Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதினம் காட்டுதோ புதிய யாழ்ப்பாணம் ( நாரதர்)

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரோ ஒருத்தன் இன்ரநெற்றில யாழ்ப்பாணத்துப் பொம்பிளைப் பிள்ளைகள் சீரழிகிறதைக் காட்டுறான் என்டு கன பேர் சொன்னதைக் கேட்டு கேள்விப்பட்டு ஓடிப் போய் இன்ரநெற் கபேல லைன்ல நின்டு அந்த இன்ரனெற் வெப் தளத்தைப் பார்த்தால் அதில எந்த ஒரு அறுப்பும் இல்லை.

நான் கொச்சையா எழுதிறன் என்டு ஒருத்தரும் கோவியாதையுங்கோ

இரண்டு பெட்டையல் சந்தோசமா கான்போன் கதைச்சுக் கொண்டு நின்டிச்சுதுகள். மற்றச் செய்தில ஏதோ கிடக்குது என்று பார்த்தால் அதுலையும் சும்மா செய்திதான் போட்டிருக்கிறாங்கள் வேற ஒன்டையும் கானேல.

எனக்கு சப்பென்று போச்சுது. ஒன்றுக்கும் சம்மந்தமில்லாமல் ஒரு நல்ல படமும் போடாமல் இப்படி பேய்க்காட்டி விட்டானே என்ற கோவத்தில எனக்கு ஒன்டும் செய்யேலாமல் போச்சுது. எனக்கு சொன்னவனைப் பிடிச்சு அறம்புறமா பேசிப் போட்டன். நான் ஒரு நாளும் யாழ்ப்பாணப் பெட்டையலுடையதை எந்த வெப்சயிற்றிலும் பார்க்கவில்லை. எத்தனை கூடாத வெப் சயிற் பார்த்திருப்பன். ஒன்டிலையும் யாழ்ப்பாணத்து பெட்டையலை கானேல என்ட கவலை எனக்கு.

இப்ப ஆமிக்காரன் அவன் இவன் என்டு எத்தனையோ அலங்கோலம் பிடித்தவங்கள் இருக்கிற நேரத்தில் கட்டாயம் இப்படி ஏதாவது வந்திருக்கும் என்டு நினைச்சுதான் ஓடிப் போனனான். எனக்கு தெரிஞ்ச பெடியன்தான் இந்த வீடியோவை எடுத்தது என்று கேள்விப்பட்டு அவனிட்டை கேட்டன் ஏன் தம்பி இப்படி பெட்டையல் கதைச்சுக் கொண்டு நிக்குறது உனக்கு வயிறு எரியுதோ? உன்ர அக்கா தங்கச்சிகளை இப்படி போடுவியோ? றோட்டால போற வாறதுகளை எடுத்து இப்படி நியூஸ் குடுக்கிறியே. உன்னாலை அந்த வெப்சயிற் ஆக்களுக்கு எவ்வளவு ஏச்சு விழுகுது தெரியுமோ..எடுத்தா அதுகள் ஏதாலும் இசகு பிசகா செய்யுறதை எடுத்துக் குடு..நானும் பார்த்து சந்தோசப்படுவன் இப்படி ஒன்டுமில்லாததை போட்டு எங்களை ரென்சன் ஆக்கிப் போடாதை என்டு பேச அந்தப் பெடியன் கனக்க சொல்லிச்சு...நீங்களும் கொஞ்சம் என்னோட சேர்ந்து கேளுங்கோ

1) யாழ்ப்பாணத்தில் இப்போ என்ன நல்ல விடயங்கள் நடக்கின்றது? எல்லாரும் சந்தோசமாக இருக்கின்றார்களா? இயல்பு நிலை திரும்பி விட்டதா? எல்லாப் பெண்களும் சுதந்திரமாக பாதுகாப்பாக இருக்கின்றார்களா? மாணவர்கள் படித்து கல்வியில் தற்போது முதலிடம் பெற்றுள்ளார்களா? தமிழர் கலாச்சாரம் தளைத்தோங்குகின்றதா?

