Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று ஐபிசி தமிழில் நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர்

Featured Replies

நாளை ஐபிசி தமிழில் நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர் உருத்திரகுமார், மாலை ஆறு மணி முதல், புலம்பெயர் எம்மவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளதாக தெரிகிறது. நாடுகடந்த அரசு பற்றிய விமர்சனங்கள், கேள்விகளை ஐபிசி தமிழுக்கு மின்னஞ்சலில் அனுப்பும்படி ஒலிபரப்புகிறார்கள்.

ஆக்கபூர்வமான விமர்சனங்கள், ஐயப்பாடுகள், ஆதங்கங்களை கண்டிப்பாக அவரின் கவனத்துக்கு கொணரலாம். தமிழ் மக்களின் ஸ்தம்பித்திப் போயுள்ள அரசியல் அபிலாசைகளை எவ்வாறு அடுத்த கட்டத்துக்கு முன்னகர்த்தப் போகிறார்கள் என்பதை அறிய நாமும் ஆவலுடன் உள்ளோம்.

பி.கு: நம்மளுக்கு நாடு கடந்த தமிழீழ அரசில் உறுப்பினர்கள் உறவினர்களோ அன்றி நண்பர்களோ அல்ல, அப்படி இருப்பினும் அதற்காக இக்கட்டமைப்புக்கு ஆதரவளிக்கவில்லை. இன்று தாயகத்தில் சிங்கள இராணுவ கொடுங்கரங்களுக்குள் மக்கள் உயிர் வாழ்வதற்கான சூழ்நிலையே இல்லாத நிலையில், அவர்களால் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடியதாகவா இருக்கும்??? நாம் புலத்தில் ஏதாவது செய்தால் சரி, இல்லையேல் அம்மக்களை புதைக்க நாமே சிங்களத்துக்கு வழி சமைத்துக் கொடுத்து விடுவோம். புலத்தில் இன்று உருத்திரகுமார் தலைமையிலான இவ்வமைப்பானது, சர்வதேச நெழிவு சுழிவுகளுனோடே சென்று எம் அபிலாசைகளை அடைய முயற்சிகள் மேற்கொள்ளும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. ஆகவே நாம் எல்லோரும் ஒற்றுமையாக இவ்வமைப்பை கட்டி எழுப்ப கை கொடுத்தல் வேண்டும். அதே சமயம், அவர்களின் செயற்பாடுகளை விரைவு படுத்தவும், குறைபாடுகளை சுட்டிக் காட்டவும் தயங்கக்கூடாது. ஆனால் குறைகளை சுட்டிக்காட்டுகிறோம், ஜனநாயக ரீதியில் செயற்படுத்த முற்படுகிறோம்,என்ற பாசாங்குகளுடன் இவ்வமைப்பை சீர்குலைக்கவும், தேவையற்ற வதந்திகளை கிளப்பி விட்டு மக்களை குழப்பும் செயற்பாடுகளை இனம் காணவும் வேண்டும். ... இன்று எமக்கு .... தெரிகின்ற ஒரே ஒரு ஒளிக்கீற்று .....

விடுதலையின் தடைக்கற்கள் பற்றிய கலந்தாய்வு (13/03/2011) - ஒலிவடிவம்

http://ibctamil.fm/Neeyarneeram.html

நாடுகடந்த அரசாங்கம் பற்றிய கலந்தாய்வு (06/03/2011) - ஒலிவடிவம்

http://ibctamil.fm/Neeyarneeram.html

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

தலைப்பில் நாளை என்பது தவறுதலாக இன்று என்று ... மாற்றிவிடுங்கள்! :blink:

ஊடகப் பேச்சுக்களை குறைத்து, நிறைய காரியங்களை செய்யவேண்டும் என்பதே தாய் மண்ணில் உள்ளவர்களின் அவா.

அதற்காக ஊடகப் பேச்சு வேண்டாம் என்று சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்தவரை...

அவர் 30 நிமிடம் தனது விளக்க உரையை மட்டுமே செய்ய உள்ளார். மக்களது கேள்விகளுக்கு மட்டுமல்ல ஐ.பி.சி. கேட்ட கேள்விகளுக்கே பதில் சொல்லமாட்டார் என்று தெரிகிறது. காரணம் குளப்பியடிப்புக்களையும் நேரத்தை வீணடிப்பதையும் விரும்பாமை. :(

  • தொடங்கியவர்

இப்போதுதான் முடிவடைந்தது ... நன்றிகள் உருத்திரகுமாருக்கு!!! .... நிறைகுடம் தளம்பவில்லை!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்ச்சியின் ஒலிப்பதிவின் இணைப்பைத் தர முடியமா?

