Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த்தாய் நாட்காட்டியின் பதிவுகள்

Featured Replies

தினமும் ஒரு பதிவு

வாகனங்களில் சிங்கள சிறீ பொறிக்கப்பட்ட நாள்.(1958)

இனைந்திருந்த வடகிழக்கு தமிழர் மாகாணம் பிரிக்கப்பட்ட நாள்.(01.01.1883)

கியூபா, கெயிற்றி, சூடான் சுதந்திர தினம்.

நன்றி: தமிழ்த்தாய் நாட்காட்டி

  • Replies 94
  • Views 13.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி.

தினமும் தொடருங்கள்!! :P

  • தொடங்கியவர்

02 ஜனவரி 2006 தமிழ்ட்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

யாழ். கிளாலி நீரேரியில் 50 மேற்பட்ட பயணிகள்

சிங்களப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட நாள்(1993)

கண்டியை ஆண்ட கடைசி அரசன் கீர்த்தி சிறீ ராஜசிங்கன்

நினைவு.(1782)

  • தொடங்கியவர்

03 ƒÉÅரி 2006

தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

சந்திரிகா அரசுடனான 2ம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பநாள்

(03.01.1995)

மருத்துவத்துறைப் பேராசிரியர் அ. சின்னத்தம்பி நினைவுநாள்

(03.09.1911 - 03.01.1995)

வீரபாண்டிய கட்டபொம்மன்

(03.01.1740 - 16.10.1799)

தமிழ்நாட்டில் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்டுவந்த கட்டபொம்மன் சிறந்த

போர்த்தளபதியும். ச்த்ந்திரபற்றும் மிக்க மன்னனுமாவார்

ஆங்கிலேயரின் ஆளுகைக்கு அடங்கி நடக்க மறுத்து அவர்களை எதிர்த்து போராடியவர். பதவிக்கு ஆசைப்பட்ட

எட்டப்பனால் காட்டிக்கொடுக்கப்பட்டு சூழ்ச்சியால் கைதான

கட்டபொம்மன், மரண தண்டணையை மகிழ்வுடன் ஏற்று

வீரச்சாவடைந்தார்

  • தொடங்கியவர்

04 ஜனவரி 2006 தமிழ்ட்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

கப்டன் அருள் மாஸ்டர்

மாணிக்கம் ரவிந்திரராஜா

(13.04.1962 - 04.01.1988)

கப்டன் அருள் மாஸ்டர் புலிகளின் இராணுவ தொழில்நுட்பப்

பிரிவை சேர்ந்தவர். புலிகளால் தயாரிக்கப்பட்ட அருள்-89

துப்பாக்கி எறிகணையை வடிவமைத்தவர் இவராவார்.

தென்அமெரிக்காவில் அமேசன் காடுகளில் வசிக்கும் 'கரபா'

எனப்படும் செவ்விந்தியர் தங்கள் வாயால் பேசுவது இல்லை. தங்கள் மூக்குமூலமே வார்த்தைகளை ஒருவித உச்சரிப்போடு வெளிப்படுத்துகின்றனர்

"அடக்குமுறையாளர்கள் போராளிகளை அழிப்பதில் காட்டும் தீவிரத்தைவிட பொதுமக்களின் ஆன்ம உறுதியை உடைக்க வேண்டும் என்பதில்தான் அதிக அக்கறை காட்டுகின்றனர்"

-தமிழீழ தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்

தகவல்களுக்கு நன்றி வினித். தினம் ஒரு தகவல் போல் பயனுள்ளதாக இருக்கின்றது. தொடர்ந்து தாருங்கள்.

தென்அமெரிக்காவில் அமேசன் காடுகளில் வசிக்கும் 'கரபா'

எனப்படும் செவ்விந்தியர் தங்கள் வாயால் பேசுவது இல்லை. தங்கள் மூக்குமூலமே வார்த்தைகளை ஒருவித உச்சரிப்போடு வெளிப்படுத்துகின்றனர்

ம்ம் இதை நானும் வாசித்தேன்...அதெப்பிடி கதைக்கிறார்கள்? வித்யாசமாக இருக்கே...மூக்கில..நாக்கு இருக்கோ :roll: :roll:

  • தொடங்கியவர்

05 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

மாமனிதர் குமார் பொன்னம்பலம்

(12.08.1938-05.01.2000)

சந்திரிகா அரசின் தமிழின அழிப்புக்கொள்கையை அப்பலபடுத்தியவரும். மனித உரிமைவாதியும். சட்டத்தரணியுமான திரு. குமார் பொன்னம்பலம் அவர்கள் கொழும்பில் சந்திரிகா அரசின் கொலையாளிகள் மூலம் கொல்லப்பட்டார்.