இவ்வளவு கேள்வியையும் அவன் என்னைக் கேட்க தலையைச் சொறிந்தபடி ஹீ..ஹீ என்டு விட்டு ஓம் தம்பி எல்லாம் நல்லா இருக்குத்தானே. என்ன குறை கண்டனி...எக்கச்சக்க ஆக்கள் வந்து முதலீடு செய்யிறாங்கள் இஞ்ச, தியேட்டருக்குள்ள சனம் முன்டியடிக்குது எந்திரன் பட சந்தோசத்தில, புல்லுக்குளத்திற்கு பக்கத்தில 7 மணி வரையும் பெட்டையல் தனித்தனிய கல்லுக் கதிரையில இருக்கிறாளவை, எக்கச்சக்க கல்வி நிறுவனங்கள் முளை விட்டிருக்கு. கொலசிப்பில குறைவாய் ராங் எடுத்தாலும் பறவாயில்லை முந்தினதைப் போல இல்லாமல் ஓரளவு படிப்பு கொஞ்சமாய் முன்னேறுதுதானே..எங்கட கலாச்சரமும் கனக்க விசயங்களை சேர்த்து மாறிவரும் உலக நடப்புக்கு ஏற்ப தளைத்தோங்குது என்ன பிழை கண்டனி தம்பி என்டு கேட்டன். நான் சும்மா ஏன் பெட்டையளை வீடியோ எடுத்தது என்று கேட்க இப்படி ஆயிரம் கேள்வி கேக்கிறாய். நான் இப்பிடிக் கேட்க அவனுக்கு கோவம் வந்துட்டுது சொல்லுறான் கேளுங்கோவன்

நான் ஒன்றும் தப்பான நோக்கத்திற்காக இந்த வீடியோக்களை எடுக்கவில்லை. இந்த காலகட்டத்தில் எங்களின் தேசப் போராட்டம் அடங்கு நிலையில் இருக்கும் நேரத்தில் சிங்கள அரசாங்கத்தால் அளிக்கப்பட்டிருக்கும் இந்த சுதந்திர நிலையானது சந்தேகத்துக்குரியது. கடந்த காலத்தில் 2002 முதல் 2005 வரையான நான்கு ஆண்டு கால சமாதான நேரத்தில் அரசினால் தந்திரமாக சந்தோசமாக்கப்பட்டவர்கள் தற்போது எங்களுக்கே கோடாரிக் காம்பாக மாறி இருக்கின்றார்கள்.

கஞ்சாவை தந்து சந்தோசமாக அனுபவி என்றது போல் எமக்கு இந்த சந்தோச சுதந்திரம் தந்திருக்கிறார்கள். கஞ்சா முடிந்த பின் அதனை மீளவும் பெறுவதற்கு அந்த போதைப் பொருளைப் பாவிப்பவர்கள் எவ்வளவிற்கு அதை விற்பவனிடத்தில் கெஞ்சி தன்மானம் இழந்து சொத்து இழந்து மானம் கெடுவார்களோ அதே நிலையைத் தான் இனி வரும் காலம் உணர்த்தும்.

இரயில் நிலையத்தில் வந்து தங்கும் இந்த சிங்களவர்கள் யார்? எதற்காக வந்திருக்கின்றார்கள்? எங்கிருந்து வந்தார்கள் என்று யாராவது எண்ணி சிந்திக்கின்றார்களா??

நான் வீடியோ எடுத்ததை ஐயோ குய்யோ என்று குளறி கத்துகின்றீர்களே? அந்தப் பெண்கள் சுதந்திரமான சூழலில் இருந்துதான் சந்தோசத்தை அனுபவிக்கிறார்களா?

நல்லாட்சி நடக்கும் நேரம் நள்ளிரவிலும் நங்கை நடக்கலாம் நடு வீதியில் என்று நினைக்கும் நேரம் தற்போது உருவாகியுள்ளதா??? அப்போ நீங்கள் எல்லோரும் குடாநாட்டில் நல்ல ஆட்சி நடக்ககின்றது என்று எண்ணுகின்றீர்களா?

