Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக 5ம் கட்ட வீரவாள்கள் வைகோ – நெடுமாறனுக்குப் பகிரங்கக் கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

29.11.2010

லண்டன்

மரியாதைக்குரிய திரு.வைகோ மற்றும் நெடுமாறன் அவர்கட்கு,

இவ்வாண்டு மாவீரர்நாள் நிகழ்வுகளின் போது தாங்கள் ஆற்றிய உரைகளை ஒளி, ஒலி மற்றும் இணையவழி ஊடகங்கள் ஊடாக அறியும் வாய்ப்பு புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களுக்குக் கிட்டியது. அவற்றில் நீங்கள் வெளிப்படுத்திய நம்பிக்கை, குறிப்பாக தலைவர் பிரபாகரன் அவர்கள் மீள வருவார் – ஈழப்போரை மீள வழிநடத்துவார் என்கின்ற செய்தி ஏற்படுத்திய தாக்கம் காரணமாக இந்தக் கடிதத்தினை எழுத முற்படுகின்றேன்.

2009 மே18ற்குப் பிற்பாடு தமிழ்சமூகத்தின் ஆன்மாவினை உலுக்கும் கேள்விகளில் பிரதானமானது தலைவர் பிரபாகரனின் வாழ்வுபற்றியது. சிறீலங்கா அரசானது தலைவரின் சாவினை முதலில் அறிவித்தது. பிற்பாடு புலிகளின் சர்வதேச தொடர்புகளுக்குப் பொறுப்பானவராக அன்று செயற்பட்ட கேபி தலைவர் வீரச்சாவினை அடைந்துவிட்டார் என்று அறிவித்தார். புலிகளின் புலனாய்வுத்துறையின் சர்வதேச பொறுப்பாளர் வீரச்சாவு செய்தியினை உறுதி செய்து அறிவித்தார். ஆனால், அந்தக் காலப்பகுதியில் தமிழ்நாட்டில் நீங்கள் இருவரும் வீரச்சாவு என்ற அறிவிப்பை மறுத்தீர்கள். பின்னர் அங்கும் இங்குமாக அந்த மறுப்பினை மீள வலியுறுத்திய நீங்கள் தமிழீழ மக்களின் வாழ்வில் முக்கியமான நிகழ்வான மாவீரர்நாள் நிகழ்வுகளின் போது தலைவர் உயிருடன் இருக்கின்றார் – மீள வருவார் என்று உரக்க சொல்கின்றீர்கள்.

தங்களின் அறிவிப்பு புலம்பெயர்ந்த தமிழீழ மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கின்றது. தலைவர் நாளையோ, நாளை மறுதினமோ மீள எம் முன்பாக வந்து போரினை தலைமையேற்பார் என்கின்ற தோற்றத்தினைக் கொடுக்கின்றது. தலைவர் வரும்வரை எந்த அரசியலையும் ஏற்றுக்கொள்ளாது 2009மே18வரை சொல்லப்பட்ட அரசியலை மட்டுமே முன்வைக்கும் கடப்பாடு எமக்குள்ளதாக எம்மை நம்பவைக்கின்றது. மே-18ற்குப் பிற்பாடு ஏற்படும் எந்த சர்வதேச மாற்றங்களையும், தாயக மாற்றங்களையும் அங்கீகரிக்க மறுக்கும் மனப்பான்மை உருவாகுகின்றது. ஏனெனில் தலைவர் இருப்பு உறுதியாக உள்ளமையால் முடிவுகள் அவரால்தான் எடுக்கப்பட வேண்டும். அவர் இருக்கின்றார் என்று கூறிக்கொண்டு சென்னையில், லண்டனில், ஒஸ்லோவில் முடிவுகள் எடுக்கப்பட முடியாது. உணர்வுபூர்வமாக நானும் உங்களை நம்புகின்றேன். அல்லது நம்பமுயல்கின்றேன். ஆனால், எனது பகுத்தறிவும், அரசியல் அறிவும் உங்களிடம் பல கேள்விகளை எழுப்ப முற்படுகின்றது. அதன் விளைவுதான் இந்தப் பகிரங்கக் கடிதம். இதனைப் பகிரங்கமாக எழுதுவதன் காரணம் இது பலரது மனதில் எழுகின்ற கேள்விகளை உள்ளடக்கியது என்பதால் மட்டுமே.

