Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் இயக்கம் - ஒழுங்கமைக்கும் நடவடிக்கையில் போராளிகள்

Featured Replies

விட்டால் எங்கள் நாலுபேருக்குத்தான் தலைவர் ஒளிந்திருக்கும் இடமும் தெரியும் என்பீர்கள் போலிருக்கு?

முள்ளிக்கம்பிக்கால ஆற்றகாலை பிடிச்சு எண்டாலும் வெளியில வந்தாக்காணும் என சனம் நிக்குது .இப்பவும் அமைதிகாப்போம்,மௌனித்திருக்கின்றோம்,பொறுத்திருப்போம்,நேரம் வரட்டும், இந்த படங்காட்டல் எல்லாம் இனி செல்லாது.

இனியும் ஏமாற ஒருத்தருக்கும் ரெடியில்லை.யாழ் கருத்துக்களிலேயே எவ்வளவு மாற்றங்கள்.

( எல்லாம் தெரியும் எண்டு கதை அளக்கிற உங்களுக்கே விடுகினமோ...??? :) )

யாழ் கோட்டைக்கு பெம்பிளை பிள்ளையளை பாதுகாப்புக்கு விட்டு போட்டு பின்னாலை நிண்டு அரசியல் செய்தவைக்கு இதுகளை யாரும் சொல்ல மாட்டினமாம்...

இப்ப சனம் எல்லாம் உங்களுக்கு பின்னாலை வந்திட்டுது எண்டு கனவு கினவு கண்டனீங்களோ...?? அது வெறும் கனவு மட்டும் தான் அண்ணோய்... நீங்களாவது முன்னாலை போறதாவது...

சனத்தை முன்னாலை போக சொல்லி போட்டு பின்னாலை தான் நீங்கள் போவியள் எண்டு சொன்னாலாவது நம்பலாம்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

விட்டால் எங்கள் நாலுபேருக்குத்தான் தலைவர் ஒளிந்திருக்கும் இடமும் தெரியும் என்பீர்கள் போலிருக்கு?

முள்ளிக்கம்பிக்கால ஆற்றகாலை பிடிச்சு எண்டாலும் வெளியில வந்தாக்காணும் என சனம் நிக்குது .இப்பவும் அமைதிகாப்போம்,மௌனித்திருக்கின்றோம்,பொறுத்திருப்போம்,நேரம் வரட்டும், இந்த படங்காட்டல் எல்லாம் இனி செல்லாது.

இனியும் ஏமாற ஒருத்தருக்கும் ரெடியில்லை.யாழ் கருத்துக்களிலேயே எவ்வளவு மாற்றங்கள்.

என்றாலும் உங்களின் 30 வருட பழுத்த அரசியல் அனுபவத்துக்கு முன்னால் வருமோ அண்ணை.உங்களின் அரசியல் நீள அகலம் தெரியாமல் உங்களுடன் மோத நினைப்பது மலையோடு மோத நினைப்பது போல. உங்களின் அரசியல் அனுபவம் தான் யாழ்கள உறுப்பினர்களின் வயது என்று நீங்கள் சொல்லாமல் சொல்வது கேட்கிறது. :):(

  • கருத்துக்கள உறவுகள்

விட்டால் எங்கள் நாலுபேருக்குத்தான் தலைவர் ஒளிந்திருக்கும் இடமும் தெரியும் என்பீர்கள் போலிருக்கு?

முள்ளிக்கம்பிக்கால ஆற்றகாலை பிடிச்சு எண்டாலும் வெளியில வந்தாக்காணும் என சனம் நிக்குது .இப்பவும் அமைதிகாப்போம்,மௌனித்திருக்கின்றோம்,பொறுத்திருப்போம்,நேரம் வரட்டும், இந்த படங்காட்டல் எல்லாம் இனி செல்லாது.

இனியும் ஏமாற ஒருத்தருக்கும் ரெடியில்லை.யாழ் கருத்துக்களிலேயே எவ்வளவு மாற்றங்கள்.

