரில் ஒன்றிற்கு மேற்பட்ட தரப்புக்கள் சம்மந்தப்பட்டார்கள், ஒன்றிற்கு மேற்பட்ட தரப்புக்களிற்கு போரின் வடுக்களில் சம்மந்தம் உள்ளது எனும் அடிப்படை உண்மையைக்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தக்கேவலத்தில் இனம், பிறப்பு பற்றி பேசுதுகள். :rolleyes:

என்ன முதல்வன் இப்படி எழுதுகின்றீர்கள் இந்த வார்த்தைகளை தாங்கள் பாவிக்கலாமா...? அவர்கள் அடித்தால் மறு கன்னத்தை காட்டவேணும்

அம்மாவை கற்பழித்துக்கொண்டிருந்தால்......... உண்மையான நீதிபதியாக இருந்து........ இருவரையும் விசாரித்து...... சட்டப்புத்தகத்தில் என்ன உள்ளதோ அதை வாசிக்கவேண்டுமே தவிர... இப்படியெல்லாம் உணர்ச்சிவசப்பட்டால் நம்ம நடுநிலை என்னாவது படித்த புத்தகங்களையாவது மதிக்கவேண்டாமா....

ஓமோம் முதல்வனின் அம்மா பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதனால் அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசுகின்றார். எனவே நடுவுநிலமை என்று ஒன்று இல்லை, அது தேவையும் இல்லை. சரியாகச் சொன்னீர்கள் விசுகு.

மனுசன் கேட்கிறதாயில்லை. நானும் முன்னர் இப்படித்தான், சிலவேளை நாக்கைப் புடுங்கிறமாதிரி எழுதவேணும்போல வரும், இப்போது அந்த நிலையை எல்லாம் கடந்து வந்தாயிற்று. தாம் செய்வதென்று என்னவென்று சரியாகத் தெரிந்துகொண்டுதான் இங்கே விதண்டாவாதம் செய்கிறார்கள். ஒருபோதுமே உண்மையை ( அவர்களுக்குத் தெரிந்தாலும் கூட) அவர்கள் ஒத்துக்கொள்ளப்போவதில்லை. இறுதியில் குட்டு உடையும்போது, கருத்தின் திசையையே மாற்றி மனிதாபிமானமும், நடுநிலமையும் , சனநாயகமும் பேசுவார்கள். இப்படி எத்தினையப் பார்த்தாச்சுது??

உங்களுக்கு த.வி.புவிற்கு ஆதரவாக எழுதாவிட்டால் அல்லது எதிராக ஏதும் சொன்னால் நாக்கைப்புடுங்கிறமாதிரி எழுதவேணும் போல வந்ததோ? த.வி.புவிற்கு ஆதரவாக எழுதாவிட்டால் அல்லது எதிராக ஏதும் சொன்னால் நாங்கள் விதண்டாவாதிகள், ஒரு போதும் உண்மையை நாங்கள் ஒத்துக்கொள்ளப்போவதில்லை. போலி ஜனநாயகவாதிகள். உங்கள் விளக்கத்தில் தெளிவாகத்தான் இருக்கின்றீர்கள் ரகுநாதன்.

ஓர் விடயத்தை ஆராய்தல், பின்னூட்டல் போன்றவை ஓர் வெற்றிகரமான எந்தவொரு அமைப்பிற்கும், நிறுவனத்திற்கும் இதயம் போன்றது. அப்படிப்பட்ட ஆனான பின்னூட்டல் கொடுப்பவர்களை போட்டுத்தாக்கி ஒழிக்கவேண்டும் என்று கொடுக்கை கட்டிக்கொண்டு நிற்கும் உங்களைப்போன்றவர்கள் தாயகத்திலும், வெளிநாடுகளிலும் நம்மவர்கள் படும் அவலங்களுக்கு முக்கிய காரணகர்த்தாக்களாக விளங்குகின்றனர்.

இவ்வளவு அழிவிற்கு பின்னும் நாங்கள் செய்ததுதான் சரி என்றால் கமலகாசன் தேவர் மகனில் சொன்னமாதிரி"எல்லாத்தையும் விட்டிட்டு போய் படியுங்கோ" என்றுதான் சொல்ல தோணுது . அம்மாவை கற்பழிக்கின்றான் என்றால் ஏன் பிரான்ஸிற்கு ஓடினீங்கள்.அதையல்லோ நிண்ரு தடுத்திருக்க வேண்டும்..

