Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தெரியாத பாதை தெளிவானபோது

Featured Replies

சரி சரி சாத்திரி மீண்டு வந்திட்டீரோ. ( உம்மை யார் கடத்தியது. எப்படித் தப்பினீர் என்பதை நான் ஒருவருக்கும் சொல்ல மாட்டேன்.) சந்தோசம்.

  • Replies 189
  • Views 26k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
சாத்திரி இவ்வளவு காலமும் எங்கே சாத்திரம் பார்க்க போயிருந்தவரோ

ஆகா பைனலி சாத்திரி வந்துட்டாரா. அப்பாடா

ஆஆஆகதையை  எழுதிட்டு அனுப்புவமெண்டா  :twisted: வருகுது இல்லை

சாத்திரி பொறுமையை சோதிக்காம சீக்கிரம் கதையின் அடுத்த பாகத்தை போடுங்க :)

ஆகா பைனலி சாத்திரி வந்துட்டாரா. அப்பாடா

சாத்திரி மட்டும் தான் வந்திருக்கிறார் கதை இன்னும் வரல அதுக்குள்ள அப்பாடா என்றீங்க. :wink: :roll:

அதவிட இன்னொன்றும் சொல்லுறார் வந்தவுடன பாருங்க :twisted:

ஆஆகதையை எழுதிட்டு அனுப்புவமெண்டா  :twisted:  வருகுது இல்லை

ஆஆஆகதையை  எழுதிட்டு அனுப்புவமெண்டா  :twisted: வருகுது இல்லை

ஹாய் சாத்திரி என்ன கனநாள் உதுதான் வாடகை குடுக்காம இருந்தா திடீரெண்டு நடுறோட்டிலை விட்டு விடுவாங்கள் அது சரி இணைய கனெக்ஷனை ஏற்படுத்திட்டுதானே அனுப்பிறாய் பிறகெப்படி வராமல் போகும் எதுக்கும் வெத்திலை போட்டு பாத்திட்டு அனுப்பு.........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதவை தட்டியபடி ஒரு காவல் துறை அதிகாரி சாந்தியின் அறைக்குள் நுளைந்து தன்னை அறிமுக படுத்தி விட்டுஉங்களிடம் கொஞ்சம் விபரங்கள் அறிய வேண்டும் இப்போது முடியுமா? அல்லது பின்னர் வரவா எண்று பண்பாக கேட்டார்

சாந்தி பதில் வணக்கம் கூறி விட்டு அந்த அதிகாரியிடம். எனக்கு பிரெஞ்சு மொழி அதிகமாக பேச தெரியாது வெளியே எனது நண்பர் ஒருவர் நிக்கிறார் அவரை அழைத்தால் உதவியாக இருக்கும் என்று கூற அந்த அதிகாரியும் வெளியே போய் வெளியில் நின்ற சிவாவிடம் விபரம் கூறி அழைத்து வந்தார் .

உள்ளே வந்ததும் ஒரு சிறிய நவீன தட்டச்சு இயந்திரத்தை எடுத்து அதில் சிவாவின் விபரங்களையும் பதிந்து விட்டு சாந்தியை பார்த்து சரி உங்களிற்கு நடந்த பிரச்சனைகளை பயப்படாமல் நன்றாக யோசித்து என்னிடம் கூறுங்கள் என்று விட்டு சிவாவை பார்த்தார்.

சிவா சாந்தியை பார்த்து நடந்த விபரங்களை கேக்கிறார் என்ன முடிவெடுத்திருக்கிறீங்கள்?? என்று தனது கேள்வியை வீசிவிட்டு அவள் என்ன பதில் சொல்ல போகிறாள் என்கிற ஒரு வித தவிப்புடன் தலையைண குனிந்து கொள்ள. ஒருமுறை தொண்டையை செருமி விட்டு இனியென்ன நடந்த உண்மைகளை சொல்லுவமெண்டு முடிவெடுத்திருக்கிறன் என்று சாந்தியின் குரல் தளுதளுத்து வெளியே வந்து.

சாந்தி சொல்ல சொல்ல அதை சிவாவின் மொழி பெயர்ப்புடன் அந்த காவல் துறை அதிகாரி தட்டச்சில் விரைவாக பதிவு செய்து கொண்டிருந்தார் இடையிடையே ரவியின் சித்திரவதை முறைகளை கேட்ட போதெல்லாம் இப்படியெல்லாம் செய்தானா? என்று ஆச்சரியபட்டு கேட்டபடி சாதாரண மனிதன் இப்படியெல்லாம் செய்யமாட்டார்கள்.

;சிலவேளை அவனுக்கு மனநோய் ஏதும் இருக்கலாம் என்றவாறே வாக்கு முலத்தை பதிவு செய்து அதில் சாந்தியினதும் மற்றும் சிவாவினதும் கையெளுத்துகளை பெற்று கொண்டு நீங்கள் குணமடைந்து வீடு போனதும் அருகிலுள்ள உங்கள் காவல் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். அங்கும் உங்களிடம் சில விபரங்கள் கேட்பார்கள் மற்றபடி நீங்கள் பயப்பட தேவையில்லை நீங்கள் குணமடைந்து நீதிமன.றம் வரும்வரை ரவி காவலில்தான் இருப்பார்.