கருத்துக்களம்: போரினால் பாதிக்கப்பட்ட மக்களை சுயதொழிலில் ஈடுபடுத்தும் நோக்குடன் மண்சுமந்த மேனியர் அமைப்பினருடன் சுவிஸ் வாழ் அமைப்புக்கள் சிலவற்றின் நிதியுதவியுடன் சுயதொழில் ஊக்குவிப்புத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. -

சுவிஸ் சூரிச் சிவன்கோவில் சைவத் தமிழ் சங்கத்தின் மண்சுமந்த மேனியருடன் இணைந்து சுவிஸ் சொலத்தூண் தமிழர் நலன்புரிச் சங்கமும், கிறங்கன் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயமும் தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பலதரப்பட்ட உதவிகளைச் செய்து வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக யாழ்.வடமராட்சி கொற்றாவத்தை சித்திவிநாயகர் கல்யாண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 23 பயனாளிகளுக்கு சுயதொழில் ஊக்குவிப்புத் தொகையாக தலா இருபத்து ஐயாயிரம் ரூபா வழங்கப்பட்டது. இதற்கான நிதியினை கிறங்கன் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகத்தினர் அனுப்பிவைத்திருந்தனர்.

கோழிவளர்ப்பு, ஆடு வளர்ப்பு, தையல் பயிற்சி, மீன்பிடி, பலசரக்கு வியாபாரம் போன்ற தொழில்களை முன்னெடுக்க உதவும் வகையிலேயே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 50மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகையாக தலா ஆயிரத்து ஐநூறு ரூபா வழங்கப்பட்டது. இதற்கான நிதியினை சுவிஸ் சொலத்தூண் தமிழர் நலன்புரிச் சங்கம் அனுப்பியிருந்தது.

இந்த மாணவர்கள் தமது பாடசாலைக் கல்வியினை நிறைவு செய்யும் வரை குறித்த தொகை உதவியாக வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

கரவெட்டி பிரதம தபால் அதிபர் அ.அருளானந்த சோதி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக சூழலியலாளரும், இயற்கை, பண்பாட்டு மரபுவளப் பேணுகை மையத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசனும் சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் க.இரட்ணகுமார், மருத்துவ கலாநிதி க.வேலும்மயிலும், மருத்துவ கலாநிதி சிவநேசன், சற்கோட்டை றோ.க.வித்தியாலய அதிபர் கே.இராஜதுரை ஆகியோரும் பங்குகொண்டிருந்தனர்.

இதன் போது பெருமளவான மக்களும் பங்குகொண்டிருந்தனர்.

போரினால் தமிழர் தரப்பு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன நல்லிணக்கத்துக்கான சமிக்ஞையை இலங்கை அரசே வெளிப்படுத்த வேண்டும். நல்லிணக்கம் குறித்துப் பேசி வரும் அரசு, தேசியக் கொடியில் பெரும்பான்மையின் குறியீடாக வாளேந்தி நிற்கும் சிங்கத்தை நீக்குவதாக அறிவித்திருந்தால் தமிழ் மக்களுக்கு அரசின் மேல் இறுக்கமான நம்பிக்கை பிறந்திருக்கும். ஆனால், அரசோ, இனங்களுக்கிடையிலான பிளவை மேலும் அகலிக்கும் விதமாகத் தேசிய கீதத்தைத் தமிழ் மக்களின் குரல் வளைக்குள் சிங்களத்தில் திணிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றது என சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

