Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களவர்கள் திடீர் படையெடுப்பு: பின்னணியில் திட்டமிட்ட குழு?!

Featured Replies

யாழ்ப்பாணத்துக்குத் திடீரென வந்து தாம் யாழ்ப்பாணத்தின் மைந்தர்கள் எனவும் தம்மை யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேற்றுமாறும் சுமார் 180 குடும்பங்களைச் சேர்ந்த சிங்கள மக்கள் கோரியிருப்பதன் பின்னணியில் திட்டமிட்ட குழு ஒன்று செயற்பட்டுவருவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள அரச காணிகளில் இவர்களைக் குடியேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என அரச உயர் மட்டத்தில் சிலர் விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னான்டே யாழ்ப்பாணத்தில் இருக்கக்கூடிய அரச காணிகளில் இவர்களைக் குடியேற்றுவது தொடர்பாக ஆராயவேண்டும் எனக் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

கடந்த மூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற போரினால் இடம்பெயர்ந்த தமிழர்கள்இ குறிப்பாக அதி உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவதில் யாழ். செயலக அதிகாரிகள் தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த சிங்கள மக்களின் வருகை அரச செயலகத்துக்குப் புதிய தலையிடியைக் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றது.

யாழ்ப்பாணம் பழைய ரயில் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இவர்களுடைய உணவு, உறைவிட மற்றும் கழிவகற்றும் வேலைகளைக் கவனிப்பதில் அரசாங்க செயலகம் பெரும் பிரச்சினையை எதிர்நோக்குவதாக அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவிக்கின்றார். இவர்கள் முன்னறிவித்தல் எதுவும் இன்றி திடீரென வந்திருப்பதால் இந்தப் பிரச்சினை உருவாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த சிங்கள மக்களுக்கு இராணுவமும் பொலிஸாரும் பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருக்கும் நிழலையில், இந்தப் பிரச்சினையை எவ்வாறு கையாள்வது எனக் குழப்படையந்திருக்கும் யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார், ஜனாதிபதி செயலகத்தின் ஆலோனையைக் கேட்டிருப்பதுடன், அந்த ஆலோசனையின்படியே தான் செயற்படப்போவதாகவும் அறிவித்திருக்கின்றார்.

தமக்கு யாழ்ப்பாணத்தில் சொந்தக் காணிகள், வீடுகள் இருந்ததாகவும் 1983 க்குப் பின்னர் உருவாகிய நிலைமைகளால் தாம் குடா நாட்டிலிருந்து வெளியேறிவிட்டதாகவும், தமது வீடுகளில் இப்போது தமிழர்கள் இருப்பதால் அவர்களை வெளியேற்ற வேண்டாம் எனவும் 'பெருந்தன்மை'யுடன் கேட்டுக்கொள்ளும் இவர்கள் தம்மை அரச காணிகளில் குடியேற்றுமாறும் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் தேசவழமைச் சட்டத்தின்படியே காணிகளை வாங்கும், விற்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளமுடியும். இதன்படி சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் சொந்தமாக காணிகளை வாங்கி அவற்றில் குடியிருந்திருக்க முடியாது என சட்டத்துறையைச் சேர்ந்த ஒருவர் சுட்டிக்காட்டுகின்றார்.

1970 களில் யாழ்ப்பாணத்தில் பெருமளவு சிங்களவர்கள் இருந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் வர்த்தக நடவடிக்கைகளுக்காகவும், கல்விக்காவும், அரசாங்க உத்தியோகத்துக்காகவும் வந்தவர்களாகவே இருந்துள்ளார்கள். குறிப்பாக ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த பெரும்பாலான வெதுப்பகங்கள் (பேக்கரிகள்) சிங்களவர்களாலேயே நடத்தப்பட்டன. அதில் பணிபுரிந்தவர்கள் தமது குடும்பங்களுடன் யாழ்ப்பாணத்தில் வசித்துவந்துள்ளார்கள்.

இவர்களுக்காய யாழ். ஸ்ரேசன் வீதியில் சிங்கள மகாவித்தியாலயம் ஒன்றும் செயற்பட்டு வந்தது. அதில் சுமார் ஆயிரம் சிங்கள மாணவர்கள் கல்விகற்றுவந்துள்ளார்கள் என்பதும் உண்மை.

ஆனால், இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தில் வாடகைக்கு வீடுகளை எடுத்தே தங்கியிருந்துள்ளார்கள். சொந்தமாக இவர்கள் வீடுகளைக் கொள்வனவு செய்திருந்தார்கள் என்பதற்கு எந்தப் பதிவும் இல்லை என யாழ்ப்பாண அரசாங்க அதிபர் திட்டவட்டமாகக் கூறுகின்றார்.

