Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்முலா1 2011 - Formula1 2011

Featured Replies

  • தொடங்கியவர்

இரண்டாவது போட்டி கோலாலம்பூர் - மலேசியாவில நடைபெறுகிறது.

பரீட்சார்த்த ஓட்டம் இன்று காலை இடம்பெற்றது. Mark Webber தனது Red Bull காரில் அதி வேகமாக ஒடியிருந்தார்.

HRT கார் சென்ற தடவை போட்டியில் பங்குபெற்றாதமை தொடர்பாக ஸ்பானிய விளையாட்டுச் சம்மேளனம் தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தது. இது ஸ்பெயின் நாட்டுக்கு அவமானத்தை உண்டாக்கியுள்ளதாக அது தெரிவித்திருந்தது. சில உதிரிப் பாகங்கள் சரியான நேரத்தில் தயாரிக்கப் படாததாலேயே HRT கார்கள் பரீட்சார்த்த ஓட்டங்களைக் கூட முன்னெடுக்கவில்லை. கார்த்திகேயன் ஒரு தடவைதான் அவுஸ்திரேலிய ஓடுபாதையைச் சுற்றி வந்தார்.

9334.jpg

கார்த்திகேயனின் கார்

படம் : ESPNF1

இன்று கார்த்திகேயன் பரீட்சார்த்த ஓட்டத்தின்போது 22 ஆவது இடத்தைப் பெற்றார். அவரின் பின்னே 3 கார்கள் உள்ளன. இதே போன்று நாளையும் தெரிவுப் போட்டியில் ஓடினால் போட்டியில் பங்குகொள்ளும் தகமையைப் பெறுவார்.

442.jpg

படம் : ESPNF1

கோலாலம்பூர் ஓடுபாதை 5.543 கிலோமீற்றர் நீளமானது. இரண்டு நேர்கோடுகளையும் 15 குறுகிய வளைவுகளையும் கொண்டுள்ளது. இந்த இரு நேர்கோடுகளில் அதி வேகமாக ஓடுவதற்காக காரின் பின் சிறகுகள் முக்கிய பங்கினை வகிக்கும்.

நாளை காலை ஐரோப்பிய நேரம் காலை 7 மணிக்கும் இரண்டாவது பரீட்சார்த்த ஓட்டமும் காலை 10 மணிக்கு தெரிவுப் போட்டியும் நடைபெறும்.

ஞாயிறு காலை 10 மணிக்குப் போட்டி ஆரம்பமாகும்.

  • Replies 67
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் மேலே குறிப்பிட்டது போலன்றி ஓட்ட விதிகளின்படி முதலாவது குறைந்த நேரத்தில் ஓடியவரை விட 107 வீதத்திற்கு அதிகமான நேரத்தில் ஓடியவர்கள் போட்டியில் பங்குபற்ற முடியாதாம்.

இதன்படி கார்த்திகேயனும் அவரது சக போட்டியாளரும் இப் போட்டியிலிருந்து நீக்கப்பட்டனர். :(

இவர்களது கார்கள் போட்டியில் பங்குபற்ற முன்னர் சரியான முறையில் தயார்படுத்தப் படவில்லை.

------

கார்த்திகேயன் இந்தப் போட்டியிலிருந்து, நீக்கப் பட்டது கவலை அளிக்கும் விடயம்.

இந்தியா கிரிக்கெட் போட்டியில் செலுத்தும் அக்கறையை மற்றைய விளையாட்டுக்களிலும் கவனம் செலுத்தினால் நல்லது.

அல்லது... தமிழர் வெற்றிக் கொடி கட்டும் போட்டிகளான காரோட்டம், சதுரங்கம் (செஸ்) போன்றவற்றில் அக்கறைப் படவில்லை என்றே.... நினைக்க வேண்டும்.

  • தொடங்கியவர்

கார்த்திகேயன் இந்தப் போட்டியிலிருந்து, நீக்கப் பட்டது கவலை அளிக்கும் விடயம்.