சூரிச் சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கத்தின் ‘மண்சுமந்த மேனியர்’திட்டத்தின் ஊடாக சுவிஸ் சொலத்தூண் தமிழர் நலன்புரிச் சங்கமும், கிறங்கன் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயமும் இணைந்து போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஊக்குவிப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சி ஞாயிறு (19-12-2010) அன்று வடமராட்சியில் கொற்றாவத்தை சித்தி விநாயகர் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,‘இங்கு உதவிகளைப் பெறுவதற்குக் கூடியிருக்கும் அனைவரும் போரினால் பாதிக்கப்பட்டவர்கள். கடற்கோள், புயல் போன்ற எதிர்பாராத இயற்கை அனர்த்தங்களாலும் பாதிப்புக்கள் ஏற்படும். இயற்கை அனர்த்தங்கள் சில மணித்தியாலயங்களிலோ அல்லது சில நாட்களிலோ தணிந்துவிடும். இவற்றால் ஏற்படும் பாதிப்புக்களை உதவிகளின் மூலம் ஓரளவுக்கு நிவர்த்தி செய்துவிட முடியும். பாதிக்கப்பட்டவர்கள் விரைவிலேயே இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட முடியும். ஆனால், நாங்கள் இயற்கையால் அல்ல, கொடிய போரினால் நிர்க்கதிக்கு ஆளானவர்கள். பல தசாப்த கால இனக்குரோத அரசியலாலேதான் இந்தப் போர் மூட்டி மூட்டி வளர்க்கப்பட்டது. எனவே, பெறும் பொருள் உதவிகளினாலோ, பண உதவிகளினாலோ போர்ப் பாதிப்புக்களில் இருந்து மீண்டு விட முடியாது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இனங்களுக்கு இடையேயான இதய சுத்;தியான நல்லிணக்கமும், நியாயமான அரசியல் தீர்வும் கிடைக்கப்பெற்றால் மாத்திரமே நாம் மீண்டும் நிமிர்ந்தெழ முடியும்.

போரினால் தமிழர் தரப்பு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன நல்லிணக்கத்துக்கான சமிக்ஞையை இலங்கை அரசே வெளிப்படுத்த வேண்டும். நல்லிணக்கம் குறித்துப் பேசிவரும் அரசு, தேசியக் கொடியால் பெரும்பான்மையின் குறியீடாக வாள் ஏந்தி நிற்கும் சிங்கத்தை நீக்குவதாக அறிவித்திருந்தால் தமிழ் மக்களுக்கு அரசின் மேல் இறுக்கமான நம்பிக்கை பிறந்திருக்கும்.

ஆனால், அரசோ, இனங்களுக்கிடையிலான பிளவை மேலும் அகலிக்கும் விதமாகத் தேசிய கீதத்தைத் தமிழ் மக்களின் குரல் வளைக்குள் சிங்களத்தில் திணிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றது.

எந்த ஒரு நாட்டிலும் தேசிய கீதம் இரு மொழிகளில் இசைக்கப்படுவதில்லை என்று அரச தரப்பு தெரிவித்துள்ளது. கனடாவில் பிரஞ்மொழியிலும், ஆங்கிலத்திலும் தேசிய கீதம் பாடப்படுகின்றது. இப்படி பல் தேசிய இனங்கள் வாழுகின்ற பல நாடுகளில் பல மொழிகளில் தேசிய கீதங்கள் பாடப்படுகின்றன என்பது தான் உண்மை.

தென் ஆபிரிக்காவில் ஒரே தேசிய கீதம் பாடப்படுகின்றது. ஆனால், அது, அங்கு பேசப்படுகின்ற ஐந்து மொழிகளினாலும் ஆன வரிகளை உள்ளடக்கியிருக்கின்றது. இந்தியாவில் 300 மொழிகள் பேசப்பட்டாலும் அங்கு இந்தி மொழியிலேயே தேசிய கீதம் பாடப்படுவதாக சில அமைச்சர்கள் வாதிடுகின்றனர். அது இந்தி அல்ல. வங்க மொழியில் அமைந்த, ரவீந்திரநாத் தாகூரின் பாடலாகும். இந்தியாவின் சிறுபான்மை மொழியிலேயே அதன் தேசிய கீதம் பாடப்படுகின்றது.

ஒரு சூழலியலாளனாக, இலங்கையின் தேசியக் கொடியில் வாளேந்தும் சிங்கத்தை பொருத்தமற்றதாகவே நான் கருதுகின்றேன். சிங்கம் சிங்கள மக்களின் குறியீடு. விஜயனின் தந்தையான சிங்கபாகு சிங்கத்துக்கு மகனாகப் பிறந்தவர் என்று மகாவம்சம் கூறுகின்றது. சிங்கம் பௌத்த மதத்தின் குறியீடு. பௌத்த மதத்தைப் பரப்பிய அசோகச் சக்கரவர்த்தி, பௌத்த போதனைகளைப் பதிப்பித்த கல் தூண்களில் சிங்கங்களை இடம்பெறச் செய்தார். மொத்தத்தில், இலங்கையின் தேசியக் கொடியில் இடம்பெற்றிருக்கும் சிங்கம் பெரும்பான்மையே ஆதிக்கம் என்கிறது. இலங்கைத் தீவில் ஒரு போதும் வாழ்ந்திராத சிங்கத்துக்குப் பதிலாக, சிங்கள மக்களினதும் தமிழர்களினதும் பூர்வீக நிலங்களில், இலங்கைக் காடுகளின் அரசனாக வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுத்தைப் புலியை தேசிய விலங்காகத் தேர்வு செய்திருந்தால் தமிழர்கள் தங்களுக்கெனத் தனியான அடையாளங்களைத் தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள்.