"முன்னறிவித்தல் எதுவுமின்றி வந்து, தாங்கள் யாழ்ப்பாணத்திலேயே இருக்க வேண்டும். திரும்பிப் போகப் போவதில்லை எனத் தெரிவித்திருக்கும் இந்தக் குடும்பங்களின் நடவடிக்கை யாழ்ப்பாணத்தின் நிர்வாகத்துக்கு ஒரு சங்கடமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை இவர்களுக்கு சொந்தக் காணிகளோ வீடுகளோ இல்லாத காரணத்தினால் இவர்களுக்கு அரச காணிகள் கொடுத்து மீள்குடியமர்வு நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். அப்படியானால் எங்களுக்கு கால அவகாசம், சரியான ஆவணங்கள் என்பன தேவை. முக்கிய ஆவணத்தோடு ஜனாதிபதி செயலகத்திற்கு அறிவித்து அவர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்று அவர்களின் கொள்கைகளின்படியே மீள்குடியமர்வுகளைச் செய்ய முடியும்" எனவும் அரச அதிபர் குறிப்பிடுகின்றார்.

அரசாங்க அதிபருக்கு சிங்களவர்களின் இந்தத் திடீர்ப் படையெடுப்பு சங்கடமான ஒரு நிலையைக் கொடுத்திருக்கின்றது என்பது உண்மைதான். இவ்விடயத்தில் திடுப்பென ஏதாவது செய்யப்போக அது அரசாங்கத்தினதும், படைத் தரப்பினரதும் ஆத்திரத்தைக் கிளப்பிடலாம். அதனால்தான் ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது என்ற தீர்மானத்தை இராஜதந்திரமாக அவர் எடுத்திருக்கின்றார்.

இதேவேளையில் திங்கட்கிழமை முதல் ரயில் நிலையத்தில் தங்கியிருக்கும் இந்தக் குடும்பங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்தப் பகுதிக்குள் வெளியாட்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் நெருக்கமாகச் சென்று புகைப்படங்களை எடுப்பதற்கும் அனுமதி மறுக்கப்படுகின்றது. செய்திகளைச் சேகரிப்பதற்காகச் செல்லும் ஊடகவியலாளர்கள் பொலிஸ் அதிகாரிகளிடம் தமது பெயர் விபரங்களைப் பதிந்துகொண்டே செல்ல வேண்டும்.

இது தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் கேட்டபோது, இவ்வாறு சிங்களவர்கள் அனுப்பப்பட்டதன் பின்னணியில் திட்டமிட்ட குழு ஒன்று செயற்படுவதாக சந்தேகம் வெளியிட்டார். "யாழ்ப்பாணத்தில் இவர்களுக்குச் சொந்தமாக காணிகள் இருந்தால் அவர்கள் வந்து குடியேறுவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அவ்வாறு இல்லாமல் வந்து தம்மை குடாநாட்டில் குடியேற்றுமாறு இவர்கள் கேட்பதாக இருந்தால் அது திட்டமிட்ட ஒரு குடியேற்றமாகவே இருக்க வேண்டும். இதன் பின்னணியில் நன்கு திட்டமிட்ட ஒரு குழு செயற்படுவதாகவே இருக்க வேண்டும்" எனவும் தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணம் வந்துள்ள சிங்களவர்கள் ஒரு குழுவை அமைத்திருக்கின்றார்கள். சிங்களவர்களின் மீள்குடியேற்றக் குழு என்ற இந்தக் குழு செப்டம்பர் 13 ஆம் திகதி கூடி, யாழ்ப்பாணம் சென்று குடியேறுவதற்குத் தீர்மானித்தது. இதனையடுத்து இந்தக் குழுவின் பிரதிநிதிகள் குழு ஒன்று யாழ்ப்பாணம் வந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து மகஜர் ஒன்றைக் கையளித்ததாகக் கூறப்படுகின்றது. அதேவேளையில் வடமாகாண ஆளுநர் சந்திரசிறியைச் சந்திப்பதற்கும் இவர்கள் முயன்ற போதும் அவர் அப்போது இருக்கவில்லை. இதனால் தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றை அவரது அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு இந்தக் குழு திரும்பிச் சென்றுவிட்டது.

தமது கோரிக்கைகளுக்கான பதில் கிடைக்காத நிலையிலேயே 183 குடும்பங்களைச் சேர்ந்த சிங்களவர்கள் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வந்துள்ளார்கள். தமது கோரிக்கைகளுக்கு பதில் இல்லை என்றால் தாம் திருப்பிப்போகப்போவதில்லை என்பதில் இவர்கள் பிடிவாதமாக உள்ளனர். மேலும் சுமார் 500 குடும்பங்கள் அநுராதபுரம் பகுதியிலிருந்து புறப்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மிகிந்தலைப் பகுதியில் தாம் செய்துகொண்டிருந்த தொழில்களையும் விட்டுவிட்டு பாடசாலைகளில் படிக்கும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு எந்த நம்பிக்கையில் இவர்கள் யாழ்ப்பாணம் வந்துள்ளார்கள்?

