Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜப்பானில் அணுக்கசிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா.. லண்டனுக்குப் போற நேரமாப் பார்த்து பீதியைக் கிளப்புறாங்களே..! :(

அய்யோ நாம இருக்கிறோம்ல்ல.

  • Replies 104
  • Views 10k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்

ஜப்பானின் அணுக்கசிவு முற்றுப்பெறுவதற்கு இன்னும் நீண்ட காலம் செல்லும் என சர்வதேச அணு அமைப்பு நிறுவனம் கூறியுள்ளது.

ஒரு ரியாக்டரில் உள்ள மூலக்குழாய் (இதனுள்ளேயே அணு ஆலையின் மூலமான யுரேனியம், புளுத்தொனியம் உள்ளன) மூலம் அணுக்கசிவு ஆபத்தான அளவில் வெளியேறியுள்ளது. கடல் நீரை பாவித்து குளிர செய்த பாவித்த கடல் நீர் மூலம் அணுக்கசிவு மீண்டும் கடலில் அதிகளவு கலந்துள்ளது. இப்பொழுது சுத்தமான நீர் மூலம் குளிராக்கும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

Radiation in seawater off nuclear plant spikes to 1,250 times normal

Levels of radioactive iodine in seawater just offshore of the embattled Fukushima Daiichi nuclear plant spiked to more than 1,250 times higher than normal, Japan's nuclear and industrial safety agency said Saturday.

Samples taken Friday morning from a monitoring station 330 meters off the coast were significantly higher than results from the previous morning, when the level was 104 times above normal.

The measurements also showed high levels of cesium and were taken outside the discharge canal for the plant's Nos. 1, 2, 3 and 4 reactors.

Readings from a short distance away, outside the Nos. 5 and 6 units' discharge canal, showed lower but still high radioactive iodine levels some 284 times above normal.

These high levels suggest there may have been some sort of leakage directly into the ocean -- unlikely to be because of atmosphere emissions or rain alone, said an official with the Tokyo Electric Power Co., which operates the nuclear plant.

http://www.cnn.com/2011/WORLD/asiapcf/03/26/japan.nuclear.disaster/index.html?hpt=T2

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

கடல் நீரில் கதிர் வீச்சு

ஜப்பானின் பாதிப்புக்குள்ளான ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தின் அருகே கடல் நீரில் அளவுக்கதிகமான அணுக் கதிர் வீச்சு காணப்படுவதாக அந்நாட்டின் அணு சக்தி பாதுகாப்பு நிறுவனம் கூறுகிறது.

ஆபத்து விளைவிக்கக்கூடிய ஆரம்ப அளவை விட 250 மடங்கு அதிகமாக இப்பகுதி கடல் நீரில் கதிரியக்க அயோடினின் அளவு காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கரையிலிருந்து சுமார் முந்நூறு மீட்டர்கள் தள்ளி கடல் நீரில் கதிரியக்கம் அளக்கப்பட்டிருந்தது.

கதிரியக்கம் கடலில் கலந்ததன் காரணமாக அப்பகுதி கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை இல்லை என ஜப்பானிய அமைச்சரவையின் செயலர் யுகியோ எதானோ தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இப்பகுதி கடல்நீரில் காணப்பட்ட கதிரியக்க அயோடினின் அளவை விட தற்போது எட்டு மடங்கு அதிகமான அளவில் இது காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கடல் நீரை யாரும் குடிக்கவோ அல்லது இப்பகுதியில் நீந்தவோ மீன்பிடிக்கவோ போவதில்லை என்பதால் கடலில் அதிக கதிரியக்கம் கலந்திருந்தாலும் மனிதர்களின் உடல் நலத்துக்கு அதனால் ஆபத்து ஒன்றும் இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

எங்கிருந்து வருகிறது கதிரியக்கம்?

ஆனால் கடலில் கலக்கும் இந்தக் கதிரியக்கம் எங்கிருந்து வருகிறது என்று கண்டறிய முடியாமல் இருப்பது அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேதமடைந்த அணு உலைகளில் ஒன்றிலிருந்து கசியும் கதிரியக்கம் நிலத்தடி நீரில் கலந்து அதன் வழியாக கடலுக்குள் வருகிறது என்பதற்கான சாத்தியம் உண்டு.

ஏனென்றால் சாதாரணமாகக் காணப்படும் கதிரியக்கத்தை விட பத்தாயிரம் மடங்கு அதிகமான கதிரியக்கம் கொண்ட நீர் முதலாவது மற்றும் மூன்றாவது அணு உலைகள் அருகே காணப்பட்டுள்ளது.

இதேயளவு கதிரியக்கம் கொண்ட தண்ணீர் அணுவுலைகள் இரண்டாம் மற்றும் நான்காம் இலக்க அணு உலைகள் அருகிலும் காணப்பட்டுள்ளது.

