Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாமனிதர் குமார்பொன்னம்பலம் நினைவு வணக்க கூட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாமனிதர் குமார்பொன்னம்பலம் நினைவு வணக்க கூட்டம்

2011-01-09-06.jpg

மாமனிதர் குமார்பொன்னம்பலம் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட 11 ஆம் ஆண்டு நினைவு வணக்கக் கூட்டம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் சனிக்கிழமை(8-1-2011) அன்று பிற்பகல் 3.00 மணிக்கு இல43, 3ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் உள்ள அதன் அலுவலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.

இந்நிகழ்வு அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.வின்சென்ற் டி போல் தலைமையில் இடம்பெற்றது.

முதலாவது நிகழ்வாக வைத்தியகலாநிதி திருமதி.யோகலட்சுமி குமார்பொன்னம்பலம் அவர்கள் ஈகைச் சுடர் ஏற்றிவைத்தார்.

அவரைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முத்தியஸ்த்தர்களான திரு.ஆனந்தராஐா, திரு.வி.மணிவண்ணன், வைத்தியர்.திருலோகமூர்த்தி, திரு.சுப்பிரமணியம், திரு.குழந்தைவேலு, திரு.ஆறுமுகம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.செ.கஜேந்திரன் ஆகியோரும் மாதகல் கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் திரு.மரியதாஸ், பல்கலைக்கழக மாணவன் தீபன், பல்கலைக்கழக மாணவி யாழினி, மற்றும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.வின்சென்ற் டி போல் ஆகியோரும் ஏற்றி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து மாமனிதர் குமார்பொன்னம்பலம் அவர்களது திருவுருவப்படத்திற்கு அவரது துணைவியார் வைத்திய கலாநிதி திருமதி யோகலட்சுமி குமார்பொன்னம்பலம் அவர்கள் மலர்மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து பிரபல தமிழ் ஆசான் திரு.குழந்தைவேலு அவர்கள் மலர் வணக்க நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து நிகழ்வின் தலைவர் திரு.வின்சென்ற் டி போல் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்.

தலைமை உரையினைத் தொடர்ந்து போரால் பாதிக்கப்பட்ட வறிய பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. தமிழ்த் தேசத்தின் அரசியல் அங்கீகாரத்திற்காக உழைத்து தேசத்திற்காக உயிர் கொடுத்த மாமனிதர் குமார்பொன்னம்பலம், மாமனிதர் நடராஐா ரவிராஐ் ஆகியோர் தேசத்திற்கு ஆற்றிய சேவைக்கு மதிப்பளிக்குமுகமாக 24 மாணவர்களுக்கு தலா 5000ரூபா வீதம் நிதி உதவி வழங்கப்பட்டது.

மாமனிதர் குமார்பொன்னம்பலம் அவர்களது நினைவாக அவரது குடும்பத்தினரால் 12 மாணவர்களுக்கு தலா ஐயாயிரம் ரூபா வழங்கப்பட்டது. மாமனிதர் ந.ரவிராஐ் அவர்களது நினைவாக 12 மாணவர்களுக்கு தலா ஐயாயிரம் ரூபா வழங்கப்பட்டது.

இந்நிகழ்வினைத் தொடர்ந்து நினைவு வணக்க உரைகள் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கயஸ்த்தர்களான திரு.ஆனந்தராஐா, திரு.சுப்பிரமணியம், திரு.சு.மணிவண்ணன், திரு.இளங்கோ ஆகியோரும் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக திரு.கமல் அவர்களும், மாணவிகள் சார்பாக செல்வி.துர்க்கா அவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் உரையாற்றினர்.

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மாமனிதர் குமார்பொன்னம்பலம் அவர்கள் முன்னெடுத்துச் இலட்சியத்திற்காக உறுதி தளராது உழைப்போமென உறுதியெடுத்துக் கொண்டனர். அத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

http://meenakam.com/

தனித்து துணிந்து இயங்கியவருக்கு அஞ்சலிகள்!.

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு வணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கத்தின் குகைகக்குள் இருந்து கர்ச்சித்த புலி

அஞ்சலிகள் ஐயா

தமிழ் உள்ளவரை உம் நினைவிருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு வணக்கங்கள்..!

