Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நினைவில் நின்றவை

Featured Replies

இங்கு பழையபாடல்களுக்கு இருக்கும் ஆர்வம் என்னை இந்த முயற்சியில் ஆர்வப்படுத்துகின்றது. இந்தப்பாடல் 30 வருடங்களுக்கு முன்னர் வந்தபாடல் இணையத்தில் மட்டும் கேட்ககூடியவாறு இணைத்திருக்கின்றனர். அதை பதிவு பண்ணி சற்று மெருகேற்றி இணைத்துள்ளேன். நீங்கள் தரும் ஆதரவைப் பார்த்து இப்படியான பாடல்களை இணைக்க முயல்வேன்.

இணையத்தில் மட்டும் கேட்ககூடியபாடல்கள் உங்களுக்கு பிடித்து தேவைப்பட்டால் அந்தபாடலின் பெயரையும் லிங்கையும் எனக்கு தனிமடல்மூலம் அனுப்பிவிடுங்கள்

ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி சல சல சல என சாலையிலே.

படம் : தெரியாது

பாடியவர் : தெரியாது

படம்: பாசம்

பாடியவர்: எஸ் ஜானகி

இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடலாசிரியர்: கண்ணதாசன்

  • Replies 205
  • Views 32k
  • Created
  • Last Reply

இங்கு பழையபாடல்களுக்கு இருக்கும் ஆர்வம் என்னை இந்த முயற்சியில் ஆர்வப்படுத்துகின்றது. இந்தப்பாடல் 30 வருடங்களுக்கு முன்னர் வந்தபாடல் இணையத்தில் மட்டும் கேட்ககூடியவாறு இணைத்திருக்கின்றனர். அதை பதிவு பண்ணி சற்று மெருகேற்றி இணைத்துள்ளேன். நீங்கள் தரும் ஆதரவைப் பார்த்து இப்படியான பாடல்களை இணைக்க முயல்வேன்.

இணையத்தில் மட்டும் கேட்ககூடியபாடல்கள் உங்களுக்கு பிடித்து தேவைப்பட்டால் அந்தபாடலின் பெயரையும் லிங்கையும் எனக்கு தனிமடல்மூலம் அனுப்பிவிடுங்கள்

நன்றி வியாசன் அண்ணா. :lol:

படம்: இரத்தினபுரி இளவரசி

பாடியவர்: ரி ஆர் மகாலிங்கம்

இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

ஏனென்று கேட்கவே ஆளில்லை என்பதாலே

தானென்ற அகங்காரம் தலைவிரித்து ஆடுதடா!

ஊனுருக ஏழைகளின் உள்ளமெல்லாம் புண்ணாக

உயிரோடு கொல்பவனைக் காலம் உயர்வாய் மதிக்குதடா!

பொறுமை ஒருநாள் பொங்கி எழுந்தால் பூமி நடுங்குமடா

கொடுமை புரியும் பாதகனை அவன் குறைகள் விழுங்குமடா!

காலையாகி மதியமாகி மாலையானது பலபொழுது

மாலையாகி பகலும் முடிந்து இருளில் போனது பல இரவு

ஞாலம் முழவதுமே ஆள்கின்ற கதிரோன்

வாழ்வெல்லாம் ஒருநாள் வாழ்வெண்றால்

தினம் தீராத வெறியோடு போராடும் மனிதன்

பேராசை நிலைதன்னை என்னவென்று சொல்வேன்!

