Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மர்மமாக இறக்கும் பறவைகள் - வேற்றுக்கிரகவாசிகளின் வேலையா..?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_50699974_010940208-1.jpg

அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக பறவையினங்கள் சில மர்மமாக நூற்றுக்கணக்கில் இறந்து விண்ணில் இருந்து விழுகின்றன. ஆராய்ச்சியாளர்களோ மூளையைப் போட்டு கசக்கினது தான் மிச்சம்... இவற்றின் சாவுக்கு விடை இன்னும் புரியவில்லை.

அமெரிக்காவில் மட்டுமன்றி இத்தாலியிலும் இது தொடர்ந்திருக்கிறது.

அமெரிக்காவில் பறவைகளின் இந்த திடீர் உயிரிழப்புக்கு பல வகை காரணங்கள் சொல்லப்பட்டாலும்.. வேற்றுக்கிரகவாசிகளின் பிரவேசக் கலங்களுடனான மோதல் மற்றும் அமெரிக்க இராணுவம் செய்மதிகளின் உதவிகொண்டு செய்யும் உயர்சக்தி ஆயுதங்களின் பரிசோதனைகளின் விளைவென்பது கொஞ்சம் புதிதாகவும் வேறுபட்டும் இருக்கின்றன.

ஆனால் இந்தப் பறவைகள் நோய் தொற்றால் இறக்கவில்லை என்பதை மட்டும் தற்போதைக்கு உறுதி செய்திருக்கிறார்கள். வேறு சிலர் காலநிலை மாற்றத்தை குறை சொல்கிறார்கள். வேறு சிலர் நஞ்சாதல் விளைவு என்கிறார்கள். வேறு சிலர் வானவேடிக்கையால் எழும் ஒலிகளின் விளைவு என்கின்றனர். சிலர் மின்னல் தாக்கம் என்கின்றனர். மேலும் சிலரோ உயர்ந்த இட அழுத்த தாக்கம் என்கின்றனர்.

பறவைகள் மட்டுமன்றி மீன்களும் ஆயிரக்கணக்கில் இறந்திருக்கின்றன.

சரி இப்படி ஒரு மர்மச் சாவு மனித சமூகத்தை எட்டிப்பார்த்தால் என்னாவது.. சிந்தித்துப் பாருங்கள்..???! போற வாற இருக்கிற மனிதர்கள் எல்லாம் காரணம் கண்டுபிடிக்க முதலே பொத்து பொத்தென்று விழ வேண்டியதுதான்.

http://www.bbc.co.uk/news/world-us-canada-12135380

http://www.youtube.com/watch?v=ypUKuvI-uFA

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பறவைகளின் இந்த மர்மசாவைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் திரு.நெடுக்காலைபோவான் அவர்களே? :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பறவைகளின் இந்த மர்மசாவைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் திரு.நெடுக்காலைபோவான் அவர்களே? :rolleyes:

எனது அறிவுக்கு எட்டியபடி.. மூன்று காரணங்களை முதன்மையாக கொள்ள முடிகிறது.

1. சடுதியான காலநிலை மாற்றம். அமெரிக்காவில் ஐரோப்பாவில் கால ஓட்டத்துக்கு மாறான கடும் குளிர் நிலவியதால் சிறிய இனப்பறவைகள்.. சரியான பாதுகாப்பை தேடிச் செல்ல முடியாத சூழல் நிலவிய காரணத்தால் உயிரிழந்திருக்கக் கூடும். பெரிய பறவை இனங்கள் வேற்றிடம் தேடிப் போய்விடக் கூடியன.

2. வளிமண்டல பிராணவாயுவின் அளவில் ஏற்பட்ட வீதாசார மாற்றம்.

இதற்கு காற்றின் திசை மாற்றத்தால் காவப்பட்ட சூழல் மாசு அல்லது வானவேடிக்கைகள் எழுப்பிய புகைகளின் விளைவு கூட காரணமாக இருக்கலாம்.

பறவைகள் மனிதர்களைப் போன்ற ஓர்சீரான உடல் வெப்பநிலை உடையவை. ஆனால் அவை பறப்பதற்கு கூடிய சக்தி தேவை என்பதால் அவ்வற்றின் இரத்தத்தில் பிராணவாயு கரையும் அளவு எம்மைப் போன்றன்றி மாறுபட்டது. அந்த வகையில் குறைந்த பிராணவாயு வீதாசாரம் நிலவிய இடத்தில் குறிப்பாக அதிக பறப்பில் ஈடுபடும் சிறிய வகைப் பறவைகள் உயிரிழந்திருக்க கூடும். பெரிய பறவைகள் பல மணி நேரம் ஓய்வை பெறுபவை. உடல் பாரமான கோழிகள் நீண்ட தூரம் பறக்கா.. காரணம் அவற்றால் அவற்றின் பறப்புக்கு அவசியமான சக்தியை பெறுவதில் சிக்கல் இருப்பதால்.

3. உயர் சக்தி மின்காந்த அலைகளின் தாக்கம். இவை அமெரிக்க செய்மதிகளில் இருந்து கிடைக்கப்பெற்றவையாக இருக்கலாம். அல்லது வானவேடிக்கைகள் எழுப்பிய அதி உச்ச ஒலி அலைகளின் தாக்கம்.