உண்மையாக இருக்கும் பிரச்சனை வெளிக்கொண்டு வரப்படவில்லை.

ஐ பி சி ஊது குழலாக செயற்பட்டது.

இருக்கும் பிரச்சனை வெளிக்கொண்டு வரும் வகையில் கேள்விகள் கேட்கப்படவில்லை.

Edited by aathirai

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாக இருக்கும் பிரச்சனை வெளிக்கொண்டு வரப்படவில்லை.

ஐ பி சி ஊது குழலாக செயற்பட்டது.

இருக்கும் பிரச்சனை வெளிக்கொண்டு வரும் வகையில் கேள்விகள் கேட்கப்படவில்லை.

உங்களின் பிரச்சனையை அவர் கதைக்க மாட்டார். :D:D

உங்களின் பிரச்சனையை அவர் கதைக்க மாட்டார்.

எங்களின் பிரச்சனை கதைக்கமாட்டார் என்பது எனக்குத் தெரியும்.

அவருக்கு இருக்கும் பிரச்சனையைக் கதைப்பார் என்று எதிர்பார்த்தேன்.

Edited by aathirai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையாக இருக்கும் பிரச்சனை வெளிக்கொண்டு வரப்படவில்லை.

ஐ பி சி ஊது குழலாக செயற்பட்டது.

இருக்கும் பிரச்சனை வெளிக்கொண்டு வரும் வகையில் கேள்விகள் கேட்கப்படவில்லை.

உருத்திரகுமாரன் தான் படிச்சவன் என்பதை நிரூபித்து இருக்கிறார், இதுதான் கேபிக்கும் உருத்திர குமாருக்கும் உள்ள வித்தியாசம். பேட்டி கொடுப்பவனும், கேள்விகளுக்கு பதில் கொடுப்பவனும், தன்னை வெளிப்படுத்தி கொள்வான், கேபி கொடுத்த பேட்டிகள்தான் அவரை வெளி உலகத்துக்கு, அவரைபற்றி இனம்காட்டியது, உருத்திர குமாரன் செய்தது பிரச்சாரம் மட்டுமே, அதுதான் அவரது பிம்பம் உடையாமல் காப்பாற்றுகிறது, ஒரு ரகசிய இயக்கம் நடத்துபவருக்கு அது பலம், ஆனால் ஜனநாயகாம் பேசி வெளியில் பணிசெய்ய வேண்டியவருக்கு உது பலவீனம். செயலில் இறங்குவரை பிம்பம் கலையாது பாதுகாக்க வேண்டும், பிம்பம் கலையாத வரை எவ்வளவுகாலம் என்றாலும் செயலில் இறங்காமல் அறிக்கை போர்களை மட்டும் விட்டுகொண்டு இருக்கலாம்.

  • தொடங்கியவர்

... புலத்தில் தண்டச்சோறுகள் நிம்மதி/நித்திரைகளை இழக்க தொடங்கி விட்டார்கள்!!! ... அகப்பட்டிருக்கும் பணம்/பதவி/டாம்பீக வாழ்வுக்கு உலை வரப் போகிறது!!!! ... சனம் இன்னும் கொஞ்ச நாளில் தெருக்கு தெரு இந்த தண்டச்சோறுகளை உதைத்து மிதிக்கா விட்டால் பாருங்கள்!!! .... ஏதோ எம்மக்களுக்கு இந்த தண்டச்சோறுகளிடமிருந்து விடுதலை கிடைக்க தொடங்கி இருக்கிறது!!!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

... புலத்தில் இனி தண்டச்சோறுகள் நிம்மதி/நித்திரைகளை இழக்க தொடங்கி விட்டார்கள்!!! ... அகப்பட்டிருக்கும் பணம்/பதவி/டாம்பீக வாழ்வுக்கு உலை வரப் போகிறது!!!! ... சனம் இன்னும் கொஞ்ச நாளில் தெருக்கு தெரு இந்த தண்டச்சோறுகளை உதைத்து மிதிக்கா விட்டால் பாருங்கல்!!! .... ஏதோ எம்மக்களுக்கு இந்த தண்டச்சோறுகளிடமிருந்து விடுதலை கிடைக்க தொடங்கி இருக்கிறது!!!!!

