Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்கள மேலாதிக்கத்தை ஏற்றுக் கீழ்ப்படிவதற்கு ஈழத் தமிழர் தேசம் தயாராக இல்லை: ருத்திரகுமாரன்

Featured Replies

சிங்கள மேலாதிக்கத்தை ஏற்றுக் கீழ்ப்படிவதற்கு ஈழத் தமிழர் தேசம் தயாராக இல்லை: ருத்திரகுமாரன்

நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதிய ஆண்டு மலரும் இத்தருணத்தில் தமிழ் ஈழ, தமிழக மற்றும் உலகத் தமிழ் மக்களுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

கடந்து சென்ற 2010ஆம் ஆண்டில் நாம் திட்டமிட்டபடியே நாடு கடந்த தமிழ் ஈழ அரசை மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கினோம். நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தினைப் பொறுத்தவரை மலரும் இப்புதிய ஆண்டு தனது செயற்பாடுகளை விரிவுபடுத்திச் செல்வதற்கான ஆண்டாக அமைகிறது. அமைக்கப்பட்டுள்ள பத்து அமைச்சசகங்களும் தனித்தனியான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்துச் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன.

இன்றைய புத்தாண்டுத் தினத்தில் நாம் வழங்கும் செய்தியாக நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கும் தாயகத்துக்கும் இடையிலான தொடர்பு தற்போதய சூழலில் எத்தகையதாக அமையமுடியும் என்பது குறித்து சில கருத்துகளை பதிவு செய்ய விரும்புகிறோம்.

நமது பாரம்பரியத் தாயகம் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்குப் பகுதியில் அமையப் பெற்றது. நமது தேசத்துக்கான அரசு இத் தாயக பூமியிலேயே அமையப்போகிறது. நமது பூமி சிங்கள பௌத்த இனவாதக் குழுவினரால் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஈழத் தனியரசினை அமைப்பதற்காக நாம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் சிங்களத்தின் பிடிக்குள் வாழும் மக்களால், அரசியல் தலைமைகளால் பங்குகேற்பதோ அல்லது இணைந்து கொள்வதோ தற்போதைய சூழலில் முடியாத காரியம் என்பதனை நாம் தெளிவாகப் புரிந்து கொள்கிறோம்.

இலங்கைத் தீவில் சிங்கள பௌத்தத்தின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கீழ்ப்படிவதற்கு ஈழத் தமிழர் தேசம் தயாராக இல்லை. இதனைத் தாயக மக்கள் தமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புகளிலும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

தேவையினைப் பொறுத்து தாயகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு உறுதுணையான போராட்டங்களை இலங்கைத்தீவுக்கு வெளியே முன்னெடுக்கவும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம் ஆவன செய்யும்.

தாயக மக்களின் சமூக பொருளாதார வாழ்வு உறுதியாகக் கட்டியெழுப்பப்படுவதில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம் பெரும் அக்கறை கொண்டுள்ளது. தற்போதய சூழலில் நேரடியாக நமது தாயக மக்களை நாம் உதவிகளுடன் அணுக முடியாமல் இருந்தாலும்கூட அவர்களது சமூக பொருளாதார வாழ்வு கட்டமைக்கப்படுவதில் இரு வகை வாய்ப்புக்களை நாம் கவனத்திற் கொண்டுள்ளோம்.

ஒன்று, சிங்களத்தின் சூழ்ச்சிக்குள் சிக்கிக் கொள்ளாது அதேவேளையில் அங்கு கிடைக்கக்கூடிய சிவில் வெளியினைப் பயன்படுத்தி தனிப்பட்ட முறையிலும் மற்றும் புலம்பெயர் மக்கள் மத்தியில் இயங்கும் பல்வேறு வகையிலான அமைப்புகள் தாயகத்தில் மேற்கொண்டுவரும் கல்வி, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகள் ஊடாக தாயக மக்களின் சமூக பொருளாதார வாழ்வினைப் பலப்படுத்துவது.

இரண்டாவதாக, சர்வதேசரீதியிலான அமைப்புக்களுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி நமது தாயக மக்களுக்கு உதவிகள் சென்றடைவதில் அனைத்துலக சமூகத்தினைக் கூடுதலாக ஈடுபடுத்துவது.

