Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யோகி, புதுவை மனைவிமார் சாட்சியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யோகி, புதுவை மனைவிமார் சாட்சியம்

யாழ்ப்பாணத்தில் விசாரணைகளை நடத்திய படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களாகிய யோகரட்ணம் யோகி, புதுவை இரத்தினதுரை ஆகியோரின் மனைவிமார் தோன்றி சாட்சியமளித்துள்ளார்கள்.

கடந்த வருடம் மே மாதம் 18 ஆம் திகதி முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் தனது கணவர் யோகரட்ணம் யோகி மற்றும் புதுவை இரத்தினதுரை, லோரன்ஸ் திலகர், பேபி சுப்பிரமணியம் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் பொது மன்னிப்பு வழங்கப்படும் என இராணுவத்தினர் அளித்த உறுதிமொழியை ஏற்று அவர்களிடம் சரணடைந்ததாக யோகரட்ணம் யோகியின் மனைவி ஜெயவதி தமது சாட்சியத்தில் தெரிவித்திருக்கின்றார்.

இவ்வாறு சரணடைந்தவர்கள் பேரூந்து ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதைத் தான் கண்டதாகவும், அதன்பின்னர் அவர்களைத் தேடிக்கண்டுபிடிப்பதற்கு பலவழிகளிலும் முயற்சித்த போதிலும் அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என்றும் யோகரட்ணம் யோகியின் மனைவி தனது சாட்சியத்தில் கூறியிருக்கின்றார்.

அத்துடன் அவர்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்களா என்பது பற்றிய தகவல்களை அரசாங்கம் தெரிவிக்கவில்லை என்றும், எனவே அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதைக் கண்டறிந்து தெரிவிக்க வேண்டும் என யோகரட்ணம் யோகியின் மனைவி ஜெயவதி ஆணைக்குழுவினரிடம் கோரியிருக்கின்றார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஆரம்பமாகவிருந்த போதிலும் கொழும்பில் நிலவிய சீரற்ற கால நிலை காரணமாக அவர்கள் விமானம் மூலம் யாழ்ப்பாணத்தைச் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அரியாலையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசாரணைகள் பிற்பகல் 3.30 மணிக்கே ஆரம்பமாகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரியாலையில் நடைபெற்ற விசாரணைகளின்போது காணாமல் போயுள்ள தமது கணவர்கள், பிள்ளைகள் தொடர்பான முறைப்பாடுகளே கூடுதலாக ஆணைக்குழுவின் முன்னால் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அரியாலையில் நடைபெற்ற விசாரணைகளையடுத்து, நீர்வேலியில் இந்த ஆணைக்குழுவின் அமர்வு இரவு 8 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் யாழ்ப்பாணத்தில் நாளையும் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கிடையில் வடமாகாணத்தில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைப் போன்று மன்னாரிலும் இந்த ஆணைக்குழு சாட்சியங்களைப் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். இந்த வேண்டுகோளை ஆணைக்குழு ஏற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், மன்னாரில் எப்போது இந்த ஆணைக்குழு தனது அமர்வை நடத்தும் என்பது பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/11/101111_llrcinjafna.shtml

மற்றவயளை விடுங்கோ பேபிசுப்பிரமணியம் பிரபாகரன் புலிகள் அமைப்பு என்று பெயர் வைத்து இயங்கிவதற்கு முன்னரேயே பிரபாகரனுடன் ஒன்றாகவும் பிரபாகரனின் கடந்த முப்பதாண்டு காலமாக எடுத்த அனைத்து முடிவுகளிற்கும் முதலில் ஆதரவளித்து கூடவேயிருந்த ஒருத்தர் அவரே இலங்கை இராணுவத்தின் உறுதிமொழியை நம்பி சரணடைந்தாராம். 30 வருடமாய் சயனைற் அடித்தவனெல்லாம்????????? என்னத்தை சொல்வது .பொட்டு அம்மானும் சரணடைந்ததாய் செய்தி அடிபட்டது போகிற போக்கைபார்த்தால் அதுவும் உண்மையாயிருக்கும் போலதான் இருக்கு. இதே இராணுவத்தின் உறுதிமொழியை நம்பி ஒரு இரண்டு வருடத்திற்கு முதலேயே சரணடைந்திருந்தால் ஒரு 50 ஆயிரம் உயிராவது மிஞ்சியிருக்கும்.