அந்தப் பெண்கள் யார்? எதற்காக அங்கே வந்து நின்றார்கள்? வேறு பெண்கள் அப்படி வழமையாக அந்த இடத்தில் வந்து சந்தோசமாக பொழுதைப் போக்குகின்றார்களா என்று ஒரு கணமாவது சிந்தித்தீர்களா?

கொத்திக் குதறும் கழுகுகளுக்கு விருந்தாக நினைக்கு கோழிக்குஞ்சுகளை கலைப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா?

ஒழுங்கான குடும்பத்தில் இருக்கும் எம் குலப் பெண்களின் மானத்தைப் பற்றி உங்களை விட எமக்கு நன்கு தெரியும்?

எதற்கு எடுத்தாலும் தனது கருத்திற்கு பிழையாக செயல்களை செய்து விட்டதாக நினைக்கும் ஒருவனின் தாயை, சகோதரிகளை தப்பாக இழுப்பது தனிக்குணமா உங்களுக்கு?? நீங்களும் அப்போ தமிழ் தாய் சகோதரிகளை இழிவு செய்யும் பிராணிகள் தானே

மானம் போன பின்பு அதை ஒருவருக்கும் தெரியாது பொத்தி வைத்து நாறடிப்பதிலும் பார்க்க நான் செய்தது நல்ல வேலை என்று எனது மனச்சாட்சிக்கு மட்டும் தெரியும்.

இணையத்தளம் பார்த்து சீரழியும் சிறுவர்களுக்கு மண்டையில் குட்டு விட்ட செய்தி மற்றவர்களுக்கு புரியாவிட்டாலும் அவர்களை பெற்றவர்களுக்கு புரிந்திருக்கும்.

நீதிமன்றத்தில் நீதியாய் முறையிட தற்போது இங்கு மநுநீதிச் சோழன்கள் இல்லை.

முறையிட்டாலும் மநு நீதி சொல்லும் நீதிபதிக்கே ஆப்பு வைத்து அடுத்த ஊர் அனுப்பும் நிலை இருக்கின்றது.

கண்டவன் எல்லாம் தமிழினத்தைப் பற்றிக் கவலைப் பட்டுக் கருத்துச் சொல்லும் போது நேரே நின்றவன் சொல்லக் கூடாதா?

தற்போது யாழ் குடாநாட்டில் நடக்கும் அக்கிரமங்களை எதிர்த்து போராடுவதற்கு யாருக்காவது தைரியம் இருக்கிறதா?

ஒரு ஆர்பாட்ட பேரணியாவது நடத்துவதற்கு யாராவது முன்வருவீர்களா?

பேஸ்புக்கிலும் எடுபடாத இணையங்களிலும் உங்களின் வல்லமைகளைக் காட்டுவதில் எது வித பிரயோசனமும் இல்லை.

எதற்கு எடுத்தாலம் கரிகாலன்களைக் கூப்பிட அவர்கள் கடவுள்கள் இல்லை. மானமுள்ள மறத் தமிழர்களில் உருவானவர்கள். உங்களை களத்தில் நிற்கவிட்டு ஓய்வெடுக்கிறார்கள். களத்தில் நிற்கும் நீங்கள் வீட்டுக்குள் நின்று கத்தி நடக்கப் போவது ஒன்றும் இல்லை. வீதியில் கத்துவதற்கு உங்களுக்கு தைரியமும் இல்லை. தனியொருவனால் செய்ய முடியாத காரிணம் இது. நேரே இறங்குங்கள் நானும் சேர்ந்து வருகின்றேன்.

காணும் காணும் தம்பி. நிப்பாட்டு.என்ர மனிசி இப்படி நீ கதைச்சதைக் கேட்டாலே உலக்கையால தருவாள் எனக்கு. உனக்கேன் உந்த தேவையில்லாத வேலை என்று ஏசுவாள். பிள்ளை குட்டிக் காரன்டா நான் . தேவையில்லாமல் என்னை தேர் இழுக்க வைச்சுடாதை என்று நான் மெதுவா அந்த இடத்தை விட்டு நகன்றேன். அவன் ஐயா! ஐயா! நில்லுங்கோவன் என்று கூப்பிடுறது என்ன காதுக்கு கேக்குதோ இல்லையோ..என்ர காலுக்கு கேட்டுச்சு..மள மள வெண்டு என்ர கால் என்னையும் அறியாமல் வீட்ட போற பாதையில் போனது.

