Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

City of God - நரகத்தின் நுழைவாயில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

City of God - நரகத்தின் நுழைவாயில்

cityofgod1f.jpg

அனேகமாக அதிக முறை காப்பி இந்திய சினிமா/தமிழ் சினிமாவில் காப்பி அடிக்கப்பட்ட படம் என்றால் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

இந்த படம் பார்த்தபிறகுதான் பல தமிழ் சினிமா படைப்பாளிகளின் படைப்பு திறமை நன்றாக புரியத்தொடங்கியது :D

இது ஒரு ஆங்கில படம் கிடையாது. போர்த்துகீசிய/ஸ்பேனிஷ் மொழி படம் சப்டைட்டிலுடன் பார்க்கலாம். இந்த படம் பார்த்து சில நாட்களுக்கு வேறு படம் பார்க்கவில்லை அதன் பாதிப்பு அப்படி. மேலும் இது ஒரு உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டப் படம் முடிவில் போது சினிமாவில் வரும் பாத்திரங்களின் ஒரிஜினல் ஆட்களின் புகைப்படத்தையும் சேர்த்து போடுகிறார்கள்.

முதலில் காட்சி கோழியை வெட்டி சமைப்பது. தப்பித்த கோழியை துப்பாக்கியுடன் துரத்துவதிலேயே தெரிந்துவிடும் மனிதர்களின் இயல்பு. முதல் காட்சியின் இசையும் எடிட்டிங்கும் உங்களை படம் முழுவதும் உட்காரவைத்து விடும்.

படத்தின் எளிமையான கதை இதுதான்

ரியோ -டி-ஜெனிரோ நகரத்தின் ஒதுக்குபுற பகுதியில் இருக்கும் இளைஞர்களில் 3 பேர் ராபின் ஹூட் டைப் கொள்ளையர்களாக வாழ முற்படுகிறார்கள். சிறு சிறு கொள்ளைகள் வழிபறிகள் என்று. ஒரு முறை ஒரு MOTEL கொள்ளைக்கு ஒரு சிறுவனை சிக்னல் கொடுக்க கூட்டிப்போகிறார்கள். வெற்றிகரமாக கொள்ளை அடித்துக்கொண்டு தப்பித்து ஓடுகிறார்கள்.

cityofgod2.jpg

ஆனால் போலீஸ் அவர்களை கடுமையாக தேடித்தேடி கொல்கிறது. ஏன்?? துணைக்கு கூட்டிபோன பொடியன் எல்லோரையும் கொன்றுவிட்டு இவர்களையும் போட்டுக்கொடுத்து விடுகிறான். சிறுவனாக இருந்த இந்த லில் சே என்ற சிறுவன் வளர்ந்து என்னவாகின்றான் என்பதே மொத்த கதை.

இந்த மொத்த கதையும் இறந்து போன ஒருவனின் தம்பி ராக்கெட்டின் பார்வையில் கதை சொல்வதாக நகர்கிறது.

கதையோடு அந்த சேரியின் வாழ்க்கை, அதற்குள் இருக்கும் சின்ன சின்ன அரசியல், கொடுரமான குழந்தைகள், போதை உலகம் எல்லாவற்றையும் தொட்டுக்கொண்டு செல்கிறது.

Cold blooded murder என்பதெல்லாம் சாதாரணம். எந்த நேரத்தில் துப்பாக்கி வெடிக்கிறது என்பதே தெரியாது.

குழந்தைகள் என்றால் மகிழ்பவர்கள் இந்த சிட்டி ஆப் காட்டின் குழந்தகளை பார்த்தால் அலறியடிப்பார்கள். அதிலும் லில்சே குழந்தைகளை கொடுமை படுத்தும் காட்சியும் க்ளைமேக்ஸில் அவர்களுடைய பாத்திரமும் அட அட நம் இருப்பது சொர்க்கத்தில்.

இதில் பென்னி என்பவன் நல்லவன் அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. .

பென்னி திருந்தி வாழ முடிவெடுத்து பார்ட்டி கொடுக்கையில் எதிர் முகாம் ஆள் ஒருவனால் கொல்லப்பட்டு சாக அதற்கு பிறகு ரத்தக்களறிதான்.