நீங்கள் தேவையானால் சட்ட ஆலோசகர் ஒருவரை நாடுங்கள்;கள் நாங்களும் உங்கள் வைத்தியரிடம் உங்கள் உடல் நிலை பற்றி முழுவிபரம் கோரியிருக்கிறோம்.என்றுவிட்ட

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கணணி ஒரளவு திருத்தி முடித்து விட்டேன் யாரோ செய்தியெண்டு ஒரு வைரசை அனுப்பி துலைச்சிட்டாங்கள் நானும் கவனிக்கவில்லை விரைவில் சந்திப்போம்

அதெப்படி சாத்திரிக்கே வைரஸா :roll: :?: :roll: :?:

ஆஹா சாத்திரியையும் தொடரையும் மீண்டும் கண்டது மகிழ்ச்சி. அவருடைய நண்பன் என்ன சொல்ல்ப்போறார் என்று விளங்குது பட் சாந்தி என்ன கதைக்கபோறா?? அடுத்த பாகத்தை பார்க்க ஆவல் சீக்கிரம் எழுதுங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் நல்ல வேலை செய்தா சாந்தி.. தொடரை ஆவலுடன் எதிர்பார்த்தபடி. :P

உலகத்தில மனிசருக்கு எத்தினை பிரச்சனை இருக்கு..பட்டினியில எத்தினை இறக்குதுகள்..கோர விபத்தில எத்தினை தனிமையா விடுபடுகுதுகள்..எத்தனை சிறுவர்கள் தனிமையா வாடுதுகள்..அதுகளின்ர மன உணர்வுகள்..அதுகளின்ர கஸ்டங்கள்.. எதிர்காலம் பற்றி..கலாசார சமூகக் கலப்புகளால வாற விளைவுகள் பற்றி அவற்றை மனிதாபிமான ரீதியில் எப்படி அணுக வேண்டும் என்று எவராவது கதைல சொல்லுறியளா...கிடையாது..! ஆனா கதை எழுதிறதெண்டு போட்டு உதவாக் குடும்பங்களில அடுத்தவன் வீட்டுக்க மனிசன் மனிசிக்க என்ன நடக்குது எவன் எவளை விவாகரத்துப் பண்ணுறான் எப்படிப் பண்ணுறான்/ள்..எப்படி அடிக்கிறான் உதைக்கிறான் சித்திரவதை பண்ணுறான்..அவள் எப்படி அடுத்தவனோட பழகிறாள்...என்று ஆராயிறதே வேலையாப் போச்சு..! அதைக் கதையென்று ரசிக்க ஒரு கூட்டம்..அவர்கள் என்னத்தை இவற்றில இருந்து உள்வாங்கினம் எண்டது கூட கவலையளிக்கும் விடயமாகவே இருக்கிறது...இப்படிப் போனா உதுகள்..சமூகத்தில் மனிதாபிமானமற்ற இரக்கமற்ற அடுத்தவர்களை தயவோடு நோக்காத மனப் பான்மையையே வளர்க்கும்..அந்த வகையில் இவை ஒரு வகை வக்கிரத்தனத்தை வளர்ப்பனவாகவே அமைகின்றன..! மனிதாபிமான அணுகுமுறைகள் எவையும் குறிப்பிட்டு கூறும் அளவுக்கு சுட்டிக்காட்டப்படவில்லை..!

சாத்திரி ஏன் நீங்கள் அடுத்த குடும்பங்களைப் பற்றி ஆராயிறத்துக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறீங்கள்..! ஆராயிறது முக்கியமில்ல..நீங்கள் சொல்ல வாற விடயம் பலதரப்பட்ட வாசகர்களையும் என்னென்ன வடிவத்தில் போய் சேர்கிறது என்பதையும் நோக்குங்கள்..! ஒன்று தெரியுமோ...குமுதம் இந்திய நாவல்கள் அதுஇதென்று முந்தி யாழில தடை செய்தது..அப்ப ஸ்கூலுக்கு வந்த இளம்பரிதியண்ணா சொன்னது... உப்படி குடும்பங்களில நடக்கிறதா எழுத்தாளர்களும் தேவையில்லாத தங்கள் கற்பனைகளை புகுத்தி எழுதிற வக்கிரத்தனத்தை வெளிக்காட்டும் கதைகள் வாறதும் தான் காரணம் என்றவர்..! நீங்கள் எழுதுபவை உண்மையா நடந்தவையின் பிரதிபலிப்பாகக் கூட இருக்கலாம்..ஆனா நீங்கள் கதை என்று எழுதி அதை சமூகத்துக்க விடேக்க அதன் சமூகத்தாக்கம் என்ன என்று சிந்திச்சுத்தானே விடுறீங்கள்...! அப்படின்னா சரி..ஏன்னா நாளைக்கு இவையே இன்னும் நாலு பேருக்கு உதாரணமாகாமல் இருக்க வேணும் எண்டதுக்காகத்தான்..! ஏன்னா நாங்கள் அறியாத பல குடும்ப அந்தரங்கங்களை இங்க வாசிக்க முடியுது...! சிலது சகிக்க முடியல்ல..! சிலது இப்படி உண்மைல நடக்குமா என்ற ஐயத்தை உண்டு பண்ணுது..! தயவுசெய்து சமூக ஒழுக்கத்துக்கு முன்னுரிமை அளித்து எழுதுங்கள்...! :evil: :twisted: :idea:

சாந்தி மாறப்போகின்றா என்று நினைத்தேன். ஆனால் உண்மைகளை பொலிசிடம் சொன்னது நல்லது விடயம். அடுத்த தொடரை எதிர்பார்க்கின்றேன்.

