Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைகோ போட்ட வழக்கும்... புலிகளால் கிளம்பும் பீதியும்!

Featured Replies

வைகோ போட்ட வழக்கும்... புலிகளால் கிளம்பும் பீதியும்!

- இரா.தமிழ்க்கனல்

'தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்தது சரிதான்!’ என நவம்பர் 12-ம் தேதி, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்கிரமஜித் சென் தீர்ப்பாயம் உறுதிசெய்தது. அதை எதிர்த்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

கடந்த 14-ம் தேதி, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய அமர்வு முன்பு, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தானே வாதிட்ட வைகோ, "சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் 9-வது பிரிவின் கீழ், சிவில் நடைமுறை சட்டப்படி என்னையும் விசாரணையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தேன்.

ஆனால், சிவில் நடைமுறை சட்டத்தின்படி நான் அனுமதி கேட்டது தவறு என்றும், கிரிமினல் நடைமுறைச் சட்டம் தான் இதில் செல்லுபடியாகும் என்றும் தீர்ப்பாயத்தின் தலைவர் கூறி இருப்பது, சட்டத்தின் அடிப்படையில் முற்றிலும் முரணானது. 1967-ல் கொண்டுவரப்பட்ட சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமானது, 2004-ம் ஆண்டு திருத்தப் பட்டபோதும், சிவில் நடைமுறைச் சட்டம் கையாளப்படுவதைத் தொடரவே பல பிரிவுகளில் சட்டம் வழிசெய்கிறது..." என்று விவரித்தார்.

'நீங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவரா?’ என நீதிபதி இக்பால் கேட்க, "நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் அல்ல. ஆனால், அதன் தீவிரமான ஆதரவாளன்!" என்று அழுத்தமாகச் சொன்னார் வைகோ.

மத்திய அரசின் சார்பில் வாதாடிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன், "தடையை நீக்குவதுபற்றி மத்திய அரசிடம் முறையிட, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் 6-வது பிரிவில் வாய்ப்பு உள்ளது. அதை வாதி பயன்படுத்திக்கொள்ள வேண்டும்..." என்று கூற, வைகோ சூடாகி, "இந்தத் தடையை விதித்த மத்திய அரசாங்கத்திடமே தடையை நீக்க எப்படி கேட்க முடியும்? அநீதி இழைத்தவர்களிடமே நீதியைக் கேட்க முடியாது. தடை விதித்ததன் மூலம் தமிழர்களுக்கு மத்திய அரசு தீங்கு இழைத்துவிட்டது!" என்று குமுறலுடன் முழங்கினார்.

"அரசுத் தரப்பில் இருந்து இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும். இதில் மத்திய அரசுக்கு முழுப் பொறுப்பு இருக்கிறது. எனவே, வைகோவின் ரிட் மனு தொடர்பாக மூன்று வாரங்களுக்குள் மத்திய அரசு பதில் அளிக்கவேண்டும்!" என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை வெளியிட்டதும், நாட்டின் முக்கிய முடிவுகளை எடுக்கும் டெல்லியின் சௌத் பிளாக் பகுதியில் ஒரே பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 20 ஆண்டுகளில் புலிகள் மீதான தடை இந்த ஆண்டுதான் இவ்வளவு பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. "இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்யும். இது தொடர்பான தீர்ப்பாயம் இதை விவாதித்து சரியான நடவடிக்கைதான் என்று சொல்லி அறிவிக்கும். ஆனால், இந்த முறைதான் வைகோ, டெல்லி ஆணையத்தில் ஆஜராகி விவாதப் பொருள் ஆக்கினார். ஆனாலும் தடை நீடிக்கப் பட்டது. இந்நிலையில் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு, மத்திய அரசுக்கு மீண்டும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. நீதிபதிகள் தங்களது தீர்ப்பை எப்படி வேண்டுமானாலும் வழங்கலாம் என்ற அச்சம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது!" என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.

