Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Tamil national activist attacked in London

Featured Replies

  • தொடங்கியவர்

சில விடயங்கள் தெளிவாக விளங்குகிறது. தங்களுக்குள் மோதுப்பட்டுக் கொண்டிருக்கும் புலம்பெயர் அமைப்புகள் மக்களை விட்டு விலகிச் சென்று கனகாலம். இவர்களுக்கு புலம்பெயர்ந்த மக்களில் மனநிலை விளங்காமல் ஆடும் ஆட்டமே இந்த குடிமிப் பிடி சண்டைகள்.

இன்னமும் மே 19 முந்திய மனநிலையிலே இருக்கிறார்கள். புலிகள் நாட்டில் போராடியதால், அவர்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் முன்பு மதிப்பிருந்தது. அந்த புலி விருட்சமே அடியோடு சரிந்தபின் உச்சாணிக் கொப்பில் இன்னும் பசுமையாய் இருக்கும் சில இலைகள் தாங்கள் என்பதை மறந்து விட்டார்கள்.

மே 19 இற்குப் பின்னான இவர்களின் செயற்பாடுகளைப் பார்த்து விட்டு, புலத்தமிழர்கள் இவர்களை விட்டு ஒதுங்கி விட்டார்கள்.

எங்கள போராட்டம் தோல்வியில் முடிந்ததற்கு காரணம் ஒற்றுமையின்மை என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். தமிழனின் விடுதலைக்காக புறப்பட்ட 27 மேற்பட்ட இயக்கங்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டதன் விளைவே இந்த அவல நிலை என்பதில் தெளிவாக உள்ள மக்கள், இவர்களுக்குப் பின்னால் முன்பு போல மந்தைகளாகப் போகப் போவதில்லை.

இணையங்களில் ஆரம்பித்து தெருக்களில் தற்போது தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்ளும் இந்த குழுக்கள் கால ஓட்டத்தில் மறைந்து போவார்கள்.

இதன் விளைவால் தமிழர்களின் விடுதலைக்காக உழைக்கக் கூடிய ஒரு நேர்மையான தலைமை உருவாகினாலும் சனம் அதனை நம்பப் போவதில்லை.

அன்பான நண்பர்களே ஊடக ஜாம்பவான்களே,

எதியானவன் தமிழர்களுக்கு, தான் நேரடியாக செய்கின்ற அட்டகாசங்களையும் அனியாயங்களையும் நாசூக்காக எம்மவர் தலைமீது பழிபோட்டுவிட்டு இலாவகமாக தப்பி விடுகின்றான். அதே வேளை பிறரையும் எம் இனத்தையும் வைத்துக்கொண்டு எமக்கே குழி தோண்டிக்கொண்டு இருக்கின்றான். இந்த விடயத்தில் சிங்களம் ஏன் இந்தியா சர்வதேசம் கூட ஒற்றுமையாக நிற்கின்றது. இவர்கள் எதைச்செய்தாலும் அதில் புலி எதிர்ப்பு, தாயக இலட்சியத்தை தகர்த்தல் என்பதே இலக்காக இருக்கும். அதற்கேற்ப சிங்கள ஊடகங்களும் ஒத்து உருவகபப்டுத்தி ஊதும்.

ஆனால் நாம் என்ன செய்கின்றோம். நிரூபிக்கப்படாவிட்டாலும் நிரூபணமானாலும் எதிரியையோ அன்றி எதிரிகளின் சித்தாந்தத்தையோ தாக்காமல், குறை கூறாமல், பழி சுமத்தாமல் எல்லாமே எமக்குள்தான் நடக்கின்றது, நாம் தான் காரணம் என்று நினைக்கின்றோம். அதனை ஊதி பெரிதாக்கி முரண்பாடுகளை வலுப்படுத்த பாடுபடுகின்றோம். இதற்கு முக்கிய பங்காளியாக எம் ஊடகங்களே பயன்படுகின்றன.

பாதிக்கப்பட்டவர் உண்மையாக தன்னை தாக்கியவர்களின் நோக்கம் மற்றும் அவரின் எதிர்கால பாதுகாப்பையே இப்படியான செய்திகள் புறம் தள்ளிவிடுகின்றன.

முள்ளிவாய்க்காலின் பின்னர் செயற்பாட்டாளர்கள் பலர் தாக்கப்பட்டு இருக்கின்றார்கள். பலரின் குழந்தைகள் கூட வெளி நாடுகளில் நச்சரிக்கபட்டுள்ளார்கள். கனடா, இலண்டன், ஜேர்மனி ஆகிய இடங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடந்துள்ளன. அப்படியாயின் ஏன் எல்லாவற்றையும் ஊடகங்கள் வெளிக்கொண்டுவரவில்லை.