இந்தியா கிரிக்கெட் போட்டியில் செலுத்தும் அக்கறையை மற்றைய விளையாட்டுக்களிலும் கவனம் செலுத்தினால் நல்லது.

அல்லது... தமிழர் வெற்றிக் கொடி கட்டும் போட்டிகளான காரோட்டம், சதுரங்கம் (செஸ்) போன்றவற்றில் அக்கறைப் படவில்லை என்றே.... நினைக்க வேண்டும்.

4974.jpg

HRT சார்பாக சென்ற வருடம் போட்டிகளில் பங்குபற்றிய Karun Chandhok தமிழ்நாட்டில் பிறந்தவர். இந்த வருடம் Team Lotus கார் நிறுவனத்தின் 3ஆவது ஓட்டுனராக உள்ளார். முதல் இரண்டு ஓட்டுனர்களில் ஒருவர் போட்டியில் பங்குபெற முடியாத நிலையிலேயே காருண் போட்டியில் பங்குபெற முடியும். இவ் வருடம் முதன் முதலாக இந்தியாவில் போர்முலா 1 போட்டி நடைபெற இருப்பதால் அப் போட்டியில் பங்குபற்ற அந் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

-----

HRT சார்பாக சென்ற வருடம் போட்டிகளில் பங்குபற்றிய Karun Chandhok தமிழ்நாட்டில் பிறந்தவர். இந்த வருடம் Team Lotus கார் நிறுவனத்தின் 3ஆவது ஓட்டுனராக உள்ளார். முதல் இரண்டு ஓட்டுனர்களில் ஒருவர் போட்டியில் பங்குபெற முடியாத நிலையிலேயே காருண் போட்டியில் பங்குபெற முடியும். இவ் வருடம் முதன் முதலாக இந்தியாவில் போர்முலா 1 போட்டி நடைபெற இருப்பதால் அப் போட்டியில் பங்குபற்ற அந் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Karun Chandhok தமிழ் நாட்டில் பிறந்திருந்தாலும்..... கோயம்புத்தூரில் பிறந்த ஒரிஜினல் தமிழன் நரேன் கார்த்திகேயன் இல்லாத காரோட்டம், எனக்கு நிறைந்த மகிழ்ச்சி அளிக்கவில்லை.

HRT என்பதின் அர்த்தம் என்ன? அதனைப் பற்றி சிறு விளக்கம் அளிக்கலாமே...., ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம்.

  • தொடங்கியவர்

HRT என்பது Hispania Racing F1 Team என்பதைக் குறிக்கும் (ஸ்பெயின்). Campos Grand Prix என்ற பெயரில் 15 வருடத்துக்கு முன்னர் இந் நிறுவனம் ஆரம்பிக்கப் பட்டிருந்தாலும் போர்முலா1 அல்லாத வேறு போட்டிகளிலேயே இது பங்குபற்றியது.

போர்முலா1 இலிருந்து Toyata நிறுவனம் 2009 இல் வெளியேறியதும் 2010 இல் BMW வெளியேறியதும் 2010 இல் HRT போர்முலா1 இல் நுளைவதற்கான சந்தர்ப்பத்தை உண்டாக்கியது. ஆரம்பத்தில் Toyata நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடனே தனது காரினை வடிவமைத்தது. சில மாதத்திலேயே Toyata நிறுவனத்தின் உறவை முறித்துக் கொண்டது.

HRT போர்முலா1 போட்டியாளர்களின் வெற்றிடத்தைப் பயன்படுத்தி அவசரமாக உள்நுளைந்து விட்டதாகவே தோன்றுகிறது. ஏனைய போட்டியாளர்களின் நிலைக்கு வர வேண்டுமாயின் அனுபவமுள்ள தொழில்நுட்பவியலாளர்களை கொண்டிருக்க வேண்டும். அதற்கான பண வசதி இவர்களிடம் இல்லை. அடுத்து இக் கார்களில் பயன்படுத்தப்படும் Cosworth எஞ்சினின் வேகம் போதாது.