இவற்றைவிட விண்வெளியில் நிகழ்ந்திருக்கக் கூடிய மாற்றத்தின் விளைவாக குறித்த பகுதியில் செறிவாகி இருக்கக் கூடிய கதிர்ப்புக்களின் விளைவாக இந்தச் சிறிய இனப்பறவைகள் இறந்திருக்கலாம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இது கால காலமாய் நடக்கிறது தான்....

இதனைத்தான் தமிழர்கள் முனி அடிச்சு செத்துப் போவதாக சொல்வார்கள்.

இதற்கு இத்தாலியரும், அமெரிக்கரும் தங்கடை கோயில்லை, கிடாய்வெட்டி பூசை செய்தால்....

இரத்தக் காட்டேரி பறவைகளை பலி கேட்காது.

இது கால காலமாய் நடக்கிறது தான்....

இதனைத்தான் தமிழர்கள் முனி அடிச்சு செத்துப் போவதாக சொல்வார்கள்.

இதற்கு இத்தாலியரும், அமெரிக்கரும் தங்கடை கோயில்லை, கிடாய்வெட்டி பூசை செய்தால்....

இரத்தக் காட்டேரி பறவைகளை பலி கேட்காது.

[/quote

]சிறி அண்ணை கோவிலுக்கு கிடை என்று சொல்லி வெட்டுறது ஆனால் நல்ல பிரட்டல் கறியும் தலையில் சூப்பும் வைச்சு சாபிடற்து நாங்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணை கோவிலுக்கு கிடை என்று சொல்லி வெட்டுறது ஆனால் நல்ல பிரட்டல் கறியும் தலையில் சூப்பும் வைச்சு சாபிடற்து நாங்கள் :D

அதில் தப்பில்லை சசி.

கடவுளுக்கு படையல் படைத்ததும் ஆகுது, ஆட்டிறைச்சி கறி சாப்பிட்டதுமாகுது, பறவைகளும் திடீரென்று சாகமாட்டுது.

எப்பிடியோ... கிடாய் ஒரு நாளைக்கு வெட்டப்படப் போற கிடாய் தானே...

அதை கசாப்புக் கடையிலை வெட்டினாலும், வயிரவ கோயில்லை வெட்டினாலும் ஒன்று தான். :lol:

.

Edited by தமிழ் சிறி

"இது கால காலமாய் நடக்கிறது தான்...." - உண்மை

Why Are Birds Falling From the Sky?

But the in-air bird deaths aren't due to some apocalyptic plague or insidious experiment—they happen all the time, scientists say. The recent buzz, it seems, was mainly hatched by media hype. - National Geographic News

http://news.nationalgeographic.com/news/2011/01/110106-birds-falling-from-sky-bird-deaths-arkansas-science/

  • கருத்துக்கள உறவுகள்

"இது கால காலமாய் நடக்கிறது தான்...." - உண்மை

Why Are Birds Falling From the Sky?

But the in-air bird deaths aren't due to some apocalyptic plague or insidious experiment—they happen all the time, scientists say. The recent buzz, it seems, was mainly hatched by media hype. - National Geographic News

http://news.nationalgeographic.com/news/2011/01/110106-birds-falling-from-sky-bird-deaths-arkansas-science/

பூமியில் உள்ள உயிரினம் எப்போதும் ஒரு சம நிலையில் இருக்க வேண்டும்.

மனிதனின் இனப் பெருகத்தால் உணவு, நீர் போன்றவை தட்டுப்பாடாக உள்ளது.

இதே.... நிலையில் டைனோசரும் இந்தப் பூமியில் அழியாமல் இன்னும் இருந்திருந்தால்.... smiley_emoticons_dinosaurier07.gif

டைனோசர் உணவுக்கு எங்கே போவது. பசி, பட்டினி இருக்காமல் டைனோசர், மமூத் போன்ற பெரிய விலங்குகள் வேளைக்கே அழிந்து போனது நல்லது போலை கிடக்குது. :unsure:

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பறவைகள் ஒரே நேரத்தில் இறப்பதாய் இருந்தால் வானில் ஏதாவது மோசமான கதிரியக்கங்கலாய் இருக்கலாம்! என்னவோ எல்லாம் உயிர் போய்த்தான் இறந்திருக்கின்றன. :unsure:

  • 1 month later...

உது மாதிரி ஏதாவது உங்கட உந்த தவளைக்கும் ஏதாவது பண்ண எலாதே.. திரு.நெடுக்ஸ்

பூமியில் உள்ள உயிரினம் எப்போதும் ஒரு சம நிலையில் இருக்க வேண்டும்.

மனிதனின் இனப் பெருகத்தால் உணவு, நீர் போன்றவை தட்டுப்பாடாக உள்ளது.

இதே.... நிலையில் டைனோசரும் இந்தப் பூமியில் அழியாமல் இன்னும் இருந்திருந்தால்.... smiley_emoticons_dinosaurier07.gif

டைனோசர் உணவுக்கு எங்கே போவது. பசி, பட்டினி இருக்காமல் டைனோசர், மமூத் போன்ற பெரிய விலங்குகள் வேளைக்கே அழிந்து போனது நல்லது போலை கிடக்குது. :unsure:

.

நம்மையெல்லாம் திண்டு துலைச்சிருக்கும் சிறி

நல்ல காலம் டைனசோர் எல்லாம் அழிஞ்சது

அதுகள் இல்லாததால நாம இருக்கிறம்

நாம இருக்கிறதால அதுகள் இல்ல :D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.