Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மே 18 துக்க நாள்: நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய்க்கிழமை, 19, ஏப்ரல் 2011 (23:56 IST)

மே 18 துக்க நாள்: நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அறிவிப்பு

முள்ளிவாய்க்காலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்ட மே 18-ம் தேதியை நாடு கடந்த தமிழ் ஈழ அரசு துக்க நாளாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘’அரசின் இனப்படுகொலையின் உச்சமாக அமைந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்தேறிய நாட்களை நினைவுகூரும் வகையில் மே மாதம் 18-ம் தேதியை ’தமிழீழ தேசிய துக்க நாள்’ ஆக நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பிரகடனப்படுத்துகிறது.

முள்ளிவாய்க்கால் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான ஒரு கூட்டு நினைவு ஆகும். யூதர்கள்மேல் நாஜிகளால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு எவ்வாறு யூத மக்களிடையே ஒரு வரலாற்றுக் கூட்டு நினைவாக அமைந்ததோ அதேபோல தமிழர்களுக்கு, ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும் முள்ளிவாய்க்கால்; ஒரு முக்கியமான கூட்டுநினைவாக அமைகிறது. தமிழருக்கு எதிரான இனப்படுகொலையின் ஓர் ரத்த சாட்சியமாக இருக்கிறது.

தமிழ் ஈழத் தாயகத்தில் தமிழருக்கான முதல் அரசாக தமிழ் ஈழத் தனியரசு அமைக்கப்படுவதற்கான தேவையினை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகளும் நமக்கு மேலும் தெளிவாக உணர்த்தி வருகின்றன.

உலகில் நியாயம் மறுக்கப்பட்ட மக்களாக நம்மை உலக சமூகத்தின் மனச்சாட்சியின் முன்னிறுத்தி அனைத்துலக சட்டங்களுக்கும் நடைமுறைகளுக்கும் உட்பட்டு நீதி கோரும் மக்களாக நம்மை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.

உலகில் நியாயத்துக்காக, நீதிக்காகக் குரல் எழுப்பக்கூடிய அனைத்துச் சக்திகளுடனும் நமது கரங்களை நாம் இறுகக் கோர்க்க வேண்டியுள்ளது. இவற்றுக்கெல்லாம் தமிழர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டியுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் கூட்டுநினைவு இதற்கான சக்தியை நம்மெல்லோருக்கும் வழங்கும் என நம்புவோம்.

முள்ளிவாய்க்காலை நினைவுகூரும் தமிழ் ஈழ தேசிய துக்க நாளையொட்டிய வாரத்தில் நினைவு வணக்க நிகழ்வுகள், வழிபாடுகள், கருத்தரங்குகள், ரத்த தானங்கள் உட்பட்ட பல்வேறு வகையான நிகழ்வுகளை நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பல்வேறு நாடுகளிலும் ஏற்பாடு செய்து வருகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

nakkheeran

Edited by கறுப்பி

ஊடக அறிக்கை

மே 18 தமிழீழ தேசிய துக்க நாள்

ஏப்பிரல் 19, 2011

மே 18 தமிழீழ தேசிய துக்க நாள்

ஈழத்தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரசின் இனப்படுகொலையின் உச்சமாக அமைந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்தேறிய நாட்களை நினைவுகூரும்வகையில் மே மாதம் 18 ஆம் திகதியினை ’தமிழீழ தேசிய துக்க நாள்’ ஆக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பிரகடனப்படுத்துகிறது. இத் தேசிய துக்கநாளையொட்டிஒவ்வொரு வருடமும் மே 12- 18 க்கு இடைப்பட்ட நாட்களை நினைவேந்தல் வாரமாகத் தெரிவு செய்வதோடு அந்நாட்களில் துயர் பகிரவும், உணர்வு பெற்று எழுச்சிகொள்ளவும் ஏற்றவகையில் நடைமுறைப்படுத்துவது எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினரான திருமதி ஜெயமதி சிவசோதி அவர்களால் தனிநபர் மசோதாவாகப் பேரவையின்முன் வைக்கப்பட்டஇம் முன்மொழிவு அவை உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டு சில மாற்றங்களின்பின் இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு பேரவைஉறுப்பினர்கள் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சட்டங்கள் இயற்றப்படும் நடைமுறையினைப் பின்பற்றி; இலக்கம் 11-001 கொண்ட இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது சட்டத்தகைமை கொண்ட தீர்மானமாகவும்இது அமைகிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது சட்டமூலம் தமிழர் வரலாற்றின் முக்கியமான பதிவொன்றினை மையம் கொண்டிருப்பது பொருத்தம்நிறைந்ததாகவும் உள்ளது.

