Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உண்மை சம்பவம்....:(

Featured Replies

அந்த ஆசிரியர்கள் வாரத்தின் தொடக்கத்தில் கூட அப்படி நடக்கும் என்று யோசித்து இருக்கமாட்டார்கள்... போலிஸ்காரர் இருக்கும் பக்கம் தலைவைத்து கூட படுத்து இருக்கமாட்டார்கள்.. மகாநதி படம் பார்த்து விட்டு சிறையில் இவ்வளவு கொடுமைகள் நடுக்குமா? ஜென்மத்துக்கு சிறைபக்கம் போகவே கூடாது, அந்த பக்கம் தலைவைத்து படுக்க கூட கூடாது என்று வைராக்கியமாக வாழ்ந்து இருக்க வேண்டும்.....

ஆனால் எல்லாம் சடுதியில் நடந்து முடிந்து விட்டது... காரணம் படித்தவர்களுக்கு புத்தி இருக்காது என்பதற்கு நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சி உதாரணம்...

சென்னை எம்ஜியார் ஜானகி கல்லூரியில் படித்த மாணவி திவ்யாவின் தற்கொலையால் நான்கு ஆசிரியர்கள் வாழ்க்கையையே அடியோடு மாற்றிவிட்டது... இவர்கள் வாழ்க்கை மாறியதை பற்றி நான் கவலைப்படவில்லை.. இவர்கள் தவறான அனுகுமுறையால் ஒரு அறியா குருத்து தன் உயிரைமாய்த்துக்கொண்டுவிட்டது.. அந்த பெண் இனி திரும்பவரப்போவதில்லை.. அவள் செய்த குற்றம்.. அவள் மீனவசமுதாயத்தில் பிறந்த பெண் அவ்வளவுதான்..

வகுப்பில் நான்காயிரம் ரூபாய் தொலைந்து போய்விட்டது.. உதாரணத்துக்கு அந்த வகுப்பில் 40 மாணவிகள் இருக்கின்றார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். பணத்தை கண்டுபிடிக்க எல்லா மாணவிகளையும் சோதனைப்போட்டுவிட்டு குறிப்பாக திவ்யா என்ற இந்த பெண் எடுத்து இருக்கலாம் என்று நான்கு ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து ஷெர்லக் ஹோம்மாக மாறி அந்த பெண்ணை சந்தேகப்பட்டு நிர்வானப்படுத்தி சோதனைப்போட்டு இருக்கின்றார்கள்..

40 பெண்களில் அவள் மட்டும்,நிர்வான சோதனையை சந்தித்து இருக்கின்றாள்...

40 பேரையும் நிர்வானபடுத்தி இருந்தால் கதை வேறுமாதரி போய் இருக்கும்...

ஆசிரியர்கள் வேலைக்கு வந்ததுமே எதிரில் உட்கார்ந்து இருப்பவர்கள் அடிமைகள் என்ற மனநிலைக்கு வந்து விடுவதும்.,.. பெரிய புடுங்கிகள் போல முடிவு எடுப்பதும் சிலருக்கு கை வந்த கலை... அது போலான ஆட்களை நான் சந்தித்து இருக்கின்றேன். பழகியும் இருக்கின்றேன்... அவர்கள் வந்தாலே மாணவர்கள் நடுங்க வேண்டும் என்று குரூரமாக நினைப்பவர்கள்.

கருப்பா இருக்கறவன் பொய் சொல்லுவான் வெள்ளையா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்.. இதுதான் காலம் காலமா நம் வாழ்க்கையில் ஊடகங்கள் வழியாக சொல்லப்பட்டு வரும் செய்தி...

சமீபத்தில் கூட பதினாரு என்று ஒரு தமிழ்படம் வந்து ஓடிக்கொண்டு இருக்கின்றது....கல்லூரியில் காதலிக்கும் ஒரு பெண்ணின் அம்மா காரில் வந்து இறங்கி விசாரிக்கும் போது மாணவர்களில் ஒருவன் அந்த பெண்மணியை முதல் முறையாக பார்த்த மாத்திரத்தில் அவுங்க ரொம்ப நல்லவங்க என்று சொல்லுவான் அதுக்கு நண்பன் இப்பதான் முதல் முறையா பார்க்குறே? எப்படி அவுங்க நல்லவங்கன்னு சொல்லற என்று கேட்கும் போது.. அவுங்க காரில் வந்து இருக்கின்றார்கள்.. என்று சொல்லுவான்... உடை,கலர், வாகனத்தை வைத்து நல்லவங்க என்று நம்பும் சமுகம்தான் உலகம் எங்கும்.....

