Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆடைக் கண்காட்சியில் இந்துமதம் நிந்திப்பு:சர்வதேச இந்து மதபீடம் கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆடைக் கண்காட்சியில் இந்துமதம் நிந்திப்பு:சர்வதேச இந்து மதபீடம் கண்டனம்

[saturday, 2011-05-07 04:07:46]

அவுஸ்திரேலிய தலைநகர் சிட்னி யில் கடந்த வியாழக்கிழமை இடம் பெற்ற அவுஸ்திரேலிய பஷன் வீக் ஆடைக்கண்காட்சியில் இந்துக்கடவுளான மஹாலஷ்மியின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட நீச்சல் உடை பற்றி சர்வ தேச இந்து மதபீடம் நிகழ்ச்சி ஏற் பாட்டாளர்களுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இது இந்து மதத்தையே கேவலப்படுத்தும் செயலாகும் எனவும் இந்து மதபீடம் தெரிவித்துள்ளது.

மஹாலக்ஷ்மி பொறிக்கப்பட்ட நீச்சல் ஆடையும், உள்ளங்கியும் இந்து மக்களின் புனித உணர்வை தெய்வீக தன்மையை மழுங்கடிக்க செய்கின்றது. இது பற்றி சர்வதேச இந்து மத பீடம் இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு இச்செய்தி பற்றி இந்து மக்களின் மனம் புண்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

தூதரகத்தின் ஊடாக அவுஸ்திரேலியா வின் பிரதமருக்கு இந்து மக்களின் கவலையை தெரிவிக்க உள்ளது. குறித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உலகில் வாழும் இந்துக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் இந்துமத பீடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

seithy.com

  • கருத்துக்கள உறவுகள்

மஹா லட்சுமியும் ஒரு பெண் தானே!

வெறும் ரூபாயோடு குந்திகொண்டிருந்து என்னத்தைக் கண்டாள்? அது தான் டொலருக்கு மாறி விட்டாள் போலும்!

அவளுக்குக் கோயில் கூடக் கட்டக் கூடாது என்று இந்து மதமும் சொல்லிவிட்டது?

எதற்கும் முதுகெலும்புள்ள இந்தியர்கள் ஒரு பாத்வா (Fatwa ) ஒன்று விட்டுப் பார்க்கிறது தானே!

Edited by Punkayooran

  • கருத்துக்கள உறவுகள்

ஆடைக் கண்காட்சியில் இந்துமதம் நிந்திப்பு:சர்வதேச இந்து மதபீடம் கண்டனம்

-----

தூதரகத்தின் ஊடாக அவுஸ்திரேலியா வின் பிரதமருக்கு இந்து மக்களின் கவலையை தெரிவிக்க உள்ளது. குறித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உலகில் வாழும் இந்துக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் இந்துமத பீடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து அவுஸ்திரேலிய அரசு மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியம் இல்லை.

இப்படியாக இந்து மதத்தை பரப்பும் அவுஸ்திரேலிய அரசை பாராட்டுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இருப்பது இந்துமதமல்ல.. அதனால் இச்செய்து ஒரு பொருட்டல்ல..! :unsure: எங்களது கடவுள் தென்னையில் தோன்றிய அம்மன்தான்..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாக்க நல்லாத்தானே இருக்குது :rolleyes: :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பாக்க நல்லாத்தானே இருக்குது :rolleyes: :rolleyes: :rolleyes:

நாங்களும் பார்க்க, பாத்த படத்தை... இங்கு இணைத்து விடுங்கோ... சித்தன்.

பிற்குறிப்பு: இன்று நான் விரதம் பிடிக்காத நாள், என்ற படியால் நல்லதாய் போச்சுது. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்களும் பார்க்க, பாத்த படத்தை... இங்கு இணைத்து விடுங்கோ... சித்தன்.

பிற்குறிப்பு: இன்று நான் விரதம் பிடிக்காத நாள், என்ற படியால் நல்லதாய் போச்சுது. :D

post-3227-0-53254600-1304766996_thumb.jp

collagestory02.th.jpg

Uploaded with ImageShack.us

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சித்தன்.

அம்மன் சிலையை, மினிக்கி வைச்ச மாதிரி....

பள...பள... எண்டு மினுங்குறார்கள்.smilie_wet_089.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சித்தன்.

அம்மன் சிலையை, மினிக்கி வைச்ச மாதிரி....

பள...பள... எண்டு மினுங்குறார்கள்.smilie_wet_089.gif

படத்தின் மீது அழுத்தினால் மினு மினுப்பு அதிகமாகிறது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

post-3227-0-53254600-1304766996_thumb.jp

collagestory02.th.jpg

என்னப்பா இது.. :unsure: எண்ணையில வாட்டின இறைச்சிமாதிர் இருக்கு?? :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா இது.. :unsure: எண்ணையில வாட்டின இறைச்சிமாதிர் இருக்கு?? :(

உண்மையான கலைஞனுக்கு மதம் ஒரு தடைகல் அல்ல, ஆடையை மட்டும் பார்க்கவும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

படத்தின் மீது அழுத்தினால் மினு மினுப்பு அதிகமாகிறது :lol:

நீங்கள் எனக்கு, அடி வாங்கித்தார ப்ளான் போட்டுடிங்கள் போலை இருக்குது. :D

மனிசி, ஏன் கொம்புயூட்டருக்குள்ளை தலையை ஓட்டிக்கொண்டிருக்கிறீங்கள் எண்டு பேசுது. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எனக்கு, அடி வாங்கித்தார ப்ளான் போட்டுடிங்கள் போலை இருக்குது. :D

மனிசி, ஏன் கொம்புயூட்டருக்குள்ளை தலையை ஓட்டிக்கொண்டிருக்கிறீங்கள் எண்டு பேசுது. :lol:

உங்களை பாராட்ட வேண்டும், நீங்கள் உண்மையான ஒரு கலைஜன், மனிசி இருக்கும் போதே துனிந்து பாக்கிறீங்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை பாராட்ட வேண்டும், நீங்கள் உண்மையான ஒரு கலைஜன், மனிசி இருக்கும் போதே துனிந்து பாக்கிறீங்கள். :lol:

உங்களாலை, இண்டைக்கு மத்தியானச் சாப்பாடு இல்லாமல் போச்சுது. :D

அவளுக்குக் கோயில் கூடக் கட்டக் கூடாது என்று இந்து மதமும் சொல்லிவிட்டது?

http://www.srimahalakshmitemple.org.uk/

thulasi.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைமாதிரி எதையும் கலைக்கண்ணோடை பாக்கோணும்.! :wub:

தமிழ் சிறி கொம்பியுhட்ருக்க தலையை குடுத்து வம்ப விலைக்கு வேண்டாமல்

உங்கட மனிசிக்கு அந்த உடையை வாங்கி போட்டு தினமும் பாருங்கோ.................

இன்னும் அழகாக இருக்கும்..............பார்க்கவும் இலகுவாக இருக்கும்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சித்தன்.

அம்மன் சிலையை, மினிக்கி வைச்ச மாதிரி....

பள...பள... எண்டு மினுங்குறார்கள்.smilie_wet_089.gif

அம்மன் சிலையா???? கண்ணுக்கு முதல் கண்ணாடி போடுங்க சிறி அண்ணா. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திங்கட்கிழமை, 9, மே 2011 (16:58 IST)

பிகினி உடையில் இந்து கடவுளின்

படங்களை அச்சிட்ட கம்பெனி மன்னிப்பு கேட்டது

ஆஸ்திரேலியாவில் இனவெறி சமீபத்திய சர்ச்சையாக இருந்து வந்தது. இது தணிந்திருக்கும் இந்நேரத்தில் இந்துக்ககடவுள் அவமதிப்பு சம்பவம் உலகம் முழுவதும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது.

சிட்னியில் கடந்த 2 ம் தேதி முதல் 6 ம்தேதிவரை ரோஸ்மவுன்ட் ஆஸ்திரேலியன் பேஷன்வீக் கொண்டாடப்பட்டது.

இதில் ஒரு அழகி நீச்சல் உடையில் வந்தார். கவர்ச்சிகள் தெரியும் விதமான இந்த உடை அணிந்த பெண்ணின் முன்னும், பின்னும் லஷ்மி கடவுள் பொறிக்கப்பட்டிருந்தது.

இது இந்து மக்களின் கண்டத்திற்குள்ளாகியிருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள இந்து அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஐதராபாத்தில் பாஜகவினர் இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆஸ்திரேலியா நாட்டு கொடியும், ஆடை வடிவமைப்பாளர் லிசாவின் உருவ பொம்மையும் தீ வைத்து கொளுத்தினர்.

உலகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியதால், இந்து கடவுளான லட்சுமி தேவியின் படத்தை பிகினி உடையில் அச்சிட்டு வெளியிட்ட லிசா புளு ஸ்விம்வேர் நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

அதோடு, இந்து கடவுள் படம் அச்சிட்ட பிகினி உடைகள் இனி மார்க்கெட்டில் கிடைக்காது. ஏற்கனவே மார்க்கெட்டுக்கு வந்த பிகினி உடைகளையும் திரும்ப பெற்று விட்டோம் என்றும் அந்த கம்பெனி அறிவித்துள்ளது.

நக்கீரன்

  • கருத்துக்கள உறவுகள்

மகாலட்சுமி நீச்சல் உடை பற்றி 'சிட்னி மோர்னிங் ஹெரல்ட்' என்ற தேசியப் பத்திரிகையில் ஒரு வாக்கெடுப்பு நடைபெறுகின்றது!

அதன் முடிவுகளை இத்துடன் இணைத்துள்ளேன்!

Poll: How do you rate the swimsuit design?

Beautiful

50%

Attractive

16%

A little bit in poor taste

13%

Offensive

21%

ஆர்வமுள்ள கள உறுப்பினர்கள், பின் வரும் இணைப்பில் சொடுக்கவும்!

http://www.smh.com.au/lifestyle/fashion/indian-fury-at-hindu-goddess-on-skimpy-swimsuits-20110510-1egax.ஹ்த்ம்ல்

தமிழ் சிறிக்குத் தேவையான படங்களும் உள்ளன!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.