எவ்வளவு பெரிய தாதாவாக இருந்தாலும் ஒரு பெண் கூட விரும்பவில்லையே என கடுப்பாகுவதும், பணம் - பெண் இரண்டும் எல்லா தாதாவிற்கும் பொதுவான விசயம் போல...

அவ்வளவு கொடுமையிலும் லஞ்சம் வாங்கும் போலிஸ். துப்பாக்கியுடன் அலையும் சிறுவர்கள் அதிர்ச்சியளிக்கும் விசயங்கள் பல.

(உங்களுக்கு புதுப்பேட்டை படம் வந்தால் எச்சில் தொட்டு அழித்து விடுங்கள். படம் பார்த்த பிறகு பல தமிழ்ப் படங்கள் ஞாபகம் வரும்)

கதை முழுவதும் 60 களில் தொடங்கி 80களில் முடிகிறது.

ஒளிப்பதிவு - படம் முழுவதும் ஒரு தீம் கலரில் அருமையாக எடுத்துள்ளார்.

திரைக்கதை - திரையில் படம் ஆரம்பிக்கும் போதே கிளைமாக்ஸிற்கு முந்தைய காட்சியில் ஆரம்பித்து இறுதியில் முடிகிறது.

அந்த சேரியிலேயே ராக்கெட் மட்டும் தற்செயலாக எடுத்த போட்டோவினால் ஒரு தினசரியில் வேலை கிடைக்க தேறுகிறான்.

ரத்தம், வன்முறை, போதை, கோபம், பொறாமை, வன்மம், பிடிவாதம் மொத்த கலவை.

தவறவிடக்கூடாத படம்

http://yasavi.blogspot.com/

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி .

படம் பார்க்க வேண்டும் போல்தான் இருக்கு்.

http://www.megavideo.com/?v=3ZG26ZVQ

இதில போய் நீங்கள் இதை பார்க்க முடியும் சப் டைட்டில் உடன்

72 நிமிடத்தில் நின்று விடும் உங்கள் network conection துண்டித்து விட்டு திரும்ப 10-12 நிமிடம்களில் விட்ட இடத்தில் இருந்து play பண்ணி பார்க்கவும்

இந்தப் படத்தை இரு இயக்குனர்கள் சேர்ந்து இயக்கியிருந்தாலும் ஃபெர்னாண்டோ மெய்ரெலஸ்-யின் பங்கே அதிகம்

இவரது அடுத்த படமான “கான்ஸ்டண்ட் கார்டனர்” இன்னும் சிறந்தது..மேற்கத்திய மருந்துக் கம்பனிகள், ஆப்பிரிக்க மக்களின் வறுமையையும் நோயையும் அறியாமையையும் பயன்படுத்திக்கொண்டு, அவர்களுக்கே தெரியாமல் நடத்தும் மருந்துப் பரிசோதனைகளையும், அதைத் துப்பறிந்ததால் கொல்லப்படும் தன்னார்வ சேவகியையும், அவளுக்கு நியாயம் கிடைப்பதற்காகத் தன் உயிரைப் பணயம் வைக்கும் அவளது கணவனான பிரிட்டிஷ் தூதரக அதிகாரியையும் சுற்றிப் பின்னப்பட்ட உணர்ச்சிகரமான படம். இலவச மருத்துவ முகாம் என்ற பெயரில் நடக்கும் மருந்துப் பரிசோதனைகள், அதில் உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல்கள் துடைத்தழிக்கப்படுவது, ஊழல் மலிந்த ஆப்பிரிக்க அரசுகள் மற்றும் பன்னாட்டுத் தூதரக அதிகாரிகள், அச்சத்தில் வதங்கும் எளிய மக்கள் இங்கு சென்று பாருங்கள் எனக்கு பிடித்த படம்களில் ஒன்று..

http://www.novamov.com/video/4add7d27608f2

Edited by வீணா

  • கருத்துக்கள உறவுகள்

http://www.megavideo.com/?v=3ZG26ZVQ

இதில போய் நீங்கள் இதை பார்க்க முடியும் சப் டைட்டில் உடன்

72 நிமிடத்தில் நின்று விடும் உங்கள் network conection துண்டித்து விட்டு திரும்ப 10-12 நிமிடம்களில் விட்ட இடத்தில் இருந்து play பண்ணி பார்க்கவும்

படம் பார்க்க உடன் முகவரியையும் தந்ததுக்கு ரொம்ப தாங்ஸ்.