மானம் என்றே மங்கை அழுதால் இன்பமென்றே நகைப்பானே

பாவ வயதில் செய்த வினையை வாழ்வு முடிவில் நினைப்பானே

தானாகச் சிரிப்பான் தானாக அழுவான் காணாத கனவும் கான்பானே

அவன் ஆனந்த வாழ்வென்று ஈனங்கள் தேடி

கூனாகி ஊனாகிக் கூடாகிப் போவானே

http://music.cooltoad.com/music/song.php?id=263019

நீங்கள் எல்லோரும் பாட்டை இணைக்கிறீர்கள் என்னால் கேக்க முடியலையே ஏன்? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ரசிகை தரவிறக்கம் செய்யாமல் எப்படி கேட்கமுடியும்

முதலில் தரவிறக்கம் செய்யுங்கள் . தரவிறக்கம் செய்தபின்பும் கேட்கமுடியாவிட்டால் உங்கள் கணனியை தொட்டு கும்பிட்டுவிட்டு தூக்கி எறிந்துவிடுங்கள் :lol::lol:

என்ன ரசிகை தரவிறக்கம் செய்யாமல் எப்படி கேட்கமுடியும்

முதலில் தரவிறக்கம் செய்யுங்கள் . தரவிறக்கம் செய்தபின்பும் கேட்கமுடியாவிட்டால் உங்கள் கணனியை தொட்டு கும்பிட்டுவிட்டு தூக்கி எறிந்துவிடுங்கள் :lol::lol:

என்ன வியாசன் அண்ணா இப்படிச்சொன்னால் எப்படி தரவிறக்கம் செய்ய பாட்டு வருது இல்லை வேற ஏதோ வெப் தான் வருது. செய்து களைச்சுப் போனன் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சா உங்களுக்கு எப்படி தரவிறக்கம் செய்வது என்று சொல்கின்றேன்

இங்கே இணைக்கப்படுகின்ற இணைப்பை அழுத்தியதும் புதிய திரை திறக்கும்

அங்கே நீலநிறத்தில் Download என்றிருக்கும். அதை அழுத்துங்கள் அதன்பின் இன்னுமொரு திரை தோன்றும் (நீங்கள் Coolgoose Register செய்து வைத்திருங்கள்) உங்கள் உள்நுழைவு அனுமதி கேட்கும்) அதை கொடுத்தால் இன்னுமொரு திரை தோன்றும் அதை வாசித்து அதன்படி செய்து கொள்ளுங்கள்

சா உங்களுக்கு எப்படி தரவிறக்கம் செய்வது என்று சொல்கின்றேன்

இங்கே இணைக்கப்படுகின்ற இணைப்பை அழுத்தியதும் புதிய திரை திறக்கும்

அங்கே நீலநிறத்தில் Download என்றிருக்கும். அதை அழுத்துங்கள் அதன்பின் இன்னுமொரு திரை தோன்றும் (நீங்கள் Coolgoose Register செய்து வைத்திருங்கள்) உங்கள் உள்நுழைவு அனுமதி கேட்கும்) அதை கொடுத்தால் இன்னுமொரு திரை தோன்றும் அதை வாசித்து அதன்படி செய்து கொள்ளுங்கள்

இப்படித்தான் செய்தனான். சரி இன்னும் ஒருக்கா முயற்சி செய்யுறன். விளக்கத்துக்கு நன்றி :lol:

படம்: இரத்தினபுரி இளவரசி

பாடியவர்: ரி ஆர் மகாலிங்கம்

இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

ஏனென்று கேட்கவே ஆளில்லை என்பதாலே

தானென்ற அகங்காரம் தலைவிரித்து ஆடுதடா!

ஊனுருக ஏழைகளின் உள்ளமெல்லாம் புண்ணாக

உயிரோடு கொல்பவனைக் காலம் உயர்வாய் மதிக்குதடா!

பொறுமை ஒருநாள் பொங்கி எழுந்தால் பூமி நடுங்குமடா..

கொடுமை புரியும் பாதகனை அவன் குறைகள் விழுங்குமடா! *2

(பொறுமை ஒருநாள்)

காலையாகி மதியமாகி மாலையானது பலபொழுது

மாலையாகி பகலும் முடிந்து இருளில் போனது பல இரவு

ஞாலம் முழவதுமே ஆள்கின்ற கதிரோன்

வாழ்வெல்லாம் ஒர்நாள் வாழ்வெண்றால்

தினம் தீராத வெறியோடு போராடும் மனிதன்

பேராசை நிலைதன்னை என்னவென்று சொல்வேன்!

