Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் தீர்விற்கு கிருஸ்ணா வற்புறுத்தமாட்டார்.

Featured Replies

ஞாயிற்றுகிழமை, நவம்பர் 14, 2010

இந்த மாத இறுதியில் வருகைதரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு இலங்கை அரசுக்கு அழுத்தங்கள் எதனையும் கொடுக்கமாட்டார் என்று தெரிகிறது. இந்தப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நாட்டுக்குள்ளேயே காணப்பட வேண்டும் என்று தமிழ்த் தலைமைகளிடம் இந்தியா ஏற்கனவே வலியுறுத்தி உள்ளது. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே கிருஷ்ணாவின் பயணம் அமையும் என்று புதுடில்லிச் செய்திகள் தெரிவித்தன.

எதிர்வரும் 25ஆம் திகதி கிருஷ்ணா இலங்கை வருகிறார். அந்தப் பயணத்தில் அரச தலைவர்களைச் சந்திக்கும் கிருஷ்ணா, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து நேரடியாக எந்த அழுத்தங்களையும் வழங்கமாட்டார் எனப் புதுடில்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

தனது பயணத்தில் தமிழ்த் தலைமைகளையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ள அமைச்சர் கிருஷ்ணா இந்திய நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைக்க உள்ளார். "அரசியல் தீர்வு ஒன்றுக்கு வெளியாரின் தலையீட்டை எதிர்பார்ப்பதைவிட சொந்த அரசியல் சாணக்கியங்களைக் கடைப்பிடித்து இலங்கை அரசுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணப்பட வேண்டும்.' இதுவே இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடு. இதற்கு உதாரணமாக இந்திய வம்சாவளி மக்களுக்குக் குடியுரிமை பெற்றுத் தருவதற்கு அமரர் தொண்டமான் கையாண்ட அரசியல் மூலோபாயங்களை புதுடில்லி அரசபீடம் தமிழ்த் தலைமைகளுக்குச் சுட்டிக்காட்டி உள்ளதாம்.

தனது இந்த நிலைப்பாட்டை இறுக்கமாகப் பேண முடிவு செய்துள்ளதால் அமைச்சர் கிருஷ்ணாவின் பயணத்தின் போது தீர்வு விடயம் குறித்து இலங்கை அரசுடன் அதிகம் பேசப்படாது என புது டில்லி வட்டாரங்கள் கூறுகின்றன. ஒப்புக்கு மட்டும் பேச்சுமூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் எனக்கூறப்படும். இனப்பிரச்சினைக்கான தீர்வை விரைவு படுத்துமாறு வலியுறுத்துவ தற்குப் பதிலாக, இந்தியா வழங்கும் உதவிகளுக்கான பணிகளை விரைவுபடுத்து மாறே கிருஷ்ணாவின் பயணத்தின்போது இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்கின்றன புதுடில்லி வட்டாரங்கள்.

இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளவர்களைச் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவது, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வுக்காக வீடமைப்புத் திட்டத்தை செயற்படுத்துவது, ரயில் பாதை புனரமைப்பது போன்ற உதவித் திட்டங்களை இலங்கையில் செயற்படுத்த இந்தியா முன்வந்துள்ளது. இத்திட்டங்களை விரைவுபடுத்துமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது பயணத்தில் இலங்கை அரசிடம் வலியுறுத்து ஆகியவற்றையே கிருஸ்ணா செய்வாராம்.

மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை மையப்படுத்தி இந்தியா வழங்கியுள்ள உதவிகளை இலங்கை அரசு சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் வெளிவிவகார அமைச்சர் இலங்கை அரசிடம் கோரவிருக்கின்றார். என கூறப்படுகின்றது.

ஈழநாதம்

இந்திய பயங்கரவாத அரசின் பிரநிதிகளின் விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

சிங்கள பயங்கரவாதிகளின் கையூட்டுக்கள் திருப்பதியாக இல்லையோ?

அரசியல் இராஜதந்திரம் என்பது வெளியில் சொல்லப்படுவது ஒன்று உள்ளுக்குள் மிரட்டப்படுவது / கெஞ்சப்படுவது இன்னொன்று.

பல சகாப்தங்களாக ஒரு நல்ல தீர்வை இந்தியா பெற்றுத்தருமென இந்தியா ஈழத்தமிழர்களுக்கு "சொல்லிக்கொண்டே" வந்துள்ளது. செயலவில் என்ன செய்தது என்பது எமது வரலாறு கூறி நிற்கின்றது.