இந்த நிலையில்தான், 'விடுதலைப் புலிகளால் பிரதமர் மன்மோகன், முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்பட பல பிரமுகர்களுக்கும் ஆபத்து!’ என மத்திய உளவுப் பிரிவு எச்சரிக்கை அனுப்பி உள்ளது. திடீரெனக் கிளம்பி இருக்கும் இந்த எச்சரிக்கையால், இனி, 'தமிழகம் வரும் பிரதமர் உட்பட்ட தலைவர்களுக்கு இதுவரை இல்லாத பாதுகாப்பு செய்யப்படும் என்றும், முதல்வர் கருணாநிதிக்கும் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு அவ்வப்போது ஆய்வுசெய்யப்பட்டு, பலப்படுத்தப்படும்’ என்றும் டி.ஜி.பி. லத்திகாசரண் கூறி இருக்கிறார்.

வைகோவின் வழக்கையும், இந்த திடீர் எச்சரிக்கை யையும் இணைத்துப் பேசும் 'புலி’ ஆதரவாளர்களோ, "சென்னை உயர் நீதிமன்றத்தில் கிளம்பியிருக்கும் வழக்கு காரணமாகத்தான் இந்த பீதி கிளப்பப்படுகிறது!" என்கிறார்கள்.

"ஜெயலலிதாவுக்கோ, கருணாநிதிக்கோ போலீஸ் பாதுகாப்பு அதிகம் வேண்டும் என்கிறபோது எல்லாம், புலிகளால் ஆபத்து என்கிற 'எச்சரிக்கை’ டெல்லியில் இருந்து வந்துவிடும். 'அதற்கான முகாந்திரம் இருக்கிறதா... இல்லையா?’ என்பதெல்லாம் யாரும் கேட்கக் கூடாதது ஆகிவிடும். இதில் குற்றம் சாட்டப்படுபவர்கள் விடுதலைப் புலிகள் என்பதால் குற்றம்சாட்டுபவர்களுக்கு வசதியாகிப் போய்விடுகிறது. புலிகள் இயக்கம் ராணுவ ரீதியாக அழிக்கப்பட்ட பிறகு, அவர்கள் மீதான தடையை நீக்க தமிழகத்தில் எழுந்துள்ள ஆதரவுதான், டெல்லியின் 'புலி பீதி’க்குக் காரணம்!" என்கிறார்கள்.

* ஜூனியர் விகடன் 22-டிசம்பர்-2010

http://new.vikatan.com/news.php?nid=352

இந்தியா பல நாடுகளாக உடைய வேண்டும் அப்ப தான் ஈழத்தமிழருக்கு விடுதலை என்பதில் ஈழத்தமிழர் உறுதியாக நம்புகிறார்கள்

ரசியாவரைபடத்தில் இல்லாமல் போனது போல் இந்தியாவும் வரும்

  • கருத்துக்கள உறவுகள்

ரசியாவரைபடத்தில் இல்லாமல் போனது போல் இந்தியாவும் வரும்

இந்தியாவில் நீடிக்கும் காஷ்மீர் பிரச்சினையே இந்தியாவை இதுவரை உடைக்கவில்லை. தற்போதைய உலகஅரசியல் நிலவரப்படி எதிர்காலத்திலும் பிரிந்துபோகாது. எனவே "ஜனநாயக" நாடான இந்தியா உடையும் என்று காத்திருக்கக்கூடாது!

பி.கு. கம்யூனிசிய சோவியத் யூனியன்தான் வரைபடத்தில் இல்லாமல் போனது.

  • தொடங்கியவர்

சோவியத் யூனியனை பதினைந்து நாடுகளாக அதன் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு தனி நாடாகின. இதன் பின்னால் முக்கியமாக இருந்தவர்கள், நாட்டுக்கு உள்ளே சிலரும், வெளியால் அமெரிக்காவும். அமெரிக்காவின் அன்றைய ஒரே உலக வல்லரசு போட்டியாக சோவியத் யூனியன் இருந்தது, அதை இல்லாமல் செய்யவும் அதன் பொதுவுடைமை கொள்கை இல்லாமல் செய்யப்படல் வேண்டும் என்று அந்த சோவியத் யூனியன் வல்லரசு உடைக்கபட்டது.

ஆசியாவில் இரு நாடுகள் பிராந்திய வல்லரசு பலப்பரீட்சையில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல வழிகளிலும் சீனா பலமாக நிற்கிறது, இந்தியாவுக்கு மேற்கத்திய நாடுகள் ஆதரவாக உள்ளன என நம்பலாம். இந்த ஆதரவையும் மீறி சீனாவால் இந்தியாவை பல நாடுகளாக பிளக்க முடியுமா இல்லை இந்தியாவை ஒரு வல்லரசு நிலையில் இருந்து இறக்க முடியுமா என்பதே சீனாவின் நோக்கம். இதற்கு, பாகிஸ்தானும் முக்கிய பங்காளியாக உள்ளது.

