Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாவகச்சேரியில் முருகன் விக்கிரகங்கள் எடுப்பு

Featured Replies

சனிக்கிழமை , ஏப்ரல் 2, 2011

யாழ். சாவகச்சேரி வாரிவானேஸ்வரர் ஆலயக் திருக்குளத்திலிருந்து பன்னிரண்டு இந்து விக்கிரகங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளதாவது,

சாவகச்சேரி நீதிமன்ற வளவில் புராதன ஆலயத்திற்குரிய கட்டிட அழிபாடுகள் கிடைத்ததைத் தொடர்ந்து அவ் ஆலயம் பற்றிய பல தகவல்கள் அவ்ஊர் மக்களால் தினமும் வழங்கப்பட்டுவருகின்றன.

அவற்றுள் தற்போதைய வாரிவானேஸ்வரர் ஆலய முகாமையாளரால் தரப்பட்ட தகவல்கள் எமது ஆய்வை மேலும் முன்னெடுத்துச் செல்ல தூண்டுதலாக உள்ளன.

அவரது தகவல்களின்படி நகரத்திலுள்ள நீதிமன்றம், சந்தை மற்றும் அதன் சுற்றாடல்களில் கிடைத்த விக்கிரகங்களே ஆரம்ப காலங்களில் தற்போதைய வாரிவானேஸ்வரர் ஆலயத்தில் வைத்து வழிபடப்பட்டதாகவும், அவற்றில் ஏற்பட்ட சிதைவுகள் காரணமாக அவை அவ் ஆலய திருக்குளத்தில் போடப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இது உண்மையா என்பதை அறியும் நோக்கில் கடந்தவாரம் தொல்லியல் ஆய்வு உத்தியோகத்தர் மதியழகன் மற்றும் தொல்லியல், வரலாறு மாணவர்களுடன் இணைந்து அத்திருக்குளத்தில் மேற்கொண்ட ஆய்வின் போது பன்னிரெண்டு இந்து விக்கிரகங்களை மீட்க முடிந்தது.

கருங்கல்லால் வடிவமைக்கப்பட்ட அவ் விக்கிரகங்கள் அனைத்திலும் உடைவுகள் காணப்படுவதால் ஆகமவிதிக்கு ஏற்ப இவ்விக்கிரகங்கள் ஆலயத்திருக்குளத்தில் போடப்பட்டுள்ளதென்பது தெரிகிறது.

இங்கு கிடைத்த விக்கிரகங்களுள் முருகன், வள்ளி, சூரியன், சந்திரன், நந்தி என்பன சிறந்த தொழில்நுட்பத்துடன் செதுக்கப்பட்டுள்ளதை காணமுடிகிறது.

இவற்றை ஆய்வு செய்த தமிழகத் தொல்லியலாளரான பேராசிரியர் இராசவேலு, கலாநிதி ராஜகோபால், சிறிதரன் போன்றோர் பழமைவாய்ந்த இவ்விக்கிரகங்கள் இலங்கை நாட்டு சிற்பிகளால் வடிவமைக்கப்பட்ட சுதேசகலைமரபுக்குரியதென குறிப்பிடுகின்றனர்.

கோயில் முகாமையாளர் கூறுவதுபோல் இவ்விக்கிரகங்கள் சாவகச்சேரி நீதிமன்ற சுற்றாடலில் கிடைத்தவையாக இருப்பின் இங்கு சிவன் ஆலயத்துடன் முருகன் ஆலயமும் முன்பொருகாலத்தில் இருந்திருக்கலாம் என கருத இடம் உண்டு.

இதையே திருக்குளத்தில் கிடைத்த முருகன் ஆலயத்துக்குரிய விக்கிரகங்கள் உறுதி செய்கின்றன. அதை எதிர்கால ஆய்வுகள் தான் உறுதிசெய்ய வேண்டும். என்றார்.

http://www.eelanatham.net/story/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

... உவர்கள் கல்லாக நெடுகத்தான் குந்தி இருக்கப்பார்க்கினம் ... அதிலும் பார்க்க நாலு சனத்து, உதை விற்றாலும் ஒரு நேர வயிற்றையாவது நிரப்பும்!!!! .

... உந்த நல்லூரை ஒருவரும் ஒன்றும் செய்கிறாங்களில்லை .... காசும் கோடிக்கணக்கிலாம் ... இப்ப வாற போற சிங்களவனுகளுக்கும், அத்தியடி ஒட்டுக்குத்திகளுக்கும் மால போட்டும், ஆராத்தி எடுப்பதிலும் தான் நிற்கினம் ...

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மத வழிபாட்டு முறைகளில் விக்கிரக வழிபாடு ஒரு ஆரம்பப்படியே. மனத்தை ஒரு நிலைப் படுத்த இயலாதவர்களுக்கு அவர்கள் 'ஒருநிலைப் படுத்தலை'(concentration ) இலகுவாக்கும் வகையில் விக்கிரகங்கள் அற்முகப் படுத்தப் பட்டன. இப்போது எல்லோரும் சடங்குகளில் மூழ்கி, அந்த முதலாவது படியிலேயே தங்கி விடுகின்றார்கள். சரியை,கிரியை மார்கங்களோடு மட்டும் திருப்தி அடைந்து விடுகின்றார்கள்.அதற்கப்பால் உள்ள யோகம்,ஞானம் போன்றவற்றை நினைத்துப்பார்க்க கூட முயல்வதில்லை.அதற்குரிய பக்குவ நிலையும் அவர்களுக்கு வரப்போவதில்லை.

இது வீட்டைக் கூடுவதை விட்டுத் தும்புத் தடியைக் கட்டிப் பிடிப்பது போல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.