முள்ளிவாய்க்கால் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான ஒரு கூட்டு நினைவு (Collective memory) ஆகும். யூதர்கள்மேல் நாசிகளால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு(Holocaust) எவ்வாறு யூத மக்களிடையே ஒரு வரலாற்றுக் கூட்டு நினைவாக அமைந்ததோ அதேபோல தமிழர்களுக்கு, ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகில்வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும் முள்ளிவாய்க்கால்; ஒரு முக்கியமான கூட்டுநினைவாக அமைகிறது. தமிழருக்கு எதிரான இனப்படுகொலையின் ஓர் இரத்தசாட்சியமாக இருக்கிறது.

துயர்தோய்ந்த, அவலம் நிரம்பிய கூட்டுநினைவுகள் ஒரு மக்கள் கூட்டத்தின் ஆழ்மனதில் காலம் காலமாக நிலைத்து நிற்கக் கூடியவை. வரலாற்றை மாற்றும் சக்திகொண்டவை. ய+த மக்களின் தமக்கான தனி அரசு என்ற கனவு நாசி இனப்படுகொலையின்பின் தான் சாத்தியமாகியது. பலஸ்தீன மக்களுக்கென எதிர்காலத்தில்உருவாகவிருக்கும் தனிஅரசும் இம் மக்கள் தாம் அனுபவித்து வரும் ஒடுக்குமுறைகளின் கூட்டுநினைவினை அரசியல் இயக்கமாகத் தொடர்ச்சியாகப்பேணிவருவதனால்தான் சாத்தியமாகப் போகிறது. ஈழத் தமிழ் மக்களுக்கும் இவ்வுதாரணங்கள் மிகவும் பொருத்தமானவையே.

தமிழீழத் தாயகத்தில் தமிழருக்கான முதல் அரசாக தமிழீழத் தனியரசு அமைக்கப்படுவதற்கான தேவையினை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் அதனைத்தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகளும் நமக்கு மேலும் தெளிவாக உணர்த்தி வருகின்றன. இனப்படுகொலைக்கு உள்ளாகியுள்ள ஒரு தேசம், தமதுபாதுகாப்பான வாழ்வுக்கு தனி அரசினை அமைப்பதன் ஊடாக நியாயமும் நீதியும் தேடுவதென்பது அனைத்துலக சட்டங்களினிடையே ஏற்றுக் கொள்ளப்பட்டஒன்று. தேசங்கள் தமக்கான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனிஅரசினை அமைப்பதற்கும் அனைத்துலக சட்டங்கள் வழிவகை செய்கின்றன. ஆனால் இச்சட்டங்கள் எல்லாம் உலகின் பலம் வாய்ந்த அரசுகள் விரும்பும்போது மட்டும்தான் செயல் வடிவம் பெறுகின்றன. நீதியின்பாற்பட்டு அன்றி தமது சுயநலன் சார்ந்தேஇந்த அரசுகள் தமது முடிவுகளை மேற்கொள்கின்றன. இத்தகையதொரு உலக ஒழுங்கில்தான் நாம் நமது இலட்சியப்பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதுஇன்று நாம் எதிர் நோக்கும் முக்கியமான ஒரு சவால்.

இச் சவாலை எதிர் கொள்வதாயின், அனைத்துலகச் சமூகத்தினை நம்மை நோக்கித் திரும்பச் செய்ய நாம் ஒன்றுடனொன்று தொடர்புபட்ட, பல்வேறு அரசியல்இராஜதந்திர நகர்வுகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. தமிழீழத்தின் நலனையும் உலகின் பலம் மிக்க அரசுகளின் நலன்களையும் எவ்வாறுஇணைய வைக்க முடியும் என்பது குறித்து கூடுதல் கவனம் கொடுக்க வேண்டியள்ளது. உலகில் நியாயம் மறுக்கப்பட்ட மக்களாக நம்மை உலக சமூகத்தின்மனச்சாட்சியின் முன்னிறுத்தி அனைத்துலக சட்டங்களுக்கும் நடைமுறைகளுக்கும் உட்பட்டு நீதி கோரும் மக்களாக நம்மை வீச்சாக வெளிப்படுத்த வேண்டியுள்ளது. நாம் தனித்து நிற்காது உலகில் நியாயத்துக்காக, நீதிக்காகக் குரல் எழுப்புக்கூடிய அனைத்துச் சக்திகளுடனும் நமது கரங்களை நாம் இறுகக் கோர்க்கவேண்டியுள்ளது. இவற்றுக்கெல்லாம் தமிழர் அனைவரும் ஒருங்குபட்டுச் செயற்பட வேண்டியுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் கூட்டுநினைவுஇதற்கான சக்தியை நம்மெல்லோருக்கும் வழங்கும் என நம்புவோம்.