இந்தியாவின் உள்ளே ஒரு சமச்சீர் அற்ற பொருளாதார வளர்ச்சி, தேசிய வளங்களை பகிர்வதில் உள்ள படுபாடுகள் என்பன உள்நாட்டு பிரச்சனைகளை அதிகரிக்கலாம்.

இந்தியாவில் நீடிக்கும் காஷ்மீர் பிரச்சினையே இந்தியாவை இதுவரை உடைக்கவில்லை. தற்போதைய உலகஅரசியல் நிலவரப்படி எதிர்காலத்திலும் பிரிந்துபோகாது. எனவே "ஜனநாயக" நாடான இந்தியா உடையும் என்று காத்திருக்கக்கூடாது!

பி.கு. கம்யூனிசிய சோவியத் யூனியன்தான் வரைபடத்தில் இல்லாமல் போனது.

இந்தியாவால் காஸ்மீர் பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்க முடியாது. நடக்கவே நடக்காது. காஸ்மீர் பிரச்சனை முடிவுக்கு வரும் போது இந்தியா ஆட்டம் கானும்.

காஸ்மீர்கள் ஒன்றும் ஈழத்தமிழன் இல்லை காட்டி கொடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர,

பல மாநிலங்கள் உரிமைக்காக போராட தொடங்கியுள்ளன,

தெலுங்கானாமக்கள் ,நாகலாந்து, மணிப்பூர், அருனாச்சலம், இன்னும் பல. தமிழகமே ஒரு போதும் ஈழத்தமிழனை அழித்த வட இந்திய சர்வாதிகார மையத்தை ஏற்று வாழ்ப்போவதில்லை.

இப்போ கூட வட இந்திய சர்வாதிகார்ம தான் அரசு நடாத்துகிறது.

விரைவில் குழம்பும்.

எல்லா மாநிலங்களும் சுயாட்சி கேட்கின்றன. இல்லை என்று சொல்லி கொண்டு இருக்க முடியாது.

ரசியாவின் பொய்யான கொம்யூனிச வீழ்ச்சியே மக்களின் சுதந்திரத்திற்கான பல நாடுகள் உருவானத்திற்கான ஒரு எடுத்துகாட்டு.

இந்திய மாயையும் அது போல் தான்.

இந்தியாவை இதுவரை எந்த ஒரு நாடும் வல்லரசு என்று சொன்னதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா சீனா கொம்முனிசிய நாடுதானே அது உடைஞ்சாலும் கூட பரவாயில்லை! :wub:

  • தொடங்கியவர்

சீனாவும் பல இனங்கள் மாநிலங்கள் என பிரிந்து இருந்தாலும், சீனா நாலாயிரம் வருடங்கள் ஒன்றாக உள்ளது. இந்தியாவுக்கு அப்படியான வரலாறு இல்லை.

சீனாவின் பொருளாதார வளர்ச்சி நாட்டின் நலத்தை முன்னிலைப்படுத்தும் (உதாரணத்திற்கு மஞ்சள் ஆறு திசை திருப்பல் ). இந்தியாவில் ஒரு மாநிலம் தண்ணியில் மிதக்கும் பக்கத்து மாநிலம் தண்ணி இல்லாமல் உயிர் விட்டுக்கொண்டு இருக்கும்.

இந்தியாவின் ஊழல் அதன் வளர்ச்சிக்கு பெரும் தடை. குடும்ப அரசியல் கூட மக்களின் வெறுப்புக்களை வேண்டி நிற்கிறது.

மொத்தத்தில் சீனாவும் உடையலாம் இந்தியாவும் பிரியலாம் ஆனால், இந்தியாவுக்கு அந்த சந்தர்ப்பம் அதிகம். அதற்கு எதிரிகள் உள்ளுக்குள்ளும் வெளியிலும் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவால் காஸ்மீர் பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்க முடியாது. நடக்கவே நடக்காது. காஸ்மீர் பிரச்சனை முடிவுக்கு வரும் போது இந்தியா ஆட்டம் கானும்.