ஐயா,

தலைவர் உயிருடன் உள்ளார் என்று தாங்கள் 2009 மே மாதம் முதல் சொல்லி வருகின்ற போதும் அதற்கான எதுவித ஆதாரங்களையும் தாங்கள் முன்வைக்கவில்லை. தலைவர் உங்களிடம் எதாவது செய்தியினை சொல்லிவிட்டதாகவும் நீங்கள் சொல்லவில்லை. மறுபுறம், தலைவர் ஈழமக்களுக்கு தன் சகாக்கள் ஊடாக தகவல்களை கொடுத்தாகவும் இல்லை. தலைவர் அவர்கள் தளபதிகள் பொட்டு மற்றும் சூசையுடன் முள்ளிவாய்க்காலைவிட்டு தப்பிச்சென்றதாக தங்களின் சகா தேனிசை செல்லப்பா பாடலியற்றியது இப்போது நினைவுக்கு வருகின்றது. அப்படியாயின், சூசை அல்லது பொட்டு அவர்களாவது வெளிப்பட்டு மக்களுக்கு நம்பிக்கையூட்டியிருக்கலாமே. குறைந்தபட்சம் விடுதலைப்புலிகளின் இயக்கத்தினர் கூட இதுவரை தங்கள் தமிழ்நாட்டில் வெளிப்படுத்தும் கருத்தினை ஆதரித்து பகிரங்கமான அல்லது சமூகத்திற்குள்ளான அறிவிப்புக்களை விடுக்கவில்லை என்கின்ற உண்மையும் கசப்பாகவிருக்கின்றது. அது ஏன் ஐயா?.

முன்னைய காலங்களில் தலைவர் கொல்லப்பட்டதாக இந்தியாவும், சிறீலங்காவும் அறிவித்த போதெல்லாம் புலிகள் உத்தியோகபூர்வமாக இதனை மறுத்து தலைவரின் இருப்பினை உறுதிசெய்தனர். ஏனெனில் தலைமை என்பது ஒரு விடுதலை இயக்கத்திற்கு உயிர்நாடியான விடயம் என்பதை தலைவரும் புலிகளும் தெளிவாக அறிந்திருந்தமையால் அதுபற்றிய குழப்பத்தினை மக்கள் மத்தியில் அனுமதிக்கவில்லை. மாறாக, இன்று மக்கள் மிகவும் குழப்பப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களான நீங்கள் எங்களது தலைவர் உயிருடன் உள்ளதாக அடித்துக் கூறுகையில் புலிகள் மௌனம் காப்பது எங்களை குழப்பத்திற்குட்படுத்துகின்றது.

சிறீலங்கா மற்றும் இந்திய அரசும் சர்வதேச தரப்புக்களும் தலைவரின் வீரச்சாவு பற்றி குழப்பத்தில் இல்லை என்பதை அவற்றின் செயற்பாடுகள் மூலம் அறியமுடிகின்றது. இந்தியா இறந்து போனவர்களை குற்றவாளிகள் பட்டியலில் வைத்திருப்பதில்லை என்று அறிவித்து தலைவரினதும், பொட்டம்மானினதும் பெயர்களை வழக்குகளிலிருந்து நீக்கிவிட்டது. தலைவர், பொட்டம்மான் மற்றும் தளபதி சூசைக்கு எதிரான வழக்குக்களை சிறீலங்கா வாபஸ் வாங்கிவிட்டது. இதனை தந்திரம் என்று எவரும் சொல்லமாட்டார்கள். ஏனெனில், நீங்கள் சொல்வது போன்று தலைவர் மீள வரும்போது இந்திய பேரரசும், சிறீலங்கா அரசும் மிகப்பெரிய அவமானத்திற்குள்ளும், சட்டச்சிக்கலுக்குள்ளும் அகப்படும் என்பதை தாங்கள் அறிவீர்கள். ஏனெனில், மூடிமறைப்பதற்கு பிரபாகரன் ஒன்றும் கிள்ளுக்கீரையல்ல.