முள்ளிவாய்க்காலை நினைவுகூரும் தமிழீழ தேசிய துக்க நாளையொட்டிய நினைவேந்தல் வாரத்தில் நினைவு வணக்க நிகழ்வுகள், வழிபாடுகள், தீச்சுடர் ஏந்தியஒருங்குகூடல்கள், கருத்தரங்குகள், இரத்த தானங்கள் உட்பட்ட பல்வேறு வகையான நிகழ்வுகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வௌ;;வேறு நாடுகளிலும்ஏற்பாடு செய்துவருகிறது. இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவாக தமிழ் மக்களாலும் தமிழ் அமைப்புக்களாலும் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது ஆதரவினை வழங்குகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்; ஒழுங்கு செய்துவரும் நிகழ்வுகளின் விபரங்கள் விரைவில் மக்களுக்கு அறியத்தரப்படும்.

விசுவநாதன் ருத்ரகுமாரன்

பிரதமர்

Press Release

April 19, 2011

May 18 – National Mourning Day of Tamil Eelam

The Transnational Government of Tamil Eelam (TGTE) has declared May 18th as “National Mourning Day of Tamil Eelam” to remember the days when the genocide unleashed by the government of Sri Lanka on Eelam Tamils culminated in the massacres in Mullivaaikkal. The week of 12-18 May preceding the day of mourning has also been chosen as Memorial Week to commemorate every year the immense suffering endured by the Tamil Nation and to grieve the losses and reawaken our dreams of freedom.

The proposal regarding the National Day of Mourning first put forward to the Assembly of the TGTE as a Private Member’s Bill by Mrs Jeyamathy Sivasothy, was debated by the Assembly and, following amendments, it was adopted by majority vote on an electronic voting process. This Resolution 11-001 therefore becomes the first Bill to be passed by TGTE according to its own legislative processes. It is momentous that the first ever Bill to be enacted by the TGTE concerns itself with marking an event of historic significance in the freedom struggle of Eelam Tamils.

Mullivaaikkal will long be retained as a collective memory in Tamil history. In the same way as the Nazi Holocaust evokes a collective memory among the Jews, Mullivaaikkal will continue to be a vivid collective memory, not just for Eelam Tamils but to the greater Tamil populace around the world. It would remain as a bloody witness to the genocide of Tamils.

The legacy of atrocities and traumatic experiences carried as collective memory has the potential to remain inscribed for generations amongst a people, and it has the capacity also to shape their history. The birth of the Jewish state happened following the Nazi Holocaust. The Palestinian people’s desire for a state of their own in the future would eventuate only because they retain their collective memory of the lived experience of oppression as the very base of their political movement. Eelam Tamils’ struggle for freedom is no different from these examples.

The genocide that took place in Mullivaaikkal and the events that followed it continue to reinforce the need for the creation of the free state of Tamil Eelam in our homeland. There is sufficient recognition in international law about offering protection to a nation exposed to genocide and for it to seek justice through the creation of a separate state. The same laws also allow for nations to reach statehood through asserting their right to self determination. But these laws are only ever translated into action when the powerful states in this world so desire. The choices made by such states seem to be guided by self interest more than by a sense of justice and fairness. Such a world order under which we have embarked on the journey towards freedom remains as an important challenge confronting the Tamil struggle today.

