Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவிற்கு வாலை காட்டிய பீரிஸ் சீனாவிற்கு தலையை காட்ட பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிற்கு வாலை காட்டிய பீரிஸ் சீனாவிற்கு தலையை காட்ட பயணம்

உள்நாடு முக்கிய-செய்தி இணைய-பதிப்பு

வவுனியா நிருபர்

வெள்ளிக்கிழமை, மே 20, 2011

இலங்கை அரசு இந்தியாவிற்கு வாலையும் சீனாவிற்கு தலையையும் காட்டும் தந்திரத்தை எப்போதும் கைவிடப்போவதில்லை. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் எதிர்வரும் 23 ஆம் திகதி சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்தியாவிற்கு சென்று இந்திய அதிகாரிகளுக்கு வாக்குறுதி அளித்தார் அதாவது இந்தியாவிற்கு எதிராக சீனா இலங்கையினை பயன்படுத்த ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என கூறினார். இனி சீனாவிற்கு என்ன சொல்லப்போகின்றார்?

சீன வெளிவிவகார அமைச்சருடன் முக்கிய அதிகாரிகளை சந்தித்து அமைச்சர் பீரிஸ் பேச்சு நடத்தவுள்ளார். முக்கியமாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கை அடிப்படையற்றது என்பது தொடர்பிலும் அறிக்கை தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் அமைச்சர் சீன அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கு எடுத்துக்கூறுவார் என கூறப்படுகின்றது.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் இந்தோனேஷியாவின் பாலி நகரில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளும் பொருட்டு எதிர்வரும் 26 ஆம் திகதி அங்கு செல்கின்றார்.

அமைச்சர் பீரிஸுடன் மேலும் சில அமைச்சர்களும் இந்தோனேஷியா செல்லவுள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டன. இதன்போது அணிசேரா அமைப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை சந்தித்து இலங்கை அமைச்சர்கள் குழுவினர் கலந்துரையாடவுள்ளனர்.

இந்திய மூவரணி இலங்கை வராது; பீரிஸின் பயணத்துடன் பேச்சு விவகாரம் முடிந்தது

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை வரவிருந்த இந்திய மூவரணியின் பயணம் நிறுத்தப்பட்டு விட்டதாகப் புதுடில்லி ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்த வார ஆரம்பத்தில் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணத்தை அடுத்து மூவரணியின் பயணம் கைவிடப்பட்டுள்ளது. மூவரணியில் இந்திய வெளிவிவகாரச் செயலர் நிருபமாராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்பு அமைச்சுச் செயலர் பிரதீப்குமார் ஆகியோர் அடங்கியிருந்தனர்.

இலங்கை இனப்பிரச்சினை தீர்வு மற்றும் நல்லுறவு ஆகியன தொடர்பாக பேச்சு நடத்துவதற்காக மாத இறுதியில் இந்த மூவரணி கொழும்புவர இருந்தது. இனப் பிரச்சினை தீர்வு, அவசர காலச்சட்ட நீக்கம் மீனவர் பிரச்சினை மனித உரிமை மீறல் என்பன குறித்து ஆராயவே மூவரணி முதலில் திட்டமிட்டிருந்தது. குறிப்பாக நிபுணர் குழு அறிக்கையின் பின்னரான களச்சூழலில் இந்தியாவின் உதவியை இலங்கை அதிகம் எதிர்பார்த்திருந்தது.எனினும் அமைச்சர் பீரிஸின் பயணத்தின் போதே இந்த விவகாரங்கள் குறித்து ஆராயப்பட்டு விட்டதாக புதுடில்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

மேற்கொண்டு எடுக்கவேண்டிய நகர்வு குறித்து இனிமேல் இலங்கைதான் முடிவு செய்ய வேண்டும். இந்திய நிலைப்பாடு என்ன என்பது தெளிவு படுத்தப்பட்டு விட்டது. அதற்கான இலங்கை அரசின் பதிலைப் பொறுத்தே இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கை அமையும். எனவே இப் போதைக்கு இந்தியக்குழு இலங்கை செல்லவேண்டிய அவசியம் ஏது மில்லை என்று தெரிவித்தார் வெளிவிவகார அமைச்சுடன் நெருங்கிய தொடர்புடைய அதிகாரி ஒருவர்.அமைச்சர் பீரிஸ் இந்தியாவில் தங்கியிருந்த மூன்று நாள்களில் ஒரு நாள் முழுவதும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எம்.கே. கிருஸ்ணாவுடனும் மறுநாள் மூவரணியுடனும் பின்னர் பிரதமர் மன்மோகன்சிங்குடனும் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

இந்தியாப் பயணத்தை முடித்துக் கொண்டு அமைச்சர் பீரிஸ் சீனா, வியட்நாம், மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு பயணமாகியுள்ளார். அவர் நாடு திரும்பிய பின்னே இந்தியா விவகாரத்தில் மேற்கொண்டு இலங்கை அரசு நடவடிக்கை இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://onlineuthayan.com/News_More.php?id=82020250520199372

வாலோ தலையோ ஆனால் பிழைக்கத் தெரிந்தவர்கள்

இந்த வாலும் தலையும் கட்டும் இராசதந்திரம் பலருக்கு சில நாட்கள் வேலைசெய்யும், சிலருக்கு பல நாட்கள் வேலைசெய்யும். ஆனால், எல்லா நாட்களும் வேலை செய்யாது.

ஒரு நாள் சிங்களத்தை எல்லாரும் கை விட்டு விடுவார்கள்.

உப்பிடி நடக்கவேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறோம் ஆனால் இன்று வரைக்கும் சிங்களவன் தான் வென்று கொண்டிருக்கின்றான். எதிர் எதிர் எதிரிகளை கூட தனக்கு சாதகமாக இயங்க வைக்கின்றான் ஆனால் நாமோ அவனை விமர்சித்துக்கொண்டே காலத்தை கடத்துகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடி நடக்கவேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறோம் ஆனால் இன்று வரைக்கும் சிங்களவன் தான் வென்று கொண்டிருக்கின்றான். எதிர் எதிர் எதிரிகளை கூட தனக்கு சாதகமாக இயங்க வைக்கின்றான் ஆனால் நாமோ அவனை விமர்சித்துக்கொண்டே காலத்தை கடத்துகிறோம்.

தமிழகத்தில் ஒரு நீதியான ஆட்சியை அரசேற்றினால் இந்தியாவை பணியவைக்க முடியும். அதை நோக்கி நாம் நகர வேண்டும்............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.