இவ்வாறான வாதங்களினை ஒதுக்கிவைத்துவிட்டு நான் உங்களை நம்ப முயல்கின்றேன். ஆயினும் நீங்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசுவது அந்த கண்மூடித்தனமான நம்பிக்கையை எனக்குள் ஏற்படுத்தவில்லை. உதாரணமாக, நெடுமாறன் அவர்கள் தமிழ்நாட்டின் பிரதானமான ஊடகமொன்றிற்கு செவ்வியளிக்கையில் கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் தலைவர் எந்தப் பொறுப்புக்கும் நியமிக்கவேயில்லை என்று அடித்துக் கூறினார். அடுத்தவாரம் மற்றைய ஊடகத்திற்கு செவ்வியளிக்கையில் தலைவர் அவர்கள் கேபிக்கு பொறுப்பினைக் கொடுத்து காஸ்ரோவுக்குக் கீழ் வேலைசெய்யுமாறு பணித்ததாக கூறுகின்றார். உண்மையென்னவெனில், கேபிக்கு பொறுப்பினை தலைவர் 2009 சனவரியில் கொடுத்து அனைத்து அரசுகளுக்கும் அது சம்பந்தமான அறிவித்தலை நடேசன் ஊடாக அனுப்பிவைத்தார். அதுவொரு சுயாதீனமான நியமனம். தனது மூத்த உறுப்பினரை இந்தப் பொறுப்புக்கு நியமிக்கின்றேன் என்றுதான் தலைவர் அரசுகளுக்கு கோடிட்டுக் கூறியுள்ளார் (ஆதாரம்: தலைவர் கையொப்பமிட்டு அனுப்பிய கடிதம்). இன்று கேபி சிறீலங்கா கைதியாக செயற்படும் அவல அரசியலை ஓரமாக வைத்துவிட்டு, இயக்கத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர்பற்றிய செய்திக்கு, குறிப்பாக தலைவரினால் 2009ல் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டவர் பற்றிய செய்திக்கு, தனது சார்பு அரசியலை நெடுமாறன் பயன்படுத்தியதை பார்த்த பிற்பாடு எவ்வாறு உங்கள் அறிவிப்புக்களை நம்பிக்கை அடிப்படையில் ஏற்றுக்கொள்வது?.

மறுபுறம், தலைவரை புரட்சியாளனாக, உறுதிகொண்ட நெஞ்சினானகப் பார்க்கும் என்னைப் போன்றவர்களுக்கு தலைவர் மறைந்து ஒழித்து இருக்கின்றார், அடுத்தகட்ட ஈழப்போரினை முன்னெடுக்க வருவார் என்று சொல்வதன் அர்த்த‌த்தினைப் புரிந்து கொள்ளவும் முடியவில்லை. இறுதிப்போரின் போது இயக்கத்தின் இராணுவ பலம் முற்றிலும் இழக்கப்பட்ட‌ சூழலே இருந்தது. மக்கள் பெருமளவு கொல்லப்பட்டனர். போராளிகள் சாவு அடைந்தனர். சரணடைந்தனர். கொல்லப்பட்டனர். இந்தப் பின்னணியில் தலைவர் தப்பி ஓடிவிட்டார் என்று சொல்வது பிரபாகரன் என்ற அற்புதமான ஆளுமையைக் கொச்சைப்படுத்தும் விவகாரம் என்றே நான் கருதுகின்றேன். அவ்வாறான வியூகத்துடன் தலைவர் இயங்கியிருந்தால் அவர் கிளிநொச்சி வீழ்ச்சியுடன் அதனை அமுல்படுத்தத் தொடங்கியிருப்பார். ஆனால், அவர் தத்துவதார்த்தமாக அல்லது இலட்சியபூர்வமாகவே போரை இறுதிக்கட்டத்தில் அணுகியிருக்கின்றார் என்று சொல்வதற்கு பல சான்றுகள் உள்ளன. ஒரு பிரபலமான திரைப்படத்தினை தலைவர் அந்தக் கட்டத்தில் தன்சாகக்களை பார்க்குமாறு கூறியுள்ளார். இறுதிவரை போராடி அழிந்தவொரு போராட்ட இயக்கத்தின் கதை. அத்த‌கைய உச்சபட்ச வீரவரலாறு போராட்டத்தின் அசைத்து அடுத்த தலைமுறைக்குப் போராட்டத்தினைக் கொண்டு செல்லும் எனும் தத்துவார்த்தமான பாதையை அந்தத் திரைப்படம் சொல்கின்றது. தலைவர் தனது தளபதிகளிடம் இறுதிக்கட்டச் சந்திப்புக்களின் போது பண்டாரவன்னியனின் வீரவாள் தன்னால் மீளக்கூர்மைப்படுத்தப்பட்டுள்ளது எனவும், அடுத்ததலைமுறை அதனை காவிச்செல்ல வேண்டும் என்று பகிரங்கமாகப் பேசியதாக இன்று உயிர்தப்பிய தளபதிகள் சொல்கின்ற செய்தி.

மூன்றாவது, புலம்பெயர்நத நாடுகளில் உள்ள தனது சாகக்களுக்கு காஸ்ரோ அனுப்பிய இறுதிச் செய்தியில் தலைவர் போராட்டத்தினை இதுவரை கொண்டுவந்துவிட்டுள்ளார் என்கின்ற தகவலைக் கொடுத்தார். அந்தச் செய்தியில் தலைவர் தொடர்ந்து போரினை முன்னெடுக்கவுள்ளார் என்ற செய்தியினை காஸ்ரோ கூறவில்லை. அடுத்தகட்டப் போர் புதிய தலைமுறையினது என்பதே காஸ்ரோவின் செய்தி.