உலக இராஜதந்திர சரித்திரத்தில் பல கொள்கைவகுப்பளர்கள் விட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தவறுகள் உள்ளன. பிரித்தானியாவின் போல்க்கன் தீவுகள் மீதான யுத்தம் இவ்வாறான ஒன்றாக பார்க்கப்படுகின்றது ( Political Blunders Behind The Falklands War - http://www.falklands.info/history/hist82article12.html )

ஆனால் வருட இலங்கை மீதான இந்திய வெளிவிகார கொள்கை வருங்கால கொள்கைகள் என்பன தமிழர் தலைவிதியை மட்டுமல்ல தென்கிழக்கு ஆசியாவின் தலைவிதியையே மாற்றிக்கொண்டு வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

( Political Blunders Behind The Falklands War - http://www.falklands.info/history/hist82article12.html )

ஃபோக்லண்ட் தீவுகளுக்கான சண்டையைத் திரும்பிப் பார்க்கும்போது, அது இரு ஆக்கிரமிப்பாளர்களுக்கு இடையேயான (பிரித்தானியர்கள், ஸ்பானியர்கள்) சண்டையே தவிர அங்குள்ள பூர்வீக மக்களை எந்தவிதத்திலும் சம்பந்தப்படுத்தவில்லை..! :lol: இதுக்குள்ளை sovereignty பற்றிய கதைகள் வேறு..! :D

  • கருத்துக்கள உறவுகள்

SM-Krishna_0.jpg

fried-Chicken-Kebab-kabab.jpg

Mcdowells_Signature_Whisky.jpg

லெக் பீசு ... மற்றும் கட்டிங்குக்கு செல்லும் கோஸ்டிகளுக்கெல்லாம் நேரம் ஒதுக்கி கட்டுரை வரைவது மற்றும் ஆய்வு எழுதுவது எல்லாம் கொஞ்சம் ஒவர்... :unsure:

அரசியல் தவறு / பொலிட்டிக்கல் ப்ளன்டர்

அரசியல் தவறு / பொலிட்டிக்கல் ப்ளன்டர் என்றால் என்ன?

Gross errors or mistakes resulting from grave lack of proper consideration, such as stupidity, confusion, carelessness, or culpable ignorance,

ஒரு பிழையான அரசியல் அணுகுமுறையும் அதனால் நாட்டுக்கு/இனத்திற்கு ஏற்படும் பாதிப்புக்களும்.

உதாரணங்கள்

1. ஹூப்டுன் ப்ளன்டர் - 1990 ஆம் ஆண்டு பிரித்தானியாவால் அவுஸ்திரேலியாவுக்கு நியமிக்கப்பட்ட பிரதிநிதி ஏற்படுத்திய பிரதமருக்கான தெரிவு சரித்திர வல்லுனர்களால் ஒரு பிழையான முடிவாக பார்க்கப்படுகின்றது. ( http://en.wikipedia.org/wiki/Hopetoun_Blunder )

2. ஹிமாலயன் ப்ளன்டர் - 1962 ஆம் ஆண்டு சீனாவுடனான இந்திய தோல்விக்கு பிரிகேடியர் ஜோன் தல்வி அவர்களின் கருத்துப்படி இந்தியாவின் அரசியலே தோல்விக்கு காரணம். ( http://en.wikipedia.org/wiki/Himalayan_Blunder)

==========================================

" ஈழத்தமிழர்கள் புதிய யுக்திகளுடன் ஒரு புதிய சிந்தையுடனான வெளிவிவகாரக் கொள்கை ஒன்றை

இந்தியாவுக்கு முன் வைத்தால் ஒழிய ஒரு மாற்றமும் நிகழபோவதில்லை. ஆகக் குறைந்தது இரண்டு வலுவான சக்திகள் ஒன்றுபட்டு இந்தியா மீது அழுத்தம் கொடுத்தால் மட்டுமே அதன் ஈழத்தமிழர்கள் மீதான எதேச்சகரமான அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும்."

மேலே உள்ள கூற்று சரியென ஒரு விவாதத்திற்கு எடுத்தால்:

1. எவ்வாறு ஒரு புதிய சிந்தையுடனான வெளிவிவகாரக் கொள்கை ஒன்றை இந்தியாவுக்கு முன் வைக்கலாம் ?

2. யார் ஊடாக தமிழர் தரப்பு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கலாம் ?

ரொம்ப தெளிவாக உரையாடுகிறீர்கள் தோழர் அகூதா... எனக்கு தெரிந்து இந்தியாவுக்கு இதை மீறி ....இதைவிட ரொம்ப அழுத்தம் குடுக்க மிடியாது...ரைட்டு... :unsure:

d-rum-old-monk.jpg

4070728082_710d7d20ed_o.jpg

1000_Rupee.jpg

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.