அதற்கு காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

ஒன்று சில தாக்குதல்கள் அவர்களின் கடந்தகால செயற்பாட்டின் பிரதி பலன்களாக இருக்கலாம்

இரண்டு தோல்வியாலும் பின்னடைவாலும் விரக்தியுற்ற மக்களின் வெளிப்பாடு

மூன்று தனிப்பட்ட பிரச்சினைகள்

நான்காவது சிங்கள அரசின் திட்டமிட்ட செயற்பாடுகள்.

ஐந்தாவது அந்தந்த நாடுகளின் சட்ட நடவடிக்கைகள் மற்றும் உள்ளூர் பொலிசாரின் விளையாட்டுக்கள்.

ஆறாவது குழு மோதல்கள்

ஆகவே..

ஆகவே தகவல்களை வெளிக்கொண்டு வருகின்றோம் என கூறி நாம் சில தப்பான ஊகங்களுக்கும் வழிவகுத்து விடுகின்றோம்.

மே மாதம் 2009 இற்கு பின்னர்.. விடுதலைப்புலி போராளிகள் பல நாடுகளில் தப்பி வந்துள்ளார்கள். பலர் உள் நாட்டில் இருக்கின்றார்கள். ஆனால் எங்கிருந்தாலும் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதோ அல்லது ஒர் அணியினர் மீது இன்னொருவர் தாக்குவதையோ செய்ய கூடாது என்ற கொள்கையில் முடிந்தளவு கடைப்பிடித்து வருகின்றார்கள். அதே போல புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் ஆதரவாளர்களும் அந்த முடிவுடன் செயற்பட வேண்டும்.

பஞ்சம் , பசி பட்டிணியால் எந்த போராளியும் களவு எடுக்கவில்லை, கொள்ளையடிக்கவில்லை, கொலை செய்யவில்லை. முடியாவிட்டால் செத்து இருக்கின்றார்கள். ஏன்? மாண்டுபோன எங்கள் மறவர்க்காக.. எம் இலட்சியத்திற்கு களங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக. இப்போதும் ஒரு வேளை கஞ்சியுடன் , கல்லுடைக்கும் தொழிலிலும், கூலி வேலையும் செய்து கொண்டு இருக்கின்றார்கள். என்றாலும் சில அத்து மீறல்கள் நடக்கத்தான் செய்கின்றன.

இவற்றை ஒழிக்க அனைவரும் முன்வரவேண்டும்.

23 வருடங்களாக நாட்டிற்காக உழைத்த ஓர் கால் இழந்த போராளி இயக்கச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சைக்கிளில் விறகு கட்டி சென்று விற்று தன் சீவியத்தை நடத்திக்கொண்டிருக்கின்றான். இப்படியானவர்களை மனதில் நிறுத்தி செயற்படுவோம்.

எதை செய்தாலும் அது எங்கள் எதிரிக்கு எதிராகவே.... எதை செய்தாலும் அது எங்கள் இலட்சியத்தை பலமூட்டவே என்று செயற்படுங்கள்.

எம் இலட்சியத்தை அடைவதற்கான முயற்சிகளை எல்லோரும் செய்யலாம். ஒருவர் செய்வது தவறாக தெரிந்தால் நீ இன்னொரு அமைப்பினை தேர்வு செய் அதற்கான சந்தர்ப்பங்கள் இப்போ நிறையவே உள்ளன.

இலட்சியம் ஒன்றாக இருந்தால் அந்த இலட்சியம் நோக்கிய பயண முடிவில் நாம் அனைவரும் என்றோ ஒரு நாள் சந்திப்போம். அந்த சந்திப்பில் சந்திக்க முடியாதவர்களை மக்கள் நிராகரிப்பார்கள். நாம் இப்போ எதற்கும் அவசரப்படத்தேவை இல்லை.

நன்றி

வணக்கம்

உமை

Edited by உமை

ராஜா செந்தூரன் புல்லரிக்குது வாசிக்க,அப்பிடி போடு அரிவாளை என்பது உதைத்தான்.

கொஞ்ச நாட்களில் முழுப்பொட்டுக்கேடுகளும் சந்திவரப்போகுது.ஆனால் இப்ப உதுகளை காது கொடுத்து கேட்கின்ற அளவில் சனமில்லை.

இன்னமும் பூசாரி வேடத்துடன் சிலர்.

ராஜா செந்தூரன் புல்லரிக்குது வாசிக்க,அப்பிடி போடு அரிவாளை என்பது உதைத்தான்.

கொஞ்ச நாட்களில் முழுப்பொட்டுக்கேடுகளும் சந்திவரப்போகுது.ஆனால் இப்ப உதுகளை காது கொடுத்து கேட்கின்ற அளவில் சனமில்லை.

