Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டக்ளஸ் சந்திக்க கேட்டார் ரொபேர்ட் பிளேக் நிராகரித்தார்.

Featured Replies

சிறிலங்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி செயலாளர் றொபர்ட் ஓ பிளெக்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பதற்கு மேற்கொண்ட முயற்சி படுதோல்வியடைந்ததாக நம்பகமான செய்திகள் எமக்குத் தெரிவிக்கின்றன.

ஈ.பி.டி.பி சார்பிலும் சிறிலங்கா அரசின் தமிழ் அமைச்சர் என்ற வகையிலும்; ரொபர்ட் ஓ பிளக்கை சந்திக்க விரும்புவதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் உயர்ஸ்தானிகராலயத்துக்கு அமைசச்ர் டக்ளஸ் தெரிவித்திருந்தும் அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

அமைச்சர் டக்ளஸின் இந்த வேண்டுகோளை இலங்கையிலுள்ள அமெரிக்க உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் ரொபர்ட் ஓ பிளக்கிடம் தெரிவித்தனர். ஆனால் பிளேக் அவ்வாறான சந்திப்புக்கள் தனது நிகழ்ச்சி நிரலில் இல்லை என கூறி நிராகரித்துவிட்டார். ரொபர்ட் ஓ பிளேக் சிறிலங்கா வந்தவுடனேயே முதன் முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் பல மணி நேரம் கலந்துரையாடியிருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

Eelanatham

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் அழிக்கப் பட்ட பின்பு 'டக்ளசின்' தேவை அமெரிக்காவிற்கு இல்லை.

இதே நிலை தான் கருணா அம்மானுக்கும்!!!

தேவைகளின் அடிப்படையிலேயே உலகம் இயங்கிக்கொண்டிருக்கின்றது!

தர்மங்கள், நியாயங்கள் எல்லாம் புத்தகங்களில் மட்டும்!!!

ஒரு காலத்தில் பின் லாடனை தனது கைக்குள் வைத்திருந்தது அமேரிக்கா,

ஒரு காலத்தில் சதாமை நண்பனாக பார்த்தது அமேரிக்கா,

அண்மைக்காலமாக கடாபியை நண்பனாக உறவுகொண்டாடியது அமேரிக்கா.

தருமங்கள், நியாயங்கள் ஆகியவை வைத்து இந்த பூமிப்பந்து சுற்றுவதில்லை என தேசியத்தலைவர் கூட ஒருமுறை கூறியிருந்தார். தமிழ் தலைவர்களும் எமது மக்களின், தேசியத்தின் நலன்களை மட்டுமே முன்னிறுத்தி அரசியலை, கொள்கைவகுப்புக்களை முன்னெடுக்கவேண்டும்.

இல்லாவிடில் இந்த பூமியில் தமிழனுக்கு சிலை மட்டும்தான் இருக்கும், நாடு இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் அழிக்கப் பட்ட பின்பு 'டக்ளசின்' தேவை அமெரிக்காவிற்கு இல்லை.

இதே நிலை தான் கருணா அம்மானுக்கும்!!!

தேவைகளின் அடிப்படையிலேயே உலகம் இயங்கிக்கொண்டிருக்கின்றது!

தர்மங்கள், நியாயங்கள் எல்லாம் புத்தகங்களில் மட்டும்!!!

இது எமது போராளிகளின்பால் அன்பாக இருந்தபோது அழைக்கப்பட்டது

தயவு செய்து இனி அவரை அப்படி அழைக்கவேண்டாம். நன்றி :(

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பதற்கு மறுத்த றொபர்ட் ஓ பிளெக்

Thursday, May 5, 2011, 7:44

சிறீலங்கா

சிறிலங்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி செயலாளர் றொபர்ட் ஓ பிளெக்கை ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பதற்கு மேற்கொண்ட முயற்சி படுதோல்வியடைந்ததாக நம்பகமான செய்திகள் எமக்குத் தெரிவிக்கின்றன.

ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி சார்பிலும் சிறிலங்கா அரசின் தமிழ் அமைச்சர் என்ற வகையிலும்; ரொபர்ட் ஓ பிளக்கை சந்திக்க விரும்புவதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் உயர்ஸ்தானிகராலயத்துக்கு ஒட்டுக்குழு அமைசச்ர் டக்ளஸ் தெரிவித்திருந்தும் அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸின் இந்த வேண்டுகோளை இலங்கையிலுள்ள அமெரிக்க உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் ரொபர்ட் ஓ பிளக்கிடம் தெரிவித்தனர். ஆனால் பிளேக் அவ்வாறான சந்திப்புக்கள் தனது நிகழ்ச்சி நிரலில் இல்லை என கூறி நிராகரித்துவிட்டார். ரொபர்ட் ஓ பிளேக் சிறிலங்கா வந்தவுடனேயே முதன் முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் பல மணி நேரம் கலந்துரையாடியிருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

tamilthai.com

லசந்தாவின் மனைவி அமெரிக்காவின் உயர் அதிகாரிகளை ( Esther Brimmer, Assistant Secretary, Bureau of International Organization Affairs ), "இலங்கையில் இருக்கும் அமெரிக்க பிரச்ச உரிமை பெற்ற கொலைகாரர்களை, போர்க்குற்றம் செய்தவர்களை என்ன செய்ய உள்ளீர்கள்" என கேட்டார் .