குமார் பென்னம்பலம் அவர்கள் புலிகளுடன் இனைந்து வேலை செய்ய விரும்பியதாகவும் ஆனால் வெளிவிவகார பொறுப்பு( கிட்ட தட்ட புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் அல்லது வெளிவிவாகர அமைச்சு) பதைவி கேட்டதாகவும் ஆனால் புலிகள் தங்கள் அமைப்பில் சேர வேண்டும் என்று அல்லது பயிற்சி எடுக்க வேண்டும் அண்ட் இனைந்த கால அடிப்படியில் தான் பதவிகள் பொறுப்புகள் கொடுக்க படும் என்று தட்டி கழித்தார்கள் என்று ஒரு கதை உண்டு( ஆனால் உண்மையான் காரணம் மெக்க படித்தவர்களை புலிகள் நம்புவது இல்லையாம்)

Edited by வினித்

  • கருத்துக்கள உறவுகள்

அவரை பரிசில் பல முறை சந்தித்துள்ளேன்.

அவருக்கு அப்படியான எந்த நோக்கமும் இருந்ததாக தெரியவில்லை.

அதைவிட அவர் ஒரு கோடீஸ்வரர். அவருக்கு ஏன் இந்த பதவிகள். மக்களுக்கு செய்யவேண்டியதை எல்லாம் தன்னால் முடிந்தவரை கொழும்பிலிருந்தபடியே செய்வதுதான் அவரது நோக்கமாக இருந்தது. அதனால் வரும் ஆபத்தை அவர் உணர்ந்திருந்தார். இறுதியாக இங்கிருந்து போகும்போதும் கவனம் என்று சொன்னதற்கு எந்த நேரமும் எனது உயிருக்கு ஆபத்து வரலாம். ஆனால் அதை நான் எதிர்கொள்வேன். பயந்து ஓடமாட்டேன் என்று அவரது கம்பீர குரலில் சொன்னது இன்றும் எனது காதுகளில் கேட்கிறது.

அவரை பரிசில் பல முறை சந்தித்துள்ளேன்.

அவருக்கு அப்படியான எந்த நோக்கமும் இருந்ததாக தெரியவில்லை.

அதைவிட அவர் ஒரு கோடீஸ்வரர். அவருக்கு ஏன் இந்த பதவிகள். மக்களுக்கு செய்யவேண்டியதை எல்லாம் தன்னால் முடிந்தவரை கொழும்பிலிருந்தபடியே செய்வதுதான் அவரது நோக்கமாக இருந்தது. அதனால் வரும் ஆபத்தை அவர் உணர்ந்திருந்தார். இறுதியாக இங்கிருந்து போகும்போதும் கவனம் என்று சொன்னதற்கு எந்த நேரமும் எனது உயிருக்கு ஆபத்து வரலாம். ஆனால் அதை நான் எதிர்கொள்வேன். பயந்து ஓடமாட்டேன் என்று அவரது கம்பீர குரலில் சொன்னது இன்றும் எனது காதுகளில் கேட்கிறது.

விசுகு அண்ணா நான் அவர் பதவி ஆசையில் அல்லது பணத்தி காணலாம் என்ற ஆசையில் கேட்டதாகவோ இல்லை அப்படி நான் நினைத்தேன் என்று சொல்லவில்லை ஆனால் அவர் இதய சுத்தியுடன் விரும்பி கேட்டதாக தான் கொழும்பில் அறிந்தேன் ஆனல புலிகள் நப்ப நடப்பது இல்லை தானே அடுத்தது இது புலிகளின் விதிமுறைக்கு முரன் ஆனது தானே அதனால் அவர்கள் மறுக்க உரிமை இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

மா மனிதருக்க வீர வணக்கங்கள் !!!!!!!!!!!!!!!!!

!சிங்கத்தின் குகைக்குள் சPறிய புலி!!!!!!!!!!!!!

0

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

92473185_54d9eeb16a.jpg

மாமனிதருக்கு வீர வணக்கங்கள்.