பேபி சுப்பிரமணியம் அவர்களை நீங்கள் சிவப்பு நிறமிட்டு குத்திக்காட்டுவதற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதோ? பேபி சுப்பிரமணியம் அவர்களின் ஏனைய முகங்கள் பற்றி எனக்கு தெரியாது. ஆனால்.. ஒருசில முகங்கள் தெரியும். நான் அறிந்த அவரது முகங்கள்: நல்லதொரு ரசிகர், அமைதியானவர், மற்றவர்களில் அக்கறை உள்ளவர். சில விடயங்களை கிரகித்துக்கொள்வதற்கு குறிப்பிட்ட ஒரு கோணம் மாத்திரம் போதாது. த.வி.பு தலைமையை ஆட்டுவித்தவர்களில் வெளிநாடுகளில் உள்ளவர்களிற்கு பெரியதொரு பங்கு உண்டு. த.வி.பு தலைமையை மட்டும் குறைசொல்லி ஏது பயன்?

அரசியல் துறையின் பொறுப்பாளர் சரண் அடையும் போது அதன் உப அமைப்பினர் சரண் அடைவதில் உங்களுக்கு என்ன நோவு வந்தது ....????

அது சரி அப்பவே சரண் அடைந்து இருந்தால் சனத்தை காப்பாத்தி இருக்கலாம் எண்டால் உங்களாலை இப்ப காப்பாத்த என்ன வந்தது....??

இங்குதான் உங்களை பாராட்டவேண்டியுள்ளது கரும்பு பேபி என்கிற அடைமொழிபெயரிற்கு காரணமே அவரது மென்மையான மனதுதான். அவரும்; உங்களது காங்கேயன்துறையை சேர்ந்தவர்தான். சிறிய வயதில் போராட்டமே வாழ்க்கையாகிப்போனவர். அவரிற்கு தெரிந்தது பிரபாகரனும் புலிகளும்தான். அப்படியானவர்களே இறுதியில் இராணுவத்தின் உறுதிமொழியை கேட்டு சரணடைந்தபெழுது. இங்கு சிலர் சரணடைந்த ஏனையபோராளிகளை துரோகிகளாக்குவதும் அவர்கள் ஏன் சயனைற் அடிக்கவில்லையென கேட்பதும் ஏன்?? அதே போல ராமையும் நகுலனையும் கே பியையும் துரோகிகளாக்குவது ஏன் கருணாவும் இங்கு அடங்கும் .காரணம் கருணாவிற்கும் இலங்கை இராணுவம் உத்தரவாதம் லழங்கியிருக்கலாம் அல்லவா??அதுதான் என்னுடைய கேள்வி

அம்மா முகாம் வாசல்லை வந்திருந்து அழுதாவாம் அதாலை விட்டிட்டு ஓடியந்திட்டமாம். அதாலை காப்பாத்த முடியேல்லையாம். :huh:

  • கருத்துக்கள உறவுகள்

வியட்நாம் போரில் அமெரிக்க படைவீரர்கள் பல நூறு பேர் சரணடைந்தார்கள். அது அமெரிக்கா சரணடைந்ததற்கு ஒப்பாகுமா..??! அமெரிக்கா அந்தக் களத்தில் தோற்றது என்பது உண்மை.

அன்றைய களம்.. உத்தரவாதங்கள் இவற்றின் அடிப்படையில் அது நிகழ்ந்திருக்கக் கூடும். களம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில்.. மாற்று வழிக்கு இடமில்லாத நிலைக்கு நகர்வுகள் செய்யப்பட்டிருந்த நிலையில்.. சரணடைவைத் தவிர வேறென்ன இருக்கிறது.

எதுஎப்படியோ சரணடைந்தும் அவர்கள் உயிர் வாழ முடியவில்லை. ஒருவேளை எதிரிகளை எதிர்த்துப் போராடி இருந்தால்.. அல்லது சரணடைவை தவிர்க்கக் கூடிய வழிமுறைகளை சண்டையின் ஆரம்பக்கட்டத்திலேயே தீர்மானித்துச் செயற்பட்டிருந்தால்.. இவர்கள் எல்லாம் உயிர் வாழ்ந்திருக்கக் கூடும்.