போராட்டமும் புண்ணாகும்...ம்ம்ம்...ஏதோ ஆசையா இன்ரநெற்றில ஏதாலும் பார்பம் என்டு நினைக்க இவன் எனக்கு ஆப்பு வைப்பான் போல இருக்கு...என்ர கடவுளே..நீங்களும் நில்லாதையுங்கோ..ஓடுங்கோ அங்கால.. தலையில வெடி பட்டு வீதியில பிறகு விழுந்து கிடக்கேக்கதான் விடுப்பு பார்த்த அருமை உங்களுக்கு புரியும்...கஞ்சா குடிச்சாலும் கஞ்சி குடிச்சாலும் இப்பிடியே நல்லமாதிரி செத்தால் எனக்கு காணும் கண்டியலோ. ஆளை விட்டால் காணும் என்ர பரமசிவா!!!

நாரதர்

http://www.newjaffna.com/fullview.php?id=NzEy

சரிதானுங்கோ..

எங்கட சனத்துக்கு பியர் அடிச்சிட்டு கிளாப்புக்கு போய் தொட்டு ஆடினா, ஊர் சனம் பொடி வில்லங்கமான்ன ஆள் எண்டு ஊரை விட்டு ஒதுக்கி வைப்பார்கள்.... ஆனால் பனங்காணிக்கில கல்லுக்கு மேல குந்தியிருந்து கள்ளுக்குடிச்சுட்டு திருவிழாவுக்கு போய் கோழி புடிச்சால், பொடி பேய்க்காயாம் எண்டு ஊர் பெரிசுகள் தெருக்கோனரில் புழுதிக்க நிண்டு விண்ணானம் கதைப்பார்கள்.

:lol:

குறிப்பிட்ட வலைத்தளம் பற்றி ஏற்கனவே விரிவாக கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன:

ஓமோம் நீங்கள் முள்ளிவாய்க்காலில மாவீரராகிப்போட்டு இப்போது மீண்டும் புதியபிறப்பு எடுத்து பீதாம்பரம் பேசுகின்றீர்கள். :lol: கனதியான செய்தியை குறிப்பாக வெளிநாடுகளில் வாழக்கூடிய நம்மவருக்கு உசுப்பேத்தும் விதத்தில் எழுதாமல் கொஞ்சம் பக்குவத்துடன் எழுதுங்கள் என்று கூறுவதே உங்களுக்கு பிடிக்கவில்லை. "யாழ் பிரபல பாடசாலை பெண்கள் கர்ப்பம்" என்று எழுதும் உங்கள் கைவண்ணத்தை பார்க்கும்போதே தெரிகின்றது நீங்கள் நிச்சயம் மிகுந்த பொறுப்புணர்வுகொண்ட ஊடகக்காரர்தான் என்று. :lol:

ஓமோம் பட்டாசை யாழ்ப்பாணத்தில் உள்ள தங்கள் சகோதரிகளின், சகோதரங்களின் உள்ளாடைகளினுள் அல்லவா கொளுத்திபோடுகின்றார்கள். இவர்கள் வெறும் பட்டாசு என்பதே உண்மை.

உலகம் பூராகவுமே தவறான நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டு உள்ளன. வெளிநாடுகளில் வாழக்கக்கூடிய நம்மவர் குடுபங்களில் தினமும் எத்தனையோ எத்தனையோ விதமான வாழ்வியல் போராட்டங்கள், சீர்கேடுகள் நடக்கின்றன. இவற்றையெல்லாம் படம்பிடித்து வலைத்தளத்தில் போட்டுக்கொண்டா இருக்கின்றார்கள்? உங்கள் போன்ற கவர்ச்சிகரமாக செய்திகள் போட்டு பிரபலமாக நினைக்கும் நேற்று முளைத்த இணையங்கள் மாத்திரமே இப்படியான சீர்கேடுகளை செய்யத்துணிந்தன. உங்கள் வலைத்தளங்களின் பிரபலத்திற்காக சொந்த இனத்தையே சகோதரங்களையே துகிலுரியத் துணிந்த கனவான்கள் நீங்கள் என்று கூறிக்கொளுங்கள்.

