Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 


  • நாட்டை நீ மீட்க நினைத்தால்

     

    எல்லாத்தையும் மாற்றிப்போடு
    ****************************************
    மாவுமில்லை பாலுமில்லை
    எப்படித்தான் வாழ்வேனோ
    பாணுமில்லை மீனுமில்லை
    பசியில் தான் தவிப்பேனோ
    வெளிச்சமில்லை எண்ணையில்லை
    இருட்டில் தான் விழுவேனோ
    காசுமில்லை கசுமில்லை
    என்னென்று தான் சமைப்பேனோ
    விறகு வெட்ட காட்டுக்கு போனேன்
    சட்டம் தண்டித்து வீட்டுக்கு வந்தேன்
    உணவுக்காக வேட்டைக்குப் போனேன்
    சட்டத்தின் கோரத்தால் பசியில் தவிக்கிறேன்
    இறக்குமதி ஏதுமில்லை
    விளைச்சலும் போதவில்லை
    வீங்கிப் போகும் பணத்தின் எல்லை
    நீண்டு செல்லும் மக்கள் வரிசை
    உணவை கனவில் தான் காண்பேனோ
    சொர்க்கம் எங்கள் பூமியென்று
    சொன்னவர்கள் கோடியுண்டு
    சோறில்லா தேசமிங்கு
    வெட்கத்தில் நாங்கள் இங்கு
    பசியில் ஒருவன் இருப்பானென்றால்
    நரகம் தானே எங்க ஊரு
    நாட்டை நீ மீட்க நினைத்தால்
    எல்லாத்தையும் மாற்றிப்போடு
     
    வட்டக்கச்சி
    வினோத்
  • 2 weeks later...
  • Replies 338
  • Views 118.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    சே' எனது டீஷர்ட்டில் சின்னப்பயல் வாய்க்காலில் கட்டுக்கடங்காத பிணங்கள், அலையடிக்கும் அலைக்கற்றையின் எண்ண முடியாத கணக்குகள், அடுத்த வேளை எச்சில் சோற்றுக்கென அடித்

  • கரும்பு
    கரும்பு

    கடந்த ஆறு, ஏழு வருடங்களில் யாழில் இதுவரை காணாத ஆபாசமான கவிதையா/கருத்தா இது? உங்கள் நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள்? புங்கையூரன் இணைத்த பாடலில் உள்ளதுபோன்ற தமிழில் அல்லாமல் பேச்சுத்தமிழில் கவிதை எழுதப்பட

  • துளசி, நீங்கள் லீனா மணிமேகலை , மற்றும் சில பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளை வாசிக்கவில்லைப் போலும். இதில் எது சரி எது பிழை என்பதை நாங்கள் தான் எமக்காகத் தீர்மானிக்க முடியும். நடைமுறை வாழ்வை இலக்க

  • கருத்துக்கள உறவுகள்

 

<div class="paragraphs"><p>நா. முத்துக்குமார்</p></div>

நா. முத்துக்குமார்

 

திகட்ட,திகட்ட காதலி

அதிகம் பேசு

ஆதி ஆப்பிள் தேடு

மூளை கழற்றி வை

முட்டாளாய் பிறப்பெடு

கடிகாரம் உடை

காத்திருந்து காண்

நாய்க்குட்டி கொஞ்சு

நண்பனாலும் நகர்ந்து செல்

கடிதமெழுத கற்றுக்கொள்

வித,விதமாய் பொய் சொல்

விழி ஆற்றில் விழு

பூப்பறித்து கொடு

மேகமென கலை

மோகம் வளர்த்து மித

மதி கெட்டு மாய்

கவிதைகள் கிறுக்கு

கால்கொலுசில் இசை உணர்

தாடி வளர்த்து தவி

எடை குறைந்து சிதை

உளறல் வரும் குடி

ஊர் எதிர்த்தால் உதய்

ஆராய்ந்து அழிந்து போ

மெல்ல செத்து மீண்டு வா

திகட்ட,திகட்ட காதலி

- நா முத்துக்குமார்

NewsSense

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

 