புதிய நிறுவனமாக இருப்பதாலும் திறமையை வெளிப்படுத்தாததாலும் இவர்களுக்குப் போதிய அளவு முதலீட்டாளர்கள் கிடைக்கவில்லை. இவர்களின் கார் ஓட்டுனர்கள் ஏனைய கார் ஓட்டுனர்களைப் போல் சம்பளம் பெறுவதில்லை. மாறாக கார் ஓட்டுனர்கள் தான் நிறுவனத்திற்கும் பணம் (சில மில்லியன் டொலர்கள்) கொடுக்க வேண்டும். இதற்காக ஓட்டுனர்களே முதலீட்டாளர்களைக் கொண்டு வருவார்கள். இதன்படி கார்த்திகேயனுக்கு sponsor செய்வது TATA நிறுவனம். TATA நிறுவனத்தின் விளம்பரத்தைக் கார்த்திகேயனின் காரில் காணலாம். கார்த்திகேயன் தனது திறமையை வெளிப்படுத்தினால் வேறு முதலீட்டாளர்கள் தாமாகவே முன்வந்து முதலீடு செய்வார்கள். அல்லது வேறு கார் நிறுவனங்கள் அவரை அழைப்பார்கள்.

  • தொடங்கியவர்

இன்னும் சற்று நேரத்தில் கோலாலம்பூரில் இரண்டாவது போர்முலா போட்டி ஆரம்பமாகவுள்ளது. நேற்றைய தெரிவுப் போட்டியில் கார்த்திகேயன் கடைசியாக வந்தாலும் முதலில் வந்தவரை விட 107 வீத நேரத்திற்கு உட்பட்டிருப்பதால் போட்டியில் பங்குபற்றும் தகுதியைப் பெறுகிறார். இதுதான் அவரின் முதலாவது போட்டி.

வாழ்த்துக்கள்.

image1pf.png

போட்டிகளை ஐரோப்பிய தொலைக் காட்சிகளில் நேரடியாகப் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சற்று நேரத்தில் கோலாலம்பூரில் இரண்டாவது போர்முலா போட்டி ஆரம்பமாகவுள்ளது. நேற்றைய தெரிவுப் போட்டியில் கார்த்திகேயன் கடைசியாக வந்தாலும் முதலில் வந்தவரை விட 107 வீத நேரத்திற்கு உட்பட்டிருப்பதால் போட்டியில் பங்குபற்றும் தகுதியைப் பெறுகிறார். இதுதான் அவரின் முதலாவது போட்டி.

வாழ்த்துக்கள்.

நரேன் கார்த்திகேயனுக்கு வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

சென்ற வாரம் கோலாலம்பூரில் நடந்த போட்டியில் கார்த்திகேயன் 14 ஆவது சுற்றிலேயே போட்டியைக் கைவிட நேர்ந்தது. அவரது எஞ்சினில் ஏற்பட்ட கோளாறே இதற்குக் காரணம்.

இந்த இரண்டாவது போட்டியிலும் Sebastian Vettel முதலாவதாக வந்தார்.

மூன்றாவது போட்டி வரும் ஞாயிறு காலை ஐரோப்பிய நேரம் 9 மணிக்கு சங்காயில் (சீனா) நடைபெறும். தெரிவுப் போட்டி நாளை சனிக்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பமாகும்.

தற்போது அங்கு நடைபெற்ற பரீட்சார்த்த ஓட்டங்கள் நடைபெறுகின்றன.

ஞாபகப் படுத்தியமைக்கு நன்றி இணையவன் அண்ணா :)

  • தொடங்கியவர்

இன்று சீனாவில் இரண்டு இலட்சம் பார்வையாளர்களுக்கு மத்தியில் மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

யாராலும் வெற்றிகொள்ள முடியாது என்று கருதப்பட்ட Sebastian Vettel ஐ Lewis Hamilton வீழ்த்தினார். 18 ஆவது இடத்திலிருந்து ஆரம்பித்த Mark Webber மிகவும் திறமையாக ஓடி மூன்றாம் இடத்தினைக் கைப்பற்றினார். கடைசியாக 24 ஆவது இடத்திலிருந்து ஆரம்பித்த கார்த்திகேயன் 21 வரை முன்னேறி கடைசித் தருணத்தில் கடைசியாக வந்தார். அவரது மூன்றாவது போட்டியில் இது ஒரு முன்னேற்றமாகவே கருதப்படுகிறது.