இந்தத் நீர் அணு உலைகளில் இருந்து வருகிறதா அல்லது பயன்பாட்டுக்குப் பின்னர் சேமித்துவைக்கப்பட்டுள்ள அணு எரிபொருள் கழிவுத் தேக்கத்திலிருந்து வருகிறதா என்பது தெளிவில்லாமல் இருக்கிறது.

கதிரியக்க நீரை அகற்றுவதிலும், அணு உலைகளின் சூட்டைத் தணிப்பதற்காக கடல் நீர் அல்லாமல் வேறு இடத்திலிருந்து நீர் கொண்டு வந்து ஊற்றுவதிலும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/03/110326_japansearadiation.shtml

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்டு தொடக்கம் உந்த சப்பையளாலை உலகத்துக்கே தலையிடி.

பொருளாதார ரீதியாக்கூட நசுக்கிடாமல் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் பெரிய தலையிடியள்.

இந்தா அடுத்த சப்பை சீனா அமசடக்காய் உலகம்முழுக்க காலவைச்சுக்கொண்டு வருது :D

  • கருத்துக்கள உறவுகள்

அண்டு தொடக்கம் உந்த சப்பையளாலை உலகத்துக்கே தலையிடி.

-------

அண்ணை, எல்லா சப்பையளும் எண்டு சொல்லாதேங்கோ.......

தாய்லாந்து, பிலிப்பைன் சப்பையள் உங்களுக்கு தலையிடி தந்தவையோ....

  • கருத்துக்கள உறவுகள்

அண்டு தொடக்கம் உந்த சப்பையளாலை உலகத்துக்கே தலையிடி.

பொருளாதார ரீதியாக்கூட நசுக்கிடாமல் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் பெரிய தலையிடியள்.

இந்தா அடுத்த சப்பை சீனா அமசடக்காய் உலகம்முழுக்க காலவைச்சுக்கொண்டு வருது :D

அதுதான் லிபியாவில உடைக்கிறாங்கள், மற்ற இடங்களிலும் தருணம் பார்த்து உடைப்பான்கள். அதுக்கிடையில கீழால நிலநடுக்கமும் வந்து உடைக்குது! :(

  • தொடங்கியவர்

- ரியாக்டர் 2ஆவதில் 10மில்லியன் அளவு கூடுதலாக கதிரியல் அளவு காணப்படுகின்றது.

- செர்நோபல் மாதிரி நிலமை வராது என கூறப்படுகின்றது

- அதேவேளை அணு ஆலையின் மூலக்குழாய் ஊடாக கசிவு ஏற்படுள்ளதாக நம்பப்படுகின்றது

Radiation in reactor's building tests 10 million times above normal

adiation levels in pooled water tested in the No. 2 nuclear reactor's turbine building at the Fukushima Daiichi power plant are 10 million times above normal, utility company and government officials said Sunday.

Hidehiko Nishiyama, an official with Japan's nuclear and industrial safety agency, said the surface water showed 1,000 millisieverts of radiation. By comparison, an individual in a developed country is naturally exposed to 3 millisieverts per year, though Japan's health ministry has set a 250 millisievert per year cumulative limit before workers must leave the plant.

The 10-million-times normal reading applies to radioactive iodine-134 found in the No. 2 building's pooled water, according to the nuclear safety agency. This isotope loses half its radioactive atoms every 53 minutes, compared to a half-life of every eight days for radioactive iodine-131 that has also been detected in recent days.

http://www.cnn.com/2011/WORLD/asiapcf/03/27/japan.nuclear.reactors/index.html?hpt=T1

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பானில் அணுமின் நிலைய கதிர்வீச்சை தடுக்க 700 இன்ஜினியர்கள் இரவு, பகலாக தீவிர முயற்சி

ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2011 09:59

ஜப்பானில் நிலநடுக்கம் காரணமாக, அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சை தடுக்கும் முயற்சியில், 700 இன்ஜினியர்கள் இரவு பகலாக போராடி வருகின்றனர்.

கதிர்வீச்சை தடுப்பதற்காக, ஏராளமான தண்ணீரை ஏற்றிக் கொண்டு, அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்றும் ஜப்பானுக்கு விரைந்துள்ளது.

ஜப்பானில் கடந்த 11ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக, புக்குஷிமா அணுமின் நிலையத்தில் இருந்த, அணு உலைகளில் வெடிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு, ஜப்பானின் மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவுகிறது.

