Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனுராதபுரம் சிறையில் தற்போது பாரிய துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டவண்ணம் உள்ளன:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனுராதபுரம் சிறையில் தற்போது பாரிய துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டவண்ணம் உள்ளன:-

24 ஜனவரி 2011

அனுராதபுரம் சிறையில் தற்போது பாரிய துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டவண்ணம் இருப்பதாக சிறையில் இருந்து ஜீரீஎன்னிற்குக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

GTN

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2ஆம் இணைப்பு - அனுராதபுரம் சிறையில் தற்போது பாரிய துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டவண்ணம் உள்ளன:

அனுராதபுரம் சிறையில் தற்போது பாரிய துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டவண்ணம் உள்ளன:-

நேற்று நான்கு மணியிலிருந்து சிறைச்சாலை நிர்வாகத்திற்கு எதிராக கைதிகளினால் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. உண்ணாவிரதம் இருப்பவர்கள் நேற்றிலிருந்து சாப்பாடும் எடுக்காமல் இருக்கிறார்கள். அதனை சிறைச்சாலை நிர்வாகம் கணக்கில் எடுக்காமல் இருக்கின்றது. அதாவது அடிப்படை வசதிகளான நீர் உணவு இருப்பிடம் போன்ற பிரச்சினைகளை வைத்துத்தான உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றது. 48 மணித்தியாலங்கள் கடந்துள்ள போதும் இதுவரையும் சிறைச்சாலை அமைச்சு கூட எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு அடித்து அடக்கச் சொல்லி தகவல் வந்ததாக சிறைச்சாலை நிர்வாகமும் மேலும் சில சிவில் குண்டர்களும் பொலிசாரும் சேர்ந்து கைதிகளுக்கு அடித்து கல்லெறிந்து பிரச்சினைகள் இடம்பெற்றுக் கொண்டுள்ளதுடன் நேரடியாக துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்படுகின்றது.

தமிழ் அரசியல் கைதிகளை விசேட பாதுகாப்பு எனச் சொல்லி தனியாகத்தான் அடைத்து வைத்திருக்கின்றாhகள். கைதிகள் எங்குமே ஓட முடியாத படியாக உள்ள நிலையில் நால்வருக்கு வெடி பட்டு தலையில் ரத்தம் ஓடிக் கொண்டிருக்குது. அவர்களை தூக்கவில்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை உறுதிப்படுத்தமுடியவில்லை.

நான் இப்ப மதிலுக்கு பக்கத்தில் படுத்திருந்துதான் கதைக்கிறன். அரசியல் கைதிகள் எங்கும் ஓட முடியாத நிலை. துப்பாக்கிச் சூடு முற்று முழுதாக எங்களை நோக்கித்தான் வந்து கொண்டிருக்கின்றது. இருவருக்கு காலில் வெடிபட்டும் கிடக்கிறார்கள். அவர்களை ஆஸ்பத்திரிக்கு கோண்டு போவதற்கு கூட வழியில்லை.

GTN

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

Unconfirmed reports said that several more prisoners were feared dead following the shootout inside the Anuradhapura prison this evening. They said authorities were unable to enter the prison premises where the clash had erupted between prisons guards and prisoners.

Nine prison officers and eleven prisoners are receiving treatment at the Anuradhapura hospital, hospital sources said, adding a female prisoner had died following the shootout.

A group of over 50 remand prisoners of the prison launched a fast on Sunday evening on the roof of the prison demanding that the officials provide them with improved living facilities.

டெயிலி மிரரிலிருந்து

'Inmates killed' in Sri Lanka prison shooting

Inmates in Anuradhapura prison have been protesting against 'ill-treatment' by the authorities

Continue reading the main story

Related stories

Legal limbo Tamils beg for mercy or trial

Demand for Sri Lanka crimes probe

Sri Lanka jail term is confirmed

Inmates of a jail in north-central Sri Lanka have accused the prison authorities of shooting dead protesting prisoners.