ஊடகம் எண்ட் பேரில் உங்கட கற்பனை குதிரையை தட்டி விட்டிறுக்கிறீங்கள்..

அமெரிக்காவில் இருந்து கொண்டு யாழைச்சேர்ந்த காத்துகுட்டிகளின் மொபைல் போன் வீடியோவையும் MMSசையும் நம்பி உங்கட சேரிப்பாஷையில் போட்டுத்தாக்குகிறீர்கள்...... கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கிறீர்கள்..

BBCக்கு இணையான எமது பல ஊடகங்கள் இன்று.. பிச்சை எடுக்கும் போது.. உங்கள் இனையத்தை பார்த்தால் வித்தியசமா இல்ல... எரிச்சல்தான் வருது..

கையில ஒரு கமரா கிடைத்துவிட்டால் கிளம்பிவிடவேண்டியது யார் சீலையை தூக்கிக்கொண்டு திரிகின்றார் என்று வீணீர் வடித்துக்கொண்டு. இவர்களின் ஊடகவியல் என்பது துகிலுரிவதற்கு யாராவது மாட்டுபடமாட்டானா என தினமும் ஏங்குவது என்பது போல் தெரிகின்றது. இவர்கள் தளத்திற்கு சென்று பார்த்தேன். இப்படி ஓர் செய்தி உள்ளது:

பல்கலைக்கழக பேராசிரியர்களின் காதல், காம களியாட்டங்கள் ( வெகு விரைவில் உங்கள் முன் )‏ பல்கலைக்கழக பேராசிரியர்கள் என சொல்லிக் கொள்பவர்களின் அட்டகாச காம அட்டூழியங்கள் பற்றி பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் மற்றும் பல்கலைக்கழகம் சார்ந்தவர்களால் வெளிப்படுத்தப்படும் சகிக்க முடியாத மிகப் பெரும் உண்மைச் சம்பவங்கள் ....காத்திருங்கள் சில நாட்கள்..

இந்தியாவில் யாரையும் லொறி அடித்துவிட்டால்.. அக்கம் பக்கம் பதினெட்டுபட்டிகளில் இருக்கும் லொறிகளுக்கு தீ மூட்டுவது போல... எதாவது குண்டக்க மண்டக்க நடந்தால் இவையல்தான் பொறுப்பேக்கொனும்..

தமிழ்நாட்டை பார்த்து கெட்ட பழக்கம் பழகிக்கொண்டிருக்கும் எங்கட சனம் செஞ்சாலும் செய்யும் ,

நானும் யாழ்ப்பாணத்தில இருக்கிற தெரிஞ்ச ஆக்களுக்கு வீட்டில இருக்கிற பழைய கமராக்களை அனுப்பிவச்சுப்போட்டு ஓர் செய்தித்தளம் துவங்கலாமோ என்று பார்க்கிறன். தளத்துக்கு சுடச்சுட.கொம் என்று ஏதும் பெயர் போடலாம். பிறகு என்ரை தளத்தை யாராச்சும் விமர்சித்தால்.. மாவீரர் முள்ளிவாய்க்கால் கிருசாந்தி குமாரசாமி தேசியம் என்று ஏதாவது எழுதி இஞ்சால யாழிலையும் ஒட்டி ஆதரவு தேடலாம் தானே.

mafiau.jpg

தோழர், குருக்கள் குசு விட்டால் குற்றமில்லை என்று கூறுகின்றீர்கள்.