அங்குள்ள உணவுப் பொருட்கள், தண்ணீர் ஆகியவற்றை கூட பயன்படுத்த முடியாத நெருக்கடிக்கு ஜப்பான் மக்கள் ஆளாகியுள்ளனர். இந்நிலையில், புக்குஷிமா அணு உலையில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சின் அளவை கட்டுப்படுத்துவதற்காக, கடல் நீரை அணு உலைகளில் பீய்ச்சி அடிக்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களின் முயற்சிக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. கடல் நீரில் உள்ள உவர்ப்பு தன்மையே இதற்குக் காரணம். இதைத் தொடர்ந்து, ஏராளமான தண்ணீருடன் அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று, ஜப்பானுக்கு விரைந்துள்ளது.

இந்த கப்பலில் உள்ள தண்ணீரை, அணு உலைகள் மீது பீய்ச்சி அடித்தால், ஓரளவுக்கு கதிர்வீச்சு கட்டுப்படுத்தப்படும் என, கூறப்படுகிறது. இதற்கிடையே, புக்குஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள மேலும் ஒரு அணு உலை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அந்த உலையில் எப்போது வேண்டுமானாலும் வெடிப்பு ஏற்படலாம் என்றும் ஜப்பான் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து ஜப்பான் அமைச்சரவை தலைமை செயலர் யுகியோ எடனோ கூறுகையில், "அணு உலைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பால், மிகவும் மோசமான நிலை எதுவும் ஏற்படவில்லை.

இருந்தாலும், இதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கதிர்வீச்சை தடுக்கும் முயற்சியில், 700க்கும் மேற்பட்ட இன்ஜினியர்கள் இரவு பகலாக போராடி வருகின்றனர்.

புக்குஷிமாவில் மொத்தம் உள்ள ஆறு உலைகளில், இரண்டு உலைகள் பாதுகாப்பாக உள்ளன. மற்ற நான்கு அணு உலைகளின் நிலை சற்று மோசமாக உள்ளது' என்றார்.

tamilenn

  • கருத்துக்கள உறவுகள்

திங்கட்கிழமை, 28, மார்ச் 2011 (8:21 IST)

ஜப்பானில் அணுகதிர் வீச்சு அதிகரிப்பு

ஜப்பானில் புகுஷிமா அணு உலைக்கூடத்தில் உள்ள தண்ணீரில் அணுகதிர் வீச்சு ஒருகோடி மடங்கு அதிகரித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் அங்கு இருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஜப்பானில் கடந்த 11ந் தேதி பூகம்பம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சுனாமி ஏற்பட்டது. இதன் காரணமாக 27 ஆயிரம் பேர் பலியானார்கள்.

பூகம்பம் சுனாமி காரணமாக புகுஷிமாவில் உள்ள 6 அணு உலைகளில் உள்ள குளிரூட்டும் இயந்திரங்களில் பாதிப்பு ஏற்பட்டு, அணு உலைகள் வெடித்தன. இதனால் அணுகதிரியக்கம் கசிய தொடங்கியது.

2வது அணு உலைகூடத்தில் ஜப்பானிய அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் அங்கு உள்ள தண்ணீரில் இயல்பு நிலையை விட கதிரியக்கத்தின் அளவு ஒரு கோடி மடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்தது.

அணு உலைக்கூடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் ஒரு கிழூபிக் செ.மீ. தண்ணீரில் 209 கோடி பெக்குயெரல் (கதிர் வீச்சின் அளவு) கதிரியக்கம் இருப்பது தெரிய வந்ததாக அணு உலை அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் அனைவரையும் உலைக்கூடத்தை விட்டு அதிகாரிகள் வெளியேற்றினார்கள்.

புகுஷிமா நகரில் இருந்து 30 கி.மீ.தொலைவில் உள்ள பகுதியில் கூட கதிரியக்கத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவை விட 40 சதவீதம் அதிகமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

nakkheeran

புகுஷிமா அணு உலைக்கு அருகில் உள்ள கடலில் கதிரியக்கத்தின் அளவு இயல்பு நிலையை விட 1850 மடங்கு அதிகம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கடல் வாழ் உயிரினங்களை உணவாக உட்கொள்ளக்கூடாது என்று அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.

இதற்கிடையில் ஜப்பானின் அணுசக்தி பிரச்சினை பல மாதங்களுக்கு நீடிக்கும் என்று வியன்னாவில் உள்ள சர்வதேச அணுசக்தி கமிஷன் எச்சரித்து உள்ளது.

பூகம்பம் மற்றும், சுனாமி, ஆகியவற்றுடன் அணுகதிர் வீச்சு பாதிப்பு காரணமாக ஜப்பானில் இருந்து உலக னநாடுகளுக்கு மீன் மற்றும் கடல் உணவு பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது

  • தொடங்கியவர்

ஜப்பானிய தரைகளில் புளுற்றோனியம் அதிர்ச்சித் தகவல் !

ஜப்பான் புக்குசீமா டாச்சி அணுசக்தி மையத்தில் ஏற்பட்ட சேதத்தின் உண்மையான பக்கங்கள் இப்போதுதான் வெளிவர ஆரம்பித்துள்ளன.