283543036_3213087142262973_7957999414449

🔴எங்கள் அப்பா!
அப்பா..!!
எல்லா அப்பாக்களையும்
போல் நீயும் இருந்திருந்தால்
என் தாத்தாவும், பாட்டியும்
இந்நேரம் முசிறியில் அங்கே
மூச்சோடு
இருந்திருப்பார்கள்..
அப்பா..!!
எல்லா அப்பாக்களையும்
போல் நீயும் இருந்திருந்தால்
என் அக்கா
அமெரிக்காவிலும்,
என் அண்ணன் கனடாவிலும்
நான் இலண்டனிலும்
சொகுசாகப் படித்துக்
கொண்டிருப்போம்..! 😭
என் அப்பாவா நீ.?
இல்லையப்பா..??
நீ..நீ..நீ எங்கள் அப்பா..!
எங்கள் என்பது அக்கா,
அண்ணன், நான் மட்டும் இல்லை..!!
எங்கள் என்பது...
செஞ்சோலை, காந்தரூபன்,
செல்லங்கள் மட்டும்
இல்லை..!
எங்கள் என்பது...
உலகெங்கிலும் உள்ள
என் வயதுக்கு நெருங்கிய
என் அண்ணன்கள்,
என் அக்காள்கள்,
என் தங்கைகள்,
என் தம்பிகள்
அனைவருக்குமானது..!
ஆம்... அப்பா.! நீ
எங்கள் அனைவருக்குமான
ஆண் தாய்!
அப்பா..!
அதனால்தான்
சொல்கிறேன்...
நான் மாணவனாக
இருந்திருந்தால்
என் மார்பில்
மதிப்பெண்களுக்கான
பதக்கங்கள்
பார்த்திருப்பாய்..!
நான் மானமுள்ள
மகனாய் இருந்ததால்தானே அப்பா என் மார்பில் இத்தனை விழுப்புண்கள்
பார்க்கிறாய்..!
சிங்கள வீரர் ஒருவரது
மனைவியின் வயிற்றில்
வளர்ந்த கருவுக்கும்கூட
கருணை காட்டிய
அப்பா..!
உன் பிள்ளை உலக
அறமன்றத்துக்கு
முன் ஒரேஒரு கேள்வி
கேட்கிறேன்..!
பன்னிரெண்டு வயது
பாலகன் துப்பாக்கி தூக்கினால்
அது போர்க் குற்றம்..!
பன்னிரெண்டு வயது
பாலகன் மீது
துப்பாக்கியால் சுட்டால்,
இது யார் குற்றம்..??
என்னைச் சுட்ட துப்பாக்கியில் எவர்
எவர் கைரேகைகள்..!
உலக அறமன்றமே.!
உன் மனசாட்சியின்
கதவுகளைத் தட்டித்
திறக்க உலகெங்கிலுமுள்ள
பாலச்சந்திரர்கள்
அதோ பதாகைகளோடு
வருகிறார்கள்..!
பதில் சொல்லுங்கள்..!!
- - கவிஞர் அறிவுமதி.
  • 6 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

உயரவாகு 

unnamed-1.jpg?resize=600%2C400&ssl=1

 

” நிலைக்கதவுப் பிள்ளையாருக்கு
இந்தக் கண்ணியை
வைத்து விடு “
சாமந்தியை நீட்டுகிறாள் அம்மா

“லா.சா. ரா
தி.ஜா
கி.ரா வை
வாசித்து நாளாகிவிட்டதாம்”
பரணிலிருக்கும்
புத்தகத்தை
கீழிறக்கச் சொல்கிறார் அப்பா

மாதமொரு முறை
முகப்புக் காற்றாடித் துடைத்தெடுக்க

பழுதடைந்த மின்பல்புகளை
ஏணியின்றி
எளிதில் பொருத்த

அழுக்குப்பாசியடைந்த
மொட்டைமாடி
நீர்த்தொட்டியினுள்
வெளுப்புக் காரமிட்டு
தேய்த்துக் கழுவிவிடவும்
தேடப்படுகிறேன்

ஆயத்த உடை
அளவு பொருந்தாமை
பாதணிகளின் நீட்டுப் பத்தாமை
முழங்கால் இடிக்கும்
முன்னிருக்கையென
ஒன்றிரெண்டு இம்சைகள் எனக்கு மட்டும்தான்

உதவிக்கு நேர்ந்துவிட்டதுபோல்
என் உயரவாகு
எத்தனை தோதாயிருக்கிறது
பிறருக்கு.

 

https://solvanam.com/2022/12/11/உயரவாகு/

 

கவிதையில் பயன்படுத்திய படத்தில் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் பக்கத்தில் நிற்கும் உயரமான போராளி யார்?

