Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதுகள் கேட்காது ஒரு கையும் காலும் இயலாது இரு மாவீரர்களின் சகோதரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கார்த்திகை 27. இலட்சியத்தை நெஞ்சில் சுமந்து தாயகக் கனவோடு களங்களில் சமராடி விதையுண்ட வீரர்களை நினைவு கொள்ளும் நாளிது. எங்கள் கனவுகளுக்காகத் தங்கள் இனிமைகளை மறந்து வசந்தங்களை எங்களுக்காய் வாரித்தந்த வள்ளல்களை நினைவு கொள்ளும் நாளிது. இதோ இன்றைய குரலுக்குரியவள் ஒரு முன்னாள் போராளி. அண்மையில் தடுப்பிலிருந்து விடுதலையாகி வந்திருக்கிறாள். இதோ இவளது துயரை இந்த மாவீரர் நாளில் கொண்டு வருகிறோம். வீட்டில் அனைத்தும் பெண் சகோதரிகள். 2மாவீரர்களைக் கொடுத்தவள் தானும் தாயக விடுதலைக்காக தன்னை இழந்தவள். இன்று ஒற்றைக் கையும் காலும் இழுத்து நடக்கவே பெரும சிரமங்களுடன் வாழ்கிறாள். காதுகள் கேட்காது இவளுக்கு செவிப்பறைகள் பாதிக்கப்பட்டு கேள்விப்புலன் அற்ற நிலையில் இருக்கிறாள். காது கேட்காதவள் எப்படி எம்முடன் கதைத்தாள் என்ற கேள்விகளை யாரும் எழுப்ப வேண்டாம். தனது துயரத்தை புலம் பெயர் உறவுகளுக்குச் சொல்ல விரும்பியவளுக்கு தொலைபேசியைக் கொடுத்து பேசச்சொன்னோம். பேசியிருக்கிறாள். நாங்கள் சொல்ல விரும்பிய ஆறுதலை எழுதிக் கொடுத்து அவளுக்கு ஆறுதலைக் கொடுத்துள்ளோம். கண்கள் பார்க்கும் வாய் பேசும் ஆனால் காது கேட்காது இன்று எல்லாம் இழந்த நிலையில் எம்மிடம் உதவி கேட்டு வந்திருக்கும் இந்தத் தங்கைக்கு உதவுங்கள் உறவுகளே…! குடும்ப நிலமை வறுமையிலும் வறுமை. மிஞ்சிய வயதான தாயோடு வாழும் இந்தத் தங்கையிடம் சொல்வதற்கு நிறையக் கதைகளை வைத்திருக்கிறாள். ஆனால் அவளது கதைக்கு ஒரு ஓம் போடும் எங்கள் குரலை கேட்க முடியாத நிலைமையில் இருக்கும் இவளுக்கு எங்களால் எந்த ஆறுதல் வார்த்தைகளையும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம். அவளது குரலில் அவளைப்பற்றி சில வரிகளை அவளே சொல்கிறாள் கேளுங்கள் உறவுகளே மாவீரர் நாளில் மாவீரர்கள்2 பேரைக் கொடுத்த இந்த முன்னாள் போராளிக்கு நேசக்கரம் கொடுங்கள் உறவுகளே…

ஒலிப்பதிவினைக் கேட்க இணைப்பில் அழுத்துங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தங்கைக்கும் இவளது அம்மாவுக்கும் சுயதொழில் வேலை வாய்ப்பு ஒன்றினை ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறோம். கால் நடை வளர்ப்பு அல்லது இறைச்சிக்கோழி வளர்புக்கான உதவியை வேண்டும் இவளது தாயாருக்கும் இவளுக்கும் இலங்கை ரூபா 30000ரூபாய் தேவைப்படுகிறது. (200,00€) உதவ விரும்பும் உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள். மாவீரர் நாளில் மாவீரரைக் கொடுத்த ஒரு பெண் போராளிக்கு உதவுங்கள் உதறவுகளே...!

தொடர்புகளுக்கு

நேசக்கரம்

முகவரி:

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

Sri France – 0033 611149470

Vereinsregister:

AZ- VR 20302

Amtsgericht 55543 Bad Kreuznach

Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாந்தி,

நான் 200 யூரோ அனுப்பியுள்ளேன், கிடைக்கப்பெற்றால் உறுதிப்படுத்தவும்.

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் இரும்பொறை உங்கள் உதவி கிடைக்கப்பெற்றோம். மிக்க நன்றிகள். உரியவருக்கு உதவி கிடைத்த பின்னர் உறுதிப்படுத்தப்பட்ட கடிதம் படங்கள் மின்னஞ்சல் செய்கிறேன்.

மீண்டும் நன்றிகள்.

உங்கள் நல்ல மனதுக்கு நன்றிகள் இரும்பொறை.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மனம் வாழ்க..!

"கொடைகளில் சிறந்தது நன்கொடை", நன்றிகள் உங்களுக்கு.

அனபானவர்களே செய்யும் உதவிக்கு நன்றிகள்.

ஒரு யோசனை ஒன்று சொல்ல விரும்புகிறேன்.

புலம் பெயர் நாடுகளில் பல தமிழர் தொண்டு நிறுவனங்கள் தாயகத்தில் வாழும் எம் உறவுகளுக்காக உதவி செய்ய நிதி சேகரித்து பலதிட்டங்களை எல்லாம் செய்கிறார்கள். பலர் பலன் அடைகிறார்கள்.

ஆனால் எமது போராளிகளின் குடும்பங்களை கவனித்து கொள்வதற்கு என்று தனியான ஒரு உதவி நிறுவனம் புலம் பெயர்ந்த நாடுகளில் எங்களால் உருவாக்கபடவேண்டும். 40000 வீரர்களின் குடும்பங்கள் இருக்கின்றன.

முன்பு மாவீரர் பணிமனை அந்த பொறுப்பை செய்திருந்தது

பல தொண்டு நிறுவனங்கள் அவர்களை கண்டு கொள்ளாமல் விட்டு விடலாம்.

எனவே ஒர் அமைப்பு உருவாக்க வேண்டும். புலம் பெயர்மக்கள் அவர்களுக்கு தனியான உதவிகள் செய்ய முன்வருவார்கள்.

இலண்டனில் படை வீரர்களுக்கு உதவி செய்ய என்று ஒரு தொண்டு நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்கள்.

பெருமளவு மக்கள் அவர்களின் தியாகத்தை போற்றி உதவி செய்கிறார்கள்.இதுவரை 70 மில்லியன் பவுண்ட் சேர்த்துள்ளார்கள்.

நாங்களும் அப்படியான ஓர் அமைப்பை எமது வீரர்களுக்கு உதவ உருவாக்க வேண்டும்.

http://www.helpforheroes.org.uk/ இது ஜக்கிய ராச்சிய படை வீரருக்கான உதவி நிறுவனம்

  • கருத்துக்கள உறவுகள்

நா. க. அரசில் இதற்கான ஒரு அமைச்சும் அதற்கான ஒரு நிதியமும் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது

பார்க்கலாம்

உங்கள் நல்ல மனதுக்கு நன்றிகள் இரும்பொறை.

கடவுள் உங்களுடன் இருப்பார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.