பிரபாகரனை வீரனாக, இலட்சியவாதியாக, தூரநோக்கம் கொண்டவனாக மதிக்கும் பாரம்பரியத்தினைக் கொண்டவர்கள் தங்களின் ஆதாரமற்ற உச்சக்குரல் அறிக்கையினை மிகவும் சந்தேகத்துடன் பார்க்கின்றனர். ஏனெனில், தலைவரின் வீரச்சாவு என்ற செய்தியானது மாபெரும் தமிழ்எழுச்சினை எழுப்பியிருக்க வேண்டும். அதனை நடக்காது தடுக்க இந்திய உளவுநிறுவனமான றோ நிச்சயம் செயற்பட்டிருக்கும். அதற்கு தாங்கள் அறிந்தோ, அறியாமலோ துணைபோய்விட்டீர்கள் என்கின்ற சந்தேகம் அவர்களுக்கு எழுகின்றது. முத்துக்குமாரன் இறந்த போது தமிழ்நாடு எழுச்சி கொள்ளாது தடுத்தமை தொடர்பாக உங்களுக்கு எதிராக உங்கள் சகாக்க‌ளே குற்றச்சாட்டுக்களை முன்வைத்தமையை நாங்களும் வாசித்தறிந்தோம்.

ஐயா, தலைவர் உயிருடன் இருப்பதாக தாங்கள் கூறுவது உண்மையாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் அருகிவருகின்றது. காலம் ஓடுகின்றது. பிரபாகரன் என்ற உச்சதலைவன் கட்டமைத்த அரசியலும், பயணப்பாதையும் நாள்தோறும் உடைத்தெறியப்பட்டு வருகின்றது. தமிழ்தேசியக்கூட்டமைப்பும், டக்ளசு வகையறாக்களின் கட்சியும் மாகணசபை அரசியலுக்குள் எங்களை கட்டிப்போட்டு வருகின்றனர். புலிகள் இயக்கம் மட்டும் உறைநிலைக்கு சென்றுவிட்டது. தன் அகத்தேயும், புறத்தேயும் கட்டப்பட்ட சூழ்ச்சிவலையினை பிரிக்க முடியாது தலைவருடன் களம் கண்ட போராளிகள் விழிபிதுங்கி நிற்பதை பார்க்கக் கூடியதாகவும் உள்ளது.

மறுபுறம், தலைவரின் வீரமும், அர்ப்பணிப்பும் இனத்தினால் உள்வாங்கப்பட்டு “அணுகுண்டாக” வெடித்திருக்க வேண்டிய சந்தர்ப்பம் றோ போன்ற நிறுவனங்களின் சதியாலும், எமக்குள் வாழும் சிலரது துரோகத்தனத்தாலும் வீணடிக்கப்பட்டுவிட்டது. திசையெங்கும் இருளே நிரம்பிக்கிடக்கின்றது.

இந்த இருளைக்கிழித்து ஒளிதரவல்லவர் பிரபாகரன் மட்டுமே. அவர் வாழ்வும், வீரமுடிவும் தெளிவாக இனத்துக்குள் எழுச்சியினை ஏற்படுத்தவல்ல அணுக்கதிர்கள். அதனை கட்டவிழ்த்துவிடுவதே தமிழினத்தினை சூடேற்றி வெற்றிபெறவைக்கும். அந்த வீரனின் கனவை, தேர்ந்தெடுத்த பாதையை மூடிமறைப்பது துரோகமாகவே எதிர்கால வரலாற்றால் படிக்கப்படும்.

ஐயா

நான் உங்களை சந்தேகிக்கவில்லை. நீங்கள் வழிநடத்தப்படுகின்றீர்கள் என்பதை உணர்கின்றேன். லண்டன் பாம்போ, ஒஸ்லோ நரியோ உங்களினை தூண்டிவிட்டு தமிழீழ விடுதலைப்போரின் நலன்களுக்கு எதிரான திசையில் உங்களைப் பயன்படுத்துவதாகவே கருதுகின்றேன். பாம்பையும், நரியினையும் இனங்கண்டு தமிழர் எழுச்சிக்கு வித்திடுங்கள். எழுச்சிபெற்ற தமிழினம் வெற்றிபெறும்.