 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கிருபன் said:

கவிதையில் பயன்படுத்திய படத்தில் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் பக்கத்தில் நிற்கும் உயரமான போராளி யார்?

இவர் 7 அடி உயரமாக இருப்பாரோ?

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பனிக்கால இரவில் 
வானத்தை அண்ணாந்துப் பார்க்கிறேன்
ஒவ்வொரு முறையும் வேறாக இருந்தாலும்
எப்போதும் அது வெறுமையைத் தந்ததில்லை
அன்பிருந்தாலும் நீங்கினாலும்
உடன் இருந்தவர்கள் திடும்மென சாம்பலாகியிருந்தாலும்
அரசாங்கங்கள் மாறியிருந்தாலும்
நகரமே தீப்பற்றியெரிந்தாலும்
இந்த நிலவுக்குப் பொருட்டே இல்லை
வளர்வதும் தேய்வதும் மறைவதும் தோன்றுவதுமாய்
இரவோடும் வானோடும்
ஒரு விளையாட்டைப் போல 
தன் இருப்பை
அதன் போக்கில் ஆடித் தீர்க்கிறது
என் உடலில் உறைந்திருக்கும் 
ரத்தக் குளங்களை உருக்கி
அதன் பிரதிமைகளை சேகரிக்கிறேன்
வாழ்க்கை ஸ்தம்பிக்கும்போதெல்லாம்
நிலாக்களைத் தளும்ப விட்டுக்கொள்வேன்

- லீனா மணிமேகலை

https://kanali.in/kathadi-kavithigal/

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை இணைப்புக்கு நன்றி கிருபன்...........!  👏

  • 9 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யானை பார்த்த குருடர்கள்!
- வ.ந.கிரிதரன் -

யானை பார்த்துப் பெருமிதமுறும்
குருடரிவர்.
காலைப் பார்த்துரலென்பார்..
காதைப் பார்த்துச்சுளகென்பார்.
முழுவுரு அறிதற்கு
முயலார். ஆயின்
முற்றுந் தெரிந்ததாய்
முரசறைவார்.

சொல்லின் பொருளறியார்.
ஆயின் சொல்லழகில்
சொக்கி நிற்பார்.
'இஸம்' பல பகர்வாராயின்
'இஸம்' புரியார்.
குழுச் சேர்த்துக்
குளிர் காய்வார்.

இருப்போ தற்செயல்.
தற்செயலுக்குள்
இவர்தம்
தற்செயற் தந்திரம் தான்
என்னே!
நிலையற்றதனுள்
நிலைப்பதற்காயிவர்
போடும் ஆட்டம் தான்
என்னே!

புரிந்து கொள்ளப்
படிக்கார்.
அறிந்து கொள்ளப்
படிக்கார்.
புலமை பகிர்வதற்கன்றிப்
பகர்வதற்காய்ப்
படிப்பார்.

ஆனை பார்க்கும் அந்தகரே!
தனியறிவை
இணைத்தறிய என்றுதான்
முயல்வீர்?

 

https://mail.vaarppu.com/poem/573

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
முனிவன்
சொன்னான்
பெண்ணென்றால்
விசம் என்று
கவிஞன்
சொன்னான்
பெண்ணென்றால்
அமிா்தம் என்று
புலவன்
சொன்னான்
பெண்ணென்றால்
கவிதை என்று
அறிஞன்
சொன்னான்
பெண்ணென்றால்
புத்தகம் என்று
சிற்பி சொன்னான்
பெண்ணென்றால்
ஓவியம் என்று
விஞ்ஞானி
சொன்னான்
பெண்ணென்றால்
ரகசியம் என்று
சித்தன்
் சொன்னான்
பெண்ணென்றால்
பேய் என்று
பக்தன்
சொன்னான்
பெண்ணென்றால்
தெய்வம் என்று
காதலன்
சொன்னான்
பெண்ணென்றால்
கண்ணீா்ரென்று
பெண்ணோடு
வாழும்
மனிதனைக்கேட்டால்
அவன்
சொல்கிறான்
ஆண்களை
பின்னிக்கொண்டு
கொஞ்சம்
கொஞ்சமாக
கொல்லும் சுகமான
வாழ்க்கையென்று
.................................
கவிஞா்
பட்டுக்கோட்டை காதா்
May be an image of 1 person and smiling
 
 
 