காஸ்மீர்கள் ஒன்றும் ஈழத்தமிழன் இல்லை காட்டி கொடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர,

பல மாநிலங்கள் உரிமைக்காக போராட தொடங்கியுள்ளன,

தெலுங்கானாமக்கள் ,நாகலாந்து, மணிப்பூர், அருனாச்சலம், இன்னும் பல. தமிழகமே ஒரு போதும் ஈழத்தமிழனை அழித்த வட இந்திய சர்வாதிகார மையத்தை ஏற்று வாழ்ப்போவதில்லை.

இப்போ கூட வட இந்திய சர்வாதிகார்ம தான் அரசு நடாத்துகிறது.

விரைவில் குழம்பும்.

எல்லா மாநிலங்களும் சுயாட்சி கேட்கின்றன. இல்லை என்று சொல்லி கொண்டு இருக்க முடியாது.

ரசியாவின் பொய்யான கொம்யூனிச வீழ்ச்சியே மக்களின் சுதந்திரத்திற்கான பல நாடுகள் உருவானத்திற்கான ஒரு எடுத்துகாட்டு.

இந்திய மாயையும் அது போல் தான்.

இந்தியாவை இதுவரை எந்த ஒரு நாடும் வல்லரசு என்று சொன்னதில்லை.

இந்தியா உடையும் என்பதுதான் மாயை! ஒருகட்சி ஆட்சி நிலவும் கம்யூனிச சீனாவே உறுதியாக இருக்கும்போது, மேற்கத்தைய ஜனநாயகப் பண்புகளைப் பின்பற்றும் இந்தியாவை உடைய மேற்குநாடுகள் விடமாட்டா.. 80 களில் பல இந்திய மாநிலங்களில் ஆரம்பித்த போராட்டங்கள் எவ்வாறு பிசுபிசுத்துப் போயின என்பதையும், நேபாளத்தில்

மாவோ கொரில்லாக்கள் வன்முறையைக் கைவிட்டு அரசியல் நீரோட்டத்தில் இணைய இந்தியா எவ்வாறு செயற்பட்டது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். அத்தோடு புலிகளை ஆயுத ரீதியாக ஒடுக்க இந்தியாவே பின்புலத்தில் செயற்பட்டது என்பதும், தற்போதைய போர்க்குற்ற விசாரணைகளை தடுத்த நிறுத்த இந்தியா இலங்கைக்கு மிகவும் உதவியாக இருப்பதையும் அறிந்துகொள்ளவேண்டும். இவையெல்லாம் இந்தியா பலவீனமான நிலையில் உள்ளது என்று காட்டவில்லை. எனவே இந்தியா பலமாக இருக்கும்போதே தமிழர்கள் தமது உரிமையை எவ்வாறு வெல்லலாம் என்று சிந்திப்பது நல்லது (அதற்காக இந்தியாவின் வால்பிடியாக மாறித்தான் உரிமைகளை வெல்லலாம் என்று சொல்லவரவில்லை!)

இங்கு இந்தியா உள்நாட்டு பிரச்சனைகளால் உடையுமா உடையாதா என்பதல்ல பிரச்சனை.எமக்கு உதவாததால் உடையும் .எமக்கு உதவியிருந்தால் உடையாது. ஆவில் குவெபெக் பிரிந்துபோவது பற்றி ஒரு ரெபரெண்டம் நடைபெற்றது.அதில் மிகசொற்ப வாக்குகளால் பிரிவிற்கெதிரானவர்கள் வெற்றிபெற்றார்கள்.அப்போது பிளக் குவெபெக் கட்சியின் தலைவராக இருந்தவர் குடிறிவந்தவர்களால் தான் இத்தீர்மானம் தோற்றதென அவர்களை கடுமையாகசாடி பின்னர் மன்னிப்பும் கேட்டார்.

உண்மையும் அதுதான் பிரிவினை கேட்டு போராடும் பல நாட்டில் இருந்த்துவந்து குடியேறியவர்கள் பலரும் தமிழர்கள் உட்பட கனடா பிரிவினையை ஆதரிக்கவில்லை.எல்லாம் தங்களுக்கு கூடாது என்ற சுயநலம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய அரசியல் எந்திரம் சமூகக் குற்றங்களில் முடிசூடா மன்னர்களையே தெரிவு செய்யும் நெறி கொண்டது, இதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் அப்பதவிகளில் இருக்கும் ஒவ்வொருத்தருமே உதாரணமாவார்கள்.