புதிய ஆண்டில் தனது முயற்சிகளை வேகப்படுத்;த நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுடன் தம்மை இணைத்துக் கொள்ள முன்வருமாறு தமிழ் ஈழ, தமிழக, உலகத் தமிழ் மக்களிடம் நாம் இன்றைய தினத்தில் வேண்டுதல் செய்கிறோம்.

இவ்வாறு ருத்திரகுமாரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=46197

வாய்ச் சவடாலில் வீரர்களடி!!!

ஆமை வேகத்தில் நகரும் நாடுகடந்த அரசு - புது வருடத்துக்கும், தைப்பொங்கலுக்கும் அறிக்கை விட்டால் சரி என வாழ்வது கொடுமையிலும் கொடுமை.

ஏதாவது விக்கி லீக்சும், சனல் 4 களும் போர்க் குற்றங்களை வெளிப்படுத்திக்கொண்டிருக்க நட்சத்திர விடுதிக் கூட்டத்துக்காக ஏங்கித் தவிக்கும் நாடுகடந்த அரசு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறது.

கையாலாகாததுகள் என்ற பட்டத்தை பெறும் காலம் தொலைவில் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2009 மே 19 .இன் பின்பு இந்த உருத்திரகுமாரனின் நிலைப்பாடும்: செயற்பாடும் ?????????????????????????????

வாய்ச் சாவடலுடன் ஏதோ தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தமக்குத் தெரிந்த வழிகளில் சாகவிடாது முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

கேபியின் கையாள், சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின் நிகழ்ச்சி நிரலில் இயக்குகிறார்கள் என்ற துரோக முத்திரை குத்தல்களிற்கும் மத்தியில் மாவீரர்கள் கொண்ட இலட்சியத்திற்காக ஏதோ ஒர் வழியில் உழைக்கும் அவர்களிற்கு நிச்சயம் தலை வணங்க வேண்டும்.

தமக்குப் பிடிக்காதவர்களை, கேபியின் ஆட்கள், துரோகிகள் எண்டு கூறி தமிழினத்தைக் கூறு போட்டுக் கொண்டிருப்பதைத் தவிர தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான எந்த முயற்சியையும் செய்யாத சில அறிவற்ற ஜென்மங்களுடன் ஒப்பிடுகையில் நாடு கடந்த தமிழீழ அரசினைச் சேர்ந்தவர்கள் பல நூறு மடங்கு மேலானவர்கள். தற்போது சிறிலங்கா அரசை விட நாடுகடந்த அரசை முடக்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு ஒரு கும்பல் தேசியத்தின் பெயரில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழினத்தைக் கூறுபோடும் விதமான இவர்களின் செயற்பாடுகள், யாரின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இவர்கள் செயற்படுகிறார்கள் என்ற ஐயத்தை மக்கள் மத்தியில் அண்மைக் காலத்தில் ஏற்படுத்தி மக்களைச் சற்றி விழிப்படையச் செய்து வருகிறது.

இந்த அறிவற்ற ஜென்மங்களின் வசை பாடல்களிற்கும் மத்தியில் தமது செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் நாடு கடந்த தமிழீழ அரசும் அதன் தலைமை அமைச்சரும் தமது செயற்பாட்டை இன்னும் வேகப்படுத்தி, விடுதலைப் போராட்டத்தை மீளவும் புத்துயிர் ஊட்டி இலட்சியத்தை வெல்வதற்கு உழையுங்கள். உங்களின் வேகமான, நேர்மையான செயற்பாடுகளே உங்களிற்கான மக்களின் ஒத்துழைப்புக்களை ஆதரவினைப் பெற்றுத் தரும். இந்தக் குழப்ப வாதிகளில் கூக்குரல்களை அடக்கச் செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதுள்ள நிலையில் நாடு கடந்த அரசாங்கம் ஒன்று மட்டுமே.... தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக தெரிகின்றது.

அவர்களின் வேகம் போதவில்லைப் போல் தெரிந்தாலும், அவர்களைக் கண்டு சிங்களம் பயப்படும் நிலையை காணக்கூடியதாக உள்ளது.

ஆகவே அவர்களின் செயல்பாடுகளை பகிரங்கப் படுத்தி, சிங்களத்தை உசார் நிலையில் வைக்க முயலாதீர்கள்.

