Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழ் பெண்களை டக்ளஸ், கருணாவும் கடத்தி விற்றதாக விக்கிலீக்ஸ் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழ் பெண்களை டக்ளஸ், கருணாவும் கடத்தி விற்றதாக விக்கிலீக்ஸ் தகவல்

இலங்கையில் தமிழ் பெண்களை டக்ளஸ் தேவானந்தாவும், கருணாவும் கடத்தி விற்றதாக விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நடைபெற்று வரும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் நிகழ்வுகள் குறித்து கடந்த 2007ம் ஆண்டு அந்நாட்டுக்கான அமெரிக்க தூதர் பேசிய தகவல்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.

இதில், முகாம்களில் உள்ள தமிழ்ப் பெண்கள் மற்றும் குழந்தைகளை கருணாவும், டக்ளஸ் தேவானந்தாவும் கடத்தி விற்றதாகவும், இலங்கை ராணுவத்திற்கு இறையாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் இருவரும் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களை கடத்திக் கொன்றுள்ளனர் என்றும்

தெரிவித்துள்ளது.

குறிப்பாக கடந்த 2005ஆம் ஆண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்தது இவர்கள் தான் என்றும், கருணா மற்றும் டக்ளசின் நடவடிக்கைகளை தடுக்க வேண்டாம் என ராணுவத்தினருக்கு இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே ஆணையிட்டதாகவும் விக்கிலீக்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது

color="#0000FF"]நன்றி நக்கீரன்

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழ் பெண்களை டக்ளஸ் தேவானந்தாவும், கருணாவும் கடத்தி விற்றதாக விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.....

இதில் பரபரப்படையவேண்டிய விடயமில்லை ஏனெனில் அப்போதே வெளிவந்த செய்தியாச்சே!!!

இதில் என்ன பரபரப்பு. இவன்கள் மாமா வேலைபார்த்திருக்கிறான்கள். ஒழுங்கான அப்பாவிற்குப் பிறக்காதவன்கள்.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்கள் தவறானது - அமைச்சர் டக்ளஸ் மற்றும் கருணா மறுப்பு

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட் டங்களில் உள்ள தமிழ் வர்த்தகர்களை கடத்தி கப்பம் பெற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும்,பிரதி அமைச்சர் முரளிதரனுக்கும் பாதுகாப்பு அமைச்சு ஆதரவு வழங்கியதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்ட தகவலை இருவரும் மறுத்துள்ளனர்.இது தொடர்பாக தமது மறுப்பை பி.பி.சி. தமிழோசையிடம் தெரிவித்தனர்.

இவ்வாறான தகவலில் உண்மை எதுவும் இல்லை.ஏனெனில் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிபடக் கூறினார். நாங்கள் இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டிருந்தோமானால் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று ஆசனங்களைப் பெற்றிருக்க மாட்டோம் என்றார்.

இதேவேளை ரவிராஜ் மற்றும் ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோரின் படுகொலைகளுக் கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என பிரதி அமைச்சர் முரளிதரன் தெரிவித்தார். விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல் குறித்து கரு த்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறி னார். இவர்கள் குறித்து விக்கிலீக்ஸ் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளதாவது,

வடக்கு,கிழக்கு மாகாண தமிழ் வர்த்தகர்களிடம் இருந்து கருணா குழுவினர் மற்றும் ஈ.பி.டி.பியினர் கப்பம் பெற்றதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் அறிவித்துள்ளது.பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜ பக்­வின் உத்தரவுக்கு அமையவே வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் வர்த்தகர்களிடம் இருந்து இவர்கள் கப்பம் பெற்றதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தி னால் 2007ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதியிடப்பட்டு அமெரிக்க இராஜங்கத் திணைக் களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட இரகசிய ஆவணங்களை நேற்றுமுன்தினம் விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது. இத் தகவல்களின் பிரகாரம், வடக்கில் இயங்குகின்ற தமிழ் துணைக் குழுக்களின் செயற்பாடுகளில் படையினரைத் தலையிட வேண்டாம் என கோத்தபாய ராஜபக்­ உத் தரவிட்டதாக தெரிவித்துள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் தற்போது பிரதி அமைச்சராக உள்ள விநாயகமூர்த்தி முரளிதரன், இந்த ஆவ ணம் அனுப்பப்பட்ட காலப் பகுதியில் அதிக அளவிலான கப்பம் பெற்றதுடன் பல்வேறுகுற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்களில் சுட்டிக் காட் டப்பட்டுள்ளது.

படைத் தரப்பினரின் பாலியல் தேவைகளுக்காக வன்னி தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்களை கருணா வலுக் கட்டாயமாக பயன்படுத்தியதாகவும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. அத்துடன், டக்ளஸ்தேவானந்தா தலைமை யிலான குழு படைத்தரப்பினருடன் இணைந்து கொலைகளிலும் ஈடுபட்டதாக விக்கிலீக்ஸ் மேலும் குறிப்பிட்டுள்ளது.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=13434

ஏன் இதை தெளிவுபடுத்துமாறு திருவாளர், மாண்புமிகு Then US diplomat incharge, HON Robert O Blake இடம் கேட்கக் கூடாது?

"ஓட்டப்பம் வீட்டைச் சுட்டது" என்று புதுக் கதை சொல்வார்!

Million thanks to wikileaks founder.

கடத்தல், கப்பம், கொலை பயற்சியை கருணா மிக விரைவில் டக்ளசிடமிருந்து பயின்றுள்ளார்.

டக்லஸ் வடக்கின் கடத்தல், கப்பம், கொலை மன்னன்.

கருணா கிழக்கின் கடத்தல், கப்பம், கொலை மன்னன்.

தற்போது பொய்களை தொடர்ச்சியாக அவிட்டுவிடுவதிலும் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல என்பதை நிரூபித்துள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.