இந்த நெறியைப் பாராட்டுவதற்கு இவர்களை விடக் கேவலமானவர்கள் அல்லவா வரவேண்டும்.

பசி மக்களுக்குத் தெரியாமல் விரட்டி அடிக்கப்பட்ட நாடுகளில் புத்தி குறைந்தவன் உணர்வுகளைக் கூட எந்தக் கொம்பனும் அதிகாரம் செய்ய முடியாது. ஆனால் பசியே அரசுசெய்யும் நாடுகளில் அப்துல் கலாம்கள்கூட அரசியல் வாதிகளின் கைத்தடிகள்தான்.

எனவே இந்த வரன் கொண்ட தேசத்தில் நாடுகள் ஒன்றாய் ஒட்டுவது நேசத்தாலா? அதிகாரத்தாலா?

சில வெறும் வாய் மனிதர் செயல்கள் ஒரு சதத்திற்கு சொல்லாதபோதும் அண்டத்தையே வாயால் புடுங்கிவிடுவோம் என்று கதை அளப்பார்கள்!

சோற்று பருக்கை கண்டே உடல் மொத்த அணுவும் சுனாமி அதிர்வாய் நடுங்கும் போதும், வாய் வாள் சுளற்றும் வீரர்களே இவர்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றையை உலக நிலையில் இந்தியா உடைய வாய்ப்பில்லை. ஆனால் ஆசியாவை மையம் கொண்ட ஒரு மூன்றாம் உலகப் போர் வருமாயின் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதை சொல்லமுடியாது. சீனா இந்தியாவுக்குள் படையெடுத்து பல பிரதேசங்களைக் கைப்பற்றுமாயின் உடைவுக்கான சாத்தியக்கூறுகள் அதிகம். ஆனால் இவையெல்லம் நடக்குமா? சரி நடந்தால் கூட ஆகக் குறைந்தது 30-40 ஆண்டுகளாவது பொறுத்திருக்க வேண்டும். அதற்குள் வடக்கு கிழக்கை ஸ்ரீலங்கா அரசு முழுமையாக சிங்கள மயப்படுத்திவிடும்.

  • தொடங்கியவர்

எவ்வாறு சோவியத் ஒன்றியம் பிளவடைவதற்கு கர்பச்சோவ் மூலம் "பிரிஸ்திரௌய்க்கா" அமெரிக்கவால் நுழையவிடப்பட்டது. அது போல இந்தியாவுக்குள் சீனா (இந்தியாவை சுற்றி தனது பொருளாதரா வலுவை கூட்டி அதை பின்னர் ஒரு அரசியல் சக்தியாக மாற்றல்), பாகிஸ்தான் (இஸ்லாமிய பயங்கரவாதம்), அமெரிக்கா ( திறந்த பொருளாதார கொள்கை மூலம் தனது செல்வாக்கை அதிகரித்தல்) பல வழிகளில் தமது செல்வாக்கை நுழைக்க முயலுகிறார்கள்.

சீனா, பாகிஸ்தான் நாடுகளை விட அமெரிக்கா இந்தியா பிளவு படுவதை தற்போதைக்கு விரும்பாது. அதற்கு இப்பொழுது இந்தியா தேவை சீனாவை எதிர்கொள்ள.

உண்மைதான். இந்தியாவின் ஒருமைப் பாட்டிற்கு உழைத்துக் கொண்டிருப்பது சீனப்பேரரசை பெரும் எதிரியாக கருதும் சக்திகள் அனைத்துமே.

ஆனால் ஒரு சிலர் இப்படியும் கனவு காண்கின்றார்கள் இந்தியதேசத்தின் பெரும்பான்மை மக்கள் ஒற்றுமையாய் இருப்பதற்கே ஆசைப்படுகின்றார்கள் என்று. மகத்தான மனிதப் பிறப்பே இந்திய தேசியத்தில் பாவத்தின் பயன் என்ற வகையில் வாழும் பெரும்பான்மைக் கூட்டம் இந்த வாழ்வே வரம் என்று கருதும் நிலை இருந்தால் மட்டுமே இவர்களின் கனவுகள் நியமாக வாய்ப்புண்டு.