இன்றய செய்திகளின்படி புக்குசீமா பகுதியில் உள்ள தரைப்பகுதியில் புளுற்றோனியம் படிவுகள் அவதானிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புளுற்றோனியப் படிவுகள் மக்கள் வாழிடங்களில் காணப்படுவது மிகவும் ஆபத்தானது, என்றாலும் இப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேறியுள்ளதால் உடனடியாக பாதிப்புக்கள் ஏற்படாது என்றும் அத்தகவல் கூறுகிறது.

இது குறித்து நோர்வேயின் அணுக்கதிர்வீச்சு அளவுப் பிரிவின் தலைவர் தகவல் தரும்போது புக்குசீமா உலை 3ல் ஏற்பட்ட பெரு வெடிப்பும் தீப்பிளம்பமே ஆபத்தான புளுற்றோனியம் வெளியேற காரணமெனத் தெரிவித்தார். அதேவேளை புக்குசீமா உலை ஒன்று, இரண்டு ஆகியவற்றிலிருந்து வெளியேறும் அணுக்கதிர் வீச்சின் அளவும் நாளுக்கு நாள் உயர்வதாக அச்செய்தி கோடி காட்டுகிறது..

இது ஒரு புறமிருக்க ஜப்பானில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்குவதிலும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் சீனா அனுப்பிய 60.000 போத்தல் குடி தண்ணீரை மூன்றரை இலட்சம் மக்கள் பகிர்ந்து குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வடபுல ஜப்பானின் குடி நீர் வளம் அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளதால் குடிநீர் போத்தல்களை நம்பியே பாதிக்கப்பட்ட மக்கள் வாழ வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச நாடுகளின் பாரிய உதவிகள் ஜப்பானை சென்றடைந்ததாகக் கூறமுடியவில்லை. ஜப்பான் சுனாமிக்காக பாரிய நிதி சேகரிப்புக்கள் நடைபெறவில்லை. 2004 சுனாமி நிதி பற்றி உலக மக்கள் வேதனை அடைந்திருப்பதால் தொலைக்காட்சிகள் மௌனமாக இருக்கின்றன. முந்திய சுனாமி நிதியில் பாதிக்கப்பட்டவர்கள் பலன் அடைந்ததாக தகவல்கள் இல்லை. இப்படியாக ஒரு தடவை தொண்டு நிறுவனங்கள் விட்ட பாரிய தவறும் இப்போது ஜப்பானை வந்து தாக்கியுள்ளது.

http://www.alaikal.com/news/?p=62870

கனடா மேற்ரும் அமெரிக்கவிலும் கதிரியல் தாக்கம், ஆனால் மக்களுக்கு பாதிப்பில்லை

- Radiation from Japan reactor detected in B.C. seaweed, rainwater; no risk to humans

Read more: http://www.vancouversun.com/news/Radiation+from+Japan+reactor+detected+seaweed+rainwater+risk+humans/4516888/story.html#ixzz1Hw1hiY98

- Japan's nuclear contamination spreads to more U.S. states

http://www.cnn.com/2011/HEALTH/03/28/radiation.us/

  • தொடங்கியவர்

- ரியாக்டர் 2ஆவதில் 10மில்லியன் அளவு கூடுதலாக கதிரியல் அளவு காணப்படுகின்றது.

- செர்நோபல் மாதிரி நிலமை வராது என கூறப்படுகின்றது

- அதேவேளை அணு ஆலையின் மூலக்குழாய் ஊடாக கசிவு ஏற்படுள்ளதாக நம்பப்படுகின்றது

Radiation in reactor's building tests 10 million times above normal

அணுக்கதிர் வீச்சு அபாயம்: தவறான தகவலுக்கு ஜப்பான் கண்டனம்

புகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள நீரில் இயல்பை விட ஒரு கோடி மடங்கு கதிர்வீச்சு கலந்திருப்பதாக தவறான தகவல் வெளியிட்டதற்காக அந்நிலையத்தை இயக்கி வரும் டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி ஜப்பான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

புகுஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தில் உள்ள 2 ம் உலையின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள நீர் கொள்கலனில் வைக்கப்பட்டிருந்த நீரில் வழக்கத்தை விட ஒரு கோடி மடங்கு(10 மில்லியன்) கதிர்வீச்சு கலந்திருப்பதாக டெப்கோ நிறுவனம் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டது.

ஏற்கனவே காற்று வழியாக கதிர்வீச்சு பரவுவதால் நாடு முழுவதும் பீதியில் இருக்கிறது. இந்நிலையில் டெப்கோவின் இந்த அறிவிப்பு மக்களை மேலும் பீதியடையச் செய்தது.