இன்னமும் பூசாரி வேடத்துடன் சிலர்.

சுவத்திலை இருக்கிற பல்லி மாதிரி நச்சரிச்சு கொண்டு திரியுங்கோ எல்லாம் நல்லா உருப்படும்....

நல்லதே நடக்க கூடாது எண்டு எவ்வளவு ஆசையோடை இருக்கிறீயள்....?? உங்களுக்கு ஆசை மட்டும் நீண்டதாய் இருக்கு.... செய்த சாதனை? முயற்ச்சி தான் பூச்சியம்...

Edited by தயா

எவ்வளவோ நல்லவர்களெல்லாம் இருக்க இந்த ஈனப்பிறவிகளின் நிழலே எமது எதிர்கால அரசியலில் இருக்கக்கூடாது என்ற அவாதான்.

தமது சுய தேவைக்கு நாட்டில் இருக்கும் முழுஇனத்தையும் விலைபேசக்கூடியவர்கள் இவர்கள்.

இவர்களை விட டக்கிளஸ் எவ்வளவோ மேல்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே ஒரு மகாநாடு கூட்டம் கொண்டாட்டம் போடுங்கோ.

அதுக்கப்புறம்.............?

உங்கள் செயல் திட்டமென்ன...?

எங்களை அழிப்பதா?

சிங்களவனுடன் போராடுவதா? :(

ஒருவருக்கு ஒரு நோய் ஏற்பட்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். நோயின் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கிவிட்டன என்றும் வைத்துக்கொள்வோம். அவரைப் பார்க்கும் ஒருவருக்கு இவருக்கு நோய் ஏற்பட்டிருப்பது அவருக்கு ஏற்பட்டுள்ள நோய் அறிகுறிகளில் இருந்து நன்றாகவே தெரிகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

இப்போது இந்த நபர், அவரைப் பார்த்து, இந்தாப்பா... உங்களுக்கு நோய் ஏற்பட்டிருப்பதன் அறிகுறிகள் தெரிகின்றன. உடனடியாகச் செய்யக்கூடியதைச் செய்யுங்கள் என்று கூறுகிறார். அதற்கு அந்த நபர் ஒரு பதிலைக் கூறுகிறார். அந்தப் பதில் கீழுள்ள 4 பதில்களில் ஒன்றாக இருக்கும்.

1) ஆமாம். நீங்கள் சொல்வதுபோல நோயின் அறிகுறிகள் தென்படுகின்றன.

2) ஆமாம். நீங்கள் சொல்லும் அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால் இது நோயாக இருக்க வேண்டும் என்றில்லை. கொஞ்சநாள் விட்டுப் பார்க்கலாம்.

3) டேய்.. எனக்கு நோய் அறிகுறி என்று சொல்ல நீ யார்? உனக்குத்தான் நோய்.. உன் அப்பாவுக்கு நோய்.. உன் குடும்பத்துக்கே நோய்.. நீ ஒரு அடிவருடி.. ஒட்டுண்ணி.. (மேலும் சில கலைச்சொற்கள்)

4) எனக்கு நோய் வரவேண்டும் என்பதுதான் உமது விருப்பம் என்று நன்றாகவே தெரிகிறது.

இதில்-

1வது பதிலைச் சொல்லியிருந்தால் ஆள் டாக்டரிடம் போவார். நோய் கண்டுபிடிக்கப்படும். குணப்படுத்தப் படலாம்.

2வது பதிலைச் சொல்லியிருந்தால் ஆள் உடனடியாக டாக்டரிடம் போகாவிட்டாலும், நாளைக்கு நோய் முத்தினால் போவார். கஷ்டப்பட்டுக் குணப்படுத்தலாம்.

3வது பதிலைச் சொல்லியிருந்தால் ஆளைக் கைகழுவி விடலாம்.

4வது பதிலைச் சொல்லியிருந்தால் அவருக்காகப் பிரார்த்தனை செய்யலாம்.

Edited by Raja Senthooran

  • கருத்துக்கள உறவுகள்

quote name='Raja Senthooran' timestamp='1302097835' post='651416']

ஒருவருக்கு ஒரு நோய் ஏற்பட்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். நோயின் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கிவிட்டன என்றும் வைத்துக்கொள்வோம். அவரைப் பார்க்கும் ஒருவருக்கு இவருக்கு நோய் ஏற்பட்டிருப்பது அவருக்கு ஏற்பட்டுள்ள நோய் அறிகுறிகளில் இருந்து நன்றாகவே தெரிகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் வன்முறைச் சம்பவம்!- மக்களை விழிப்பாக இருக்குமாறு வேண்டுகோள்

புலம்பெயர் நாடுளில் தமிழர்கள் மத்தியில் இடம்பெற்றுவருகின்ற வன்முறைச் சம்பவங்களை, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்துகின்ற ஓர் ஆயுதமாக பயன்படுத்துகின்ற சிறிலங்கா அரசின் பிரசாரங்களுக்கு, வலுவூட்டுகின்ற வகையில் தமிழர்களின் செயற்பாடுகள் அமையக்கூடாதென....