நடந்த போராட்டத்தில், எமக்கு தோல்வி ஏற்பட்டதற்கு... பலவற்றை இணையத்தில் விவாதித்ததும் காரணங்களில் ஒன்றாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலையில் தமிழீழம் என்ற கருத்துருவாக்கத்தை தக்க வைப்பதே பெரும் வெற்றியாகும்.சிறிலங்கா அரசம் இந்திய அரசும் அதன் செயற்பாட்டாளர்களை கண்டு அஞ்சவில்லை.ஏனெனில் செயற்பாட்டாளர்கள் எல்லோரும் எப்போதும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை.அவர்களிற் சிலரை விலைக்கு வாங்குவதும் கடினமான காரியமில்லை.புலிகளின் உறுப்பினர்களையே விலைக்கு வாங்கியவர்களுக்கு இது ஒன்றும் பெரிய விடயமில்லை.ஆனால் தமிழீழம் என்ற கோட்பாடு மக்களிடத்தில் நீர்த்துப் போகாமல் இருப்பதற்கு இப்படியான அமைப்பு ஒன்று அவசியமானது ஆகும்.அந்த கருத்துருவாக்கம் தக்க வைக்கப்படுமானால் இந்த உலக ஓட்டத்தில் எமக்கான காலம் வரும்போது சர்வதேசத்திற்கு எங்கள் தேவை புவியியல் அரசியல் பொருளாதார அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்திற்காக அவசியம் ஆகும் பொழுது எமது இலட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ளலாம்.2000 ஆண்டுகளுக்கு மேலாக நாதியற்று அலைந்த பொழுதிலும் தங்களுக்கான தேசம் ஒன்று இருக்கிறது அதை எப்படியாவது மீட்க வேண்டும் என்ற யூதர்களின் அடி மனதில் பதிய வைக்கப்பட்ட கருத்தே இன்று இஸ்ரேல் என்ற தேசமாக உலகில் நிலைபெற்றிருக்கிறது.நாங்கள் எங்கள் மண்ணைப் பறி கொடுத்து 500 அண்டுகளே ஆகின்றன.நாம் எமக்கான தேசம் ஓன்றிருக்கிறது என்பதை எமது பிள்ளைகளுக்கு சந்ததி சந்ததியாக சொல்லி வருவோம்.எமது மொழியை அழியவிடாது அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்போம்.சிறிலங்கா மீதான போர்க்குற்ற விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுப்போம். மாவீரர்களை மனதில் நிறுத்துவோம்.எல்Nhரும் ஒற்றுமையாக ஓரணியில் எமது தேவையை உலகுக்கு தொடந்து சொல்லுவோம்.ஒரு நாள் வரும். அது நமக்கான நாளாக மலரும்.இந்தியா மொழிவழி மாநிலங்களாக உடையும் அப்போது உலகில் தமிழருக்கு 2 தேசங்கள் இருக்கும்.

... நேற்றைய தினம் ஒரு தூணை(?) சந்தித்தேன்! கதைத்துக் கொண்டு போகும்போது ... புலம்பெயர் தமிழ் ஊடகங்களின் கதையும் வந்தது ...

.... ஐ.பி.சி ..

... அது விலை போட்டுது! இனி நம்ப இயலாது அதை, அவங்கள் காசுக்கு ஏதும் செய்வாங்கள்!( ஆமா விலைபோட்டுதோ, வித்தனீங்களோ??? யாரின் கையில் இருந்தது??? ஏன் வைத்திருக்க முடியவில்லை???? காசு கஷ்டமா???...) ...

... சரி, GTV ..

.... அவங்கள் பச்சக்கள்ளர்கள்! நல்லா நடிக்கிறாங்கள், ... ....

... இப்படியே கதை சுத்திச் சுழண்டு தேசிய நினைவெழுச்சி நாள் 2010இல் வந்து நின்றது .. சொன்னார் ..

... இம்முறை GTVக்குத்தான் லண்டனில் நடந்த தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வை ஒளி/ஒலிபரப்ப கொடுத்தனாங்கள், ஆனால் அவையள் சொல்வழி கேக்கினமில்லை, உருதிரகுமாரை தொடர்ந்து கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கப் போயினமாம், அதாலை அவையளுக்கு கொடுக்கிறதை அண்டக்கட் பண்ணீட்டம்!!!!! தீபம்தான் ஒலிபரப்பியது!!!