கீழ்க்கண்ட காணொளி இவர்கள் தளத்தின் பெயரில் யூரியூப்பில் இணைக்கப்பட்டது. பாருங்கள் சிறுவர்கள், இளைஞர்களை எப்படியான விசமத்தனமான நோக்குடன் வலைத்தளத்தில் குற்றவாளிகளாக இனம்காட்டுவதற்கு படாதபாடுபட்டு முயற்சிக்கின்றார்கள். இது இவர்களின் சொந்த தங்கை, தம்பியாக இருந்தால் இப்படி வலைத்தளத்தில் காட்டி கேலி பண்ணுவார்களா? ம்ம்.. யாரை நொந்து கொள்வது..? எங்கோ கற்காலத்தில் வாழவேண்டிய குரங்குகளுக்கு கமரா ஒன்றை வாங்கிக்கொடுத்தவனை சொல்லி அழவேணும். :lol:

தோழர், இன்னுமோர் காணொளி இவர்கள் தளத்தில் இருந்து:

ஓர் பாதிக்கப்பட்ட பெண் எனப்படுபவருடன் எப்படியான பண்புடன், வார்த்தைப் பிரயோகங்களுடன் பேட்டி காண்கின்றார்கள் என்பதை பாருங்கள். காணொளியின் இறுதியில் உள்ள இவர்களின் அவசரத்தையும், பலவந்தத்தையும் பாருங்கள். இதேபாணியில் இங்கு கனடாவில் யாராவது ஊடகவியலாளர் செய்திருந்தால் கம்பி எண்ணி இருப்பார். இங்கு பாதிக்கப்பட்ட பெண் இவர்களது சொந்த சகோதரமாக இருந்தால் இப்படி காணொளியை எடுத்து வலையில் ஏற்றுவார்களா?

மற்றைய விமர்சனங்களைப் பற்றித்தெரியாது. ஆனால்..நேற்று யாழ் மாணவிகள் பற்றி ஓர் செய்தி இணைக்கப்பட்டதன் பின்னரே நான் இன்று இப்படி ஓர் விமர்சனம் வைத்தேன்:

அதேசமயம் முன்பு இவர்கள் தளத்தில் இணைக்கப்பட்ட ஓர் முக்கிய காணொளியை நான் இங்கு இணைத்து இருந்தேன். குறிப்பிட்ட காணொளியை தரவேற்றியமைக்காக இவர்களுக்கு பாராட்டு கூறலாம்.

நாம் – யாழ் உறவுகள் யாழ் இணையம் மூலம் நம்மவர் படைப்புக்களிற்கு ஆக்கபூர்வமான விடயங்களுக்கு எப்போதும் ஆதரவு கொடுத்து வருகின்றோம். வடலி வலைத்தளம் தொடக்கம் நேசக்கரம் வரை பல்வேறு பங்களிப்புக்கள் உள்ளன. அவசரப்பட்டு ஆரவாரத்திற்காக செய்திகளை வெளிவிடாமல் சற்று பொறுப்பான முறையில் செய்திகளை வெளிவிட்டு குறிப்பிட்ட வலைத்தளம் வளர்ச்சி அடைந்தால் நமக்கும் மகிழ்ச்சியே.

உங்களின் ஒவ்வொரு வரிகளிலும் தெரிகிறது.... உங்களது தெளிவின், நீதியின், ஊடக தர்மத்தின், சமுதாய அக்கறையின் இலட்சணங்கள்!

நீங்கள் சொல்லியிருந்த.... ஊரில் நடந்த தவறுகளை நான் நியாயப்படுத்த முனையவில்லை!

ஊடகம் என்ற விடயத்தினை கையிலெடுத்தபின் அதை எவ்வாறு கையாளவேண்டுமோ.. அதை அவ்வாறுதான் கையாளவேண்டும். என்னைப் பொறுத்தவரையில், ஊடகத்திற்கு நடுநிலை என்பதே இருக்கக் கூடாது. அது, யார் பாதிக்கப்படுகின்றார்களோ அவர்களின் பக்கமாகவே அது சாய வேண்டும். அவர்களுக்காகவே அது வாய்திறக்கும்;சில சமயங்களில் அவர்களுக்காகவே அது மெளனமாயிருக்கும்.