உலகத்தில மனிசருக்கு எத்தினை பிரச்சனை இருக்கு..பட்டினியில எத்தினை இறக்குதுகள்..கோர விபத்தில எத்தினை தனிமையா விடுபடுகுதுகள்..எத்தனை சிறுவர்கள் தனிமையா வாடுதுகள்..அதுகளின்ர மன உணர்வுகள்..அதுகளின்ர கஸ்டங்கள்.. எதிர்காலம் பற்றி..கலாசார சமூகக் கலப்புகளால வாற விளைவுகள் பற்றி அவற்றை மனிதாபிமான ரீதியில் எப்படி அணுக வேண்டும் என்று எவராவது கதைல சொல்லுறியளா...கிடையாது..! ஆனா கதை எழுதிறதெண்டு போட்டு உதவாக் குடும்பங்களில அடுத்தவன் வீட்டுக்க மனிசன் மனிசிக்க என்ன நடக்குது எவன் எவளை விவாகரத்துப் பண்ணுறான் எப்படிப் பண்ணுறான்/ள்..எப்படி அடிக்கிறான் உதைக்கிறான் சித்திரவதை பண்ணுறான்..அவள் எப்படி அடுத்தவனோட பழகிறாள்...என்று ஆராயிறதே வேலையாப் போச்சு..! அதைக் கதையென்று ரசிக்க ஒரு கூட்டம்..அவர்கள் என்னத்தை இவற்றில இருந்து உள்வாங்கினம் எண்டது கூட கவலையளிக்கும் விடயமாகவே இருக்கிறது...இப்படிப் போனா உதுகள்..சமூகத்தில் மனிதாபிமானமற்ற இரக்கமற்ற அடுத்தவர்களை தயவோடு நோக்காத மனப் பான்மையையே வளர்க்கும்..அந்த வகையில் இவை ஒரு வகை வக்கிரத்தனத்தை வளர்ப்பனவாகவே அமைகின்றன..! மனிதாபிமான அணுகுமுறைகள் எவையும் குறிப்பிட்டு கூறும் அளவுக்கு சுட்டிக்காட்டப்படவில்லை..!

சாத்திரி ஏன் நீங்கள் அடுத்த குடும்பங்களைப் பற்றி ஆராயிறத்துக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறீங்கள்..! ஆராயிறது முக்கியமில்ல..நீங்கள் சொல்ல வாற விடயம் பலதரப்பட்ட வாசகர்களையும் என்னென்ன வடிவத்தில் போய் சேர்கிறது என்பதையும் நோக்குங்கள்..! ஒன்று தெரியுமோ...குமுதம் இந்திய நாவல்கள் அதுஇதென்று முந்தி யாழில தடை செய்தது..அப்ப ஸ்கூலுக்கு வந்த இளம்பரிதியண்ணா சொன்னது... உப்படி குடும்பங்களில நடக்கிறதா எழுத்தாளர்களும் தேவையில்லாத தங்கள் கற்பனைகளை புகுத்தி எழுதிற வக்கிரத்தனத்தை வெளிக்காட்டும் கதைகள் வாறதும் தான் காரணம் என்றவர்..! நீங்கள் எழுதுபவை உண்மையா நடந்தவையின் பிரதிபலிப்பாகக் கூட இருக்கலாம்..ஆனா நீங்கள் கதை என்று எழுதி அதை சமூகத்துக்க விடேக்க அதன் சமூகத்தாக்கம் என்ன என்று சிந்திச்சுத்தானே விடுறீங்கள்...! அப்படின்னா சரி..ஏன்னா நாளைக்கு இவையே இன்னும் நாலு பேருக்கு உதாரணமாகாமல் இருக்க வேணும் எண்டதுக்காகத்தான்..! ஏன்னா நாங்கள் அறியாத பல குடும்ப அந்தரங்கங்களை இங்க வாசிக்க முடியுது...! சிலது சகிக்க முடியல்ல..! சிலது இப்படி உண்மைல நடக்குமா என்ற ஐயத்தை உண்டு பண்ணுது..! தயவுசெய்து சமூக ஒழுக்கத்துக்கு முன்னுரிமை அளித்து எழுதுங்கள்...! :evil: :twisted: :idea:

குருவிகள் நீங்கள் கூறுவது நல்ல கருத்து தான். ஆனால் உன்னை நீயே திருத்திக்கொள் சமுகம் தானகவே திருந்து என்று ஒரு பழமொழி உண்டு எல்லோ. நீங்கள் இணைத்த இக்கதைகளில் எங்கு சமூக ஒழுக்கத்துக்கு முன்னுரிமை அளித்து இருக்கின்றது. இதிலும் மற்றவர்களின் வாழ்க்கையை தானே ஏட்டிப் பார்த்திருக்கின்றார்கள். உங்களின் கதைபடி ஒரு அநாதை சிறுமியைப்பற்றி எழுதப்போனாலும் அவளின் குடும்பத்தை பற்றி கொஞ்சம் விபரித்து எழுதினால் தான் கதை நல்லாய் வரும். ஆகவே அவ்விடத்திலும் நாங்கள் பக்கத்து வீட்டை ஏட்டிப்பார்க்கும் நிலை தானே? நானும் சாத்திரியரரின் இக்கதையை ரசித்த கூட்டங்களில் ஒருத்தி என்றவகையில் இந்த கருத்தை எழுதுகின்றேன். உதராணத்திற்கு ஒரு கதை மற்றவர்களின் குடும்பங்களை ஏட்டிப்பார்க்கமால் எழுதிக்காட்டுங்கள். அதிலிருந்து மற்றவர்கள் தொடர்கிறார்களோ இல்லையோ நான் உங்கள் வழியில் தொடர்ந்து எழுதுகின்றேன்.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=8594