அர்ஜுன்... கெடுகுடி சொற்கேளாது. இங்கு இவர்களிற்கு பிரச்சனை விமர்சனத்தின்போது த.வி.பு பற்றி வாய்திறக்கக்கூடாது. தொடர்ந்தும் உணர்ச்சி அரசியல், பிரச்சாரம் செய்து சனங்களை அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்து மேய்க்க விரும்புகின்றார்கள். இவர்களின் விருப்பத்திற்கு எதிராக ஏதேனும் கருத்துக்கள் வந்தால்.. மேலே பார்த்தீர்கள்தானே. எனது முதலாவது கருத்தின்போதே நான் சிங்களவர்கள் நல்லவர்கள் என்று கூறுகின்றேனாம் என்று பெரியதொரு முறைப்பாட்டுடன் ரகுநாதன் ஐயா வந்தார். இவர்களிற்கு தேவையானது எல்லாம்.. சுயமாக சிந்திக்கத்தெரியாத ஜால்ராபோடும் ஆட்களின் ஆதரவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புக்குத்தான் அடுத்த சமாதானத்துக்கான நோபல் பரிசு. அவரது மிகப்பெரிய கண்டுபிடிப்பு போரில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட தரப்பு ஈடுபடுகிறது என்று.

தன்னுடைய சொந்த வாழ்க்கையில முன்னேற தெரியாததுகள் மற்றவை விட்ட பிழைகளை பற்றி கதைக்க வந்ததிட்டுதுகள்.

உணர்ச்சி இருப்பவனுக்கு தான் வரும். இல்லாதவன் மற்றவன் முதுகிலே ஊத்தை கண்டுபிடிக்க தான் சரி.

சரி நடுநிலையை வைத்து என்ன செய்ய போறீர். போரிலே இரண்டு பக்கத்தாலையும் தான் பிழை என்றார் வைச்சு என்ன செய்ய போறீர். மக்களுக்கு விடிவு பெற்று தரபோறீரா..??

இல்லை இறந்த மக்களுக்கு நட்டஈடு பெற்று தர போறீரா.?

இல்லை இந்த வாதத்தில் கரும்புக்கு தான் வெற்றி. கரும்பு என்றால் நடுவுநிலைமை தவறாதவர் என்று பட்டம் சூட்டி கொள்ளபோறீரா.?

என்னுடைய அம்மாவை பற்றி எழுதி இருந்தீர். நன்றி ..உமது வாத திறமை கண்டு எனக்கு மெய் சிலிர்கிறது.

புலிகளை விமர்சிக்க நீர் என்ன செய்தீர் உம்முடைய நாட்டுக்காக அல்லது மக்களுக்காக என்று சொன்னீர் என்றால் எல்லாருக்கும் இலகுவாக விளங்கும்.

** தனிபட்ட விமர்சனத்தை தவிர்க்க இதை நீக்கி உள்ளேன்.

Edited by முதல்வன்

இங்கு ஓர் செய்தி இணைக்கப்பட்டது, அந்த செய்திக்கு நாம் எமது கருத்தை கூறினோம். இதுதான் விடயம். இது கருத்தாடல் தளம். கருத்தாடல் தளத்தில் ஓர் செய்தி அலசிப்பார்க்கப்படுகின்றது. நோபல் பரிசு பெறுவதற்காகவோ, வெற்றி தோல்விக்காகவோ அல்லது நீர் மெய்ச்சிலிப்பதற்காகவோ இங்கு கருத்தாடல் செய்யப்படுவது இல்லை. நான் தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வி அடைந்தேனா அல்லது வெற்றி அடைந்தேனா அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில் முகத்தை அழகுபடுத்தினேனே அலங்கோலப்படுத்தினேனா அல்லது தனிப்பட்ட வாழ்வின் நான் என்ன செய்தேன் என்பதற்கும் கருத்தாடலில் கருத்துக்கூறுவதற்கும் எதுவித தொடர்பும் இல்லை.