கடந்த முப்பது ஆண்டுகாலப் போரில் இரண்டு தரப்புக்களுமே பாரிய இழப்புக்களைச் சந்தித்த பின்பும் கூட அரசு வரலாற்றுத் தவறுகளை உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் குறித்தும் பேசிவாறு, இனங்களுக்கு இடையேயான விரிசலையே மேலும் மேலும் அதிகரிக்கச் செய்து வருகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=79298

இதைச்சொல்பவர்கள் அங்குள்ள மக்கள்

நாம் பேசாதிருப்போம் என்பதற்காக சண்டைக்கு வருகின்றீர்கள்

Edited by விசுகு

  • தொடங்கியவர்

சத்தமில்லாமல் நடந்து வருகின்ற சில முக்கிய நிகழ்வுகளைப் பற்றிய ஒரு முன்னோட்டம்தான் இந்தக் கட்டுரை. இதை இங்கே எழுதியருப்பதற்கு காரணம் இருக்கிறது. விரைவில் இந்தப் பிரச்சனை பெரிதாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அந்த நேரத்தில் ஏற்படக் கூடிய குழப்பங்கள் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் முற்று முடிவான இறுதி அத்தியாயத்தை எழுதி விடக் கூடும்.

ஆகவே உண்மை என்ன என்பதை மெதுவாக சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது.

நம்புங்கள்! ஒரு முக்கியமான போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. சிறிலங்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுபவர்களுக்கு எதிரான போராட்டம் அது. இதில் வெற்றி பெறுவது முக்கியம். இதில் வெற்றி பெறாது விட்டால், எமக்கு என்றுமே மீட்சி இல்லை.

கருணாநிதி போன்று இதை "சகோதர யுத்தம்" என்ற கண்ணாடிக்குள்ளால் பார்க்க வேண்டாம். இந்த நேரத்தில் விரக்தியும் தேவையில்லை. ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வருகின்ற குழப்பங்களுக்கு முடிவு கட்டுகின்ற நல்ல விடயமே அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

முக்கிய குறிப்பு: "றோ"விற்கு தெரியாத எதுவும் இந்தக் கட்டுரையில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எமது தேச விடுதலைப் போராட்டம் தலைமறைவுப் போராட்டமாக இருந்த காலத்தில் இருந்த அளவு அச்சுறுத்தலை அது வெளிப்படையான போராட்டமாக மாறிய போது சந்தித்திருக்கவில்லை.

பிரபாகரன் பங்கர் திருமகன் என்று சொல்லி.. எள்ளி நகையாடி.. அவரை எதிரிக்கு இரையாக்க முனைந்தோர் பலர்.

அந்த வகையில் இன்றைய உள்நாட்டு.. மற்றும் சர்வதேச பயங்கரவாத குற்றச்சாட்டுக்களோடு ஆயுத பலத்தையும் இழந்து நிற்கும் விடுதலைப்புலிகள்.. பற்றிய இவ்வாறான கட்டுரைகளின் உள்நோக்கம் என்பது.. றோ அண்மையில் வெளியிட்ட புலிகள் மீண்டும் திரள்கிறார்கள்.. என்பதற்கு சமனாக இருக்கிறது.

தயவுசெய்து ஒன்றை உணர்ந்து கொள்ளுங்கள். புலிகள் உங்களுக்காக போராடியதும் இன்றி வழிகாட்டியும் விட்டுச் சென்றுள்ளனர். ஏன் உங்கள் சுயநலப் பிழைப்பு வாதத்திற்கும் தம்மை தம் உயிர்களை அர்ப்பணித்துவிட்டுச் சென்றுள்ளனர்.