உந்தபடம் நான் பார்த்து கிட்டத்தட்ட 5 வருடங்களாகின்றது.எல்லோரும் கட்டாயம் பார்க்கவேண்டியதொரு படம்.நான் யூனிவெர்சல் ஸ்ரூடியோவில் தான் வேலை செய்கின்றேன்.கனடாவில் தனிய ஆடியோ,வீடியொ வினியோகிப்பதே எங்கள் வேலை.அதனால் பல நல்ல ஆங்கிலப்படங்களின் ஒரு கலக்சன் வைத்திருக்கின்றேன்.ஆங்கிலப் படங்கள் மாத்திரமல்ல பிறமொழி படங்களும் கனக்க வரும்.அவைகளை தான் நான் பெரும்பாலும் விரும்பிப் பார்ப்பது.

குறிப்பாக பிரென்ச்,ஈரானிய படங்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை நீங்கள் வந்து ஒரு பேக்காய் அண்ணை. :)

இஞ்சை நீங்கள் அடிக்கடி றீல் விடேக்கையே யோசிச்சனான்.மனிசன் ஏதோ இந்த தொழில் சம்பத்தப்பட்ட ஆளாய்த்தானிருக்குமெண்டு :)

விசயம் முதலே தெரிந்திருந்தா ரீலை எடிட் பண்ணிவிட்டிருப்பேன்.

நாட்டைவிட்டு வெளிக்கிட்டு வந்து ஒரே இடத்தில் அடைபட்டுகிடந்தால் நான் எழுதுவது ரீல் மாதிரித்தான் இருக்கும்.

எது ரீல்?

லண்டனில் இருந்து இயக்கத்திற்கு போனது ரீலா?அல்லது டெல்கியில் பலரை சந்தித்தது ரீலா?84 ஆம் ஆண்டே ஜ்,ஏ.டீ யுனிவெர்சிடி,நேரு யூனிவெர்சிடியில் எக்சிபிசன் வைத்தது ரீலா,

அல்லது தமிழ் நாட்டில் அகதி முகாம் முகமாக அலைந்து அவர்களுக்கு வெளிநாட்டு மிசன்களூடாக பணம் எடுத்து ,அதைவிட தமிழ் நடிகர்களை வைத்து நிகழ்சி நடாத்தி பணம் எடுத்து உதவியது ரீலா,

முடிந்தளவு வெளிநாட்டு,உள்நாட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து எமது பிரச்சனையை வெளிகொண்டுவர முயற்சித்தது ரீலா? லண்டன் கார்டியன் எரிc சில்வரும்,பீ,பீ,சீ மாக் ரலியும்,இந்து ஜி.கே ரெட்டியும்,ராமும்,டம்ஸ் ஒf இந்தியா பட்னீசும் ,பகவன் சிங்கும்,அனிதா பிரதாபும்,சந்திரசேகரும்(திம்பு பேச்சை வெளிகொண்டுவந்தவர்)

கம்னியூஸ்ட் கட்சி கல்யாணசுந்தரமும்,பிரித்துவா லகரியும்,பாண்டியனும்,ரோ சந்திர சேகரும்,சூரிய நாரணாவும் இவர்களி சந்தித்தது ரீலா?

இன்னமும் எழுதிக்கொண்டே போகலாம்.டெல்கியில் ஏறி இறங்காத எம்பசியில்லை.

எல்லாம் எமது விடுதலைக்காக்தான் காலேலை ஒரு பிளேன் டீ மதியம் ஒரு 5ரூபா சாப்பாடு,இரவு 4 இட்டலியோட அலைந்ததை எழுதினால் ரீல் மாதிரித்தான் இருக்கும்.5ஸ்டார் கொட்டேலிலை நின்று தண்ணியப்போட்டுட்டு அறிக்கை விட்டா உங்களுக்கு உண்மை மாதிரி இருக்குமென நினைக்கின்றேன்.