உமது ஊத்தைத்தனத்தை உமது ஆரம்ப கருத்திலேயே இங்கு நீர் கூறி இருக்கின்றீர். நீர் வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளீர் என்பதற்கு இந்த சான்று ஒன்றே போதும். நீர் உணர்ச்சிவசப்பட்டு பேசும் ஒவ்வொரு சொல்லும் நீர் வாழ்க்கையில் எவ்வளவு வெற்றி பெற்று எவ்வளவு தூரம் மேலே சென்று சிறந்ததொரு வெற்றியாளராக இருக்கின்றீர் என்பதற்கு சான்றாக உள்ளது. வாழ்க்கையில் வெற்றி பெற்ற உம்மைப்போன்ற அறிஞர்கள் நான்குபேர் எம்மத்தியில் காணப்பட்டால் விரைவில் தமிழீழம் கிடைத்துவிடும். :rolleyes::D :D

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன்... கெடுகுடி சொற்கேளாது. இங்கு இவர்களிற்கு பிரச்சனை விமர்சனத்தின்போது த.வி.பு பற்றி வாய்திறக்கக்கூடாது. தொடர்ந்தும் உணர்ச்சி அரசியல், பிரச்சாரம் செய்து சனங்களை அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்து மேய்க்க விரும்புகின்றார்கள். இவர்களின் விருப்பத்திற்கு எதிராக ஏதேனும் கருத்துக்கள் வந்தால்.. மேலே பார்த்தீர்கள்தானே. எனது முதலாவது கருத்தின்போதே நான் சிங்களவர்கள் நல்லவர்கள் என்று கூறுகின்றேனாம் என்று பெரியதொரு முறைப்பாட்டுடன் ரகுநாதன் ஐயா வந்தார். இவர்களிற்கு தேவையானது எல்லாம்.. சுயமாக சிந்திக்கத்தெரியாத ஜால்ராபோடும் ஆட்களின் ஆதரவுதான்.

ஐயா

நீங்கள் ஏன் மீண்டும் மீண்டும் செத்த பிணத்தினை அடிக்கின்றீர்கள் என்று தான் கேட்டோம்

அவர்கள் இல்லாதபோது தங்கள்தீர்வு என்ன என்றால்

மீண்டும் போரென்றால்இரு பகுதியும்நிறுத்தியிருக்கவேண்டும் என்கிறீர்கள்

பக்கதுணைக்கு அர்ஜீன் வேறு.

இது எம்மீது திணிக்கப்பட்ட போர் என்பதைக்கூட ஏற்க மறுக்கும் தங்களுடன் நான் எதை வைத்து ஒருங்கிணைவது....

எல்லோரும் ஒன்றை மட்டுமே சொல்கின்றீர்கள்

நாம் ஒன்றிணையாது தமிழனுக்கு விடிவில்லையென்று...

அதற்கு புலிகளை பலி கொடுப்பதுதான் விலை என்கிறீர்கள்

அவர்களது தியாகத்தை கொச்சைப்படுத்தாதீர்கள் என்று நாம் சொன்னால் எம்மை புலிகள் என்கின்றீர்கள் இது எந்தவகை ஒருங்கிணைப்பு.

தங்களது சொந்த முகம் சம்பந்தமாக எழுதப்பட்டவற்றை நான்ஏற்றுக்கொள்ளவில்லை

அதற்காக மன்னிப்புக்கேட்கின்றேன்.

முதல்வனிடமும் இதை யாசிக்கின்றேன்

அதேநேரம்

புலிகள்அதைவிட 100 வீதம் தமிழருக்காக செய்தார்கள் என்பது உண்மை உண்மை உண்மை

Edited by விசுகு

பலருக்கும் போரின் வடுக்களிற்கும் த.வி.புவிற்கும் நேரடி பங்கு உண்டு எனப்படும் யதார்த்தத்தை இங்கு நான் கூறியது பிடிக்கவில்லை. இதுதான் பிரச்சனையே. உங்களுக்கு செய்திகளை அலசிப்பார்ப்பதற்கு, அவற்றின் உண்மைத்தன்மையினை ஆராய்வதற்கு விருப்பம் இல்லையென்றால் பின்பு ஏன் கருத்தாடலில் பங்குபற்றுகின்றீர்கள்? தமது கருத்தியலின் வெற்றுப்போக்கு, மற்றும் இயலாமையினால் கருத்துகூறுபவர் மீது தனிப்பட தாக்குதல் செய்வதற்கு மட்டுமே குறிப்பிட்ட கருத்துடன் உடன்படாத பெரும்பாலானவர்களினால் முடிகின்றது.