Taking up this challenge demands that we engage ourselves in a variety of inter-related manouvres of a political and diplomatic kind to gain the attention of the international community. We should pay heed to the ways in which the interests of Tamil Eelam and the interests of the powerful states in the world could be made to align well. We, as a people continuously being denied justice, need to position ourselves in front of the conscience of the world and vigorously demand our share of justice under international norms and laws. Rather than attempting all this alone, we have to join hands with all forces out there willing and capable of raising their voice for a fair and just world. All of this behooves us as Tamils to unite in our deeds at this important moment. Let us hope that the collective memory of Mullivaaikkal will deliver us the necessary power and inspiration for such action.

A range of activities marking the National Day of Mourning and the Memorial Week will take place in different countries under the auspices of the TGTE. These include memorial events, religious services, candle light vigils, seminars and blood donations. At the same time, TGTE is extending its arms in support of all events memorialising Mullivaaikkal being arranged by the Tamil community and by various Tamil organizations.

Details of all events that are being organized by TGTE will be announced shortly.

Visuvanathan Rudrakumaran

Prime Minister

  • கருத்துக்கள உறவுகள்
:) நல்ல விடயம். எனது ஆதரவு நிச்சயம் உண்டு !!

இந்தச் செய்தியை நேற்று நான் இணைத்திருந்தேன் தூக்கியது யார் ? காரணம் என்ன?

இணையவன் தற்சமயம் களத்தில் நிற்கிறார் பதில் சொல்லிவிட்டு போங்கோ

____________________________________________________________________________

Wednesday, April 20, 2011 10:35 AM IST

மே 18 துக்க நாள்: நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அறிவிப்பு

First Published : 19 Apr 2011 05:42:51 PM IST

Last Updated : 19 Apr 2011 05:48:08 PM IST

கொழும்பு, ஏப்.19- முள்ளிவாய்க்காலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்ட மே 18-ம் தேதியை நாடு கடந்த தமிழ் ஈழ அரசு துக்க நாளாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கை அரசின் இனப்படுகொலையின் உச்சமாக அமைந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்தேறிய நாட்களை நினைவுகூரும் வகையில் மே மாதம் 18-ம் தேதியை ’தமிழீழ தேசிய துக்க நாள்’ ஆக நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பிரகடனப்படுத்துகிறது.

முள்ளிவாய்க்கால் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான ஒரு கூட்டு நினைவு ஆகும். யூதர்கள்மேல் நாஜிகளால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு எவ்வாறு யூத மக்களிடையே ஒரு வரலாற்றுக் கூட்டு நினைவாக அமைந்ததோ அதேபோல தமிழர்களுக்கு, ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும் முள்ளிவாய்க்கால்; ஒரு முக்கியமான கூட்டுநினைவாக அமைகிறது. தமிழருக்கு எதிரான இனப்படுகொலையின் ஓர் ரத்த சாட்சியமாக இருக்கிறது.

தமிழ் ஈழத் தாயகத்தில் தமிழருக்கான முதல் அரசாக தமிழ் ஈழத் தனியரசு அமைக்கப்படுவதற்கான தேவையினை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகளும் நமக்கு மேலும் தெளிவாக உணர்த்தி வருகின்றன.

உலகில் நியாயம் மறுக்கப்பட்ட மக்களாக நம்மை உலக சமூகத்தின் மனச்சாட்சியின் முன்னிறுத்தி அனைத்துலக சட்டங்களுக்கும் நடைமுறைகளுக்கும் உட்பட்டு நீதி கோரும் மக்களாக நம்மை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.

உலகில் நியாயத்துக்காக, நீதிக்காகக் குரல் எழுப்பக்கூடிய அனைத்துச் சக்திகளுடனும் நமது கரங்களை நாம் இறுகக் கோர்க்க வேண்டியுள்ளது. இவற்றுக்கெல்லாம் தமிழர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டியுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் கூட்டுநினைவு இதற்கான சக்தியை நம்மெல்லோருக்கும் வழங்கும் என நம்புவோம்.

முள்ளிவாய்க்காலை நினைவுகூரும் தமிழ் ஈழ தேசிய துக்க நாளையொட்டிய வாரத்தில் நினைவு வணக்க நிகழ்வுகள், வழிபாடுகள், கருத்தரங்குகள், ரத்த தானங்கள் உட்பட்ட பல்வேறு வகையான நிகழ்வுகளை நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பல்வேறு நாடுகளிலும் ஏற்பாடு செய்து வருகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

dinamani

Edited by காரணிகன்

காரணிகன்

Posted Today, 01:17 AM

இணையவன் பதில் தரவில்லை

தற்சமயம் நிழலி உள்ளே நிற்கிறார் பதில் எதிர்பார்க்கிறேன்

மக்களவைக்காரர் மே 18 ஐ போர்க்குற்ற நாள் என்று பிரகடனப் படுத்தினார்கள்.