... ஆஆஆ எனக்கு தெரியாது தீபம் ஒலிபரப்பியது பற்றி! அப்ப தீபம்????

... ????? முழித்தார்!!!(எனக்கே இவர் தீபத்தை பற்றி பல பல தடவைகள் பல கதைகள் சொன்னவர்!!!!)

.... இதுதான் இன்று எங்கள் புலத்து தமிழ்த்தேசியத்துக்கான தேசியவாதிகளின் செயற்பாடுகள்!!!!!!!!??????

.... கடந்த சில மாதங்களுக்கு முன் லண்டனிலுள்ள சிங்கள தூதரக/கேபி கும்பல் இணை அழைப்பின் பேரில் சிலர் இலங்கை சென்று படம் காட்டியதும், அதனை ஒரு வைத்தியர் தமிழ்நெற்றில் போட்டுடைத்ததும் அணைவருக்கும் தெரியும்!!! அப்பயணத்தில் மிக முக்கியஸ்தகராக இலங்கை சென்றவர் "தீபம் ரீவியின்" ஒரு மிக முக்கிய நிர்வாகி!!! அது மட்டுமல்ல இன்றும் தீபம் ரீவியில் பணி புரிபவர்களோ, அன்றி அதன் நிர்வாகத்தில் இருக்குப்பவர்கள் ஏறக்குறைய அணைவருவே தமிழ்த்தேசியத்துக்கு எதிராக கடந்த காலங்களில் செயற்பட்டவர்களும், இன்று செயற்படுபவர்களுமே!! ...

... ஆனாலும் எம் புலத்து தமிழ்த்தேஇஅயத்தை குத்தகைக்கு எடுத்தோரின் ... புலத்து காஸ்ரோக்கள் ... தெரிவு ... தீபம் ரீவியே!!!

இனி தீபம் ரீவி தமிழ்த்தேசியத்தின் ரீவி!!!???? <_<

  • கருத்துக்கள உறவுகள்

:( நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை எதிர்ப்பதால் என்ன பயனை இவர்கள் அடையப் போகிறார்கள் என்று தெரியவில்லை.முள்ளிவாய்க்காலில் அழிக்கப்படுமவரை ஆயுதப்போராட்டம் 30 வருடங்கள் தான்டித்தான் ஒரு நிலைக்கு வந்திருந்தது. நாடுகடந்த அரசாங்கம் இப்போதுதான் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே நாளையே ஈழம் பெற்றுத்தருவார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு. சில செயற்பாடுகளை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்ய முடியாது.

பாலஸ்த்தீனர்கள் சுமார் 60 - 70 வருட கால போராட்டத்தின்பின்னர் இப்போதுதான் தனிநாட்டுப் பிரகடணம் பற்றி ஆராய்ந்து வருகிறார்கள். ஆகவே எமது செயற்பாடுகளுக்கு புறக் காரணிகள் ஏதுவாக அமைந்து வரவேன்டும். அதுவரையிலும் எமது இலட்சியத்தைக் கைவிடாது தொடர்ந்து முயற்சி செய்வதே நல்லது.

அதை விடவும், இன்று நாடுகடந்த அரசைத்தவிர எமக்கு வெளிப்படையாக யார் இருக்கிறார்கள் எமது குரலை வெளிப்படுத்த??

வாய்ச் சவடாலில் வீரர்களடி!!!

ஆமை வேகத்தில் நகரும் நாடுகடந்த அரசு - புது வருடத்துக்கும், தைப்பொங்கலுக்கும் அறிக்கை விட்டால் சரி என வாழ்வது கொடுமையிலும் கொடுமை.

ஏதாவது விக்கி லீக்சும், சனல் 4 களும் போர்க் குற்றங்களை வெளிப்படுத்திக்கொண்டிருக்க நட்சத்திர விடுதிக் கூட்டத்துக்காக ஏங்கித் தவிக்கும் நாடுகடந்த அரசு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறது.

கையாலாகாததுகள் என்ற பட்டத்தை பெறும் காலம் தொலைவில் இல்லை.