நன்றி

உங்கள் மீது பற்றுள்ள

சோமசுந்தரம்

லண்டன்.

நன்றி: மறு ஆய்வு

ஆஆஅ.... இங்குள்ள கேபி ஒட்டுக்கும்பலில் இருக்கும் ஒண்டுக்கு பெயர் சோமசுந்தரமாம்!!! ... அனக்கும் சேர ஆசை???? ... மற்ர்றயவர்கள் அளவும் அனக்கும் ஒதுக்கினால்!!!4_17_211.gif

  • கருத்துக்கள உறவுகள்

சோமண்ணை, லண்டனில கொஞ்சமென்ன கணிசமான குளிராம் போத்துமூடிக்கொண்டு குப்புறப்படும். மவனே வந்திட்டாராம் .

  • கருத்துக்கள உறவுகள்

சோமண்ணை, லண்டனில கொஞ்சமென்ன கணிசமான குளிராம் போத்துமூடிக்கொண்டு குப்புறப்படும். மவனே வந்திட்டாராம் .

சோமன்னைக்கு தின்ட சோறு செமிக்க வில்லையாம் அது தான் இந்த வில்லங்கம் :D<_<

  • கருத்துக்கள உறவுகள்

இதில கேவலம் என்னவெண்டால் மறுஆய்வு எண்டு இணையத்தளப் பத்திரிகையோ அன்றேல் செய்தித்தாளோ என்னத்திலேயோ எழுதுறார், சோமசுந்தரம் எண்டு மொட்டையாய் எழுதுறார் (இனிசல் இல்லாமல்) பாருங்கோ அப்பவே தெரியுது உவர் ஆர் எண்டு.

இதே நிமலன் ... இதே யாழில் ... அதுவும் மாவீரர்நாளிலும் ஓர் போராளின் வேண்டுகோளென்று???.!!! அது மாவீரர் நாள் சூழலில், சில குழப்பங்களை திட்டமிட்டு ஏற்படுத்த இணக்கப்பட்டது!!! .... இன்று மீண்டும் ... மகிந்தவின் லண்டன் பயணமும், சனல்4 கொலைக்காட்சிகளும் வெளிவந்த நேரம் ... இக்கட்டுரையுடன்!!!! ... இனியும் வரும் நாட்களிலும் அவரோ, அவர் போன்றோரோ, இல்லை இங்குலாவும் சில ஓநாய்களோ ... இதனை தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள்!!! ... இது கருத்துச்சுதந்திரம், அப்படி, இப்படி ... நாம் அடிபடத்தேவையில்லை!!! கருத்துச்சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும்!!! ஆனால் இது ... கொடுத்ததற்கு நன்றிக்கடனாக ... என்று கூறுவதிலும் பார்க்க, கொடுத்துச் செய்விக்கப்படுகின்றனர்!!!! ... இப்பக்கத்தில் கூட அலட்டினாலும், அவர்களின் வெற்றியாக வந்து விடும்!!! ,,, அந்த நேர உணர்வு/சிந்தனை/போகை திசை திருப்பவே இப்படியானவைகள் செய்யப்படுகின்றன!! ... விழாமல் ... துள்ளிப்போக வேண்டியதுதான்!!! ... இன்னும் செய்ய ....

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"சிறீலங்கா மற்றும் இந்திய அரசும் சர்வதேச தரப்புக்களும் தலைவரின் வீரச்சாவு பற்றி குழப்பத்தில் இல்லை என்பதை அவற்றின் செயற்பாடுகள் மூலம் அறியமுடிகின்றது. இந்தியா இறந்து போனவர்களை குற்றவாளிகள் பட்டியலில் வைத்திருப்பதில்லை என்று அறிவித்து தலைவரினதும், பொட்டம்மானினதும் பெயர்களை வழக்குகளிலிருந்து நீக்கிவிட்டது. தலைவர், பொட்டம்மான் மற்றும் தளபதி சூசைக்கு எதிரான வழக்குக்களை சிறீலங்கா வாபஸ் வாங்கிவிட்டது. இதனை தந்திரம் என்று எவரும் சொல்லமாட்டார்கள். ஏனெனில், நீங்கள் சொல்வது போன்று தலைவர் மீள வரும்போது இந்திய பேரரசும், சிறீலங்கா அரசும் மிகப்பெரிய அவமானத்திற்குள்ளும், சட்டச்சிக்கலுக்குள்ளும் அகப்படும் என்பதை தாங்கள் அறிவீர்கள். ஏனெனில், மூடிமறைப்பதற்கு பிரபாகரன் ஒன்றும் கிள்ளுக்கீரையல்ல."