  • தொடங்கியவர்

கனடாவை போல இந்தியாவில் மாநிலங்கள் ஒரு வாக்கெடுப்பை நடத்தி சுதந்திமாக பிரிந்து போகும் உரிமை அரசியல் யாப்பில் இல்லை (Internal Right to Self -Determination). அது இருந்தால் இந்தியா பல நாடுகளாக பிரிவு அடைந்திருக்கலாம்.

மாநில அரசுகளுக்கான சொந்த மொழியில் தொலைக்காட்சி ,உச்ச நீதி மன்றம் எல்லாம் மாநில அரசுகள் வைத்திருக்க முடியாது.

எல்லாம் மத்திய அரசின் கையில் தான்.

இந்தியா ஒரு கூட்டாசியே இல்லை.

ஏழைகளீன் அறியாமையில் மதத்தின் பெயரால் ஒன்றாக இருகின்றது.

தந்தை பெரியார் தொடர்ந்து இருந்திருப்பாரே ஆனால் தென்னிந்தியா மாநிலங்கள் எப்போ சுதந்திரம் பெற்றிருக்கும். அல்லது வட இந்திய அரசில் இருந்து கூட்டாக தனியாக் இருந்திருக்கும்.

இன்றுவரை தமிழக கட்சிகள் மத்திய அரசின் கொள்கையில் இல்லை.

காங்கிரஸ், பாரதியஜனதா வட இந்திய கட்சிகள் தான் ஒரு இந்தியா என்று கத்து கின்றன.

மற்றும் படி எல்லாம் மாநில அளவில் சுதந்திரமாக வாழ்த்தான் விரும்புகின்றன.

பஞ்சாபிகள் எல்லாம் தனியே செல்ல தான் விரும்புகிறார்கள். இலகுவில் குழம்பும்

சீனா அப்படி இல்லை ஒரு பெரிய தேசிய இனம், பண்பாடு ஒன்றுதான், பொது மொழி ஒன்றுதான்.

கலாச்சாரம் எல்லாம் பொதுவானது.

குறிப்பிட்ட பகுதியில் மட்டும் சீன முஸ்லீம்கள் வாழ்கிறார்கள்.

மற்றும் படி பிரச்ச்னைக்குரிய பகுதிகள் ஏற்கனவே பிரபலமானவை. தீபெத்திய மக்கள், அவர்கள் நேபாளிகள் போல் தனி சுதந்திர இனம்.

அவர்கள் பிரிந்தால் அல்லது சுதந்திரம் கேட்டால் கூட சீனா என்ற நாடு இல்லாமல் போக்கது.

ஆனால் இந்தியா அப்படியான ஒன்று இல்லை. வெள்ளையன் பிடித்து ஒன்றாக்கி இந்தியா என்று பெயர் வைத்தான் அவ்வளவு தான்.

சொரிலங்கா போல் தான் இந்திய நிலையும். சிங்களவன் தன்ர புத்தியை வேலைக்கு காட்டி போட்டான்.

ஆனால் வட இந்தியன் தன்னிடம் அதிகாரம் இருப்பதை வலு கவனமாக கையாளுகிறான்.

அன்று தொடக்கம் படைஎடுப்புகள் இப்படிதான் நிதானமாக நடாத்த பட்டு தென்னிந்திய கலாச்சாரம் வட இந்திய ஆளுகைக்கு வந்து சேர்ந்தது.

தமிழகத்தின் கொதிப்பும் ,போராட்ட உணர்வுமே ஈழத்தமிழனுக்கு அல்லது உலக தமிழருக்கு விடிவு தரும் எனபதில் நான் இன்றும் நம்புகிறேன். ஈழத்தமிழனால் முடியும் தமிழகமும் சேர்ந்து உதவி இருந்தால்..

அந்த மக்களை இன்றுவரை அந்த அளவுக்கு மாற்றவில்லை.

இந்திய மாயைக்குள் இன்னும் இருக்கிறார்கள். நாம் தமிழர் ,நாங்கள் தமிழர் என்ற நிலை வரனும்.

இனி வரும் காலங்கள் அப்படியாக தான் போகின்றன .