மேலும் எதை அவர்களிடம் எதிர்பார்கிறீர்கள். அவர்கள் காட்டிய அரசியல் பாதையை பின்பற்றிப் போக நில்லுங்கோ அது தவறல்ல. ஆனால் புலிகள் என்ன செய்கிறார்கள் என்ற ஆராய்ச்சியை விடுங்கோ. அதை விட பல வேலைகளை நாம் மக்கள் எதிரியின் திட்டங்களை முறியடிக்க செய்ய இருக்கிறது. அவற்றை கண்காணியுங்கோ.. கட்டுரைகளில் சொல்லுங்கோ. மக்களை விழிப்புணர்வு செய்யுங்கோ. அது போதும்.

புலிகளை பலப்படுத்தனும் என்றால்.. மக்கள்.. செயற்பாட்டாளர்களாக வேண்டும். மக்கள் விடுதலைக்காக தாமாக உழைக்க வேண்டும். புலிகள் 35 ஆண்டுகள் உழைத்த போதும். அவையை விடுங்கோ. அவர்கள் செய்த தியாகங்கள் போதும். எனி மக்கள் நீங்கள் போராடுங்கோ. உங்களின் விடுதலையை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கோ. இன்றேல் நாடு நாடாக அகதியாகி பின்னர் பிரஜா உரிமைகள் வாங்கி.. கொலிடேக்கு ஊருக்கு போய் வெட்டி பந்தா காட்டிற.. அடிமையாகக் கிடக்கப் போறம் என்று முடிவு கட்டிட்டால் கவுண்டு கிடவுங்கோ..! கட்டுரைகள் எழுதி காட்டிக் கொடுத்தது போதும்..! :):(

Edited by nedukkalapoovan

எமது தேச விடுதலைப் போராட்டம் தலைமறைவுப் போராட்டமாக இருந்த காலத்தில் இருந்த அளவு அச்சுறுத்தலை அது வெளிப்படையான போராட்டமாக மாறிய போது சந்தித்திருக்கவில்லை.

பிரபாகரன் பங்கர் திருமகன் என்று சொல்லி.. எள்ளி நகையாடி.. அவரை எதிரிக்கு இரையாக்க முனைந்தோர் பலர்.

அந்த வகையில் இன்றைய உள்நாட்டு.. மற்றும் சர்வதேச பயங்கரவாத குற்றச்சாட்டுக்களோடு ஆயுத பலத்தையும் இழந்து நிற்கும் விடுதலைப்புலிகள்.. பற்றிய இவ்வாறான கட்டுரைகளின் உள்நோக்கம் என்பது.. றோ அண்மையில் வெளியிட்ட புலிகள் மீண்டும் திரள்கிறார்கள்.. என்பதற்கு சமனாக இருக்கிறது.

தயவுசெய்து ஒன்றை உணர்ந்து கொள்ளுங்கள். புலிகள் உங்களுக்காக போராடியதும் இன்றி வழிகாட்டியும் விட்டுச் சென்றுள்ளனர். ஏன் உங்கள் சுயநலப் பிழைப்பு வாதத்திற்கும் தம்மை தம் உயிர்களை அர்ப்பணித்துவிட்டுச் சென்றுள்ளனர்.

மேலும் எதை அவர்களிடம் எதிர்பார்கிறீர்கள். அவர்கள் காட்டிய அரசியல் பாதையை பின்பற்றிப் போக நில்லுங்கோ அது தவறல்ல. ஆனால் புலிகள் என்ன செய்கிறார்கள் என்ற ஆராய்ச்சியை விடுங்கோ. அதை விட பல வேலைகளை நாம் மக்கள் எதிரியின் திட்டங்களை முறியடிக்க செய்ய இருக்கிறது. அவற்றை கண்காணியுங்கோ.. கட்டுரைகளில் சொல்லுங்கோ. மக்களை விழிப்புணர்வு செய்யுங்கோ. அது போதும்.