http://www.yarl.com/forum/viewtopic.php?t=6521

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதையை டிப்பவர்கள் அனைவரும் உங்கள் விமர்சனத்தை தாராளமாக முன்வையுங்கள் ஆனால் கதை நடந்தது முடிந்தபடி போய்கொண்டிருக்கும் கதையின் முடிவில் உங்கள் விமர்சனங்களிற்கான் சில விளக்கங்களை தருகிறேன் ஏனெனில் கதையில் சாந்திக்கு நடந்த கொடுமைகளை விபரித்து எழுதியிருந்தால் அது குருவிகள் சொன்னது போல பக்கத்து வீட்டு குரும்ப அந்தரங்களை அரங்கத்திற்கு கொண்டு வந்து கதை என்கிற பெயரில் சில அசிங்கங்களையும் அலச வேண்டிவரும் அதுவல்ல எனது நோக்கம். இதுவரை கதையை நாகரிகமாகவே நகர்த்தியிருக்கிறேன் எங்காவது சங்கடமான வசனநடைகள் இருந்தால் தாராளமாக சுட்டிக்காட்டலாம். மற்றபடி எனது எல்லா கதைகளும் என்னைசுற்றி வௌ;வேறு காலகட்டங்களில் நடந்த சம்பவங்களையே ஒரு பதிவாகத்தானக் எழுதியிருக்கிறேன். அது எனது கதைகளை படித்தவர்களிற்கு தெரியும் மற்றபடி நானாக கற்பனை பண்ணி எழுதுகிற திறைமையெல்லாம் எனக்கில்லை அதேபோல எனது பாடசாலை நாளிலிருந்து இன்றுவரை எந்த கதையோ வேறு ஆக்கங்களோ நான் விற்பனைக்காக இதுவரை எழுதியதில்லையென்பதனையும் தெரிவித்து கொள்கிறேன் :idea:

குருவிகள் நீங்கள் கூறுவது நல்ல கருத்து தான். ஆனால் உன்னை நீயே திருத்திக்கொள் சமுகம் தானகவே திருந்து என்று ஒரு பழமொழி உண்டு எல்லோ. நீங்கள் இணைத்த இக்கதைகளில் எங்கு சமூக ஒழுக்கத்துக்கு முன்னுரிமை அளித்து இருக்கின்றது. இதிலும் மற்றவர்களின் வாழ்க்கையை தானே ஏட்டிப் பார்த்திருக்கின்றார்கள். உங்களின் கதைபடி ஒரு அநாதை சிறுமியைப்பற்றி எழுதப்போனாலும் அவளின் குடும்பத்தை பற்றி கொஞ்சம் விபரித்து எழுதினால் தான் கதை நல்லாய் வரும். ஆகவே அவ்விடத்திலும் நாங்கள் பக்கத்து வீட்டை ஏட்டிப்பார்க்கும் நிலை தானே? நானும் சாத்திரியரரின் இக்கதையை ரசித்த கூட்டங்களில் ஒருத்தி என்றவகையில் இந்த கருத்தை எழுதுகின்றேன். உதராணத்திற்கு ஒரு கதை மற்றவர்களின் குடும்பங்களை ஏட்டிப்பார்க்கமால் எழுதிக்காட்டுங்கள். அதிலிருந்து மற்றவர்கள் தொடர்கிறார்களோ இல்லையோ நான் உங்கள் வழியில் தொடர்ந்து எழுதுகின்றேன்.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=8594http://www.yarl.com/forum/viewtopic.php?t=6521

குருவிகள் இணைத்த இரண்டு கதைகளில்..

தாரமான பின் வன்முறை ரீதியான அணுமுறைகளைச் சொல்லவில்லை..! ஒரு சமூக ஒழுக்கத்தை நேசிக்கும் காதலி காதலனிடம் எதிர்பார்க்கும் நடத்தையை வெளிப்படுத்தியதால் இணைத்தோம்..!

உண்மை உறவுகள்..!

ஒரு பெண் கணவனால் துன்பப்படுகின்ற போதும் ( இன்னென்ன சித்திரவதை செய்தான் இன்னென்ன போதைப்பொருள் பாவித்தான்...இன்னொன்னாருடன் சுத்தினான்..இன்னும் இருவரை குடிபோதையில் பழக விட்டு வேடிகை பார்த்தான்...இப்படியான எந்தச் சித்தரிப்பும் இல்லாது) தன்னை துன்பப்படுத்தும் கணவனை சீர்செய்ய முனையும் வித்தியாசமான அணுகுமுறை அங்கு தெரிந்தது அதனால் இணைத்தோம்..! அங்கு அண்ணிப் பாத்திரத்தின் மூலம் குறித்த பெண்ணின் மனிதாபிமான அணுமுறை கூட எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது..! எனவே அவளை ஒரு வன்முறைவாதியாக அக்கதை காட்டாததாலும்..குடிபோதையில் தவறு செய்யும் ஆண் அதை உணரும் போது முற்றாக மாறி அன்புக்கு அடிமையாகிவிடுகிறான் என்பதும் வெளிப்படுவதால்..குறித்த கதையை இணைத்தோம்..!

விவாகரத்து... கணவனைப் மனைவியைப் பிரிகிறவர்கள்..மற்ற ஆண்களோடு பெண்களோடு பழகும் முறை....கணவனோடு இருக்கும் பெண்ணை மற்ற ஆண்கள் பார்க்கும் முறை...பெண்கள் மீதான ஆண்களின் பார்வையை வக்கிரமானதாக மட்டும் காட்டுதல்...வன்முறை வடிவங்கள்..போதைப்பொருள்களின் அறிமுகம்..பாவனை...சேரும் கூட்டங்கள்..இப்படி அவை உண்மையில் நடந்திருந்தாலும் சமூகத்துக்கு ஆண்கள் தொடர்பான வக்கிரமான தோற்றப்பாடை காட்டுகிற அதேவேளை...அவர்களுள் மனைவியிடமான மனிதாபிமான அணுகுமுறைக்கு ஒரு சின்ன உதாரணமும் காட்டப்படுவதில்லை..! அப்படி மனநோயாளர்கள் தவிர மனிதர்கள் உலகில் வாழ முடியுமா..???! என்பது வினாக்குறி..!