மாறாக.. இங்கு நான் ஆரம்பத்தில் இருந்தே சிங்களப் பிணந்தின்னிப்பேய்கள்.. சிங்கள இனவாத நாய்கள் என்று கருத்து எழுதி இருந்தால்… ரகுநாதன் தொடக்கம் முதல்வன் வரை மட்டற்ற மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள், பாராட்டியும் இருப்பார்கள். இவர்களின் கருத்தியல் வங்குரோத்துதனத்திற்கு கருத்தாடல்தளம் எல்லாம் ஓர் கேடு. :rolleyes:

தங்களது சொந்த முகம் சம்பந்தமாக எழுதப்பட்டவற்றை நான்ஏற்றுக்கொள்ளவில்லை

அதற்காக மன்னிப்புக்கேட்கின்றேன்.

எனது முகம் சம்மந்தப்பட்ட விடயத்தில் அவர் உண்மையைத்தானே கூறி இருக்கின்றார். இதற்கு ஏன் மன்னிப்பு எல்லாம்.

கதை கதையாம் பகுதியில் எனது தனிப்பட்ட வாழ்க்கையின் ஒர் விடயம் பற்றி எழுதிப்போட்டிருந்தேன். நீங்களும் வாசித்து பாருங்கள்.

சொந்தக்கதை: வாழ்க்கையில அவலம் வரும்... அவலம் வாழ்க்கை ஆனால்... ?

இங்கு எனக்கு சிரிப்பு என்ன என்றால்... நான் வாழ்க்கையில் தோல்வி அடைந்தவன் என்று முதல்வன் எனக்கு கூறுவதுதான். த.வி.புவிற்கு போரின் வடுக்களுடன் நேரடியான சம்மந்தம் உள்ளது என்று கூறியமையால் நான் இப்போது எனது தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வி அடைந்துவிட்டேன். :rolleyes::D :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் கருத்து பகிர்ந்த அனைத்து உறவுகளுக்கும் அன்பு வணக்கம்.ஒரு உவமையுடன் இந்த திரிக்கான எனது கருத்தை தொடர்கிறேன்.ஒரு வீதி விபத்து நடந்து அதில் ஒருவர் படுகாயம் அடைந்திருக்கும் நிலையில் எந்த சாரதியின் பிளையால் இந்த விபத்து நடந்தது என்று விவாதிப்போமா அல்லது படுகாயம் அடைந்தவருக்கு முதலுதவி செய்வோமா :rolleyes: இந்த திரியின் தலைப்பின் சாரம்சம் என்ன.ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலத்தில் உல்லாச விடுதிகளை கட்டுதல்.ஆக்கிரமிக்கபடாத(உயர் பாதுகாப்புவலையம்)இடதில எம் மக்கள் மனமுவர்நது(பணத்துக்கு)தமது நிலங்களை விக்குதுகள்.அண்மையில் தாயகத்திலிருந்து வந்த ஒரு வயோதிப பெண் பெருமையாக சொல்கிறா கிளிநொச்சியில் இப்ப காணிகள் நல்ல விலை போகுது சிங்ளவங்கள் நல்ல விலை கொடுத்து வாங்கிறாங்கள் என்று.இந்த அறியாமையை போக்க நாங்கள் என்ன செய்யலாம்.அல்லது அந்த காணிகள் மாற்றான் கைகளுக்கு போகாமல் நாங்கள் எப்டி தடுக்கலாம்.போரினால் பாதிக்கப்பட்டு தமது துனைகளை இழந்த பெண்கள் தமது பிழ்ளைகளின் அடுத்த வேளை உணவுக்காக தமது மாணத்தை தாமே கொண்டு போய் எதியிடம் விகிறாள்.இப்படியான விடையங்களை எப்டி தடுக்கலாம்.என்று சிந்திப்பதே எமக்காக போராடிய புலிகளுக்கும் அந்த போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நாம் செய்யும் உண்மையான நன்றியும் சேவையுமாகும். நன்றி.வணக்கம் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.