ஒட்டுமொத்த புலிகளையும் மூர்க்கமாக எதிர்க்கும் நீங்கள், பெரிய புலியும், தலைமைபுலியின் சட்ட ஆலோசகரான உருத்திர குமாருக்காக மாஞ்சு மாஞ்சு எழுதுறத பாக்க எனக்கு எதோ சந்தேகமாக கிடக்கு. <_<:blink: :blink: :blink:

  • தொடங்கியவர்

... உலகெங்கும் ஜனநாயகப் போராட்டாங்கள் சூடு பிடித்திருக்கின்றன ... ஆட்சியை தம் இஷ்டத்துக்கு எடுத்து பதவி/பணங்களை அனுபவித்தவர்களை மக்கள் தூக்கி எறிகிறார்கள்!!! ... இங்கு புலத்திலும் கடந்த 30 வருடங்களாக தமிழ் தேசியத்தின் பெயரால் பதவி/மக்களின் பணத்தை சுருட்டும் கும்பலை நாம் எப்போது தூக்கி எறியப் போகிறோம்????????????????????????????????>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

  • தொடங்கியவர்

ஒட்டுமொத்த புலிகளையும் மூர்க்கமாக எதிர்க்கும் நீங்கள், பெரிய புலியும், தலைமைபுலியின் சட்ட ஆலோசகரான உருத்திர குமாருக்காக மாஞ்சு மாஞ்சு எழுதுறத பாக்க எனக்கு எதோ சந்தேகமாக கிடக்கு. <_<:blink: :blink: :blink:

... ஆமா, ... சந்தேகப்பட .... கோட்டைகளும், கோபுரங்களும் தானே இவ்வளவு காலமும் கட்டி வைத்திருகிறீர்கள் ... நாம் தகர்த்து விட்டாலும் என்று!!!!

... பணத்தை பிணமாக வைத்திருந்தும் ஓர் தலைமையை காப்பாற்றத் தெரியாத ஜடங்கள், பின் அதனை மறைக்க இன்றுவரை இல்லாத பொல்லாத பொய்களும் புரட்டுக்களும் ...... அதற்கு மேல் அங்கு கட்ட கோவணமும் இல்லை, உண்ண மலம் கூட இல்லாமல் தெருநாய்களிலும் கேவலமாக மக்கள் ...... உதுக்குள் சந்தேகம்?????????!!!!!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

... உலகெங்கும் ஜனநாயகப் போராட்டாங்கள் சூடு பிடித்திருக்கின்றன ... ஆட்சியை தம் இஷ்டத்துக்கு எடுத்து பதவி/பணங்களை அனுபவித்தவர்களை மக்கள் தூக்கி எறிகிறார்கள்!!! ... இங்கு புலத்திலும் கடந்த 30 வருடங்களாக தமிழ் தேசியத்தின் பெயரால் பதவி/மக்களின் பணத்தை சுருட்டும் கும்பலை நாம் எப்போது தூக்கி எறியப் போகிறோம்????????????????????????????????>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

உங்களையும் நீங்கள் சார்ந்த கட்சியையும்தானே ஜனங்கள் தூக்கி எறிந்து கனகாலம் ஆச்சுதே :lol: :lol: :lol:

... உலகெங்கும் ஜனநாயகப் போராட்டாங்கள் சூடு பிடித்திருக்கின்றன ... ஆட்சியை தம் இஷ்டத்துக்கு எடுத்து பதவிஃபணங்களை அனுபவித்தவர்களை மக்கள் தூக்கி எறிகிறார்கள்!!! ... இங்கு புலத்திலும் கடந்த 30 வருடங்களாக தமிழ் தேசியத்தின் பெயரால் பதவிஃமக்களின் பணத்தை சுருட்டும் கும்பலை நாம் எப்போது தூக்கி எறியப் போகிறோம்????????????????????????????????

நெல்லையான், உருத்திரகுமாருக்கு பின்னால் மறைந்திருக்கும் மாயாவிகளும் கடந்த முப்பது வருடத்திற்குள் செயற்பட்டவர்கள் தான் என்பதை மிக இலகுவாக மறந்துவிட்டீர்கள்.

Edited by aathirai

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையான்,

உருத்திரகுமாருக்கு பின்னால் மறைந்திருக்கும் மாயாவிகளும் கடந்த முப்பது வருடத்திற்குள் செயற்பட்டவர்கள் தான் என்பதை மிக இலகுவாக மறந்துவிட்டீர்கள்.

தங்களது காட்டிக்கொடுப்பின் உச்சநிலை இது.

எதிரி யார்

நண்பர் யார்..??? என்றறியாது வைக்கோல் பட்டறை நாயின் வேலையில் எம்மினம் இறங்கியிருப்பது மிகுந்தவேதனை தருகிறது.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://ibctamil.fm/Neeyarneeram.html

Please listen part 2 from 10 mins

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://ibctamil.fm/Neeyarneeram.html

Please listen all of this in your own time, especially part 2 and 3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.