அன்பே சிவம் படத்தில் கமல் மாதவனை பார்த்து சொல்லுவார்.. ஒரு தீவிரவாதி என்னை போல அசிங்கமா இருக்கனும்னு அவசியம் இல்லை.. உங்களை மாதிரி அழகாக கூட இருக்கலாம் என்று சொல்லுவார்...

நான் கல்லூரியில் வேலை செய்த போது எந்த பிள்ளைகளையும் நான் வெறுத்தது இல்லை...

தலைகாய்நதகுடும்ப பெண்தானே என்ன செய்துவிட முடியும்?? என்று அலட்சியத்தின் காரணைமாகவே நான்கு பள்ளி பேராசிரியர்களும் வாயில் பைப் வைக்காத குறையாக ஹோம்ஸ்ஆக மாறி இருக்கின்றார்கள்..

சதா, செல்வி,விஜயலட்சுமி,ஜெயலட்சுமி என்ற நான்கு பேராசிரியர்கள்...

அந்த பெண் தற்க்கொலை செய்து கொண்டதும் போலிஸ் வழக்கம் போல தனது திருப்பனியை செய்து இருக்கின்றது... மக்களின் எதிர்ப்பால் அந்த நான்கு பேராசிரியர்களையும் கைது செய்து இருக்கின்றது... உடனே அந் நால்வருக்கும் நெஞ்சுவலி வந்து இருக்கின்றது...மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு திரும்பவும் புழல் சிறையில் அந்த நான்கு பேரையும் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்க, ஓ ராமா என்று நால்வரும் அழுது இருக்கின்றார்கள்..

சமீபத்தில் ராஜா ஸ்பெக்ட்ராமில் கூஜாவானது போல இவர்களும் திடும் என காலேஜ் போய் கொண்டு இருந்த 4 ஆசிரியர்களை கைது செய்து புழல் சிறைக்கு கொண்டு போக எதுவும் சாப்பிடாமல் கதறி அழுது இருக்கின்றார்கள்... அவர்களை மிரட்டித்தான் சாப்பிட வைத்து இருக்கின்றார்கள். நாங்கள் எந்த பாவமும் செய்யவில்லை என்று கதறி இருக்கின்றார்கள்.. ஆனால் ஒரு பெண்ணை மட்டும் நிர்வாணபடுத்தி சோதனை செய்தது எந்தவிதத்தில் நியாயம்....

அவர்கள் நால்வருக்கும் இரண்டு நாளுக்கு முன் ஜாமின் கிடைத்து இருக்கின்றது...இதில் அந்த பெண் திவ்யா இறக்க போகின்றோம் என்று முடிவு செய்த போது எழுதிய கடித்தத்தில் கூட தன்னை நிர்வாணபடுத்தினார்கள் என்று அந்த பெண் எங்கேயும் குறிப்பிடவில்லை..யாருடைய பேரையும் குறிப்பிடவில்லை... அந்த அளவுக்கு மானத்துக்கும் மரியாதைக்கும் பயந்து வாழ்ந்து இருக்கின்றார்....அந்த ஏழைப்பெண் ...இறந்த போதும் தன்னை அப்படி யாரும் நினைத்து விடக்கூடாது.. அந்த கண்ணோட்டத்தில் தன்னை பார்த்து விடக்கூடாது என்று கடிதம் எழுதி நினைத்து அந்த கடிதம் முற்று பெறாமலேயே போய்விட்டது.. அதனால் அந்த நால்வரும் தப்பித்து விடுவார்கள்..

நால்வரும் இளம் பெண்களாகத்தான் இருக்க வேண்டும்..அப்படி இருந்தும் ஒரு இளம் பெண்ணின் மனஉணர்வை புரிந்து கொள்ள முடியாமல் போனது பெரும் சோகம்.... சிறையில் போட்டதுக்கே கதறி இருக்கின்றீர்கள்... நால்வர் முன் அந்த பெண் நிர்வாணமாக உடைகளை களையும் போது அந்த பெண் கூச்சத்திலும், அவமானத்திலும் எப்படி கூசி போய் இருப்பார்....என்பதை எண்ணி பார்க்கவேண்டும்...

