Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை செல்லும் கிருஷ்ணாவுக்கு கருணாநிதி கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை செல்லும் கிருஷ்ணாவுக்கு கருணாநிதி கடிதம்

சென்னை, நவ.24,2010

இலங்கை தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு, அதிகார பங்கீடு தொடர்பாக உரிய ஆலோசனைகள் நடத்தி சரியான தீர்வுகள் காண வேண்டும் என்றும், அதன் மூலம் இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைகளையும், நலன்களையும் காப்பாற்ற வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சரை முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.

மூன்று நாள் அரசு முறைப் பயணமாக வியாழக்கிழமை இலங்கை செல்லும் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் அனுப்பியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:

"இலங்கை செல்லும் நீங்கள் இலங்கை தமிழர்கள் தொடர்பாக சில முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கையில் 30 ஆயிரம் தமிழ் மக்கள் இன்னும் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டு இருப்பது எனக்கும், தமிழக மக்களுக்கும் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

நமது வெளிவிவகாரத்துறை செயலாளர் இலங்கை சென்றிருந்த போதும் முகாம்களில் மக்கள் இருந்ததை பார்த்து இருக்கிறார்.

இந்த பிரச்னை தொடர்பாக பல முறை இலங்கை அரசிடம் சொல்லியும், இதற்கு திருப்தியான தீர்வு காணாதது மிகுந்த வேதனை தருகிறது. மக்களை மறு குடியமர்த்தல் மற்றும் மறு வாழ்வு திட்டங்களும் இலங்கை அரசால் முழுமையாக செயல்படவில்லை. இது இந்திய அரசு பல மாவட்டத்திலும் பேச்சுவார்த்தை நடத்தியும், உரிய முன்னேற்றம் இல்லை.

முகாம்களில் இருந்த 3 லட்சம் தமிழர்களில் பெரும்பாலோர் தங்கள் பூர்வீக இருப்பிடத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். ஆனால் எனக்கு கிடைத்த தகவல்படி அவர்கள் இன்னும் பெரும் துன்பத்திலேயே சிக்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய நிவாரண பணிகள் செய்யவில்லை. கவுரவமாக வாழ்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுக்கவில்லை.

அவர்களில் அமைதியாக வாழவும், கவுரவத்தோடு வாழவும், உத்தரவாதம் ஏற்படுத்த வரவேண்டும்.

இந்திய அரசு கட்டி கொடுக்கும் 50 ஆயிரம் வீடுகளை குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டி முடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்த வீடுகள் இலங்கை தமிழர்களுக்கு விரைவாக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

இலங்கை தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு, அதிகார பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைகள் நீண்ட காலமாக நடந்தும் இன்னும் ஆரம்ப கட்ட நிலையிலேயே இருக்கின்றன.

இந்த பிரச்னை உரிய ஆலோசனைகள் நடத்தி சரியான தீர்வுகள் காண வேண்டும். இதன் மூலம் இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைகளையும், நலன்களையும் காப்பாற்ற வேண்டும்."

இவ்வாறு அந்தக் கடித்ததில் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

vikatan

  • கருத்துக்கள உறவுகள்

தொடங்கிட்டாண்டா கடிதமெழுத.

கருணாநிதி டு கிருஷ்ணா a.k.a கிருஷ்ணவேணி

  • கருத்துக்கள உறவுகள்

டி.ஆர் பாலு கனிமொழி ஆகியோர் போய்கிழிச்சிட்டு வந்திட்டாஙக.இப்ப இவர் கடிதமெழுதி!!!!!!!!!!!!!! அவங்க வாசிச்சு!!!!!!!!!!!!! தமிழக சட்ட மன்றத் தேர்தலுக்கு இப்பவே தமிழர்கள் தலைகளில் மிளகாய் அரைக்கத் தொடங்கியிட்டார்.அவங்கதான் இளிச்சவாயங்களாச்சே!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூன்று நாள் அரசு முறைப் பயணமாக வியாழக்கிழமை இலங்கை செல்லும் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் அனுப்பியுள்ளார்.

வெட்கம் மானம் ரோசம் கெட்ட நாய்கள் திரும்பவும் கடிதம் எழுதுகின்றார்கள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடிதநாடகம் தொடர்கிறது.

எழுதினார் , எழுதுகின்றார், எழுதுவார்

  • கருத்துக்கள உறவுகள்

எழுதினார் , எழுதுகின்றார், எழுதுவார்

எல்லாம்..... கசக்கி, குப்பைத் தொட்டிக்குள் போடும் கடிதங்களையே எழுதுவார்.

70b35ea697e2c57d67e9c56c59d9_grande.jpgwastepaper-basket.jpg

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.