Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஐபக்ச தற்போது பிரித்தானியாவிலுள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு போய் ஒழிந்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஐபக்ச

தற்போது பிரித்தானியாவிலுள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு போய் ஒழிந்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்

அங்கும் மக்கள் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்மை அழித்ததை

தமிழன் மறந்து விட்டான் என்று நினைத்தது எவ்வளவு தவறு என்று அவனுக்கு தற்போது புரிந்திருக்கும்

புரியணும்

புரிய வைப்போம்

நன்றி :- IBC

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டின் தூதுவராலயம் என்பது அந்த நாட்டின் இறையாண்மைக்கு உள்பட்ட பகுதி. ஒரு கதைக்கு பிடி விறாந்து இருந்தாலும் அங்கு வைத்து கைது செய்ய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

தப்பு செய்தா தண்டனையை அனுபவிச்சே ஆகணும் , அது கொலை வெறியன் மகிந்தாக்கு பொறுத்தம் :rolleyes::icon_idea:

Edited by பையன்26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

r1878229637.jpg?x=400&y=265&q=85&sig=lszn2sjzMXNUltmWN.UNSQ--

A demonstrator shouts anti-Sri Lankan government slogans during a protest outside a hotel, where Sri Lanka's President Mahinda Rajapaksa is staying in central London December 2, 2010. The Oxford Union debating society said on Wednesday it had cancelled a speech by Rajapaksa after planned protests against his visit raised security concerns.

REUTERS

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஆண்டு வன்னியில் நடைபெற்ற யுத்தத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் படுகொலைசெய்யப்பட்டிருந்ததும், சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கில் சுட்டுக்கொல்லப்பட்டதுமான செய்திகள் ஏற்கனவே வெளிவந்திருந்தது.

ஆனால் அண்மைக் காலமாக அந்தக் கொடூரங்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பதற்கான பல ஆதாரங்கள் புகைப்படங்களாகவும், காணொளியாகவும் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் மேலும் 4 புகைப்படங்கள் இலங்கை இராணூவத்தினரின் போர்க்குற்றத்தினை நிரூபிக்கும் முகமாக வெளிவந்திருக்கின்றது.

pic465.jpg

நேற்று முன்தினம் சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான கொடூர இனப்படுகொலையை பார்த்து அதிர்ச்சியில் இருந்து மீளது இருக்கும் உலகத் தமிழர்களுக்கு இவை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

ஒரு போராளியை கயிற்றால் கையை கட்டி கழித்திலும் அதை இறுகக்கட்டிய நிலையில் இறந்து காணப்படுகிறார். மற்றுமொரு போராளி உடல் முழுவதும் எரிகாயங்களுடன் காணப்படுகிறார்.

எவர் என்றே தெரியாத நிலையில் இருவரது தலைகள் மட்டும் மணலின் மேல் பகுதியில் தெரியும்வண்ணம் புதைக்கப்பட்டுள்ள நிலையில் இன்னுமோர் புகைப்படம்.

pic466.jpg

தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமன்றி, தமிழீழ மக்களாலும் அதிகமாக நேசிக்கப்பட்டவரும், தமிழீழ ஊடகவியலாளரும், தமிழீழத்தின் சிறந்த கலைஞருமான அருட்பிரகாசம் சோபனா எனும் இயற்பெயர் கொண்ட இசைப்பிரியா அவர்களும் ஏனைய சில இளைஞர்களும் சுட்டுக்கொல்லப்பட்டு கிடக்கும் காட்சிகள்.

இவை எல்லாவற்றையும் பார்த்து தமிழ்மக்கள் கொதித்துப் போய் என்னசெய்வதென்று தெரியாதும், இன்னும் இதுபோன்று எத்தனை வெளிவராமல் உள்ளதோ என்ற ஏக்கத்தோடும் உள்ளனர் என்பது கண்கூடு.

pic467.jpg

pic468.jpg

மகிந்த ராஜபக்ஷ லண்டனில் உள்ள இந்தவேளையில் லண்டன்வாழ் தமிழர்கள் தமது உள்ளக்கொதிப்பை வெளிக்காட்ட இதுவே நல்ல தருணம் என்பதோடு இப்புகைப் படங்களையும், சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான காணொளியையும் ஆதாரம் காட்டி மகிந்தவின் ஆட்சியில் தான் இத்தனையும் நடந்துள்ளது எனக்கூறி அவர்மேல் சட்டநடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என பிரித்தானிய அரசையும், காவல்துறையையும் வற்புறுத்தவேண்டும்.