An inmate at Anuradhapura prison who wished to remain anonymous told the BBC Sinhala service that he saw at least four dead bodies.

Hospital authorities say one person was killed and 24 people who were injured were admitted to hospital.

Police say they are yet to get details of the incident.

The sound of shooting could be heard by the BBC Sinhala service as the inmate was speaking to them.

The inmate said those who sustained injuries went into hiding with gunshot wounds.

Dr WMTD Wijekoon, director of Anuradhapura hospital, told the BBC that eight prison officers are among those injured.

A group of nearly 50 inmates have been staging a fast on the roof of the prison since Sunday accusing the prison authorities of ill-treating the inmates.

Police spokesman Prishantha Jayakody told BBC Sinhala that he is aware of an incident but yet to get the details.

Every attempt to contact the prison authorities so far has not been successful, he said. The BBC also could not obtain a response from prison authorities despite repeated attempts.

http://www.bbc.co.uk/news/world-south-asia-12268829

  • கருத்துக்கள உறவுகள்

(3ம் இணைப்பு) அநுராதபுரம் சிறையில் கலவரம்: உயிரிழந்தோர் தொடர்பில் மாறுபட்ட தகவல்கள்: ஆறு அம்புலன்ஸ் வண்டிகள் விரைவு

.அநுராதபுரம் சிறைச்சாலையில் இன்று மாலை இடம்பெற்ற கலவரம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் படுகாயமடைந்தோர் தொடர்பில் மாறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அசம்பாவித்தின் போது ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு பெண் கைதியே உயிரிழந்தார்.

இதேவேளை, காயமடைந்தோரை ஏற்றி வருவதற்காக ஆறு அம்புலன்ஸ் வண்டிகள் அநுராதபுரம் வைத்தியசாலையிலிருந்து சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தக் கலவரத்தின போது காயமடைந்த 22 பேர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் சற்று நேரத்துக்கு முன்னர் தெரிவித்தன. இதனை இந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகமான டாக்டர் விஜயகோன் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனால், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகமாகவிருக்கலாம் என ஊர்ஜிதமற்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

2ம் இணைப்பு:

இந்தச் சம்பவத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளதாகத் தற்போது கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் அனைவரும் தமிழர்கள் எனவும் நம்பப்படுகிறது.

3ம் இணைப்பு:

அனுராதபுர சிறைச்சாலைக் கலவரத்தில் மூன்று கைதிகள் பலியாகி இருபத்தி மூன்று போ் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வீ. ஆர்.டீ. சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கைதிகள் தரப்பிலிருந்து மாலை 5.30 மணியளவில் கல்லெறித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் பின்பு துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் காயமுற்ற நிலையில் அனுராதபுரம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறைச்சாலையின் பிரதான சிறை அதிகாரி காமினி சில்வா செய்தியாளருக்குத் தெரிவித்துள்ளார்.

ஆயினும் ஸ்தலத்துக்கு அருகில் வசிக்கும் எமது விசேட செய்தியாளரின் தகவல்களின் பிரகாரம், மாலை நான்கு மணி தொடக்கம் உண்ணாவிரதத்தில் இருந்த கைதிகளைத் தாக்குவதற்கான ஏற்பாடுகள் பலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் பின்பு சிறைச்சாலை அதிகாரிகளில் சிலர் சிறைச்சாலை நூலகம் மற்றும் சமையலறை என்பவற்றைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளதுடன், கற்களால் எறிந்தும் சேதப்படுத்தியுள்ளார்கள்.