(பொறுமை ஒருநாள்)

மானம் என்றே மங்கை அழுதால் இன்பமென்றே நகைப்பானே

பால வயதில் செய்த வினையை வாழ்வு முடிவில் நினைப்பானே

தானாகச் சிரிப்பான் தானாக அழுவான் காணாத கனவும் கான்பானே

அவன் ஆனந்த வாழ்வென்று ஈனங்கள் தேடி

கூனாகி ஊனாகிக் கூடாகிப் போவானே

(பொறுமை ஒருநாள்)

http://music.cooltoad.com/music/song.php?id=263019

இந்தாங்கோ..மெருகூட்டப்படாத பட்டு..

:P

படம்: பாசம்

பாடியவர்: எஸ் ஜானகி

இசை: விஸ்வநாதன் ராமூர்த்தி

பாடலாசிரியர்: கண்ணதாசன்

ஜல் ஜல் ஜல் எனும் சலங்கையொலி..

சல சல சலவென சாலையிலே..

செல் செல் செல்லுங்கள் காளைகளே..

சேர்ந்திட வேண்டும் இரவுக்குள்ளே..

(ஜல் ஜல் ஜல் எனும்)

காட்டினில் ஒருவன் எனைக்கண்டான்..

கையில் உள்ளதை கொடுவென்றான்..

கையில எதுவும் இல்லையென்று..

கண்ணில் இருந்ததை கொடுத்துவிட்டேன்..

(ஜல் ஜல் ஜல் எனும்)

அவன்தான் திருடன் என்றிருந்தேன்..

அவனை நானும் திருடிவிட்டேன்..

முதல்முதல் திருடும் காரணத்தால்..

முழுசாய் திருட மறந்துவிட்டேன்..

(ஜல் ஜல் ஜல் எனும்)

இன்றே அவனை கைதுசெய்வேன்..

என்றும் சிறையில்வைத்திருப்பேன்..

விளக்கம் சொல்லவும் முடியாது..

விடுதலை என்பதும் கிடையாது..

(ஜல் ஜல் ஜல் எனும்)

http://music.cooltoad.com/music/song.php?id=263023

படம்: புதுவெள்ளம்

பாடியவர்: டி எம் சௌந்தரராஜன்

இசை: எம் எஸ் விஸ்வநாதன்

பாடலாசிரியர் வாலி

ஊரார் பொருள்திருடி..உண்ணுகின்ற காக்கைக்கெல்லாம்

உட்கார இடங்கொடுக்கும்..எருமை அண்ணாச்சி

உங்களைப்போல்..நாங்களும்தான்..

பாடல்: ஓரு நாடகம் நடக்குது நாட்டிலே

படம்:

பாடியவர்: டி எம் சௌந்தரராஜன்

இசை: எம் எஸ் விஸ்வநாதன்

பாடலாசிரியர்: கண்ணதாசன்

ஓரு நாடகம் நடக்குது நாட்டிலே

அதை நான்சொல்ல வந்தேன் பாட்டிலே

ஓரு நாடகம் நடக்குது நாட்டிலே

சிலர் ஆடுற மேடையும் போடுற வேஷமும்

ஊரார் கண்ணுக்குத் தெரியல்லே

அந்த உண்மை எவனுக்கும் புரியல்லே

பாய்ந்து வருகுது அதிகாரம்

அதன் பக்கத்தில் ஆயிரம் பரிவாரம்

இது போகிற போக்கு சரியில்லையென்று

ஊருக்குக் காட்டுவேன் அடையாளம்

உத்தமர் போலொரு உபதேசம்

அந்தப் புத்தரைப்போலொரு வெளிவேஷம்

இந்தப் போலிகள் போடும் போர்வையை எடுத்தால்

உருட்டல் மிரட்டல் சிறைவாசம்

ஏழைகள் மிதப்பது கண்ணீரில்

இந்த எத்தர்கள் மிதப்பது பன்நீரில்

இந்தக் கோழைகள் வீரம் எத்தனைகாலம்

கொடிகட்டிப் பறக்கும் தர்ப்பாரில்

ஓரு நாடகம் நடக்குது நாட்டிலே

அதை நான்சொல்லவந்தேன் பாட்டிலே

ஓரு நாடகம் நடக்குது நாட்டிலே

அதை நான்சொல்ல வந்தேன்.. பா..ட்..டி..லேஏஏஏஏஏ..

http://music.cooltoad.com/music/song.php?id=263416

படம்: அருனோதயம்

பாடியவர்: டி எம் சௌவுந்தரராஜன்

இசை: கே வி மகாதேவன்

பாடலாசிரியர்: கண்ணதாசன்

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..

உனக்கு நீதான் நீதிபதி..

மனிதன் எதையோ பேசட்டுமே..

மனசை பார்த்துக்க நல்லபடி உன்

மனசை பார்த்துக்க நல்லபடி..

(உலகம் ஆயிரம்)

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..

கதைகட்ட ஒருவன் பிறந்துவிட்டால்

கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு..

காப்பாற்ற சிலபேர் இருந்துவிட்டால்..

கள்வர்கள் வாழ்விலும் நியாயமுண்டு..

கோட்டுக்குத்தேவை சிலசாட்சி..

குணத்துக்கு தேவை மனசாட்சி உன்..

குணத்துக்கு தேவை மனசாட்சி..

(உலகம் ஆயிரம்)

மயிலைப்பார்த்து கரடியென்பான்..

மானைப்பார்த்து வேங்கையென்பான்..

குயிலைப்பார்த்து ஆந்தையென்பான்..

அதையும் சிலபேர் உண்மையென்பார்..

யானையைப்பார்த்த குருடனைப்போல்..

என்னைப்பார்த்தால் என்னசெய்வேன்..சிலர்

என்னைப்பார்த்தால் என்னசெய்வேன்..

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..

கடலில் விழுந்த நன்பனுக்கு..

கைகொடுத்தேன் அவன் கரையேற..

கரைக்கு அவனும் வந்துவிட்டான்..

கடலில் நான்தான் விழுந்துவிட்டேன்..

சொல்லி அழுதால் தீர்ந்துவிடும்..

சொல்லத்தானே வார்த்தையில்லை..அதை

சொல்லத்தானே வார்த்தையில்லை..

(உலகம் ஆயிரம்)