சினிமாவின் பெண்கள் மீதான வன்முறையை எதிர்க்கும்..நாம்..சினிமாவில் சிகரட் பத்துவதை எதிர்க்கும் நாம்...சினிமாவில் பல ஆண்களால் ஒரு பெண் வக்கிரமாக நோக்கப்படுதலை கண்டிக்கும் நாம்...கதை.. உண்மை என்ற போர்வையில் தேவையற்ற விபரிப்புக்கள் மூலம்..அவர்கள் செய்வதையே செய்கின்றோம்..! இங்கு சினிமா பற்றிய ஒரு கருத்தாடல் வந்த போது நாம் குறிப்பிட்டோம்..சினிமாவில் காட்டப்படுவதை வடிகட்டி உள்வாங்க வேண்டியது ரசிகனின் கடமை என்று..அது சாத்தியமில்லை என்று சொன்னவர்கள்..இப்போ இக்கதைகளுக்கு ஆதரவளிப்பதன் நோக்கம்...சமூக விழிப்புணர்வு என்றால்..வரவேற்கிறோம்..! ஆனால்...விழிப்புணர்வு என்ற வகையில் சினிமாவில் ரவுடீசம் காட்டி அதை ஒழிக்க சொன்னாலும் அது வளர்ந்து வருவது போல..இப்படியான மனித வக்கிரத்தனங்களை வெளிப்படுத்தும் கதைகளை கையாளும் போது நிதானம் அவசியம் ஒரு எழுத்தாளனுக்கு...என்பதை மீண்டும் சுட்டிக்காட்டுகின்றோம்..!

மற்றும் படி சாத்திரி நீங்கள் தொடருங்கள்..நமக்கு மற்றவர்களின் கீழ்த்தரமான வாழ்க்கையை படித்துத்தான் எம்மை சீர்செய்ய வேண்டும் என்ற தேவையில்லை..! அதனால் மேலும் விமர்சனங்கள் வைக்க மாட்டோம்..! அதேவேளை மற்றவர்களின் தவறுகளை பெரிதாகக் காட்டி ரசித்துக் கொண்டு நாமும் அதே தவறுகளுக்கு வித்திடக் கூடாது. அதுவே உங்கள் கதைகளின் நல்ல பயனாக இருக்க முடியும்..! அதை இங்குள்ள கதையின் ரசிகர்கள் உள்வாங்கிக் கொண்டால் சரி..! ஆனால் ஆண்களை வன்முறைவாதிகளாக வக்கிர சிந்தனையாளர்களாக மட்டும் சித்திரிப்பதை இந்திய நாவலாசிரியர்கள் போல நீங்களும் தொடர்ந்து செய்யமாட்டீர்கள் என்று எண்ணுகின்றோம்...! அப்படிச் செய்ய முனைந்தால் நிச்சயம் அது உங்கள் சமூகத்தில் பெண்களின் பார்வையில் ஆண் தொடர்பில் தொடர்ந்து தவறான எண்ண ஓட்டங்களை மட்டுமே பெருக்கும்..! :idea: :idea:

சாத்திரி தொடரை இணைத்தமைக்கு நன்றி. அடுத்த பாகத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிது நேரம் சிவாவை பார்த்த சிறி தொடர்ந்தான் இல்லையடாப்பா சாந்தி தன்ரை வாழ்க்கையிலை அவன் ரவியை கலியாணம் செய்ததை விடவேறை எந்த தவறையும் வெசய்யேல்லை அது ஏதோ தெரியா தனமா நடந்திட்டிது அதை தவிர்த்து பாத்தா அந்த பிள்ளையிலை குணத்திலையோ மற்றபடி பழகிற விதங்களிலையோ எந்த குறையும் இல்லை.

இப்ப ஒருவருசமா நீயும் நல்லா அந்த பிள்ளையோடை பழகிறாய அதுகின்ரை குணம் நடை உனக்கும் பிடிச்சிருக்கும்;. இனி அந்த பிள்ளையும் இப்பிடியே இஞ்சை தனியா எவ்வளவு கால்துக்கு இருக்க போகு பேசாமல் நீயே அந்த பிள்ளையை கலியாணம் செய்யன்.

ஒண்டும் தப்பா நினைக்காதை அந்த பிள்ளையின்ரை குணத்திற்கு அந்த பிள்ளை விரும்பினால் நானே செய்திடுவன் ஆனால் உனக்கே தெரியும் எனக்கிருக்கிற குடும்ப பொறுப்பு பிரச்சனையள் இப்போதைக்கு கலியாணம் எண்டதை நான் நினைச்சு பாக்கஏலாது உனக்கென்ன செல்லப்பிள்ளை பொறுப்பு கிடையாது அதோடை சாந்திக்கும் இவ்வளவு நாழும் ஒடியோடி உதவி செய்தனி உனக்கு பிடிச்சிருந்தா அந்த பிள்ளையிட்டை கேட்டுபார்.