இச்செய்தி வெளியான பின் கதிர்வீச்சின் அளவை மீண்டும் சோதித்த அந்நிறுவனம் முன்பு தெரிவித்த ஒரு கோடி மடங்கு என்பது தவறு என்றும், ஒரு லட்சம் மடங்கு தான் அதிகரித்துள்ளது என்றும் பின்னர் விளக்கம் அளித்தது.

இது போன்று மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பும் விதத்தில் தவறான தகவலை வெளியிட்டதற்காக டெப்கோவிற்கு நேற்று ஜப்பான் அரசு கடுமையாக கண்டனம் தெரிவித்தது.

டெப்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இரண்டாம் உலையில் கதிர்வீச்சின் அளவை பரிசோதித்த ஊழியர் மீண்டும் ஒரு முறை அதை சரி பார்க்க இயலாத அளவிற்கு கதிர்வீச்சின் வெளிப்பாடு இருந்தது. அதனால் முதல் முறை எடுத்த அளவு சரிதானா என்று பார்க்க இயலவில்லை" என்று சமாதானம் கூறியுள்ளது.

http://www.newsonews.com/view.php?22KOld0bcE80Qd4e2UMM202cBnB2ddeZBnV203eCAA2e4U08qacb3lOS42

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பானிய கதிர் வீச்சு அண்டை நாடுகளுக்கும் பரவி வருவதாக ஆய்வில் தகவல் _

வீரகேசரி இணையம் 3/30/2011 3:10:33 PM Share

ஜப்பானில் ஏற்பட்டுள்ள அணு உலை கதிர்வீச்சு சீனா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு பரவியுள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஜப்பானில் கடந்த 11 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியை தொடர்ந்து புகுஷிமா அணு உலையிலிருந்து கதிர்வீச்சு பரவ ஆரம்பித்தது.

இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஜப்பானில் வெளியேறும் கதிர் வீச்சு ஜப்பானின் அண்டை நாடான தென்கொரியாவிலும் பரவியது.

தென்கொரியாவை தொடர்ந்து தற்போது சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் அணு கதிர்வீச்சு பரவியுள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த கதிர்வீச்சு ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இதேவேளை மேற்படி அணு உலைகளுக்கு அண்மித்ததாக உள்ள கடல் நீரில் கதிர்வீச்சு தாக்கம் அதிகரித்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

'40 கி.மீ. அப்பாலும் அதிக கதிரியக்கம்'

ஜப்பானில் பாதிப்புக்குள்ளாகி கதிரியக்கத்தை வெளியிட்டுவரும் ஃபுகுஷிமா தயீச்சி அணுமின் நிலையத்தைச் சுற்றி மனிதர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலப்பரப்பை விரிவுபடுத்துவது பற்றி ஜப்பான் பரிசீலிக்க வேண்டுமென ஐ.நா.வின் அணுசக்திக் கண்காணிப்பு அமைப்பான ஐ.ஏ.ஈ.ஏ. கேட்டுக்கொண்டுள்ளது.

தற்சமயம் ஜப்பானின் ஃபுகுஷிமா தயீச்சி அணுமின் நிலையத்தைச் சுற்றவர இருபது கிலோ மீட்டர் பரப்புக்குள் யாரும் வசிக்க வேண்டாம், செல்ல வேண்டாம் என்று அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் அந்த நிலையத்திலிருந்து 40 கிலோ மீட்டருக்கு அப்பாலும்கூட கதிரியக்கத்தின் அளவு மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காத அளவின் வரம்பைத் தாண்டி பல மடங்கு அதிகமாகவுள்ளது என ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐ.ஏ.ஈ.ஏ. தற்போது மேற்கொண்டுள்ள அளவீடுகள் காட்டுகின்றன.

மக்களை அப்புறப்படுத்தியாக வேண்டும் என்ற அளவில் இந்தக் கதிரியக்கம் அமைந்துள்ளது, ஆகவே ஜப்பானிய அதிகாரிகள் சூழ்நிலையை கவனமாக ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐ.ஏ.ஈ.ஏ. கேட்டுக்கொண்டுள்ளது.

"உடனடி மக்கள் வெளியேற்றம் இல்லை"

ஆனால் அணுமின் நிலையத்தைச் சுற்றி மக்கள் வரத் தடைவிதிக்கப்பட்டப் பகுதியை உடனடியாக விரிவுபடுத்த வாய்ப்பில்லை என்று ஜப்பான் அறிவித்துள்ளது.

ஆனாலும் கதிரியக்கத்தின் அளவு தொடர்ந்து அதிகமாகவே இருந்துகொண்டு போனால், தாங்கள் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக ஜப்பானிய அமைச்சரவைச் செயலர் யுகியோ எதானோ கூறியுள்ளார்.