http://as01.coolgoose.com/music/song.php?id=193147

நான் பாடும் பாடல் நீயல்லவா

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீ இல்லாத வாழ்க்கை கனவல்லவா

நான் பாடும் பாடல் நீயல்லவா

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீ இல்லாத வாழ்க்கை கனவல்லவா

இழந்தென்றல் காற்று தாலாட்டும் நேரம்

எனை மீறி நெஞ்சம் உனை நாடுதே

வெண்மேகத்தேரில் விளையாட எண்ணி

ஏதேதோ ஆசை உண்டாகுதே

நீ எங்கு சென்றாலும் என் உள்ளமே

நீ போகும் வழி மீது பூத்தூவுமே

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீ இல்லாத வாழ்க்கை கனவல்லவா

நான் பாடும் பாடல் நீயல்லவா

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீ இல்லாத வாழ்க்கை கனவல்லவா

நதியாக நானும் பிறந்தாலும் போதும்

உன் பேரைச்சொல்லி நடை போடுவேன்

மண்ணாக நானும் மறு ஜென்மம் கொண்டால்

உன் பாதம் தாங்கும் நிலமாகுவேன்

என்னாளும் தேயாத சந்ரோதயம்

என் நெஞ்சில் ஒளி வீசும் தேவாலயம்

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீ இல்லாத வாழ்க்கை கனவல்லவா

நான் பாடும் பாடல் நீயல்லவா

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீ இல்லாத வாழ்க்கை கனவல்லவா

மிக்க நன்றி தியாகம்.. நீங்கள் தேடியபோது இந்த பாடலை நானும் ஒரு முறை கேட்டிருந்தேன். குறுகிய காலத்தில் வசிப்பிடம் மாறியபடியால் எங்கோ மாற விட்டு விட்டேன்என்றாலும் போவோர் வருவோர் எல்லோரையும் இந்த பாடலை கேட்டபடி இருந்தேன். கேட்போர் எல்லோரும் நீ தானே நான் பாடக்காரணம் என்ன பாடலை தான் தேடி தந்தார்கள்.

இப்போது வீட்டில் அடிக்கடி ஒலிக்கும் பாடலில் இதுவும் ஒன்று.

மீண்டும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரமா.. இந்தபாடல் இணைய வானொலியில் இருந்து ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம் 16kb/s.அத்துடன் இது stereoகிடையாது, mono. உம்மிடம் இருந்த cdயில் இருந்து இந்த பாடலை நல்ல ஒலித்தரத்தில் இங்கே mp3யாக தரமுடியுமா?

  • தொடங்கியவர்

பாடல்களை நானும் பெற்று கொண்டேன்...நன்றி

முதன் முதலாக இப்பொழுது தான் இப்பாடல்களை கேட்கிறேன் :lol:

படம்: சாரதா

பாடியவர்: டி எம் சௌந்தரராஜன்

இசை: கே வி மகாதேவன்

பாடலாசிரியர்: கண்ணதாசன்

மெல்ல மெல்ல அருகில்வந்து மென்மையான கையைதொட்டு..

அள்ளி அள்ளி அணைக்கத்தாவுவேன்..நீயும் அச்சத்தோடு விலகி ஓடுவாய்..

ம்.. (மெல்ல மெல்ல)

துள்ளியோடும் மானைப்பார்த்து துடியிடையில் கை சேர்த்து.. (2)

பிள்ளைபோல தூக்கிக்கொள்ளுவேன்.. கூந்தல் பின்னலினால் விலங்குபோடுவேன்..

பட்டுமெத்தை மஞ்சத்தின்மேல் பவளம் போன்ற உன்னை வைத்து..

பாய்ந்துசென்ற கதவை மூடுவேன்.. (பட்டுமெத்தை)

வந்து பக்கத்திலே அமர்ந்து கொள்ளுவேன்.. (2)

ம்.. (மெல்ல மெல்ல)

இளமையான கிளியிரண்டு உரிமையான உறவுகொண்டு

இன்பமோடு வாழ்வை ரசிக்கும்.. (இளமையான) (2)

அந்த நினைவினிலே இன்பம் இனிக்கும்.. (2)

ம்.. (மெல்ல மெல்ல)

http://music.cooltoad.com/music/song.php?id=264396

வசந்தக் காலக் கோலங்கள்

வானில் விருந்த கோடுகள்

கலைந்திடும் கனவுகள்

கண்ணீர் சிந்தும் நினைவுகள்

இந்தப் பாடல் இடம்பெற்ற படம் என்ன? இதன் முழு எழுத்துவடிவையும் தர முடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசந்தக் காலக் கோலங்கள்

வானில் விருந்த கோடுகள்

கலைந்திடும் கனவுகள்

கண்ணீர் சிந்தும் நினைவுகள்

இந்தப் பாடல் இடம்பெற்ற படம் என்ன? இதன் முழு எழுத்துவடிவையும் தர முடியுமா?

http://music.cooltoad.com/music/song.php?id=188645

http://music.cooltoad.com/music/song.php?id=69957

கேள்விகளை வைக்க முதல் இணையத்தை தேடி பார்ப்பது நல்லது. பாட்டை கேட்டு நீங்கள் தான் எழுதி எடுக்க வேண்டும்

படம்: நீர்க்குமிழி

பாடியவர்: டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன்

இசை: வி குமார்

பாடலாசிரியர்: சுரதா

ஆடி அடங்கும் வாழ்க்கையடா..