நாடுகடந்த தமிழீழ அரசுக்காரருக்கு மே 18 துக்க நாளாம்.

மே 18 தமிழ் இனப்படுகொலை நாள் என அறிவிப்பதற்கு இந்த தலைமைகளின் கொள்கை, கோட்பாட்டில் இடமில்லைப்போலும்.

புலம்பெயர் நாடுகளில் நாம் வாழும் நாடுகளில் பல கட்சிகள் நாட்டை ஆளுவதற்கு தேர்தல்களில் போட்டியிடும். எல்லா கட்சிகளும் தாமே மற்றைய கட்சிகளை விட வல்லவர்கள் / நல்லவர்கள் என்பார்கள். மக்களோ எல்லா நடவடிக்கைகளையும் அவதானித்து தாம் விரும்புவர்களை ஆட்சிபீடம் ஏற்றுவார்கள்.

அதுபோல நமக்கும் முன்னால் பல்வேறு அமைப்புக்கள் தாயக உறவுகளின் நலன்களை முன்னிறுத்தி பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன. எங்கள் கடமைகளில் ஒன்று தேவையான இடங்களில் ஒத்துழைப்பை வழங்கி தேவையான இடத்தில் கேள்விகளை கேட்டு / கண்டிக்கவும் உரிமை உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களவைக்காரர் மே 18 ஐ போர்க்குற்ற நாள் என்று பிரகடனப் படுத்தினார்கள்.

நாடுகடந்த தமிழீழ அரசுக்காரருக்கு மே 18 துக்க நாளாம்.

மே 18 தமிழ் இனப்படுகொலை நாள் என அறிவிப்பதற்கு இந்த தலைமைகளின் கொள்கை, கோட்பாட்டில் இடமில்லைப்போலும்.

இப்ப பேர் தானோ தமிழ் மக்களுக்கு பிரச்சனை. பேரை மாற்றினால் விழுந்தடித்து உதவுவீர்களோ??? ^_^

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினரான திருமதி ஜெயமதி சிவசோதி அவர்களால் தனிநபர் மசோதாவாகப் பேரவையின்முன் வைக்கப்பட்டஇம் முன்மொழிவு அவை உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டு சில மாற்றங்களின்பின் இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு பேரவைஉறுப்பினர்கள் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சட்டங்கள் இயற்றப்படும் நடைமுறையினைப் பின்பற்றி; இலக்கம் 11-001 கொண்ட இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது சட்டத்தகைமை கொண்ட தீர்மானமாகவும்இது அமைகிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது சட்டமூலம் தமிழர் வரலாற்றின் முக்கியமான பதிவொன்றினை மையம் கொண்டிருப்பது பொருத்தம்நிறைந்ததாகவும் உள்ளது.

மே 18 துக்க நாள் : நாடு கடந்தந்த தமிழ் ஈழ அரசு கண்டுபிடிப்பு, சிவசோதி அரிய சாதனை! என்று வந்திருந்தால் தலைப்பு என்னும் நன்றாக வந்திருக்கும்.

மே 18 போர்க்குற்ற நாள். துக்க நாள் என்பது அழுதுபோட்டுப்போவது. கறுப்பு யூலை என்று நாடகம் போடுவது கறுப்புச் சாறி கட்டி பரதநாட்டியம் ஆடுவதுபோல் மே 18 ஐ ஆகக் கூடாது. மே 18 தமிழர் அழுதுபோட்டு போகும் நாளல்லாது எழுச்சி கொள்ளும் நாள் உலகிடம் நியயம் கேட்கும் நாள். ஒவ்வொரு வருடமும் உலக சமூகத்திடம் இந்நாளில் நியாயம் கிடைக்கும் வரை போராடும் நாள். இது ஒரு இனத்தின் தன்னிச்சையான எழுச்சியாக இருக்கவேண்டும். அந்த எழுச்சிக்கு எல்லா அமைப்புகளும் உறுதுணையாக ஆதரவு வழங்கவேண்டும் தவிர ஒருவர் மசோதா கொண்டுவநது பிறகு துக்கநாளாக அறிவி்பதா இல்லையா என்று வாக்கெடுப்பு நடத்தி அதன்பிறகு துக்கநாள் அறிவிப்பது?