எதுவும் பேசாமல் கேட்டு கொண்டிருந்த சிவா ஒரு பெமூச்சுடன் எனக்கும் அப்பிடியொரு யோசினை இருக்குதான் எனக்கு சாந்தியை மாதிரி ஒருமனிசி கிடைச்சா சந்தோசம் தான். ஆனால் சாந்தி எப்பிடி என்னோடை பழகுதெண்டு எனக்கு தெரியும் அதாலை நான் என்ரை விருப்பத்தை சொல்லப்போய் கடைசியா எங்களிற்கை இருக்கிற நட்பான உறவும் இல்லாமல் போடுமோ ? எண்டிற பயத்திலை தான் நான் ஒண்டும் உதைப்பற்றி கதைக்கிறேல்லை.

முதல் நடந்த ரவியின்ரை பிரச்சனையளிலை இருந்து இப்பதான்: கொஞ்சம் அவா விடுபட தொடங்கிருக்கிறா அதுக்கை போய் நான் என்ரை பிரச்சனை சொல் விரும்பேல்லை அது ஏதோ அனுதாபத்திலை தன்னிலை வந்த காதல் எண்கூட சாந்தி நினைக்கலாம் எதுக்கும் சாந்தியும் ஏதோ சொல்ல வேண்டுமெண்டவா வரட்டும் பாப்பம். என்று சொல்லி கொண்டிருபக்கும்போதே வாசல் அழைப்பு மணி ஒலித்தது.

இந்தா வந்திட்டா என்ற படி சிவாபோய் கதைவை திறந்தான் .சாந்திதான். வாங்கோ உங்களை பற்றித்தான் கதைத்து கொண்டிருந்தனாங்கள். என்று வரவேற்க . என்ன என்னை பற்றியோ என்ணெண்டு சொல்லுங்கோ என்றபடி சாந்தி உள்ளே நுளைந்தாள்.

இருங்கோ முதலிலை நீங்கள் சொல்ல வந்ததை சொல்லுங்கோ பிறகு நான் சொல்லுறன் சரி என்ன குடிக்கிறீங்கள் யுூஸ் இல்லாட்டி தேத்தண்ணி என்ன வேணும் என்றபடி சிவா சமையலறைக்குள் போக.

இருங்கோ குளிருது சுூடா எல்லாருக்கும் நான் தேத்தண்ணி ஊத்திறன் என்றபடி சாந்தி அடுப்படிக்குள் நுளைய. சரி தேத்தண்ணியை குடிச்சபடி சாந்தி சொல்ல வந்த விசயத்தை கேப்:பம் என்றபடி சிறியும் அடுப்படிக்கள் நுழைந்தான்.

சில வினாடிகளில் தேனீர் தயாரித்து சிறிக்கும் சிவாக்கும் வழங்கியபடி இண்டைக்கு அம்மான்ரை கடிதம் வந்தது தங்கச்சிக்கு கனடாவிலை சம்பந்தம் ஒண்டு சரி வந்திட்டுதாம் இந்த மாதமளவிலை தங்கச்சி கனடா போடுவாளாம்.

என்ரை பிரச்சனையளையும் நான் விளக்கமா அவைக்கு இதுவரை சொல்லேல்லை.

நானும் இனி எவ்வளவு காலம் இஞ்சையிருந்து இப்பிடியே காலத்தை ஓட்டுறது அதுதான் நான் என்ரை இங்கத்தைய விசாவை திருப்பி குடுத்திட்டு ஊருக்கு போய் அம்மா அப்பாவோடை அவையின்ரை கடைசிகாலம் தனிய அவையை கஸ்ரபட விடாமல் அவைக்கு உதவியா போய் ஊhரிலை இருக்கிறதெண்டு முடிவெடுத்திட்டன் அது எனக்கும் கொஞ்சம் ஆறுதலாவும் மாறுதலாவும் இருக்கும்.அதுதான் உங்களிட்டை சொல்லிப்போட்டு போகிற அலுவலை பாப்பம் எண்டு முடிவெடுத்திட்டன்.

சிவாவும் சிறியும் ஒருவரை ஒருவர் பாத்து கொண்டனர். மூவரும் சில செக்கன்கள் எதுவும் பேசவில்லை சிவாதான் அந்த மௌனத்தை உடைத்து நல்லது சாந்தி நீங்கள் எடுத்த முடிவு சரி ஆனால் அதுக்கு விசாவை திருப்பி குடுக்க வேணுமெண்டு அவசரம் இல்லை ஏனெண்டால்.உங்கடை நன்மைக்குதான் சொல்லுறன்.

நீங்கள் பிரான்ஸ் விசாவேடை போங்கோ போகேக்கை அங்கை கொழும்பிலையும் உங்களிற்கு பிரச்னை இருக்காது அதோடை ஒரு நேரம் உங்கடை மனது மாறி சில நேரம் பிரான்சிற்கு வாறதெண்டாலும் வரலாம்.நான் சொல்லுறது சரிதானே சிறி என்று சிறியின் பக்கம் திரும்பி கேட்டான் .சிறி என்ன சொல்லுறதெண்டு தெரியாமல் ம் ம் ம் ...என்று தலையை மட்டும் ஆட்டினான்.

சில நேரங்களின் பின் சாந்தி விடை பெற்று கொண்டு போனதன் பின்.சிவாவை கோபமாய் பாத்த சிவா அப்போதை ஏதோ சொல்லுறணெண்டு போட்டு சாந்தி ஊருக்கு போறனெண்டதும் கோயில் மாடு மாதிரி தலையை ஆட்டுறாய். உனக்கு கதைக்க தயக்கமெண்டால் உன்ரை விருப்பத்தை நான் கேட்டிருப்பன்தானே என்று சத்தமாகவே கேட்டான்.