 
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

 

நீலம்
 
- வ.ஐ.ச.ஜெயபாலன்
 
தோழி
காலமாய் நுரைகள் உடைகிற மணலில்
சுவடுகள் கரைய
சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா?
கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய்
நம்மிலும் எதோ படர்கிற தென்றேன்.
மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய்
உன் கண்களில் எனது பிம்பம் அசையும்.
ஆண்டு பலவாகினும்
நரையிலா மனசடா உனக்கென்றாய்.
தோழி
இளமை என்பது வாழும் ஆசை.
இளமை என்பது கற்றிடும் வேட்கை.
இளமை என்பது முடிவிலா தேடல்;
இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும்.
இளமை என்பது வற்றாத ரசனை
இளமை என்பது நித்திய காதல்.
இளமை என்பது
அயராத ஆடலும் பாடலும் கூடலும் என்றேன்.
தோழா உனக்கு எத்தனை வயசு?
தோழி எனக்கு
சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு.
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

 

நா.முத்துக்குமார் அவர்களின் கவிதை 👌👌👌
 
மழை பெய்யா நாட்களிலும்
மஞ்சள் குடையோடு வரும்
ரோஜாப்பூ மிஸ்
வகுப்பின் முதல் நாளன்று
முன்பொரு முறை
எங்களிடம் கேட்டார்
"படிச்சு முடிச்சதும்
என்ன ஆகப் போறீங்க?"
முதல் பெஞ்சை
யாருக்கும் விட்டுத் தராத
கவிதாவும் வனிதாவும்
"டாக்டர்" என்றார்கள்
கோரஸாக
இன்று
கல்யாணம் முடிந்து
குழந்தைகள் பெற்று
ரேஷன் கடை
வரிசையில்
கவிதாவையும்;
கூந்தலில் செருகிய
சீப்புடன்
குழந்தைகளை
பள்ளிக்கு வழியனுப்பும்
வனிதாவையும்
எப்போதாவது
பார்க்க நேர்கிறது.
"இன்ஜினியர் ஆகப்போகிறேன்"
என்ற எல்.சுரேஷ்குமார்
பாதியில் கோட்டடித்து
பட்டுத் தறி
நெய்யப் போய்விட்டான்.
"எங்க அப்பாவுடைய
இரும்புக் கடையைப்
பாத்துப்பேன்"
கடைசி பென்ச்
சி.என்.ராஜேஷ்
சொன்னபோது
எல்லோரும் சிரித்தார்கள்.
இன்றவன்
நியூஜெர்சியில்
மருத்துவராகப்
பணியாற்றிக்கொண்டே
நுண் உயிரியலை
ஆராய்கிறான்.
"பிளைட் ஓட்டுவேன்"
என்று சொல்லி
ஆச்சரியங்களில்
எங்களைத் தள்ளிய
அகஸ்டின் செல்லபாபு
டி.ன்.பி.ஸ்.சி. எழுதி
கடைநிலை
ஊழியனானான்.
"அணுசக்தி
விஞ்ஞானியாவேன்"
என்ற நான்
திரைப் பாடல்கள்
எழுதிக் கொண்டிருக்கிறேன்.
வாழ்க்கையின் காற்று
எல்லாரையும்
திசைமாற்றிப் போட,
"வாத்தியாராவேன்"
என்று சொன்ன
குண்டு சுரேஷ் மட்டும்
நாங்கள் படித்த
அதே பள்ளியில்
ஆசிரியராகப்
பணியாற்றுகிறான்.
"நெனைச்ச வேலையே
செய்யற,
எப்படியிருக்கு மாப்ளே?"
என்றேன்.
சாக்பீஸ் துகள்
படிந்த விரல்களால்
என் கையைப்
பிடித்துக்கொண்டு
"படிச்சு முடிச்சதும்
என்ன ஆகப் போறீங்க?
என்று மட்டும்
என் மாணவர்களிடம்
நான் கேட்பதே இல்லை! "
என்றான்.
  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

"என்றும் இருந்தனர் சூரிய பெண்கள்/அன்றுன் கண்களில் ஆண்குருடு” என்றாள்/ நகைக்கிறாய்/ திருமணம் வரைக்கும் தம்முடை மனைவியர்/குளிர்பதனப் பெட்டியுள் உறைந்திருந்தாக/நம்ப விரும்புவோர் தேசத்தில்/ என்னையேன் நகைக்கிறாய்?