இன்றும் நினைப்பேன் இயக்கத்தை விட்டுவந்த அன்று தலைமைக்கு ஒரு பெரிய கடிதமும்,அகதிகளுகாக வைத்திருந்த காசுக்கு 5 சதத்திற்கும் கணக்கு எழுதி மிகுதி சில லட்சங்களையும் ஒப்படைத்துவிட்டு வெறுங்கையுடன் வந்து அண்ணருக்கு காசு அனுப்பச் சொல்லி போன் அடித்த எனக்கு செருப்பால அடிக்க வேண்டும்.

அதை விட இப்ப வந்து உங்களோட சண்டை பிடிக்கின்றன் பாருங்கோ அதைவிட அங்கேயே துரோகியாக செத்திருக்கலாம்

:)

தெளிர்ந்தால் போல் இதை மறுபரிசீலனை செய்யவும்.

Edited by r.raja

  • கருத்துக்கள உறவுகள்

விசயம் முதலே தெரிந்திருந்தா ரீலை எடிட் பண்ணிவிட்டிருப்பேன்.

யாழ் களம் கள்ளுக்கொட்டில் மாதிரி என்று கிட்டடியில் எழுதப்பட்டிருந்தது. இங்கு கருத்து எழுதுபவர்களே தாங்கள் கள்ளுக்கொட்டிலில் இருக்கின்றோம் என்று தங்களையும் அறியாமல் நினைத்துக்கொண்டிருக்கலாம். அதனால்தான் உங்களைப் போன்றவர்கள் இப்படியான இடங்களுக்கு வந்து கருத்துக்கள் வைக்கும்போது நம்பமுடியாமல் உள்ளனர். :)

Mr. வக்காலத்து, உங்களுக்கு ஒரு விடயம் புரியவில்லை போல் உள்ளது... தண்ணி அடிப்பவரெல்லாம் கெட்டவர்கள்... தண்ணி அடிக்காதோர் எல்லோரும் நல்லோர்...!!! போன்றும் உங்கள் கருத்து உள்ளது.

ஒருத்தனுடைய கருத்தை விமர்சியுங்கள் தப்பில்லை.! ஆனால் அவனது சரீதத்தை விமர்சிக்காதீரகள். :)

  • கருத்துக்கள உறவுகள்

இலைகள் பழுக்காமலே ஒடிந்து விழ குருத்துகள் உடனே இலையாக மாறுவது போல் துப்பாக்கிகள் பாரபட்சமின்றி எல்லோரையும் போட்டுத் தள்ளிக்கொண்டே இருக்கும் . ஏன், எதற்கு என்ற கேள்விக்கு இடமில்லை. எங்கேயோ ஒருத்தன் எதிர்பாராது புகைப்படக் கலைஞனாகின்றான்! படமா ஒரே இரத்த வாடை ! லொசிக் எல்லாம் பார்க்கக் கூடாது. :)

  • கருத்துக்கள உறவுகள்

Mr. வக்காலத்து, உங்களுக்கு ஒரு விடயம் புரியவில்லை போல் உள்ளது... தண்ணி அடிப்பவரெல்லாம் கெட்டவர்கள்... தண்ணி அடிக்காதோர் எல்லோரும் நல்லோர்...!!! போன்றும் உங்கள் கருத்து உள்ளது.

ஒருத்தனுடைய கருத்தை விமர்சியுங்கள் தப்பில்லை.! ஆனால் அவனது சரீதத்தை விமர்சிக்காதீரகள். :)

நான் வக்காலத்து வாங்குகின்றேன் நீங்கள் சரிதம் எழுதலாம். தப்பில்லை.. :lol:

நான் வக்காலத்து வாங்குகின்றேன் நீங்கள் சரிதம் எழுதலாம். தப்பில்லை.. :lol:

கிருபன், நான் கள்ளுகொட்டிலில் இருந்து கருத்தெழுதும் பொழுது...

சரீரத்தை என்பதற்கு பதிலாக சரீதத்தை என்று எழுதிவிட்டேன். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.