ஒரு பாதிக்கப்பட்ட இனத்திடம்... அழிந்து நொய்ந்து போயிருக்கும் இனத்திடம்... எஞ்சியிருக்கும் மானத்தின் கடைசித் துகிலையும் உரியும் துச்சாதனர்களாய்... தமிழரின் தன்மானம் காக்க புறப்பட்டவர்கள் என்று சொல்லிக்கொண்டு கிளம்பும் நீங்கள் மாறிவிடாதீர்கள்!

தோழரே நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பவேண்டாம்....

இந்த இணையத்தின்.... சொல்லாடல், கருத்துநயம், பழக்கவழக்கம், பொய் கதைகள், எமாற்றுத்தனம்.. திருகுதாளம்.... அதன் மூலம்... பல அப்பவிகளை மன / உடல் உளைச்சலுக்கு உள்ளாக்கும் போக்கிரித்தனம்.. இவற்றையே விமர்சிக்குறோம்.. இவர்களை போன்றவர்களுக்கு பச்சை மட்டையில்லை, லைட் போஸ்ட்தான் சரி...

இந்த இணையதளத்துடனும் ஆசிரியர் குழுவினரிடமும் முரண்படாமல் இருப்பதுதான் நல்லது. எதற்கு இதற்குள் போய் வில்லங்கத்தை வாங்குவான் இவர்களின் எழுத்துக்களைப் பார்த்தால் விமர்சிப்பவர்களை மண்டையில் போட்டுவிடுவார்கள்போல் உள்ளது.

மூன்று தசாப்த விடுதலைப்போராட்டத்தை விளக்குப்பிடிக்குறதுக்குள்ள அடக்கிவிடும் திறமையுள்ள ஆசிரியர் குழுவிற்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்டவன் எல்லாம் தமிழினத்தைப் பற்றிக் கவலைப் பட்டுக் கருத்துச் சொல்லும் போது நேரே நின்றவன் சொல்லக் கூடாதா?

ஓ, அது தான் ஏதாவது பினாத்துவம் என்று வெளிக்கிட்டு இருக்கிறீங்கள் போல. :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த இணையத் தளத்தில் எந்தவிதாமன் ஈடுபாடும் கிடையாது. முக்கியமாக கலாச்சாரப் பாதுகாப்பு என்ற பெயரில் இவர்கள் செய்யம் கூத்தை தாங்க முடியவில்லை. இவர்களுக்கு இதற்கான அதிகாரத்தை யார் குடுத்தவயல் எண்டு தான் எனக்கு யோசினை. முரளி அண்ணா சொன்னதப் போல மற்ற ஆக்களிண்ட அந்தரங்கம் (privacy) பற்றி எந்தக் கவலையும் படாமல் அவர்களுக்கு மன உளைச்சலை தரும் வகையில் இவர்கள் செயல்படுவது எந்தவகையிலும் நியாயம் இல்லை. அப்படிக் குறிப்பிடுபவர்கள் தவறு செய்திருந்தாலும் கூட. விசேடமாக அந்தப் பெண்ணை இவர்கள் பேட்டி கண்ட விதம் அருவருக்கத்தக்கது. வார்த்தைப் பிரயோகங்கள் மற்றும் சொலாடல்கள் மிகவும் கீழ்த் தரமானவையாக இருக்கின்றன. நேரே நின்றவன், முள்ளிவாய்க்கால் எண்டு சும்மா யாரும் கதை சொன்னாப் போல யாரும் நம்பப் போவதில்லை. எனக் கெண்டா கிளு கிளுப்பான கீழ்த்தரமான செய்திகளை வெளியிட்டு பார்வையாளர்களை கவர்வதே இவர்களின் நோக்கம் என்பது புரிகின்றது.

மட்டுறுதுனர்களிடம் ஒரு சந்தேகம் - இந்த இணையம் யாழில் விளம்பரம் செய்ய அனுமதிக்கப் பட்டிருப்பது கள விதிகளுக்கு அமைவானதா?

மூன்றாம் தர பேர்வளிகள்.

சில சினிமா படங்களும் இப்படித்தான் உள்ளகுப்பைகள் எல்லவாற்றையும் காட்டிவிட்டு இப்படி இருக்ககூடாது என்று காட்டினோம் என்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.