இந்த கருத்துக்கு மறுகருத்து இல்லை என்றே சொல்லலாம்.

கட்டுரையில் பல கருத்துகள் நியாயமானவையே

இந்த கருத்துக்கு மறுகருத்து இல்லை என்றே சொல்லலாம்.

கட்டுரையில் பல கருத்துகள் நியாயமானவையே

இதே இந்திய இராணுவமும், இந்திய அரசும் பிரபாகரன் கொல்லப்பட்டதாக 1988 லை சொன்னவை அந்த நேரம் பிரபாகரன் கிள்ளுக்கீரையோ...?? யாரையாவது குழப்ப வேணும் எண்டே கிழம்பி வாறனீங்களோ...?? <_<

Edited by தயா

இதில நிறைய யதார்த்தங்கள் உள்ளன, எமது தலைவர் தப்பி ஓடி ஒழிக்கின்ற அளவுக்கு கோளை அல்ல, போராளிகளையும் மக்களையையும் எதிரியிடம் சரணடைய வைத்துவிட்டு பதுங்கி இருப்பார், பின்னர் வெளியே வந்து மீட்கலாம் என்று நினைத்திருப்பாரோ??

  • கருத்துக்கள உறவுகள்

இங்க கனபேர் செல்லி வைச்சுக்கொண்டு வந்திருக்கினம். அவர்களது கருத்துக்களைப்பார்த்தால் அப்படித்தான் தெரியுது. வைகோ நெடுமாறன் போன்றோர். வந்து நிண்டு போராடி தமிழீழம் பெற்றுத்தரலாம் எண்டு நக்கல் நளினத்துடன் ஒருவர் எழுதுகிறார். அதுக்கு கனக்கப்பேர் ஒத்தூதி ஒப்பாரி வைக்கினம். இங்கை யாரும் தலைவர் உயிரோடை இருக்கிறார் எண்டு உங்களை நம்பச்சொல்லி தரையிலை தங்கட மண்டையை மோதோல்லை. அது வைகோ, நெடுமாறன் அவர்களது கருத்துக்கள். ஆனால் பினாமியாகச் செயற்படும் நீங்கள் சந்தில சிந்துபாடுறதுதான் கொஞசம் வில்லங்கமா இருக்குது. உங்கட எசமானர்களுக்குச் சொல்லுங்கோ தலைவர் இருந்தாலும் இல்லாது விட்டாலும் தமிழீழ விடுதலைப்போராட்டம் சீரிய வழியில் தொடரும். இவ்வருட மாவீரர் தினத்துடன் அங்க பொடியள் எல்லாத்தையும் பாத்துக் கொள்ளுவினம் எண்டு பகுதிநேர அரசியல் நடத்தும் எண்ணம் தமிழச்சாதிக்கு இப்போது இல்லை தலைவன் ஒருவராக நின்று தாங்கிய தமிழனின் வலியை உலகத்தமிழ்ச் சமுதாயமே தாங்கிநின்று போராடும் காலம் கனிந்து வருகிறது. உங்கட எசமானர்களோடு எதுவித விட்டுக்கொடுப்புக்கும் வழியில்லை. நீங்கள் பாதைதவறிய ஆடுகள் உங்களுக்கு ஒரு புதிய மேய்பர் லண்டன் தெருவில் கிடைத்துள்ளார் என்பதையும் நாம் அறிவோம். அவரை நம்பினீர்களாகவிருந்தால் மகிந்த கொல்லை வழியாக தப்பிப்பிழைக்க அதிபர் எனும் அதிகாரம் ஒன்று இருந்தது ஆனால் இக்கட்டு வரும்போது கட்டிய கோமணமும் இல்லாது போய்விடும். தங்களது மூதாதையார் சித்தார்த்தன் இருவாரங்களுக்கு முன்பு "எம்மை எல்லாரும் கை விட்டுட்டினம்" எண்டு புலம்பியதை கொஞ்சம் மனதில வையுங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலர் மே-19க்குப் பின்னர் நித்திரையை விட்டு எழவில்லை அல்லது எழ மறுக்கின்றார்கள் என்பது கருத்துக்களை எழுதுபவர்களின் மனவோட்டத்தில் இருந்து புரிகின்றது.

வைகோவைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் ஐரோப்பிய பணியகம் ஒன்றின் ஊடாக பல்லாயிரக்கணக்கான இந்திய ரூபாய்களை நெடுமாறன் மாதா மாதம் பெறவில்லை என அவர் மறுக்கட்டும் பார்க்கலாம். இது தொடர்பில் அவரிடமே கேட்டுப்பாருங்கள். அப்போது தெரியும் அவர் புனிதரா இல்லை பணத்துக்காக சேவகம் செய்கின்றாரா என்பது.