ஆறடி நிலமே சொந்தமாடா..

ஆடி அடங்கும் வாழ்க்கையடா..

முதலில் நமக்கெல்லாம் தெட்டிலடா..

கண்மூடினால் காலில்லா கட்டிலடா..

(ஆடி அடங்கும்)

பிறந்தோம் என்பதே முகவுரையாம்..

பேசினோம் என்பதே தாய்மொழியாம்..

மறந்தோம் என்பதே நித்திரையாம்..

மரணம் என்பதே முடிவுரையாம்..

(ஆடி அடங்கும்)

சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்..

தீமைகள் செய்பவன் அழுகின்றான்..

இருப்போம் என்று நினைப்பவர் கண்களை..

இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்..

(ஆடி அடங்கும்)

வகுப்பான் அதுபோல் வாழ்வதில்லை..

வந்தவர் யாருமே நிலைத்ததில்லை..

தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை (2)

தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை..

(ஆடி அடங்கும்)

http://music.cooltoad.com/music/song.php?id=223397

ஆறடி நிலமே சொந்தமானது!

துளி விந்தில் உயிர் தந்து

சாண் வயிற்றுக்குள் உடல் வளர்த்து

ஆறாம் அறிவை அவசியத்திற்கு வைத்து

ஆறடி நிலத்தை அளந்துத் தந்து

மனிதனை இறைவன் படைத்திட்டான்!

இருவரின் இச்சையில் பிறப்பு எடுத்து

ஒருவனின் பிச்சையில் உயிர் வாழ்ந்து

எல்லாம் தனதாய் ஆர்ப்பரித்து

ஆசையும், தேவையும், அளவும் அறியாது

ஆணவத்தின் உச்சி நின்று ஆக்ரமித்தான்!

ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடி

உயிர் துறந்து கூடு ஒடுங்கிய போது,

மனிதன் இறைவனை நினைத்திட்டான்

அளந்து வைத்த ஆறடி நிலத்திற்காக

நன்றிச் சொன்னான்!

வெங்கி / Venki

வசந்தக் காலக் கோலங்கள்

வானில் விருந்த கோடுகள்

கலைந்திடும் கனவுகள்

கண்ணீர் சிந்தும் நினைவுகள்

இந்தப் பாடல் இடம்பெற்ற படம் என்ன? இதன் முழு எழுத்துவடிவையும் தர முடியுமா?

படம்: தியாகம்

Vasantha kaala kolangaL

Vaanil vizhundha kodugaL

Kalaindhidum kanavugaL

Kanneer sindhum ninaivugaL

Alaiyil aadum kaagidham

Adhilum enne kaaviyam

Nilai illadha manidhargaL

Avarkkum enne uravugaL

ULLam endrum ondru

Adhil irandum undallavooo

Kalaindhidum kanavugaL

Kanneer sindhum ninaivugaL

Theril aerum munname

Devan uLLam therindhadhu

Nalla veLai thiru uLLam

Nadakkavillai thirumaNam

Nandri nandri devaa

Unnai marakka mudiyumaaa

Kalaindhidum kanavugaL

Kanneer sindhum ninaivugal

Courtesy of Nanthini tmfpage.com

வணக்கம் மதிவதனன்

தங்கள் உதவிக்கு நன்றி

படம்: மகனே கேள்

பாடியவர் டி எம் சௌந்தரராஜன்

இசை: வெங்கட்ராமன்

பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

ஆறறிவில் ஓரறிவு அவுட்டு..சிலருக்கு

(ஆறறிவில் ஓரறிவு அவுட்டு..

இருக்கும் ஐந்தறிவும் நிலைக்குமின்னா..

அதுவும்கூட டவுட்டு..

ஆறறிவில் ஓரறிவு அவுட்டு..)