அத்தோடு உலகெங்கும் வாழும் தமிழர்கள் அந்தந்த நாடுகளிலுள்ள பிரித்தானிய தூதராலயங்களிற்கு சென்று இனப்படுகொலையின் சூத்திரதாரியும், போர்க்குர்றவாளியுமான மகிந்த ராஜபக்ஷவை கைதுசெய்யும் படி வலியுறுத்தவேண்டும். இவ்வாறு ஒரே நாளில் உலகெங்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டால் அது நிட்சயம் பலங்கொடுக்கும் எதிர்காலத்தில் பலங்கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

sankathi

  • கருத்துக்கள உறவுகள்
srilankan_genocide_government_president_chemical_rajapakse.jpg
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சனல் 4

தற்போதும் 7 : 30 க்கு போர்க்குற்றக்கானொலி ஒன்றையும்

எமது போராட்டம் பற்றி செய்தியையும் வெளியிட்டுள்ளது

அதில் மகிந்த கோட்டலில் இருந்து காரில் தப்பி செல்வதையும் காட்டியுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரும் கருத்தெழுதும்போது பாவிக்கப்படும் சொற்களை நிதானமாக தெரிவசெய்யவும். சிங்களம் தான் நினைக்கும் இலக்கினை அடைவதற்கு மகிந்தவையே பலிக்கடாவாக்கப் பின்நிற்கமாட்டார்கள். அதன்பின்பு அதனால் ஏறபடும் விளைவுகளுக்காகக் கவலைப்படுவது தமிழினமே. போட்டுத்தள்ளுறம் அது செய்யறம் எண்டு இங்கயாரும் வந்து பக்கீஸ்பெட்டி வீரம் கதைக்கவேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரும் கருத்தெழுதும்போது பாவிக்கப்படும் சொற்களை நிதானமாக தெரிவசெய்யவும். சிங்களம் தான் நினைக்கும் இலக்கினை அடைவதற்கு மகிந்தவையே பலிக்கடாவாக்கப் பின்நிற்கமாட்டார்கள். அதன்பின்பு அதனால் ஏறபடும் விளைவுகளுக்காகக் கவலைப்படுவது தமிழினமே. போட்டுத்தள்ளுறம் அது செய்யறம் எண்டு இங்கயாரும் வந்து பக்கீஸ்பெட்டி வீரம் கதைக்கவேண்டாம்.

கோவம் ஆத்திரம் அது தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைவரும் கருத்தெழுதும்போது பாவிக்கப்படும் சொற்களை நிதானமாக தெரிவசெய்யவும். .

அதை நாம் புரிந்து கொள்கின்றோம்

அதேநேரம் இவர்கள் எவரும் அவன் திரும்ப சென்று எம்மக்கள்மீது காட்டப்போகும் வெறியாட்டத்தை தடுக்கப்போவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, அங்க எங்கட சனத்துக்கு பழிவாங்கல் நடவடிக்கை இனிமேல்தான் தீவிரமாகப்போகுது என்பது கற்பனையே காரணம் தமிழர் மீதான வன்கொடுமை எல்லை மீறிப்போய் நீண்டகாலமாகிறது. தமிழினம் இதைவிட தீவிரமான ஒடுக்குமுறையை இனிமேல் சந்திக்காது. அப்படி ஏதும் நடக்குமாகவிருந்தால் நாடுபிரிவதை தடுப்பதற்காக தமிழ்மக்கள்மீது கட்டவிழ்துவிடப்போகும் உச்சக்கட்ட வன்முறையாகவே அதுவிருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றும்

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் இளைஞர் யுவதிகள் அவனது ரகசிய சிறைகளில்.......?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றும்

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் இளைஞர் யுவதிகள் அவனது ரகசிய சிறைகளில்.......?

எமது சிறிய போராட்டம் ஒரு சிறிய வெற்றியை கொடுத்துள்ளது. மகிந்தவின் ஒக்ஸ்போர்ட் உரையை தடுத்து நிறுத்தினோம். இப்படியே அடைபட்டுள்ள போராளிகளையும் விடுவிக்க நாம் போராடவேண்டும், தொடர்ந்து போராடவேண்டும். மகிந்தவை கைது செய்தலும் செயாவிடாலும் எமது போராட்டம் தொடர வேண்டும். உலகளவிலான போராட்டம் தொடர வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.