2009 மே 19 .இன் பின்பு இந்த உருத்திரகுமாரனின் நிலைப்பாடும்: செயற்பாடும் ?????????????????????????????

வாய்ச் சாவடலுடன் ஏதோ தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தமக்குத் தெரிந்த வழிகளில் சாகவிடாது முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

கேபியின் கையாள், சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின் நிகழ்ச்சி நிரலில் இயக்குகிறார்கள் என்ற துரோக முத்திரை குத்தல்களிற்கும் மத்தியில் மாவீரர்கள் கொண்ட இலட்சியத்திற்காக ஏதோ ஒர் வழியில் உழைக்கும் அவர்களிற்கு நிச்சயம் தலை வணங்க வேண்டும்.

தமக்குப் பிடிக்காதவர்களை, கேபியின் ஆட்கள், துரோகிகள் எண்டு கூறி தமிழினத்தைக் கூறு போட்டுக் கொண்டிருப்பதைத் தவிர தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான எந்த முயற்சியையும் செய்யாத சில அறிவற்ற ஜென்மங்களுடன் ஒப்பிடுகையில் நாடு கடந்த தமிழீழ அரசினைச் சேர்ந்தவர்கள் பல நூறு மடங்கு மேலானவர்கள். தற்போது சிறிலங்கா அரசை விட நாடுகடந்த அரசை முடக்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு ஒரு கும்பல் தேசியத்தின் பெயரில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழினத்தைக் கூறுபோடும் விதமான இவர்களின் செயற்பாடுகள், யாரின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இவர்கள் செயற்படுகிறார்கள் என்ற ஐயத்தை மக்கள் மத்தியில் அண்மைக் காலத்தில் ஏற்படுத்தி மக்களைச் சற்றி விழிப்படையச் செய்து வருகிறது.

இந்த அறிவற்ற ஜென்மங்களின் வசை பாடல்களிற்கும் மத்தியில் தமது செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் நாடு கடந்த தமிழீழ அரசும் அதன் தலைமை அமைச்சரும் தமது செயற்பாட்டை இன்னும் வேகப்படுத்தி, விடுதலைப் போராட்டத்தை மீளவும் புத்துயிர் ஊட்டி இலட்சியத்தை வெல்வதற்கு உழையுங்கள். உங்களின் வேகமான, நேர்மையான செயற்பாடுகளே உங்களிற்கான மக்களின் ஒத்துழைப்புக்களை ஆதரவினைப் பெற்றுத் தரும். இந்தக் குழப்ப வாதிகளில் கூக்குரல்களை அடக்கச் செய்யும்.

இங்கு மேலே எழுதப்பட்ட இரண்டு கருத்துக்களும் தாய் மண்ணில் வாழும் கடுமையாக உழைத்த, உழைத்துக் கொண்டிருக்கும் தமிழர் சிலர் மனதில் மெதுவாக தோன்றிவரும் அபாயகரமான கருத்தை பிரதிபலிக்கிறது என்பது தான் கசப்பான உண்மை.

அதுவும் சிதறிய வீரக் குடும்பங்களுக்கு தமது மிஞ்சிய உறவுகளையும் பராமரித்தபடி, தமது அற்ப சொற்ப உள்ளூர் உழைப்பை வைத்து பல சிரமங்களுக்கு மத்தியில் தொடர்ச்சியாக உதவிவரும் சிலரிடமிருந்து வருவது கசப்பான உண்மை. சரியோ பிழையோ என்பதற்கு அப்பால் இது அவர்களது மனநிலையை காட்டுகிறது.

நாடாளுமன்ற தேர்தலின் பின் ஓடி மறைந்து, உள்ளூராட்சி தேர்தல் நடக்குமென மீண்டும் உற்சாகம் பெற்றிருக்கும் தமிழ் கூட்டமைப்புப் போல் நாடு கடந்த தமிழீழ அரசானது செயற்படுவதை யாரும் எதிபார்க்கவில்லை.

இவை பரவலாக பலருடன் பழகுபவன் என்ற முறையில் தாயகத்தில் அறிந்துகொண்ட, சொல்லப்பட்ட மாறுபட்ட கருத்துக்களின் தொகுப்பு. ஆனால் பயன்படுத்தப்பட்ட பதங்கள் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம்.