QUESTION: Firstly, I want to thank the U.S. for its support of media freedom, especially in Sri Lanka and for its support of individual journalists who are no in exile here. I want to ask you what is the commitment of the U.S. to bring to book it’s naturalized U.S. citizens, who in their own countries like Sri Lanka are the perpetrators of media suppression have been involved in the killing of journalists and who in a new U.N. panel report released just a week ago have also been accused of alleged war crimes and crimes against humanity and these are U.S. naturalized citizens. And I’d like to know what your commitment is to bring them to book because they’re still in government in Sri Lanka, for instance? Thank you.

BRIMMER: First, thank you very much for your question also for being here. And indeed, the United States is (inaudible) in the issues of accountability and strongly supports issues of accountability. We are reading the report that was recently released from the secretary-general’s panel that was investigating the situation and Sri Lanka we think is a very important report we’re looking at very closely and try to understand both the best ways to raise these issues of accountability, both in our bilateral conversations and in our multilateral areas (inaudible) important are to look at for the best ways to bring forward, long-term accountability we’re looking particularly at that stage.

http://www.tamildaily.net/2011/05/04/assistant-secretary-of-state-for-us-was-questioned-regarding-how-the-us-is-going-to-deal-with-the-us-citizens-allegedly-committing-murders-of-journalist-and-war-crimes-answer-is-surprising/

http://www.state.gov/g/drl/rls/rm/2011/162572.htm

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குச் சிரிப்புச் சிரிப்பாக வருகுது. யாழ்கள நண்பர்கள் மட்டுமல்ல புலம்பெயர் தமிழர்கள் மட்டுமல்ல பலத்துத் தமிழர்கள் அனைவருமே இச்செய்தியைக் கண்டு திருப்தியடைந்திடுவர் தங்களுக்கத் தாங்களே நுள்ளிப்பாத்து புழகாங்கிதமடைந்திடுவர். அதற்காகவே இந்திய எடுபிடிப்பத்திரிகையாம் உதயனும் இதனை முக்கிய செய்தியாக வெளியிடும். நாமும் அக்குவேறு ஆணிவேறரக இந்த விடையத்தை ஆராய்ந்து கட்டுரைகளை எதிர்காலத்தில வரைவம். ஆனால் ஒன்றை மட்டும் மறந்திட்டியள் பிராந்திய வல்லரசாகத் தன்னைச்சொல்லிக்கொள்ளும் தமிழர்விரோத தேசமாம் இந்தியாவும், இந்துசமு(மூ)த்திரத்தை தனது ஆதிக்கத்துக்குள் வைத்திருக்கத்துடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் இன்ணோரன்ன சீனாவும் தங்களது தீர்மானிக்கப்பட்ட நிகழ்சிநிரலுக்கேற்றாற்போல் காய்களை நகர்த்திக்கொண்டுபோகினம். சம்பந்தர் தலைமையிலான இந்திய எடுபிடிகளான வித்தியாதரன் சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோர் பிளாக்கைச் சந்தித்து புலிகள் தவறவிட்டிட்டினம் எனச்சொல்ல பிளாக்கும் இவர்கள் தங்களது வலைக்குள் விழுந்திட்டினம் எண்டு தலைவரையும் லேடனையும் ஒரே தராசில வைத்துக் கதைத்துப்போட்டு அப்ப தமிழர் கோவித்தா என்ன செய்யிறது அதுக்குத்தான் டங்கியைச் சந்திக்காமல் போனால்போச்சு விசர்மடையர்கள் ஆ ஓவெண்டு புழுகுவினம்..... அடநாங்களும் அநியாயம் சொல்லக்கூடாது அவங்கட எதிர்பார்ப்பை வீணடிக்கவில்லை. நாசமாப்போயிட்டம்.

டக்ளசின் இந்த முயற்சி சில அம்சங்களை உள்ளடக்கி இருக்கவேண்டும்.

* தானும் தமிழர்களின் ஒரு பிரதி நிதி என்பதை உலகிற்கும்,தமிழர்களிற்கும் காட்டி நிற்கும் ஒரு போலியான மாயை.

*தனது எஜமானர்களை போர்க்குற்றத்திலிருந்து காப்பாற்றும் பரிந்துரைகளைக்கூறி மேலும் பல பிச்சைகளைப்பெற.

*போர்க்குற்றம் சம்பந்தமாக தனது நிலை [ஆயுதக்குழுக்களின் போர்க்குற்றங்க்ள்] சம்பந்தமாக சர்வதேசம் என்ன நினக்கின்றது,தனது பங்கு எத்தனை கிலோ என்பதை அறியும் ஆர்வம்.

*சிறிலங்காவின் ராஜதந்திர அரசியல் நகர்வில் ஒன்றாகக்கூட இவற்றைக் கருதலாம்.

ஒன்றும் நிறைவேறவில்லை?????????????????????????????? பாவம்?????என்ன பாவம் செய்தானோ இந்தமனுசன்????????????

  • கருத்துக்கள உறவுகள்

இது எமது போராளிகளின்பால் அன்பாக இருந்தபோது அழைக்கப்பட்டது

தயவு செய்து இனி அவரை அப்படி அழைக்கவேண்டாம். நன்றி :(

தவறைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றிகள் விசுகு!

இனி அவரைத் தகுந்த மரியாதையுடன் விழிப்பேன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.