இன்று 2 ஆவது 3 ஆவது இடங்களை Red Bull கார் வென்றிருப்பதால் மொத்தமாக 105 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தில் உள்ளது.

கார் ஓட்டுனர்கள் வரிசையில் இன்றுடன் மொத்தமாக 68 புள்ளிகளைப் பெற்று Sebastian Vettel முதலாம் இடத்தில் உள்ளார்.

  • 3 weeks later...

இவ்வாரம் துருக்கி- இஸ்த்தான்புலில் நடைபெறுகிறது

முதல் & இரண்டாவது ஒத்திகை

http://news.bbc.co.uk/sport1/hi/motorsport/formula_one/results/9418519.stm

http://news.bbc.co.uk/sport1/hi/formula_one/13311175.stm

Jenson Button fastest in Turkish Grand Prix practice

http://news.bbc.co.uk/sport1/hi/formula_one/13307427.stm

Sebastian Vettel suffers big crash in soggy Istanbul

http://news.bbc.co.uk/sport1/hi/formula_one/13307236.stm

  • தொடங்கியவர்

Sebastian Vettel suffers big crash in soggy Istanbul

http://news.bbc.co.uk/sport1/hi/formula_one/13307236.stm

நேற்று நடந்த் பரீட்சார்த்த ஓட்டத்தின்போது Sebastian Vettel தனது காரினை சுவரில் மோதி உடைத்து விட்டார். மழை பெய்ததால் ஓடுஆதை சறுக்கலாக இருந்தது. சிலமாதங்களாக சிறுகச் சிறுக காரினை அவதானித்து மாற்றங்கள் செய்யப்பட்ட கார் உடைந்து விட்டது. ஆனால் Red Bull தொழில்நுட்பவியலாளர்கள் மிகக் குறுகிய நேரத்தில் அவரது காரினை மீண்டும் ஓடக்கூடிய நிலைக்குக் கொண்டு வந்துள்ளனர். அதுமட்டுமல்ல அவரது கார் இன்று மத்தியானம் நடந்த தெரிவுப் போட்டியில் முதலாவதாகவும் வந்துள்ளது. கார்த்திகேயன் தெரிவுப் போட்டியில் இந்தத் தடவையும் கடைசியாக வந்துள்ளார். காருண் சந்தோக் நேற்றைய பரீட்சார்த்தப் போட்டிகளில் மட்டும் பங்கேற்றிருந்தார்.

நேற்று நடந்த் பரீட்சார்த்த ஓட்டத்தின்போது Sebastian Vettel தனது காரினை சுவரில் மோதி உடைத்து விட்டார். மழை பெய்ததால் ஓடுஆதை சறுக்கலாக இருந்தது. சிலமாதங்களாக சிறுகச் சிறுக காரினை அவதானித்து மாற்றங்கள் செய்யப்பட்ட கார் உடைந்து விட்டது. ஆனால் Red Bull தொழில்நுட்பவியலாளர்கள் மிகக் குறுகிய நேரத்தில் அவரது காரினை மீண்டும் ஓடக்கூடிய நிலைக்குக் கொண்டு வந்துள்ளனர். அதுமட்டுமல்ல அவரது கார் இன்று மத்தியானம் நடந்த தெரிவுப் போட்டியில் முதலாவதாகவும் வந்துள்ளது. கார்த்திகேயன் தெரிவுப் போட்டியில் இந்தத் தடவையும் கடைசியாக வந்துள்ளார். காருண் சந்தோக் நேற்றைய பரீட்சார்த்தப் போட்டிகளில் மட்டும் பங்கேற்றிருந்தார்.