இந்தப் பணத்தினை நெடுமாறன், தேனிசை செல்லப்பா, காசி ஆனந்தன், சீமான் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்களாக நடித்துக்கொண்டிருப்பவர்களுக்கு கொடுக்காது விடுங்கள் பிறகு தெரியும் சீத்துவக்கேடு.

இங்கே பல உண்மைகள் எழுத முடியும். எழுந்தமானமாக அல்ல; ஆதாரத்துடன் என்பதனை மீண்டும் உறுதிபட தெரிவித்துக் கொள்கின்றேன்.

"உண்மையின் பயணம் மிக நீண்டது. பொய்யின் பயணம் மிகக் குறுகியது" இதனை அனைவரும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது வேண்டுமானால் உங்களுக்கான காலமாக இருக்கலாம். எதிர்காலம் உங்களுக்கு ஒருபோதும் சாதகமாக இராது. இருக்கப் போவதும் இல்லை.

இது முப்பது வருடகாலமாக போராட்டம் நடத்தியவருக்கே அனுபவமாக வந்துவிட்டது. புலத்தில் இருந்து தலைவர் இருக்கிறார்; போராட்டம் வெடிக்கும் என கனவுலக சஞ்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் உங்களுக்கு ஐந்து வருடம் அல்லது அதற்கு குறுகிய காலம் கூட எடுக்கலாம்.

சுவிசில் மக்களிடம் பெற்று சுருட்டிய பணத்தினைக் கொண்டு போய் சிறிலங்காவில் முதலிடச் சென்ற நபர் சிறிலங்கா புலனாய்வுத்துறையால் பிடிபட்டதில் இருந்தே தெரிகின்றது அல்லவா? மக்களிடம் சேகரித்த பணத்தினை இவர்கள் அந்த மக்களுக்குச் செலவிடாது தமது சொந்த நலனுக்கு பாவிப்பது. ஏன் இவ்வாறான செய்திகள் எதுவும் யாழ். கள நண்பர்களுக்கு கிடைப்பதில்லையோ?

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

ஞரழவந

சிறீலங்கா மற்றும் இந்திய அரசும் சர்வதேச தரப்புக்களும் தலைவரின் வீரச்சாவு பற்றி குழப்பத்தில் இல்லை என்பதை அவற்றின் செயற்பாடுகள் மூலம் அறியமுடிகின்றது. இந்தியா இறந்து போனவர்களை குற்றவாளிகள் பட்டியலில் வைத்திருப்பதில்லை என்று அறிவித்து தலைவரினதும்இ பொட்டம்மானினதும் பெயர்களை வழக்குகளிலிருந்து நீக்கிவிட்டது. தலைவர்இ பொட்டம்மான் மற்றும் தளபதி சூசைக்கு எதிரான வழக்குக்களை சிறீலங்கா வாபஸ் வாங்கிவிட்டது. இதனை தந்திரம் என்று எவரும் சொல்லமாட்டார்கள். ஏனெனில்இ நீங்கள் சொல்வது போன்று தலைவர் மீள வரும்போது இந்திய பேரரசும்இ சிறீலங்கா அரசும் மிகப்பெரிய அவமானத்திற்குள்ளும்இ சட்டச்சிக்கலுக்குள்ளும் அகப்படும் என்பதை தாங்கள் அறிவீர்கள். ஏனெனில்இ மூடிமறைப்பதற்கு பிரபாகரன் ஒன்றும் கிள்ளுக்கீரையல்ல.