முள்ளிவாய்க்காலை நினைவுகூரும் தமிழ் ஈழ தேசிய துக்க நாளையொட்டிய வாரத்தில் நினைவு வணக்க நிகழ்வுகள், வழிபாடுகள், கருத்தரங்குகள், ரத்த தானங்கள் உட்பட்ட பல்வேறு வகையான நிகழ்வுகளை நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பல்வேறு நாடுகளிலும் ஏற்பாடு செய்து வருகிறது.

இதன் நோக்கம் அடயாளத்தேடலே அன்றி நியாயம் கேட்கும் போராட்டம் இல்லை. மேற்கூறியவற்றுக்கு நான் நாலுகிலோ பக்கோடா கொண்டுபோனன் அவன் யூஸ் கொடுத்தான் இவன் கோப்பியும் றோலும் கொடுத்தான் என்று எங்களுக்குள்ளாகவே முடக்கிப்போடும் பழய பாணியை விட்டு அகலாத நிலையை நோக்கியே அமைகின்றது. நிகழ்வுகள் நடத்துவது வேறு போராடுவது நியாயம் கேட்பது வேறு, குறிப்பாக எமது சமூகத்திற்கு.

மே 18 துக்க நாள் : நாடு கடந்தந்த தமிழ் ஈழ அரசு கண்டுபிடிப்பு, சிவசோதி அரிய சாதனை! என்று வந்திருந்தால் தலைப்பு என்னும் நன்றாக வந்திருக்கும்.

மே 18 போர்க்குற்ற நாள். துக்க நாள் என்பது அழுதுபோட்டுப்போவது. கறுப்பு யூலை என்று நாடகம் போடுவது கறுப்புச் சாறி கட்டி பரதநாட்டியம் ஆடுவதுபோல் மே 18 ஐ ஆகக் கூடாது. மே 18 தமிழர் அழுதுபோட்டு போகும் நாளல்லாது எழுச்சி கொள்ளும் நாள் உலகிடம் நியயம் கேட்கும் நாள். ஒவ்வொரு வருடமும் உலக சமூகத்திடம் இந்நாளில் நியாயம் கிடைக்கும் வரை போராடும் நாள். இது ஒரு இனத்தின் தன்னிச்சையான எழுச்சியாக இருக்கவேண்டும். அந்த எழுச்சிக்கு எல்லா அமைப்புகளும் உறுதுணையாக ஆதரவு வழங்கவேண்டும் தவிர ஒருவர் மசோதா கொண்டுவநது பிறகு துக்கநாளாக அறிவி்பதா இல்லையா என்று வாக்கெடுப்பு நடத்தி அதன்பிறகு துக்கநாள் அறிவிப்பது?

இதன் நோக்கம் அடயாளத்தேடலே அன்றி நியாயம் கேட்கும் போராட்டம் இல்லை. மேற்கூறியவற்றுக்கு நான் நாலுகிலோ பக்கோடா கொண்டுபோனன் அவன் யூஸ் கொடுத்தான் இவன் கோப்பியும் றோலும் கொடுத்தான் என்று எங்களுக்குள்ளாகவே முடக்கிப்போடும் பழய பாணியை விட்டு அகலாத நிலையை நோக்கியே அமைகின்றது. நிகழ்வுகள் நடத்துவது வேறு போராடுவது நியாயம் கேட்பது வேறு, குறிப்பாக எமது சமூகத்திற்கு.

சுகனின் கருத்தை ஆமோதிக்கின்றேன்

நா.க.அ. வும் முன்னைய புலம்பெயர் தமிழர் அமைப்புகள் சென்ற பாதையில் தான் போகின்றது போலக் கிடக்கு. மக்களை எழுச்சிப் படுத்தாமல் வெறும் சம்பிரதாய நாளாக (மாவீரர் தினம் பு.பெ.நாடுகளில் ஆனது போல, தலைவர் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடும் களியாட்டம் ஆக்கியது போல ) மே 18 இனை ஆக்குகின்றது. இப்படி போனால் Mothers day கொண்டாடுவது போல் மே 18 உம் ஒரு நாளாக போய்விடும்

Edited by நிழலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.