குவபெக்கின் ரெfஎரென்டம் வெற்றிபேற்றாலும் பிரிந்துபோக விட்டிருப்பார்களா என்பது கேள்விக்குறியே.

நீங்கள் பலர் நினைப்பதுபோல் உடனே உடைந்து போகக்கூடிய சூழலில் இந்தியா இல்லை.பஞ்சாப் பிரிவினைக்கு என்ன நடந்தது.மத்தியில் இந்தியா என்றொரு மாபெரும் கட்டமைப்பு உள்ளது அது பிரச்சனை என்று வரும் போது எந்த மாநிலத்தையும் தனது கட்டுப்பட்டுக்குள் கொண்டுவந்துவிடும்.அது தெரிந்து தான் கடந்த தேர்தலில் ஈழ உணர்வு ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்து ஒரு கட்சியாக போட்டியிடவில்லை.போட்டியிட்டிருந்தால் கட்டுக்காசும் கிடைக்காது என்று அவர்களுக்கு தெரியும்.

சீமான் அரசியலுக்கு புதிது குதிக்கின்றார்.அவர் விலை போகும் போது தான் நாங்கள் இங்கிருந்து திட்டத்தொடங்குவோம்.அதைவிட வேறு வழி அங்கில்லை.

அவர் இப்போ பேட்டி கொடுத்ததே ஜெயா டீ வி யில் தான்.கருணாநிதியை சாட வேண்டிய நிலையில் இருவரும் உள்ளதால் இந்த நிகழ்வு நடந்துள்ளது.இதுதான் அரசியல்.நாளை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் சீமான் சன் அல்லது கலைஞர் டீ வீ யில் வருவார்.

  • தொடங்கியவர்

செக்கோசிலவாக்கியா என்ற நாடு அமைதியாக இரு நாடுகளாக பிரிந்தமாதிரி, தங்கள் நட்டுக்கடனை மூன்ர்ரக பிரித்து, மூன்றில் ஒன்றை சின்ன சிலவாக்கியாவும், மீதத்தை செக் நாடும் என, அமைதியாக பிரிந்து மகிழ்வாய் உள்ளனர்.

மேலும் சிங்கப்பூர், நோர்வே கூட அமைதியாக பிரிந்த நாடுகள் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குவபெக்கின் ரெfஎரென்டம் வெற்றிபேற்றாலும் பிரிந்துபோக விட்டிருப்பார்களா என்பது கேள்விக்குறியே.

நீங்கள் பலர் நினைப்பதுபோல் உடனே உடைந்து போகக்கூடிய சூழலில் இந்தியா இல்லை.பஞ்சாப் பிரிவினைக்கு என்ன நடந்தது.மத்தியில் இந்தியா என்றொரு மாபெரும் கட்டமைப்பு உள்ளது அது பிரச்சனை என்று வரும் போது எந்த மாநிலத்தையும் தனது கட்டுப்பட்டுக்குள் கொண்டுவந்துவிடும்.அது தெரிந்து தான் கடந்த தேர்தலில் ஈழ உணர்வு ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்து ஒரு கட்சியாக போட்டியிடவில்லை.போட்டியிட்டிருந்தால் கட்டுக்காசும் கிடைக்காது என்று அவர்களுக்கு தெரியும்.

சீமான் அரசியலுக்கு புதிது குதிக்கின்றார்.அவர் விலை போகும் போது தான் நாங்கள் இங்கிருந்து திட்டத்தொடங்குவோம்.அதைவிட வேறு வழி அங்கில்லை.

அவர் இப்போ பேட்டி கொடுத்ததே ஜெயா டீ வி யில் தான்.கருணாநிதியை சாட வேண்டிய நிலையில் இருவரும் உள்ளதால் இந்த நிகழ்வு நடந்துள்ளது.இதுதான் அரசியல்.நாளை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் சீமான் சன் அல்லது கலைஞர் டீ வீ யில் வருவார்.

மஞ்சள் காமாலை என்ற சொல் பலரும் பயன்படுத்துவதுண்டு. ஒவ்வொருவருவரும் தமது விருப்பங்களையே தமது ஆரூடங்களாக காட்டுவது அற்பத்தனங்களின் அறியாமை.