அவர்கள் வேண்டும் என்று இதை செய்யவில்லை என்று வதாடலாம்.. ஆனால் தலைகாய்ந்த பெண் என்றால் எந்த அட்வான்டேஜ்ம் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் ஒரு சில ஆசிரியர்களின் எண்ணத்துக்கு சாவு மணி அடித்து இருக்கின்றார் திவ்யா.........

ஒரு விமானத்துக்கு விபத்து ஏற்ப்பட்டுவிட்டால் அந்த விபத்துக்கான காரணத்தை உலகம் முழுமைக்கும் உள்ள விமான நிறுவனங்களுக்கு அனுப்பி அடுத்து இது போலான தவறு நடைபெறக்கூடாது என்று கிளாஸ் எடுத்து விட்டு வருவார்கள்... காரணம் பல கோடி முதலீடு... பல உயிர்கள் பயணிக்கும் பிரச்சனை... ஆனால் இது போன்ற விஷயத்தை மற்ற கல்லூரிகள் இந்த செய்தியை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு இது போலான தவறு திரும்ப நடைபெறாமல் இருக்க எல்லா முயற்சியும் செய்ய வேண்டும்.

சரிகாஷாவுக்கு கொடுத்த முக்கியத்துவம் கூட ஊடகங்கள இந்த அப்பாவியின் தற்கொலைக்கு பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை காரணம்... சாவு நடந்தது மீனவ குப்பத்தில்.... இறந்து போன அந்த பெண் பைனல் இயர்.. அடுத்த வருடத்தில் எதாவது கம்பெனிக்கு வேலைக்கு போய் அந்த பெண் மாதம் பத்தாயிரம் சம்பாதித்தால் கூட அந்த குடும்பம் அடுத்த வருடத்தில் நல்ல சோறு சாப்பிட்டு இருக்க முடியும்.... எல்லாம் மண்ணா போச்சு.............

இந்த விஷயத்துல எனக்கு இன்னோரு பொண்ணு மேல கோபம் வருது.... பத்திரம பணத்தை வச்சிக்க துப்பு இல்லைன்னா என்ன மயித்துக்கு பணத்தை காலேஜ்க்கு எடுத்து வரனும்...????

http://www.jackiesekar.com/2011/02/blog-post_10.html

post-7784-0-38953000-1297419913_thumb.jp

Edited by வீணா

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இப்படி ஆசிரியர்களினால் தண்டிக்கப்பட்டு தற்கொலை செய்யும் மாணவர்கள் அதிகம்...ஏன் அந்த ஆசிரியர்களுக்கு நீதி,மனசாட்சி இல்லையா? படித்திருந்தும் என்ன பயன்?

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணே பெண்ணுக்கு எதிரி என்பது மற்றுமொருமுறை நிரூபணமாகியுள்ளது..! :(

பெண்ணே பெண்ணுக்கு எதிரி என்பது மற்றுமொருமுறை நிரூபணமாகியுள்ளது..! :(

பெண்ணே நீயும் பெண்ணா/?(பேயா) :wub:

Edited by I.V.Sasi

  • கருத்துக்கள உறவுகள்

நம்மூரிலும்.. ஏன் புலம்பெயர் நாடுகளில் உள்ள பள்ளிகள் சிலவற்றிலும்.. அங்கு தமிழர்களால் நடத்தப்படும் தமிழ் பள்ளிகளிலும் ஆசிரியர் என்று பணி செய்வோர்.. தாங்கள் ஏதோ சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் மகா ராஜாக்கள் போலவும் மகா ராணிகள் போலவும் நடந்து கொள்கின்றனர். மாணவர்கள் மீது பெளதீக தாக்குதலை மற்றும் உளச் சோர்வடையைச் செய்யும் சொற்தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். இவை கண்டிக்கத்தக்கது மட்டுமன்றி இவ்வாறானவர்கள் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுத்து அவர்களை உடனடியாக குறித்த தொழிலில் இருந்து நீக்குவதோடு அவர்கள் எதிர்காலத்தில் தகுந்த பயிற்சி இன்றி மாணவர்களோடு தொழில் செய்வதில் இருந்தும் தடுக்கப்பட வேண்டும்.