சிங்களத்தின் தலைநகரில் சாவல் விடுத்து வந்தார்.ஆபத்துக்கள் சூழ்ந்திருந்தபோதும் அஞ்சாநெஞ்சத்துடன் அநீதியை எதிர்த்துப் போரடியவர்

திரு. குமார் பொன்னம்பலம் அவர்களின் இனப்பற்றிற்கும். விடுதலை பற்றிற்கும் மதிப்பளித்து. அவரது நற் பணியை கெளரவிக்கும் முகமாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் 'மாமனிதர்'

தகவற் துளி

வால்நட்சத்திரம் செல்லும் பாதையை கண்டுபிடிப்பதற்கான

கணக்கை முதன் முதலில் கண்டறிந்தவர் ஜேர்மன் நாட்டு விஞ்ஞானியான கார்ல் ப்ரீடரிக். இதை 1802இல் கண்டுபிடித்தார்...

உழைக்கும் மக்களின் உழைப்புச் சகதியே ஒரு தேசத்தின் ஜீவாதார சங்கதி.

-தமிழீழத் தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்

நல்ல முயற்சி வினித்..! மெய்கண்டான் கலண்டரில முந்தி முந்தி படிச்ச நினைவுகள்..! அப்புறம் ஈழநாதம் தந்தது ஈழம் பற்றிய பதிவுகள். தொடரட்டும் உங்கள் ஈழம் பற்றிய தினமொரு பதிவு..! :P :idea:

ம்ம் நல்ல தகவல்களை தினம் ஒரு தகவலாக தருகிறீகள் நன்றி வினித

  • தொடங்கியவர்

06 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

லெப். கேணல் வேணு

(பிரான்சிஸ் ரொபேட் சேவியர்)

அடம்பன் - மன்னார்

16.10.1964 - 06.01.1992

விடுதலை புலிகளின் முதன்மை தளபதிகலூள் ஒருவரான லெப். கேணல் வேணு 1984-இல் இயக்கத்தில் இனைந்தவர். மன்னார் மாவட்ட தளபதியான இவர் வெடி விபத்தொன்றில் 3 வீரர்களோடு வீரச்சாவடைந்தார்..........

தகவற் துளி

தமிழீழத்தில் அராலியில் 1649 ஆண்டில் பிறந்த இராமலிங்க முனிவர் வாக்கியப் பஞ்சாங்கத்தை கணித்து வெளியிட்டவராவார் 16.05.1667-இல் தமது பதினெட்டாவது வயதில் இதனை வெளியிட்டார்...........

இதயத்துடிப்பைத் தூண்டுவதற்காக இதயத்தில் பொருத்தபடும் கருவி பேஸ்மேக் என்று அழைக்கபடும்......

"சுதந்திரம் இல்லாத மனித வாழ்வில் அர்த்தமே இல்லை"

-தமிழீழ தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினித் நாட்காட்டியில் வருகின்ற பொன் மொழிகளையும் போட்டால் நன்றாக இருக்குமே? :roll:

வினித் நாட்காட்டியில் வருகின்ற பொன் மொழிகளையும் போட்டால் நன்றாக இருக்குமே? :roll:

ஏன் கஷ்டப்படுவான் பேசாம கலண்டரையே போட்டுவிடச் சொல்லுமன்...........வீட்டிலை செலவு கொஞ்சம் மிஞ்சும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் கஷ்டப்படுவான் பேசாம கலண்டரையே போட்டுவிடச் சொல்லுமன்...........வீட்டிலை செலவு கொஞ்சம் மிஞ்சும்

யோவ் முகத்தார் :evil: :twisted: என்னிடம் தமிழ்த்தாய் நாட்காட்டி இருக்கு :!:

வெளிநாட்டில இருக்கிற உங்களுக்குத் தான் உபயோகமாயிருக்கும் அது தான் சொன்னேன். :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு வசந்தன் இங்கேயும் தமிழ்தாய் நாட்காட்டி இருக்கிறது....

ஆனால் நாங்கள் ஓசிஎண்டால் தான்................

  • தொடங்கியவர்

ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

லெப்.கேணல் பாண்டியன்

(செல்லத்துரை சிறிகரன்)

கொக்குவில், யாழ்ப்பாணம்

23.03.1960 - 09.01.1988

விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளுள் ஒருவரான லெப். கேணல் பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாகப்

பணியாற்றியவர் காரைநகரில் இந்தியப் படையினர் முற்றுகையிட்டபோது தன்னைத்தானே சுட்டு வீரச்சாவடைந்தார்.