Red Bull தொழில்நுட்பவியலாளர்கள் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்கள் :)

http://news.bbc.co.uk/sport1/hi/motorsport/formula_one/results/9418523.stm

இன்று நடந்த தெரிவுப் போட்டியில் Lewis Hamilton நான்காவது இடத்தில் வந்துள்ளார் :(

  • கருத்துக்கள உறவுகள்

Power of red bull. செவ்வெருதின்.. சக்தி..! :D:)

Power of red bull. செவ்வெருதின்.. சக்தி..! :D:)

பார்க்க நல்லாத்தான் இருக்கு :D^_^ இணைப்பிற்கு நன்றி நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Power of red bull. செவ்வெருதின்.. சக்தி..! :D:)

கிட்டத்தட்ட உது மாதிரித்தான் நானும் அங்கை சயிக்கிள்கடைக்காரனே கைவிட்ட சயிக்கிளை வைச்சு .....அவையள் :wub: :wub: :wub: பள்ளிக்கூடம் முடிஞ்சு வாற நேரம்பாத்து .....சந்திக்கடைக்கு முன்னாலை ...இரண்டு ரவுண் அந்தமாதிரி வீச்சாய் ஓடி காலாலை சடுன் ப்ரேக் பிடிச்சனெண்டால்.......அந்த மக்கி றோட்டிலை வாற புகையே தனியழகு :)

கிட்டத்தட்ட உது மாதிரித்தான் நானும் அங்கை சயிக்கிள்கடைக்காரனே கைவிட்ட சயிக்கிளை வைச்சு .....அவையள் :wub: :wub: :wub: பள்ளிக்கூடம் முடிஞ்சு வாற நேரம்பாத்து .....சந்திக்கடைக்கு முன்னாலை ...இரண்டு ரவுண் அந்தமாதிரி வீச்சாய் ஓடி காலாலை சடுன் ப்ரேக் பிடிச்சனெண்டால்.......அந்த மக்கி றோட்டிலை வாற புகையே தனியழகு :)

நீங்கள் அடிச்ச சடன் ப்ரேக்கில சைக்கிள் ரிம்மாச்சும் மிச்சம் இருந்துதா கு.சா. அண்ண? :D:lol:

எல்லாம் மலரும் நினைவுகளாக்கும்... ^_^

Edited by குட்டி

  • 1 month later...

Canadian Grand Prix

Montreal, Sunday, 12 June 2011

முதலிடம்:

1 Great Britain J Button McLaren

இரண்டாமிடம்:

2 Germany S Vettel Red Bull

மூன்றாமிடம்:

3 Australia M Webber Red Bull

நான்காமிடம்:

4 Germany M Schumacher Mercedes

L Hamilton (ret.) McLaren

http://news.bbc.co.uk/sport1/hi/motorsport/formula_one/results/default.stm

  • தொடங்கியவர்

இன்று நடந்த 7ஆவது போட்டியில் இறுதிவரை Vettel தான் முதலில் இருந்தார். கடைசி 70 ஆவது சுற்றில் அவரின் பிழையினால் Button முதலாவதாக வர நேர்ந்தது. இருந்தாலும் Button முயற்சியைப் பாராட்ட வேண்டும்.

இதற்கு முன்னர் நடைபெற்ற 4ஆம் 5ஆம் போட்டிகளில் Hamilton மூர்க்கத் தனமாக ஓடுகிறார் என்று சர்ச்சைகள் எழுந்தன. Formula1 சம்மேளனமும் அவ்வாறு ஓடுவது ஏனயவர்களுக்கு இடைஞ்சலாகவும் ஆபத்தாகவும் இருக்குமென எச்சரிக்கை செய்திருந்தது. அதையும் மீறி Monaco வில் நடந்த 6ஆவது போட்டியில் ஒரு விபத்திற்கும் சில அசம்பாவிதங்களுக்கும் Hamilton காரணமாக அப் போட்டியில் ஓடிக்கொண்டிருக்கும்போதே நடுவர்களினால் அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. ஓடிக்கொண்டிருந்தவர் ஓட்டப்பாதையிலிருந்து விலகி தரிப்பிடத்திற்குச் சென்று மறுபடி ஓட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்பதே அத் தண்டனையாகும். இதனால் அவருக்கு 6 ஆவது இடமே கிடைத்தது.

