Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் நகரப் பகுதியில் அமைந்திருக்கின்ற தந்தை செல்வா நினைவுத் தூபி இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளது

Featured Replies

யாழ் நகரப் பகுதியில் அமைந்திருக்கின்ற தந்தை செல்வா நினைவுத் தூபி இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளது ‐ ஜீரிஎன் செய்தியாளர்

27 October 10 03:48 pm (BST)

யாழ் நகரப் பகுதியில் அமைந்திருக்கின்ற தந்தை செல்வா நினைவுத் தூபி இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளது. அங்கு அலங்கரிப்பிற்காக வைக்கப்பட்டிருந்த மரங்கள் யாவும் வெட்டி எறியப்பட்டுள்ளன. முற்றுமுழுதான உச்ச பாதுகாப்பிற்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை பல தரப்பிலும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே யாழ் பொதுசன நூலகத்திற்கு சென்றிருந்த சிங்கள சுற்றுலாப்பயணிகள் பொதுசன நூலகத்தை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் வன்முறைகளில் ஈடுபட்டிருந்தமை தெரிந்தNது. சம்பவத்தின் போது நூலகத்தின் புத்தகங்கள் பலவும் எடுத்து வீசப்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே தந்தை செல்வாவின் நினைவுத் தூபி அமைந்திருந்த அலங்கார மரங்கள் யாவும் வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கின்றன. ஒரு நாசகாரக் கும்பலே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது.

தென்னிலங்கையில் இருந்து யாழ் செல்கின்ற சிங்கள சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு போதிய தங்குமிட வசதிகள் இன்மையால் துரையப்பா விளையாட்டரங்கப் பகுதிகளில் தங்க வைப்பட்டுள்ளனர். அதேபோன்று நாவற்குழியிலுள்ள அரச களஞ்சியத்திலும் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இரண்டு அரச கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இன்று அதிகாலை அந்த நினைவுத் தூபிப்பகுதியிலுள்ள மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன. நீண்டகால யுத்த நடவடிக்கைகளின் போது பெரும் அழிகளை எதனையும் சந்தித்திராத தந்தை செல்வா நினைவுத் தூபிப்பகுதி தொடர்ச்சியாக தமிழ் மக்களால் மதிக்கப்படுகின்ற ஒரு பகுதியாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

My link

மிகவும் அநாகரீகமான செயல்.

"தமிழர்களை கடவுள் தான் காப்பற்ற வேண்டும்" - தந்தை செல்வா

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அநாகரீகமான செயல்.

"தமிழர்களை கடவுள் தான் காப்பற்ற வேண்டும்" - தந்தை செல்வா

கடவுள் எத்தனை தரம்வரவேண்டும் என்றும் சொல்லுங்கள்

ஒருக்கா வந்து காயப்படுத்தி அனுப்பிவிட்டோம்

  • தொடங்கியவர்

எங்கே சென்றது இந்த கூத்தமைப்பு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் ராஜீவ் காந்தியின் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதற்காக தமிழனே கொந்தழிக்கின்றானாம்.

ஈழத்துக் காந்தி என்று அழைக்கப்படும் எம் தந்தை செல்வாவின் நினைவுத் தூபிக்கு நேர்ந்த கதிக்கு கூட்டமைப்பு கூட கண்டனம் தெரிவிக்கவில்லை எனும் போது என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

வாத்தியார்

**********

... எல்லாம் குத்தியின் திருவிளையாடல் ....

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனின் நினைவுத்தூபியை உடைத்தவர்கள் அவர் ஒரு புலி என்று காரணம் கூறித் தப்பலாம்.அகிம்சை முறையில் போராடிய தந்தை செல்வாவின் நினைவுத்தூபியை உடைப்பதற்கு என்ன காரணம் கூறப்போகிறார்கள்.போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து தப்புவதற்கு தமிழரை ஆத்திரமூட்டி மீண்டும் இரத்தக்களரியை உருவாக்கி தமிழரைப் பயங்கரவாதிகள் என்று சித்தரிப்பதற்கு முயல்கிறார்கள்.தமிழர்களுக்கு உச்சக் கட்ட பொறுமை இப்போது அவசியம்.

சிங்களம் இன்னும் 58 ஆம் ஆண்டிலயே நிக்குது...இவ்வளவு அழிவுகளுக்கு பின்பும் மனம் மாறவில்லை.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.