இல்லையடா சிறி சாந்தி சொல்லுறதும் சரி ஊருக்கு போகட்டும் போய் அவாவின்ரைஅம்மா அப்பாவை பாக்கட்டும் அது அவாக்கும் ஒரு மாறுதலா இருக்கும். இவ்வளவு பிரச்சனையும் என்ன நடந்தது எண்டு முழுதா தெரியாமல் அவையும் யோசிச்சு கொண்டிருப்பினம். ஆனால் அதுக்காக என்ரை விருப்பத்தை சொல்லாமல் விடமாட்டன் அதற்கான நேரம் வரேக்கை கட்டாயம் சொல்லுவன் அதுக்கு சாந்தி என்ன முடிவெடுத்தாலும் அதை நான் எற்று கொள்ளுவன்.

சிறி தலையை ஆட்டியபடி டேய் உனக்கு என்ன விசரே சாந்தி ஊருக்கு போகட்டுமெண்டிறாய். பிறகு உன்ரை விருப்பத்தை சொல்போறணெண்டிறாய் அதுக்கான் நேரம் வரேல்லையெண்டிறாய். எனக்கு ஒண்டும் விழங்கேல்லை அவா பிளேனிலை பறக்கேக்கை நீ கீழை நிண்டு I LOVE YOUUUU........ எண்டு கத்த போறியா???

சிவா சிரித்தபடி அதெல்லாம் உனக்கு விளங்காது மச்சான் பொறுத்திருந்து பார் :arrow: :arrow:

நன்றி சாத்திரி அங்கிள் அடுத்த பகுதி எப்ப போடுவீங்க

நன்றி சாத்திரி அங்கிள் அடுத்த பகுதி எப்ப போடுவீங்க[/quote

ம்;ம் நித்திலாக்காவின் கேள்வி தான் என்னுடையதும் ஆவலாக உள்ளோம் தங்கள் கதையைப் படிக்க

எனக்கும் இதே கேள்வி தான் சாத்திரி. அடுத்த தொடரை படிக்க ஆவலாய் உள்ளோம். :lol:

கதை நல்லாப் போகுது.. வாழ்த்துக்கள்....! சரி பொறுத்திருந்து பாக்கிறம் ... எப்ப சொல்லுவார்.. எப்படி சொல்லுவார் எண்டு ...:wink: அடுத்த தொடரையும் பார்க்க ஆவாலாய் இருக்குறம் .... சீக்கிரம் எழுதி போடுங்க,..... :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சின் பாரிஸ் விமான நிலையத்தில் ஊருக்கு போவதற்கு தயாராக சாந்தி ஒரு சிறிய பையுடன் அவளை வழியனுப்ப சிறியும் சிவாவும் வந்திருந்தனர். வாங்கோ போடிங்பாஸ் எடுத்திட்டு வந்த நிண்டு கதைப்பம் பிறகு சனம் கூடிடும் என்று சிவா சாந்தியை அழைத்து போனான்.

சாந்தியையும் சிவாவையும் தனியே கதைக்க விட்ட விட்டு சிறி ஒரு பக்கமாக வந்து நின்று அங்கு வரிசையாக நிறுத்தி வைத்திருந்த விமானங்களை வேடிக்கை பாத்து கொண்டு நிண்டான்;.வழைமையாக வளவளவென்று கதைக்கும் சிவாவும் சாந்தியும் அன்ற கதைக்க வார்த்தைகள் வராமல் வசனங்களை தேடித் தேடியே கதைத்தனர்.

சாந்தி புறப்படும் விமானத்திற்கான உள்நுளைவு அனுமதி ஒலி பெருக்கியில் அறிவிக்கபட்டதும் சாந்தி சிவாவிடம் சரி சிவா நான் போக போறன் நேரமாயிட்டுது. நீஙகள் இதுவரை எனக்கு செய்த உதவிகளிற்கு எல்லாம் வெறும் வாயாலை நன்றி என்று சொல்லி போட்டு போக எனக்கு மனம் இல்லை. எண்டாலும் என்னாலை அதைத்தான் இப்ப செய்ய முடியும் என் வாழ்நாளில் உங்கடை உதவியளை மறக்கமாட்டன்:.

சிறி எங்கை காணெல்லை கூப்பிடுங்கோ சொல்லிட்டு உள்ளை போறன்.என்ற சிறிய விசும்பலுடன் கூறிகொண்டாலும் இதுவரை ஊருக்கு போக வேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்தவளிற்கு ஏனே இப்போது சிறிய தடுமாற்றம்.

சரி சரி அழாதையுங்கோ இதென்ன குழந்தை பிள்ளை மாதிரி இப்ப என்ன நான் ஊருக்கு வருவன் தானே அப்ப சந்திக்கலாம் தானே அந்தா சிறியும் வாறான். சரி நேரமாச்சு நீங்கள் போட்டு வாங்கோ என்ற சாந்தியை தேற்ற முயன்ற சிவா. சிறியும் அருகே வந்து சாந்தியிடம் என்ன நேரமச்சு அறிவிக்கிறாங்கள் சரி சந்தோசமா போட்டு வாங்கோ மறக்காமல் இடைக்கிடை கடிதம் போடுங்கோ என்ன என்றான்.

சாந்தி தனது கை பையை தூக்கி கொண்டு சரி போட்டு வாறதெங்கை போறன் கட்டாயம் உங்கடை இரண்டு பேரின்ரை வீட்டையும் போவன்.போய் சேந்த உடைனை போன் பண்ணுறன் பிறகு ஊருக்கு போனால் கடிதம் தான் போடலாம்.கட்டாயம் போடுறன்.யாரை மறந்தாலும் உங்கள் இரண்டு பேரையும் மறக்கமாட்டன்.