அண்மையில் மேற்கு நாடு ஒன்றில் ஏற்பட்ட அனுபவத்தை சொல்கிறேன். அந்த மாணவன்.. ஒரு கணிதம் அல்லாத பாடத்திற்கு கணிப்புப் பொறி (கல்குலேட்டரை) கொண்டு வர மறந்துவிட்டான். அதை அந்த பரீட்சை மேற்பார்வையாளரிடம் சொல்ல.. (வெள்ளைகள்).. ஓடிப் போய் கடையில் வாங்கி வா என்ற அவனும் போய் கேட்டால்.. கணிப்புப் பொறி விற்பனைக்கு இல்லாது தீர்ந்து போய்விட்டது. அவன் அதை வந்து மேற்பார்வையாளரிடம் சொல்லி.. பரீட்சை ஆரம்பமாவதற்கு முன்னராகவே.. தனக்கொரு கணிப்புப் பொறியை தயவுசெய்து பெற்றுத் தாருங்கள் என்று கேட்டிருக்கிறான். ஆனால் அந்த மேற்பார்வையாளர்கள் நீ தான் கொண்டு வர வேண்டும்.. அப்படி எல்லாம் பெற்றுத் தர முடியாது என்று விட்டார்கள்.

வினாப்பத்திரத்திலோ.. அல்லது பரீட்சை மண்டபத்திலே கணிப்புப் பொறியை மாணவர்கள் கட்டாயம் எடுத்து வரவேண்டும் என்ற.. எந்தக் குறிப்பும் இல்லை. இந்த சட்டம் அந்த மேற்பார்வையாளர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு கணிப்புப் பொறி பழுதடைந்தாலோ.. இல்லது தவறி விழுந்து உடைந்தாலோ.. அதற்கு மாற்றீடு என்று வழமையாக மேற்பார்வையாளர்கள் சில மேலதிக கணிப்புப் பொறிகளை வைத்திருப்பது அவசியம். ஆனால் குறிப்பிட்ட இடத்தில் அவ்வாறான எந்த முன் ஏற்பாடுகளும் இன்றி.. மிகவும் காட்டுமிராண்டித்தனமான மேற்பார்வை செய்யப்பட்டுள்ளது. அதுவும் மேற்குலக நாட்டில்.

சிலரின் சந்தேகத்திற்காக தன்னை பலியிட்டுக் கொண்ட இந்த அப்பாவி மாணவிக்கு எங்கள் கண்ணீரஞ்சலிகள். :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கெல்லாம் முடிவு தற்கொலை தானா!

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கெல்லாம் முடிவு தற்கொலை தானா!

அப்படியான ஒரு போலியான மூடநம்பிக்கைகள் புகுத்தி மிகவும் பலவீனமான சமூகக் கட்டமைப்பை உருவாக்கி வைத்துள்ளனர். நாங்கள் மட்டும் என்ன குறைவா..??! இவர்கள் திருந்தனும். இந்த சமூகப் பெரியவர்களை தூக்கி எறியனும். பழைய அரசியல் தலைவர்களை கூண்டோடு அகற்றனும். அப்பதான் தமிழகம்.. தமிழன் திருந்துவான். 21ம் நூற்றாண்டு நோக்கி முன்னேறுவான்.

மேற்குநாடுகளில் நிர்வாணமாக யுனில வழிய காட்சிக்கு ஓடுதுகள். இது என்னட்டான்னா... அந்தப் பெண்ணை சொல்லிக் குற்றமல்ல. அவள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சமூகம் அப்படி. அவளா பலியாகவில்லை. சமூகத்தால் பலியிடப்பட்டுள்ளாள். :(

அநியாயமாக தன்னை மாய்த்துக் கொண்ட அந்த மாணவிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஒவ்வொரு சமூகத்திலும் மனிதனை உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று தான் வகைப் படுத்தி வைத்துள்ளார்கள். இது படித்தவர்களின் ஆணவமா? அல்லது படிக்காதவர்களின் அறியாமையா/ இயலாமையா?

கட்டுரையில் எழுதப் பட்டது போல், இந்த செய்தி எல்லா மாணவர்களிடையும் அறியப் படுத்தி அவர்களின் மத்தியில் இது போன்ற அநியாயங்கள், உயிர் பறிப்புக்கள் நடைபெறாமல் தடுக்கவேண்டும். இதுவே அந்தப் பெண்ணின் மரணச் செய்தியாகவும் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் உள்ள தமிழ் நாட்டில் இது சகஜமப்பா......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.