கடல் நீரில் கதிரியக்கம்

நிலத்தில் கதிரியக்கம் என்பது ஒருபுறமிருக்க இப்பகுதியில் உள்ள கடல் நீரில் கதிரியக்க அயோடினின் அளவு சட்டபூர்வ வரம்பை விட 4385 மடங்கு அதிகமாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

ஆகவே இந்த அணு மின் நிலையத்திலிருந்து கதிரியக்கம் தொடர்ந்து சுற்றாடலுக்குள் கசிந்து வர வாய்ப்புள்ளது என ஜப்பானின் அணுசக்திப் பாதுகாப்பு அமைப்பான நிசா கூறுகிறது.

அப்பகுதிக் கடல் நீரில் ஒரு நாளுக்கு முன்பு எடுக்கப்பட்ட அளவை விட தற்போது பல மடங்கு அதிகமான கதிரியக்க அயோடினும் கதிரியக்க சீசியமும் காணப்படுவதாக அது கூறுகிறது.

சேதமடைந்த நிலையத்தில் இருந்து எவ்வாறு கதிதிரியக்க வஸ்துக்கள் கடலுக்குள் வருகின்றன என்பதை இதுவரை தெளிவுபட புரிந்துகொள்ள முடியவில்லை என ஜப்பான் அதிகாரிகள் கூறுகின்றனர்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/03/110331_japanradiation.shtml

  • கருத்துக்கள உறவுகள்

கதிரியக்கம் 10,000 மடங்கு சாதாரணத்தை விட அதிகமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்

உலகத்தின் மிகப்பெரிய சீமெந்து பம் ஜப்பானுக்கு

உலகத்தின் மிகப்பெரிய சீமெந்து கலவையை வீசும் சீமெந்துக் குழாய் அமெரிக்காவில் இருந்து ஜப்பான் நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது. உலகின் மிகப்பெரிய இராட்சத விமானம் மூலமாக இந்தக் குழாய்கள் எடுத்துச் செல்லப்பட்டன. இக்குழாய்களும், இயந்திரங்களும் ஜப்பானின் புக்குசீமா அணு உலைக் கசிவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பாத்திரம் வகிக்கும் என்று கருதப்படுகிறது. சீமெந்துக்கலவையான சாந்து தொன் கணக்கில் பீச்சி எறியப்பட்டு புக்குசீமா அணு உலையை சீமெந்தால் உறைய வைக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. சீமெந்து கலவையை வெகு தொலைவில் இருந்து குழாய் மூலம் கொட்டி மூடுவதன் மூலம் அணுக்கதில் கசிவை கட்டுப்படுத்தலாம் என்றும் கருதப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள ஜெர்ரி அஸ்மோர் கொங்கிறீற் கொன்ராக்ற் நிறுவனம் இந்த முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 200 கன மீட்டர் சீமெந்துக் கலவையை இந்த இயந்திரம் பீய்ச்சியடிக்கும். ஏழு தொன் எடை கொண்டது. இந்தக் கருவிகளை ரஸ்ய தயாரிப்பான அன்ரனோவ் 225 விமானம் சுமந்து செல்கிறது. இப்படியொரு கருவி ஜப்பானுக்குக் கொண்டுவரப்படுவதால் தலை நகர் டோக்கியோவில் மக்களிடையே ஒருவித பதகளிப்பும் காணப்படுகிறது. ஜப்பான் இந்த முயற்சியில் வெற்றி கண்டால் தற்போதய அச்சத்தை போக்க அதுவே பேருதவியாக அமையும் என்கிறது வோசிங்டன் போஸ்ட் பத்திரிகை.

http://www.alaikal.com/news/?p=63395

Giant pumps rushed from US to Japan to cool reactors

wo of the world's largest cement boom pumps are being rushed to Japan to help cool reactors at the crippled Fukushima Daiichi nuclear plant, the company that makes the equipment said Friday.

Two giant trucks equipped with powerful pumps and flexible arms with a 70 meter reach will be used to shoot water from giant hoses to cool the nuclear reactors, or cement to seal off the site, said Kelly Blickle, a spokeswoman with the US subsidiary of the German company Putzmeister.

Similar pumps were used in Chernobyl following the April 1986 meltdown, Blickle told AFP.

http://www.channelnewsasia.com/stories/afp_asiapacific/view/1120217/1/.html

  • தொடங்கியவர்

ஃபுகுஷிமா நிலை மிகவும் ஆபத்தானது: அணு சக்தி முகமை

பூகம்பத்தாலும், அதனைத தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப் பேரலையாலும் செயலிழந்த ஃபுகுஷிமா அணு உலைகளில் இருந்து வெளியேறும் அணுக் கதிர் வீச்சு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்று பன்னாட்டு அணு சக்தி முகமையின் தலைவர் கூறியுள்ளார்.