குமார் பென்னம்பலம் அவர்கள் புலிகளுடன் இனைந்து வேலை செய்ய விரும்பியதாகவும் ஆனால் வெளிவிவகார பொறுப்பு( கிட்ட தட்ட புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் அல்லது வெளிவிவாகர அமைச்சு) பதைவி கேட்டதாகவும் ஆனால் புலிகள் தங்கள் அமைப்பில் சேர வேண்டும் என்று அல்லது பயிற்சி எடுக்க வேண்டும் அண்ட் இனைந்த கால அடிப்படியில் தான் பதவிகள் பொறுப்புகள் கொடுக்க படும் என்று தட்டி கழித்தார்கள் என்று ஒரு கதை உண்டு (ஆனால் உண்மையான் காரணம் மெக்க படித்தவர்களை புலிகள் நம்புவது இல்லையாம்)

அவரை பரிசில் பல முறை சந்தித்துள்ளேன்.

அவருக்கு அப்படியான எந்த நோக்கமும் இருந்ததாக தெரியவில்லை.

அதைவிட அவர் ஒரு கோடீஸ்வரர். அவருக்கு ஏன் இந்த பதவிகள். மக்களுக்கு செய்யவேண்டியதை எல்லாம் தன்னால் முடிந்தவரை கொழும்பிலிருந்தபடியே செய்வதுதான் அவரது நோக்கமாக இருந்தது. அதனால் வரும் ஆபத்தை அவர் உணர்ந்திருந்தார். இறுதியாக இங்கிருந்து போகும்போதும் கவனம் என்று சொன்னதற்கு எந்த நேரமும் எனது உயிருக்கு ஆபத்து வரலாம். ஆனால் அதை நான் எதிர்கொள்வேன். பயந்து ஓடமாட்டேன் என்று அவரது கம்பீர குரலில் சொன்னது இன்றும் எனது காதுகளில் கேட்கிறது.

விசுகு அண்ணை கூறுவது உண்மைதான். குமார் பொன்னம்பலம் தெரிந்தவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதை அவதானிக்கும் சந்தர்ப்பங்கள் சில எனக்கும் கிடைத்திருந்தது. மகனும் சிறந்த ஆற்றல் உடையவர். ஆனால் அவர்கள் மக்கள், சமூக மட்டத்தில் இறங்கி வேலை செய்யாதவரை அரசியலில் நிலைக்க முடியாது. தேர்தலில் போட்டிபோட்டு, கருத்துக்களை பேசிக்கொண்டிருப்பதில் மட்டும் நம்பிக்கை உடையவர்கள். இது தற்கால சூழ்நிலைக்கு பொருத்தமற்றது.

படித்தவர்கள் சம்பந்தமாக வினித்தின் தகவல் ஓரளவு தவறானது. பாலா அண்ணை படிக்காதவரா?

எமது படித்தவர்களிலும் நிறைய குறைகள் இருந்தன, இருந்து வருகிறது.

* முதலாவது மற்றவர் கருத்துக்களை கேட்பதில்லை.

* தாம் தெரிந்தது தான் சரியானது என்ற மமதை அதிகம். முயலுக்கு மூன்று கால்கள் தான். (உ+ம்: பேராசிரியர் என்று கூறிக்கொள்ளும் ஜீவன் கூழ்)

* தாம் சொன்னது தவறென தெரிந்தாலும் அதை சரியென விதண்டாவாதம் செய்யும் மனநிலை கொண்டவர்கள். (உ+ம்: ஜீவன் கூழ்)

* முறையான ஆய்வு மனப்பான்மை குறைவு.

* படிப்பு என்ற மமதையில் ஆதாரங்கள், உண்மையை சுயநலத்துக்கு ஏற்ப திரித்து பேசுவதில் வல்லவர்கள். (உ+ம்: ஜீவன் கூழ்)

* சேர்ந்து, விட்டுக்கொடுத்து, பகிர்ந்து செய்யும் பழக்கம் மிகக் குறைவு. (உ+ம்: ஜீவன் கூழ்)

* பதவி, புகழுக்காக, மற்றவர்களை, இனத்தை காட்டிக்கொடுத்து, பிச்சையெடுக்கத் தயங்காதவர்கள் (உ+ம்: ஜீவன் கூழ்)

இவை எனது சொந்த அனுபவங்களில் பார்த்தவை, அறிந்தவை.

மெத்த படித்தவர்கள் பதில் எழுதுவார்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.