தகவற் துளி

யாழ்ப்பாணத்தில் முதன் முதலில் அச்சடித்து வெளியான நூல்

"முத்திவழி" என்பதாகும் .சேர்ச் மிஷனைச் சேர்ந்த யோசேப்பு நைற்று என்ற பாதிரியார் 1820ம் ஆண்டையடுத்து இந்நூலை வெளியிட்டார்.

உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை

சாவு அழித்து விடுவதில்லை. எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு

-தமிழீழத் தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல முயற்சி வினித்.... நானும் இப்படி ஒன்று செய்யலாமா என்று நினைச்சன்.. நீங்க ஆரம்பிச்சிட்டிங்க... வாழ்த்துக்கள் தினமும் தொடரவும்.

ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

லெப்.கேணல் பாண்டியன்

(செல்லத்துரை சிறிகரன்)

கொக்குவில், யாழ்ப்பாணம்

23.03.1960 - 0.01.1988

விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளுள் ஒருவரான லெப். கேணல் பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாகப்

பணியாற்றியவர்  காரைநகரில் இந்தியப் படையினர் முற்றுகையிட்டபோது தன்னைத்தானே சுட்டு வீரச்சாவடைந்தார்.

23.03.1960 - 09.01.1988 இதுதான் சரியாக உள்ளது. தவறை திருத்தவும்.

  • தொடங்கியவர்

08 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

சந்திரிகா அரச படைகளுடனான போர் நிறுத்த ஆரம்ப நாள்

ஆரம்ப நாள் 08.01.1995

(விலகிய நாள் 19.04.1995)

சாரணிய இயக்கத்தின் தந்தை பேடன் பவல் நினைவு நாள்(1940)

பிரசித்தி பெற்ற விஞ்ஞானி

கலிலியோ கலிலி

இத்தாலிய விஞ்ஞானியான இவரே. பூமியே சூரியனைச்

சுற்றி வருகின்றது எண்டு முதன் முதலில் நிரூபித்தவர்

இது கிறிஸதவ மதக்கோட்பாட்டிற்கு எதிராக இருக்கின்றது

என்று காரணம் காட்டி இவரைச் சிறையில் அடைத்தனர்....

தகவற் துளி

பூமியிலிருந்து 25 கி.மீற்றர் வரை வளிமண்டலம் உள்ளது.

நதியே இல்லாத நாடு சவுதி அரேபியாவாகும்.

சோம்பேறிகளை தவிர வேறு எவரும் முடியாது என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டார்கள்.

-நெப்போலியன்-

  • தொடங்கியவர்

09 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

கப்டன் பண்டிதர்

(சின்னத்துரை ரவிந்திரன்)

வல்வெட்டிதுறை

25.12.1959 - 09.01.1985

முத்த உறுபினர் கப்டன் பாண்டிதர் தொய்வு நோயால் பீடிக்கப்பட்டிருந்த தந்து உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் கடமை உணர்வுடன் செயற்பட்ட புரட்சிவீரன்.

ஆவராங்காலில் புலிகளின் முகாமொன்றை சிங்களப்படையினர் முற்றுகையிட்டுத் தாக்கியபோது

ரவி

சாமி

சிவா

தவம்

நேரு

ஆகிய வீரவேங்கைகளோடு வீரச்சாவடைந்தார்.

ஆனையிறவு,பரந்தன், வவுணதீவு சிறிலங்காப்படைகளுக்கு எதிரான தாக்குதல் (1997)

மார்க்கோப் போலோ நினைவுநாள்

(1254 - 1324)

சேர். பொன் அருணாசலம் நினைவுநாள்

14.09.1853 - 09.01.1924)

தகவற் துளி

'காய்கார்ப்' என்னும் மீனினம் 200 ஆண்டுகள் வாழக்கூடியது.

தமிழுக்கு அமிழ்தென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

-பாவேந்தர் பாரதிதாசன்-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர்பு பட்ட "கேள்விப் பட்ட" சில மேலதிகச் செய்திகள்....