இது அவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசில் வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாக ஏற்பட்ட ஆதங்கமே ஒழிய எதிரப்பு என்று எனக்கு தோன்றவில்லை. அவ்வாறு நினைப்பவர்கள் தமது அறிவை மேலும் விசாலப்படுத்திக்கொள்வது நல்லது.

அல்லது நாடுகடந்த தமிழீழ அரசு தமது குறிக்கோள்களை,

(1) வருடத்துக்கு இரண்டு குழுக்களை அமைப்பது,

(2) விசேட தினங்களில் அறிக்கைகளை வெளியிடல்,

(3) விசாரணைக் குழுக்களுக்கு இன்னமும் காலம் தேவை என கோரிக்கை வைத்துவிட்டு வாளாவிருப்பது,

(4) யாராவது தாயக மக்கள் அரசை நம்பி முக்கிய விபரங்களை அனுப்பினால் அது கிடைத்தது என்று அனுப்பியவர்களுக்கு கூறாமல் இருப்பது,

(5) யாராவது பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் போய் பேசுவது

(6) ......

என்று வெளிப்படையாக கூறியிருந்தால் மேற்படி ஆதங்கங்களை தவிர்க்கலாம்.

இதைப் புரிந்து கொள்ளாமல் ஆடிக்கொருக்கா, அமாவசைக்கொருக்கா தமது அறிவை மின்ன வைக்கும் ஒருசில புலத்து தேசிய வாதிகள், கருத்தை கருத்தால் வெல்லும் பக்குவமில்லாது உளறிக்கொட்டும் பாங்கு மிகவும் கேவலமானதாக உள்ளது.

பாலஸ்தீனர்களுடன் ஒப்பிடுபவர்கள், எத்தனை வீதமான பாலஸ்தீனர்கள் நாட்டை விட்டு அகதிகளாக ஓடினர் என்பதையும் ஒப்பிட்டால் நலமாகும். நாட்டை விட்டு ஓடியவர்களில் எத்தனைபேர் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமது பிள்ளைகளில் சிலரை "தொடர்ந்தும்" வழங்கி வருகின்றனர் என்பதையும் ஒப்பிட்டால் நலமாகும். பெரும்பாலான பாலஸ்தீன மக்கள் தமது சனத்தொகையை எவ்வாறு தக்க வைக்க, அதிகரிக்க திட்டமிட்டு செயற்படுகிறார்கள் என்பதையும் ஒப்பிட்டால் நலமாகும். இவை பத்திரிகைகளில் வராததால் உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

மேலும் ஒவ்வொரு தமிழனின் படுகொலையையும் செய்திகளாக பார்த்து, கவலைப்பட்டு, பின்னர் மறந்து போகும் போக்கு மாறி, இஸ்ரேலியரைப் போல் ஒவ்வொரு படுகொலைக்கும் வெகுண்டெழுந்து "செய்ய வேண்டியதை" செய்யும் போக்கு ஏற்படவேண்டும். இதை நியாயப்படுத்த புலம்பெயர் சமூகம் இன்னமும் சாதகமான சூழலை, பலமான பின்பலத்தை உருவாக்காமல் உள்ளது என்பது கசப்பான உண்மை.

குறைந்தது ஒவ்வொரு தமிழனின் படுகொலையையும் சர்வதேச அரங்கின் முன் சமர்ப்பித்து நீதி நியாயம் கோரும் போது மட்டும் தான் ஜனநாயகவாதிகளான கொலைக்காரர்கள் பயங்கரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டவர்கள் உரிமைக்காக போராடும் தர்மப் போராளிகளாகவும் அடையாளம் காணப்படுவார்கள்.

யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதவில்லை. புண்படுத்தினால் மன்னிக்கவும்.

நா. க. த. அ. இனி விரைந்து செயற்படும் என எதிர்பார்க்கலாமா?

நாடுகடந்த அரசு என்னை திரும்பிப்பார்க்கவைக்கவில்லை.

பொங்கியெழுந்த தமிழக ஆதரவு வெள்ளத்தை எப்படி தமிழக முதல்வரின் மனிதச்சங்கிலி போராட்டம் மூலம் விளலுக்கு பாத்திகட்டினமாதிரித்தான் இதுவும் இருக்கு..

:huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.