Hamilton இன் காரில் அண்மையில் செய்யப்பட்ட மாற்றங்கள் நல்ல முன்னேற்றத்தைத் தந்துள்ளது. அதேபோல் Ferrari யிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு Red Bull லோடு போட்டி போடுமளவிற்கு முன்னேறியுள்ளது. ஆயினும் ஒரு ஆய்வாளர் இவ்வாறு கூறுகிறார் : 'Vettel ஒரு 24 வயதுப் பெடியன். மற்றவர்கள் என்னதான் சிறந்த கார் வைத்திருந்தாலும் இவனை முறியடிப்பது கடினம். அதிலும் அவர் வேகமான காரினை வைத்திருப்பதும் பிழை விடாமல் ஓடும் திறனைக் கொண்டிருப்பதும் அவர் உலகச் சம்பியன் ஆவதைத் தடுக்க முடியாது.'

Hamilton ஒரு பேட்டியில், தானும் Button, Alonso, Webber ஆகியோரும் போட்டியிடுவது 2ஆவது - மூன்றாவது இடங்களைப் பிடிப்பதற்காகவே என்று கூறினார்.

  • தொடங்கியவர்

இன்றைய போட்டியில் கார்த்திகேயனில் நல்ல முன்ணேற்றம் தெரிகிறது. கடைசிக்கு முதலாவதாகப் புறப்பட்டு 14 ஆவதாக வந்துள்ளார்.

இதுவரை நடந்த போட்டிகளின்படி புள்ளி விபரங்கள்.

image2kue.png

image3dt.png

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

எட்டாவது போட்டி (ஐரோப்பா) நாளை Valence (ஸ்பெயின்) இல் ஆரம்பமாகிறது.

இந்த ஓடுபாதை பற்றிய சில விபரங்கள் :

5.4 கிலோ மீற்றர் தூரத்தையுடைய ஓடுபாதை 25 வளைவுகளைக் கொண்டுள்ளது. இதில் 12 ஆவது வளைவில் காரின் வேகத்தைத் திடீரெனக் குறைக்கும்போது ஓட்டுனர் 5G க்கு அதிகமான அழுத்தத்தை உணர வேண்டியிருக்கும். மொத்தமாக 57 சுற்று ஓடி முடிக்கும் ஓட்டுனர் ஒருவர் சராசரியாக 3 650 தடவை கியர் மாற்றியிருப்பார்.

நேற்று நடைபெற்ற பரீட்சார்த்தப் போட்டியில் Ferrari முன்நிலையில் நின்றது.இது Ferrari காரில் அண்மையில் செய்யப்பட்ட aerodynamic மாற்றங்களின் பெறுபேறு என்று கூறப்பட்டது. ஒவ்வொரு காரின் வேகமும் ஒவ்வொரு ஓடுபாதையின் தன்மையைப் பொறுத்து வேறுபடுகிறது. இதன்படி Red Bull காரில் நேற்றைய ஓட்டத்தின் தரவுகளைக் கொண்டு தொழில்நுட்பவியலாளர்கள் இரவோடு இரவாக சில மாற்றங்களைச் செய்துள்ளனர். இதனால் இன்றைய தெரிவுப் போட்டியில் இரண்டு Red Bull கார்களும் முதலாவது - இரண்டாவது நிலைக்கு வந்துள்ளன. Hamilton மூன்றாவது.

Vettel மீண்டும் ஒருமுறை தன்னை யாராலும் அசைக்க முடியாது என்பதை நிரூபித்துள்ளார்.