இன்று இந்திய அரசியல் கலாச்சாரத்தில் ஒரு கட்சி சாமானியன் ஒருவனை தனது எதிரியாக்கும் போது ஒன்று அவன் அந்தக் கட்சியின் காலடியில் விழவேண்டும், இல்லை எதிரிக்கட்சியின் தயவில் தன் இருப்பை தற்பாதுகாக்க வேண்டும். இரண்டில் ஒன்றை அவன் செய்ய வில்லை என்றால் அவனது அழிவு எவராலும் தடுக்கப்பட முடியாதது.

இதுவே ஒவ்வொரு கட்சி தாவிகளின் செயலுக்கு காரண்மாகின்றது. உண்மையில் பதவியை விட உயிரைக் காக்கவே அப்படிச் செய்வது.

இதுவரை எந்த கட்சியினது தயவும் இல்லாமல் இந்தியாவில் ஒரு ஊடகம் இருக்கின்றது என்று எவராலும் காட்ட முடியுமா?

நக்கீரனை ஜெயா சிறைக்குள் போட கோபால் தனிமனிதனாய் போராடி வெளியே வரவில்லை. திமுக என்ற கட்சியின் காவுதடியான நக்கீரனை அவர்கள் கைவிடவில்லை.

இப்போது சாமானியனான சீமான் உயிர், பொருளை காக்க வேண்டும் என்றால் அதிமுகவின் கூடாரம் தேடித்தான் ஆகவேண்டும் என்ற சுழ்நிலை நிர்பந்தம் கொடுத்துக் கொண்டிருப்பது திமுக.

இருந்தும் அதன் தயவை நாடாமல் அதை எதிர்த்து நிற்கின்ற முதலாவது தமிழ்நாட்டு அதிசயம் என்றே சீமானைப் பார்க வேண்டும். சீமான் உமக்கு புல்லானதையிட்டு நாம் எவரும் அதிர்சிகொள்ளவில்லை, பிரபாகரன்கூட புல்லாகதெரிந்த புதிருக்கு சீமான் எம்மாத்திரம்.

எனவே இந்த அரசியல் கலாச்சாரத்தின் அழகே தெரியாத கண்கள் ஆரூடம் பார்கின்றதாம்!

ஈழத்தோர் நன்றென்பதை இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப் படும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா உடையப்போகிறது என்பதற்கு இது போதும்

இந்திய மத்திய அரசா? மலையாளிகள் அரசா?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=79329&pid=628897&st=0&#entry628897

இந்திய மாநிலங்களில் மலையாளிகளின் கேரளா தான் ஓரளவு பிரச்சனை இல்லாத மாநிலம். மற்றைய மாநிலங்கள் எல்லாம் மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பை காட்டுபவை.

மலையாளிதான் இன்றைய நிலையில் பாதுகாப்பானவன்.

கடந்த கால அனுபவம் அப்படிதான் சொல்கிறது.

சீக்கியன் தன் இனத்தை தீண்டியதற்காக வைத்தான் இந்திராகாந்திக்கு

தமிழன் தீர்த்தான் பழி ராஜிவ்காந்திக்கு.

இப்படி மாநிலங்கள் முழுவதும் பிரச்சனை எப்ப துப்பாக்கி திரும்பும் என்று தெரியாத நிலை.

இதுவே இந்தியா தொங்கி கொண்டு உள்ளது என்பதற்கு ஒரு உதாரணம்.

எந்த மாநிலத்தில் இருந்து அமைச்சர் தெரிவு செய்ய படுகிறாரோ அமைச்சர் தன்ர மாநிலகாரனை தான் பாதுகாப்பு பொறுப்பாளனாக வைத்துள்ளார்களாம்.

சிதம்பரம் கூட தமிழனை தான் ஓருவரை கூட்டி திரிவார்.

இப்படிததான் பாரதமாதாவின் நிலை.

இந்திய போலி ஜனநாயம் காரணமாக இந்திய பல நாடுகளாக உடையும் என பலர் ஆரூடம் கூறுகின்றனர்.

இதனால் தான் இந்திய சீனாவின் காலில் மண்டியிட்டு, சீனாவின் எலும்புத் துண்டுகளை நக்க ம்யன்று வருகிறது.

மனம் ரோஷமுள்ள இந்தியர்கள் தனிநாடாக உடனிந்து போவதைத் தவிர வேறு வழியில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.