என்றவாறு புறப்பட்ட சாந்தியிடம் சாந்தி ஒரு நிமிசம் என்றவாற சிவா ஒரு கடிதத்தை நீட்டினான்.என்ன உங்கடை வீட்டை குடுக்க வேணுமே என்று கேட்ட சாந்தியிடம். இல்லை சாந்தி இது உங்களுக்குதான் எழுதினனான். நீங்கள் ஆறுதலாய் பிளேனுக்கை இருந்து படிச்சு பாருங்கோ சரி போட்டு வாங்கோ என்று சொல்லி அந்த கடிதத்தை அவளின் கையில் திணித்து விட்டு போய் கொண்டிருந்த சாந்தி மறையும்வரை கையசைத்து கொண்டிருந்தான்.

கையசைத்து கொண்டிருந்த சிவாவிடம.; டேய் சாந்தி போய் கன நேரமாச்சு இன்னுமேன் கையை அசைச்சு கொண்டு நிக்கிறாய். அடசே நானும் ஏதோ தமிழ்படங்களிலை வாற மாதிரி எயா போட்டிலை வைச்சு கடைசியிலை சாந்தி அய் லவ் யுயு........எண்டு கத்த அவாவும் படியாலை இறங்கி ஓடிவந்து உன்னை கட்டி பிடிக்க அதை நான் பாக்கலாமெண்டு அரை நேர லீவு வேறை போட்டிட்டு வந்தன்.

(அப்பிடி நடந்திருந்தா நானும் இதோடை கதையை முடிச்சிருப்பன்)

நீயென்னடா எண்டா கடிதத்தை எழுதி அதுவும் பிளேனுக்கை படிக்க சொல்லி குடுத்து விட்டிருக்கிறாய். பிளேனுக்கை பொழுது போக்க படிக்கதான் பேப்பர் குடுப்பாங்களே? பிறகேன் உன்ரை கடிதம் என்று சரித்தாவாறே கூறிக்கொண்டு சரி வா போவம் என்றபடி நடந்த சிறியிடம்.

சிறி நீயும் என்னை புரிஞ்சு கொள்ளேல்லை அதுதான் சிறிக்கிறாய். எற்கனவெ ரவியாலை சரியா பாதிக்கப்பட்ட சாந்திக்கு தானாகவே கலியாணம் எண்டாலோ ஆண்கள் எண்டாலோ ஒரு வெறுப்பு வந்திட்டிது அது பலதரம் நான் அவளோடை கதைக்கேக்கை கவனிச்சிருக்கிறன்.

நானும் இப்ப போய் நான் காதலிக்கிறன் எண்டு சொன்னா எல்லா ஆம்பிளையளும் இப்பிடித்தான் பெண்ணெண்டா உடைனை கலியாணமும் மற்ற தேவையளையும் தான் பெண்ணிட்டை எதிர்பாக்கினம் எண்டு ஆண்களைப்பற்றி ஒரு பொதுவான அபிப்பிராயம் வந்திடும்.அதோடை நான் இவ்வளவு காலமும் செய்த உதவியளாலை ஏதோ தன்னிலை ஒரு அனுதாபதம் வந்துதான் அப்பிடி சொல்லுறன் எண்டும் நினைக்கலாம்.

அதாலை தான் அவளுக்கும் ஒரு குறிப்பிட்ட காலஅவகாசம் குடுத்திருக்கிறன் மன காயங்களிற்கு காலம்தான் சரியான மருந்து காலம் கட்டாயம் அவள் மனதையும் மாத்தும். அப்ப அவளா என்னட்டை வருவாள் அப்பிடி இல்லாட்டியும் கூட பரவாயில்லை. இது என்ன உலகத்தின் இறுதி சுழற்சியா??இல்லை தானே.

என்ற கூறி கொண்டு போன சிவாவை சிறி பாத்து சரி சரி பகிடிக்குதான் சொன்னனான் அதுக்கு போய் நீ இப்பிடி தத்துவம் எல்லாம் கதைப்பாய் எண்டு நினைக்கேல்லை காதலிச்சா கவிதைவரும் எண்ட கேள்விப்பட்டிருக்கிறன் ஆனால் தத்துவமும் வருமெண்டு இப்பதான் தெரியிது என்ற சிறியை செல்லாமாய் அடிக்க சிவா துரத்த அப்படியே வீடு போய் சேர்ந்தார்கள்.

விமானத்தில் ஏறி தனது இருக்கை இலக்கத்தை சரி பார்த்து இருந்து கொண்ட சாந்தி தனது பாது காப்பு பட்டியை அணிந்து கொண்டதும் அங்கு சிறிய திரையில் போய்கொண்டிருந்த முதலுதவி பாதுகாப்பு பற்றிய விளக்கங்களைகூட பாக்க விருப்பம் இல்லாதவளாய் சிவா அப்படி என்ன தான் தனக்கு எழுதியிருப்பான் அதை படித்துவிட வேண்டும் என்கிற அவாவில் அவசரமாக தனது கைப்பையை திறந்து சிவா குடுத்த கடிதத்தைதிறந்து பிரித்தாள்

:arrow: :arrow:

கமராண்ணாவின்ர கதையில கில்லி வாசனையடிக்குது..

:?:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கமரண்ணா ? கில்லி வாசனை அப்பிடியெண்டா என்ன தயவு செய்து விளக்கவும் விளங்கவில்லை மற்றபடி உங்கள் விமர்சனங்களை முன்பே கூறியது போல தாராளமாக முன் வைக்கவும் புரியாத மொழியில் எழுதுவதை விட விமர்சனம் மேலல்லவா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.