அதனை சிறைக் கைதிகளே மேற்கொண்டதாக கூறப்படுவது அபத்தமானது என்றும், தான் அதனை சிறைச்சாலைக்கு அண்மையில் இருக்கும் கட்டிடமொன்றின் மேல்மாடியிலிருந்து நேரடியாக அவதானித்துக் கொண்டிருந்ததாகவும் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

அதற்கு மேலதிகமாக அனுராதபுரம் சிறைச்சாலை அமைந்துள்ள அனுராதபுரம்-புத்தளம் பாதையில் மாலையாகும் போது பல புதியவர்கள் நடமாடிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்ததாகவும், அவர்கள் ஒன்றில் குண்டர்களாக அல்லது இராணுவத்தரப்பினராக இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் பேசிக் கொண்டதாகவும் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அந்தவகையில் எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின் பிரகாரம் அனுராதபுர சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் நோக்கிலேயே திட்டமிட்ட ரீதியில் கலவரம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆயினும் கலவரம் குறித்த தகவல்கள் உடனடியாக ஊடகங்களால் வெளிக்கொணரப்பட்ட நிலையில் சதிகாரர்களின் முயற்சி கைகூடாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக பாரிய உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் குறிப்பிடுவது போன்று மூன்று போ் மட்டுமே இறந்துள்ளதாக கூறப்படுவது பொய் என்று குறிப்பிட்ட செய்தியாளர், குறைந்தது ஆறு போ் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்கு மேலதிகமாக பதினொரு கைதிகள் மற்றும் எட்டு சிறைச்சாலை அதிகாரிகள் காயமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்களின் மண்டை உடைக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பும் இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்திருக்கின்றது.

அத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்களில் ஒருவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் காயமுற்றுள்ள ஐவர் கைதிகளோ, சிறைச்சாலை அதிகாரிகளோ அல்லவென்றும் தெரிய வருவதுடன், அவர்கள் யார் என்பது பற்றிய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. பிரஸ்தாப நபர்கள் கைதிகளைத் தாக்குதவற்காக வெளியிலிருந்து தருவிக்கப்பட்ட குண்டர்களாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது..

http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=17859:2011-01-24-15-49-12&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய்க்கிழமை, 25, ஜனவரி 2011 (11:42 IST)

இலங்கை: துப்பாக்கிச் சூட்டில் 6 தமிழர்கள் பலி

இலங்கை அனுராதபுரம் சிறையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றதாகவும், இதில் 6 தமிழ்க் கைதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகி உள்ளன என, இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து அந்த இணையதளங்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் அனுராதபுரம் சிறையில் ஏராளமான தமிழ்க் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தனியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். தமிழ்க் கைதிகள் அடிக்கடி தாகக்கப்படுவதுண்டு. இதை கண்டித்து தமிழ்க் கைதிகள் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள்.

திடீரென தமிழ்க் கைதிகள் மீது சிங்கள அதிகாரிகள் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதையடுத்து அனுராதபுரம் சிறையில் கலவரம் வெடித்தது. அப்போது தமிழ்க் கைதிகள் குறிவைத்து தாக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழ்க் கைதிகள் மீது திடீரென சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதில் ஏராளமான தமிழ்க்கைதிகள் காயம் அடைந்தனர். 6 ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்த சுமார் 20 தமிழ்க் கைதிகள் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்கிடையே ஜெயிலுக்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 தமிழ்க்கைதிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், அந்த 6 தமிழ்க் கைதிகள் பெயர் மற்றும் விபரங்களை வெளியிட சிங்கள அதிகாரிகள் மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இலங்கை சிறைச் சாலைகள் ஆணையர் நாயகம் மேஜர் ஜெனரல் சில்வா கூறுகையில், 3 தமிழ்க் கைதிகள் மட்டுமே பலியாகி உள்ளதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளில் 3 பேர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும்ட தெரிவித்துள்ளதாக அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்க் கைதிகள் பகுதியில் இருந்த தமிழ் நூலகம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

nakkheeran

அடக்கு முறையின் அளவை உணர்த்தி உரிமைக்காக போராடி சாவடைந்த போராளிகள் பொதுமக்கள் அனைவருக்கும் அஞ்சலிகள்... !

மேலும் ஒரு சிறைப்படுகொலை, இன்னுமொரு திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட இன அழிப்பு படுகொலை.

உயிர் துறந்த அனைத்து தமிழ் உறவுகளுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.