நய்ரோபியில் ஐ.நா.தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பன்னாட்டு அணு சக்தி முகமையின் தலைவர் யூகியோ அமனோ, ஆபத்தான இந்த நெருக்கடியை ஜப்பான் தனியாக சந்நதிக்கவில்லையென்றும், அதோடு உலக நாடுகள் அனைத்தும் உள்ளன என்றும் கூறியுள்ளார்.

அணு உலைகள் செயலிழந்ததால் நிகழ்ந்துவரும் அணுக் கதிர் வீச்சை கட்டுப்படுத்த பன்னாட்டு அணு சக்தி முகமைக்கு அனைத்து உதவிகளும் செய்ய ஐ.நா.தயாராக உள்ளது என்று பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளதாகவும் அமனோ தெரிவித்துள்ளார்.

மார்ச் 11ஆம் தேதி ஏற்பட்ட ரிக்டர் 9.0 புள்ளி பூகம்பத்தினாலும், அதனைத தொடர்ந்து ஏற்பட்ட 14 மீட்டர் உயர ஆழிப்பேரலைத் தாக்குதலிலும் ஃபுகுஷிமா மாகாணத்திலுள்ள டாய்ச்சி அணு மின் நிலையத்திலுள்ள 5 அணு மின் உலைகளும் செயலிழந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.webdunia.com/newsworld/news/international/1104/02/1110402026_1.htm

"இந்த போராட்டத்தில் எமக்கே வெற்றி" - ஜப்பானிய அதிபர்

  • தொடங்கியவர்

ஜப்பான் அணுக்கசிவு கட்டுப்படுத்த முடியவில்லை

ஜப்பான் புக்குசீமா அணு உலையில் ஏற்பட்ட விபத்தால் உண்டான அணுக்கசிவை கட்டுப்படுத்த முடியவில்லை என்று இன்றைய ஞாயிறு செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட சீமெந்து கலவை சேர்ந்த சாந்தை இராட்சத இயந்திரத்தால் பீய்ச்சியடித்து கட்டுப்படுத்தும் நேற்றைய முயற்சிகளும் போதிய பலன் தந்ததாக இல்லை. வழமையாக காற்று மண்டலத்தில் பரவியிருக்கக் கூடிய அணுக்கதிர் வீச்சைவிட 4000 மடங்கு அதிகமான கதிர்வீச்சு பாதிப்பு இப்போது காணப்படுகிறது.

மேலும் அணு சக்தி நிலையத்தில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சை எப்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்ற கேள்விக்கும் உடன் பதில் தரமுடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. பசுபிக் சமுத்திரம் அணுக்கதிரால் பாதிப்படைவதும் ; தொடர்கிறது, இதனால் பல நாடுகள் பாதிக்கப்படப்போகின்றன. அப்பகுதியின் மீன்பிடித் தொழிலில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் மீன்கள் இதர பகுதிகளுக்கு அணுக்கதிர் வீச்சுடன் நகர ஆரம்பிக்க ஜப்பான் உலக சமுதாயத்திற்கே சுமையாக மாற நேரிடும். இன்று காலை வெளியான செய்திகள் இந்த விவகாரத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவர பல மாதங்கள் எடுக்கும் என்று தெரிவிக்கின்றன.

அக்காலத்தில் இலங்கையின் சிங்கள மன்னான தாதுசேனனை சீமெந்துச் சாந்தால் மூடி கொன்றான் அவனுடைய மகனான காசியப்பன். இவனே பின்னர் சிகிரியா மலைக் கோட்டையை அமைத்தவன். தகப்பனை சீமெந்தால் மூடிய காசியப்பன் செய்த கோட்பாட்டை பின்பற்றி சீமெந்தால் அணுசக்தி நிலையத்தை மூடப்புறப்பட்ட அமெரிக்க முயற்சியும் தோல்வியடைந்துள்ளது.

http://www.alaikal.com/news/?p=63745

Radioactive water leaking into ocean in Japan

  • தொடங்கியவர்

இயற்கைப் பேரழிவு திரைப்படங்களுக்கு ஜப்பானில் தடை

சுனாமி, அணுக்கசிவு, நிலநடுக்கம் போன்ற துயரங்களால் நொந்து நூலாகிப்போன ஜப்பானிய மக்களிடையே இயற்கைப் பேரவலங்களை விளக்கும் திரைப்படங்களுக்கு இடமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது காண்பிக்கப்படும் Herdafter திரைப்படத்தில் மோசமான சுனாமிக்காட்சி இருப்பதால் அது திரையரங்கில் இருந்து தூக்கப்பட்டுள்ளது. பற்றில் லொஸ்ஏஞ்சல் என்ற திரைப்படமும் தூக்கப்பட்டுள்ளது. அதுபோல ஜேம்ஸ்கமரோனின் Sanctum திரைப்படத்தில் கடுமையான புயல் படமாக்கப்பட்டுள்ளதால் அதுவும் ஜப்பானில் ஓட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இயற்கை அழிவுகளை கிராபிக்ஸ் மூலம் காட்டிவந்த கொலிவூட்டின் காட்சிகளை மிஞ்சிய இயற்கை அழிவுகளை தற்போது நிதர்சனமாகவே சந்திக்கிறார்கள். ஆகவே இயற்கை அழிவுகளில் இருந்து மக்களை மீட்கும் நம்பிக்கைதரும் திரைப்படங்களே உலகிற்கு அவசியம் என்பதை ஜப்பானிய திரையரங்குகள் உணர்த்தியுள்ளன.