கிளிநொச்சி வரை வந்த படையினர் தாக்குதல் ஆகோரம் காரணமாக தப்பியோட ஆரம்பித்திருந்த வேளையில் 7 நாட்டு இராணுவ அதிகாரிகள் திடீர் விஜயம் செய்து வியூகம் அமைத்த போதாவது மாற்று வழிகள் குறித்து சிந்தித்திருக்கலாம்..

சிங்களப் படைகளை நம்பி சரணடைந்ததன்.. பின்னணிதான் புரியாத புதிர்..!

Edited by nedukkalapoovan

இலங்கை இராணுவத்தோடை சேந்து வேலை செய்யுற ஆக்கள் எல்லாம் நல்லவை அண்ணை... மக்களை கட்டாயம் காப்பாத்துவுனம்... வேணும் எண்டால் இன்னும் ஒரு பத்து பதினைஞ்சு வருசம் களிச்சு பாருங்கோ மக்களுக்கு வாழ்வு குடுக்க தொடங்கீடுவினம்...

அம்மா முகாம் வாசல்லை வந்திருந்து அழுதாவாம் அதாலை விட்டிட்டு ஓடியந்திட்டமாம். அதாலை காப்பாத்த முடியேல்லையாம். :huh:

அம்மா அழ நீங்கள் வாய் பாத்தனீங்களாக்கும்...

வியட்நாம் போரில் அமெரிக்க படைவீரர்கள் பல நூறு பேர் சரணடைந்தார்கள். அது அமெரிக்கா சரணடைந்ததற்கு ஒப்பாகுமா..??! அமெரிக்கா அந்தக் களத்தில் தோற்றது என்பது உண்மை.

அன்றைய களம்.. உத்தரவாதங்கள் இவற்றின் அடிப்படையில் அது நிகழ்ந்திருக்கக் கூடும். களம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில்.. மாற்று வழிக்கு இடமில்லாத நிலைக்கு நகர்வுகள் செய்யப்பட்டிருந்த நிலையில்.. சரணடைவைத் தவிர வேறென்ன இருக்கிறது.

எதுஎப்படியோ சரணடைந்தும் அவர்கள் உயிர் வாழ முடியவில்லை. ஒருவேளை எதிரிகளை எதிர்த்துப் போராடி இருந்தால்.. அல்லது சரணடைவை தவிர்க்கக் கூடிய வழிமுறைகளை சண்டையின் ஆரம்பக்கட்டத்திலேயே தீர்மானித்துச் செயற்பட்டிருந்தால்.. இவர்கள் எல்லாம் உயிர் வாழ்ந்திருக்கக் கூடும்.

கிளிநொச்சி வரை வந்த படையினர் தாக்குதல் ஆகோரம் காரணமாக தப்பியோட ஆரம்பித்திருந்த வேளையில் 7 நாட்டு இராணுவ அதிகாரிகள் திடீர் விஜயம் செய்து வியூகம் அமைத்த போதாவது மாற்று வழிகள் குறித்து சிந்தித்திருக்கலாம்..

சிங்களப் படைகளை நம்பி சரணடைந்ததன்.. பின்னணிதான் புரியாத புதிர்..!

தீ பந்தங்கள் அழியலாம் தீ அழிவதில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனையை திசை திருப்புவதால் யாருக்கு இலாபம் ?

சரியான சின்ன புள்ளை தனமா இல்லை?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77513

இன்றைய கேபி என்ற சிங்களத்தினால் வடிவமைக்கப்பட்ட அவதாரத்தின் தோற்றமே இதர்காகத்தான்!!! ...

திருத்தம்... வெள்ளை கொடி கொண்டு போராளிகளை சரண் அடைய செய்ததின் ஆரம்பமே KP எனும் வடிவம் தான்... அதானால் தான்... KP தான் சரண் அடையும் வரை வெள்ளைக்கொடி விவகாரத்தைபற்றி மூச்சு கூட விடவில்லை...