இவர்களுக்கு அந்த நம்பிக்கையைக் கொடுத்தவர்கள் நன்கு திட்டமிட்டுச் செயற்படும் ஒரு குழுவினராகவே இருக்க வேண்டும்!

http://pooraayam.com/news-analysis/1113-2010-10-10-06-35-28

பூராயத்துக்காக

யாழ். நகரிலிருந்து அபிமாறன்

முதலில் கொழும்பில், ஏனைய தென், மலையாக பகுதிகளில் இருந்து விரட்டப்பட்ட தமிழ் மக்களுக்கு அரச காணிகளை வழங்கட்டும். கதிர மலையை, கதிர்காமத்தை திரும்ப தமிழரிடம் கொடுக்கட்டும்.

முதலில் கொழும்பில், ஏனைய தென், மலையாக பகுதிகளில் இருந்து விரட்டப்பட்ட தமிழ் மக்களுக்கு அரச காணிகளை வழங்கட்டும். கதிர மலையை, கதிர்காமத்தை திரும்ப தமிழரிடம் கொடுக்கட்டும்.

முதலில் கொழும்பில், ஏனைய தென், மலையாக பகுதிகளில் இருந்து விரட்டப்பட்ட தமிழ் மக்களுக்கு அரச காணிகளை வழங்கட்டும். கதிர மலையை, கதிர்காமத்தை திரும்ப தமிழரிடம் கொடுக்கட்டும்.

முதலில் கொழும்பில், ஏனைய தென், மலையாக பகுதிகளில் இருந்து விரட்டப்பட்ட தமிழ் மக்களுக்கு அரச காணிகளை வழங்கட்டும். கதிர மலையை, கதிர்காமத்தை திரும்ப தமிழரிடம் கொடுக்கட்டும். சூரன் கோட்டையை தமிழனிடம் கொடுக்கட்டும் - அதன் பின்னர் யாழ் மண்ணில் சிங்கள இனவாதிகளின் குடியேற்றத்தை பற்றி யோசிக்கலாம்.

சம்பிக்க, விமல் வீரவன்ச போன்ற சிங்கள பயங்கரவாதிகளின் கூட்டுச் சதி இது.

முதலில் இந்த பூராயக்காரர் யார் என்பதை நாங்கள் புலன் விசாரனை செய்யவேனுமுங்கோ......எனக்கு உவையலில் சின்ன சந்தேகம் இருக்குது...

இந்தியாக்காரனின்ட வாலுகளோ என்று எண்ணத்தோண்றுகிறது.... :)

முதலில் இந்த பூராயக்காரர் யார் என்பதை நாங்கள் புலன் விசாரனை செய்யவேனுமுங்கோ......எனக்கு உவையலில் சின்ன சந்தேகம் இருக்குது...

இந்தியாக்காரனின்ட வாலுகளோ என்று எண்ணத்தோண்றுகிறது.... :D

ஓமுங்கோ, உதை செய்யுங்கோ! உங்களின் கோவணத்தை கூட சிங்களவன் உருவ நிற்கிறான் ... நீங்கள் அவனை ஆராய்ந்து/இவனை ஆராய்ந்து ... அந்த அற்புதமான துரோகிகள் பட்டம் கட்டி விளையாடுங்கோ!!

இங்கு எம்மில் இருக்கும் இன்னொரு கூட்டம் ... குடியேறுதல்/குடியேற்றம் ... வித்தியாசம் தெரியாமல், யாழ்பானத்திலை சிங்களவரை வரவேற்று வாழ் வைக்க வேண்டுமாம்!! அங்கு ஆத்தை,அப்பன், சோதரங்கள் நடு ரோட்டில் நாறித்திரிகிறதையும் உவர்களுக்கு கண்ணுக்குள் படவில்லை???

கேவலங்கெட்ட இனம் ... இந்த ஈழத்தமிழினம்!!!! :)

  • கருத்துக்கள உறவுகள்

பூராயக்காரர் பற்றி நீங்கள் பயப்படத் தேவையில்லை. அவர்கள் அவுஸ்த்திரேலியா சிட்னியிலுள்ள உணர்வுள்ள தமிழர்களின் ஒரு பகுதியினர். அவர்களின் நோக்கம் பற்றிச் சந்தேகம் வேண்டாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.