*

போர்க் காலத்தில் விஸ்வரூபம் எடுத்த ஈழத்து இளம் பெண்கள் என்னை கை கூப்பி தலை பணிய வைத்தனர். 1996ல் நிகழ்ந்த வீரமங்கை ஒருவருடனான சந்திப்பு கவிதையாக. - Painting by Khani Vumathi

*

ஆண் குருடு.

வ.ஐ.ச.ஜெயபாலன்

*

சூரியன் அன்று பெண்ணாய் இருந்து.

அழகின் சுவாலையை ரவிக்கையுள் முடிந்து

கண்களில் தீ நாக்குகள் சுழல,

போர்ப் பேய்களின் தீவில்

கிழக்குக் கரையும் மேற்க்குக் கரையுமாய் திரிகிற

சூரியப் பெண்ணைக் கண்டு

உலகம் மாறிவிட்டதை உணர்ந்தேன்.

*

நில்லடி திடந் தோழி

ஆறுக உன் ஏறு நடை

ஒரு மென் மலர்க் கவிஞன் நான்

உன் பார்வையின் தீயைத் தணி

நிலம் நோக்காமல்

உன் கண்களை நோக்கி பேச விரும்பினேன்.

*

எக்காலத்திலும்

நான் கண்டதில்லை சூரியப்பெண்ணை

என்கிற போதேன் ஏழனச் சிரிப்பு?

“உலகம் இப்படியேதான் இருக்கிறது கவிஞனே நீதான் மாறிவிட்டாய்

என்றும் இருந்தனர் சூரிய பெண்கள்

அன்றுன் கண்களில் ஆண்குருடு”

என்றேன் நகைக்கிறாய்?

எனது மண்ணையும் விண்ணையும் உதைத்தது மின்னல்.

*

எனது காலத்து பெண் சூரியர்களே

மன்னித்துக் கொள்ளுங்கள்.

ஆண் குருடனாய் இருந்தேன்

பஞ்ச கல்யாணிகள் மேயும் வெளியில்

கழுதையாய் இருந்து வாழ்வை தொலைத்தேன்.

மனிதரின் ஒருவழிப் பாதையில்

நெடுந்தூரம் வந்துவிட்டேன் இப்படியே.

எல்லாவற்றிலும் பாதியை இழந்துபோன கவிஞன் நான்.

என்றாலும் சிரிக்காதே.

*

திருமணம் வரைக்கும் தம்முடை மனைவியர்

குளிர்பதனப் பெட்டியுள் உறைந்திருந்தாக

நம்ப விரும்புவோர் தேசத்தில்

என்னையேன் நகைக்கிறாய்?

- 1996

May be an image of 1 person


  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

'கள்ளிப்பலகையும் கண்ணீர்த்துளிகளும்' மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தமிழ்ச் சங்க இதழான நுட்பம் (1980/1981) இதழில் வெளியான கவிதை.

கள்ளிப் பலகையும் கண்ணீர்த் துளிகளும்

- வ.ஐ.ச.ஜெயபாலன் -

முரட்டு மேதை என்பர் மேலோர்

'இங்கிதம் அறியான் அறியான்' என்பர்

கபடம் நிறைந்த இளம் சீமாட்டிகள்

ஓயாது துரத்தும் சவக்குழி விழுங்குமுன்

ஒரேஒரு முறையே வாழுமிவ் வாழ்வில்

கையா லாகாத கோழையைப் போல

கொடுமையும் சூதும் நிறைந்த உலகை

சகித்தும் ரசித்தும் பாவனை செய்தும்

சான்றோன் என்று மாலைகள் சூட

நானும் எனது நண்பரும் விரும்போம்.

வீணையோடும் தூரிகையோடும்

மூலைமட்டம் ஸ்டெதஸ்கோப் அரிவாள்

சம்மட்டி போன்றவை பழகிப் போன

கைகளை உயர்த்தி நெஞ்சுகள் நிமிர்த்தி

எனது தோழர் புடை சூழ்வார்கள்.

பொன்னாய் அழகு பொழியினும் விலங்கை

அப்பிய மலமாய் அருவறுத் தெறிவோம்.

வெடி மருந்துகள் தோய்ந்த எம்நாவு

ஓய்ந்திருக்காது.