முதன் நிலைத் தளபதிகள் ஆன லெப்.கேணல்கள் பாண்டியன் ,இம்ரான் நினைவாக "இம்ரான் -பாண்டியன்" படையணி என்ற சிறப்புப் படையணி செயலாற்றி வருகிறது...புரிந்துணர்வு உடன்படிக்கைக்குக் காரணமான, வரலாற்றுச் சிறப்பு மிக்க தாக்குதலை,"அவலத்தைத் தந்தவனுக்கே அதைத் திருப்பிக் கொடு" என்ற "சிந்தனையாகக் "கருப்பு ஜுலை"இல் செயலாற்றியதில் காத்திரமான பங்கு இவ் அணிக்கு உண்டு என்றும் "பேசக்" கேட்டு நினைவு...

கப்டன் பண்டிதர் அவர்கள் ஆயுதக் கையிருப்புப் பொறுப்பாளராக இருந்து, போராட்ட வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர்..இவர் நினைவாக "பண்டிதர் சரணாலயம்" கந்தர்மடத்தில் இருந்தது...இவரது வீரச்சாவுக்குப் பின்பாக கேணல் கிட்டு யாழ் மாவட்டத் தளபதியாக நியமிக்கப் பட்டதாகவும் படித்ததாக(?) நினைவு..

  • தொடங்கியவர்

10 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

¾Á¢Æ¡Ã¡ðº¢ Á¡¿¡ðÎ «Î¦¸¡¨Ä¢ý ¿¢¨É׺¢ýÉõ

1974-¬õ ¬ñΠ¡ú. ¿¸ரில் நடந்த 4வது தமிழாராட்சி

மாநாட்டைக் குழப்பிய சிங்களப் பொலிசார் 9 தமிழர்கள் சாவுக்குக் காரணமாக இருந்தார்கள்.

இந்தப் படுகொலையின் நினைவு சின்னம்யாழ். முற்றவெளியில் உள்ளது.

இந்த நினைவுச் சின்னத்தை சிங்கள இராணுவம் பல முறை சிதைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது..............

தகவற் துளி

1787ம் ஆண்டில் முதன் முதலாக டொல்ர் நாணயம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப் பட்டது.

ஆரம்ப காலத்தில் கணிதத் தேவைக்கு பயன்பட்ட கருவி அபக்கஸ் ஆகும். இக் கருவியைப் பயன்படுத்தியவர்கள்

சீனர்கள் ஆகும்.....................

.....................

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்

-குறள்-

  • தொடங்கியவர்

11 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

மேஜர் சோதியா

(மைக்கல் அமல உற்பவ வசந்தி)

கரவெட்டி, யாழ்ப்பாணம்

26.09.1963 - 11.01.1990

விடுதலைப் புலிகள் மகளிர் படையனியின் மூத்த போராளிகளுள் ஒருவரும் முதலாவது தளபதியுமான

மேஜர் சோதியா. உடற் பலவீனத்தையும் போருட்படுத்தாது

பணிசெய்தபோது மூளைக்காச்சல் நோயினால் பீடிக்கப்பட்டு

சாவை அணைத்துக்கொண்டார்............

பதிவுகள்

முதன்முதல் 1510ம் ஆண்டு ஆபிரிக்க மக்கள் அடிமைகளாக

கடல்வழியாக கரிபியன் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.

.......................

தற்கொடை எனும் உயர் முடிவு

இது எல்லோருக்கும் உரியதல்ல.

-குறள் விளக்கம்-

  • தொடங்கியவர்

12 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

சுவாமி விவேகானந்தர்

12.01.1863 - 08.07.1902

கல்கத்தா பல்கலைக்கழத்தின் இளம் பட்டதாரியான இவர்

இராமகிஷ்ணபரமஹம்சரின் தலைமை மாணவராக துறவிக்கோலம் பூண்டவர்.

1893 ஆண்டு அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் நடைபெற்ற சர்வமத மாநாட்டில், இந்து சமயத்தின் பெருமையை விளக்கி உரை நிகழ்த்தியதோடு, ஏழை மக்களுக்கு உதவிசெய்யும் அமைப்புக்களையும் நடாத்த வழி செய்தார்.

தகவற் துளி

உலகிலேயே ஒரு நாளைக்கு அதிக குழந்தைகள் பிறக்கின்ற நாடு சீனா. இங்கு ஒரு நாளைக்கு 58,700 குழந்தைகள் பிறக்கின்றன.

........................

நமது நாட்டுக்கு இப்போது வேண்டியன, இரும்பனைய தசைகளும், உருக்களைய நரம்புகளும் மற்ரும் எதனாலும் எதிர்க்கமுடியாத கடலின் அடிவரை செல்ல நேர்ந்தாலும் கருதியதை முடிக்கும் ஆற்றல் பெற்ற வலிமை மிக்க மனங்களே.

-விவேகானந்தர்-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.