தலைவர் இறந்து விட்டார் என்று எத்தனை தடவை சிறிலங்காவும் இந்தியாவும் சொன்னவை அப்பொழுதெல்லாம் அவை அவமானப்பட வில்லையோ? இப்ப தலைவர் இருக்கிறாரா இல்லையா என்று மக்கள் குழம்பவில்லை.அந்த விடயத்தை ஒரு புறம் வைத்துக் கொண்டு இப்ப நடக்க வேண்டியதைச் சரியாகச் செய்கிறார்கள்.மாவீரர் நாள் எழுச்சியும் மகிந்த இலண்டனில் பட்ட அவமானங்களும் அதற்குச் சாட்சிகள்.தலைவர் இல்லை என்றால் மக்கள் எழுச்சி அடங்கி விடும் என்று எண்ணிய உங்களுக்கு கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாக மக்கள் எழுச்சி பெறுவது பிடிக்கவில்லை.அதுதான் இந்த வாந்தி.அது சரி தலைவர் இல்லை என்றதற்கு 100 வீதமான ஆதாரங்களை உங்களால் சமர்ப்பிக்க முடியுமா?சனல் 4 ஒளி பரப்பிய காட்சிகள் பொய்யானவை என்று சிறிலங்கா சொல்வது மாதிரித்தான் இதுவும் பொய் ஒளிபரப்புக்களைத் தயாரிப்பதில் அவர்கள்தான் வல்லவர்களாயிற்றே.தலைவரைப் புகழ்வதுமாதிரியும் அவர் மேல் விசுவாசம் உள்ளது மாதிரியும் நடித்து மக்களை குழப்ப முயற்சிக்கிறீர்கள்.இதைத்தான் தமிழில் வஞ்சகப் புகழ்ச்சி அணி என்று சொல்வார்கள்.

0

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

ஞரழவந

சிறீலங்கா மற்றும் இந்திய அரசும் சர்வதேச தரப்புக்களும் தலைவரின் வீரச்சாவு பற்றி குழப்பத்தில் இல்லை என்பதை அவற்றின் செயற்பாடுகள் மூலம் அறியமுடிகின்றது. இந்தியா இறந்து போனவர்களை குற்றவாளிகள் பட்டியலில் வைத்திருப்பதில்லை என்று அறிவித்து தலைவரினதும்இ பொட்டம்மானினதும் பெயர்களை வழக்குகளிலிருந்து நீக்கிவிட்டது. தலைவர்இ பொட்டம்மான் மற்றும் தளபதி சூசைக்கு எதிரான வழக்குக்களை சிறீலங்கா வாபஸ் வாங்கிவிட்டது. இதனை தந்திரம் என்று எவரும் சொல்லமாட்டார்கள். ஏனெனில்இ நீங்கள் சொல்வது போன்று தலைவர் மீள வரும்போது இந்திய பேரரசும்இ சிறீலங்கா அரசும் மிகப்பெரிய அவமானத்திற்குள்ளும்இ சட்டச்சிக்கலுக்குள்ளும் அகப்படும் என்பதை தாங்கள் அறிவீர்கள். ஏனெனில்இ மூடிமறைப்பதற்கு பிரபாகரன் ஒன்றும் கிள்ளுக்கீரையல்ல.

தலைவர் இறந்து விட்டார் என்று எத்தனை தடவை சிறிலங்காவும் இந்தியாவும் சொன்னவை அப்பொழுதெல்லாம் அவை அவமானப்பட வில்லையோ? இப்ப தலைவர் இருக்கிறாரா இல்லையா என்று மக்கள் குழம்பவில்லை.அந்த விடயத்தை ஒரு புறம் வைத்துக் கொண்டு இப்ப நடக்க வேண்டியதைச் சரியாகச் செய்கிறார்கள்.மாவீரர் நாள் எழுச்சியும் மகிந்த இலண்டனில் பட்ட அவமானங்களும் அதற்குச் சாட்சிகள்.தலைவர் இல்லை என்றால் மக்கள் எழுச்சி அடங்கி விடும் என்று எண்ணிய உங்களுக்கு கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாக மக்கள் எழுச்சி பெறுவது பிடிக்கவில்லை.அதுதான் இந்த வாந்தி.அது சரி தலைவர் இல்லை என்றதற்கு 100 வீதமான ஆதாரங்களை உங்களால் சமர்ப்பிக்க முடியுமா?சனல் 4 ஒளி பரப்பிய காட்சிகள் பொய்யானவை என்று சிறிலங்கா சொல்வது மாதிரித்தான் இதுவும் பொய் ஒளிபரப்புக்களைத் தயாரிப்பதில் அவர்கள்தான் வல்லவர்களாயிற்றே.தலைவரைப் புகழ்வதுமாதிரியும் அவர் மேல் விசுவாசம் உள்ளது மாதிரியும் நடித்து மக்களை குழப்ப முயற்சிக்கிறீர்கள்.இதைத்தான் தமிழில் வஞ்சகப் புகழ்ச்சி அணி என்று சொல்வார்கள்.

0

அப்படி போடு மச்சி ,

உந்த சொறி கூட்டத்துக்கு எப்படித் தான் சொன்னாலும் புத்தி வர போறது இல்லை :rolleyes::icon_idea:

உதுங்கள் கூட கருத்து பகிர்வதும் ஓட்டை கிலாசுக்கை தண்ணி விடுவதுக்கு சமன் :wub:

Edited by பையன்26

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.