இருக்கும் ஐந்தறிவும் நிலைக்குமின்னா..

அதுவும்கூட டவுட்டு..

ஆறறிவில் ஓரறிவு அவுட்டு..

அடக்கமில்லா பெண்கள் சிலர் நட்டக்கும் எட்டக்கு நடையிலும்.. (2)

ஆதிகால பண்பை காற்றில் பறக்கவிடும் உடையிலும்..

(ஆறறிவில் ஓரறிவு அவுட்டு)

சண்ரேகை தெரியாத பொய்ரேகை காரனிடம்..

கை ரேகை பார்க்கவரும் முறையிலும்..

அவன் கண்ணடதுபோல் சொல்லுவதை நம்பிவிடும் வகையிலும்..

(ஆறறிவில் ஓரறிவு அவுட்டு)

ஏமாறும் மனத்திலும் ஆமாஞ்சாமி கருத்திலும்..

எந்த நாளும் திருந்தாத மூடத்தனத்திலும்..

சோம்பேறி சுகத்;திலும் தொடைநடுங்கும் குணத்திலும்..

சொந்த நிலையை மறந்து பேசும் வீணர் பேச்சிலும்..

சிந்திக்காத இடங்களிலும் தெண்டச்சோத்து மடங்களிலும்

(ஆறறிவில் ஓரறிவு அவுட்டு)

முரடன் முளையிலும் மூர்க்கர்களின் வேலையிலும்..

திருடன் நினைப்பிலும் குருட்டுவாத வகுப்பிலும்..

முறைகெட்ட வாழ்க்கையிலும் முட்டாளின் செயற்கையிலும்..

தரங்கெட்ட நடத்தையிலும் தானென்ற அகந்தையிலும்

ஜாதிபேத வளர்த்தியிலே ஊறிப்பொன உணர்ச்சியிலும்..

(ஆறறிவில் ஓரறிவு அவுட்டு)

http://www.coolgoose.com/music/song.php?id=205899

சி*5 & சின்னாச்சிக்காக....

பாடியவர் - எல்.ஆர்.ஈஸ்வரி

இசை - எனக்கு தெரியாது

படம் - அதுவும் தெரியாது

காதோடுதான் நான் பாடுவேன்

மனதோடுதான் நான் பேசுவேன்

விழியோடுதான் விளையாடுவேன்

உன் மடி மீதுதான் கண் மூடுவேன்

காதோடுதான் நான் பாடுவேன்

மனதோடுதான் நான் பேசுவேன்

விழியோடுதான் விளையாடுவேன்

உன் மடி மீதுதான் கண் மூடுவேன்

காதோடுதான் நான் பாடுவேன்...

வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான்

நான் அறிந்தாலும் அதுகூட நீ சொல்லி தான்

உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா? *2

குல விளக்காக நான் வாழ வழி காட்டவா?

காதோடு தான் நான் பாடுவேன்....

பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது

நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது

பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது

நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது

எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது

இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது

காதோடுதான் நான் பாடுவேன்

மனதோடுதான் நான் பேசுவேன்

விழியோடுதான் விளையாடுவேன்

உன் மடி மீதுதான் கண் மூடுவேன்

இந்த பாடல் என் மனைதை கவர்ந்த பாடல் நன்றி தூயா

படம்: லக்ஷ்மி கல்யாணம்

பாடியவர்: டி எம் செந்தரராஜன்

இசை: எம் எஸ் விஸ்வநாதன்

பாடலாசிரியர்: கண்ணதாசன்

யாரடா மனிதன் இங்கே கூட்டிவா அவனை இங்கே..

இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே..

மனிதரில் நாய்களுண்டு மனதினில் நரிகளுண்டு.. (2)

பார்வையில் புலிகளண்டு பழக்கத்தில் பாம்பு உண்டு.. (2)

நாயும்..நரியும்..புலியும்..பாம

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.