புலிகளை பலப்படுத்தனும் என்றால்.. மக்கள்.. செயற்பாட்டாளர்களாக வேண்டும். மக்கள் விடுதலைக்காக தாமாக உழைக்க வேண்டும். புலிகள் 35 ஆண்டுகள் உழைத்த போதும். அவையை விடுங்கோ. அவர்கள் செய்த தியாகங்கள் போதும். எனி மக்கள் நீங்கள் போராடுங்கோ. உங்களின் விடுதலையை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கோ. இன்றேல் நாடு நாடாக அகதியாகி பின்னர் பிரஜா உரிமைகள் வாங்கி.. கொலிடேக்கு ஊருக்கு போய் வெட்டி பந்தா காட்டிற.. அடிமையாகக் கிடக்கப் போறம் என்று முடிவு கட்டிட்டால் கவுண்டு கிடவுங்கோ..! கட்டுரைகள் எழுதி காட்டிக் கொடுத்தது போதும்..! :icon_idea::unsure:

நானும் நெடுக்கலபோவான் அவர்களின் கருத்தை ஆதரிக்கிறேன். நன்றி நெடுக்ஸ்.

எதையும் இல்லை எண்டு பாக்காமல் இருக்கும் பிரச்சினைகளை கொஞ்சமாவது தெரிந்து கொள்ளுங்கள்...

http://kuma.lunarservers.com/~pulik3/2010/12.2010/22.12/VOT%20ARIKAI%20HACKING%20OK.mp3

பிரச்சினையே இல்லாமல் எங்கும் எதுவும் இல்லை... ! அப்படியும் பெரும்பான்மையாக நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கின்றோம்.. எல்லாரின் நோக்கமும் ஒண்றை நோக்கித்தான்... அப்படி இருக்கும் மக்களுக்குள் இருந்து தனக்கு சார்ப்பான ஒண்றை எதிரி எதிர்பார்க்கின்றான்... குறைந்தது குழப்பங்களை கண்டு மக்கள் கொஞ்சக்காலமாவது மௌனமாக இருக்க வேண்டும் எண்று எதிர்ப்பாக்கின்றான்... அப்படி எங்களுக்குள் குழப்பம் செய்வதுக்கு எண்று ஒரு கூட்டம் எங்களுக்குள் எதிரியின் ஏற்பாட்டில் ஊடுருவி இருக்கின்றது... இதை உணர்ந்து கொள்ளுங்கள்...!

பிரித்தானியாவில் இருக்கும் ஒரு வானொலி( தேசியத்துக்காக உழைக்கின்றோம் எண்று மார்தட்டும் வானொலி) புலிகளின் குரல் வானொலியின் இணையத்தளம் முடக்க பட்டு சில மணிகளில் ஒரு செய்தியை வெளியிடுகிறது... புலிகளின் குரல் வானொலி எதிரியும் கையுக்குள் இருந்து செயற்படுகின்றது எண்று...

ஆக புலிகளின் குரலை தமிழ் மக்கள் நம்பக்கூடாது எண்று திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாகவே பார்க்க வேண்டி உள்ளது...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

எதையும் இல்லை எண்டு பாக்காமல் இருக்கும் பிரச்சினைகளை கொஞ்சமாவது தெரிந்து கொள்ளுங்கள்...

பிரச்சினையே இல்லாமல் எங்கும் எதுவும் இல்லை... ! அப்படியும் பெரும்பான்மையாக நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கின்றோம்.. எல்லாரின் நோக்கமும் ஒண்றை நோக்கித்தான்... அப்படி இருக்கும் மக்களுக்குள் இருந்து தனக்கு சார்ப்பான ஒண்றை எதிரி எதிர்ப்பார்க்கின்றான்... குறைந்தது குழப்பங்களை கண்டு மக்கள் கொஞ்சக்காலமாவது மௌனமாக இருக்க வேண்டும் எண்று எதிர்ப்பாக்கின்றான்... அப்படி எங்களுக்குள் குழப்பம் செய்வதுக்கு எண்று ஒரு கூட்டம் எங்களுக்குள் எதிரியின் ஏற்பாட்டில் ஊடுருவி இருக்கின்றது... இதை உணர்ந்து கொள்ளுங்கள்...!

தத்தமது பொறுப்புக்களை உணர்வோம்

காலம் வரும்வரை..

தமிழீழத்துக்கான தேவையை சிங்களம் பெருப்பித்தபடியேதான் இருக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.