http://www.alaikal.com/news/?p=64068

  • தொடங்கியவர்

பல நாட்களாக பசுபிக் கடலில் கலந்துகொண்டிருந்த கதிர் தாக்கம் நிறுத்தப்படுள்ளது

எங்கிருந்து அந்த கசிவு தொடர்ந்தது? அதை எப்படி நிபட்டுவது என பல வழிகளால் பல நாட்களாக முயலப்பட்டது ஒருவிதமான இரசாயன திரவத்தை (sodium silicate ) உள்ளே நுழைத்து அதன் மூலம் இது நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.

Radioactive leak into ocean 'stopped'

A leak of highly radioactive water into the Pacific Ocean from Japan's crippled Fukushima Daiichi nuclear plant has been stopped, its operator reports. Tepco said it had injected chemical agents to solidify soil near a cracked pit, from where the contaminated water had been seeping out.

http://www.bbc.co.uk/news/world-asia-pacific-12981243

  • தொடங்கியவர்

சுனாமி இழுத்துப்போன பொருட்கள் வெளியே வர 18 மாதங்கள் ஆகும்

ஜப்பானில் கடந்த மார்ச் 11ம் திகதி இடம் பெற்ற சுனாமி கடலடிக்குள் இழுத்துப்போன பொருட்கள் பல மில்லியாட் டொலர்கள் பெறுமதியானவை. சுனாமி அலைகள் சுருட்டி இழுத்துப்போன பொருட்கள் தற்போது கடலின் அடியில் கிடக்கின்றன.

கடலடி நீரோட்டம் போகின்ற போக்குகள் தொடர்பான ஆய்வை மேற்கொண்ட அமெரிக்க ஹவாய் பல்கலைக்கழகத்தினர் இப்பொருட்களை கடலடி நீரோட்டம் ஜப்பானிய தீவுகளின் கரையில் கொண்டு வந்து தள்ள 18 மாதங்கள் எடுக்கும் என்றுள்ளனர். வடக்கு அத்திலாந்திக் நீரோட்டம் பாரம் குறைந்த பொருட்களை கரைக்கு இழுத்துவர ஒரு வருட காலம் ஆகும், படிப்படியாக 18 மாதங்களில் மற்றய பொருட்களும் வெளிவரும் என்று கணிப்பிட்டுள்ளனர். பாரவண்டிகள், கார்கள், கப்பல் உதிரிப்பாகங்கள் போன்றவை ஹவாய் தீவை வந்தடைய 18 மாதங்கள் ஆகும் என்றும் கணித்துள்ளனர். விலைமதிப்பற்ற பொருட்கள் பலரது கைகளுக்குக் கிடைக்கவும் வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது.

http://www.alaikal.com/news/?p=64379

  • தொடங்கியவர்

ஜப்பானில் கதிரியக்க கசிவு ஏற்பட்டுள்ள அணு உலை ஒன்றின் மீது நைட்ரஜன் வாயுவை செலுத்தும் பணி இப்போது நடைபெற்று வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.

ஜப்பானின் புகுஷிமா நகரில் கடந்த மாதம் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி தாக்கியது. இதில் 30 ஆயிரம் பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அணுஉலைகளிலிருந்து கதிரியக்கம் வெளிப்பட்டு வருகிறது.

அணு உலைகளிலிருந்து வெளிப்படும் கதிரியக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ஜப்பான் எடுத்து வருகிறது. இப்போது அணு உலைகளின் மீது நைட்ஜரன் வாயுவை செலுத்தி கதிரியக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=11807

  • கருத்துக்கள உறவுகள்

அணு உலைகளிலிருந்து வெளிப்படும் கதிரியக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ஜப்பான் எடுத்து வருகிறது. இப்போது அணு உலைகளின் மீது நைட்ஜரன் வாயுவை செலுத்தி கதிரியக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அணுக்கதிரை கட்டுப்படுத்த.... நைட்ரஜன் வாயுவை செலுத்துவதை விட...

அணு உலை கட்ட முன், ஒரு வைரவர் கோவிலை கட்டி பூசை செய்திருந்தால்....

இப்படி எல்லாம்.... நடந்திருக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.