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவல்துறை துணை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன் நாதம் ஊடக சேவையூடாக தெரிவித்துள்ளார்.

விடுதலைக்கான செயற்பாட்டுத் தளத்தில், லண்டனில் நீண்டகாலமாக இயங்கி வந்துள்ள திரு.தனம் என அழைக்கப்படும் சூசைப்பிள்ளை மீது நடாத்தப்பட்ட வன்முறைச் சம்பவம் குறித்து நாதம் ஊடக சேவைக்கு கருத்துரைத்த பொழுதே இதனை தெரிவித்துள்ளார்.

கருத்து முரண்பாடுகள் இத்தகைய வன்முறைகளாக தோற்றம் பெறுவது, ஓரு ஆரோக்கியமான விடுதலைப் பண்பாடாக அமையாதென தெரிவித்துள்ளதோடு, இச்சம்பவத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது திட்டமிட்டு திசை திருப்பிவிடும் சில ஊடகங்களின் செயற்பாடுகளையும்; வன்மையாக கண்டித்துள்ளார்.

இதேவேளை இத்தகைய திசைதிருப்பும் செய்திகள் தொடர்பில் குறித்த ஊடகத்தரப்பினருக்கு தனது கண்டனத்தை தெரியப்படுத்த இருப்பதாகவும் தனக்கு ஏற்பட்ட சம்பவத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை நோக்கி திசை திருப்பி விடுகின்றமை கவலையளிப்பதாகவும் திரு.தனம் அவர்கள் நேரடியாகவே தகவல்துறை துணை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன் அவர்களுக்கு தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில் அவசரகதியில் இவ்வாறு திசைதிருப்பும் செய்திகளை பரப்பிவரும் விசமிகள் குறித்து மக்கள் விழிப்பாக இருக்குமாறு தகவல்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாதம் ஊடக சேவை

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

http://www.vannionline.com/2011/04/blog-post_2696.html

உங்களது எடுமானத்தை அப்படியே ஏற்றுக்கொள்கின்றேன். எந்த மாற்றமும் இல்லை. நோய் ஏற்பட்டிருப்பது உங்களுக்குத்தான் அதாவது உங்களது உறுப்பு ஒன்றில். ஏனெனில் நாடு என்பதற்குள் தாங்களும் இருக்கின்றீர்கள்??????

இப்போ சொல்லுங்கள்

அறுத்து எறியமுடியாத உறுப்பு எனில் திருத்துவீர்களா..?

தூற்றுவீர்களா....? :(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு நான் எழுதிய பதில் தூக்கப்பட்டுள்ளது

காரணம் தரமுடியுமா....?

எனது சந்தோசத்துக்காக தங்களுக்கு நோய் இருக்கு என்று ஏற்றுக்கொள்வது போல்

தங்களது சந்தோசத்துக்காக எமது தாய் மண்ணை நோயாளி ஆக்கி விடாதீர்கள்

இதில் யாழ் களவிதி எங்கே மீறப்படுகிறது?

Edited by விசுகு

லண்டன் பொலிஸாரிடம் முறைபாட்டு செய்ப்பட்டதா? :D இதை வைச்சு சிங்கள அரசை தடை செய்ய கேக்கலாம்?

:lol: :lol:

உருத்திரகுமாரை உரியாமல் விட மாட்டார்கள் இஅவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Edited by nunavilan

  • தொடங்கியவர்

... நல்லது, நா.க.அ இதில் சம்பந்தப்படவில்லையாம் ... ஆனால் சம்பந்தப்பட்டவர்களை கண்டு பிடிக்க பொலிசாருக்கு நீங்கள் உதவ முடியும் .... மேலும் கடந்த காலங்களில் ... இதனை விட ... மிக ஆணித்தரமான/உரமான/கண்டிப்பான அறிக்கைகள் .... நாதன்/கஜன் பிரான்ஸில் கொல்லப்படபோது ... அனைத்து ஊடகங்களிலும் வந்தன. ... இன்றும் சிங்களவன் தான் கொன்றான் என்று நாமும் வருடா வருடம் பூவும் போடுகிறோம்!!! ... உண்மைகள் ...???????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.