10661.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புகளுக்கு நன்றி இணையவன்! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

d7144a43-3ede-43f6-8fcc-1632986cd7da_S_secvpf.jpg

வாலன்சியா, ஜூன். 27-

இந்த ஆண்டுக்கான “பார்முலா-1” கார் பந்தயத்தில் மொத்தம் 19 சுற்றுகள் நடத்தப்படுகிறது. 8-வது சுற்று பந்தயமான ஐரோப்பிய கிராணட் பிரீ “பார்முலா-1” பந்தயம் ஸ்பெயினில் உள்ள வாலன்சியாவில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

இதில் ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் வெற்றி பெற்றார். அவர் பந்தயதூரத்தை ஒரு மணி 39 நிமிடம் 36 வினாடியில் கடந்தார். இந்த சீசனில் வெட்டல் பெற்ற 6-வது வெற்றியாகும். அவர் ஆஸ்திரேலியா, மலேசியா, துருக்கி, ஸ்பெயின், மோனோக்கா ஆகிய இடங்களில் “பார்முலா-1” கார் பந்தயத்திலும் வெற்றி பெற்று இருந்தார்.

சீனாவில் நடந்த பந்தயத்தில் ஹேமில்டனும், கனடா பந்தயத்தில் ஜென்சன் பட்டனும் வெற்றி பெற்று இருந்தனர். பெர்னாண்டோ அலோன்சா 2-வது இடத்தையும், மார்க் வெபர் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

இதுவரை நடந்த 9 சுற்றுகள் முடிவில் வெட்டல் 180 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். பட்டன் (இங்கிலாந்து), மார்க் வெபர் (ஆஸ்திரேலியா) தலா 109 புள்ளிகளுடனும் உள்ளனர்

http://www.maalaimalar.com

அப்பவும் நான் சொன்னனான்......இவங்கள் தான் வீச்சாய் ஓடுவாங்கள் இல்லாட்டி இவங்கடை கார்தான் வீச்சாய் ஓடுமெண்டு....சொன்னால் கேட்டத்தானே :lol:

  • தொடங்கியவர்

இதுவரை நடந்த 9 சுற்றுகள் முடிவில் வெட்டல் 180 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். பட்டன் (இங்கிலாந்து), மார்க் வெபர் (ஆஸ்திரேலியா) தலா 109 புள்ளிகளுடனும் உள்ளனர்

அப்பவும் நான் சொன்னனான்......இவங்கள் தான் வீச்சாய் ஓடுவாங்கள் இல்லாட்டி இவங்கடை கார்தான் வீச்சாய் ஓடுமெண்டு....சொன்னால் கேட்டத்தானே :lol:

இனிவரும் போட்டிகளில் மூன்றில் வெற்றல் எதுவித புள்ளிகளும் எடுக்காமல் தோற்றால்கூட முன்நிலையிலேயே இருக்குமளவுக்கு இதுவரை நடந்து முடிந்த 8 போட்டிகளில் புள்ளிகளைக் குவித்து வைத்துள்ளார்.

வலன்ஸில் நடந்த போட்டியில் வெற்றல் துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட குண்டு போல் அழகிய வலன்ஸ் வீதிகளில் ஓடிக் கொண்டிருந்தார். கடைசி அரை மணிநேர ஓட்டத்தைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். கெலியிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளில் அழகிய கடற்கரை ஓரத்தில் அமைந்த வலன்ஸ் நகர் கோடை வெயிலில் அழகாகக் காட்சியளித்தது.

வெற்றலுடன் போட்டியிடுவதற்கு யாருமே இல்லாததால் அவரை அதிகமாக தொலைக்காட்சியில் காட்டவில்லை. இரண்டாம் மூன்றாம் நிலையில் ஓடியவர்களைத்தான் அதிகமாகக் காட்டினார்கள். அலன்சோவுக்கும் மார்க் வெப்பருக்கும் இடையிலான போட்டி இரசிக்கக் கூடியதாக இருந்தது.

அலன்ஸோ ஸ்பெயின் நாட்டவராகையால் Ferrari கொடியுடன் ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். அலன்ஸோ இரண்டாவது இடத்தில் வெற்றிபெற்றது அவரது இரசிகர்களை குதூகலிக்கச் செய்தது.

அடுத்த போட்டி பிரித்தானியாவின் Silverstone ஓடுபாதையில் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறும்.

Edited by இணையவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.