Edited by தயா

இங்குதான் உங்களை பாராட்டவேண்டியுள்ளது கரும்பு பேபி என்கிற அடைமொழிபெயரிற்கு காரணமே அவரது மென்மையான மனதுதான். அவரும்; உங்களது காங்கேயன்துறையை சேர்ந்தவர்தான். சிறிய வயதில் போராட்டமே வாழ்க்கையாகிப்போனவர். அவரிற்கு தெரிந்தது பிரபாகரனும் புலிகளும்தான். அப்படியானவர்களே இறுதியில் இராணுவத்தின் உறுதிமொழியை கேட்டு சரணடைந்தபொழுது. இங்கு சிலர் சரணடைந்த ஏனையபோராளிகளை துரோகிகளாக்குவதும் அவர்கள் ஏன் சயனைற் அடிக்கவில்லையென கேட்பதும் ஏன்?? அதே போல ராமையும் நகுலனையும் கே பியையும் துரோகிகளாக்குவது ஏன் கருணாவும் இங்கு அடங்கும் .காரணம் கருணாவிற்கும் இலங்கை இராணுவம் உத்தரவாதம் லழங்கியிருக்கலாம் அல்லவா??அதுதான் என்னுடைய கேள்வி

நம்மளது காங்கேசன்துறை என்று கூறுவதற்கு இல்லை. இன்றுவரை நான் பலப்பல ஊர்களில் வாழ்ந்தேன், அதில் காங்கேசன்துறையும் அடக்கம். பேபி சுப்பிரமணியம் அவர்களை சிறிது அறிந்துள்ளதால் இங்கு கருத்திடவேண்டி வந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

puduvai.jpgநோயாளியான எனது கணவரை மீட்டுத் தாருங்கள்.” இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆஸ்தான கவிஞராக இருந்த புதுவை இரத்தினதுரையின் மனைவி தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் இன்று யாழ்ப்பாணத்தில் இறைஞ்சினார்.

இவர் ஆணைக்குழு முன் சாட்சியம் அளித்தபோது தெரிவித்தவை வருமாறு:-

”எனது கணவர் உட்பட விடுதலைப்புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள் ஏராளமானோர் முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் வைத்து கடந்த வருடம் மே மாதம் 18 ம் திகதி இராணுவத்திடம் சரணடைந்தனர். நான், கணவர், பிள்ளைகள் ஆகியோர் முதல் நாள்தான் அருட்தந்தை பிரான்சிஸ் அடிகளுடன்இராணுவக்கட்டுபாட்டு பகுதிக்கு வந்திருதோம்.

மறுநாள் சரண் அடைந்த எனது கணவரும், ஏனைய புலி முக்கியஸ்தர்களும் பஸ்களில் ஏற்றிக்கொண்டு செல்லப்பட்டனர். அதன் பின்னர் பிள்ளைகளுடன் வலயம் 4 நலன்புரி நிலையத்துக்கு சென்றேன். எனது கணவரை பின்னர் காணவே இல்லை. முகாமில் இவ்விடயத்தை இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கு முறையிட்டேன். எழுத்துமூலமும் முறையிட்டேன்.

இது தொடர்பாக என்னிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஜனாதிபதி செயலகத்துக்குஇராணுவத்திடம் சரண் அடைந்த கணவர் காணாமல் போய் இருக்கின்றார் என்று பக்ஸ் மூலம்அறிவித்தேன் அத்துடன் ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஸ, இராணுவ தளபதி ஆகியோருக்கும் முறையிட்டேன். எனது கணவர் ஒரு நோயாளி. அவரை மீட்டுத் தர வேண்டும்.”http://www.tharavu.com/2010/11/blog-post_5084.html

உயிரின் உன்னதமும் வாழ்வின் அர்தமும் தெரிந்தபடியால் தான் சரணடைந்தார்கள்.

எல்லாமே பொய்யாக நாடு என்ற தேவைக்காக சிறுவர்களை உரு ஏத்தியது பிழை.மற்றப்படி எல்லோரும் சாதரண மனிதர்களே.

இங்கு இப்போதும் பூச்சுத்த சிலர் நிற்கின்றார்கள்.தானோ,தன் பிள்ளைககளையோ நினைத்தே பார்க்க மாடர்கள்.

உங்களுக்கு உரு ஏத்தல் மட்டும் தான் காதுக்கை கேக்குது எண்டால் பிரச்சினை அங்கை இல்லை... உங்களுக்கை தான்... பண்டி எப்பவும் பவ்வியை பற்றி மட்டும் தான் தேடும்.... அது மட்டும் தான் அதுக்கு கண்ணுக்கு தெரியும்... அதுதான் குண இயல்பு...

அவலக்குரல்களை பலர் எழுப்புகிறார்கள் செய்கிறார்கள் அவைகள் உங்கட கண்ணுக்கு தெரியவே தெரியாது.... நல்லதை மட்டும் பாக்கிறவைக்கு எப்பவும் நல்லதுகளே தெரியும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.