Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவு: ரட்னசிறி பதவி விலகல்

Featured Replies

கூட்டமைப்பு நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவு: ரட்னசிறி பதவி விலகல்

அதிகார பரவலாக்கம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் அரசாங்கத் தூதுக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் பிரதமரும் சிரேஷ்ட அமைச்சருமான ரட்னசிறி விக்கிரமநாயக்க ராஜினாமா செய்துள்ளார். ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை த.தே. கூட்டமைப்பு வரவேற்றுள்ளமையே இதற்குக் காரணம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில், மேற்படி தூதுக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக சிரேஷ்ட அமைச்சர் விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கைப் படையினர் போர்க்குற்றங்களை இழைத்தனர் என்ற குற்றச்சாட்டுக்கு த.தே.கூட்டமைப்பு ஆதரவளித்த பின்னர் அக்கட்சியியுடன் பேச்சுவார்த்தை நடத்த தன்னால முடியாதென அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து த.தே.கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதற்கான அரசாங்கத் தூதுக்குழுவின் தலைவராக அரசாங்க சமாதான செயலகத்தின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க  நியமிக்கப்பட்டுள்ளார்.  வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, வெளிவிவகாரத் துறையை மேற்பார்வை செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன ஆகியோர் அரசாங்க பிரதிநிதிகள் குழுவின் ஏனைய உறுப்பினர் ஆவர். கடந்த வெள்ளியன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கப் பிரதிநிதிகளும் சந்தித்தபோது ஐ.நா. நிபுணர்குழு அறிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றமை குறித்து கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

பல காலமாக இருந்துவந்த கீறு ஒரு வெடிப்பாக மாறியுள்ளது. இந்த பிரிவு சிங்கள மக்கள் மத்தியில் ஒரு பிளவை, ஐ.நா. அறிக்கை - தமிழர் உரிமைகள் என்பதை வைத்து உருவாக்குமானால் எமக்கு அது நன்மையே.

ஐ.நாவின் அறிக்கையை நிராகரிக்க தமிழ்க் கூட்டமைப்பிடம் கோரிக்கை

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-01 10:32:53| யாழ்ப்பாணம்]

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை யை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நிராகரிக்க வேண்டும் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தேசியவாத கொள் கைகளுக்காக போராட்டம் நடத்தியதாக நிபு ணர் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல தமிழ் அரசியல் கட்சிகளின் சிரேஷ்ட தலைவர்களை படுகொலை செய்த தன் மூலம் எவ்வாறான தேசியவாத கொள் கைகளை தமிழீழ விடுதலைப்புலிகள் பின் பற்றினார்கள் என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் செயற்பாட்டாளர்களை படுகொலை செய்த ஓர் அமைப்பிற்கு ஆதரவாக நிபுணர்குழு அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி இந்த அறிக்கைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=18667

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவு: ரட்னசிறி பதவி விலகல்

எடுக்க வேண்டியது உலக நாடுகளில்லெலாம் பிச்சை.. :Dகவர் மெண்ட் ஜாப் ரிசன் பண்ணிட்டு போரருடோ ... சொறி புடிச்ச மொன்ன நாயி..... அந்த முக்கல ஒக்கந்து பிச்சை எடுக்கபோது அதுக்கு லவுட்ட பாரு :lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு ஐ.நா அறிக்கையை நிராகரித்தால் அடுத்த தேர்த்தலில் மக்கள் கூட்டமைப்பை கவனித்து கொள்வார்கள்.மக்களின் உணர்வை கூட்டமைப்பு உணர்ந்து செயற்படும் அதே வேளை சிங்களத்தின் வெருட்டல்களுக்கு அடிபணியாமல் செயற்பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.