தடைகள் சீனப் பெரு மதிலாயினும்

தகர்க்கும் பணியினைப் பேனைக் குச்சியால்

ஆர்வமாய்ச் செய்வேன் அங்குரார்ப்பணம்.

தடைகளைத் தகர்த்தும் விலக்கியும்

தொடர்ந்து

அதிமானிடனாய் முன்சென்றிடுவோம்.

விழுமிடத் தெமக்கோர் நடுகல் நிமிர்த்தி

எமது பிள்ளைகள் பெண்டுகள் தொடர்வார்.

கடலின் மணலை எண்ணித் தீர்ப்பினும்

மானிடர் எமது வம்சக் கொடியை

சவக்குழி உனக்கு

விழுங்கித் தீர்த்திடல் முடியுமோ?

விலங்கும் சிறையும் வளைத்திடல் கூடுமோ?

விடுதலை பெற்ற தோழியரோடு

கட்டாந் தரையின் வாழ்வே உவப்பு.

பெரிய இடத்துச் சீமை நாய்களாய்

கார்ப்பவனி வரும் இல்லறக் கனவில்

எமது தோழர் தோழியர் தேயார்.

கொடிய உலகம் சான்றோன் என்னவும்

இளம் சீமாட்டிகள் இனியவன் என்னவும்

குனிந்து நடக்கும் கூழங்கையர்கள்

பெறுமதி கூடிய காலணி இலங்கும்

கால்களைத் தேடி முத்தம் கொடுப்பர்.

பொன்முலா மிட்ட சவப்பெட்டிப் பரிசால்

உலகம் அவர்களைக் கெளரவம் செய்யும்.

வெளிப் பூச்சற்ற கள்ளிப் பலகையும்

வெம்மை நிறைந்த கண்ணீர்த் துளிகளும்

எங்களுக்காக இருக்கவே செய்யும்.

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து பெரிது ஆறு சிறிது

வைரமுத்து

“சீ மிருகமே!”

என்று

மனிதனைத் திட்டாதே

மனிதனே

எந்த விலங்கும்

இரைப்பைக்கு மேலே

இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை

எங்கேனும்

தொப்பைக் கிளியோ

தொப்பை முயலோ

பார்த்ததுண்டா ?

எந்த விலங்குக்கும்

சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ?

இன்னொன்று :

பறவைக்கு வேர்ப்பதில்லை

எந்த பறவையும்

கூடுகட்டி

வாடகைக்கு விடுவதில்லை

எந்த விலங்கும்

தேவையற்ற நிலம்

திருடுவதில்லை

கவனி மனிதனே

கூட்டு வாழ்க்கை இன்னும்

குலையாதிருப்பது

காட்டுக்குள்தான்

அறிந்தால்

ஆச்சரியம் கொள்வாய்

உடம்பை உடம்புக்குள் புதைக்கும்

தொழு நோய்

விலங்குகளுக்கில்லை

மனிதா

இதை

மனங்கொள்

கர்ப்பவாசனை

கண்டு கொண்டால்

காளை

பசுவை சேர்வதில்லை

ஒருவனுக்கொருத்தி

உனக்கு வார்த்தை

புறாவுக்கு வாழ்க்கை

எந்த புறாவும்

தன் ஜோடியன்றி

பிறஜோடி தொடுவதில்லை

பூகம்பம் வருகுது எனில்

அலைபாயும் விலங்குகள்

அடிவயிற்றில் சிறகடிக்கும்

பறவைகள்

இப்போது சொல்

அறிவில்

ஆறு பெரிதா ?

ஐந்து பெரிதா ?

மரணம் நிஜம்

மரணம் வாழ்வின் பரிசு

மாண்டால்

மானின் தோல் ஆசனம்

மயிலின் தோகை விசிறி

யானையின் பல் அலங்காரம்

ஒட்டகத்தின் எலும்பு ஆபாரணம்

நீ மாண்டால் …

சிலரை

நெருப்பே நிராகரிக்கும்

என்பதால் தானே

புதைக்கவே பழகினோம்

“சீ மிருகமே !”

என்று

மனிதனைத் திட்டாதே

மனிதனே

கொஞ்சம் பொறு

காட்டுக்குள் என்ன சத்தம் …

ஏதோ ஒரு மிருகம்

இன்னொரு மிருகத்தை

ஏசுகிறது

” அட சீ மனிதனே !”

May be an image of 1 person and smiling

All reactions:

5K5K


Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.